தானியேல் –
12-02-2022 – தேவ செய்தி

மாசற்றதன்மை மற்றும் பரிசுத்தம்

ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்.

லூக் 19:2

மேற்கண்ட வசனம் கல்லூரியில் நான் புதிதாக சென்ற ஆரம்ப நாட்களை எனக்கு நினைவுபடுத்துகிறது. நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். கர்த்தரை காணவும், அவர் அன்பை அனுபவிக்கவும் நான் மிகவும் ஆசைப்பட்டேன். என்னுடைய சகோதரி மூலமாக நான் புதிய ஐக்கியத்திற்கு கொண்டுவரப்பட்டேன், அங்கே கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிந்து கொண்டேன். இயேசு எவ்வளவு நல்லவர் என்றும் அவர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன். இதற்கு பின்னரே நான் ஞானஸ்ஞானம் எடுக்க முடிவு செய்தேன், அதன் மூலம் நான் அவருடைய கிருபையால் இரட்சிப்பைப் பெற்றேன். இதற்கு பின் நான் SHUATS இல் இடம் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. கர்த்தர் என்னை SHUATS க்கு கொண்டுபோக முன்கூட்டியே நியமித்து வைத்திருந்தார். அங்கு நான் மகிழ்ச்சியாகவும், மன நிறைவோடும் இருந்தேன்.
ஒரு நாள் என் சகோதரி ஒரு ஜெப கூட்டத்திற்கு அழைத்துச் சென்றாள், அங்கே விசுவாசிகள் கர்த்தரை ஆவியிலும் உண்மையிலும் ஆழமாக ஆராதித்துக் கொண்டிருந்தார்கள், மேலும் அங்கு பகிரப்பட்ட கர்த்தருடைய வார்த்தை வல்லமையானதாகவும், அற்புதமான வெளிப்பாடுகளுடனும் இருந்தது. கர்த்தரை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள இது எனக்கு உதவியது. கர்த்தரை அறிந்து கொள்ளும் தாகம் எனக்குள் இன்னும் அதிகமானது.
சகேயு வரிவசூலிப்பவனாகவும் மிகவும் செல்வந்தவனாகவும் இருந்தான். இயேசு அந்த வழியாக வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை காண ஆசைப்பட்டான், குள்ளமாக இருந்த காரணத்தால் அவன் ஒரு காட்டத்திமரத்தில் ஏறினான். சகேயுவின் இருதயத்தில் இருந்த இயேசுவை அறியும் ஆசையை இயேசு அறிந்திருந்தார்.
லூக் 19:8-10 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
இயேசுவை அறியக்கூடிய அதிகமான ஆசை உங்களுடைய இருதயத்தில் வளர வேண்டும் என்று உங்களை ஊக்குவிக்கிறேன்.


பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். யோவா 14:8


கர்த்தர் மட்டும் உங்களிடத்தில் இருந்தால், உனக்கு தேவையான அனைத்தும் உங்களிடம் உள்ளது.
நீங்கள் எதைச் சந்தித்தாலும், அது நோய், நிதி நெருக்கடி அல்லது சிக்கலான உறவுகளாக இருந்தாலும் கர்த்தரை தேடுவதை நிறுத்தாதீர்கள். அற்புத அடையாளங்களுக்காக அல்ல மாறாக அவரை இன்னும் அறிந்து கொள்ளவும், அவருக்கு சேவை செய்யவும் அவரை தேடுங்கள். உங்கள் இருதயத்தில் வாசம் செய்ய அவரை அழையுங்கள், அவர் நமக்கு எதிரானவர் அல்ல நமக்கு சாதகமானவர்,
சங் 37:4 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.


கர்த்தர் இல்லாமல் நாம் ஒன்றும் இல்லை.


ஜெபம்: பிதாவே நாங்கள் உம்மை அன்பு செய்கிறோம், உம்மையை நாங்கள் வாஞ்சிக்கிறோம், உம்மையல்லாமல் எங்களுக்கு யாரும் இல்லை.. உம்மை இன்னும் அறிய எங்களுக்கு உதவும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமேன்.


Sol. Mercy AOJ,

தானியேல் – II 11-02-2022 – இன்றைய தேவ செய்தி

ஒரு உண்மையான ஆசை

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

(லூக் 19:3).

சில சமயங்களில் நமது பல்வேறு உடல், மன, சமூக, தொழில் மற்றும் நிதி வரம்புகள் கர்த்தரை சரியான முறையில் தேடுவதற்கு தடையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட (ரோம 8:14) உண்மையில் ஆசைப்படும் போது, நம்முடைய சரீரமும், எல்லா அவயவங்களும் பரிசுத்த ஆவியானவரை பின்பற்ற துவங்கி விடுகின்றன.


லூக் 19:3இன் படி இயேசுவை சக்கேயு பார்க்க ஆசைப்பட்டாலும் அவன் குள்ளனானபடியால் அவரை காண முடியாமல் தவித்தான். இது அவனுக்கு சாதகமான ஒரு காரியத்தை செய்தது. இயேசு அவனை பெயர் சொல்லி அழைத்தது மட்டும் அல்லாமல் அவனுடைய வீட்டிற்கும் சென்றார்.


1996 ஆம் ஆண்டு விசுவாசத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த நானும் கர்த்தருக்காக எவ்வளவு தாகமாய் இருந்தேன் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் நான் பணம் சேமித்து வைத்து ஆன்மீக புத்தகங்களை வாங்கிபடிப்பேன் மேலும் விவிலிய கருத்தரங்களில் பங்கேற்க பணம் சேமித்து வைத்தேன். நான் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்ததால் எனது பொருளாதாரம் அவ்வளவு உயர்ந்ததாக இல்லை மாறாக குறைவாகவே இருந்தது ஆனால் இயேசுவை தேடும் என் ஆசையோ மிகவும் உயரமாக இருந்தது, இதுவே என் வாழ்கையில் அநேக வசதிகளை தியாகம் செய்ய வைத்தது.


மத் 13:44 – அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான். எப்படியோ, அந்த விலைமதிப்பற்ற வயலை வாங்குவதற்காக அனைத்தையும் விற்கத் தயாராக இருந்த இந்த மனிதனைப் போல நான் என்னைக் கண்டேன்.


மத் 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

என்று இயேசு சொன்னது போல என்னுடைய பொருளாதாரம் இன்று நன்றாக இருக்கிறது மேலும் நான் பல துறைகளில் வெற்றியும் பெற்றுள்ளேன்.
இதை வாசிக்கும் நீங்களும் உங்கள் தற்போதைய இக்கட்டுகளை பொருட்படுத்தாமல் முதலாவதாக கர்த்தரை தேடும்படி ஊக்குவிக்கிறேன். கர்த்தர் நிச்சயமாக உங்கள் ஆசையை மதித்து சக்கேயுக்கு இயேசு செய்தது போல, உங்களையும், உங்கள் வீட்டாரையும் அவர் காப்பாற்றுவார், ஆமேன்.

In CHRIST,
Sol. Rahul Davis AOJ

தானியேல் – II 10-02-2022 – தேவ செய்தி

அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

லூக் 18:38

வேதத்தில் வரும் இந்த நிகழ்வில் ஒரு பர்வை அற்ற மனிதன் ஒருவரை “தாவீதின் குமாரனே” என்று கூப்பிட்டான், ஏனென்றால் மேசியா இந்த வழியாக கடக்க இருக்கிறார் என்று அவனுக்கு சொல்லப்பட்டது. இந்த வாய்ப்பை அவன் இழக்க விரும்பவில்லை, எனவே அவன் இன்னும் சத்தமாக கூவி அழைத்தான், “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் “


எனக்கு ஒரு சாட்சி ஞாபகத்திற்கு வருகிறது, இந்த நிகழ்வை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. நான் வேலைக்காக பட்டணத்திற்கு வெளியில் இருந்தேன். என் மனைவி (பப்பிதா) மூன்று மாத கர்பிணியாக இருந்தாள். ஒரு நாள் என் மனைவியின் உடல்நிலை சரியில்லை யென்றும் நான் உடனடியாக வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் எனக்கு தொலைபேசியில் தகவல் தெறிவிக்கப்பட்டது. உடனடியாக நான் வீட்டிற்கு திரும்பினேன். கரு கலைந்து விட்டது என்று என்னிடம் சொன்னார்கள், மேலும் துயரத்தில் மனைவி மிகவும் அழுதுகொண்டிருந்தாள், உடனடியாக மருத்துவ மனைக்கு சென்றேன், அவள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. நான் என்ன தவறு செய்தேன், ஏன் இது எனக்கு நடந்தது? என்ற அவள் கேட்ட இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை நானும் சோகத்தில் உரைந்து போயிருந்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு மாமா வீட்டிற்கு திரும்பினோம். அப்போது பரிசுத்த ஆவியானவர் எனக்கு புதிய பாடலை கொடுத்தார், நான் பாடலை பாடி கர்த்தரை ஸ்தோத்தரித்தேன். அப்போது நான் பரலோக அமைதியால் நிறப்பபட்டேன்.


சில நாட்களுக்கு பிறகு, என்னுடைய பட்டணத்தில் ஊழியம் செய்ய சில ஊழியகாரர்கள் வந்திருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் காலை உணவிற்கு என் வீட்டிற்கு வந்தார்கள். உணவு அறிந்தியபின் என் குடும்பத்திற்காக அவர்கள் ஜெபித்தார்கள், ஒரு தீர்க்கதரிசன செய்தியையும் எங்களுக்கு கொடுத்தார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் நாங்கள் வரும்போது உங்கள் கையில் ஒரு குழந்தை இருக்கும் என்று அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இதை கேட்டபின் நானும் என் மனைவியும் சந்தோஷத்தால் நிறப்பப் பட்டோம். உண்மையில் அடுத்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே சர்வவல்ல கர்த்தர் ஒரு ஆண் குழந்தையை கொடுத்து எங்களை ஆசீர்வதித்தார். எல்லா மகிமையும் அவருக்கே உண்டாகட்டும்.
இது முற்றிலும் உண்மை. நாம் துன்பத்தில் இருந்து அவரை கூப்பிடும் போது அவர் நமக்கு செவி கொடுக்கிறார். என் இதயம் மகிழ்ச்சியால் நிறம்பியது, நான் கர்த்தருக்கு நன்றி சொன்னேன். பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு என் மகனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டோம்.


நீதிமொழிகள் 8:34 என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
வாசற்படியில் விழித்திருந்து கதவு நிலையருகே காத்திருப்பது, ஜெபத்தையும், கர்த்தருடைய வார்த்தையின் மீது தியானத்தையும் குறிக்கிறது.


கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;

சங் 37:5

அதற்குபின் என்ன நடந்தது, பார்போமா? இயேசுவின் நாமத்தை சொல்லி கூவி அவன் அழைத்துக் கொண்டிருக்கும்போது, இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார் அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக் 18:40-42).
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று இங்கு இயேசு அவனுக்கு பதிலளித்தால் அவனுடைய விசுவாசத்தை அவர் எல்லாருக்கும் முன்பாக புகழ்ந்தார்.

ஜெபம்:

பரலோக பிதாவே சில வேளைகளில் நான் எளிதாக சோர்வடைந்துவிடுகிறேன். மலையானது மிகவும் உயரமாக இருப்பதால் நான் உற்சாகம் இழந்துவிடுகிறேன். நானே எனக்கு சாக்குப்போக்குகளை சொல்லி கொள்கிறேன். என்னுடைய அவநம்பிக்கைகாக என்னை மன்னியும். அசைக்க முடியாத வகையில் என் நம்பிக்கையைப் புதுப்பிய்யும். நான் உம்மை உடனே ஸ்தோதரிக்கவும், உம்மை நெருக்கமாக பின்பற்றவும் கிருபைதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Shalom!!!
Sol. Binesh AOJ

தனியேல் –09-02-2022 –தேவ செய்தி

இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

(லூக் 18:40).

இந்த வசனம் என் வாழ்வில நடந்த ஒரு சாட்சியை நினைவுபடுத்துகிறது. 12ஆம் வகுப்பு படித்த பின்னர் என்னுடைய எதிர்கால படிப்பைப் பற்றி ஒன்றும் தெரியாதவளாக இருந்தேன். பல கேள்விகள் என் மனதில் எழுந்தன மேலும் இவைகள் என் நம்பிக்கையை இழக்கச் செய்தன.


கடைசியாக SHUATS அலகாபாத் பல்கலை கழகத்தில் B.Sc (Hons) உணவு தொழில்நுட்பத்தில் அனுமதி பெற்றேன் ஆனால் நான் விரும்பியதோ B.Sc (Hons) விவசாயம், எனவே நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். என்னுடைய இந்த மோசமான நிலையை கண்டு என் பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாக தெரிந்தது, நான் ஜெபித்தால் கர்த்தர் நிச்சயம் கேட்ப்பார். ஒவ்வொரு இரவும் நான் கண்ணீர் விட்டு கதறி அழுதேன். ஒரு நாள் எரேமியா 29:11 என்ற வசனம் கிடைத்தது – நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;

அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இந்த வசனத்தைப் படித்தபின், கர்த்தர் எனக்கு செவி கொடுப்பார் என்று அறிந்து நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆனால் பதில் ஏதும் கிடைக்க வில்லை, நம்பிக்கைக்கு வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நான் இன்னும் இயேசுவை நம்பி கர்த்தரை நோக்கி அழுதேன். இறுதியாக அவர் என் கூக்குரலை கேட்டார், நான் விரும்பியது போல எனக்கு BSc. (Hons) விவசாயத்தை கொடுத்து ஆசீர்வதித்தார். கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் அன்று சுவைத்துப் பார்த்தேன். இன்றும் கூட அவருடைய நன்மையை சுவைக்க நான் ஆவலாய் இருக்கிறேன்.
கர்த்தரிடம் கூக்குரல் இடுங்கள் அவர் உங்கள் அழுகையை கேட்ப்பார் என்று உங்களுக்கு ஊக்கம் அளிக்க இன்று விரும்புகிறேன். இயேசுவிடம் நீங்கள் அழ தீர்மானித்தபின் எந்த மனிதனோ, சூழ்நிலையோ உங்களை தடை செய்யாது.


எபி 8:12ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


இயேசுவிடம் நீங்கள் செல்வதை எது தடுக்கிறது? உங்களுடைய அநீதியா அல்லது உங்கள் பாவமா? மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தைப் பாருங்கள். வசனம் சொல்லுகிறது கர்த்தர் கிருபை உள்ளவர் என்று.


யாகோபு 4:8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.
எழுந்திருங்கள்! தூசுகளை தட்டிவிட்டு பிரகாசியுங்கள். ஏனெனில் கர்த்தருடைய கிருபை உங்கள் மேல் எழும்பியுள்ளது.
கர்த்தர் இன்று உங்களை அவர் அருகில் அழைக்கிறார். உங்களுடைய எல்லா கவலைகளையும் அவரிடம் கொடுத்து விடுங்கள்.


சங் 34:4 – நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.


கர்த்தர் உங்களுடைய ஜெபத்தை கேட்கிறார் மேலும் உங்களை விடுவிக்கிறார். ஆமேன்.


ஜெபம்:

எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் எங்கள் வாழ்வில் வந்தாலும் உம்மை நோக்கி குரலை உயர்த்தி அழுவதற்கு எங்களுக்கு கிருபைதாரும். உம்மை காண கண்களை தாரும், உம் குரலை கேட்பதற்கு காதுகள் தாரும், உம்முடைய கற்பனைகளுக்கு கீழ்படிய இதயம் தாரும். உம்முடைய அமைதி எங்கள் இதயத்தை ஆட்சி செய்வதாக, இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.


Sol. Blessy AOJ

தானியேல் 08-02-2022 – தேவ செய்தி

முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

(லூக் 18:38)

வேதத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பல பெயர்கள் உள்ளன ஆனால் இந்த பார்வையற்றவர் ஏன் இயேசுவை “தாவீதின் குமாரனே” என்று ஏன் கூப்பிட்டார்?

எனக்கு இரங்கும் என்று அவன் அதிகமாய் கூப்பிட்டான். மனதாழ்ச்சியுடனும், மனந்திரும்பி கர்த்தரிடம் அணுகும் எவருக்கும் அவருடைய கிருபை கிடைப்பதை யாராலும் தடை செய்ய முடியாது. இந்த குருடன்  இயேசுவை குணப்படுத்துபவராக மட்டும் அல்ல மேலும் அவரை மேசியா என்றும் தெரிந்து வைத்திருக்கிறான் ஏனென்றால்  இஸ்ரவேலின் மீட்பர் தாவீது ராஜாவின் வம்சத்திலிருந்துதான் வருவார். எனவே இந்த குருடன் பிரதான ஆசாரியருக்கோ அல்லது நடைமுறையில் இருந்த யூதமதத்திற்கோ பயப்படாமல் அனைவருக்கும் முன்பாக இயேசுவை மேசியாவாக ஒப்புக்கொண்டார்.

பாவம், சாபம் மற்றும் அடிமைத்தனங்களிலிருந்து நம்மை மீட்க வந்த ஒரே இரட்சகர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை நாம் அழுத்தம் திருத்தமாகவும், சத்தமாகவும் அனைவருக்கும் முன்பாக சொல்ல வேண்டும். அவர் ஒருவரே நம்மை இருளிலிருந்து காப்பாற்றி அவருடைய வியத்தகு ஒளிக்கு நம்மை கொண்டுசெல்ல முடியும் . அவரால் மட்டும்தான் அசுத்த ஆவியின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க முடியும் என்று நாம் சொல்ல வேண்டும்.

வாழ்க்கை நமக்கு முன்பாக பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த தருணங்களை தருகிறது அவைகளில் சில இனிமையானவைகள் அல்ல, சில வெளிப்படையான தோல்விகள் ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள். ஆனாலும் நாம் ஒருபோதும் தனியாக இல்லை, நம்முடைய கர்த்தரும், இரட்சகரும்  ஆன இயேசு கிறிஸ்து எப்போதும் நமது வலது பக்கத்தில் இருக்கிறார் (சங் 16:8). நமது தோல்விகளை அவர் வெற்றியாக மாற்றுவார் அல்லது பின்னடைவு/தோல்விகளை சரியான நேரத்தில் நமக்கு சாதகமாக மாற்றித்தருவார். பல நேரங்களில் வாழ்க்கையில் நாம் சந்தித்த பின்னடைவு பேரழிவை ஏற்படுத்தியது, ஆனால்  இந்த பேரழிவுதான் நம் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் என்று நாம் சொல்லும்  அளவிற்கு கர்த்தர்  அதை மாற்றிப் போடுகிறார்.

மருத்துவ படிப்பிற்காக எனக்கு சீட் கிடைக்காதபோது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் நினைத்தேன். ஆனால் கர்த்தர் என்னுடைய அகந்தையை உடைத்து, என்னை வலிமையாக்கி ஆவியின் பட்டயத்தை திறம்பட கையாளக் கற்றுக்கொண்டால் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை  கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தின் மூலம் எனக்கு வெளிப்படுத்தினார்.

தாவீதின் குமாரனாகிய இயேசுவே என்மேல் இரக்கமாயிரும், உமது இரக்கம் எனக்காக பேசட்டும், உமது கிருபை எனக்காக பேசட்டும். ஆமென்.

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங் 118:1)

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. (புலம்பல் 3:22-23).

Sol Michael Roby P.

தானியேல் –II 07-02-2022 – தேவ செய்தி

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

சங் 45:1

சங்கீதம் 45 மெசியாவைப் பற்றிய சங்கீதமாகும். தன்னுடைய அரசனை புகழ்ந்து பாடியுள்ளார் சங்கீதகாரன். எப்பொழுதுமே கவிஞர் கவிதைகளை எழுதிவைத்துக்கொண்டு கேட்பவர்களுக்கு முன்பாக படித்துக்காட்டுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு சங்கீதக்காரன் எதையும் முன்கூட்டியே எழுதவில்லை. அவன் பரிசுத்த ஆவியினால் நிறப்பபட்டிருந்தான். அவனுடைய நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.போல் இருந்தது. மணமகனாகிய அரசனையும் அவனது மணமகளைப் பற்றியும்தான் கவிஞன் வாழ்த்திப்பாடுகிறான் என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் நினைத்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கதரிசனமாகும். சங்கீதகாரன் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும்  சபையோடு இயேசுவின் திருமணத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

எபேசியர் 5:22-33 இல் பவுல் கணவன் – மனைவியின் ஐக்கியத்தை கிறிஸ்த்து மற்றும் சபையுடன் ஒப்பிடுகிறார். அவருடைய சந்தோஷத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய துன்பத்தால் அவர் நம்மை விலைக்கு வாங்கினார்.

மத் 25 – இயேசு கிறிஸ்துவே மணவாளன் மற்றும் சபைதான் மணவாட்டி. நாம் ஆவலோடு காத்திருக்கும் அந்த நிகழ்வுதான் இயேசுவின் இரண்டாம் வருகை.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியும் வானமும் சபையோடு இயேசு கிறிஸ்துவின் இந்த பெரிய திருமண விழாவிற்காக காத்திருக்கின்றன. மணவாளனாகிய இயேசுவுக்கு துதிபாடல்பாடவும் மணவாட்டியாகிய சபையை வரவேற்கவும் தூதர்கள் மிக ஆவலோடு காத்துக்கொன்டிருகிறார்கள். சபையாகிய மணவாட்டி உலகில் இருக்கும் அனைத்து விசுவாசிகளையும் குறிக்கிறது. மணவாட்டி இன்னும் மறுரூபம் ஆகவில்லை. இயேசுவுக்கு தகுதியுள்ள ஒரு மணவாட்டியை ஒப்புகொடுப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் சபையாகிய மணவாட்டியை தயார் செய்துகொண்டு வருகிறார். தன்னுடைய வலதுபக்கத்தில் அமர்வதற்கு முற்றிலும் மறுரூபமாக்கப்பட்ட மணவாட்டியை இயேசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மாபெரும் நிகழ்விற்கு நாம் தயாராக இருக்கிறோமா? வெளி 19:7-9 வசனத்தின்படி மணவாட்டி பரிசுத்தவான்களுடைய நீதியை மெல்லிய வஸ்திரமாக அணிந்திருக்க வேண்டும்.

எபே 5:27 – கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். மணவாட்டியானவள் பரிசுத்தமாகவும், பிழையற்றதாகவும் இருக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னியாக இயேசு கிறிஸ்துவிடம் அவளை ஒப்படைக்க வேண்டும்.

இயேசுவின் மணவாட்டியாவதற்கு, பரிசுத்த ஆவிதான் நம்மை தகுதிபடுத்த வேண்டும்.

கன்னியானவள் தன் கணவனுக்காக காத்திருப்பதுபோல நாமும் அந்த மகிழ்ச்சியான நாளுக்காக காத்திருப்போம். ஆமேன்! அல்லேலூயா!

Sol Subramanian

தானியேல் – II 06-02-2022 – தேவ செய்தி

அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.

லூக் 18:24

கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, சர்வவல்லமையுள்ள தேவனுக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத் 6:21)

இந்த வேத வசனத்தை நான் தியானித்துக்கொண்டிருக்கையில் தேவன் என்னை லூக் 16:19-23 வது வசனத்தை நினைவுபடுத்தினார். இயேசு கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு ஒரு செல்வந்தன் மற்றும் ஒரு தரித்திரனுடைய உண்மையான அனுபவத்தை பற்றி கூறினார்.

மத் 18:10 – இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தரித்திரன் செல்வந்தனுடைய  வாசலில் இருந்தான், செல்வந்தன் அவனை புறக்கணித்தான், அவனை ஒரு பொருட்டாக கருதவில்லை. தரித்திரனுக்கு உதவிகரம் நீட்ட செல்வந்தன் எந்த முயற்சியும் செய்யவில்லை.

லாசருடைய உடல் முழுவதும் பருக்களால் நிறம்பி இருந்தது அவன் செல்வந்தனின் வாசலருகே கிடந்தான். அவனுடைய பருக்களில் இருந்து துர்நாற்றம் வீசியது, சீழ்வடிந்தது, ஈக்கள் மொய்த்தன, நாய்கள் அவன் பருக்களை நக்கியது. லாசர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தான், அவனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருந்தது. ஆனால் லாசருக்கு மருத்துவ உதவி செய்ய இந்த செல்வந்தனுக்கு தோன்றவே இல்லை.

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதி 3:27).

செல்வந்தனிடம்  எல்லாம் ஏராளமாக இருந்தது ஆனால் லாசருக்கு உதவும் எண்ணம் அவனது இதயத்தில் இல்லவே இல்லை. அதே வேளையில் மருத்துவ உதவிக்காகவும், உணவிற்காகவும் லாசர் போராடிக்கொண்டிருந்தான்.  செல்வந்தனோ மற்ற யாரோ அவனுக்கு உதவ முன்வரவில்லை. இவ்வாறு செல்வந்தனுடைய இதயம்  சுயநலம் மற்றும் உலகபிரகாரமான விஷயங்களில் திசை திருப்பப்பட்டிருந்தது.

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

1யோவா 4:20,21)

செல்வந்தன் தன்னுடைய செல்வத்தை பூமிக்குரிய ராஜ்யத்தில் சேமித்து வைத்தான். அவன் கற்பனைகளை கைகொண்டான், ஆனால் பரிசுத்த ஆவியின் கனிகள் அவனிடம் காணப்படவில்லை.

வேதம் சொல்லுகிறது இருவரும் மரித்தனர். லாசர் அபிரகாமின் மடியில் ஆறுதல் படுத்தப்பட்டான். செல்வந்தனோ நரகத்தில் இருந்தான். இந்த உவமை நமக்கு ஒரு எச்சரிக்கை.யாக இருக்கட்டும். நம் வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். இப்பொழுது நாம் எங்கு இருக்கிறோம்? நம்முடைய வாழ்வில் பரிசுத்த ஆவியி.ன் கனிகளை வெளிப்படுத்துகிறோமா? இல்லை என்றால் மனந்திரும்பி கர்த்தரிடம் மன்னிப்பு கேட்போம்.

ஜெபிப்போம். பரலோக பிதாவே உமக்கு முன்பாக வுருகிறோம் எங்களை மன்னித்து உம்முடைய பாதசுவடில் நடக்கு பரிசுத்த ஆவியால் எங்களை பலபடுத்தும்ம் . இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம். ஆமேன்.

Sol. Dr. G. Kamalin Viji , AOJ

தானியேல்  – II 05-02-2022 – தேவசெய்தி

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

லூக் 18:14

பரிசேயன் மற்றும் வரிவசூலிப்பவன்  உவமையில், தன்னை தாழ்த்தியதால் வரிவசூலிப்பவனே நீதிமானாக்கப்பட்டவனாய் வீடுதிரும்பினான்.

நீதிமானாக்கப்படுவது என்றால் என்ன?

இறையியல் படி கர்த்தருடைய பார்வையில் ஒருவர் நீதிமானாக்கப்படுவது அல்லது நீதிமான் என்று அறிவிக்கப்படுவது.

நாம் எவ்வாறு நீதிமானக்கப்படுகிறோம்?

ரோம 3:24-26 – இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

தாழ்த்துதல்

தாழ்த்துதல் என்பது சமர்ப்பணத்தின் ஆவி அல்லது பெருமை கொள்ளாமல் இருப்பது. மேற் கண்ட உவமையிலிருந்து நம்மை தாழ்த்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதை புர்ந்துகொள்கிறோம்.

மனத்தாழ்மை என்பது கர்த்தரின் கிருபையை நம்மில் கொண்டுவருவதற்கும் நம்மில் வளர்க்க வேண்டிய ஒரு குணமாகும்.

நீதி 11:2 – அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

அப்போஸ்தலர் பவுல்: பவுல் என்ற சவுல் பெருமை நிறைந்த யூதர் என்றும், கிறிஸ்தவர்களை கடுமையாக சித்திரவதை செய்து கொல்பவர் என்று அழைகப்பட்டார். ஆனால் இயேசுவை ஒரு முறை சந்தித்த பின் அவர் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

அவர் நீதிமானாக்கப்பட்டார் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மூலம் தாழ்மையடைந்தார்.

2கொரி 11:ல் உள்ள பவுலின் தீவிர சாட்சி இதுவே, நம்மைப் போல சிறியவர்களை எடுத்து கர்த்தர் நம்முடைய வாழ்வின் மூலமாக அவருடைய மகிமைக்காக  வல்லமையுடன் பயன்படுதுகிறார்.

இப்பொழுது நாம் நம்முடைய தேவனாகிய இயேசுவை பார்ப்போம்.

தழ்ச்சியின் மிகச்சிறந்த உதாரணம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து.

பிலி 2:8 – அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

சிலுவையிலிருந்து அனைவரையும் மன்னிக்கும் அளவுக்கு இயேசு தன்னை தாழ்த்தினார்.

மத் 11:29 – நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

சங் 25:9 – சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

நான் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன், பின்னர் குடும்பமாக நாங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆவிக்குறிய கிறிஸ்தவர்களாக மாறினோம். எங்களை எங்கள் குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கினர், எங்களை வெட்கப்படுத்தினர். ஆனால் எங்களை தாழ்த்துவதற்கு கர்த்தர் எங்களுக்கு கிருபை தந்தார், நாங்கள் அவர்களுடைய இரட்சிப்பிற்காக ஜெபிக்க துவங்கினோம். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, இப்போது எல்லாரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்ஞானமும் பெற்றுக்கொண்டார்கள். எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக பிதாவே எங்களை தாழ்ச்சியின் ஆவியால் நிறப்பும். உம்முடைய அழைத்தலுக்கு நாங்கள் கீழ்படிய எங்களுக்கு உடதவும். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கின்றோம். ஆமேன்.

Sol. Camilia AOJ

தானியேல் – II 04.02.2022 தேவ செய்தி

அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.

1இராஜா 1:6

வேதத்தில் அதிகமாக பேசப்படும் ஒரு நபர் யாரென்றால் அது தாவீதுதான். அவன் பெரிய வெற்றியாளனாக இருந்தாலும் அவனால் செய்யப்பட்ட தவறுகளும் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. அவனுக்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். மேலே உள்ள வசனம் ஒரு தகப்பனாக தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து அவன் தவறிவிட்டதை காட்டுகிறது.

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (நீதி 22:6).

இன்றைய சமூகம் ஒரு குழந்தையை நெறிப்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். (நீதி 23:13).

பல நாடுகள் தங்கள் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரிடம் “இயேசு” “கர்த்தர்” மற்றும் “பாவம்” என்ற வார்த்தையை உச்சரிக்க சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளன. ஆனால் பைபிள் இதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது. ஒரு குழந்தையை கண்டிப்புடன் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்றும் பைபிள் கற்பிக்கிறது.

ஒரு குழந்தையை நாம் ஏன் நெறிப்படுத்த வேண்டும்?

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

1இராஜா 1:6 – அதோனியா தனது தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், முழு இஸ்ரவேலர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியதை காண்கிறோம். கடைசியில் அவன் தனது சொந்த சகோதரனால் கொல்லப்பட்டான், அது அவனது பெற்றோருக்கு நினைத்துபார்க்க கூட முடியாத துயரத்தையும் சோகத்தையும் தந்திருக்கும்.

“அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை;” – இந்த வசனத்தின் மீது கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு தகப்பன் என்கிற ஸ்தானத்திலிருந்து தாவீது  தவறியதில் 3 கருத்துக்கள் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. தாவீது அவனை கடிந்துகொள்ளவில்லை.
  2. எந்த நேரத்திலும்
  3. “நீ இப்படிச் செய்வானேன்?” என்று கேட்டதே கிடையாது.

நீங்கள் உங்கள் குழந்தைகளை கடிந்து கொள்ள தயாராக இருக்கிறீர்களா? உங்களுடைய குழந்தைகளை நெறிபடுத்தினால் நிச்சயம் அவர்கள் உங்கள் மேல் பிரியமாய் இருக்கமாட்டார்கள். உங்கள் குழந்தைகளுக்கு வெறுப்புண்டாக்க பயப்படுகிறீர்களா? உங்கள் குழந்தைகளை நெறிபடுத்துவதில் நீங்கள் எவ்வளவு சக்தி, முயற்சி மற்றும் நேரத்தை செலவிட்டீர்கள்?

இக்காலத்து குடும்பங்கள் குழந்தைகளை மையமாக கொண்டுள்ளன ஆனால் வேத வசனத்தின்படி இது நல்ல அறிகுறி அல்ல. நம்முடைய குடும்பத்திற்குள் ஆராய்ந்து பார்ப்போம். என் குழந்தையின் எதிர்மறையான போக்குகள் என்ன?

இதை கண்டுபிடிக்க எப்போதாவது முயற்சி எடுத்ததுண்டா?

இல்லையென்றால் இன்றே நேரத்தை ஒதுக்கி, அதை வெளிப்படுத்தும்படி பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். நாளைக்கு தள்ளிப்போட வேண்டாம்.

தாவீது அதோனியாவை நெறிப்படுத்த ஏன் தயங்கினான்? அடுத்த வசனம் சொல்லுகிறது,

“அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.”

தாவீது தன்னுடைய அழகான இரண்டு மகன்களை பற்றி பெருமை பட்டிருக்கலாம்.

உங்களுடைய ‘புத்திசாலியான’, ‘அழகான,’ ‘ரேங்க்ஹோல்டர்,’ ‘ஸ்மார்ட்’ மற்றும் ‘திறமையான’ குழந்தையை நெறிப்படுத்த தயங்காதீர்கள்.

நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் குழந்தைகளை நெறிபடுத்த தவறிவிட்டால், அவர்களுடைய வாழ்வு பாதிக்கப்படும். குழந்தை உங்கள் குடும்பத்திற்கும் அவன்/அவள் வளர்க்க வேண்டிய சொந்த குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும்,, தலைவலியாகவும், தொல்லையாகவும் மாறிவிடும்.

ஒரு காலத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ நாடுகளில் நடந்த மாபெரும் ஆன்மீகச் சிதைவு இது. அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை நெறிபடுத்த தவறிவிட்டார்கள். கர்த்தர் அவர்களுக்கு மத்தியில் ஒரு சக்திவாந்த மாயையை அனுப்பினார், அதனால் அவர்கள் ஒரு பொய்யை நம்பினர். “அதிகபட்ச தனிமனித சுதந்திரம் கொடுத்து எந்தஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் இருந்தால் பிள்ளைகள் தவறானதிலிந்து சரியானதை தேர்ந்தெடுப்பார்கள்.” இது ஒரு வஞ்சகம் என்பதை இந்த சந்ததி நமக்குமுன் உறுதிசெய்துள்ளது. நாம் அதை கண்டுபிடித்த நேரத்தில் பல தலைமுறைகள் ஈடுசெய்ய முடியாத சேதத்தை சந்தித்துவிட்டன, பலர் தங்கள் ஆத்துமாவில் மரித்துபோயினர், மேலும் அவர்களை ஆட்சி செய்யும் அரசாங்கம் கர்த்தரின் சட்டங்களை மதிக்காத அல்லது குறைவாக மதிக்கும் தகுதியற்றவர்களின் கைகளுக்குச் சென்றுது.

Sr. Angelica AOJ

தானியேல் 03-02-2022 – தேவ செய்தி

பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

(லூக் 18:11).

தங்கள் நீதிமான்கள் என்று தங்களை நம்பி மற்றவர்களை இகழ்ந்த சிலருக்கு இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

சுயநீதி நம் சொந்த தவறுகளிலிருந்து நம் கண்களை குருடாக்குகிறது மற்றும் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள் தவறுகளை செய்யும்போதோ  அல்லது நம்மைப் போன்ற ஆவிக்குறிய கனிகளை தராத மற்றவர்களை இழிவாகப் பார்க்க வைக்கிறது.

ஒரு முறை ஒரு ஜெபக்கூட்டத்தில் என்னுடைய தோழி செய்தியின் போது தூங்கிவிட்டாள். நான் வருத்தப்பட்டேன், இதற்காக அவளை வெறுத்தேன்.கஆனால் சில நிமிடங்களில் நானும் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். ஆனால் ஆவியில் நான் விழித்திருந்தேன், அந்த வேளையில் கர்த்தர் என்னிடம், “ குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்.” தோழியின் பலவீனத்தில்  அவள் மேல் கருணை காட்டாததால் நான் மனம் வருந்தினேன்.

லூக் 13:2,3 – இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

லூக் 6:41 – நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

நாம் சுய நீதியில் இருக்கும்போது  கர்த்தருக்கு நன்றி சொல்வதில் குறைவு படுகிறோம்.

லூக் 7:36-47 – பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ணவேண்டுமென்று இயேசுவை அழைத்தான். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் அங்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க வந்தாள். நியாயபிரமாணங்களை பின்பற்றும் பரிசேயன் அந்த ஸ்திரீயை இழிவாகப் பார்த்தான். அதே வேளையில் தான் ஒரு பாவி என்று உணர்ந்த அவளோ இயேசுவினுடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைத்து தன் தலைமயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ் செய்து பரிமளதைலத்தைப் பூசினாள். இயேசு 47 வசனத்தில் – இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே, எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்பட்டதோ அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்.”

செயல்களில் காட்டப்படும் மனிதனின் நீதி மற்ற மனிதர்களுக்கு முன்பாக மேன்மை பாராட்டை பெறும் ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுமில்லை, ரோமர் 4:2.  நாம் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்ல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது – ஏசா 64-6. இயேசுவே நம் பாவங்களை மன்னித்து கர்த்தருக்கு முன்பாக நம்மை நீதிமான்களாக்குகிறார், நம்முடைய செயல்கள் அல்ல.

ரோமி 3:22 – அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

கலா 2:20 -; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

ஆமேன்.

Sol. Sheeba Benjamin AOJ