தானியேல் – II 22-02-2022 – தேவ செய்தி

“முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய  கர்த்தரைநியாயமானபடியே தேடாதே போனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்..

1 நாள் 15:13

தேவன் இங்கு தனது பிள்ளைகள் மீது 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

  1. உடன்படிக்கைப் பெட்டியை அவர்கள் சுமக்கவில்லை (1 நாளா 15:12)
  2. அவர்கள் கர்த்தரைத் தேடவில்லை
  3. அவர்கள் நியாயமான படி தேடவில்லை.

வேதத்தின் இன்னொறு பதிப்பு இவ்வாறு சொல்லுகிறது “அவர் நம்மை தாக்கினார் “
அன்பான நமது பரலோகத் தகப்பன் நம்மை தாக்குவாரா?


நாம் கடமை தவறும்போது “ஆம்’ என்று தேவனின் வார்த்தை கூறுகிறது. மனிதர்களின் 3 கடமைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

இயேசு கிறிஸ்து நம்மில் வாழ்கிறார், நாம் இயேசுவை தாங்கிச்செல்பவர்கள்.
இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தபோது, ​​ஒரு கழுதை அவரைச் சுமந்து சென்றதுபோல, நாம் செல்லும் இடமெல்லாம் இயேசுவை சுமந்து செல்கிறோம்.
பின்வரும் வார்த்தைகளில் சமாரியன் பெண்ணிடம் இயேசு இவ்வாறு கூறினார்
. “அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது……… தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்”. யோவான் 4:21,24
இது தான் “அந்த காலம்” இதை அறியாமல், நான் அவரை சிலைகள், புனித ஸ்தலங்கள், புனித பொருட்கள், புனித மனிதர்கள், புனித நதி, புனித யாத்திரை, புனித பூமி போன்றவற்றில் நம்பி வழிபட்டுக் கொண்டிருந்தேன்.
‘புனிதம்’ அல்லது “பரிசுத்தம்” என்ற வார்த்தை இயேசுசுகிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வரை பரலோகத்துடனும் சர்வவல்லமையுள்ள தேவனுடனும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தது.
வெளிப்படுத்தல் 5:10 முதல், “பரிசுத்தம்” என்ற வார்த்தை, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடனும் தொடர்புடையதாக மாறிவிட்டது.
இவ்வுலகில் வேறு எஙகும் “பரிசுத்தம்” இல்லை. மனிதர்களில் யாரும் பரிசுத்தவான்கள் இல்லை.
நாம் எங்கு சென்றாலும் இந்தப் பரிசுத்த தேவனையும், குமாரனையும் நமக்குள் சுமந்து செல்கிறோம் (யோவான் 14:23). உங்கள் தொகுதிகளுக்குச் செல்லுங்கள், நீங்கள் இயேசுவையும் பிதாவையும் சுமந்து செல்லும்போது, ​​அவர்களின் சிந்தனை, நுண்ணறிவு, கண்ணோட்டம், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், விருப்பு வெறுப்புகள் உங்கள் மூலம் வெளிப்படும். அவர்கள் உங்கள் கண்களைப் பார்க்கவும், உங்கள் காதுகளைக் கேட்கவும், உங்கள் மனதையும் இதயத்தையும் உணரவும் பயன்படுத்துவார்கள். உங்கள் தொகுதி பற்றிய உண்மைகள் மற்றும் உண்மைகள் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

தேவனை தேடாததற்கு தண்டனை உண்டா? ஆம். ஏனெனில் தனது சிருஷ்டிகர்த்தராகிய அவரைத் தேடுவது தான் மனிதர்களின் முதன்மையான கடமை. எல்லாவற்றிலும், ஒவ்வொரு நிமிடமும் அவரைத் தேடுவது, அவருடைய கருத்து, விருப்பங்கள், முடிவுகள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள், வழிகள், கட்டளைகள், லட்சியங்கள் போன்றவற்றைத் தேடுவது, நமது முதல் கடமை.
பலருக்கு இயேசு மருந்தாக இருக்கிறார். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அல்லது ஆபத்தை சந்திக்கும் போது, ​​அவர்கள் அவரைத் தேடுகிறார்கள். 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் ஒரு வகுப்பில் என்னிடம் கேட்டான், “நான் ஏன் இயேசுவை மட்டும் ஆராதிக்கவேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்? இக்கேள்விக்கு திருப்திகரமாக பதில் கொடுக்க என்னால் முடியவில்லை. ஆனால் அன்று இரவு இயேசு அவனிடம் பேசினார். அதை ஒரு உதாரணம் மூலம் அவனுக்கு விளக்கினார். கிச்சனில் நாம் பயன்படுத்தும் Mixy, கருவி சரியாக வேலை செய்யவில்லை என்றால் நாம் அதை கொடுத்துவிட்டு புதியதைப் வாங்கிக்கொள்கிறோம். ஒரு மிக்சி அரைக்க பயன்படுவது போல, மனிதர்கள் தேவனை ஆராதிப்பதற்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், சிருஷ்டிகர்த்தராகிய அவருக்கு அவர்களால் எந்தப் பயனும் இல்லை. அவர்களை தூக்கி எறிய முழு உரிமையும் உண்டு.

நமது ஆலயங்களில் அல்லது ஜெப அறைகளில் செய்யப்படும் பல ஜெபங்களுக்கு பதில் இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், விசுவாசிகள் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவர்களுக்கு பதில் கிடைக்கிறதோ, இல்லையோ, அவர்கள் தொடர்ந்து ஜெபித்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு குழந்தை தனது தந்தையுடன் பேசுவதைப் போல, தந்தை

நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஒவ்வொன்றுக்கும் பதிலளிப்பதுபோல், நமது பரலோகபிதாவும் ஒவ்வொரு ஜெபத்துக்கும் பதிலளிப்பார்.

ஆனால், நம்முடைய சில ஜெபங்கள் பதிலைக்கொண்டு வருவதில்லை.

ஏனெனில் அவை தேவனுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

இதைக்குறித்து, மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும்,……..

நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார்.” மாற்கு 7:7,8


அப்பா. இந்த 3 விஷயங்களை எங்களுக்குக் கற்றுக் கொடும். இயேசுவை இந்தியா முழுவதும், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும். அவரைத் தேடி, அவர் விரும்பும் வழியில் நாங்கள் நடக்கவேண்டும்.

Sol. Teena AOJ

தானியேல் – II
21-02-2022 – தேவ செய்தி

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

லூக் 19:9

சகேயு இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தான் மேலும் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தினான். ஏழைகளுக்கு தன்னுடைய உடமையில் பாதியை கொடுப்பேன் என்றும் யாரையாவது ஏமாற்றி இருந்தால் நான்கு மடங்கு அவர்களிடம் திருப்பி கொடுப்பேன் என்றும் தன்னுடைய மனந்திரும்புதலுக்கான காரியங்களை அவன் வெளிப்படுத்தினான்.

இயேசு சகேயுவிடம் சொன்னார் இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.

இரட்சிப்பு எப்படி கிடைக்கிறது?

கர்த்தராகிய இயேசுவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.

அப்போ 16:31

எபே 2:8 – கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

பிலி 2:12 – அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
நாம் இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டோம் இருப்பினும் அந்த இரட்சிப்பைத் தொடர நாம் அதை நோக்கி உழைக்க வேண்டும்.


யாக் 2:26 – கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

விசுவாசம் = இயேசுவில் நம்பிக்கை +வேலை


யாக் 2:19 – தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.


பிசாசின் நம்பிக்கை மற்றும் கர்த்தருடைய பிள்ளையின் நம்பிக்கை இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?


பிசாசு இயேசுதான் ஆண்டவர் என்று நம்புகின்றன ஆனால் விசுவாசத்திற்கு ஏற்ற எந்த கிரியையும் நம்மால் காண முடியாது.
ஆனால் கர்த்தருடைய குழந்தை அவருடைய/அவளுடைய நம்பிக்கையுடன் கூடிய செயல்களை வெளிப்படுத்துகிறது.


நாம் என்ன வேலைகளை செய்ய வேண்டும்?

  1. இயேசுவின் பாதத்தில் அமர்வது மேலும் அவரிடம் கற்பது
  2. பெரிய கட்டளை – நற்செய்தியை அறிவிப்பது- அணிசபையை பெருக்குவது – மக்களை பரிசுத்த ஆவியின் வரங்களில் பயிற்சி அளிப்பது.
  3. ஒருவர் மற்றவரை அன்பு செய்வது
  4. ஏழைகளுக்கு உதவுவது

ழைகளிடம் தாராளமாக உதவிசெய்தல், பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல் உறுதியான முடிவு எடுத்து தனது இரட்சிப்பின் செயல்களை சகேயு வெளிப்படுத்தினார். அதனால்தான் அவனுக்கு இரட்சிப்பு கிடைத்தது என்றும் அவன் அபிரகாமின் மகன் என்றும் இயேசு சொன்னார். ஆபிரகாமும் கர்த்தருக்கு கீழ்படிந்து அவர் சொன்ன அனைத்தையும் பின்பற்றினார், அதனால்தான் அவர் விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

சில வருடங்களுக்கு முன் நாங்கள் பாரம்பரிய சபைகளில் இருந்தோம், இயேசு கிறிஸ்துவை விசுவசித்தோம் ஆனால் அவருடைய ராஜ்யத்திற்காக எந்த வேலையையும் செய்தது இல்லை. ஞாயிற்று கிழமைகளில் ஒரு மணி நேரம் சபைக்குச் செல்லுவோம் மற்ற நேரங்களில் உலக பிரகாரமாக வாழ்ந்து வந்தோம்.


2016 ஆம் ஆண்டு இயேசுவின் படை அணி (AOJ) இணைந்தோம். அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளிகள் போன்றவைகளின் மூலமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்தோம். இப்பொழுது உண்மையான இரட்சிப்பை எங்கள் வாழ்வில் காணமுடிகிறது.

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்மில் விசுவாசம் வைக்கமட்டும் அல்ல மேலும் இரட்சிப்பின் காரியத்தில் ஈடுபடவும் எங்களுக்கு உதவி செய்யும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.


Sol. Theodore AOJ

தானியேல் – II
20-02-2022 – தேவ செய்தி

அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.

(லூக் 19:15)


இங்கு சொல்லப்பட்டிருக்கும் ஊழியகாரர்கள் சீடர்களை குறிக்கிறது அவர்கள் கர்த்தருடைய நியாயசனத்திற்கு முன்பாக தோன்றி தங்களைப் பற்றிய கணக்கை கொடுக்க வேண்டும்.
திரவியம் என்பது கர்த்தரால் நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் திறமை அல்லது பரிசு ஆகும். நாம்

1கொரி 12:8-11, கலா 5:22-23

ஐ நாம் வாசிக்கும்போது அவர் விருப்பம்போல நம் அனைவருக்கும் பரிசு/திறமையை கொடுக்கிறார். எல்லா மக்களையும் அவரிடம் ஒன்று சேர்பதற்கு தேவதூதர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழியகாரர்களாகிய நம்முடைய வேலையோ நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதகும்.

மத் 28:19

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ,…..


மத் 28:20

அவர் சொன்னது போல அவர் நமக்கு இந்த வேலையில் உதவி செய்வார்.
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்

நான் முழுவது இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்தியை அறிவித்து விட்டேன் என்று பவுல் அப்போஸ்தலர் சாட்சி சொல்கிறார். அவர்காலத்தில் இப்பொழுது இருப்பது போல வாகனங்கள் இல்லை. நம்மைப் பற்றி நினைப்போம். நாமோ உலகத்தின் கடைசி நாட்களில் நின்று கொண்டிருக்கிறோம். நாம் கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். ஊழியகாரர்களை எஜமானன் ஏன் அழைத்தார்? அவர்கள் எவ்வளவு சம்பாத்திருக்கிறார்கள் என்று பார்க்கத்தானே.


லூக் 19:15

இல் தன்னுடைய பணத்தை வைத்து வியாபாரம் செய்ய மூன்று ஊழிய காரர்களை அவன் நியமித்தான். 19:13 சொல்லுகிறது அதில் இரண்டு ஊழியக்காரர்கள் எஜமானனின் பணத்தை முதலீடு செய்தார்கள். அவர்கள் இருவரும் கனிசமான பணத்தை சம்பாதித்தார்கள். இவர்கள் இருவருக்கும் எஜமானன் பரிசளித்தான். அவர்களுடைய பதவியை உயர்த்தினான்.

அதே போல நம்முடைய தேவனும் உண்மையுள்ள சீடர்களுக்கு பரலோகத்தில் பரிசளிப்பார். மூன்றாவது சேவகன் பயத்தினால் எந்த ரிஸ்க்கும் எடுக்க வில்லை. எனவே பணத்தை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்தான். பணத்தை பத்திரமாக ஆனால் பயனில்லாமல் வைத்திருந்த சேவகனை எஜமானன் தண்டித்தார். அதேபோல பொய்யான சீடர்களையும், பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் ஈடுபடாதவர்களையும் கர்த்தர் நிச்சயம் தண்டிப்பார். பரலோக ராஜ்யத்தைப் பற்றி கவலைப்படாத சீடர்கள்தான் இவர்கள். இவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள திறமை மற்றும் பரிசுகள் இவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு உண்மையான சீடர்களுக்கு கொடுக்கப்படும்.

லூக் 19:24.
நாம் ஒரு மரத்தை நட்டால் தினமும் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் அப்போதுதான் அது கனிகளை கொடுக்கும். அதே போல நீங்களும் இயேசுவுக்காகவும் அவருடைய நற்செய்திக்காகவும் வாழ்ந்தால் நீங்கள் சென்ற பிறகும் உங்கள் குடும்பமும் சமுதாயமும் வளரும். இயேசுவோடு வாழ்வதற்கு நம்முடைய மனம் நல்ல சிந்தனைகளால் நிறைந்திருக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளால் நிறைந்திருக்க வேண்டும். ஜெப ஆவியால் நிறைந்திருக்க வேண்டும்,, எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைந்திருக்க வேண்டும்.


ஜெபம்


அப்பா பிதாவே எங்களை உம்முடைய நல்ல சேவகர்களாக மாற்றும். உலகபிரகாரமான பொருட்களுக்கு பின்னால் நாங்கள் ஓடக்கூடாது. நித்தியமான பரலோக வாழ்விற்கு பின்னால் மட்டுமே எங்களை ஓடுமாறு செய்யும். எங்களுடைய பரிசுகள்/திறமைகளுக்கான கணக்கை ஒரு நாள் நாங்கள் உமக்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்பொழுதும் எங்களுக்கு நினைவூட்டும்.


Sol. ANU (AOJ)

தானியேல் – II
19-02-2022 – தேவ செய்தி

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

லூகா 19:10


சகேயுவினுடைய வீட்டில் மேற்கண்ட வசனத்தை இயேசு பேசினார். இயேசுவை சகேயு தன்னுடைய வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தான். இயேசுவை காண்பதற்கு அவர் பேராவலுடன் இருந்தான் மேலும் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
இயேசுவோடு சகேயு பேசிக்கொண்டிருக்கையில் அவனில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது, அவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறான் மேலும் அவன் மற்றவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் சேர்த்த பணத்திஅ திரும்ப கொடுத்துவிட தயாராக இருக்கிறான்.


நான்கு மடங்கு நான் திருப்பி கொடுப்பேன் என்று இயேசுவுக்கு முன் அவன் வாக்குகொடுத்தான்.

தன் அவன் பாவத்திற்காக மனந்திரும்புவதும், அதற்காக பரிகாரம் செய்ய தயாராக இருப்பதும் அவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாகும்.

எவ்வாறு ஆபிரகாம் கர்த்தர் சொன்னதை முழுமையாக நம்பி தனது தந்தை மற்றும் உறவினர்களின் வீட்டை விட்டு வெளியேற தயாரானதுபோல சகேயுவும் செய்தான். கர்த்தரை நம்பி அவரை பின்பற்ற முன்வந்ததால் இயேசு அவனை அபிரகாமுன் மகன் என்று சொல்லுகிறார். இது அவனுக்கு அவனுடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாகும். இயேசு இவ்வுலகிற்கு வந்த நோக்கம் இந்த மனிதனில் நிறைவேறியது. – அவர் தொலைந்தவர்களை தேடவும் அவர்களை காப்பாற்றவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார்.

அதுதான் அவருடைய ஊழியமும் கூட.
99 ஆடுகள உடன் மேய்ப்பவரிகளிடம் விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை எப்படித் தேடிச் செல்கிறார் என்பதையும் காணாமற்போன ஆட்டைக் கண்டு சந்தோஷப்படுவதைப்பற்றியும் இயேசு சொல்லுகிறார்.
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக் 15:7


காணாமல் போன நாணயத்தைத் தேடும் பெண் அதைத் தேடி கண்டுபிடித்தாள். அதைக் கண்டு தன் தோழிகளுடன் மகிழ்ச்சி அடைகிறாள். காணமற்போன தன்னுடைய மகனை திரும்ப கண்டு ஒரு பெரிய விருந்தோடு அவன் வருகையை கொண்டாடுகிறார். இந்த எல்லா உவமைகளும் இயேசு இந்த உலகிற்கு வந்ததின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

(யோவா 3:17).


அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். (மத் 20:28). நம்முடைய இரட்சகர் எவ்வளவு மேன்மையானவெ. அவருடைய நாமம் மகிமைப்படுவதாக.
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (லூக் 5:32).
பவுல் அப்போஸ்தலர் சொல்லுகிறார்
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 1திமோ 1:15 இயேசு தன்னுடைய மகிமையான பரலோகத்தை விட்டுவிட்டு நம்முடைய இரட்சிப்புக்காக இவ்வுலகிற்கு வந்தார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். தேவன் அவரை மூன்றாம் நாள் எல்லாரும் காணும்படி உயிர்பித்தார். நமக்காக, அவருடைய சபைக்காக, மற்றும் அவர் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அனைவருக்காகவும் அவர் மீண்டும் வருவார். நாம் கிருபையின் யுகத்தில் இருக்கிறோம். நாம் அவரிடம் வருவோம், அவருடைய குடும்பத்தின் அங்கதினர் ஆவோம்.
ஒரு மனிதன் கர்த்தருடைய வார்த்தையாலும் பரிசுத்த ஆவியாலும் மீண்டும் பிறக்கும்போது அவனுக்குள் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவனுடைய வாழ்க்கை கண்ணோட்டம் மாறுபடுவதோடு அது அவனுடைய நடத்தையிலும் தெரிகிறது. பழைய வாழ்வில் எதையெல்லாம் மதிப்புமிக்கதாக கருதப்பட்ட அனைத்து விஷயங்களும் புதியவாழ்வில் விரும்பப்பட வில்லை. நம்மை காப்பாற்றும் இயேசு கிறிஸ்துவின் கிருபையை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருடைய சாட்சியும் இதுதான். என்னோடும் இப்படித்தான் நடந்தது. கர்த்தருடைய வார்த்தையை அதிகமான உற்சாகம் மற்றும் அன்புடன் தியானிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் என்னைப்பயன்படுத்தி அநேகருக்கு தம்முடைய வார்த்தையை கொடுக்கிறார். நான் இதற்காக கர்த்தருக்கு நன்றிசொல்கிறேன். அவருடைய நாமம் உயர்த்தப்படுவதாக.

அப்போ 10:36,38,40


அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

அப்போ 10:42-43


எப்பொழுது வேண்டுமானாலும் நடக்க விருக்கும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்ப்டுவதற்கு நாம் தயாராவோம்.

Sol. Salomi Kurian

தானியேல் – II
18-02-2022 – தேவ செய்தி

அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்,

( லூக் 19:7).

லூக் 19:7 – சகேயுவினுடைய வீட்டில் அவனுடைய உபசரிப்பை இயேசு ஏற்றுக்கொண்டபோது நடந்ததாகும். அவன் ஒரு வரிவசூலிப்பவன் எனவே அனைவரும் அவனை வெறுத்தனர். இவர்களால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே ஏன் இயேசு வரிவசூலிப்பவன் வீட்டிற்கு சென்றார் என்று கேட்டார்கள். மத்தேயு என்ற இன்னொறு வரிவசூலிப்பவனை இயேசு அழைத்தார்.

லூக் 5:27-32 இந்த நிகழ்வு வர்ணிக்கப்பட்டுள்ளது.
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
இயேசு பாவிகளுக்காகவே வந்தார் என்பதை இந்த வேத பகுதி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

மத் 9:11. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

லூக் 15:2. பரிசேயர்களும் சதுசேயர்களும் அக்காலத்தின் மத தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேதத்தை சமுதாயத்தில் போதித்தார்கள் மேலும் மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கு மரியாதை இருந்தது. அவர்கள் வேதத்தில் தங்களுடைய சொந்த விளக்கங்களை சேர்த்தனர் மேலும் யூத சமுதாயத்தை தங்கள் கீழ் வைத்திருப்பதற்காக மத சடங்குகளை அமைத்தனர். யூதர்கள் தங்களுடைய இரட்சகரும் ராஜாவுமாகிய மேசியாவிற்காக காத்திருந்தனர். ஒரு ஊழியகார தலைவரை அவர்கள் எதிர்பார்க்க வில்லை. இயேசு தேவாலயத்தில் எழுந்து நின்று புத்தகத்தை பிரித்து படித்தார்; கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்.  

லூக் 4:18 இயேசு கிறிஸ்துவின் இந்த கொள்கைகளை மக்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு இயேசுவினுடைய ஊழியத்தால் பயனடைந்தார்கள். ஆனால் ஓய்வு நாளில் இயேசு தம்முடைய பல அற்புதங்களை செய்து ஓய்வுநாளை தீட்டுபத்தியதால் மதத் தலைவர்கள் இந்த பணியை வெறுத்தார்கள். இயேசுவின் இந்த அடாவடித்தனத்தை அவர்களால் சகித்துக்கொள்ள முடிய வில்லை. வரிவசூலிப்பவர்கள் மற்றும் பாவிகளுடன் இயேசு அமர்ந்தது அவர்களுடைய கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.

அதுமட்டும் அல்ல, இயேசு எப்பொழுதும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களோடு இருந்தார். அநேக மக்கள் இயேசுவினுடைய கிருபை நிறைந்த வார்த்தைகளை கேட்டு வியாதி மற்றும் சாத்தானுடைய பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காக வந்தனர். யாரெல்லாம் வந்தார்களோ அவர்கள் சுகமானார்கள், இயேசு பிரபலமானதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயேசு அவர்களிடம் கேட்டார் அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

லூகா 6:9-11 இதுவே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. பாவிகளையும் வரிவசூலிப்பவர்களையும் யூத சமூகத்தின் சமூக விரோதிகளாக கருத வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ரோமர்கள் அவர்களை ஆட்சி செய்ததால் மக்கள் மீது தங்களுடைய அதிகாரத்தை செலுத்தமுடியாமல் விரக்தியடைந்தனர். ஆனால் பாவிகளுக்கும் வரி வசூலிப்பவர்களுக்கும் நண்பராக இருப்பவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய சட்டத்திற்கு எதிராக சென்றதால் இயேசு அவர்களின் தலைவர்கள் அல்ல என்று மக்களை நம்ப வைக்க அடிககடி முயற்சி செய்தார்கள்.

இயேசு இந்த பூமியில் வந்து பாவிகள் மீது தன்னுடைய இரக்கத்தையும் தயவையும் காட்டாவிட்டால் நான் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது.

நம்முடைய தேவன் எவ்வளவு கிருபை நிறைந்தவர், எனக்காக தன்னையே கொடுத்தார் மேலும் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவதற்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.

லூக் 16:8

Sol. Antony Kurian AOJ

,

தானியேல் – II

17-02-2022 – தேவ செய்தி

புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்

லூக் 19:13.

நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு நோக்கத்திற்காக இருக்கிறோம். நாம் பிறந்திருக்கும் குடும்பம் அல்லது வசித்துவரும் நாடு எல்லாமே ஒரு குறிக்கோளோடுதான் அமைந்துள்ளது, நம் ஆண்டவராகிய இயேசு திரும்பி வரும் மட்டும் ஒரு நோக்கத்திற்காக சேவை செய்துகொண்டிருக்க வேண்டும்.
லூக்கா 19:13


நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம் பண்ணுங்கள். – இதுதான் நம்முடைய தேவனின் கட்டளை, அவருடைய ஊழியகாரர்களாகிய நாம பின்பற்ற வேண்டிய ஒரு கட்டளை.
நாம் இயேசு கிறிஸ்துவின் சேவகர்கள். நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும். அவருடைய இரகசிய வருகைவரை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பரலோக ராஜ்யத்தின் காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நாம் வேறு இடத்தில் நமக்கு கொடுக்கப்படாத காரியத்தில் பிஸியாக இருக்கிறோம். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய திறமையின் காவலாளி நாமே. ஒரு நாள் நம்முடைய திறமை, கொடுக்கப்பட்ட காரியங்கள் இவைகளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். நம்முடைய வேலை நற்செய்தியை அறிவிப்பது மற்றும் சீடராக்குவது. இந்த வேலையை நாம் செய்துகொண்டு வந்தால் அவர் நம்மை பார்த்து, “நல்லது உத்தம ஊழியனே” என்று சொல்லுவார். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகள் (திறமைகள்) அவர் நமக்கு கொடுத்திருக்கும் வேலையை நிறைவு செய்யத்தான். நாம் உண்மையில் நம் திறமைகளை பரலோகராஜ்யத்தின் காரியத்தில் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோமா? நாம் உத்தம உழியர்களா? நாம் நேர்மையான ஊழியர்களா?

உங்களோடு ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கட்ந்த 27 ஆண்டுகளாக திருமணமான ஒரு முஸ்லீம் சகோதரியை சந்தித்தேன். அவர் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார் ஏனென்றால் 17 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய கணவர் அவரை கைவிட்டுவிட்டார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறப்பப்பட்டு நான் அவருக்காக டிசம்பர் 18 தேதியிலிருந்து ஜெபித்து வந்தேன். பிப்ரவரி 2ஆம் தேதி அந்த சகோதரியின் கணவர் தொலைபேசியில் அவரை அழைத்தார் இதோ நான் திரும்பி வருகிறேன் உன்னிடம் என்று சொன்னார். அவர்கள் இருவரும் சொன்ன ஒரே சாட்சி என்னவென்றால் இயேசு கிறிஸ்துதான் எங்களை ஒன்று சேர்த்தார் எல்லா மகிமையும் அவருக்கே.
உங்களுக்கும் எனக்கும் இருக்கின்ற கேள்வி இன்று என்னவென்றால் பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் நாம் முழுமனதுடன் அல்லது அரை மனதுடன் அல்லது முற்றிலும் ஈடுபடாமல் இருக்கின்றோமா? ஆராய்ந்து பார்ப்போம்.


நமக்குள் குறை இருப்பதாக நாம் உணர்ந்தால் உடனே மனம்வருந்தி மன்னிப்பு கேட்போம். நம்முடைய முதலாளியின் புத்தகத்தில் நமது பெயர் இல்லாமல் போக கூடாது,
ஜெபம்:
அப்பா பிதாவே, நான் மீண்டுமாக உமக்கு சேவை செய்ய விரும்புகிறேன், எனக்குள் இருக்கும் நெருப்பை அனலாக்கும். இயேசு கிறிஸ்துவே எனக்கு கிருபைதாரும் நான் முற்றிலும் புதுப்பிக்கப்படுவேன். பரிசுத்த ஆவியானவரே என்னை முற்றிலும் உம்முடைய கட்டுபாட்டின் கீழ் வையும்,, உம்முடைய மகிமைக்காக என்னை பயன்படுத்தும், YESHUA HAMASHIACH நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமேன்.

Sol.Theresa Cabral.(AOJ)

தானியேல் – II
16-02-2022 – தேவ செய்தி

யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய்,….

2நாளா 19:4


ராஜா யோசபாத் தலைநகரில் வசித்து வந்தான்.
எந்த இடத்தில் நீங்கள் வாசம் செய்கிறீர்களோ அதுதான் கர்த்தர் வேலை செய்ய விரும்பும் தலைநகரம்.


அங்கிருந்து நீங்கள் உங்களுடைய தொகுதியின் தற்போதைய நிலையை காண அதை சுற்றிபார்க்க செல்ல வேண்டும்.
தீர்க்கதரிசி எசேக்கியேல் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்,


எசேக் 37:1,2 – கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.
நீங்கள் உங்கள் தொகுதியை நேரடியாகவோ அல்லது தினசரி ஜெபத்தில், கிராமம் கிராமமாக, நகரங்கள், குடும்பங்கள் என சுற்றி நடக்கும்போது அங்கு செய்யப்பட்ட ஆனால் மறைக்கப்பட்ட பாவங்கள் உங்களுக்கு தெரியவரும்.


மாந்திரீகம், நரபலிம் மத மூட நம்பிக்கைகள், பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றின் பெயரால் செய்யப்படும் அட்டூழியங்கள் மேலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இவைகளையும் பற்றி தெரிந்துகொள்வீர்கள்.


இப்படிப்பட்ட எத்தனை எத்தனை உலர்ந்த எலும்புகள் உங்கள் தொகுதியில் இருக்கின்றன?


பல்வேறு காரணங்களால் மூச்சு திணறலுக்கு ஆளான அவல நிலையில் வாழும் மக்களை சென்று பாருங்கள்
விவசாயிகள்? குழந்தைகள்? மாணவர்கள்? தாய்மார்கள்? தகப்பன்மார்கள்? ஆசிரியர்கள்? இளைஞர்கள்? அரசு அதிகாரிகள்? தொழில்துறை தொழிலாளர்கள்? ஊடக் ஊழியர்கள்? பத்திரிகையாளர்கள்? அரசியல் வாதிகள்? படைவீரர்கள்? வணிகர்கள்? காவலர்கள்? இவர்களை யெல்லாம் நாம் பார்க்கலாமா?

யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.


நீங்களும் உங்கள் தொகுதியில் பலமுறை பிரயாணம் செய்யவேண்டும், அங்கிருக்கும் மக்களையும் அவர்களுடைய இருதயங்களையும் இயேசு கிறிஸ்வின் பக்கம் திருப்பவேண்டும்.


எசேக்கியல் சொல்லுகிறார், உலந்த எலும்புகளை அவைகளுடை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக, கர்த்தர் என்னை அவைகளைச் சுற்றி வரச்சொன்னார்.
கர்த்தர் அவனுடைய வாயில் வைத்த வார்த்தைகளால் அவன் தீர்க்க்தரிசனம் சொன்னான்.
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசே 37:4-6.
எசேக்கியேல் கர்த்தர் சொன்னபடியே அனைத்தையும் செய்தார்.
எனக்கு கற்பிக்கப்பட்ட படியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து காலூன்றி மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
நீங்கள் உங்கள் தொகுதியில் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது மகாபெரிய சேனை எழுந்துநிற்கும். அவர்கள் கர்த்தருக்காக நிற்பார்கள், அவருக்காக யுத்தம் செய்வார்கள்.

Sol. Benovin Samuel AOJ.

தானியேல்
15-02-2022 – தேவ செய்தி

இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக் 18:22

இங்கு சொல்லப்படும் மனிதன் மிகவும் செல்வந்தன். அவன் கர்த்தரை பின்பற்றினான், அவன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய கட்டளைகளை அவனுக்கு புரிந்த மத அடிப்படையில் பின்பற்றினான். இந்த செல்வந்தன் மத கற்பனைகளை பின்பற்றினானே ஒழிய கர்த்தரோடும் மற்றவர்களோடும் நல்ல உறுதியான உறவை அவன் ஏற்படுத்த வில்லை. அவனுடைய வாழ்வு எவ்வளவு குறைகள் நிறைந்தது என்பதை இயேசு அவனுக்கு காட்டினார். அவனுடைய எண்ணங்கள் எப்படி சுயநலம் மிகுந்தவை மற்றும் உலகபிரகாரமானவை என்பதையும் சுட்டிகாட்டினார்.


மத் 19:21 – அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
நீங்கள் அதிகம் நேசிக்கும் அனைத்தையும் விற்று, அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, சிலுவையை எடுத்துக்கொள்ளுங்கள்.


செல்வம் கர்த்தரின் அங்கீகாரத்தின் அடையாளம் என்று அவன் நினைத்தார். ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை, ஏதோ ஒன்று அவரை மேலும் தேட வைத்தது.

அவரது கவனம் முழுவதும் செல்வத்தின் மீதும் சில நேரம் சமுதாயத்தின் மீதும் சமுதாயம் அவனை எப்படி பார்கிறது என்பதைப்பற்றியும்தான் இருந்தது. அதனால்தான் இயேசு உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்றுவிடு என்றார்.


அநேக வேளைகளில் நாம் இயேசுவை பின்பற்றுகிறோம், மேலும், ஜெபம், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற எல்லா நல்ல காரியங்களை செய்கிறோம், கர்த்தர் நம்மை செல்வத்தால் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் நம்மை அங்கீகரிக்கிறார் என்று நினைத்து நாம் செல்வத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறோம்.


நமது வேலை, வியாபாரம், குடும்பம் போன்றவற்றில் நாம் சிக்கிகொள்கிறோம். ஆனால் நாம்முடைய வாழ்வில் சந்தோஷம், திருப்தி, மற்றும் போதும் என்ற மனம் இல்லாம இருக்கிறோம்.


என்னை கீழே இழுப்பது எது?


மத் 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.


பூமியில் பொக்கீஷங்களை சேர்த்து வைப்பதிலும், வேறுஒருவராக வாழ முயற்சிப்பதிலும், பல போட்டிகளிலும் மக்கள் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள்.


நீதி 6:19 – ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
பல வருடங்களுக்கு முன், எனக்கு தெரிந்த சில நண்பர்கள் தவறான பாதையில் சென்று ஏராளமான செல்வத்தைசேர்த்தனர். ஒருவர் மிகவும் செல்வந்தர். போன வருடம் இள வயதில் அவர் மரித்துபோனார், தன்னுடைய குடும்பத்திற்காக எதையும் வைக்க வில்லை.


வாழ்வில் நாம் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ வேண்டும்.
கடந்த ஆண்டு முடிவில் நான் சந்தோஷமாக இல்லை, ஏதோ ஒன்றை நான் கைவிட வேண்டும் என்று உணர்ந்தேன். அதற்குபின் உடனடியாக எனக்குள் இதற்குமுன்னாள் அனுபவிக்காத அமைதியும், மகிழ்ச்சியும் என்னை நிறப்பிற்று, பாடல் இல்லாமல் நடனமாடினேன், காற்றில் மிதப்பது போல் இருந்தது.


மற்றவர்களுக்கு உதவி செய்வதன்மூலம் தியாகம் செய்வது அழிக்கமுடியாத பொக்கீஷத்தை தருகிறது.


Sol. Arvind Dias AOJ

தானியேல் – II
14-02-2022 – இன்றைய தேவ செய்தி

ஒரு நற்செய்தி – பல வழிமுறைகள்

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

கலா 1:6-7

சமீபத்தில் நான் கேட்ட கதைஒன்று இந்த வசனத்தை எனக்கு நினைவுபடுத்தியது. தாமஸ் ஆல்வா எடிசன் ஒருமுறை இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் அவர் வேதாகமத்தை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் இருந்த அதே இரயில் பெட்டியில் இவர் எடிசன் என்று தெரியாத மற்றொரு விஞ்ஞானியும் பயணம் செய்தார், அவர் ஒரு நாத்தீகர்.
பயணத்தின் போது எடிசன் பைபிளைப் படித்துக் கொண்டிருந்தபோது, ​​மற்ற விஞ்ஞானி எடிசன் என்று தெரியாமல் அவரிடம் கேட்டார். “நீங்கள் படித்த இளைஞனாகத் தெரிகிறீர்கள், இந்த அறிவியல் யுகத்தில் கடவுள், மதம் மற்றும் அனைத்தையும் எப்படி நம்புகிறீர்கள்?. ‘உங்களைப் போன்ற இளைஞர்கள் கடவுளைத் தேடினால், சிறந்த உலகத்தை உருவாக்கப் போவது யார்? அவர் கேட்டார்.


எடிசன் அமைதியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், மற்ற விஞ்ஞானி அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் ஒரு சுருக்கமான உரையாடலுக்குச் சென்றனர், மற்ற விஞ்ஞானி எடிசனைப் பற்றி மேலும் அறிய அவரது வீட்டிற்குச் செல்ல விரும்பினார். எடிசன் அவரை தனது வீட்டிற்கு அழைத்தார், விஞ்ஞானி எடிசனின் புதிய கண்டுபிடிப்பைப் பார்த்தபோது அவர் அதை எப்படி கண்டுபிடித்தார் என்று கேட்டார்.
அதற்கு எடிசன், “நான் ஒன்றும் செய்யவில்லை; ஒரு நாள் நான் கண்விழித்த போது நீ பார்க்கிற மாதிரி இருந்தது”.


மற்ற விஞ்ஞானி, “நீ உருவாக்காமல் எப்படி வரும்” என்றார். எடிசன் அதே பதிலை மீண்டும் மீண்டும் பலமுறை கொடுத்தார், மற்ற விஞ்ஞானி வழக்கம் போல் அதை நம்பவில்லை. எடிசன் இறுதியாக அவரிடம், “அது அப்படித்தான் வந்தது என்று நீங்கள் நம்பவில்லை என்றால், பூமி, கேலக்ஸி மற்றும் காஸ்மோஸ் அனைத்தும் ஒரு நாள் தானாக உருவானது என்று எப்படி நம்புவீர்கள். ஒரு படைப்பு இருந்தால், ஒரு படைப்பாளர் இருக்கிறார், சத்தியம் பைபிளில் எழுதப்பட்டுள்ளது.

நாத்திகராக இருந்த மற்ற விஞ்ஞானி கர்த்தரை நம்புவதற்கு எடிசனில் உள்ள பரிசுத்த ஆவியின் வழிநடத்தல்தான் இது.


அப்போ 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கிய தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆணவராயிருக்கிறபடியால் …..


நான் சென்னையில் ஒரு ஜெராக்ஸ் கடிக்குச் சென்றேன். கிறிஸ்தவ குடும்பத்தால் அந்த கடை நடத்தப்படுகிறது, சுவாமி விவேகானந்தர் இயேசுவைப் பற்றி பின்வரும் வரியில் சாட்சியமளிக்கும் பலகையைப் பார்த்தேன்: “உங்களுக்கு விடுதலை தேவைப்பட்டால் இயேசுவிடம் வாருங்கள், யாரையும் ஒப்பிடும்போது அவரே உயர்ந்த கடவுள். உங்களுக்குத் தெரியும், அவர் உங்களை விடுவிப்பார்.”


கடைக்கு வரும் ஒவ்வொரு அவிசுவாசியும் அதைப் படிக்கும்படி கடையில் தெரியும் பலகையை வைக்க பரிசுத்த ஆவியானவர் கடை உரிமையாளருக்கு இந்த அறிவைக் கொடுத்தார். மரியாதைக்குரியவர் என்று இந்தச் சமூகம் நம்பும் சுவாமி விவேகானந்தர் சாட்சியமளித்துள்ளார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை இது வாசகர்களுக்கு அதிகரிக்கும்.
மரியாதைக்குரியவர் என்று இந்தச் சமூகம் நம்பும் சுவாமி விவேகானந்தர் சாட்சியமளித்துள்ளார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை இது வாசகர்களுக்கு அதிகரிக்கும்.


அப்போஸ் 17 இல் சிலை வழிபாட்டால் நிறைந்த நகரமாகிய அத்தேனேவில் நற்செய்தியை ஒரு தனிபட்ட முறையில் அறிவிக்க வழிநடத்துவதை நாம் காண்கிறோம். அங்கே ஒரு பலிபீடத்தை அவர் கண்டார், “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருந்தது. “நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்- அவர்தான் இயேசு.


ஏசா 45:18 – வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானேகர்த்தர், வேறொருவர் இல்லை.
நற்செய்தியை நாம் எப்படி அறிவிப்பது என்றும், இயேசுவுக்கு சாட்சி பகர்வது எப்படி என்றும் அறியாமல் திகைக்கும் தருணங்கள் நம்முடைய வாழ்வில் நிச்சயம் வரும். ஆனால் எப்பொழுதும் நம்பிக்கையுடன் இருப்போம், மேலும் பரிசுத்த ஆவியின் ஞானத்திற்காக ஜெபிப்போம். அப்பொழுது எந்த மனித எண்ணத்தாலும் நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு வித்தியாசமாக நற்செய்தியை அறிவிக்கவும் இயேசுவுக்கு சாட்சியளிக்கவும் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்துவார்.


ஒரே நற்செய்திதான், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு உண்டு ஆனால் இந்த நற்செய்தியை அறிவிக்க பல வழிகள் உள்ளன.


Sol. Leo

தானியேல் –
13-02-2022 – தேவ செய்தி

ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான் –

லூக் 18:36

திரளான ஜனங்கள் தங்கள் வருடாந்திர பாஸ்காவிழாவை கொண்டாடுவதற்கு இறுதி பயணமாக எருசலேமுக்கு இந்த வழியாக வருவார்கள் என்று அறிந்து பர்திமேயு என்கிற ஒரு குருடன் எரிகோவின் சாலையோரம் அமர்ந்திருக்கிறான்.


அவனால் பார்க்க முடியாது, ஆனால் காதுகள் கேட்கும். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான், நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். உடனடியாக பத்து குஷ்டரோகமுள்ள மனிஷரை போல (லூக் 17:13), “இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.” இங்கு இயேசுவை மேசியா என்று அழைத்தான்.
இது ஒரு விசுவாச அறிக்கையாகும். பர்திமேயு இயேசுவைப் பற்றி போதுமான அளவு கேள்விப்ப்ட்டிருக்கிறான், நாசரேத்திலிருந்து வரும் ஒரு சாதாரண மனிதர் அல்ல அதற்கும் மேலானவர் என்று. மக்கள் அவனை பேசாமலிருக்கும்படி அதட்டுகிறார்கள் ஆனால் அவன் நிறுத்தவில்லை, ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் இயேசுவின் கவனத்தை ஈர்பதற்காக அவன் இன்னும் உரத்த குரலில் கத்துகிறான். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் நம்பிக்கையிழந்த அவனது அழுகுரலை இயேசு கேட்டார் அவனுக்கு பார்வை தந்தார்.

என்னுடைய தோழிகளில் ஒருவர் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியே வந்த Catholic nuns (AOJ) சகோதரிகளை பார்க்க ஆசைப்பட்டார். நானும் ஒரு கத்தோலிக்கர் எனவே இந்த சர்ந்தர்ப்பதை பயன்படுத்திக்கொண்டு என் தோழியோடு சேர்ந்து அவர்களை சந்திக்கச் சென்றேன். என்னுடைய சில சந்தேகங்களை அவர்கள் முன் வைத்தேன், அவர்கள் தந்த பதில் கேட்டு என்னுடைய மன கண்கள் திறக்கப்பட்டது. இது நமக்கு லூக் 19:3 இல் வரும் விடாப்பிடியான மனிதனை நினைவூட்டுகிறது. என்னுடைய தேவை இதுதான் என்று மற்றவர்களுக்கு தோன்றினாலும் அது உண்மையில் நான் விரும்புவதாக இல்லாமல்கூட இருக்கலாம். அவன் பிச்சைதான் (பணம்) கேட்டுக்கொண்டிருந்தான் மக்களிடம் ஆனால் உண்மையில் அவனுக்கு தேவைப்பட்டது பணம் அல்லஉண்மையில் உலகில் நடந்துகொண்டிருக்கும் காரியங்களை விசேஷமாக இந்த கடைசி நாட்களைப் பற்றி வேதத்தில் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிந்திருக்க வேண்டும். லூக் 24:18 – எம்மாவுக்கு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு சீடர்களில் ஒருவன் இயேசுவை பார்த்து கேட்டான், “இந்நாட்களில் எருசலேமில் நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறேரோ என்றான்.” அவன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததைப் பற்றி குறிப்பிட்டான், அந்நாட்களில் அது அனைவரின் விவாதப் பொருளாகவும் இருந்தது.
நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார் (மத் 24:42) உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் “விழித்திருங்கள்”. விழிப்பாக இருந்து விசுவாசத்தில் கிரியை செய்ய இந்நாட்களில் ஆண்டவர் பர்திமேயுக்களை தேடுகிறார். நிறைய காரியங்கள் மற்றும் முடிவுகள் இந்த நேரத்தில் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் ஒருபோதும் செய்யப்படாது. ஊமையும் செவிடுமான அசுத்த ஆவியின் பிடியிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜெபிப்போம் அப்போதுதான் சரியான வேளையிலே கேட்கவும் பேசவும் முடியும்.

Sol. Amala Arunachalam(AOJ)