யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய்,….
2நாளா 19:4
ராஜா யோசபாத் தலைநகரில் வசித்து வந்தான்.
எந்த இடத்தில் நீங்கள் வாசம் செய்கிறீர்களோ அதுதான் கர்த்தர் வேலை செய்ய விரும்பும் தலைநகரம்.
அங்கிருந்து நீங்கள் உங்களுடைய தொகுதியின் தற்போதைய நிலையை காண அதை சுற்றிபார்க்க செல்ல வேண்டும்.
தீர்க்கதரிசி எசேக்கியேல் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்,
எசேக் 37:1,2 – கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.
நீங்கள் உங்கள் தொகுதியை நேரடியாகவோ அல்லது தினசரி ஜெபத்தில், கிராமம் கிராமமாக, நகரங்கள், குடும்பங்கள் என சுற்றி நடக்கும்போது அங்கு செய்யப்பட்ட ஆனால் மறைக்கப்பட்ட பாவங்கள் உங்களுக்கு தெரியவரும்.
மாந்திரீகம், நரபலிம் மத மூட நம்பிக்கைகள், பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றின் பெயரால் செய்யப்படும் அட்டூழியங்கள் மேலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இவைகளையும் பற்றி தெரிந்துகொள்வீர்கள்.
இப்படிப்பட்ட எத்தனை எத்தனை உலர்ந்த எலும்புகள் உங்கள் தொகுதியில் இருக்கின்றன?
பல்வேறு காரணங்களால் மூச்சு திணறலுக்கு ஆளான அவல நிலையில் வாழும் மக்களை சென்று பாருங்கள்
விவசாயிகள்? குழந்தைகள்? மாணவர்கள்? தாய்மார்கள்? தகப்பன்மார்கள்? ஆசிரியர்கள்? இளைஞர்கள்? அரசு அதிகாரிகள்? தொழில்துறை தொழிலாளர்கள்? ஊடக் ஊழியர்கள்? பத்திரிகையாளர்கள்? அரசியல் வாதிகள்? படைவீரர்கள்? வணிகர்கள்? காவலர்கள்? இவர்களை யெல்லாம் நாம் பார்க்கலாமா?
யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.
நீங்களும் உங்கள் தொகுதியில் பலமுறை பிரயாணம் செய்யவேண்டும், அங்கிருக்கும் மக்களையும் அவர்களுடைய இருதயங்களையும் இயேசு கிறிஸ்வின் பக்கம் திருப்பவேண்டும்.
எசேக்கியல் சொல்லுகிறார், உலந்த எலும்புகளை அவைகளுடை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக, கர்த்தர் என்னை அவைகளைச் சுற்றி வரச்சொன்னார்.
கர்த்தர் அவனுடைய வாயில் வைத்த வார்த்தைகளால் அவன் தீர்க்க்தரிசனம் சொன்னான்.
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
எசே 37:4-6. எசேக்கியேல் கர்த்தர் சொன்னபடியே அனைத்தையும் செய்தார். எனக்கு கற்பிக்கப்பட்ட படியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து காலூன்றி மகா பெரிய சேனையாய் நின்றார்கள். நீங்கள் உங்கள் தொகுதியில் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது மகாபெரிய சேனை எழுந்துநிற்கும். அவர்கள் கர்த்தருக்காக நிற்பார்கள், அவருக்காக யுத்தம் செய்வார்கள்.
Sol. Benovin Samuel AOJ.
