நாள்: 28-11-2022
மாற்கு 9 : 38 – 41 ” அப்பொழுது யோவான் அவரை நோக்கி , போதகரே நம்மை பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம். அவன் நம்மை பின்பற்றாதவன் ஆனதால் அவனைத் தடுத்தோம். என்றான். அதற்கு இயேசு அவனைத் தடுக்க வேண்டாம் என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்து தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரொதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவனுடையவர்கள் ஆகியிருக்கிறபடியினாலே என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனை அடையாமல் போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
இதே அர்த்தமுள்ள வசனங்கள் மாற்கு 9 : 40 ல் ” நமக்கு விரோதமாயிராதவன் நமக்கு பட்சத்திலிருக்கிறான் என்றார் ” என்றும், லூக்கா 9 : 50 ல் ” அதற்கு இயேசு, தடுக்க வேண்டாம் , நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம் , யாரெல்லாம் தங்களுடைய சொந்த வழிகளில் இயேசுவினுடைய நாமத்தை பிரசங்கிக்கிறார்களோ, அவருடைய வார்த்தைகளை போதிக்கிறார்களோ சரியோ அல்லது தவறோ அவர்கள் எல்லோரும் அறுவடை செய்பவர்களாகவோ , இயேசுவினுடைய அறுவடையின் பணியாளர்களாகவோ அழைக்கப்படுவார்கள். கர்த்தர் அவருடைய நேரத்தில் அவர்களை சரிபண்ணுவார். அப்போஸ்தலராகிய பவுல் , பிலிப்பியருக்கு எழுதிய கடிததம் 1 : 15 – 18 ல் குறைந்தபட்சம் எப்படியோ கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவதற்காக நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
இதேபோல் நாம் மத்தேயு 12 : 30 ல் ” என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான் , என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் ” என்று காணலாம். இது மேலும் குறிப்பது ,இயேசுவை பின்பற்றாதவர், எதிரியின் வல்லமையில் வேர்விடுவதால் கர்த்தரின் ராஜ்யத்தில் நிற்கவும் முடியாது, அவரை பின்பற்றவும் முடியாது.
நான் காலை ஆராதனைக் குழுவில் இந்த வசனங்களைக் குறித்து தியானிக்கையில் இந்த வசனங்களை பலவித வழிகளில் புரிந்து சிலிர்த்துவிட்டேன். பரிசுத்த ஆவியானவர் மத்தேயு 5 ம் அதிகாரத்தை நினைவூட்டினார்.இயேசு மலையின்மீது பிரசங்கம் பண்ணுகையில் யாரெல்லாம் உண்மையான, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்று கூறுகிறார். ஒருவர் கர்த்தருடன் நிமிர்ந்து நடந்தால் அவர்கள் இயேசுவினுடைய நாமத்தை மறுக்க மாட்டார்கள். மேலும் அவருடைய நாமத்தில் பயபக்தியை காட்டுபவர்கள் அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவார்கள்.
சங்கீதக்காரன் சங்கீதம் 15 : 1- 2 ல் சொல்கிறான். ” கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் ? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான். உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தை பேசுகிறவன்தானே. “
சங்கீதம் 92 : 12 ” நீதிமான் பனையைப்போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளருவான். “
நான் இந்தியாவைக் குறித்த என்னுடைய விஷனை என் நிறுவன சபையில் பகிர்ந்த போது அவர்களுடைய பொறுப்பின்மையால் பின்னடைந்து அந்த நிறுவன சபையை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஏனென்றால் , வேதவசனங்களுக்கு உடன்படாமல் தங்களுடைய பாரம்பரிய வழிகளை தொடர்ந்ததன் முலம் கர்த்தரை தேடுவதில் சரியான வழியை தேர்ந்தெடுக்கவில்லை. எப்படியிருப்பினும் ஒருவர் என்னிடம் மேற்கூறிய வசனங்களை பகிர்ந்த போது, நான் அந்த சபையை , எப்படியோ இயேசுவை பிரசங்கிக்கிறார்கள் என்று ஆசீர்வதித்தேன். கர்த்தர் அவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களை சரிபடுத்துவார். நான் ” இயேசுவின் பணையணி ” என்னும் ஊழியத்தை எனக்குத் தந்ததற்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
ஜெபம்
தந்தையே, உம்முடைய ராஜ்யத்தை விரிவு படுத்துவதற்கும் உம்முடைய நாமத்தை பயபக்தியுடன் சொல்பவர்களை ஆசீர்வதிப்பதற்கும் ,உம்மை மறுக்காமலிருப்பதற்கும் நன்றி செலுத்துகிறேன். நீர் ஒரு நல்ல மேய்ப்பன் இயேசுவே ,உம்மைவிட்டு தொலைந்து போன ஆட்டினை கூட்டி வரவும் அதனால் நாங்கள் எல்லோரும் பாதுகாக்கப்படவும்
இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.
ஆமென்.
Sol. நேகா.








