தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 15-11-2022

எரேமியா 31 : 33, 34
” அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது , நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து , அதை அவர்கள் இருதயத்திலே எழுதி , நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும் , ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்து கொள் என்று போதிப்பதில்லை. அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும் எல்லோரும் என்னை அறிந்து கொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் , நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”

கர்த்தரின் கட்டளைகள் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டு , எழுதப்பட்டு , இருதயங்களில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் மனித இனம் கீழ்படியாமையை தெரிந்தெடுத்து தொடர்ந்து பாவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தர் இன்னும் கிருபையாக தனது கட்டளைகளை ( அவரது சட்டங்களை) உட்கொண்டு அவை குடல்களுக்குச் சென்று ஜீரணம் ஆகும்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.


எசேக்கியல் 3 : 1- 3 பின்பு அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி, இந்தச் சுருளை நீ புசித்து , இஸ்ரயேல் சந்நதியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன். அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு புசிக்கக் கொடுத்து மனுபுத்திரனே, நான் உனக்கு கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக , அப்பொழுது நான் அதை புசித்தேன் , அது என் வாய்க்குத் தேனைப் போல் தித்திப்பாயிருக்கிறது.”

கர்த்தர் இன்னும் தொலைந்து போன தன் ஆடுகளை தேடிக்கொண்டிருக்கிறார்.
லூக்கா 15 : 1 – 7 ” சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனத்தை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து : இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார். அவர்களுக்கு அவர் சொன்ன உண்மையாவது உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவராயிருந்து , அவைகளில் ஒன்று காணாமற்போனால் , தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு , காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்தவுடன் அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு , வீட்டுக்கு வந்து , சிநேகிதரையும் அயலாகத்தாரையும் கூட வரவழைத்து , காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் எனாபான் அல்லவா? அதுபோல மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். “

எனவே நமக்கு நேரம் கிடைக்கும்போது கர்த்தரிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் . நம் தேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு ஆத்மாவையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்

தந்தையே, இழந்துபோன ஆத்துமாக்களை காப்பாற்ற உங்கள் மகனை அனுப்பியதற்காக நன்றி. இரவும் பகலும் உம்முடைய வார்த்தைகளை தியானிக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய கிருபையை தரும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறோம் . ஆமென்.

Sol.Jasmine James

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-11-2022

” பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்.பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.”(மத்தேயு 16 : 19)

பரலோக ராஜ்யத்தின்  சாவியைப் பற்றிய இயேசுவின் போதனை இது. உங்களுக்கு ராஜ்யத்தின் சாவியைத் தருவேன் என்று சொல்லும் போது, எந்த ஒரு உண்மையுள்ள கிறிஸ்துவை பின்பற்றுபவர்களும்  இயேசுவின் அடையாளத்தின் அஸ்திவார பாறையாக, இந்த வார்த்தைகளை பேசுவார்கள் என்று  இந்த வசனங்கள் பேசுகின்றன. உண்மையாக  மக்களுடைய வாழ்க்கையின் ராஜ்யத்தை திறப்பதற்கு , இந்த சாவியை பயன்படுத்துகிறார்கள்.

இதே அதிகாரம் பேதுருவுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. இயேசுவின் படையணியிலுள்ள நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் பார்வையில் நாம் சிறப்பு மிக்கவர்கள்.  அவரின் ராஜ்யத்திற்கான பணியைச் செய்ய நாம் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். இயேசுவையும்  அவருடைய போதனைகளையும் நம்ப வேண்டும்.

மத்தேயு 18 : 18 ல் இயேசு சாதாரண மக்களிடம் பேசுகிறார். உண்மையாகவே உங்களிடம் சொல்லுகிறேன் பூலோகத்தில் நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். பூலோகத்தில் எதை கட்டவிழ்ப்பீர்களோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் . இன்று இயேசு நம்மிடம் வருகிறார். அதே வார்த்தைகளை நம்மிடம் சொல்லுகிறார்.

நாம் ஒரு பெரிய நிலையோ அல்லது  வேலையோ கிடைக்கும்போது , பணியாளர்கள் , வேலை செய்யும் அதிகாரத்தை தருகிறார்கள். இதே வழியில் தான் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் சாவிகளை பயன்படுத்தும் அதிகாரத்தை தருகிறார். எப்படியோ  இந்த தடத்தை தவறவிட்ட மற்றவர்கள் , அல்லது இந்த உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது இந்த வார்த்தைகளின் மதிப்பை உணர்ந்து கொள்ளாதவர்கள் எல்லோருக்குமே இந்த சாவி கொடுக்கப்படும். இப்போது கர்த்தர் இதைக்குறித்து மிகவும் தெளிவுபடுத்துகிறார்.  எனவே நாம் காத்திருக்க வேண்டாம். விழித்திருப்போம்.  நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயராலே, சாத்தானின் கிரியைகளை கட்டி அழிக்க வேண்டும்.

1 யோவான் 3 : 8  ” பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான் . ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”

ஒருமுறை வதோதராவில் வசிக்கும் என்னுடைய மூத்த சகோதரர்  என்னிடம் ஒரு கொள்ளைக்காரன் தனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் தங்க வந்திருப்பதாக கூறினார். இதன்காரணமாக பலவிதமான மக்கள் மதுபானங்கள் வாங்க அங்கு வந்திருக்கிறார்கள். அதனால் சிலவித தொந்தரவுகள் அங்கு இருந்திருக்கிறது.  என் சகோதரனுடைய இன்னொரு பக்கத்திலுள்ள வீட்டில் ஒரு பெண் மதுபானங்களை தயாரித்து விற்கவும் செய்திருக்கிறார். பலவிதமான மக்கள் எந்த நேரத்திலும் அங்கு வந்து மதுபானம் வாங்கிச் செல்வர்.இதுவும் இன்னொரு வகையான தொந்தரவு. ஒருநாள் என்னுடைய சகோதரனுடைய வீட்டிற்கு நான் சென்றேன். நான் அந்த கொள்ளைக்காரனைக் குறித்தும், அந்தப் பெண்ணைக் குறித்தும் தீர்க்கத்தரிசனம் உரைத்து ஜெபித்தேன். சில நாட்கள் கழித்து அந்தக் கொள்ளைக்காரனையும் ,அந்தப் பெண்ணையும் குறித்து விசாரித்தேன். ஆச்சரியப்படும் விதமாக அந்தக் கொள்ளைக்காரன் அந்த இடத்தை காலி செய்துவிட்டு தூரமாக போய்விட்டதாக அறிந்தேன். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானம் தயாரிப்பதை விட்டு விட்டதாக சொல்லக் கேட்டேன்.

எபேசியர் 1 : 3  ல் சொல்லியபடி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட  இடங்கள் , சூழ்நிலைகள், நிலைமைகள்,கட்டமைப்புக்கள் , துறைகள் அல்லது வேறு ஏதாகிலும் பரலோகத்தின் ஆசீர்வாதங்களே.

கர்த்தர் நம்முடைய நாவினை ஆசீர்வதித்திருக்கிறார். நமது நாவிற்கு சக்தியை கொடுத்திருக்கிறார். நமது வாயினால் என்ன சொல்கிறோமோ அது நடக்கும். நமது வாழ்வில் இறப்புகள் வரலாம். மலைகள் நகரலாம். உலர்ந்த மரங்கள் பசுமையாக மாறலாம் . பிசாசை கட்டளையிட்டால் அது செல்லலாம் .  இயேசுவின் நாமத்தினால் எந்த நோயையும் நமது நாவினால்  கட்டளையிட்டு  வெளியேற்றலாம்.

என்னவொரு வல்லமைமிக்க அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எங்கிருந்தாலும் , சில விஷயங்கள் முறையாக நகரவில்லை என்றாலும், லஞ்சமாக இருந்தாலும், விபச்சாரம், அரசு அலுவலகங்களில் வேலை சரிவர நடக்காமலிருப்பது, விக்கிரக வழிபாடு ,  நீதிமன்றங்களில் வழக்குகள் நீடித்திருப்பது  , நீதி கிடைக்காமை  எல்லாவற்றையும் கட்டி ஜெபித்து விடுவிக்க வேண்டும். பரலோகத்தின் கதவுகளை திறப்பதன் மூலம் எல்லா ஆசீர்வாதங்களையும் பரலோகத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

எங்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய ராஜ்யத்திற்காக பணியாற்றுவதற்கான அதிகாரத்தையும் உம்முடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக எங்களை தகுதிப்படுத்தவும் துன்பத்திலும் வைதனையிலும் இருப்பவர்களுக்கு நீதியையும் அமைதியையும் கொடுப்பதற்காகவும் , யாரெல்லாம் எங்களுக்கு அருகிலும் தூரத்திலும் இருக்கிறார்களோ அவர்களுக்கும்,  தொகுதிகளுக்கும், தேசத்திற்கும் , இந்த நிலத்திற்கும் , தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் , இந்த முழு படைப்பில்  சாபத்தில் இருக்கும் எல்லோருக்காகவும்

இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. டாக்டர். மோகன் பர்மர்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-11-2022

” அந் நாட்களிலே அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி , இரவு முழுவதும் தேவனை நோக்கி , ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். “
லூக்கா 6 : 12

சராசரியாக வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டும். இல்லையென்றால் மனரீதியாவும் உடல்ரீதியாகவும் படிப்படியாக மோசமடையும் என்று என்று ஆராய்ச்சி காட்டுகிறது. முடிவாக நமது உடல் ஓய்வைத் தேடுகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. எப்படியிருப்பினும், ஒரு விசுவாசி ஜெபம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் , நமக்கு ஜெபத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட நேரம் இருக்கிறதா?
இதை நாம் இயேசுவின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். பல மைல் தூரம் நடந்து, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, இடைவிடாமல் பிரசங்கித்து, கர்த்தருடைய வார்த்தைகளை போதித்து, மக்களை குணமாக்கிய பின்னால், இயேசு எவ்வளவு ஓய்வெடுக்கிறார் என்பதை காணலாம்.


மாற்கு 1 : 35 ” அவர் அதிகாலையில் , இருட்டோடே எழுந்து புறப்பட்டு , வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார்.


இயேசு, தன்னுடைய பிதாவோடு தனித்திருக்கவும், மக்களுக்காக பரிந்துரைக்கவும் , தன்னை இந்த உலகத்திலிருந்து திரும்ப பெறுவதற்கும் இரவுமுழுவதும் ஜெபிப்பதற்காக ஒரு தனி இடத்தை பயன்படுத்தினார். இதைத்தான் அவர்
மத்தேயு 6 : 6 ல் ” நீயோ ஜெபம் பண்ணும்போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு ” என்று சொல்கிறார். நாம் அந்தரங்கமாக ஜெபிக்கும்போது நம் வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
தன்னுடைய பிதாவும் தந்தையுமானவர் உடனான தனிப்பட்ட ஜெபம் தன்னுடைய உடலுக்குத் தேவையான சத்துக்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அவர் தனது 12 சீடர்களை தெரிவு செய்யும்போது தன்னுடைய இரவு நேரத்தை ஜெபத்தில் கழித்தார்.
லூக்கா 6 : 12. ல் இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அல்லது நன்றி சொல்வதாக இருந்தாலும் ,அதாவது 5000 பேருக்கு உணவளித்த பின், அவர் கர்த்தருடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மத்தேயு 14 : 23 ” அவர் ஜனங்களை அனுப்பி விட்ட பின்பு , தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி சாயங்காலமான போது அங்கே தனிமையாக இருந்தார். பிதாவாகிய கர்த்தரை தேடும்போது அவர் முழங்காலிலிருப்பார். நம்முடைய வாழ்க்கையின் கடினமான நேரங்களிலும் கத்தரை இன்னும் அதிகமாக தேடவேண்டும்.
எபிரேயர் 5 : 7 ” அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்,தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி பவத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி , வேண்டுதல் செய்து தமக்குண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு
நாம் நம்மை, விசுவாசியாக, அவரை பின்பற்றுபவராக, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் படையணியின் வீரர்களாக அழைக்கிறோம். நாள் முழுதும் சாத்தானின் திட்டங்களை எதிர்த்து போரிடவும் செய்கிறோம். அப்படி செய்வதற்கு நாம் எங்கிருந்து பலத்தை பெற முடியும்? கர்த்தருடனான , புதிய நம்பிக்கையாலும், வீரியமிக்க புதிய அபிஷேகத்தாலும் நிரப்புகின்ற நிலையான ஜெபத்தினால் மட்டுமே முடியும். நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்.

2 தெசலோனிக்கையர் 5 : 17 “இடைவிடாமல் நாம் ஜெபம் பண்ணுங்கள்.

எசாயா 55 : 6 ” கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் , அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்.”

ஜெபம்
அப்பா உம்மண்டை எங்களை இழுத்துக்கொள்ளும் ஏனென்றால் நாங்கள் அநேக நேரத்தில் ஜெபிக்க தவறி எங்கள் சுய ஞானத்தையும் பெலனையும் சார்ந்து கொள்ளுகிறோம். எங்கள் மக்களுக்காக மன்றாட எங்களை எழுப்பியருளும்.கர்த்தாவே உமது அன்பினால் இரக்கத்தினால் கருணையால் எங்களை நிரப்பும். நாங்கள் இந்த வாழ்க்கையில் சோர்வடைவதால் உம்முடைய அன்பான அணைப்பினால் எங்களுக்கு சமாதானத்தைத் தாரும். உம்மை நோக்கி அணிவகுத்துச் செல்ல எங்களை ஆயத்தப்படுத்தும். அதனால் எங்கள் பந்தயத்தை முடிக்க முடியும். நீர் எங்களுக்குத் தந்த வேலை “முடிந்துவிட்டது” என்று எங்களால் பெருமையாக சொல்ல முடியும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம் . ஆமென்

Sol. நேகா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-11-2022

எபிரேயர் 10 : 38 “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் , பின்வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது.”

வெப்ஸ்டருடைய புதிய உலக கல்லூரி அகராதி ,விசுவாசத்தை ‘ எந்தவித ஆதாரம் அல்லது சான்றோ தேவைப்படாத ,கடவுள் மட்டும் ஆன்மீக கோட்பாடுகள் மீது கேள்வி இல்லாத நமிபிக்கை” என்று வரையறுக்கிறது.

நாம் ஒரு நாற்காலியில் உட்காரும்போது எப்போதாவது நாற்காலியின் கால்களை பரீட்சித்துப் பார்ப்போமா? இல்லையே. அந்த நாற்காலி நம்மை தாங்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. நாம் விமானிக்கு உரிமம்
இருக்கிறதா என்று பரிசோதித்து விமானத்தில் ஏறுவதில்லை. அந்த விமானி செல்ல வேண்டிய இலக்கில் நம்மை கொண்டு சேர்ப்பார் என்று நம்புகிறோம். கிருபையால் விசுவாசத்தின் மூலம் காப்பாற்றப்படுகிறோம்.
எபேசியர் 2 : 8 , 9

கர்த்தர் தன் பிள்ளைகளிடம், அவரை முழுவதும் சார்த்துகொள்ளுபடி எதிர்பார்க்கிறார். அவர் நமக்கு நம்மில் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரையும் அவருடைய வார்த்தையின் மூலமாகவும் நம்மை முற்றிலும் ஜெயம் கொள்கிறவர்களாக மாற்றுவார்
எபிரேயர் 11 ம் அதிகாரம் விசுவாசத்தின் வாழ்த்தரங்கம்.

நாம் இப்போது விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமைப் பற்றி பார்க்கலாம். அவர் செல்வதற்கு கூகுள் வரைபடமோ அல்லது பயண வழிகாட்டியோ அவருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் கர்த்தர், ஆபிரகாமுடைய சொந்த இடமாகிய ஆரானை விட்டு வெளியேறச் சொன்னவுடன் , கர்த்தர் அவருக்கு சொன்ன இடத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவதாக வாக்கு கொடுத்தார் ஆதியாகமம் 12: 1- 3.

ஆபிரகாம் கீழ்படிந்தார். பின்னர் ஆபிரகாமும் சாராவும் தங்களுக்கு வாரிசு இல்லாததைக் குறித்து அதிருப்தி அடைந்தனர். கர்த்தர் அந்த வயதான தம்பதிக்கு சொந்தமாக ஒரு மகனை தருவதாக வாக்கு கொடுத்தார். ஆபிரகாமுக்கு மகனைக் குறித்து வெளிப்பாடு கிடைத்து 24 ஆண்டுகள் கடந்த பிறகு , ஆபிரகாமுடைய 99 ம் வயதில் அவர்களால் முடியாத காலத்திலும் அவர் விசுவசித்தார். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த போது அவருடைய விசுவாசத்தின் சாட்சி வியக்க வைத்தது.

ஆபிரகாம் தன்னுடைய மகனுடன் சந்தோஷமாக நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்போது கர்த்தர் அவருடைய ஒரே மகனை கண்டிப்பாக தியாகம் செய்ய வேண்டும் என்று அறிவித்தார். ஆபிரகாம் எந்த வித சந்தேகத்தின் நிழலும் இல்லாமல் , கண் இமைக்கும் நேரத்தில் , தன் மகனுக்கு மீண்டும் வாழ்க்கைத்தர கர்த்தரால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தன் மகனை தியாகம் செய்வதற்கு அழைத்துச் சென்றார்.
கலாத்தியர் 3 : 11 நியாயப் பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

2020 ம் ஆண்டில் நல்ல வருமானமுடைய என்னுடைய வேலையை இழந்தேன். எனக்கு ஒருவர் மூலமாக ஆண்டவருடைய வார்த்தை கிடைச்சது என் இளைய மகன் கனடாவுக்கு மேல் படிப்புக்கு செல்வான் என்று.நான் சாராவை போல நகைத்தேன் என்னுடைய பொருளாதார வாசல்கள் அடைபட்ட இந்த நேரத்தில் அவன் செல்வது சாத்தியமில்லை என்று நினைத்தேன். கர்த்தரிடத்தில் தீவிரமான விசுவாசம் மற்றும் நம்பிக்கை எனக்கு தேவை பட்டது இந்த சூழ்நிலை அதை நான் செய்ய என்னக்கு கற்றுக்கொடுத்தது. நான் பேதுருவை போல தண்ணீரில் நடக்க வேண்டியதாயிற்று. எத்தனையோ முறை நான் என் நம்பிக்கையை விட்டுவிடலாம் என்று நினைத்தபோது அவருடைய கிருபையும் வார்த்தையும் என்னை ஜெயத்துக்கு கொண்டு வந்தது. என்னுடைய மகன் 05.05.2022 அன்று டொரோண்டோ புறப்பட்டான். இது ஆச்சாரி யல்லாமல் வேறொன்றுமில்லை.விசுவாசம் எரிக்கோ மதிலை விழச் செய்தது, செங்கடலைப் பிளந்தது, இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்தது. விசுவாசம் இல்லாவிட்டால் கர்த்தர் மகிழ்ச்சி அடைய மாட்டார்.


ஜெபம்
அன்பின் பரலோகத் தந்தையே, எங்களுடைய நல்ல நாட்களிலும் மோசமான நாட்களிலும், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி உம்மையே நம்ப எங்களுக்கு கற்றுத் தரவேண்டும் என்று இயேசுகிறிஸ்துவின் வல்லமையான நாமத்தின் பெயரால் உம்மை நோக்கி ஜெபிக்கிறோம். நீரே என்றும் உயர்ந்தவர் என்பதை அறிந்திருக்கிறோம் . ஆமென்.

Sol. லலிதா மேனன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 11-11-2022

யோவான் 3 : 30 ” அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். ” 

இந்த வசனம் ,  தாழ்மையான  திருமுழுக்கு யோவானால் பேசப்பட்ட சில வல்லமையான வார்த்தைகள்.தன்னை  அல்ல , இயேசுவை பின்பற்றுமாறு மற்றவர்களிடம் சொல்லும்படி அவர் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். அதைச்செய்வதற்காக , தன்னை பணியாளராக தாழ்த்தி, மற்றவர்களிடம் இயேசுவை பின்பற்ற சொன்னார். மாறாக தன்னுடைய சொந்த ஊழியத்திற்காக அல்ல. கிறிஸ்துவை பின்பற்றுபவர்களுக்கும், தலைவர்களுக்கும் இதுவே உண்மை. எதிரி எப்போதுமே நம்முடைய கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வான். மற்றவர்கள் நம்மை கேலி செய்யலாம். நம்மை  வேடிக்கையாக்கலாம். பயப்பட வேண்டாம்.

2 திமோத்தேயு 1 : 7  ” தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் , பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்துள்ளார்.

யோவான் கர்த்தருக்கு முன்னோடியான தீர்க்கத்தரிசியாக இருந்தார். தூய. யோவானுடைய நற்செய்தியில் ,  ” இயேசு என்னும் ஒளியைப் பற்றி சாட்சியமளிக்க  சாட்சியாக அவர் வந்தார்.ஏனென்றால் எல்லாரும் ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்று கொள்ள வேண்டும் என்பதற்காக

எசாயா 40 : 3 ” கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் , அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்கு பாதையை செவ்வைபண்ணுங்கள் “

யோவான் 1 : 23  ” அதற்கு அவன் , கர்த்தருக்கு வழியைச் செவ்வை பண்ணுங்கள் என்று எசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே , நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.”

யோவான் இயேசுவை, அபிஷேகம் செய்யப்பட்ட மெசியாவாக , பிதாவாகிய தந்தைக்கு இணையாக  அவரை அடையாளம் காட்டினார்.

யோவான் 1 : 29 ” மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வரக்கண்டு, இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி  என்றார். இரண்டாவது முறையாக யோவான் 1 : 36 ல் இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றார். திருமுழுக்கு யோவான் மேலும் இயேசுவினுடைய பாத ரட்சையை அவிழ்ப்பதற்குக் கூட நான் தகுதியற்றவன் என்று சொன்னார். யோவான்  மக்களுக்கு தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தால் இயேசு பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்பது அவருக்குத் தெரியும். நமது சொந்த திறமைகளும் ஞானமும் குறைந்த அளவே நம் வாழ்வில் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும். கர்த்தருடைய ஞானமும் கிருபையும் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்த நாம் அனுமதிக்க வேண்டும். யோவான் தன்னுடைய தலைமைத்துவத்தை இயேசுவுக்கு அர்ப்பணித்தார். நாமும் நம்முடைய வாழ்க்கையின்  தலைமைத்துவத்தையும் செல்வாக்கினையும் இயேசுவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் மீதான விசுவாசத்தோடு நாம் வளரும்போது  நாம்  உலக வழிகளிலிருந்து நம்மை வெறுமையாக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்துவுக்குள்  வளர்வதை நாம் தொடர வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பாக நாம் சிறுகவும் இயேசு பெருகவும்  வேண்டும். அவருடைய வார்த்தைகளும் தன்மையும், நம்முடைய   எண்ணங்கள் சொற்கள் செயல்கள் எல்வாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு நம்முடைய வாழ்க்கையில் செய்த அற்புதங்களை பார்த்து அவர்மீது நாம் வைத்துள்ள விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பை அதிகரிக்க வேண்டும். விசுவாசத்தில் முதிர்ச்சி அடையும் போது, பவுல் அறிக்கையிடுவதைப் போல வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் என்று நாமும்  அறிக்கையிட வேண்டும்.

கலாத்தியர் 2 : 20  “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ ,என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

நம்முடைய சொந்த பலன் சிறுகும். ஆனால் நம்முள் செயல்படும்  இயேசுவுடைய வலிமையும் சக்தியும் பெருகும். களிமண் பாத்திரங்களாய் இருந்த நம்மை மரியாதைக்குரிய பாத்திரங்களாய் , மீட்டதற்குரிய புகழுக்கும் மகிமைக்கும் தகுதியானவர் அவரே. நம்முடைய விசுவாசம் வளர்வதால் பயங்கள் மறையும்.  நாம் தாழ்த்தும்போது அவர் இல்லாமல் நாம் ஒன்றுமே இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

பிலிப்பியர் 4 : 13 ” என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலனுண்டு. ” பரிசுத்த ஆவியின் கனிகள் நம்மில்  பெருகும் போது , நாம் சிறுகி அவர் நம்மில் பெருகுவார். நம்முடைய பெருமை, ஆணவம் , மன்னியாமை, தற்பெருமை  ஆகியவை குறைக்கப்பட்டு   கிறிஸ்துவுக்கான வார்த்தையும் செயலும் பெருகும்.

ஜெபம்.

பரலோகத் தந்தையே, திருமுழுக்கு யோவானின் சாட்சிக்கும் , முன்மாதிரியான அவருடைய  பணிவுக்கும் கருணைக்கும் நன்றி. என் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் உமக்கு முன்பாக பணிவுடன் நடக்கவும் ,  இயேசுவே இந்த உலகின் மீட்பர்  என்று சாட்சி சொல்ல தயாராக இருக்கவும், அவர் கண்டிப்பாக பெருகவும் நான் கண்டிப்பாக  சிறுகவும்   இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-11-2022

கிருபை வரங்கள்

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே ரோமர் 12:6

இங்கே அப்போஸ்தலன் பவுல் ரோமர் 12-6-8 இல் அவருடைய கிருபையின்படி நமக்கு வழங்கப்பட்ட வரங்களை பற்றி பேசுகிறார். இந்த வரங்கள் 1 கொரி 12ல் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் வரங்களுக்கு வித்தியாசமானவை. இவை அனைத்தும் அவருடைய சித்தத்தின்படி வாழவும் கடவுளை மகிமைப்படுத்தவும் தனித்தனியாக கொடுக்கப்பட்ட தனித்துவமான வரங்கள்.

ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். ரோமர் 12:7-8

நான் என் வீட்டிற்கு அருகிலுள்ள ஓவியம் சம்பந்தமான கடைக்கு  சென்றேன். அங்கு நிறைய வரைவதற்கு கருவிகள் இருந்தன. நான் அங்கு இருந்தபோது, ​​தற்போதைய காலங்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி வரைந்து, அதனுடன் தொடர்புடைய பைபிள் வசனத்தைச் சேர்க்கும் ஒரு போதகரை கடவுள் எனக்கு நினைவுபடுத்தினார். “1000 வார்த்தைகளை விட ஒரு படம் சக்தி வாய்ந்தது” என்பது பழமொழி. இந்தியாவில் உள்ள ஒரு கார்ட்டூனிஸ்ட் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வரைந்தார். அவர் தனது வரைபடத்தின் மூலம் மக்களிடையே ஒரு பெரிய சிந்தனையையும் விழிப்புணர்வையும் தூண்டினார். அதன் பிறகு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் அவர்  இனி வரைவதையும்  தடுத்து நிறுத்தினார். அவர் வரைந்தவை மக்களை சென்றடைந்ததால் அவர் நிறுத்தப்பட்டார். ஒரு ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் போதகர் வரைந்த வல்லமையும் ஜீவனும் கொண்ட  கொண்ட ஓவியம் அநேகரை உயிரூட்டியது. இது அவருக்கு கொடுக்கப்பட்ட கிருபை வரம் (ஓவியம் வரைதல்)அதை அவர் ஆண்டவரின்  மகிமைக்காக பயன்படுத்துகிறார்.

முகநூலில் ஒரு பதிவு முன்பு படித்தேன். இங்கிலாந்தில் போதைக்கு அடிமையான ஒரு தம்பதியினர் இருந்தனர். போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் அவர்களுக்குப் பிறந்த குழந்தை பார்வை இல்லாமல் பிறந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, போதைப் பழக்கத்தால் பெற்றோர் இறந்துவிட்டனர். மறைந்த தாயின் இளைய சகோதரி குழந்தையை அழைத்துச் சென்றார். குழந்தை அவர்களுடன் வளர்ந்தது. அவர்கள் நல்ல விசுவாசிகள்  மற்றும் அவர்கள் குழந்தையை மிகவும் நேசித்தார்கள். அவர்கள் அந்த குழந்தைக்கு இசையையும் பாடவும் கற்று கொடுத்தார்கள் . அன்பும் அக்கறையும் அந்த குழந்தையை தொட்டது. அவர்கள் குழந்தையை இரட்சிப்பிற்குள்  வழிநடத்தினர். அந்த குழந்தை  வளரும்போது பார்வையற்றவராக இருப்பதால், கிறிஸ்துவின் அன்பை பலருக்குப் பகிர்ந்து கொள்ள மக்களை அணுக முடியவில்லை என்றும் தனது  பெற்றோரை போல் யாரும் தங்கள் வாழ்க்கையை இழந்து விட கூடாது என்ற கவலை அந்த குழந்தைக்கு இருந்தது. தனது பார்வை இல்லாமையை வாழ்க்கையில் ஒரு பெரிய தடையாக உணர்ந்து அதை பற்றி எப்போதும் கவலை பட்டது. ஒரு நாள் அவருடைய  ஜெபத்தின் போது கர்த்தர் உன்னிடம் இல்லாததை பற்றி ஏன் கவலை படுகிறாய். என்னை வெளிப்படுத்த உன்னிடம் ஒரு கிருபையை கொடுத்து இருக்கிறேன் (பாடல் பாடுவது). இதைக் கேட்டதும் விழித்து கொண்டு கர்த்தருக்காக  பாடத் தொடங்கினார். அவருடைய பாடலும் அவருடைய சாட்சியமும் பலரைச் சென்றடைந்தது. மேலும் அவர் பல இளம் வாலிபர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்.

ரோமர் 12:8-ல் வேதம் கூறுகிறது, ” இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

“. அன்னை தெரசா மற்றவர்களுக்கு உதவவும் அன்பு செய்யவும்  இந்த வரத்தை பெற்றிருந்தார். அவர் சுவிஷேசத்தை பிரசங்கிக்கவில்லை, ஆனால் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார். விசுவாசிகள் அல்லாதவர்களும் கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்ள செய்தது மட்டும் அல்லாமல் நம்மையும் அப்படி பட்ட அன்பை வெளிப்படுத்தும் மாதிரியாக மாறவும் உணர்த்தினார்.

ஜனவரி 2022 இல் நான் DA2 மீட்டிங்கில்  இருந்தபோது, ​​நான் ஏன் அங்கு இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நன்கு ஆண்டவருடைய  வார்த்தையை  சொல்லவோ எழுதுகிறவனோ இல்லை. ஆனால் எழுதுவதற்கான வாய்ப்பு வந்த போது ஆண்டவர் எழுதுவதற்கான கிருபை வரத்தை எனக்கு கொடுத்தார். அது முதல் புதிய வெளிப்பாடுகளை  எழுத அவருடைய நாமத்தை மகிமை படுத்த உதவினார்.

கிறிஸ்துவின் சரீரத்தில் நாமெல்லாருக்கும்  பல்வேறு கிருபை வரங்கள் கொடுக்கப்பட்டுஇருக்கிறது. அது நிர்வாகத்திலோ, சேவை செய்தல், ஏழைகளுக்கு கொடுப்பது என இருக்கலாம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவும், கிறிஸ்துவிடம் மக்களை வழிநடத்தவும் அவருடைய நறுமணத்தைப் பரப்பவும் இந்த வரங்களைப் பயன்படுத்துவோம். ஆமென்.

Sol.Leo

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-11-2022

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கை


கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைக்கு விசுவாசம் ஒரு முக்கியமான காரணியாகும்.


மத்தேயு 21: 12 ” மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.”

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் யாரெல்லாம் விசுவாசம் வைக்கிறீர்களோ, அவர்களது வாழ்க்கை மாற்றப்படும்.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் அவர்களது வாழ்க்கையிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் களைய முடியும்.இயேசு , கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட , நம்முடைய வாழ்க்கையில் அதிசயங்கள் நடப்பதை காணலாம் என்று சொல்கிறார்.ஆனால் இயேசுகிறிஸ்து உயிருள்ள தேவன். இன்றும் கூட அவரை விசுவசிப்பவர்களுடைய வாழ்க்கையில் அற்புதங்களும் குணமடைதலும் பகிரங்கமாக நடக்கின்றன.


எபிரேயர் 11 : 6 ” விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் . ஏனென்றால் , தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் , அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”.


நம் கர்த்தராகிய , நம்மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் இருந்தால் , நித்திய வாழ்விற்கான பரலோக ஆசீர்வாதங்களை பெறலாம்.

சாட்சி


என்னுடைய மகன் 7 மாதக் குழந்தையாக இருந்த போது, வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். மருத்துவர்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள். இயேசுகிறிஸ்து என் மகனை முழுவதும் குணமாக்கி அவனது வாழ்க்கையை காப்பாற்றினார்.


ரோமர் 10 : 17 ” ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும் , கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். “

நாம் தினம்தோறும் வேதாகமத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும் தகுந்த நேரத்தை செலவழிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் கர்த்தருடைய விருப்பத்தை அறியவும், நம்முடைய வாழ்க்கையில் அதன்படி நடக்கவும் முடியும். நாம் இயேசுகிறிஸ்துவோடு நேரம் செலவழிக்கும் போது , நம்மை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்புவார்.
அப்போஸ்தலர் 2 : 17 ” கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மீதும் என் ஆவியை ஊற்றுவேன்”


எசாயா 41 : 10 ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் , திகையாதே , நான் உன் தேவன்.

அவரை விசுவாசிப்பவர்கள் ஒரு நாளும் திகிலடைவதில்லை


எசாயா 59 : 1, 2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது , உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது .

நாம் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி அறிக்கையிட்டு ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும்


மிகுந்த இரக்கமும் கோபத்துக்கு தாமதிக்கிறவருமாகிய கர்த்தர் நம்மை மன்னித்து ஆசீர்வதிப்பார்.

ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய வார்த்தையின் வழியாகப் பேசும்.எங்களை பாதுகாத்து வழிநடத்தும். உம்முடைய ஞானத்தை தாரும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் இதைக் கேட்கிறோம்.
ஆமென்.


Sol. சுஸ்மிதா ராகா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-11-2022

இயேசுவிடமிருந்து வல்லமையும் அதிகாரமும்.

யோவான் 8 : 32 ” சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”

இந்த உண்மையை அறிவதன் மூலம் பரிசுத்த ஆவியின் வரங்கள் செயல்படுத்தப்படும். இது நமக்குள்ளே உள்ள தேவையற்றவைகளை நீக்கி, நமக்கு என்ன தேவையோ அதை கற்றுக் கொடுக்கும்.

மத்தேயு 16 : 19 மற்றும் மத்தேயு 18 : 18 ல் “பரலோகத்தின் திறவுகோலை உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


சத்தியம் நமக்குள் செல்லும் போது வல்லமை தானாகவே செயல்படுத்தப்படும்.


லூக்கா 10 : 19 ” இதோ , சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும் , சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது.”

லூக்கா 11 : 20 ல் ” நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளை துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே ” என்று இயேசு சொல்கிறார்.


பழைய ஏற்பாட்டு புத்தகத்திலிருந்து “தேவனுடைய விரல் ” எவ்வளவு வல்லமையானது என்பதை அறியலாம்.


யாத்ராகமம் 8 : 18,19 ல் மந்திரவாதிகள் தங்களுடைய மந்திரவித்தைகளால் பேன்களை பிறப்பிக்கும்படி பிரயதாதனம் செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியாமற் போயிற்று. பேன்கள் மனிதர்மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தன. பின்பு மந்திரவாதிகள் பாரவோனைப் பார்த்து இது தேவனுடைய விரல் என்றார்கள்.

மத்தேயு 12 : 28 ” நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் , தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே”


எவரொருவர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறுகிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வார்கள்.

மத்தேயு 3 : 16 ” இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறியவுடனே இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவ ஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருவதைக் கண்டார்.

அப்போஸ்தலர் 2 : 38 ” பேதுரு அவர்களை நோக்கி, நீங்கள் மனந்திரும்பி , ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் , அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். “

மோசேக்கு உள்ள வல்லமை நமக்கும் இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் ஒரு மோசே. புதிய ஏற்பாட்டில் லட்சக்கணக்கான மோசேக்கள்.
மத்தேயு 28: 28 – 20 ல் ” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீசராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து , நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன். ” என்று இயேசு சொன்னார்.

இது ஒரு சர்வ வல்லமையுள்ள சக்தி. ஒவ்வொருவரும் இதை அனுபவிக்க முடியும். இந்த வல்லமையை நாம் சிலுவையின் வழியாக பெற முடியும்.
யோவான் 1 : 12 ல் ” அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்கள் அனைவருக்கும் , கர்த்தருடைய பிள்ளைகளாகும் உரிமையை கொடுத்திருக்கிறார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பழைய ஏற்பாட்டில், எல்லா சிறந்த தீர்க்கத்தரிசிகளும் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் பிதாவின் குமாரனுடைய பிள்ளைகளாக அழைக்கப்படுகிறோம்.
ஏற்கெனவே வல்லமையும் அதிகாரமும் வழங்கப்பட்டுவிட்டதால் யாரும் இனி நமக்கு கொடுக்கவேண்டியதில்லை.

எண்ணாகமம் 12 : 8 ல் மோசே என் தாசன் என்றும்,
1 ராஜாக்கள்11 : 32 ல் என் தாசனாகிய தாவீது என் இருதயத்திற்கு நெருக்கமானவன் என்றும் கர்த்தர் கூறுகிறார்.

இந்த வல்லமையின் எல்லைகள் என்ன?
யோவான் 14 : 12 ல் ” மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னை விசுவசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் ” என்று இயேசு சொல்கிறார்.

தனிப்பட்ட சாட்சியம்


நாங்கள் ஒரு பிசிக்கல் ஹீலிங் பள்ளியில் சேரவிருந்தோம். மிகவும் அதிகமாக மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் , மழைய நிறுத்த வேண்டி அதிகாரத்துடன் கட்டளையிட்டு ஜெபித்தோம்.
அதிசயிக்கும் விதமாக , மழை நின்று சூரிய வெளிச்சமும் வந்தது. கர்த்தருக்கே மகிமை.

ஜெபம்.

எங்களை உமது மகனாக , மகளாக , பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதற்காகவும் பரலோகத்திலிருந்து வல்லமையையும் அதிகாரத்தையும் தந்ததற்காகவும் அப்பா உமக்கு நன்றி செலுத்துகிறோம். எல்லா மக்களும் இதை கர்த்தராகிய இயேசுவுக்குள் விசுவசிக்கவும் , அதே வல்லமையால் எல்லோரும் நிரப்பப்படவும் ஜெபிக்கிறோம். ஆமென்.

Sol. தியோடர் மொகந்தி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-11-2022

சீடத்துவம்

” மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”

மத்தேயு 16 : 18

யோவான் 1 ம் அதிகாரம் 40 முதல் 42 வரையுள்ள வசனங்களில் சீமோனுடைய சகோதரன் ஒரு இரவு இயேசுவோடு தங்கியிருந்த பின் அவர் சீமோனைப் பார்த்து ” நான் மெசியாவை கண்டேன் ” என்று சொன்னார். அடுத்த நாள் அவர் சீமோனை இயேசுவினிடத்தில் கூட்டி வந்தார். அப்போது இயேசு அவரைப் பார்த்து, “உன்னுடைய பெயர் சீமோன். ஆனால் நீ கேபா அல்லது பேதுரு என்று அழைக்கப்படுவாய் ” என்று சொன்னார். பேதுரு என்பதற்கு பாறை என்று அர்த்தம். என எழுதப்பட்டிருப்பதை காண்கிறோம்.

மத்தேயு 16 ம் அதிகாரம் 12 முதல் 20 வரையுள்ள வசனங்களில் , இயேசு தன் சீடர்களைப் பார்த்து , மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.அதற்கு பேதுரு ” நீர் மெசியா, உயிருள்ள தேவனுடைய குமாரன் மகன் என்று சொன்னார். இயேசு அவனை நோக்கி ” இந்த உண்மை மனிதர்களிடமிருந்து உனக்கு வரவில்லை. பரலோகத்திலுள்ள என் தந்தையால் உனக்கு வெளிப்படுத்தப்பட்டது ” என்றார். மேலும் ” நீ பாறை , இந்த பாறையின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. உனக்கு பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைத் தருவேன். பூலோகத்தில் நீ எதைக் கட்டுகிறாயோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்தில் நீ எதை கட்டவிழ்ப்பாயோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” என்று சொல்லப்பட்டிருப்பதை காண்கிறோம்.

இயேசுவினுடைய சீடர்களில் மூத்தவரான பேதுருவின் இந்த விசுவாச வார்த்தைகள் , அவருடைய ராஜ்யம், அவருக்குப் பின் தொடர்ந்து கட்டமைக்கப்படும் என்ற நம்பிக்கையை இயேசுவுக்கு கொடுத்தன. இயேசு என்ற பாறை மீது விசுவாசிகளால் அமைக்கப்பட்ட அடித்தளம் கர்த்தரின் சபையாக வளரும். நிறுவப்படவிருக்கின்ற அவருடைய ராஜ்யத்திற்கு இயேசுவே தலைக்கல்லாக இருக்கிறார்.


பேதுருவின் ஆவிக்குரிய பதில் இயேசுவை மகிழ்ச்சியாக்கிற்று. இயேசுவே பாறை. மெசியா மீதுள்ள விசுவாசத்தால் பேதுரு , கர்த்தரின் ராஜ்யத்தை கட்டி எழுப்ப உதவுகின்ற அடித்தளத்தை அமைத்தார்.
இயேசு பரலோகத்திற்கு எழுந்தருளிய பிறகு, பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, நற்செய்தியை பிரசங்கித்து , மிகுந்த வல்லமையோடு நோய்களை குணமாக்கினார். ஆயிரக்கணக்கான மக்களை இயேசுவை பின்பற்ற செய்து , அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
இயேசு பரலோகம் செல்வதற்கு முன்னால் , ” உலகம் முழுவதும் சென்று எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள். யாரெல்லாம் விசுவசிக்கிறார்களோ அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். எல்லா விசுவாசிகளுக்கும் அதே வல்லமை கொடுக்கப்படும். என்னுடைய நாமத்தின் பெயரால் பேய்களை ஓட்டுவார்கள். பலவிதமான பாஷைகளை பேசுவார்கள். நோயாளிகள் மீது கை வைத்தால் குணமடைவார்கள்” என்று சொன்னார்.


யோவான் 14 : 12 ” என்னை விசுவசிக்கிறவன் , நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் , இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் ஏனென்றால் நான் பரலோகம் செல்கிறேன்.” என்று கூறுகிறது.

அவருடைய விசுவாசிகள் ஒவ்வொருவரும் அவருடைய பணியை செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவருடைய கிருபையினால் கர்த்தர் நமக்குத் தந்த திறமைகளுடன் நாம் இந்த பணியை செய்ய வேண்டும். நம்முடைய முழு பெலத்தோடும் ஆற்றலோடும் நாம் எல்லோரும் இதைச் செய்வோம். இதனால் கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.
ஆமென்.

Sol.பாபு செபாஸ்டியன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-11-2022

விசுவாசிகளின் ஐக்கியம்:


” ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும் , அன்பினாலே யாதொரு தேறுதலும் , ஆவியின் யாதொரு ஐக்கியமும் , யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால் , நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து , என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.” பிலிப்பியர் 2…1- 2


இந்த வசனங்கள் ஆவிக்குரிய ஐக்கியம் என்பது என்ன என்பதை அழகாக விளக்குகிறது. அன்பு, இரக்கம், மற்றவர்களின் மீது அக்கறை போன்ற ஒரே மனநிலையோடு இருப்பதுதான் ஐக்கியத்தின் குணாதிசயங்கள். எல்லா விஷயத்திலும் ஒருவருக்கொருவரை ஏற்றுக் கொள்வது என்பது ஒரே மனநிலை ஆகாது. ஆனால் சகிப்புத் தன்மையுடன் மற்றவர்களின் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதுதான் ஒரே மனநிலை. இவையெல்லாம் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுவதற்கும், ஒருவர் மற்றவருடன் ஐக்கியமாக இருப்பதற்கும் நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் அத்தியாவசியமான குணங்கள். இயேசுகிறிஸ்துவை தங்கள் தெய்வமாக எஜமானனாக ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் கர்த்தரை ஆராதிப்பதற்கும் , கர்த்தருடைய வார்த்தைகளையும் , தங்களுடைய சாட்சிகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் கூடினார்கள். இதை ஐக்கியத்தின் தருணமாக எதிர்நோக்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2 : 42 ” அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோன்யத்திலும் , அப்பம் பிட்குதலிலும் , ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.


கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியம் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் , கிறிஸ்தவ கோட்பாடுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தவும் செய்தது. அப்போது அவர்களுக்கு எழுதப்பட்ட எந்த புத்தகமும் இல்லை. அதனால் கர்த்தருடைய போதனைகளை நினைவுபடுத்த கூடுகை அவசியமாக இருந்தது. பின்னர் முதலாம் நூற்றாண்டில் சுவிசேஷங்களும், நிருபங்களும் எழுதப்பட்டன. ஆனால் கையால் எழுதப்பட்ட கடிதங்களும் பிரதிகளும் அப்போது எல்லாருக்கும் கிடைக்கவில்லை. காலங்கள் செல்லச் செல்ல, நிறைய தவறான போதனைகள் , விளக்கங்கள் , சட்டங்களும் சபைகளை சிதைத்தன. புதிய ஏற்பாட்டு புத்தகங்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை பிரகடனப்படுத்தும் கூடுகைகள் இன்றும் இருக்கின்றன. எபிரேயர் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூட கிறிஸ்தவர்களின் கூடுகையைப் பற்றி நினைவுபடுத்தியுள்ளார்.


எபிரேயர் 10…24 – 25 மேலும் , அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து , சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் , ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்தி சொல்ல வேண்டும்.”


பின்னாளில் , அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்தில் சீடர்களின் இந்த ஐக்கியம் , அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது.


1யோவான் 1: 7 ” அவர் ஒளியில் இருக்கிறதைப் போல நாமும் ஒளியிலே நடந்தால் , ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். “


கிறிஸ்துவுக்குள் நமது ஐக்கியமும், அவருடைய இரத்தமும் நம்மை இரட்சிக்கும்.


சங்கீதம் 133 : 1 ” இதோ , சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”


நம்முடைய சபையாகிய சரீரத்தில் கிறிஸ்து தலையாக இருக்கிறார். நம்முடைய பிரதான ஆசாரியரான கிறிஸ்துவின் தலையிலிருந்து அபிஷேக எண்ணெய் பாயும். இந்த அபிஷேகம் நமது உடலில் பாய்ந்து நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நாம் ஒரே ஆவியினால் ஐக்கியப்பட்டு, ஆவியினால் வழிநடத்தப்படும் போது அங்கே அபரிமிதமான மகிழ்ச்சி இருக்கிறது. இதுதான் கிறிஸ்தவ ஐக்கியத்தின் அழகும் நன்மையும் ஆகும்.

சாட்சி


கொரோனா காலத்திற்கு முன் அணி சபை என்பது நல்ல ஒரு ஐக்கியமாக இருந்தது. அதை நாம் மகிழ்வுடன் அனுபவித்தோம். ஒருவருக்கொருவர் வெவ்வேறு வீடுகளில் சந்திப்பை மேற்கொண்டோம். நிகழ்வுகளில் ஆராதனை, கர்த்தருடைய வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது, சாட்சி சொல்வது , ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது போன்றவற்றை மகிழ்வுடன் அனுபவித்தோம்.


ஜெபம்


எங்கள் அன்புள்ள பரலோகத் தந்தையே நாங்கள் ஒருவர் ஒருவருடன் ஐக்கியமாக இருக்கும் சந்தோஷத்தை தாரும். அதன்மூலம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் , உற்சாகப்படுத்தவும் உம்முடைய விலைமதிப்பில்லாத அன்பிலும் பாதுகாப்பிலும் பலப்படுத்தவும் வல்லமையான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம்.

ஆமென்.


Sol. சலோமி குரியன்.