தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-11-2022

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கை


கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைக்கு விசுவாசம் ஒரு முக்கியமான காரணியாகும்.


மத்தேயு 21: 12 ” மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.”

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் யாரெல்லாம் விசுவாசம் வைக்கிறீர்களோ, அவர்களது வாழ்க்கை மாற்றப்படும்.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் அவர்களது வாழ்க்கையிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் களைய முடியும்.இயேசு , கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட , நம்முடைய வாழ்க்கையில் அதிசயங்கள் நடப்பதை காணலாம் என்று சொல்கிறார்.ஆனால் இயேசுகிறிஸ்து உயிருள்ள தேவன். இன்றும் கூட அவரை விசுவசிப்பவர்களுடைய வாழ்க்கையில் அற்புதங்களும் குணமடைதலும் பகிரங்கமாக நடக்கின்றன.


எபிரேயர் 11 : 6 ” விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் . ஏனென்றால் , தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் , அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”.


நம் கர்த்தராகிய , நம்மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் இருந்தால் , நித்திய வாழ்விற்கான பரலோக ஆசீர்வாதங்களை பெறலாம்.

சாட்சி


என்னுடைய மகன் 7 மாதக் குழந்தையாக இருந்த போது, வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். மருத்துவர்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள். இயேசுகிறிஸ்து என் மகனை முழுவதும் குணமாக்கி அவனது வாழ்க்கையை காப்பாற்றினார்.


ரோமர் 10 : 17 ” ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும் , கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். “

நாம் தினம்தோறும் வேதாகமத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும் தகுந்த நேரத்தை செலவழிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் கர்த்தருடைய விருப்பத்தை அறியவும், நம்முடைய வாழ்க்கையில் அதன்படி நடக்கவும் முடியும். நாம் இயேசுகிறிஸ்துவோடு நேரம் செலவழிக்கும் போது , நம்மை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்புவார்.
அப்போஸ்தலர் 2 : 17 ” கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மீதும் என் ஆவியை ஊற்றுவேன்”


எசாயா 41 : 10 ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் , திகையாதே , நான் உன் தேவன்.

அவரை விசுவாசிப்பவர்கள் ஒரு நாளும் திகிலடைவதில்லை


எசாயா 59 : 1, 2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது , உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது .

நாம் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி அறிக்கையிட்டு ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும்


மிகுந்த இரக்கமும் கோபத்துக்கு தாமதிக்கிறவருமாகிய கர்த்தர் நம்மை மன்னித்து ஆசீர்வதிப்பார்.

ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய வார்த்தையின் வழியாகப் பேசும்.எங்களை பாதுகாத்து வழிநடத்தும். உம்முடைய ஞானத்தை தாரும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் இதைக் கேட்கிறோம்.
ஆமென்.


Sol. சுஸ்மிதா ராகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *