தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-11-2022

இயேசுவிடமிருந்து வல்லமையும் அதிகாரமும்.

யோவான் 8 : 32 ” சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”

இந்த உண்மையை அறிவதன் மூலம் பரிசுத்த ஆவியின் வரங்கள் செயல்படுத்தப்படும். இது நமக்குள்ளே உள்ள தேவையற்றவைகளை நீக்கி, நமக்கு என்ன தேவையோ அதை கற்றுக் கொடுக்கும்.

மத்தேயு 16 : 19 மற்றும் மத்தேயு 18 : 18 ல் “பரலோகத்தின் திறவுகோலை உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


சத்தியம் நமக்குள் செல்லும் போது வல்லமை தானாகவே செயல்படுத்தப்படும்.


லூக்கா 10 : 19 ” இதோ , சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும் , சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது.”

லூக்கா 11 : 20 ல் ” நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளை துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே ” என்று இயேசு சொல்கிறார்.


பழைய ஏற்பாட்டு புத்தகத்திலிருந்து “தேவனுடைய விரல் ” எவ்வளவு வல்லமையானது என்பதை அறியலாம்.


யாத்ராகமம் 8 : 18,19 ல் மந்திரவாதிகள் தங்களுடைய மந்திரவித்தைகளால் பேன்களை பிறப்பிக்கும்படி பிரயதாதனம் செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியாமற் போயிற்று. பேன்கள் மனிதர்மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தன. பின்பு மந்திரவாதிகள் பாரவோனைப் பார்த்து இது தேவனுடைய விரல் என்றார்கள்.

மத்தேயு 12 : 28 ” நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் , தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே”


எவரொருவர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறுகிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வார்கள்.

மத்தேயு 3 : 16 ” இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறியவுடனே இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவ ஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருவதைக் கண்டார்.

அப்போஸ்தலர் 2 : 38 ” பேதுரு அவர்களை நோக்கி, நீங்கள் மனந்திரும்பி , ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் , அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். “

மோசேக்கு உள்ள வல்லமை நமக்கும் இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் ஒரு மோசே. புதிய ஏற்பாட்டில் லட்சக்கணக்கான மோசேக்கள்.
மத்தேயு 28: 28 – 20 ல் ” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீசராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து , நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன். ” என்று இயேசு சொன்னார்.

இது ஒரு சர்வ வல்லமையுள்ள சக்தி. ஒவ்வொருவரும் இதை அனுபவிக்க முடியும். இந்த வல்லமையை நாம் சிலுவையின் வழியாக பெற முடியும்.
யோவான் 1 : 12 ல் ” அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்கள் அனைவருக்கும் , கர்த்தருடைய பிள்ளைகளாகும் உரிமையை கொடுத்திருக்கிறார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பழைய ஏற்பாட்டில், எல்லா சிறந்த தீர்க்கத்தரிசிகளும் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் பிதாவின் குமாரனுடைய பிள்ளைகளாக அழைக்கப்படுகிறோம்.
ஏற்கெனவே வல்லமையும் அதிகாரமும் வழங்கப்பட்டுவிட்டதால் யாரும் இனி நமக்கு கொடுக்கவேண்டியதில்லை.

எண்ணாகமம் 12 : 8 ல் மோசே என் தாசன் என்றும்,
1 ராஜாக்கள்11 : 32 ல் என் தாசனாகிய தாவீது என் இருதயத்திற்கு நெருக்கமானவன் என்றும் கர்த்தர் கூறுகிறார்.

இந்த வல்லமையின் எல்லைகள் என்ன?
யோவான் 14 : 12 ல் ” மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னை விசுவசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் ” என்று இயேசு சொல்கிறார்.

தனிப்பட்ட சாட்சியம்


நாங்கள் ஒரு பிசிக்கல் ஹீலிங் பள்ளியில் சேரவிருந்தோம். மிகவும் அதிகமாக மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் , மழைய நிறுத்த வேண்டி அதிகாரத்துடன் கட்டளையிட்டு ஜெபித்தோம்.
அதிசயிக்கும் விதமாக , மழை நின்று சூரிய வெளிச்சமும் வந்தது. கர்த்தருக்கே மகிமை.

ஜெபம்.

எங்களை உமது மகனாக , மகளாக , பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதற்காகவும் பரலோகத்திலிருந்து வல்லமையையும் அதிகாரத்தையும் தந்ததற்காகவும் அப்பா உமக்கு நன்றி செலுத்துகிறோம். எல்லா மக்களும் இதை கர்த்தராகிய இயேசுவுக்குள் விசுவசிக்கவும் , அதே வல்லமையால் எல்லோரும் நிரப்பப்படவும் ஜெபிக்கிறோம். ஆமென்.

Sol. தியோடர் மொகந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *