நாள்: 18-11-2022
இதுவரை செலுத்தப்பட்ட மிகப்பெரிய விலை சிலுவையின் மேல் உள்ளது.
கர்த்தர் நம்மை சொந்தமாக்குகிறார். நம் ஒவ்வொருவருக்காகவும் மிகப் பெரிய விலையைச் செலுத்தினார். அவர் சிலுவை சுமந்து கொண்டிருந்த போதும் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். நம்மை மீட்பதற்காக , அவர் விருப்பத்துடனே அந்த விலையை செலுத்தினார்.
1 பேதுரு 2 : 9 சொல்கிறது “நீங்களோ , உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

கர்த்தர் உங்களையும் என்னையும் ஒரு தனித்துவமிக்க ஆளுமையாக உருவாக்கினார். பாவம் அவரிடமிருந்து உங்களை பிரித்த போது அவர் உங்களிடம் வந்தார் . அவர் உங்களை நிபந்தனையின்றி அன்பு செய்கிறார். உங்களை சொந்தமாக்கிக் கொள்ள ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை.
நீங்கள் கர்த்தருடைய சிறப்பான உடைமைகளாக இருப்பது எவ்வளவு பெரிய சலுகை. மக்கள் உங்களை மறுத்தாலும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய கர்த்தர் உங்களுடன் கூடவே இன்னும் இருக்கிறார்.
ஆனால் அவருக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? இயேசுவோடு நாம் இருப்பது, நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றுகிறது. அவரோடு அதிகமதிகமாக நேரம் செலவழிக்கும் போது , நீங்கள் ஒரே மாதிரி ஒருபோதும் இருக்க மாட்டீர்கள்.உங்களிடம் இருப்பவைகளிலிருந்து ஒரு போதும் தைரியம் வராது. உங்களுக்குத் தெரிந்தவைகளிடமிருந்து ஒரு போதும் தைரியம் வராது. உங்களுடைய எதிரியின் பலவீனத்தை தெரிந்து கொள்வதிலிருந்து ஒருபோதும் தைரியம் வராது. கர்த்தருடன் நீங்கள் நேரம் செலவழிக்கும்போது மட்டுமே தைரியம் வரும். நீங்கள் வெளியே போகும்போது முதலில் அவருடன் பேசுங்கள். உங்கள் எதிரிகள் குழப்பமடைவார்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் கர்த்தரோடு இருப்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
அப்போஸ்தலர் 4 : 13 “பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு , அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள். “
ஜெபம்
அப்பா,நீர் இறங்கி வந்து எங்கள் பாவங்களிலிருந்து எங்களை இரட்சித்தீர். முழு மனித குலத்திற்காகவும் சிலுவையை சுமந்தீர். உம்முடைய சந்நிதியில் நாங்கள் நிற்பதனால் வரும் தைரியத்தை எங்களுக்குத் தரும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Sol. ஆரோக்யா
