இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
லூக் 19:9
சகேயு இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தான் மேலும் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தினான். ஏழைகளுக்கு தன்னுடைய உடமையில் பாதியை கொடுப்பேன் என்றும் யாரையாவது ஏமாற்றி இருந்தால் நான்கு மடங்கு அவர்களிடம் திருப்பி கொடுப்பேன் என்றும் தன்னுடைய மனந்திரும்புதலுக்கான காரியங்களை அவன் வெளிப்படுத்தினான்.
இயேசு சகேயுவிடம் சொன்னார் இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.
இரட்சிப்பு எப்படி கிடைக்கிறது?
கர்த்தராகிய இயேசுவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
அப்போ 16:31
எபே 2:8 – கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
பிலி 2:12 – அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
நாம் இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டோம் இருப்பினும் அந்த இரட்சிப்பைத் தொடர நாம் அதை நோக்கி உழைக்க வேண்டும்.
யாக் 2:26 – கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
விசுவாசம் = இயேசுவில் நம்பிக்கை +வேலை
யாக் 2:19 – தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
பிசாசின் நம்பிக்கை மற்றும் கர்த்தருடைய பிள்ளையின் நம்பிக்கை இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?
பிசாசு இயேசுதான் ஆண்டவர் என்று நம்புகின்றன ஆனால் விசுவாசத்திற்கு ஏற்ற எந்த கிரியையும் நம்மால் காண முடியாது.
ஆனால் கர்த்தருடைய குழந்தை அவருடைய/அவளுடைய நம்பிக்கையுடன் கூடிய செயல்களை வெளிப்படுத்துகிறது.
நாம் என்ன வேலைகளை செய்ய வேண்டும்?
- இயேசுவின் பாதத்தில் அமர்வது மேலும் அவரிடம் கற்பது
- பெரிய கட்டளை – நற்செய்தியை அறிவிப்பது- அணிசபையை பெருக்குவது – மக்களை பரிசுத்த ஆவியின் வரங்களில் பயிற்சி அளிப்பது.
- ஒருவர் மற்றவரை அன்பு செய்வது
- ஏழைகளுக்கு உதவுவது
ழைகளிடம் தாராளமாக உதவிசெய்தல், பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல் உறுதியான முடிவு எடுத்து தனது இரட்சிப்பின் செயல்களை சகேயு வெளிப்படுத்தினார். அதனால்தான் அவனுக்கு இரட்சிப்பு கிடைத்தது என்றும் அவன் அபிரகாமின் மகன் என்றும் இயேசு சொன்னார். ஆபிரகாமும் கர்த்தருக்கு கீழ்படிந்து அவர் சொன்ன அனைத்தையும் பின்பற்றினார், அதனால்தான் அவர் விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
சில வருடங்களுக்கு முன் நாங்கள் பாரம்பரிய சபைகளில் இருந்தோம், இயேசு கிறிஸ்துவை விசுவசித்தோம் ஆனால் அவருடைய ராஜ்யத்திற்காக எந்த வேலையையும் செய்தது இல்லை. ஞாயிற்று கிழமைகளில் ஒரு மணி நேரம் சபைக்குச் செல்லுவோம் மற்ற நேரங்களில் உலக பிரகாரமாக வாழ்ந்து வந்தோம்.
2016 ஆம் ஆண்டு இயேசுவின் படை அணி (AOJ) இணைந்தோம். அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளிகள் போன்றவைகளின் மூலமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்தோம். இப்பொழுது உண்மையான இரட்சிப்பை எங்கள் வாழ்வில் காணமுடிகிறது.
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்மில் விசுவாசம் வைக்கமட்டும் அல்ல மேலும் இரட்சிப்பின் காரியத்தில் ஈடுபடவும் எங்களுக்கு உதவி செய்யும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.
Sol. Theodore AOJ
