அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
லூக் 18:24
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, சர்வவல்லமையுள்ள தேவனுக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத் 6:21)
இந்த வேத வசனத்தை நான் தியானித்துக்கொண்டிருக்கையில் தேவன் என்னை லூக் 16:19-23 வது வசனத்தை நினைவுபடுத்தினார். இயேசு கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு ஒரு செல்வந்தன் மற்றும் ஒரு தரித்திரனுடைய உண்மையான அனுபவத்தை பற்றி கூறினார்.
மத் 18:10 – இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
தரித்திரன் செல்வந்தனுடைய வாசலில் இருந்தான், செல்வந்தன் அவனை புறக்கணித்தான், அவனை ஒரு பொருட்டாக கருதவில்லை. தரித்திரனுக்கு உதவிகரம் நீட்ட செல்வந்தன் எந்த முயற்சியும் செய்யவில்லை.
லாசருடைய உடல் முழுவதும் பருக்களால் நிறம்பி இருந்தது அவன் செல்வந்தனின் வாசலருகே கிடந்தான். அவனுடைய பருக்களில் இருந்து துர்நாற்றம் வீசியது, சீழ்வடிந்தது, ஈக்கள் மொய்த்தன, நாய்கள் அவன் பருக்களை நக்கியது. லாசர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தான், அவனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருந்தது. ஆனால் லாசருக்கு மருத்துவ உதவி செய்ய இந்த செல்வந்தனுக்கு தோன்றவே இல்லை.
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதி 3:27).
செல்வந்தனிடம் எல்லாம் ஏராளமாக இருந்தது ஆனால் லாசருக்கு உதவும் எண்ணம் அவனது இதயத்தில் இல்லவே இல்லை. அதே வேளையில் மருத்துவ உதவிக்காகவும், உணவிற்காகவும் லாசர் போராடிக்கொண்டிருந்தான். செல்வந்தனோ மற்ற யாரோ அவனுக்கு உதவ முன்வரவில்லை. இவ்வாறு செல்வந்தனுடைய இதயம் சுயநலம் மற்றும் உலகபிரகாரமான விஷயங்களில் திசை திருப்பப்பட்டிருந்தது.
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1யோவா 4:20,21)
செல்வந்தன் தன்னுடைய செல்வத்தை பூமிக்குரிய ராஜ்யத்தில் சேமித்து வைத்தான். அவன் கற்பனைகளை கைகொண்டான், ஆனால் பரிசுத்த ஆவியின் கனிகள் அவனிடம் காணப்படவில்லை.
வேதம் சொல்லுகிறது இருவரும் மரித்தனர். லாசர் அபிரகாமின் மடியில் ஆறுதல் படுத்தப்பட்டான். செல்வந்தனோ நரகத்தில் இருந்தான். இந்த உவமை நமக்கு ஒரு எச்சரிக்கை.யாக இருக்கட்டும். நம் வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். இப்பொழுது நாம் எங்கு இருக்கிறோம்? நம்முடைய வாழ்வில் பரிசுத்த ஆவியி.ன் கனிகளை வெளிப்படுத்துகிறோமா? இல்லை என்றால் மனந்திரும்பி கர்த்தரிடம் மன்னிப்பு கேட்போம்.
ஜெபிப்போம். பரலோக பிதாவே உமக்கு முன்பாக வுருகிறோம் எங்களை மன்னித்து உம்முடைய பாதசுவடில் நடக்கு பரிசுத்த ஆவியால் எங்களை பலபடுத்தும்ம் . இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம். ஆமேன்.
Sol. Dr. G. Kamalin Viji , AOJ
