தானியேல் –II

நாள் 04-06-2022 – தேவ செய்தி

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

1யோவா 4:4.

சிலுவையில் இயேசு பெற்ற வெற்றி யோவானை இவ்வாறு அறிக்கையிட வைத்தது, விசுவசிப்பவர்களே நீங்கள் கர்த்தரிடமிருந்து வருகிறீர்கள், எதிரிகளின் பலம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை உங்களில் இருப்பவர் எல்லாம் வல்லவர், வல்லமையிலும், மகிமையிலும், மாட்சி, அதிகாரத்திலும் வல்லவர். தம்முடைய மக்களுடைய இருதயத்தில் அவர் வாசமாய் இருக்கிறார். எனவே அசுத்த ஆவியின் வல்லமையை நம்மால் மேற்கொள்ள முடியும். ஏனென்றால் உலகில் இருக்கும் அவனைவிட நம்முள் இருப்பவர் பெரியவர்.

என்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையற்றவளாக நான் இருந்தபோது தேவன் எனக்கு இந்த வசனத்தை எனக்கு காட்டினார். அவருடைய செட்டைகளின் கீழ் என்னை எடுத்து பாதுகாத்தார். நான் கடினமாக உழைக்க என்னை உற்சாகப்படுத்தினார்.  அவர் என் இருதயத்தின் எண்ணங்களை நிறைவேற்றுவார் என்று நான் அவரில் நம்பிக்கை வைத்தேன். சங் 37:4-5- அவருடைய நேரத்தைல் அவர் செய்வார் என்றும் விசுவசித்து காத்திருந்தேன். ஆனால் என் பிதாவாகிய தேவன் மிகவும் சரியான நேரத்தில் சரியான, பிடித்த நல்லதொரு வேலையை எனக்கு கொடுத்தார். அதற்காக கர்த்தருக்கு நான் கோடானகோடி நன்றி சொல்லுகிறேன். நான் ஒரு குதிரையைப் போல தயாராக இருந்தேன் ஆனால் சரியான வேளையில் என் தேவன் எனக்கு வெற்றி தந்தார்.

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

நீதி 21:31.

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

சங் 62:1.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

சங் 46:10.

கர்த்தரே என் அடைகலம் என்று விசுவசித்தால் நாம் அமைதியாக இருக்க முடியும். நாம்மிடம் இருக்கும் தைரியமும் விசுவாசமும் கர்த்தரிடமிருந்து வர வேண்டும், பணம், பதவி, வல்லமை, புகழ்ச்சி, திறமைகளிடமிருந்து அல்ல. நாமிருக்கும் படகில் இயேசு இருந்தால் எந்த புயலும் நம்மை ஒன்றும் சேதப்படுத்தாது. எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பது நமக்கு அமைதியை தரும். பயம், நம்பிக்கையின்மை, பெருமை, குற்றமனப்பான்மை மற்றும் கவலை போன்ற சிறையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். கர்த்தருடைய ஞானத்தில் நாம் வளரும்போது நம்முடைய நம்பிக்கை வளரும், நம்முடைய சந்தோஷம், அமைதி, விசுவாசம் வளரும். அவருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அவரை உயர்த்துவோம்.

ஜெபம்

அன்பு தேவனே, உம்முடைய கிருபை, அன்பு மற்றும் வல்லமையில் என்னை என்றும் வழிநடத்துமாறு இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன். உம்மை விசுவசிக்கும்,மற்றும் அன்பு செய்யும் உம்முடைய பிள்ளைகளை உம்முடைய செட்டைகளின் கீழே பாதுகாப்பீராக.

ஆமேன்.

Sol.  Aparajita

தானியேல் – II

நாள்: 03-06-2022 – தேவ செய்தி

அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

லூக் 5:16.

ஜெபம் நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து தோன்றுகிறது, நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டு செல்கிறது மேலும் நம்முடைய ஆத்துமாவில் ஆழமாய் வேலை செய்கிறது. இது உயிருள்ள தேவனை சந்திப்பதால நம்மை உள்ளிருந்து மாற்றுகிறது. நம்மை முழுவதுமாக கர்த்தருக்கு ஒப்புகொடுக்க கூடிய காரியம்தான் இது.

கர்த்தரோடு நமக்கிருக்க வேண்டிய இந்த தொடர்பைத்தான் வேதம் நமக்கு சொல்லிகொடுக்கிறது. மற்ற எந்த வேத புத்தகங்களைவிட, லூக்கா எழுதிய நற்செய்தி ஜெபத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி பேசுகிறது. இதற்கு மாதிரியாக இருப்பவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இயேசு ஜெபம் செய்ய நமக்கு சொல்லிகொடுப்பதோடல்லாமல், அவரே தனித்திருந்து ஜெபிக்கிறார். ஜெபத்தைப் பற்றி இயேசு  நமக்கு சொல்லி கொடுத்த சில விஷயங்களை நாம் இங்கு பார்ப்போம்.

இயேசுவுக்கு ஒழுக்கமான ஒரு ஜெப பழக்கம் இருந்தது – லூக் 22:39

மக்களிடமிருந்து பிரிந்து தனியே ஒர் இடத்தில் ஜெபிக்க செல்வதை இயேசு வழக்கமாக கொண்டிருந்தார். இங்கு இயேசு, அவரை பின்பற்ற நமக்கு சொல்லிகொடுக்கிறார், ஜெபிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் ஆனால் அதையும் தாண்டி ஒழுக்கமான ஜெப பழக்கம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜெபிக்கும் பழக்கம் உடையவர் – லூக் 5:16

இயேசு அவர் இருக்கும் இடத்திலேயே ஜெபிக்கவில்லை, மாறாக மற்றவர்களிடமிருந்து விலகி, மலைபாங்கான இடத்திலோ, வனந்தரத்திலோ ஜெபிக்க சென்றார். அவர் நமக்கு சொல்லிகொடுப்பது இதுதான், நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் விட்டுவிட்டு கர்த்தருடைய பிரசன்னதிற்குள் நாம் செல்ல வேண்டும்.

தன்னுடைய பிஸியான மற்றும் பிரசித்தமான வாழ்கை மத்தியிலும் கூட  இயேசு நேரம் ஒதுக்கி ஜெபித்தார், லூக் 5:16

நாம் எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும், பிரசித்தமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஊழியத்தை செய்துகொண்டிருந்தாலும் ஜெபத்தில் நேரத்தை செலவிடாவிட்டால் எதுவுமே நன்மை தராது.

வுகள் எடுப்பதற்கு முன்பாக இயேசு அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டார், லூக் 6:12

தன்னுடைய பனிரண்டு சீடர்களை தேர்வு செய்வதற்கு முன்பாக இயேசு முழு இரவையும் ஜெபத்தில் கழித்தார். முக்கியமான நிகழ்வுகளுக்கு முன் அவர் இவ்வாறே செய்தார். நம்மையும் அப்படி செய்ய நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

இயேசு மக்களுக்கு மத்தியுலும், தனித்தும் ஜெபித்தார் 8:18

பலபேருக்கு மத்தியிலும், தனித்தும் நம்மால் ஜெபிக்க முடியும். மக்களுக்கு மத்தியில் நாம் ஜெபிக்கும் போது, நம்முடைய ஜெபத்தால் மற்றவரும் ஜெபிக்க தூண்டப்பட வேண்டும். லூக் 11:1 நாம் வாசிப்பதுபோல, இயேசுவின் ஜெபவாழ்கையை பார்த்து சீடர்களும் ஜெபிக்க கற்றுதருமாரு கேட்டுக்கொண்டனர்.

இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அவருடைய ஜெப வாழ்க்கையையும் பின்பற்றுவோம். நம்முடைய ஜெப வாழ்க்கையில் பரலோகத்தின் குரல் கேட்க வேண்டும், ஜெபத்தினால் சாத்தானின் தந்திரங்கள் மற்றும் பரிட்ச்சைகளை மேற்கொள்ளலாம், வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ள முடியும், முழுமையான மாற்றம் வரும், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளையும் தைரியத்தோடு மேற்கொள்ள ஜெப வாழ்க்கை மிக முக்கியம்.

ஜெபம்

கர்த்தவே எங்களுடைய வாழ்கையின் எல்லா பகுதிகளிலும் உம்மை பின்பற்ற கிருபை தாரும். எங்களுடைய ஜெப வாழ்வை புதுப்பித்தருளும், உம்முடைய பிரசன்னத்தில் நேரத்தை செலவிடவும், இந்த வாழ்வை பயனுள்ளதாக மாற்றவும் ஜெபிக்க கற்றுதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,

ஆமேன்.

Sol.Shebe

தானியேல் – II

நாள் 01-06-2022 –  தேவ செய்தி

அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

லூக் 2:28-32

எருசலேமில் சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்.அவர் நீதியும், தேவபக்தியும் உள்ளவனாயும், பரிசுத்த ஆவி அவன் மேல் இருந்தார்.  கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. நம்முடைய வாழ்வு, குழந்தைகள், குடும்பம் மற்றும் சூழ்நிலைகளை குறித்து தேவன் நமக்கு சில வாக்குறுதிகளை கொடுத்திருக்கலாம்

சிமியோன் பொருமையாக காத்திருந்து அதை தன் கைகளால் தொட்டது போல நாமும் அந்த வாக்குறுதிகளை தொடுமாறு காத்திருக்கிறோமா?

அநேக வேளைகளில் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நாம் கைவிட்டு விடுகிறோம், ஏனென்றால் இதுமுழுமையாக நீண்ட நேரம் எடுத்திருக்கலாம், அல்லது நம்மை சுற்றிஉள்ள சூழ்நிலை அதற்கு எதிராக இருக்கலாம், அல்லது மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பி இருக்கலாம்.

என்னுடைய சிறிய மகன் 12 வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது கர்த்தர் எனக்கு ஒரு வாக்குறுதயை கொடுத்தார் – தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்காக என் மகன் வெளிநாட்டிற்கு செல்வான். அவன் 12 வகுப்பில் இருந்தபோது அவன் வெளிநாட்டிற்கு செல்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவன் பயோடெக் பொறியாளாரக படித்துக்கொண்டிருந்தபோது சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் என்னுடைய வேலையும் போனது, அது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையாகும். ஆனாலும் கர்த்தருடைய வாக்குறுதியின் மீது விசுவாசம் வைக்க எனக்கு கர்த்தர் கிருபை கொடுத்திருந்தார். நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும் சில காரியங்களை செய்ய ஆரம்பித்தேன். அங்குதான் கர்த்தர் தன்னுடைய வல்லமையை வெளிபடுத்துகிறார். பல்வேறு பிரச்சனைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கர்த்தருடைய கிருபையால் என் மகன் அவனுடைய மேற்படிப்பிற்காக கனடா சென்றான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராக இருந்தார்.

குழந்தையை துணியில் சுற்றப்பட்டு அதன் தாயின் கையில் இருந்ததை கண்ட சிமியோனுக்கு இது ஒரு கனவாக இருந்திருக்கலாம். குழந்தையை தன் கைகளில் ஏந்தினான் கர்த்தரை ஸ்தோத்தரித்தான், கர்த்தர் வாக்களித்ததை என் கண்கள் கண்டது என்றான்.  அப்போஸ்தலர் நடபடிக்கை, 27 ஆம் அதிகாரத்தில் பவுலின் பயணம் நமக்கு ஞாபகம் இருக்கும், புயல் காற்று மற்றும் கப்பல் உடைந்தது, எல்லா நம்பிக்கையும் இழந்தபோதும் கூட தேவதூதன் பவுலுக்கு என்ன சொன்னான், நீ சாகமாட்டாய், இராயனுக்கு முன்பாக நீ நிற்க வேண்டும் என அவருக்கு நம்பிக்கை கொடுத்தான். அப்போ 27:24 -பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். இவ்வாறு பவுலோடு பயணம் செய்த 276 பேரும் கப்பல் சேதத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

உங்களுடைய வாழ்விலும் ஒரு மோசமான சூழ்நிலை வந்தால், கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்துங்கள். கப்பலே உடைந்தாலும் உங்களுடைய உயிருக்கு எந்த கேடும் நேராது.

உங்களுடைய வாழ்வில் கர்த்தர் வாக்குறுதியை கொடுத்திருந்தால், அதை பற்றிக்கொள்ளுங்கள், அதை பாருங்கள், அதற்கு எதிராக சூழ்நிலைகள் இருந்தாலும், நிச்சயமாக கர்த்தருடைய நேரத்தில் அது நிறைவேறும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய கடைசி வார்த்தைவரை நீர் உண்மையாய் இருக்கின்றீர், நாங்கள் பொருமையாக காத்திருக்கவும், உம்மில் விசுவாசம் வைக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்.  சிமியோனைப் போல பரிசுத்த ஆவியானவர் எங்களுடைய வாக்குறுதியில் எங்களை வழிநடத்துவாராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,

ஆமேன்.

Sol.Lalitha Menon  

தானியேல் – II

நாள்: 02-06-2022 – தேவ செய்தி

உங்களுடைய நிலம் மற்றும் மக்களுக்காக ஜெபியுங்கள்

  1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
  1. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
  1. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

1திமோ 2:1-3.

சாட்சி

சென்னையில் உள்ள மணப்பாக்கம் என்ற இடத்தில் நான் வசித்து வருகிறேன். சமீபத்தில்தான் நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம்.  எங்களுடைய வீட்டிற்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில் 5 அடி உயரத்திற்கு குப்பை கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இப்படியே பல ஆண்டுகள் இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த குப்பை மேட்டின் மீது என் கைகளை உயர்த்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்தேன், இந்த குப்பை மேடு உடனே காலி செய்யப்படுவதாக, இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும், யாரு இங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்று. ஒரு மாதத்திற்குள் மாநகராட்சியினர் வந்து குப்பைகளை அகற்றினர். தேவன் என்னுடய ஜெபத்தை கேட்டார் என்ற் மகிழ்ச்சி என் இருதயத்தை நிறப்பியது. அடுத்த இரண்டு மாதத்தில் கபடி விளையாடும் மைதானமாக அது மாற்றப்பட்டது. இந்த பகுதிகளில் இருக்கு இளைஞர்கள் தினமும் கபடி விளையாட இங்கு வருகின்றனர். என்னுடைய விண்ணப்பத்தை தேவன் கேட்டு இந்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தும் இடமாக மாற்றிய தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்

2நாளா 7:14.

நாம் பாரத்தோடு அவருடைய முகத்தை தேடினால் அவர் நம்முடைய நிலத்தை சுகமாக்குவார், மக்கள் மீது அவருடைய கிருபையை பொழிவார், மேலும் நாம் வாழும் இடத்தில் அமைதியை தேவன் கொண்டுவருவார்.

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1பேது 2:9.

கர்த்தர் நம்மை ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று அழைக்கிறார்.  திறப்பில் நின்று மக்களுக்காக ஜெபிப்பதுதான் ஒரு ஆசாரியனின் வேலை. ராஜரீகமான ஆசாரியர்களாகிய நாமும் மக்கள்ளுக்காகவும், நாம் வழும் இடத்திற்காகவு, நாட்டிற்காகவும் ஜெபிப்பது நமது கடமையாகும்.

சமீப காலமாக எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.  போர், நோய், மற்றும் துயரங்களைப் பற்றி கேள்விப்படுகிறோம்.

இதற்காக திறப்பில் நின்று ஜெபிப்பது  நமது கடமை அல்லவா?

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, அனைத்து மக்களும்  உம்முடைய கிருபை மற்றும் அமைதியால் நிறப்பப்படுவார்களாக. ஆட்சிசெய்பவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஞானத்தால் நிறப்பப்படுவார்களாக. கர்த்தருடைய இரக்கம் மற்றும் கருணை மக்களுடைய இருதயங்களில் ஊற்றப்படுவதாக, இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம்,

ஆமேன்.

Sol. Camilia Theodore, Chennai.

தானியேல் – II
நாள் 27-05-2022 – தேவ செய்தி

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

பிலிப் 4:13.

எல்லாவிதமான சூழ்நிலையிலும் நாம் இருந்தாலும் போதுமென்ற மனதுடன் நாம் இருக்க வேண்டும் பவுல் சொல்லுகிறார். மற்றவர்கள் நமக்கு உதவி செய்ய முற்பட்டாலும், நாம் கர்த்தரையே சார்ந்திருக்க வேண்டும். நம்மை முழுமையாக கர்த்தரிடம் ஒப்புகொடுக்க வேண்டும், கர்த்தர் நம்மில் வித்தியாசமாக கிரியை செய்வார். அவர் நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார், “நம்மை ஒருபோது கைவிடமாட்டார், நம்மை விட்டு விலகமாட்டார்”. எபி 12:1விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; நம்மை உள்ளிருந்து திடப்படுத்துகிறார், எல்லாவற்றையும் செய்ய நமக்கு பலன் அளிக்கிறார். நமக்கு விசுவாசம், நம்பிக்கை, ஞானம், தைரியம், மோசேவுக்கு கொடுத்ததுபோல அறிவு மற்றும் திறமை நமக்கு கொடுக்கிறார்.

தான் ஒரு திக்குவாயன் என்பதால் தன்னால் செய்ய இயலாது என்று கர்த்தரிடம் சொல்லுகிறான் மோசே. ஆனால் தேவன் அவனுடைய சகோதரனான ஆரோன் அவனுக்கு பேச்சாளனாக இருக்க அவனை கூட அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறார். நாம் தயாராக இருந்தால் போது கர்த்தர் எல்லாவற்றையும் நமக்காக செய்து கொடுப்பார்.

வரங்களும், திறமைகளும் எல்லா மக்களிடமும் நாம் காண்பதில்லை. ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறவர்கள் என்றால் தேவன் நம்மில் தன்னுடைய வல்லமை, பலம் மற்றும் கிருபையை வெளிப்படுத்துவார். திக்குவாயை கொண்ட மோசேதான் தைரியமாக ராஜாவை பார்த்து உரக்கச் சொன்னான், “என் ஜனங்களை போக விடு.” கர்த்தருடைய ராஜ்யத்திற்கு நாம் தேவை என்றால் தேவன் அதற்கான தகுதியை நமக்கு கொடுப்பார், நமக்கு பயிற்சி அளிப்பார், நம்மை ஊக்கப்படுத்துவார். அவருக்காக நாம் அநேக காரியங்கள் செய்ய முடியும், சிறைப்பட்டோரை விடுதலை செய்ய முடியும், வியாதியில் இருப்பவர்களை சுகமாக்கவும், துக்கப்படுபவர்களை ஆறுதல் படுத்தவும் முடியும். தானியேல் மற்றும் அவரது நண்பர்களைப்போல நம்மை எங்கு போட்டாலும் நாம் சாட்சியாக திகழ்வோம். அனைத்து சோதனைகளையும், துயரங்களையும் சந்திக்க நம்மில் தேவன் தைரியத்தை கொடுப்பார்.

தன்னுடைய அன்றாட தேவைகள் இருந்தபோதும், தன்னை மிகமோசமாக நடத்தியபோதும் கூட பவுல் சந்தோஷமாகச் சொன்ன விஷயம் என்னவென்றால், எதையும் தாங்க என் தேவன் என்னை அனுமதித்திருக்கிறார். பவுலின் வார்த்தைகள், கர்த்தரால் முடியாதது எதுவுமே இல்லை என்ற நற்செய்தியைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது. மத் 19:26, மாற்கு 10:27, லூக் 1:37.

இல் பவுல் சொல்லுகிறார் தேவன் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக நிற்பவன் யார். 

ரோமர் 8:31

பவுலின் தைரியத்தை அவருடைய எல்லா நிருபங்களிலும் காண முடிகிறது. சோர்ந்து போனவர்களை திடப்படுத்தவும், இன்னல் சூழ்ந்த நிலையில் இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும்தான் இது எழுதப்பட்டுள்ளது.

கிறிஸ்துவில் நிலைத்தும், அவரோடு இணைந்தும், மேலும் பிதாவினுடை ஐக்கியத்திலும் ஒருவன் இருந்தால் எல்லாவிதமான துன்பங்களையும் நம்மால் சந்திக்க முடியும் என்பதுதான் பவுல் கண்டுபிடித்தது.

..பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சக 4:6.

சாட்சிகர்த்தர் நல்லவர், அவருடைய வார்த்தை உண்மையுள்ளது. என்னுடைய உடல் இயலாமையால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன், அநேக காரியங்களில் போராட்டத்தையே கண்டேன். மேற்கண்ட வசனத்தை நான் அநேகமுறை உரக்க சொல்லிகொண்டே இருப்பேன். சமையல் செய்வது, சுத்தம் செய்வது, வாகனம் ஓட்டுவது, வீடுகளில் பொருட்களை கொண்டு சேர்ப்பது மற்றும் வெளிநாட்டில் உள்ள உணவகத்தை நிர்வாகம் செய்வதிலிருந்து, சாதாரண வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற எல்லாவற்றிலும் கர்த்தர் என்னை பலப்படுத்தியுள்ளார். எனக்கு உதவியே இயேசுவே, உமக்கு கோடி நன்றிகள் ஐயா.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே எங்கள் வாழ்வில் துன்ப துயரங்களை சந்திக்க எங்களுக்கு கிருபைதாரும். நீரே எங்கள் பலம், உம்முடைய வார்த்தைதான் எங்களை தாங்குகிறது.

ஆமேன்.

Sol.Anju

தானியேல் – II

நாள் : 26-05-2022 – தேவ செய்தி

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்”.

2நாளா 14:11-12.

பத்து இலட்ச்சம் மக்களோடும், 300 இரதங்களோடும் எத்தியோப்பியர் ஆசாவுக்கு எதிராக் யுத்தம் செய்ய வந்தபோது அவன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்டான். பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது கர்த்தருக்கு லேசான காரியம் என்று ஆசா தன் நாவினால் அறிக்கையிட்டான். கர்த்தாவே எங்களுக்கு துணைநில்லும், இந்த ஏராளமான் கூட்டத்திற்கு எதிராக நாங்கள் போரிட வந்துள்ளோம். நாங்கள் உம்மீதும் உம்முடைய இரக்கத்தையும் சார்ந்துள்ளோம்.

கர்த்தர் எத்தியோப்பியர்களுக்கு எதிராக ஆசாவுக்கு வெற்றி தந்தார், எத்தியோப்பியர்கள் ஆசாவுக்கு முன்பாக ஓடிப்போனார்கள். ஆசாவோடு இருந்த இராணுவ வீரர்கள் 5,80,000 பேர் ஆகும். சேராவோடு 10 இலட்ச்சம் போர் வீரர்கள் மற்றும் 300 இரதங்களோடு இருந்தனர். எனவே எத்தியோப்பியர்களிடம் இருந்த இராணுவமே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. ஆனாலும் ஆசா கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தான். கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய புறப்பட்டான். எத்தியோப்பியரிடம் ஆசா செய்த யுத்தத்தில் நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், எதிரி பலமுள்ளவனாகிலும், பலனற்றவனாகிலும் கர்த்தர் மீது நாம் நம்பிக்கை வைத்தால் நாம் வெற்றிபெறலாம் என்பதே.

நமக்கு எதிராக வருபவர்களை வெல்வது நம்முடைய பலத்திற்கு அப்பாற்பட்டு இருக்கலாம். அவர்களை எதிர்த்துநிற்க கூட திராணி இல்லாமல் இருக்காலாம். ஆனால் கர்த்தரை மட்டுமே நம்பி அவரை மட்டுமே சார்ந்திருக்கும் போது அவர் நமக்கு வெற்றியை தருவார்.

சாட்சி

தாவீது ஆராதனை பயிற்சி பள்ளியின் மூலம் நான் அநேக காரியங்களை கற்றுக்கொண்டேன். அளவில்லாத அபிஷேகத்தை கர்த்தர் என் மீது ஊற்றினார் மேலும் என்னுடைய நாவில் புதுபாடலை வைத்தார்.

பாடல்

  1. அதிகாலையில் எழுந்து நாம் கர்த்தரை துதிப்போம்.
  2. இருளில் வாழும் மக்களை இயேசுவின் வியத்தகு ஒளிக்குள் கொண்டுவருவோம்.
  3. தேசங்களுக்காக ஜெபித்து, அதை கர்த்தருக்கு சொந்தமாக்குவோம். ஆனந்த சத்தத்தோடு நாம் கர்த்தரில் களிகூறுவோம்.

நாம் அவருடைய சேனையின் வீரர்கள்

நாம் அவருடைய சேனையின் வீரர்கள்

எல்லா மகிமையும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவுக்கே.

ஜெபம்

பரிசுத்த தேவனே, எங்களுடைய எதிரிகளிடமிருந்தும் அவர்களுடைய தந்திரங்களிலிருந்தும் எங்களை காப்பாற்றும். நாங்கள் எங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் உம்மையே சார்ந்திருக்கிறோம்.

ஆமேன்.

Sol.Manimegalai

தானியேல் – II

நாள்: 25-5-2022-தேவ செய்தி

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.  

வெளி 19:13.

ராஜாதி ராஜாவாகவும், வெல்லும் ராஜாவாகவும் இயேசு திரும்ப வருகிறதை நாம் காணாலாம். யோவான் சொல்லுகிறார், அவருடைய வஸ்திரம்  சிலுவையில் நம்முடைய பாவத்திற்காக சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தில் தோய்த்தெடுக்கப்படிருந்தது,  ஏசா 63:2-3 ஒரு கேள்வி மற்றும் பதிலை நமக்குமுன் வைக்கிறது.  உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்னநான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்

அவர்களின் இரத்தம் என் வஸ்திரங்களை கரைபடுத்தியது. இயேசுவின் முதலாவது வருகையில் தேவ ஆட்டுகுட்டியாக இருந்து தன்னுடைய இரத்தத்தை நம்முடைய பாவங்களுக்காக சிந்தினார். ஆனால் அவரது இரண்டாம் வருகையில் யூதகுல சிங்கமாக அவர் வருவார் மேலும் எதிரிகளின் பாவத்தின் நிமித்தம் அவர்களை கொன்று போடுவார்.

அவருடைய நாமம் ”தேவனுடைய வார்த்தை” என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. வெள்ளை குதிரையின் மீது ஏறிவருபவர் இயேசு என்று தெளிவாகிறது, அவர் முதல் முறையில் மனித உருவில் தேவனாக வந்தார் ஆனால் உலகத்தால் நிராகரிக்கப்பட்டார். (யோவா 1:1-2,10-11,14). அவர் உலகத்தின் இரட்சிப்புக்காக வந்தார், அதனால்தான் மக்களோடு அவர் பேசிய அவருடைய வார்த்தைகள் ஆவியாய் இருந்தது, ஆவிதான் உயிரை கொடுக்கும் என்றும் சொன்னார். வார்த்தை உயிருடனும் ஆற்றலுடனும் இருக்கிறது.

பிதா அனுப்பாவிட்டால் ஒருவனும் என்னிடம் வரமுடியாது என்று சொன்னபின் அநேகர் அவரை விட்டு விலகினர். தன்னுடைய 12 சீடர்களைப் பார்த்து இயேசு கேட்டார், நீங்களும் என்னை விட்டு விலக சித்தமாய் இருக்கிறீர்களா? அதற்கு பேதுரு பதில் சொன்னார்,

“ ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.”

யோவா 6:68

இயேசுவிடம் உயிருள்ள வார்த்தை உள்ளது என்றும் அவரே கர்த்தருடைய வார்த்தையாய் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியவில்லை.  உலகபிரகாரமான மனிதர்கள் மற்றும் சாத்தானிடமிருந்து இயேசுவின் அழைப்பை ஏற்க ஏற்படும் எதிர்ப்பு எவ்வளவு பெரியது என்பது அவருடைய துன்பம், போர், நிராகரிப்பின் மூலம் அது தீர்மானிக்கப்பட்டது.

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்.

யோவா 1:1,14

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்.

எபே 5:26.

நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் சுத்தமாய் இருக்கிறீர்கள் என இயேசு தம் சீடர்களுக்குச் சொன்னார்.

இயேசு உயிருடன் இருக்கிறார். உயிர்ப்பும் உயிரும் அவரே. தன்னில் விசுவசிப்பவர்களுக்கு அவர் நித்திய ஜீவனை அளிக்கிறார். உலகில் நாம் காணும் அனைத்தும் வார்த்தை (இயேசு) யால் உருவாக்கப்பட்டது. ஜீவன் அளிக்க கூடிய வல்லமை வார்த்தையில் உள்ளது.

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து,  

சங் 119:130.

சாட்சி

கர்த்தருடைய வார்த்தை என்னுடைய சகோதரனை குணப்படுத்தியதை நான் பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறேன். சகோதரனுடைய வீட்டிற்கு சென்ற போது நான் அவனுடைய நணபர்கள்  மற்றும் உறவினர்கள் அனைவரையும் ஜெபிப்பதற்காக அழைத்தேன். ஆனால் என் சகோதரன் இதை ஏற்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் மீண்டும் என் வீட்டிற்குச் சென்றேன். அவனுடைய ஒரு கண்ணின் பர்வையை அவன் இழந்துவிட்டான் என்று நான் கேள்விப்பட்டேன். பரிசுத்த ஆவியானவர் அவனுக்காக ஜெபிக்கவும், மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என என்னைத்தூண்டினார்.

மன பாரத்தோடு நான் அவனுக்காக ஜெபித்தேன் மேலும் கர்த்தருடைய சுகமளிக்கும் வார்த்தைகளை சொல்லி ஜெபித்தேன். அதிசயமான முறையில் அவன் சுகம் பெற்றான். ஆனாலும் அவன் கர்த்தருக்கு மகிமையை கொடுக்க வில்லை. அதனால் அவனுடைய இதயம் வீங்கியது, சிறு நீரகத்திலிருந்து இரத்தம் கசிந்து  மிகவும் வியாதிப்பட்டான். மீண்டும் கண்ணீரோடு நான் அவனுக்காக ஜெபித்தேன், கர்த்தர் அவனை சுகமாக்கினார். இப்போது அவன் தவறு செய்துவிட்டோம் என்ற குற்றமனப்பான்மை உள்ளது, மனந்திரும்புதலும் உள்ளது. எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.

ஜெபம்

நித்திய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் மரணத்திலிருந்து எங்களை காப்பாற்றுவதற்காக மாமிசத்தில் வார்த்தையாக வந்தத தேவனே உமக்கு நன்றி.  

ஆமேன்.

Sol.Noreen Francis

தானியேல் – II

நாள்: 24-05-2022 – தேவ செய்தி

நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

யாத் 23:22

இன்று ‘எதிரிகளுக்கு’ ஒரு வித்தியாசமான வரையறையை  வேதத்தில் கண்டேன்.

எதிரிகள் கர்த்தரால் நமக்கு அனுப்பப்படும் தூதுவர்கள். மனிதர்களாகவோ, வியாதி, சுனாமி, வெள்ளம், தோல்வி, வேலையில்லாமை, மன உளைச்சல், பாகுபாடு, பஞ்சம், எதிர்ப்பு என  அவர்கள் எந்த உருவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் மூலமாக கர்த்தர் நமக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். செய்தியை பெற்றுக்கொள்ளாமல் நாம் அதை எதிர்த்தால் நாம் தோல்வி அடைவோம்.  அது வேறு ரூபமாக கூட மாறும்.

வேதத்திலிருந்து இன்னும் அதிகமாக கற்ப்போம்.

ஆதாம் ஏவாளை தேவன் உருவாக்கியபின் அனைத்தும் அவனோடு சமாதானமாய் இருந்தது. கால நிலை, இயற்கை எல்லாமே அவனுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அவர்கள் பாவம் செய்தபின் அனைத்தும் அவர்களுக்கு எதிரானது. வெறுப்பு, காட்டிகொடுத்தல், குற்றம் சுமத்துதல், பொய், பயம், மறைந்துகொள்வது போன்றவை பாவத்தோடு வந்தது.

நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்போமானால் அவர் நமக்காக நம்முடைய எதிரிகளோடு யுத்தம் செய்து எல்லாவற்றையும் நம் வாழ்வில் சீராக்குவார்.

அதேவேளையில் அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்படியாவிட்டால் கர்த்தர் நமக்கு எதிராக எதிரிகளை எழுப்புவார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கர்த்தரே நம்முடைய எதிரியாக மாறிவிடுவார்.

அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடையதூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார்.

எண் 22:22

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தது, மனிதகுலத்தின் மீது இருக்கும் முடிவில்லாத கர்த்தருடைய கோபத்தை நீக்கிவிட்டு நம்மை பிதாவோடு ஒப்புறவாக்கத்தான். கர்த்தருடைய கோபத்தை எப்படி தனிப்பது என்பதற்கான ஒரு உதாரணத்தை இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார்.

அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

லூக் 23:34

பரலோக பிதாவகிய தேவன் இயேசுவின் இந்த ஜெபத்தை கேட்டார் மேலும் முழு மனித ஜாதியையும் தன்னோடு ஒப்புறவாக்கிக் கொண்டார்.

நம்முடைய நண்பர்களிலிருந்து கூட நாம் எதிரிகளை சம்பாதிக்க முடியும் என்ற முடிவுக்கு நாம் இங்கு வருகிறோம். இது கர்த்தருடைய சித்தமும் கூட. நம்முடைய எதிரிகளை பிதாவோடு ஒப்புறவாக்குகிற மிகப்பெரிய பொருப்பு நம்மிடம் உள்ளது. இதை நாம் எப்படி செய்யலாம்.

எதிரியானவன், கர்த்தரால் நம்மிடம் அனுப்பப்பட்டிருக்கிறான் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

  1. எதிரி கர்த்தரிடமிருந்து என்ன செய்தியை கொண்டுவருகிறான் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
  2. நம்மை தாழ்த்தி அதை ஏற்றுக்கொள்வோம். நம்முடைய பாவங்களுக்காக மன்னிப்பு கேட்ப்போம்.
  3. ஒரு உண்மையான தேடுதலை மேற்கொண்டு எங்கு, எப்படி நான் தவறு செய்தேன் என்பதை கண்டுபிடிப்போம். பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுவோம்.

நம்முடைய எதிரி நம் மீது குற்றம் சாட்டியிருக்கலாம். அதுதான் கர்த்தரின் செய்தியாக இருக்கலாம்.

நீங்கள் ஒருவருக்கு பணம் கடனாக கொடுத்திருக்கிறீர்கள் அவரோ பணத்தை திரும்ப தராமல் உங்களை ஏமாற்றிவிட்டார். அவர் உங்களுடைய எதிரியாகிவிட்டார்.

இதில் கர்த்தர் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன?

  1. பணத்தை திரும்பி கொடுக்க ஆவலாய் இருக்கலாம் ஆனால் கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லை. பணத்தை திருப்பித்தர கர்த்தர் அவரை அனுமதிக்க வில்லை. நம்முடைய முன்னோர்கள் யாரிடமிருந்தாவது பணத்தை திருடியிருக்கலாம், அந்த பணத்தை தேவன் நம் மூலமாக திரும்ப கொடுக்க வைக்கலாம். இப்போழுது நம் எதிரியோடு நாம் கோபம் கொள்வதை தவிற்த்து, அதற்காக கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் சாபத்திலிருந்து வெளிவர இது நமக்கு உதவியது.
  2. நம்முடைய பதவி உயர்வுக்காக, , நாம்  கீழ்கண்ட இந்த வசனத்தோடு ஒத்துபோகிறோமா  என்று கர்த்தர் கொடுக்கும் ஒரு சோதனையாகவும் இருக்கலாம்,

உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

லூக் 6:30

Sr. Angelica AOJ

தானியேல் – II

நாள் 23-05-2022 – தேவ செய்தி

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

யாக் 5:15-16.

என்னுடைய சாட்சி

2013 ஆம் ஆண்டு, எங்களுடைய உறவினர் ஒருவர் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க எங்கள் வீட்டிற்கு வந்தனர். ஆச்சரியமான ஒரு விஷயத்தை அவர்கள் சொன்னார்கள், இப்போது நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கின்றோம், திருமணத்திற்கு ஒருநாள் முன் அந்நிய தேவதைகளுக்கு அல்ல மாறாக இயேசு கிறிஸ்துவிற்கு ஆராதனை வைத்திருக்கிறோம். நற்செய்தியைப் பற்றியும், அநேக சாட்சிகளையும் எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். எல்லாவற்றையும் ஆச்சரியத்தோடு நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். ஜெப நாள் அன்று நாங்கள் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றோம். அங்கு நடந்த உண்மையான ஆராதனை, ஜெபம் இவைகளை கண்டு என் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது. ஆராதனை முடிந்தபின் சிலர் தனிப்பட்ட முறையில் ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அனைவரும் அமர்த்தப்பட்டனர். என்னுடைய காலில் வலி இருப்பதால் என்னால் தரையில் உட்கார முடியாது என்று நான் சொன்னேன். என்னுடைய பெயர் கேட்டனர், பின்னர் என்னை தரையில் உட்கார உதவினர்.  அந்த சகோதரி எனக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பல விஷயங்கள் எனக்கு புரியவில்லை ஆனாலும் விசுவாசத்தோடு நான் கேட்டுக்கொண்டிருந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பரிசுத்த ஆவியானவர் என்னை தொட்டுகொண்டிருக்கிறார் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஜெபம் முடிந்த உடன் அனைவரும் எழுந்து நின்றனர், நானும் எவருடைய உதவியும் இல்லாமல் எழுந்து நின்றேன். வலியிருந்த என்னுடைய முட்டியை யாரோ எண்ணெய் தேய்த்து விட்டது போல உணர்ந்தேன்.

அதற்கு பின் நான் அவர்களிடம் சொன்னேன், எனக்கு கடந்த 18 வருடங்களாக முட்டி வலி இருக்கிறது என்று. ஹோமியோபதி, ஆயூர்வேதா, அலோபதி என எல்லா வகை சிகிச்சைகளியும் பயன்படுத்தி விட்டேன். என்னுடைய வீடு எக்ஸ்ரே மற்றும் மருந்துகளால் நிறம்பி உள்ளது. ஆனாலும் எனக்கு விடுதலை இல்லை. மருத்துவர் ஆலோசனை சொன்னார், என்னுடைய முட்டியை மாற்ற வேண்டும், ரூபாய் 500,000 த்தை தயார் செய்யவும் என்று.

எனக்காக மக்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அனைவரும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னை முற்றிலுமாக சுகமாக்கிவிட்டார். ஒரு நிமிட ஜெபத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்கினார், என்னால் நம்பவே முடிய வில்லை.

2-4களில் என்னுடைய காலில் சக்கரம் கட்டியிருப்பதுபோல நான ஓட ஆரம்பித்தேன். கர்த்தர் எனக்கு புது வாழ்வு தந்தார். நான் பூரண சுகமானேன், இப்படியாக என்னுடைய அறுவை சிகிச்சைக்கு தேவை இல்லாமல் போனது. நடக்கவோ, ஓடவோ, கீழே உட்காரவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

கர்த்தர் என்னை சுகப்படுத்தினார், மேலும் என்னை டேபிள் டென்னீஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்க செய்தார். மிகப்பெரிய அற்புதம் நடந்தது அன்று. கர்த்தர் வசனத்தின் மூலமாக என்னோடு பேசினார்.

அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

மாற்கு 5:34

பரிசுத்த ஆவியின் உதவியால் இந்த வார்த்தை என் வாழ்வில் உண்மையானதை என்னால் காண முடிந்தது.  நானும் கர்த்தருடைய உயிருள்ள வார்த்தைகளை வியாதிய்ஸ்தர்கள் மீது பேசினேன்.  ஜெபத்தின் வல்லமையை என்னால் உணர முடிந்தது.

ஒரு நிமிட ஜெபத்தை கர்த்தர் கேட்டு மிகப்பெரிய காரியங்களை கர்த்தர் செய்கிறார் அதனால் மற்றவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.

கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

எரே 17:14

இவ்வுலகில் நமக்கிருக்கும் அனைத்து வியாதிகளையும், துயரங்களை கர்த்தர் தன் மீது சுமந்து தீர்த்துவிட்டார். வலியிலும், தேவையிலும் இருப்பவருக்கு அவர் ஆறுதல் அளிக்கிறார்.

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

சங் 30:2

தேவன் நம்முடைய சரீர நலத்திற்கு மட்டும் அல்ல, நமது சமூக, பொருளாதார, மன, உணர்ச்சி, ஆன்மீக குணங்களுக்கும் கூட இருக்கிறார். அவருடைய உதவிக்காக நாம் அழ வேண்டும்.

2020 ஆம் ஆண்டு, லாக்டவுன் இருந்த நாட்களில் நான் “இயேசுவின் படை அணி” (AOJ) வில் சேர்ந்தேன். சுகமளித்தல் வரத்தின் பள்ளியில் பயிற்சிபெற்றபின், டாக்டர் ஆல்பர்ட் ஜோன்ஸ் மூலமாக சுகமாக்கும் பயிற்சி பள்ளியின் ஒருங்கிணைப்பாளராக நிமிக்கப்பட்டேன். அதுமட்டுமல்லாமல், ஆசிரியராகவும் மாறி பணியாற்றினேன். அதன்பின்னர் தேசிய ஒருங்கிணைப்பாளராக தேவன் என்னை நியமித்தார்,6 மாதமாக நான் பணிபுரிந்தேன். அதற்குபின்னர், தேசிய சுகமளித்தல் பள்ளியின் தலைவராக கர்த்தர் என்னை நியமித்தார்.

இந்த பயிற்சியை அனைத்து மாநிலங்களிலும் துவங்குவதற்கு தேவன் திறந்த வாசல்களை நமக்கு முன்பாக வைக்கிறார்.

என்னை சுகமாக்கிய கர்த்தருக்கு நான் நன்றி சொல்கிறேன். அதுமட்டுமல்லாது, அவர் எனக்கு சுகமளிக்கும் வரத்தை கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி அநேகருக்கு கர்த்தருடைய வல்லமையால் சுகமளிக்க முடிகிறது.

நீங்கள் உடலில் வலிமையாகவும், உள்ளத்தில் தைரியமாகவும் வலியில் பொறுமையாகவும் இருங்கள்.

நம்முடைய உடல் கர்த்தர் வாழும் தேவ ஆலயம் எனவே இதில் நோய் மற்றும் விரக்திக்கு இடம் இல்லை.

அனைவரும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படவும், பரிசுத்தமாக்கப்படுவார்களாக. உம்முடைய காயங்களால் நாங்கள் சுகமானோம் என்று இயேசுவே நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம். எல்லா மகிமையும் உமக்கே உண்டாகட்டும், ஆமேன்,

SOL. POONAM BATRA, AOJ

தானியேல் – II

நாள்:20-05-2022 – தேவ செய்தி

என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.

யோபு 19:15-17.

என்னுடைய சுவாசம் என் மனைவியினால் வெறுக்கப்படுகிறது, மேலும் என்னுடைய தாயின் வற்றிலிருந்து பிறந்தவர்களிடம் நான் கெஞ்ச வேண்டியுள்ளது.

இங்கு யோபு தன்னுடைய தற்போதைய நிலையை விளக்குகிறான். இவ்வுலகில் அநேக வயதான மூத்தவர்கள் இப்படிப்பட்ட நிலையில் தான் வாழ்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு சகோதரி, ஓய்வு பெற்றதிலிருந்து தனியாகத்தான் வசித்துவருகிறார். வாழ்நாள் முழுவதும் குடும்ப செலவிற்கு அவருடைய கணவன் அவருக்கு ஒரு பைசா கூட கொடுக்க வில்லை. அவர் எப்படி எங்கே தன் சம்பாத்தியத்தை செலவுசெய்தார் என்கிறுகூட மனைவிக்கு தெரியாது.

கணவன் மனைவி இருவருக்கு இடையில் இருக்கும் தவறான புரிதலின் காரணமாக அவர்களுடைய குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய மகள், பெற்றோர் இருவரையும் வெறுக்கிறாள். சில வேளைகளில் தாய் மகளை பார்க்கச் சென்றாலும் அவர்களை அவள் துரத்திவிடுகிறாள். பேரப்பிள்ளையோடு தனக்கு இருக்கும் அளவுகடந்த அன்பு இரண்டு நாள் தங்க வைக்கிறது. அப்பொழுதுகூட மகள் தாயை ஒரு அடிமையைவிட கேவலமாக நடத்துகிறாள்.

யோபு ஏன் தன்னுடைய வாழ்வில் இப்படிப்பட்ட மோசமான ஒரு நிலையில் இருந்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது அவனுக்காக வைக்கப்பட்ட பரீட்ச்சையாகும். இது போன்று நம் வாழ்வில் நடந்தால் நாம் ஏன் இது நடக்கிறது என்று கேட்ப்போம்.

யோபு நம் அனைவருக்கும் ஒரு மாதிரி. யோபுவின் காலத்தில்  மனிதர்கள் சம்பந்தப்பட்ட கர்த்தருடைய வழிகளை விளக்கிச்சொல்ல ஒருவரும் இல்லை.

ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்வில் நடக்கும் அனைத்தையும் நமக்குள் வாழும் இயேசு, பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு சொல்லிகொடுக்கிறார், வழிநடத்துகிறார்.

நமக்கு காதுகள் இருந்தால் கேட்க கடவோம்.

 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரே 17:5

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

எரே 17:7

நம்முடைய வாழ்வில் நமது நம்பிக்கையின் ஊற்றாக இருப்பவர் நம் தேவன் மட்டுமே. நம் வாழ்வில் நாம் காணும் இவ்வனைத்தும் ஒரு நாள், ஒரு நேரத்தில் நம்மை விட்டு விலகி போகலாம். குடும்பத்தில் பிறந்த குழந்தை எல்லாவற்றிற்கும் தன் பெற்றோரை நம்புகிறது. சமுதாயத்தில் அவன் பார்க்கும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மேலும் மற்றவர்களை அவன் சார்ந்து வாழ்கிறான்.

ஆனால் எந்த நேரத்திலும் வாழ்க்கையில், யாராலும் சொல்ல முடியாத நேரத்தில் மனிதர்கள் மீது அந்த குழந்தை வைத்த அனைத்து நம்பிக்கைகளும் உடைந்து போகும். அது நடப்பதற்கு முன்பாக அந்த குழந்தைக்கு தெரிய வேண்டிய உண்மை ஒன்று உள்ளது – எல்லா நம்பிக்கைக்கும் ஊற்றாகவும், எல்லாவற்றையும் வாழ்வில் நமக்கு கொடுக்கவல்லவராக இருப்பவர் கர்த்தர் மட்டுமே.  அதனுடைய பெற்றோரோ, நண்பர்களோ, உறவினர்களோ, படிப்பு, புத்திசாலித்தனம், செல்வங்கள், பதவி, மற்ற அனைத்துமே கர்த்தர் கொடுக்கும் ஒரு கொடையாகும். அவனுடைய வாழ்க்கைகூட கர்த்தர்கொடுத்ததால் அவன் கர்த்தருக்கு கடமைப் பட்டிருக்கிறான்.

பெற்றோரின் பராமரிப்பில் அவன் இருக்கும் அந்த 18 வயதிற்குள் மக்களின் மீதிருக்கும் அவனது நம்பிக்கையானது கர்த்தர் மேல் மாற நாம் சொல்லி கொடுக்க வேண்டும். இதைப் பற்றி அவர்களுக்கு தெளிவாக சொல்லி கொடுக்கப்பட வேண்டும்.  பெற்றோர்கள் இப்படி சொல்லி கொடுத்து வளர்த்த குழந்தைகள் மெதுவாகவும், சீராகவும், சரியான நேரத்தில் தங்கள் வாழ்வின் இலட்சியத்தை நிச்சயம் அடைகிறார்கள்.

ஜெபம்

அனைத்து ஆத்துமாக்களும் கர்த்தர் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பார்களாக, கர்த்தருடைய மகிமை நிறைந்த சிங்காசனம் அவரை நம்புகிறவர்களுக்கு ஒரு பாதுகாப்பான கோட்டையாக இருக்கிறது. கர்த்தருடைய திட்டத்திற்கும் கிருபைக்கும் முன்பாக நாம் எல்லாவற்றையும் எல்லாரையும் ஒப்புகொடுப்போம், ஆமேன்.

–Sr. Angelica AOJ