நாள் 23-05-2022 – தேவ செய்தி
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக் 5:15-16.

என்னுடைய சாட்சி
2013 ஆம் ஆண்டு, எங்களுடைய உறவினர் ஒருவர் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க எங்கள் வீட்டிற்கு வந்தனர். ஆச்சரியமான ஒரு விஷயத்தை அவர்கள் சொன்னார்கள், இப்போது நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கின்றோம், திருமணத்திற்கு ஒருநாள் முன் அந்நிய தேவதைகளுக்கு அல்ல மாறாக இயேசு கிறிஸ்துவிற்கு ஆராதனை வைத்திருக்கிறோம். நற்செய்தியைப் பற்றியும், அநேக சாட்சிகளையும் எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். எல்லாவற்றையும் ஆச்சரியத்தோடு நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். ஜெப நாள் அன்று நாங்கள் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றோம். அங்கு நடந்த உண்மையான ஆராதனை, ஜெபம் இவைகளை கண்டு என் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது. ஆராதனை முடிந்தபின் சிலர் தனிப்பட்ட முறையில் ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அனைவரும் அமர்த்தப்பட்டனர். என்னுடைய காலில் வலி இருப்பதால் என்னால் தரையில் உட்கார முடியாது என்று நான் சொன்னேன். என்னுடைய பெயர் கேட்டனர், பின்னர் என்னை தரையில் உட்கார உதவினர். அந்த சகோதரி எனக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பல விஷயங்கள் எனக்கு புரியவில்லை ஆனாலும் விசுவாசத்தோடு நான் கேட்டுக்கொண்டிருந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பரிசுத்த ஆவியானவர் என்னை தொட்டுகொண்டிருக்கிறார் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஜெபம் முடிந்த உடன் அனைவரும் எழுந்து நின்றனர், நானும் எவருடைய உதவியும் இல்லாமல் எழுந்து நின்றேன். வலியிருந்த என்னுடைய முட்டியை யாரோ எண்ணெய் தேய்த்து விட்டது போல உணர்ந்தேன்.
அதற்கு பின் நான் அவர்களிடம் சொன்னேன், எனக்கு கடந்த 18 வருடங்களாக முட்டி வலி இருக்கிறது என்று. ஹோமியோபதி, ஆயூர்வேதா, அலோபதி என எல்லா வகை சிகிச்சைகளியும் பயன்படுத்தி விட்டேன். என்னுடைய வீடு எக்ஸ்ரே மற்றும் மருந்துகளால் நிறம்பி உள்ளது. ஆனாலும் எனக்கு விடுதலை இல்லை. மருத்துவர் ஆலோசனை சொன்னார், என்னுடைய முட்டியை மாற்ற வேண்டும், ரூபாய் 500,000 த்தை தயார் செய்யவும் என்று.
எனக்காக மக்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அனைவரும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னை முற்றிலுமாக சுகமாக்கிவிட்டார். ஒரு நிமிட ஜெபத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்கினார், என்னால் நம்பவே முடிய வில்லை.
2-4களில் என்னுடைய காலில் சக்கரம் கட்டியிருப்பதுபோல நான ஓட ஆரம்பித்தேன். கர்த்தர் எனக்கு புது வாழ்வு தந்தார். நான் பூரண சுகமானேன், இப்படியாக என்னுடைய அறுவை சிகிச்சைக்கு தேவை இல்லாமல் போனது. நடக்கவோ, ஓடவோ, கீழே உட்காரவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
கர்த்தர் என்னை சுகப்படுத்தினார், மேலும் என்னை டேபிள் டென்னீஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்க செய்தார். மிகப்பெரிய அற்புதம் நடந்தது அன்று. கர்த்தர் வசனத்தின் மூலமாக என்னோடு பேசினார்.
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
மாற்கு 5:34
பரிசுத்த ஆவியின் உதவியால் இந்த வார்த்தை என் வாழ்வில் உண்மையானதை என்னால் காண முடிந்தது. நானும் கர்த்தருடைய உயிருள்ள வார்த்தைகளை வியாதிய்ஸ்தர்கள் மீது பேசினேன். ஜெபத்தின் வல்லமையை என்னால் உணர முடிந்தது.
ஒரு நிமிட ஜெபத்தை கர்த்தர் கேட்டு மிகப்பெரிய காரியங்களை கர்த்தர் செய்கிறார் அதனால் மற்றவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
எரே 17:14
இவ்வுலகில் நமக்கிருக்கும் அனைத்து வியாதிகளையும், துயரங்களை கர்த்தர் தன் மீது சுமந்து தீர்த்துவிட்டார். வலியிலும், தேவையிலும் இருப்பவருக்கு அவர் ஆறுதல் அளிக்கிறார்.
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
சங் 30:2
தேவன் நம்முடைய சரீர நலத்திற்கு மட்டும் அல்ல, நமது சமூக, பொருளாதார, மன, உணர்ச்சி, ஆன்மீக குணங்களுக்கும் கூட இருக்கிறார். அவருடைய உதவிக்காக நாம் அழ வேண்டும்.
2020 ஆம் ஆண்டு, லாக்டவுன் இருந்த நாட்களில் நான் “இயேசுவின் படை அணி” (AOJ) வில் சேர்ந்தேன். சுகமளித்தல் வரத்தின் பள்ளியில் பயிற்சிபெற்றபின், டாக்டர் ஆல்பர்ட் ஜோன்ஸ் மூலமாக சுகமாக்கும் பயிற்சி பள்ளியின் ஒருங்கிணைப்பாளராக நிமிக்கப்பட்டேன். அதுமட்டுமல்லாமல், ஆசிரியராகவும் மாறி பணியாற்றினேன். அதன்பின்னர் தேசிய ஒருங்கிணைப்பாளராக தேவன் என்னை நியமித்தார்,6 மாதமாக நான் பணிபுரிந்தேன். அதற்குபின்னர், தேசிய சுகமளித்தல் பள்ளியின் தலைவராக கர்த்தர் என்னை நியமித்தார்.
இந்த பயிற்சியை அனைத்து மாநிலங்களிலும் துவங்குவதற்கு தேவன் திறந்த வாசல்களை நமக்கு முன்பாக வைக்கிறார்.
என்னை சுகமாக்கிய கர்த்தருக்கு நான் நன்றி சொல்கிறேன். அதுமட்டுமல்லாது, அவர் எனக்கு சுகமளிக்கும் வரத்தை கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி அநேகருக்கு கர்த்தருடைய வல்லமையால் சுகமளிக்க முடிகிறது.
நீங்கள் உடலில் வலிமையாகவும், உள்ளத்தில் தைரியமாகவும் வலியில் பொறுமையாகவும் இருங்கள்.
நம்முடைய உடல் கர்த்தர் வாழும் தேவ ஆலயம் எனவே இதில் நோய் மற்றும் விரக்திக்கு இடம் இல்லை.
அனைவரும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படவும், பரிசுத்தமாக்கப்படுவார்களாக. உம்முடைய காயங்களால் நாங்கள் சுகமானோம் என்று இயேசுவே நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம். எல்லா மகிமையும் உமக்கே உண்டாகட்டும், ஆமேன்,
–SOL. POONAM BATRA, AOJ
