நாள்: 24-05-2022 – தேவ செய்தி
நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.
யாத் 23:22

இன்று ‘எதிரிகளுக்கு’ ஒரு வித்தியாசமான வரையறையை வேதத்தில் கண்டேன்.
எதிரிகள் கர்த்தரால் நமக்கு அனுப்பப்படும் தூதுவர்கள். மனிதர்களாகவோ, வியாதி, சுனாமி, வெள்ளம், தோல்வி, வேலையில்லாமை, மன உளைச்சல், பாகுபாடு, பஞ்சம், எதிர்ப்பு என அவர்கள் எந்த உருவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் மூலமாக கர்த்தர் நமக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். செய்தியை பெற்றுக்கொள்ளாமல் நாம் அதை எதிர்த்தால் நாம் தோல்வி அடைவோம். அது வேறு ரூபமாக கூட மாறும்.
வேதத்திலிருந்து இன்னும் அதிகமாக கற்ப்போம்.
ஆதாம் ஏவாளை தேவன் உருவாக்கியபின் அனைத்தும் அவனோடு சமாதானமாய் இருந்தது. கால நிலை, இயற்கை எல்லாமே அவனுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அவர்கள் பாவம் செய்தபின் அனைத்தும் அவர்களுக்கு எதிரானது. வெறுப்பு, காட்டிகொடுத்தல், குற்றம் சுமத்துதல், பொய், பயம், மறைந்துகொள்வது போன்றவை பாவத்தோடு வந்தது.
நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்போமானால் அவர் நமக்காக நம்முடைய எதிரிகளோடு யுத்தம் செய்து எல்லாவற்றையும் நம் வாழ்வில் சீராக்குவார்.
அதேவேளையில் அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்படியாவிட்டால் கர்த்தர் நமக்கு எதிராக எதிரிகளை எழுப்புவார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கர்த்தரே நம்முடைய எதிரியாக மாறிவிடுவார்.
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடையதூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார்.
எண் 22:22
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தது, மனிதகுலத்தின் மீது இருக்கும் முடிவில்லாத கர்த்தருடைய கோபத்தை நீக்கிவிட்டு நம்மை பிதாவோடு ஒப்புறவாக்கத்தான். கர்த்தருடைய கோபத்தை எப்படி தனிப்பது என்பதற்கான ஒரு உதாரணத்தை இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார்.
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
லூக் 23:34
பரலோக பிதாவகிய தேவன் இயேசுவின் இந்த ஜெபத்தை கேட்டார் மேலும் முழு மனித ஜாதியையும் தன்னோடு ஒப்புறவாக்கிக் கொண்டார்.
நம்முடைய நண்பர்களிலிருந்து கூட நாம் எதிரிகளை சம்பாதிக்க முடியும் என்ற முடிவுக்கு நாம் இங்கு வருகிறோம். இது கர்த்தருடைய சித்தமும் கூட. நம்முடைய எதிரிகளை பிதாவோடு ஒப்புறவாக்குகிற மிகப்பெரிய பொருப்பு நம்மிடம் உள்ளது. இதை நாம் எப்படி செய்யலாம்.
எதிரியானவன், கர்த்தரால் நம்மிடம் அனுப்பப்பட்டிருக்கிறான் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
- எதிரி கர்த்தரிடமிருந்து என்ன செய்தியை கொண்டுவருகிறான் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
- நம்மை தாழ்த்தி அதை ஏற்றுக்கொள்வோம். நம்முடைய பாவங்களுக்காக மன்னிப்பு கேட்ப்போம்.
- ஒரு உண்மையான தேடுதலை மேற்கொண்டு எங்கு, எப்படி நான் தவறு செய்தேன் என்பதை கண்டுபிடிப்போம். பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுவோம்.
நம்முடைய எதிரி நம் மீது குற்றம் சாட்டியிருக்கலாம். அதுதான் கர்த்தரின் செய்தியாக இருக்கலாம்.
நீங்கள் ஒருவருக்கு பணம் கடனாக கொடுத்திருக்கிறீர்கள் அவரோ பணத்தை திரும்ப தராமல் உங்களை ஏமாற்றிவிட்டார். அவர் உங்களுடைய எதிரியாகிவிட்டார்.
இதில் கர்த்தர் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன?
- பணத்தை திரும்பி கொடுக்க ஆவலாய் இருக்கலாம் ஆனால் கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லை. பணத்தை திருப்பித்தர கர்த்தர் அவரை அனுமதிக்க வில்லை. நம்முடைய முன்னோர்கள் யாரிடமிருந்தாவது பணத்தை திருடியிருக்கலாம், அந்த பணத்தை தேவன் நம் மூலமாக திரும்ப கொடுக்க வைக்கலாம். இப்போழுது நம் எதிரியோடு நாம் கோபம் கொள்வதை தவிற்த்து, அதற்காக கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் சாபத்திலிருந்து வெளிவர இது நமக்கு உதவியது.
- நம்முடைய பதவி உயர்வுக்காக, , நாம் கீழ்கண்ட இந்த வசனத்தோடு ஒத்துபோகிறோமா என்று கர்த்தர் கொடுக்கும் ஒரு சோதனையாகவும் இருக்கலாம்,
உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
லூக் 6:30
Sr. Angelica AOJ
