நாள் 01-06-2022 – தேவ செய்தி
அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
லூக் 2:28-32

எருசலேமில் சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்.அவர் நீதியும், தேவபக்தியும் உள்ளவனாயும், பரிசுத்த ஆவி அவன் மேல் இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. நம்முடைய வாழ்வு, குழந்தைகள், குடும்பம் மற்றும் சூழ்நிலைகளை குறித்து தேவன் நமக்கு சில வாக்குறுதிகளை கொடுத்திருக்கலாம்
சிமியோன் பொருமையாக காத்திருந்து அதை தன் கைகளால் தொட்டது போல நாமும் அந்த வாக்குறுதிகளை தொடுமாறு காத்திருக்கிறோமா?
அநேக வேளைகளில் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நாம் கைவிட்டு விடுகிறோம், ஏனென்றால் இதுமுழுமையாக நீண்ட நேரம் எடுத்திருக்கலாம், அல்லது நம்மை சுற்றிஉள்ள சூழ்நிலை அதற்கு எதிராக இருக்கலாம், அல்லது மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பி இருக்கலாம்.
என்னுடைய சிறிய மகன் 12 வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது கர்த்தர் எனக்கு ஒரு வாக்குறுதயை கொடுத்தார் – தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்காக என் மகன் வெளிநாட்டிற்கு செல்வான். அவன் 12 வகுப்பில் இருந்தபோது அவன் வெளிநாட்டிற்கு செல்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவன் பயோடெக் பொறியாளாரக படித்துக்கொண்டிருந்தபோது சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் என்னுடைய வேலையும் போனது, அது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையாகும். ஆனாலும் கர்த்தருடைய வாக்குறுதியின் மீது விசுவாசம் வைக்க எனக்கு கர்த்தர் கிருபை கொடுத்திருந்தார். நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும் சில காரியங்களை செய்ய ஆரம்பித்தேன். அங்குதான் கர்த்தர் தன்னுடைய வல்லமையை வெளிபடுத்துகிறார். பல்வேறு பிரச்சனைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கர்த்தருடைய கிருபையால் என் மகன் அவனுடைய மேற்படிப்பிற்காக கனடா சென்றான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராக இருந்தார்.
குழந்தையை துணியில் சுற்றப்பட்டு அதன் தாயின் கையில் இருந்ததை கண்ட சிமியோனுக்கு இது ஒரு கனவாக இருந்திருக்கலாம். குழந்தையை தன் கைகளில் ஏந்தினான் கர்த்தரை ஸ்தோத்தரித்தான், கர்த்தர் வாக்களித்ததை என் கண்கள் கண்டது என்றான். அப்போஸ்தலர் நடபடிக்கை, 27 ஆம் அதிகாரத்தில் பவுலின் பயணம் நமக்கு ஞாபகம் இருக்கும், புயல் காற்று மற்றும் கப்பல் உடைந்தது, எல்லா நம்பிக்கையும் இழந்தபோதும் கூட தேவதூதன் பவுலுக்கு என்ன சொன்னான், நீ சாகமாட்டாய், இராயனுக்கு முன்பாக நீ நிற்க வேண்டும் என அவருக்கு நம்பிக்கை கொடுத்தான். அப்போ 27:24 -பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். இவ்வாறு பவுலோடு பயணம் செய்த 276 பேரும் கப்பல் சேதத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
உங்களுடைய வாழ்விலும் ஒரு மோசமான சூழ்நிலை வந்தால், கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்துங்கள். கப்பலே உடைந்தாலும் உங்களுடைய உயிருக்கு எந்த கேடும் நேராது.
உங்களுடைய வாழ்வில் கர்த்தர் வாக்குறுதியை கொடுத்திருந்தால், அதை பற்றிக்கொள்ளுங்கள், அதை பாருங்கள், அதற்கு எதிராக சூழ்நிலைகள் இருந்தாலும், நிச்சயமாக கர்த்தருடைய நேரத்தில் அது நிறைவேறும்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய கடைசி வார்த்தைவரை நீர் உண்மையாய் இருக்கின்றீர், நாங்கள் பொருமையாக காத்திருக்கவும், உம்மில் விசுவாசம் வைக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். சிமியோனைப் போல பரிசுத்த ஆவியானவர் எங்களுடைய வாக்குறுதியில் எங்களை வழிநடத்துவாராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,
ஆமேன்.
Sol.Lalitha Menon
