நாள்: 02-06-2022 – தேவ செய்தி
உங்களுடைய நிலம் மற்றும் மக்களுக்காக ஜெபியுங்கள்
- நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
- நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
- நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
1திமோ 2:1-3.

சாட்சி
சென்னையில் உள்ள மணப்பாக்கம் என்ற இடத்தில் நான் வசித்து வருகிறேன். சமீபத்தில்தான் நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம். எங்களுடைய வீட்டிற்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில் 5 அடி உயரத்திற்கு குப்பை கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இப்படியே பல ஆண்டுகள் இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த குப்பை மேட்டின் மீது என் கைகளை உயர்த்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்தேன், இந்த குப்பை மேடு உடனே காலி செய்யப்படுவதாக, இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும், யாரு இங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்று. ஒரு மாதத்திற்குள் மாநகராட்சியினர் வந்து குப்பைகளை அகற்றினர். தேவன் என்னுடய ஜெபத்தை கேட்டார் என்ற் மகிழ்ச்சி என் இருதயத்தை நிறப்பியது. அடுத்த இரண்டு மாதத்தில் கபடி விளையாடும் மைதானமாக அது மாற்றப்பட்டது. இந்த பகுதிகளில் இருக்கு இளைஞர்கள் தினமும் கபடி விளையாட இங்கு வருகின்றனர். என்னுடைய விண்ணப்பத்தை தேவன் கேட்டு இந்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தும் இடமாக மாற்றிய தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்
2நாளா 7:14.
நாம் பாரத்தோடு அவருடைய முகத்தை தேடினால் அவர் நம்முடைய நிலத்தை சுகமாக்குவார், மக்கள் மீது அவருடைய கிருபையை பொழிவார், மேலும் நாம் வாழும் இடத்தில் அமைதியை தேவன் கொண்டுவருவார்.
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
1பேது 2:9.
கர்த்தர் நம்மை ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று அழைக்கிறார். திறப்பில் நின்று மக்களுக்காக ஜெபிப்பதுதான் ஒரு ஆசாரியனின் வேலை. ராஜரீகமான ஆசாரியர்களாகிய நாமும் மக்கள்ளுக்காகவும், நாம் வழும் இடத்திற்காகவு, நாட்டிற்காகவும் ஜெபிப்பது நமது கடமையாகும்.
சமீப காலமாக எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. போர், நோய், மற்றும் துயரங்களைப் பற்றி கேள்விப்படுகிறோம்.
இதற்காக திறப்பில் நின்று ஜெபிப்பது நமது கடமை அல்லவா?
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, அனைத்து மக்களும் உம்முடைய கிருபை மற்றும் அமைதியால் நிறப்பப்படுவார்களாக. ஆட்சிசெய்பவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஞானத்தால் நிறப்பப்படுவார்களாக. கர்த்தருடைய இரக்கம் மற்றும் கருணை மக்களுடைய இருதயங்களில் ஊற்றப்படுவதாக, இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம்,
ஆமேன்.
Sol. Camilia Theodore, Chennai.
