தானியேல் –II – தேவ செய்தி

நாள் 17-10-2022

குடும்ப ஜெபம்

 ” நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.”  யோசுவா 24 : 15

நான் திருமணம் செய்தபோது போதகர் முன்னிலையில் என்னுடைய திருமணத்தை பதிவு செய்த வேளையில், நீங்கள் கண்டிப்பாக தினம்தோறும் குடும்ப ஜெபம் செய்யவேண்டும் என்று கூறினார். இன்றைய கிறிஸ்த்துவர்கள் மத்தியில் நான் ஏன் குடும்ப ஜெபம் பண்ண வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. ஆண்டவர் வேதாகமம் மூலமாக நான் ஏன் குடும்பமாக கூடி அவரை ஆராதிக்கவும் ஜெபிக்கவும் வேண்டும் என்று நமக்கு கற்றுத்தருகிறார்

” கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப்பின்வரும் தன் வீட்டாருக்கும் : நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து , கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான். ” ஆதியாகமம் 18 : 19.

கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தை கொடுத்து விட்டு நிச்சயமாக ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்கு கர்த்தர் முன்பாக நீதியாய் நடப்பதை அந்த வாக்குத்தம் நிறைவேற சொல்லிக்கொடுப்பான்  என்று நிச்சயித்து இருந்தார்.ஆபிரகாம் இதை எப்படி செய்ந்திருப்பார். குடுமபமாக அமர்ந்து கர்த்தரை பற்றி கற்றுக்கொடுத்து இருப்பார்

ஆதியாகமம் 25 : 22 ல்  ஈசாக்  ரெபேக்காளை திருமண செய்த போது அவளுக்கு கர்த்தரை குறித்த தெளிவு இல்லை. ஆனால் அவள் பிரசவத்தின் போது ஈசாக்கின்னிடத்தில் அல்ல ஆண்டவரிடத்தில் விசாரிக்கிறாள். ஈசாக் கர்த்தரை பற்றி சொல்லி கொடுத்ததும் அவர்கள் கர்த்தருடைய சமூகத்தில் செலவிட்ட நேரம் ரெபேக்காக்களுக்கு பிரசவத்தை குறித்த பயத்தை கர்த்தரிடத்தில் கொண்டு போக வைத்தது.

உபாகமம் 6 : 8

” நான் உனக்கு கட்டளையிடுகிற வார்த்தைகளை, உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும் வழியில் நடக்கிறபோதும் , படுத்துக்கொள்ளுகிறபோதும்,எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்து பேசி , அவைகளை உன்கையின்மேல் அடையாளமாகக் கட்டிக் கொள்வாயாக, அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக் குறியாய் இருக்கக்கடவது. “

மோசேயும்கூட தன்மக்களுக்கு கட்டளையிடும்போது , உங்கள் குழந்தைகள் வீட்டிலிருக்கும் போதும், நடக்கும்போதும் எழுந்திருக்கும் போதும் ,படுக்கும்போதும் கர்த்தரின் கற்பனைகளை கற்றுக் கொடுங்கள் என்று சொன்னார். நாமும் நமது குழந்தைகள் சிறுவயதிலிருந்தே , கர்த்தரின் வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும்படியாக சொல்லவேண்டும். அதற்கு சிறந்தவழி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குடும்பமாக ஜெபிப்பதுதான்.

லேவியராகமம் 23 ம் அதிகாரத்தில் , ஏழு பண்டிகைகளை குடும்பமாக சபையாக ஆசாரிக்க சொல்கிறார் என்பதை பார்க்கிறோம்.. குழந்தைகளுக்கும், அடுத்த தலைமுறைக்கும் இறைவார்த்தையைக் கற்றுக் கொடுப்பதே இவ்விழாக்களுக்கு முக்கியக் காரணம். பாஸ்கா பண்டிகையை கொண்டாடும் போது, ​​ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தை புளிப்பில்லாத அப்பத்தை உண்ணும் போது, ​​ அப்பாவிடம் இந்த புளிப்பில்லாத அப்பம் சுவையற்றது. இதை  ஏன் சாப்பிடுகிறோம் என்று கேட்கும் போது நம் முன்னோர்கள் அடிமைகளாக இருந்தபோது எகிப்தில், ஒரே இரவில் கர்த்தர் அடிமை நாட்டிலிருந்து அவர்களை மீட்டு கொண்டு வந்தார்  , .அதைக் கொண்டாடவும் அதை நினைவுகூரவும் நாம்  புளிப்பில்லாத அப்பம்  சாப்பிடுகிறோம், ஏனென்றால் நம் முன்னோர்கள் அன்று இந்த புளிப்பில்லாத அப்பம் சாப்பிட்டார்கள். கூடார பண்டிகையில் குழந்தை கொண்டாடும் போது குழந்தை அப்பாவிடம் நாம் ஏன் இந்த கூடாரங்களில் வசிக்க வேண்டும் என்று கேட்கும்போது, நம் வீட்டில் வாழாமல், ஒரு காலத்தில் நாம் வீடில்லாமல் வனாந்தரத்தில் இருந்தோம், கர்த்தர் நமக்கு காட்டாத வீட்டையும் நடாத விருட்சத்தையும் கொடுத்தார் அதை நினைவு கூர்ந்து இந்த கூடாரங்களில் இருந்து நாம் கர்த்தரை மகிமை படுத்துகிறோம். நம் குடும்ப ஜெபத்தில் கர்த்தர் செய்த அதிசயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்.

அப்போஸ்தலர் 18 ம் அதிகாரத்தில் அக்வில்லா, பிரிசில்லா என்ற தம்பதியர் , தேவனிடம் விசுவாசம் கொண்டு அப்போஸ்தலராகிய பவுலின் ஊழியத்திற்கு குடும்பமாக ஜெபத்தோடு துணைநின்றார்கள்.

2 திமோத்தேயு 2 : 5 ல் அப்போஸ்தலராகிய பவுல் திமோத்தேயுவின் தாய் மற்றும் அவரது பாட்டியினுடைய விசுவாசத்தை பரிசோதித்து அவர்கள் அதில் உறுதியாயிருந்து திமோத்தேயுவையும் தங்களுடைய குடும்ப ஜெபத்தின் வழியாகவே  விசுவாசத்திலே வளர்த்தார்கள் என்பதை அறிந்தார்.

எனக்கு திருமணம் முடிந்தபோது என் மனைவியினுடைய ஆவிக்குரிய வாழ்வைப்பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் குடும்பமாக ஜெபிக்க ஆரம்பித்தபோது, ஒருநாள் தேவன் ஒரு தரிசனத்தை காண்பித்ததாக என் மனைவி என்னிடம் கூறினார். முதலில் அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு அந்த வெளிப்பாடு என்னைக் குறித்தும் என்னுடைய பயத்தைக் குறித்தும்தான் என்பதை தேவன் வெளிப்படுத்தினார். இப்போது நிறைய விஷயங்களை என் மனைவியின் வழியாக தரிசனத்தின் மூலம் தேவன் வெளிப்படுத்துகிறார். நாம் குடும்பமாக ஜெபிக்கும் போது நம்முடைய அன்றாட போராட்டங்கள் மாறுகிறது, குடும்பத்தில் வருகிற வாக்குவாதங்கள் தீர்கிறது, நம்முடைய குழைந்தைகள் ஆண்டவருடைய வார்த்தையை கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கர்த்தர் எப்படி குடும்பத்தை வழிநடத்தி ஆசீர்வதிக்கிறார் என்பதை பார்க்கிறார்கள்

எனவே நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். குடும்ப ஜெபத்தை தவறாது கடைபிடிப்போம்

Sol. Leo

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 20-07-2022

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஏசாயா 9:6.

கர்த்தத்துவத்தை தன் தோள் மீது சுமந்து கர்த்தருக்கு மட்டுமே உரித்தான பெயர்களால் அழைக்கப்படும் வருங்காலக் குழந்தையைப் பற்றிய தீர்க்கதரிசனம் இது. இயேசுவைப் பற்றிய பிரசித்தமான பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் ஒன்று.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் – கிறிஸ்து வந்ததன் நோக்கம் நமக்காகத்தான். இது மேசியாவின் மனித நேயத்தை காட்டுகிறது.

ஒரு மனிதனாக குழந்தை வடிவில் அவர் வரவேண்டி இருந்தது,  அப்போதுதான் மனிதர்கள் சந்திக்கும் எல்லா சோதனைகளை அவரும் சந்தித்தபிறகும் பரிசுத்தமாக இருக்க முடியும்.

எபி 4:15 சொல்லுகிறது நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – அனாதி காலமாக கர்த்தர் நமக்கு கொடுக்க  திட்டமிட்டது அவருடைய குமாரனாகிய இயேசுவைத்தான், இயேசு அவருடைய குமாரனாகிய நித்தியமாக இருந்தார். ‘மகன்’ எனக்கூடிய வார்த்தை பிதா, குமாரன் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவை வெளிப்படுத்துகிறது. மூவொடு தேவனில் குமாரனாக அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் இருக்கிறார்.

பிலி 2:6-7 – அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பாவத்தையும் சாவையும் வெல்லுவதற்காக அவர் பிதாவின் குமாரனாக, மனித உடலில் வந்தார்.

மத் 14:33 – அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.

மத் 16:16 – சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

“தோள்கள்” – அவருடைய தலைமைத்துவத்தை உறுதிபடுத்துகிறது.

அவர் இயேசு ராஜாவாக ஆட்சி செய்வார், உலகத்தின் ராஜாவாக.

இவ்வுலகத்தின் முழு அரசாட்சியும் அவருடைய தோளின் மேல் உள்ளது. கிறிஸ்துவால் ஆதரிக்கப்பட்டு, கர்த்தருடைய தெய்வீக யோசனையால் நிறுவப்பட்டிருந்தால் அது நிரந்தரமானதாக்வும், முழுமையானாரசாங்கமாகவும் இருக்கும். வெற்றி என்பது தனி மனிதனை பொறுத்தோ அல்லது கட்சியைப் பொறுத்தோ இல்லை. இந்த வசனத்தின்படி எதிர்காலத்தில் எல்லா அரசாங்கங்கள் மற்றும் ராஜ்யங்கள் மீது ஆட்சி செய்வார் என்பதை காட்டுகிறது. தானியேல் 2:44 சொல்லுகிறது, அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; சக 14:9 – அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். இந்த அரசில் குழப்பம் இருக்காது, ஏனென்றால் கிறிஸ்து சிறந்த ஆலோசகர். ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஆலோசனை குழுவை வைப்பார்.  அவர் கர்த்தர், உண்மையின் ஊற்று. அவர் ஆட்சி செய்யும் போது அவரே எல்லாமுமாய் இருப்பார், அரசியில் குழப்பங்கள் ஏதும் வராது. வேதம் சொல்லுகிறது,  1கொரி 14:33 – தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; அவர் அனைத்தையும் முறைப்படி செய்யும் தேவன். அவரிடம் தங்களை ஒப்புகொடுக்கும் குழப்பமான வாழ்க்கையை அவர் ஒழுங்கமைக்கிறார். அவருக்கு செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை.  அவருடைய ராஜ்யத்தில் முரண்பாடுகள் இல்லை. அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும்  கர்த்தரிடமிருந்து  அமைதியை கொடுக்கிறார். (ரோம 1:7).

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே  பரலோகத்தில் உம்முடைய  ராஜ்யம் இருப்பதுபோல இந்த பூமியிலும் வருவதற்காகவும், உம்முடைய ராஜ்யம் எல்லா ராஜ்யங்கள் மற்றும் அரசாங்கங்கள் மீது இருப்பதற்காகவும்  நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமேன்.

SR.ANGELICA, AOJ

தானியேல் – II – தேவ செய்தி

நாள் – 01-07-2022

அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். யோவா 8:8

நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் நாம் நல்லவர்களாக இல்லா விட்டாலும் நல்லவர்கள் போலவும், ஒரு குறைகூடா இல்லாதவர்கள் போலவும்   மற்றவர்களுக்கு முன்பாக காட்டியிருக்கிறோம். நாம் எப்போதாவது வேலை கேட்டு எழுதப்பட்டிருக்கும் தவறான விண்ணப்பத்தை பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை.  இயேசு ஒலிவ மலைமீது ஏறினார். அவர் தேவாலயத்திற்கு வந்தார், எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து வந்தார்கள் அப்போது அவர்களுக்கு அவர் போதித்தார். அப்போது பரிசேயர்களும் சதுசேயர்களும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். சந்தேகத்தின் பேரில் அல்ல விபச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது அவள் அகப்பட்டாள், அப்போது போதகரே இதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். இயேசு குனிந்து தரையிலே தன்னுடைய விரல்களால் எழுதினார், மேலும் கேட்காதவர் போல அமைதியாக இருந்தார்.  இயேசு எழுதினார் என்று இங்கு மட்டும் தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சொன்னார், உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர்கள் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்.

ஒவ்வொருவராக பெரியவர் முதல் சிறியவர் வரை அங்கிருந்து செல்லதுவங்கினர். இயேசு மட்டும் தனியாக இருந்தார். தலையை உயர்த்தி, உன் மீது குற்றம் சுமத்தியவர்கள் எங்கே? என்றார். அவள் பதில் சொன்னாள், ‘ஒருவரும் இல்லை” என்று. நானும் உன்னை தீர்பிடேன், அமைதியாக போ, பாவம் செய்யாதே. அவருடைய கட்டளையை விட அவரது இரக்கம் மேன்மையானது. விரும்புகிறவர்கள் மீது அவர் இரக்கம் காட்டுகிறார், யார் மீது உருக்கமாய் இருக்க விரும்புகிறாரோ அவர் மீது உருக்கமாய் இருக்கிறார். இதனால்தான் நாம் இன்று இங்கு இருக்கிறோம், ஏனென்றால் நம்முடைய அக்கிரமங்களை அவர் கண்டுகொள்ளவில்லை.

யோவா 9:6 – இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:

இயேசு சென்றுகொண்டிருக்கையில், பிறவியிலிருந்தே குருடனாய் பிறந்த ஒருவனை சந்திக்கிறார். சீடர்கள் ஏன் இவன் குருடனாய் பிறந்தான் அதற்கு காரணம் யார் என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். இது அவனுடைய பாவத்தின் காரணமாகவா அல்லது பரம்பரை சாபமா என்று விவாதிக்கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றையும் தேவன் ஒதுக்கிவிடுகிறார், இது கர்த்தருடைய மகிமைக்காக என்று சொல்கிறார். தரையில் எச்சில் துப்பி கையால் அதை குழைத்து குருடனின் கண்ணின் மீது பூசினார். அவன் பார்வை பெற்றான். இயேசு கிறிஸது மட்டுமே நாம் இருக்கும் இடத்திற்கு குனிந்து மண்ணிலிருந்து நம்மை தூக்குவார். பரிசுத்த தேவன், உன்னதமான இந்த பிரபஞ்சத்தின் தேவன், நமக்காக அவருடைய கைகளை அழுக்கு படுத்துவதைப்பற்றி கவலைப் படுவதில்லை.  ஆதி 2:7 – மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினார், மற்ற அனைத்தையும் உண்டாகட்டும் என்று கட்டளை மாத்திரம் கொடுத்தார். அவ்வளவாய் அவர் நம்மை அன்பு செய்கிறார்.

மற்றவர்கள் தவறு செய்தாலோ,  கஷ்டத்திலிருந்தாலோ, உடனே நாம் நியாயாதிபதியின் உடையை போட்டுக்கொண்டுதான் நாம் அவர்களைப்  பார்க்கிறோம். நாம் அலசி ஆராய்ந்து உடனே கற்பனைக்கேற்ற ஒரு ரிப்போர்டை நாம் தயாரித்துக்கொள்கிறோம்.  இயேசு கிறிஸ்துவின் இதயம், அவரின் கண்கள், அவரின் கைகளாக நாம் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஒருவன் கர்த்தருடைய கரத்திலிருந்தால் அவனுடைய எதிர்காலம் இப்படி யிருக்கும் என்று நம்மால் யோசிக்க வேண்டும்.

அவருடைய அன்பை நம்மில் அனுபவித்தால், அவர்கள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளப்பட்டால், மற்றவற்றை இயேசு செய்வார்.   தேவன் செய்ததுபோல, நம்முடைய கைகளை மண்ணில் வைத்து அழுக்குபடிய செய்யாவிட்டால் நம்மை காயப்படுத்தும், இழந்துபோன மற்றும் மரித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே,  இந்த உலகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எங்களுக்கு உம்மைபோல மனமும், இருதயமும், கைகளும் எங்களுக்கு தரவேண்டும் என்று ஜெபிக்கிறோம், இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தில் ஆமேன்..

Sol. Lalitha Menon

தானியேல் –II –  தேவ செய்தி

நாள்: 2,ஜூலை 2022.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசா 53:5

அன்பான, இரக்கம் நிறைந்த தேவன் ஒருவர் நமக்கு உண்டு. நாம் அவரை கேட்பதற்கு முன் நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீது நம்பிக்கை வைத்து, நம்முடைய எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும், நீதி 3:5,6.

உலகத்தின் சிந்தைகள் சில வேளைகளில் கர்த்தரிடம் நமக்கு இருக்கும் உறவை துண்டிக்கிறது.  அதனால் நாம் சுயத்தின் மீது சாய்ந்திருக்கிறோம், மேலும் உலக பிரகாரமான பொருட்கள் நம் வாழ்வை கட்டுப்படுத்த துவங்குகின்றன. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதி 10:22.

ஒரு நாள் திடீரென மிகவும் மோசமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டேன். அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது ஆனால் பலன் ஒன்றும் இல்லை. வாழ்நாள் முழுவதும் நான் அலர்ஜிக்கான மருந்துகளை எடுக்க வேண்டி வரும் என எனது மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் புதிய மருந்துகளை, ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறித்தினர். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் எந்து தாயாரும் சகோதரியும் நம்பிக்கை இழக்கவில்லை. விடாமல் தொடர்ந்து எனக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பலனாக ஒரு நாள் நான் அதிசயமான முறையில் சுகமானேன், தினமும் மருந்து எடுக்க தேவை ஏற்பட வில்லை. அந்த வியாதி மீண்டும் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றும் ஆனால் ஓரிரு நாட்கள் மருந்து உட்கொண்டால் போதும்.

ஆனாலும் இயேசு கிறிஸ்து என் வாழ்வில் நிகழ்த்திய இந்த அற்புதத்தை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அதன்பின் என்னுடைய சகோதரியின் உந்துதலால்  நான் WB நடத்தப்படும் காலை ஆராதனையில் பங்கு கொண்டேன். இது ஒரு புது அனுபவமாக இருந்தது, என்னை முற்றிலும் மாற்றிவிட்டது.

கர்த்தர் என்னை சுகமாக்கிவிட்டார் ஆனால் நான் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் காத்திருந்தார். அதை நான் ஏற்றுக்கொண்டு முழுமையாக சுகமாக அவரை கேட்க வேண்ட்டும் என அவர் விரும்பினார்.

என்னுடைய முழுமையான விசுவாசம் மற்றும்  கர்த்தருக்கு என்னை ஒப்புகொடுத்தன் மூலம் நான் சுகமானேன். இயேசு கிறிஸ்து மீண்டும் என் வாழ்வில் அற்புதத்தை நிகழ்த்தினார், என்னை முழுவதும் சுகமாக்கினார். திடீரென தோன்றும் அலர்ஜிகான அறிகுறிகள் முற்றிலும் நின்றுவிட்டது. இது முழுவதுமாக என்னை தாழ்த்திய ஒரு அனுபவமாக இருந்தாலும் தேவனால் நான் உயர்த்தப்பட்டேன். இன்றைய அறிவியலின் வரம்புகளை அது எனக்கு உணர்த்தியதால் நான் தாழ்த்தப்பட்டேன், என் நம்பிக்கை உயர்ந்தது.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசா 41:10.

அவர் நம்மிடம் கேட்ப்பது ஒன்று மட்டும்தான் அது அவர் மீது நாம் வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கை மற்றும் நம்மை அவரிடம் ஒப்புகொடுப்பதுதான்.

ஜெபம்

தேவனே, உம்முடைய சித்தத்திற்கு முழுமையாக எங்களை ஒப்புகொடுக்கவும் எங்களுடைய வாழ்க்கையை முழுவதும் உம்மிடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் எங்களை திடப்படுத்தும், மற்றும் உதவி செய்யும்.  ஆமேன்.

SOL.RUMNA GOMES, AOJ

தானியேல் –II – தேவ செய்தி

நாள் – 20/6/22

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்குவதற்காக கர்த்தர் மனஸ்தாப பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனம் ஆயிருந்தது இருந்தது.

 ஆதி 6:6

நீண்ட துன்பம் பரிசுத்த ஆவியானவரின் கனிகளில் ஒன்றாய் இருக்கிறது.

ஆவியின் கனியோ அன்பு, சமாதானம் சந்தோஷம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிபட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

கலாத்தியர் 5: 22, 23

நீடிய துன்பம் எப்படி ஒரு பரிசுத்த ஆவியானவரின் கனியாக இருக்கும் என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டிருந்தேன்.

இந்தக் காரியம் ஏதேன் தோட்டத்தில் பார்க்கிறோம் அப்பொழுது ஆதாம் ஏவாள் பாவம் செய்தார்களோ அப்பொழுதிலிருந்து தொடங்கி நோவாவின் காலத்தில் கடைசியாக தேவன் சொன்னது

ஆதியாகமம் 6: 3

அப்பொழுது கர்த்தர் என் ஆவி என்றைக்கும் மனுஷனுடைய போராடுவதில்லை என்றார். தேவன் அவருடைய ஜனங்கள் எப்பொழுது பாவ சுபாவம் உடையவர்களாகவும் அவரை எதிர்த்து நிற்க ஆளாகவும் இருக்கிறார் என்கிறார்கள் என்று அறிந்து அவருக்கு அவர்களுக்காக தூக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவரை எடுக்கப்படுகிற அவர்களாகவே மனிதன் ஆதிமுதல் எப்பொழுதும் காணப்படுகிறான். தேவன் தம்முடைய ஜனத்தின் அன்பிற்காகவும் அவர்களுடைய மனம் திரும்புதல் அழகாகவும் நீண்டகாலமாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆதாம் தொடங்கி நோவா காலம் வரைக்கும் தம் பிள்ளைகள் மனம் திருந்த திரும்பவில்லை என்று ஏமாற்றத்துடன் காத்துக்கொண்டிருந்தார். உலகத்தை சுற்றிப் எதற்காக தேவன் 6 நான் எடுத்துக்கொண்டார் என்று பார்க்கிறோம் ஆனால் பெருவெள்ளம் பூமியைவிட அழிப்பதற்காக நாற்பதுநாள் இரவும் பகலும் எடுத்துக்கொண்டார் மற்றும் அந்த தண்ணீர் வற்ற அதற்காக 150 நாட்கள் தேவையாக இருந்தது. தேவன் இதை ஒரு நாளில் செய்திருக்க வேண்டும் ஆனால் அவர் நீண்ட காலம் துன்பப்படும் படி தெரிந்து கொண்டார். அவருடைய துன்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். சிலுவையின் மரத்துண்டு மற்றும் இன்னும் அவர் பிறந்த உடனே நமக்காக உன்னுடைய தனது மகளுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். யோவான் 3 : 16

தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளின் போது நம்முடைய பாவங்களுக்காக துன்பப்பட்டார் சிலுவையில் அதை ஜெயமாக மாற்றினார்.

ரோமர் 8 32

தம்முடைய சொந்த குமாரன் என்று பாராமல் நம் எல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவருடைய கூட மற்ற எல்லாவற்றையும் அருள் ஆதரிப்பது எப்படி?

யாக்கோபு 1 :2,

என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது,

1 கொரிந்தியர் 10 : 13

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் இது வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவர் ஆக இருக்கிறார் உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்க படுவதற்கு அவருக்கு இடம் கொடாமல், சோதனையை தாங்க தக்கதாக சோதனை யோடு கூட அதற்கு தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

2 பேதுரு 3 : 9

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிற படி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை குறித்து தாமதமாய் இராமல், ஒவ்வொருவரும் கெட்டுப்போகாமல்,  எல்லோரும் மனம் திரும்ப வேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமை வல்லவராயிருக்கிறார்.

நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நாள் முதல் ஒவ்வொரு விசுவாசிகளும் போல எனக்கும் பல துன்பங்கள் நேர் இட்டனர். உடன் சென்ற சபையிலே என்னை மன ரீதியாகவும் வெளியே அங்கமாகவும் என்னை துன்பப்படுகிறார்கள். தேவன் எல்லாவற்றையும் சேர்க்கவும் அவர்களை மன்னிக்கவும் கிருபை செய்தார்.

ஜெபம்

ஆண்டவரே எங்களுக்கு உம்முடைய கிருபை தாரும் இந்தத் துன்பத்தை பொறுமையோடு கையாளவும் இந்தப் பாதையில் நாங்கள் வழி விலகி போகாதபடி எங்களுக்கு கிருபை செய்தருளும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென்.

Sol நேஹா

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 21-06-2022

உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன?.

ஆதி 40:7

யோசேப்பு சிறையில் இருந்தான். பானபாத்திரகாரனும், சுயம்பாகியுமாகிய இரண்டுபேரும் தண்டனை பெற்று சிறைக்கு வந்தார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து ஏன் துக்கமாய் இருக்கிறீர்கள் என்று கேட்டான். யோசேப்புதான் பொய் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஆனாலும் அவன் மற்றவர்களை உற்சாகப்படுத்தினான். நமக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் நம்மைவிட அதிகமான துன்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டும்.

நமக்காக கர்த்தருடைய திட்டம் பல வேளைகளில், நாம்மைப் பற்றி சிந்திக்காமலும், சுயபச்சாதாபத்திலிருந்து நம்மை வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த இரண்டு மனிதர்களும் துக்கமாய் இருப்பதை கண்டான், மேலும் இருவரும் சொப்பணத்தை கண்டார்கள் என்பதையும் அறிந்தான். சொப்பணத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குறியதல்லவா?  எனக்கு சொல்லுங்கள் , நான் அதற்காக ஜெபிப்பேன்.

யோசேப்பு அந்த இரண்டு சொப்பணங்களுக்குமான அர்த்தத்தை அறிந்தான். மூன்று கிளைகள் மற்றும் மூன்று நாட்களுக்குமான அர்த்தத்தை கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு சொன்னார்.

யோசேப்புவை தேவன் இன்னும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். தேவன் அவனை தயார் செய்து கொண்டிருந்ததின் முக்கியமான பாகம் என்னவென்றால், சுய பச்சாதபம், சுய நீதி, மேலும் எதிர்காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளுதல் போன்றவற்றிலிருந்து அவனை மீட்பதாகும். தேவன் சொப்பனத்தை  பானபாத்திரகாரனும், சுயம்பாகியுமாகிய இரண்டுபேருக்கும் கொடுத்தார். அவனுடைய சொப்பனத்தை யோசேப்பு சரியாக சொன்னார். “நீ மீண்டும் உன்னுடைய பழைய இடத்தை பெறுவாய்.’ ஆனால் நீ நன்றாக இருக்கும்போது என்னை நினைத்துப்பார், என் மீதும் இரக்கம் காட்டும். என்னைப் பற்றி பாரவோனுக்குச் சொல். என்னை இந்த இடத்திலிருந்து வெளியே கொண்டுவா.  ஆதி 40:15 – நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்..

பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பு சொன்னது போலவே தன்னுடைய பழைய பதவியை பெற்றான், ஆனால் அவன் யோசேப்புவைப் பற்றி மறந்தும் போனான். இன்னும் இரண்டு வருடங்கள் யோசேப்பு சிறையில் இருந்தான்.

யொசேப்புவை தயார் செய்ததுபோல கர்த்தர் நம்மையும் தயார் செய்கிறார். அவர் சொல்லுகின்ற இடத்திற்கு நாம் வர வேண்டுமெ என்று பார்க்கிறார்.

என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்,

1 கொரி 4:4-5

யோசேப்பை குறித்து தேவன் வைத்திர்ந்த வேலைக்கு அவன் முற்றிலும் யாதொரு எதிர்ப்பு செய்கிறவனாக இல்லாமலும், சுய பச்சாதாபம் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் மேலும் இரண்டு ஆண்டுகள் அவன் சிறையிருப்பில் இருந்தான். இரண்டு ஆண்டின் முடிவிலே பாரவோன் மன்னனுக்கு சொப்பனம் வந்தது. அது தான் கர்த்தருடைய நேரத்தில் யோசேப்ப்புக்கு தேவன் வைத்திருந்த மாறுதலுக்கான நேரம்.

ஜெபம்

பிதாவே எல்லாவற்றிலும் எங்களுடைய புத்தி அல்லது திறமையை அல்ல மாறாக உம்மை சார்ந்திருக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே.

ஆமேன்.

Sol.Gerard


தானியேல் – II – தேவ செய்தி

நாள்: 08-06-2022

புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.

கலா 3:1.

அப்போஸ்தலர் பவுல் கலாத்தியர்களிடம் உங்கள் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி மேலும் வேதத்திற்கு முரணான பொய்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டீர்கள் என்று சொன்னார். மேலும் அவர்களிடம், ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?. மனதில் இருக்கும் அரணால் வரும் பலன்கள் இவைகளே.

மக்கள் சில நேரங்களில் அசுத்த ஆவியினால் அல்ல தங்களுடைய சொந்த அரண்களாலே பிரச்சனைக்குள்ளாகிறார்கள். நம்முடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில பாவங்களை குற்றச்சாட்டுகளாக நம்மீது வைத்து நம்மை சோர்வடைய செய்கிறான். நம்முடைய விசுவாச வாழ்க்கையை நாசமடைய செய்கிறான். மக்கள் தங்களுடைய பழைய சடங்கு சம்பரதாயங்களில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்,

எபி 10:5,6,7.

நாம் உன்னதமான நம்பிக்கையில் இருக்கிறோம். நம்முடை பாவங்களை மன்னிக்க தன்னையே தந்து நம்மை அவருடைய சொந்த ஜனங்களாக்கிய நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மகிமையோடு மேகத்திலிருந்து இறங்கி வருவார்.

தன்னுடைய கிரியைகளால் நம்மை பரிசுத்தமாக்கமுடியும் என்னும் பொய்யில் யாரும் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, நம்முடைய நல்ல காரியங்கள் அழுக்கு துணிபோல.

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

ஏசா 64:6.

அவரே நம்முடைய முதன்மையான ஆசாரியர், பரலோகத்தில் நமக்காக பரிந்துபேசுபவர்..

நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ளோம்.தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்.

எபே 5:26

சாட்சி

நாங்கள் கிற்ஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னரும் ஒரு சாதாரண விசுவாசிகளாகவே இருந்தோம்.  எங்களுடைய தாத்தா ஒரு ஆசாரியராக இருந்தார். சுட்டெறிக்கும் வெயிலிலும் நற்செய்தியை அறிவிக்க கிராமங்களுக்குச் சென்றுவிடுவார். நாங்களும் இயேசுவிடம் எங்கள் வாழ்க்கையை ஒப்புகொடுத்து நீரினால் ஞானஸ்ஞானம் பெற்றோம்.   

ஜெபம்

பிதாவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எங்களுடை பாவங்களை கழுவ கொடுத்ததற்காக நன்றி. நித்திய ஜீவனில் பங்காளர்களாக எங்களை தேர்ந்துகொண்டதற்காக உமக்கு நன்றி.

ஆமேன்.

Sol .Noreen

தானியேல் – II – தேவ செய்தி

நாள் :07-06-2022

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

1 பேது 2:3.

நம்முடைய உடலுக்கு உணாவு இல்லாமல் இருக்கும்போது பசிக்கு ஆளாகிறது எனவே உபவாசம் இருக்க நமக்கு நிறைய பொறுமை தேவைப்படுகிறது. சரீர பிரகாரமாக உபவாசம் இருப்பது, சரீர இச்சைகளை கொல்லத்தான் மேலும் சரீரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும்தான். தன்னுடைய ஊழியத்தை இவ்வுலகில் துவங்குவதற்கு முன்பாக இயேசு கிறிஸ்து 40 இரவும் பகலும் உபவாசம் இருந்தார். மத் 4:1-17). தானியேல், மோசே, எஸ்தர், தாவீது போன்ற பலர் வேதத்தில் உபவாசம் இருப்பதை நாம் காண்கிறோம்.

ஒரு ஆன்மீக மனிதனுக்கு வேறொரு வகையான உபவாசம் மிகவும் ஆபத்தானது. அது ஆன்மீக உபவாசம் என்று சொல்லலாம். சீடர்களுக்கு ஜெபிக்க சொல்லி கொடுக்கும் போது, சரீர உணவிற்கு அப்பாற்பட்டு ஆன்மீக உணவைப் பற்றி குறிப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில் தேவன் மக்களை மன்னாவால் போஷித்தார். இன்றும் கூட தேவன் தன்னுடைய வார்த்தையினால் நம்மை போஷிக்கிறார்.

ஒரு மனிதன் சரீரம் ஆவி மற்றும் ஆத்துமாவினால் உண்டாக்கப்பட்டிருக்கிறான். நம்முடைய உடலுக்கு உணவு தேவைப்படுவதைப் போல நம்முடைய ஆன்மாவிற்கும்  கர்த்தருடைய வார்த்தை மற்றும் அவருடைய கறிபனைகள் என்னும் உணவால் திருப்தி படுத்த வேண்டும். இவ்வுலக மனிதன் நல்ல உணவு உண்டு மகிழ்ச்சி அடைவது போல ஆன்மீக மனிதன் ஆன்மீக உணவினால் திருப்தி அடைகிறான்.

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 

சங் 34:8.

கர்த்தருடைய உண்மையான மனிதன் விரும்புவது என்ன வென்றால் கர்த்தருடைய வேத வார்த்தையால், தியானத்தால், ஜெபத்தால், மற்றும் ஆராதனையால் நிறப்பப்பட வேண்டும் என்பது தான். இயேசு தன்னை உண்மையாக பின்பற்றுபவர்களுக்காக இவ்வாறு ஜெபிக்கிறார்.

யோவா 17:9-11

நான் அவர்களுக்காக வேண்டிகொள்கிறேன், உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல் நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்…..

நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன்.

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது….

சங் 34:15

அதனால்தான் மலை பிரசங்கத்தில் இயேசு தெளிவாக சொல்லுகிறார், நீதியின் நிமித்தம் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கிய்வான்கள் அவர்கள் திருப்திஅடைவார்கள்.

சாட்சி

நான் இல்லத்தரசியாக இருக்கிறேன். வீட்டில் உள்ள அனைத்துவேலைகளையும் தவறாமல் செய்துவருகிறேன். நான் கர்த்தருடைய வேதத்திற்கு அதிக பசியாய் இருக்கிறேன். வேத வாசிப்பு, வெளிப்பாடுகளை எழுதுதல், பிறருக்காக ஜெபித்தல், கர்த்தருடைய ஊழியத்தை செய்வது எனக்கு மேன்மையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் என்னை அவருடைய வழிநடத்துதலால் இன்னும் மேலே கொண்டுசெல்வார்.

ஜெபம்

பரலோக பிதாவே, நித்திய வாழ்வின் மீது எங்கள் கவனம் என்றும் இருப்பதாக, எங்களுடைய உலக கடமைகளை செய்யும் போது உம்முடைய பிரசன்னத்தால் எங்களை நிறப்பும், உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிய எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,,

ஆமேன்.

Sol.  Neelam

தானியேல் – II

நாள் 06-06-2022 – தேவ செய்தி

ஆகையால்  உங்கள் ஜீவனுக்காகவும்  கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;

மத் 6:25

இந்த வசனத்தில் இயேசு சொல்லுகிறார் உங்கள் ஜீவனுக்காக கவலைப்பட வேண்டாம்,  இவ்வுலகில் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

யோவான் 16:33

கர்த்தர் நமக்கு கொடுக்கும் முழு ஒளியை அனுபவிக்கவிடாமல் தடை செய்ய சாத்தான் பயன்படுத்தும் ஆயுதங்கள்தான் பயம், கவலை மற்றும் பதட்டம். இந்த உணர்வுகள் நம்மை முடக்கி வைக்கின்றன.  நம்முடைய கவலைகளை கர்த்தர் மீது போட்டுவிட்டு கவலையற்ற வாழ்வை வாழா நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார்.

ஏசா 35:4

ஏன் நாம் கவலைப்படகூடாது..

  1. உலக பொருட்களை விட இந்த வாழ்வு மிகவும் பெரியது.
  2. மனிதன் பொருட்களைவிட விலையேறப்பெற்றவன்.
  3. உடைகளைப்பற்றி கவலைப்படாத விலங்குகள் மற்றும் தாவரங்களைவிட மனிதன் மேன்மையானவன்.
  4. கவலைப்படுதல் ஒரு பாவம், அது நமக்குள் பயத்தை உண்டுபண்ணுகிறது.
  5. கவலை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
  6. துன்பங்களை உருவாக்குகிறது.
  7. நமக்காக கவலைப்படும், நம்மை தாங்கும் பரலோக பிதா இருக்கும்போதும் அனாதைகள் போல நம்மை வாழவைக்கிறது இந்த கவலை.
  8. நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை பெறவிடாமல் கவலைபட வைக்கும்.

நம்முடைய எல்லா செல்வங்கள், ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இயேசு சிலுவையில் செலுத்திவிட்டார்.  இயேசு சிலுவையில் நமக்காக செலுத்திய இந்த ஆசீர்வாதங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் அதை பயன்படுத்த வேண்டும். நானும்  “அரண்களை உடைப்பது எப்படி” என்னும் FRP வகுப்பில் பங்கேற்பதற்கு முன்பு என்னுடைய பிள்ளைகளைப்பற்றியும் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் அதிகமாக கவலைப்பட்டேன். என்னுடைய எண்ணங்களை கர்த்தருடைய  வல்லமைமிக்க கைகளில் ஒப்படைத்த போது அவர் என்னை வழிநடத்த ஆரம்பித்தார்.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

சங் 46:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசா 41:10

ஜெபம்

பரலோக பிதாவே உமக்கு முன்பாக வருகிறோம், உம்முடைய பிரசன்னத்திற்காக நன்றி செலுத்துகிறோம், நாங்கள் கவலைப்பட கூடாது என்று சொல்லி கொடுத்தமைக்காக நன்றி சொல்லுகிறோம். உம்முடைய வார்த்தையை எப்படி பற்றிக்கொண்டு தியானிப்பது என சொல்லிதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமேன்.

Sol.G. Kamalin Viji

தானியேல் – II

நாள்: 05-06-2022 – தேவ செய்தி

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; …..தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

மத் 6:24.

வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் சிதறாத(முழு) கவனம் தேவை. உங்களுடைய வேலை, படிப்பு, தொழில் அல்லது வாழ்வில் நீங்கள் செய்யகூடிய எதுவாக இருந்தாலும் பிரிக்கப்படாத கவனம் தேவை. உணவு சமைக்கும்போது கூட நம்முடைய கவனம் வேறு எங்காவது இருந்தால் உணவு சுவையாக இருக்காது. இயேசு நமக்கு இங்கு இதைத்தான் சொல்லுகிறார்.

ஒருவன் உலகப்பொருள் மற்றும் கர்த்தருக்கு ஒன்றாக ஊழியம் செய்ய முடியாது. ஒருவருடைய விசுவாசம் கர்த்தர் மேல் அல்லாமல் செல்வத்தின் மீது வைப்பதைப் பற்றிதான் இயேசு சொல்லுகிறார். உலகப் பொருளை சம்பாதிப்பது தவறு இல்லை ஆனால் உலக பொருட்கள் மீதும் கர்த்தர் மீதும் ஒரே நேரத்தில் நம்பிக்கை வைப்பதுதான் தவறு. ‘ஊழியம் செய்வது’ என்ற வார்த்தைதான் மிக முக்கியமானது.

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

             1 திமோ 6:17.

அடுத்த வசனத்தில் பவுல் சொல்லுகிறார், தாராளமாகவும், மனமுவந்தும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; ..கவலைப்படாதிருங்கள்,

மத் 6:25.

எதிர்காலத்தைப்பற்றிய கவலை, சிந்தனை நம்மை பணத்தின் மீது சார்ந்திருக்கச் செய்கிறது, கர்த்தர் நமக்களித்த வாக்குறுதிகளை நம்பாமலும், கர்த்தர் நமக்கு எல்லாவற்றையும் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் இழந்து விடுகிறோம்.

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்,

மத் 6:21

மக்களுக்கு நல் வழி காட்டுவது, நற்செய்தியை அறிவிப்பது அல்லது வேதத்தை ஆழ்ந்து தியானிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம். உலக செல்வம், பொருட்செல்வம் நம்முடைய மனதில் வரக்கூடாது, நம்முடைய எண்ணம் எல்லாம் கர்த்தருடைய காரியத்தின் மீதுதான் இருக்க வேண்டும். அநேக சபை தலைவர்கள் ஊழியகாரர்கள் இன்று கர்த்தருக்கு ஊழியம் செய்வதாக சொல்லிக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய கவனம் எல்லாம் பொருட்செல்வங்களை சேர்ப்பது பற்றித்தான் இருக்கிறது. யாத் 20:3 – என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். நம்முடைய சிருஷ்டிகராகிய தேவனுக்கு நாம் ஊழியம் செய்யும் போது பணத்தை தேவனாக்க கூடாது. சாத்தான் தன்னுடைய சாதுர்யமான வழிகளால் கர்த்தருடைய பிள்ளைகளை செல்வத்தின் மீதும் பொருட்களின் மீதும் நம்பிக்கை வைக்கத் தூண்டுகிறான்.

சாட்சி

நான் கர்த்தருக்குள் வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் ஐதராபாத் சென்று சபை ஆராதனையில் பங்கு கொள்ளவும், கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கவும் செல்வது வழக்கம்.  அங்கு இருப்பவர்கள் என்னைப்பார்த்து சொல்வது வழக்கம், நான் ஒவ்வொரு மாதமும் எப்படி வருகிறேன், வருவதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறேன்  என கேட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக நான் வேலையை விட்டேன், கர்த்தருக்காக காத்திராமல் எல்லாவற்றையும் இழந்தேன்.என்னுடைய தவறை உணர்ந்து கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டேன் மேலும் கர்த்தர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தேன். 6 மாதத்திற்குப் பின் கர்த்தர் எனக்கு கதவுகளை திறந்தார். கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை உலகத்தாரின் இரக்கத்திற்கு விட விரும்பவில்லை மாறாக, இவ்வுலகில் நாம் இருக்கும்போது முழு உள்ளத்தோடும் ஆன்மாவோடும் கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும். கர்த்தர் எனக்கு சொல்லிகொடுத்த இந்த பாடத்திற்காக நன்றி.

ஜெபம்

கர்த்தாவே, நாங்கள் செல்வத்திற்கு அடிமைகளாக வாழாமல் எங்களிடம் இருக்கும் எல்லாவற்றாலும் உமக்கு ஊழியம் செய்ய கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

Sol.Neha