தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-11-2022

உண்மையான நன்றி செலுத்தல்.


சங்கீதம் 116 : 12 , 13
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் , அவருக்கு என்னத்தை செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு , கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுவேன். “

நன்றியை வெளிப்படுத்த மிகச் சிறந்த முறை , கலிலேயாவிலுள்ள மரிய மதலேனாள் வாழ்க்கையின் வழியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மாற்கு 16 : 9 ” வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு , மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.” அதற்குப் பிறகு , இயேசு உயிர்த்தெழுந்ததைப் பார்க்கும் வரை அவரை நிழல் போல் பின் தொடர்ந்தாள். விசுவாசிகளாகிய நாம் கர்த்தரிடமிருந்து நிறைய ஆசீர்வாதங்களை பெற்றிருக்கிறோம். நாமும் அதைப் போலவே செய்ய, எதிர்பார்க்கப்படுகிறோம். இப்போது அவளுடைய உன்னதமான செயல்களை கண்டுபிடிப்போம்.


இயேசு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக பயணம் செய்து நற்செய்தியை பரப்பினார். அவருடைய 12 சீடர்களும் அவருடன் இருந்தார்கள். அவர்களோடு பெண்களும் இருந்தனர். அவர்களில் மரிய மகதலேனாள், கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும் , சூசன்னாவும் குறிப்பிடத் தக்கவர்கள். இந்தப் பெண்கள் தங்கள் சொந்தக் காரியங்களை விட்டு இயேசுவுக்கு ஊழியம் செய்ய உதவினார்கள். லூக்கா 8 : 1 – 3 ல் காணலாம்.


சில பெண்கள் கலிலேயாவிலிருந்து அவருக்கு ஊழியம் செய்வததற்காக பின் தொடர்ந்து வந்தார்கள். மரிய மதலேனாள் , யாக்கோபின் தாய் மரியாள், செபதேயுவின் மனைவி ஆகியோராவார்.


மத்தேயு 27 : 55 ” மேலும் இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோட வந்திருந்து அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். “
மாற்கு 15 : 41 ” அவருடனே கூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் “


இயேசு சிலுவையில் அறையப்படுவதை பார்த்துக்கொண்டிருந்த அநேக பெண்களில் மரிய மதலேனாளும் ஒருத்தி.
மரிய மதலேனாள் , சிலுவைக்கு அடியில் நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி. தவிர, இயேசுவின் தாய் , அவருடைய தாயின் சகோதரி, கிளியோபாஸின் மனைவி மரியா இவர்களும் உண்டு. சிலுவையின் அருகில் இருந்த அவருடைய ஒரே ஒரு சீடர் யோவான்.


மத்தேயு 28 : 1 ” ஓய்வு நாள் முடிந்து , வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் , மகதலேனா மரியாளும் கல்லறையை பார்க்க வந்தார்கள் “
மத்தேயு 28 : 6 ல் தேவதூதர்கள் , பயப்படாதீர்கள் அவர் சொன்னபடியே உயிர்த்துவிட்டார். சீக்கிரமாய் போய் மரித்தோரிடமிருந்து எழுந்தார் , அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார்” என்று சொல்வதைக்கேட்டார்கள் .
என்று சொல்லப்பட்டிருக்கிறது.


யோவான் 20 : 11 – 16 வரையுள்ள வசனங்களில் மரிய மதலேனாள் அழுவதைக் காண்கிறோம். அவள் திரும்பிப் பார்த்தபோது இயேசுவைக் கண்டாள். அவரை தோட்டக்காரர் என்று நினைத்து , ஐயா அவரை நீர் எடுத்துக் கொண்டு போனது உண்டானால் அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்று சொன்னாள். இயேசு உடனே அவளை நோக்கி மரியாளே என்றார். உடனே அவள் ” ரபூனி” என்றாள். அதற்கு இயேசு ,நான் என் பிதாவினிடத்திற்கு திரும்பி போகிறேன் என்று என் சகோதரரிடத்தில் போய் சொல் என்றார்.


அவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களிடம் அவரின் உயிர்ப்பை பற்றி சொல்ல மகிழ்ச்சியுடன் ஓடியவர்கள். மத்தேயு 28 : 8

சாட்சி


கர்த்தர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயங்களையும் அற்புதங்களையும் செய்துள்ளார். ஆனாலும் நான் அவருக்காக செய்தது கடுகளவு தான்.

ஜெபம்


இரக்கமுள்ள தந்தையே, மரியமகதலேனாளைப் போல உம்மை பின்பற்றவும் , எங்களது சிலுவைகளை சுமக்கவும் , நீரே எங்கள் மீட்பர் , உயிருள்ள கர்த்தர் என்று மற்றவர்களுக்குச் சொல்லவும் உதவி செய்யும் .
ஆமென்.

Sol. விக்டி மிதிலா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-11-2022

” இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் ”

சங்கீதம் 127 : 4 

நாம் எப்பொழுதெல்லாம் இந்த உலகத்தின் ரீதியில்  பரம்பரைச் சொத்தைப் பற்றி  நினைக்கிறோமோ , அப்பொழுது நமக்கு நினைவில் வருவது நிலம், ஒருசில பொருள் ஈட்டக்கூடிய  சொத்துக்கள் , நகைகள் மற்றும் பணம். நாம் பரம்பரை சொத்தாக எதைப் பெறுகின்றோமோ அவை சம்பாதித்தோ அல்லது  உழைத்தோ பெற்றவை அல்ல.  நாம் வாரிசுதாரராக இருப்பதனால் தான் அவற்றைப் பெறுகிறோம்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் , நம் அப்பாக்களும் தாத்தாக்களும் உழைத்து , வியர்வை சிந்தி சம்பாதித்த சொத்துக்கள் , அவற்றிற்கான  நேரம் வரும்போது நம்மிடம் வந்து நாம் அதற்குரிய வாரிசுதாரர்களாவோம். இது ஒரு சிறந்த பரிசு, உடைமை. நமக்கு என்ன இருக்கிறதோ, நாம் ஏற்கெனவே என்ன சம்பாதித்து வைத்திருக்கிறோமோ,  அதனுடைய மதிப்பை அதிகப்படுத்துவதற்கு மட்டுமே இவை நிற்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை முன்னேற்றமான ஒரு நிலைக்கு கொண்டு சென்று நம்முடைய சுமைகளை குறைக்க சாத்தியமாகிறது.

இப்போது நாம்  இந்த பரம்பரை சொத்தின்  சூழலை பயன்படுத்தும் போது  சங்கீதம் 127 : 4 ல்  நமது குழந்தைகளின் முக்கியத்துவத்தை இது  மாற்றுகிறது. 

நான் இந்த வசனத்தை தியானிக்கும்போது கர்த்தர் ஒரு அற்புதமான உணர்தலை கொடுத்தார்.  கர்த்தர் பரலோகத்திலிருந்து நேரடியாக தந்த உங்களது பிள்ளைகள்,   தொடவும் உணரவும் கூடியதுமான பரிசு என்பதை உணர்ந்தீர்களா? நீங்கள் பரலோகத்திலிருந்து நேரடியாக  தங்கத்தையோ வெள்ளியையோ பெறவில்லை என்றாலும் கர்த்தர் தம்முடைய படைப்புகளின் வழியாக அவற்றை வழங்குகிறார். ஆனால் குழந்தைகள் தாயின் கருவயிற்றில் உருவாகுமுன்னரே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்படுகின்றனர். அவர்கள் நேரடியாக கர்த்தரிடமிருந்து வந்தார்கள் என்பதை இது நிரூபிக்கிறது.

நாம் இப்போது, நமது பிள்ளைகள் எல்லாம் நமது பரம்பரை சொத்து , அதாவது அவர்களைப் பெற நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் இதை மனதில் நிறுத்தி , நான் உங்களுக்கு , நமது பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டிய  3 அணுகுமுறை அல்லது சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

1 .  பிள்ளைகள் எல்லாரும் பரம்பரை சொத்து. எனவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்:

பரம்பரைச் சொத்து எப்போதும்  நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட  செல்வமாக இருக்கிறது. இது எப்போதும் ஆசீர்வாதம் தான். நம்  ஒவ்வொருவருடைய மனதும், நமது பரம்பரைச் சொத்து நமது ஆசீர்வாதம் தான் என்பதை மகழ்வுடன் ஏற்றுக் கொள்கிறது. நாம் அதை வெறுக்கவோ , தூர எறியவோ செய்யமாட்டோம்.

நீதிமொழிகள் 10 : 22 சொல்கிறது ” கர்த்தரின் ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். “. எனவே நமது பிள்ளைகள் மீதான நமது அணுகுமுறை எப்போதும்,  அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ,

அவர்கள் துன்பங்களை கூட்டமாட்டார்கள் என்பதை நோக்கியே இருக்க வேண்டும்.   தற்போதைய நிதிநிலைமையினாலோ, சமூக கட்டுப்பாடுகளினாலோ அல்லது பாலின ரீதியாலோ நமது பிள்ளைகளை நாம்  வெறுக்கக் கூடாது.  அவர்கள் விலை மதிப்பற்றவர்கள் , வெறுக்கப்படக்கூடியவர்கள் அல்ல.

 2 . நம்முடைய பரம்பரை சொத்து  பாதுகாக்கப்படவேண்டும்:

நம்முடைய முன்னோர்கள் முதன்மையான ஒரு இடத்தில் சிறிது நிலம் தந்ததாக கற்பனை செய்து கொள்வோம். யாராவது ஒருத்தர் ஆந்த நிலத்தில் சில சென்டிமீட்டர் இடத்தை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?

இஸ்ரேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நிலத்தை சொந்தமாக்கவும் , மாசுபாட்டிலிருந்து அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும்  அதற்குரிய வழியை கர்த்தரிடம் கேட்டார்கள். கர்த்தர் அவர்களுடைய எதிரிகளை அவர்களுடைய நிலத்திலே  முற்றிலுமாக அழித்து ஒழிக்க   வேலை செய்யும்படி  கேட்டார். இந்த அணுகுமுறை தான், என்ன விலை கொடுத்தாகிலும் உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் எதிரிகளை முற்றிலுமாக அழித்து நிர்மூலமாக்க வேண்டும்.  என்னால் எப்படி முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.  அவற்றை கர்த்தரின் கவசத்தின்  மேல் வைத்து பரிசுத்த ஆவியையும் கர்த்தருடைய வார்த்தையையும் வாளாக பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்.

3 . பரம்பரைச் சொத்து முதலீடாக மாறுவது அவசியம்:

நமது பரம்பரைச் சொத்து வளரவிலலையென்றால் அது பயனற்றதாகிவிடும். திரும்பவும் கற்பனை செய்யலாம். உங்களுடைய அப்பா உங்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் தருகிறார் . அவற்றை நீங்கள் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டால்  அது பயனற்றதாகிவிடும்.  ( தற்போதைய பண வீக்கத்தை கருத்தில் கொண்டால் )  பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து விடும். அதை நீங்கள் வங்கியில் செலுத்தினால் கூட  சிறிதளவு வட்டியாவது சம்பாதிக்கலாம். அதுபோலவே உங்கள் பிள்ளைகளும் பரலோக ராஜ்யத்தின் முதலீடாக மாறவேண்டும்.  கர்த்தருடைய வழிகாட்டுதலோடு முதலீடு செய்யுங்கள். எந்த செல்வாக்கு மிக்க களமாக  இருப்பினும் , அவர்கள் உற்பத்தி செய்பவர்களாக , பலனளிப்பவர்களாக மாற, அவர்களுக்குத் தேவையான எல்லா வாய்ப்புகளையும், கருவிகளையும், அதிகாரங்களையும் கர்த்தர் அவர்களுக்காக நியமிப்பார். இதன்படி தியானிக்கும் போது கர்த்தர் எனக்கு திறமையைக் குறித்த உவமையை நினைவுபடுத்தினார். பெற்றோர்களாகிய  நாம் பிள்ளைகளுக்கு பணிப்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று இந்த உவமை சொல்கிறது. நம் பிள்ளைகளின் உற்பத்தி திறனை 10 மடங்கு அல்லது 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர்களுக்கு திறமைகளை புகுத்தி , அவர்களுடைய களத்தில் அவர்கள்  சிறந்தவர்களாகவும் , மதிப்புமிக்க சொத்தாகவும்  உருவாக்க வேண்டும். அவர்கள்  தேவனுடைய ராஜ்யத்திற்காக சுரண்டல்களை செய்து  திரும்பக் கொண்டுவந்து கர்த்தருக்குத் தருவார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரால் நமக்கு பரம்பரைச் சொத்தாக தரப்பட்டவர்கள். ஆனால் நாம் இதைச் செய்யாவிட்டால் மத்தேயு 25 : 27 ல் சொல்லப்பட்டபடி வங்கியில் செலுத்த வேண்டும். வங்கிகளெல்லாம் நிர்வகிப்பதற்கும் சொத்துக்களை அதிகரிப்பதற்கும் , சொத்துக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு உள்கட்டமைப்பு வசதி கொண்டுள்ள , பொதுவான  அதிகாரமுள்ள நிறுவனங்கள் ஆகும்.

கர்த்தரின் உடலாகிய சபையும் ஆவிக்குரிய தலைவர்களும் வங்கிகளாகும்.  குறைந்தது நீங்கள் செய்யக்கூடியது , சபையால் பாதுகாக்கப்பட்ட ஆவிக்குரிய அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவது தான் .  கண்டிப்பாக இவர்கள் வட்டி தருவார்கள்.

இந்த அணுகுமுறை நம் மனதில் வந்தால் , நம் பிள்ளைகள் கர்த்தரிடமிருந்து வந்த பரம்பரைச் சொத்து என்பதை பார்க்கலாம்.

கடைசியாக சங்கீதம் 127 : 4 , 5 ல் உள்ள வசனங்கள் பிள்ளைகளை அம்புக்கு ஒப்பிடுகின்றன. ஏன் அம்புகள்? கர்த்தர் இதற்கும் என் கண்களை திறந்தார்.

எபேசியர்  6 : 10 – 18 ல் கர்த்தருடைய கவசத்தின் விளக்கங்களை காணலாம். ஆனால் நம்முடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் , நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்திற்காகவும் தான்  இவையெல்லாம் என்பதை கவனிக்க வேண்டும்.  கர்த்தர் பெருக்கத்தின் தேவன்.

அவர் எப்போதும் நம் பிரதேசங்களையும் எல்லைகளையும் விரிவுபடுத்த விரும்புகிறார். ஆனால் ஒரே நேரத்தில் நம்மால் எல்லா வாயில்களிலும் , நிலைகளிலும் பணியமர்த்த முடியாது. நம்மால் ஒரு வாளிலுள்ள ஒரு ஆரத்தால் மட்டுமே நம் எதிரியை தாக்க முடியும். ஆனால் நம்மிடம் அம்பு இருக்குமேயானால் தூரத்தில் நின்றால் கூட  எதிரியை தாக்க அதை பயன்படுத்தலாம்.  தூரத்தில் உள்ள நம் எல்லைகளை பாதுகாக்க ஆயுதங்கள் தேவைப்படும் போது அம்புகளே சரியான ஆயுதமாகும். அம்புகள் புறக்காவல் நிலையமாக மாறும். மேலும் கர்த்தர் நியமித்த திசையில் கர்த்தருடைய ராஜ்யத்தை விரிவாக்கும்.

Sol. பால்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21-11-2022

” உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம் , அடிக்கப்படும் ஆடுகளைப் போல எண்ணப்படுகிறோம். “

ரோமர் 8 : 35

மேற்கண்ட வசனம், உண்மையான விசுவாசிகள் சவால்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று கூறுகிறது. கர்த்தரை விசுவசிக்கிற ஒவ்வொருவரும் பலவிதமான குழப்பங்களை சவால்களை தங்களுடைய வாழ்க்கையில் எதிர் கொள்கின்றனர். கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது என்பது , உங்களுடைய சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவுக்கு பின்னால் செல்வதாகும்.

லூக்கா 9 : 23 சொல்கிறது ” ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக் கடவன். ” இதன் அர்த்தம் உங்களை நீங்கள் தியாகம் செய்வதாகும்.

 நமக்கு முன்பாக இரண்டு வழிகள் இருக்கின்றன.

மத்தேயு 7 : 13 – 14  சொல்கிறது ” இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள் , கேட்டுக்குப் போகிற வாசல்விரிவும் , வழி விசாலமுமாயிருக்கிறது. அதன் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் , வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். “

இடுக்கமான பாதையே வாழ்க்கையை  வழிநடத்துகின்ற பாதை. இடுக்கமான பாதை நடப்பதற்கு கடினமான பாதை.    இது மக்களை மன்னிக்க  கோருகிறது.  மக்களுடன் பழகும் போது, பல விஷயங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்கு பொறுமை தேவைப்படுகிறது. நாம் மக்களை அன்பு செய்வது அவசியமாக  இருக்கிறது.  சுயநலமில்லாமல் அவர்களுக்கு உதவி செய்வதும் , அவர்களை ஆசீர்வதிப்பதும் அவசியமாயிருக்கிறது. இதுவே நாம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் விசுவாசத்தோடு நடக்க வேண்டிய விசுவாசிகளின் பாதையாகும் . கர்த்தரின் அன்பால் நாம்,  மக்களை மன்னிப்பதற்கும், அவர்களை அன்பு செய்வதற்கும், நமக்கு உண்மையில் கர்த்தரின் கிருபை தேவை.

அகலமான பாதை நடப்பதற்கு எளிதான பாதையாகும்.  அதற்கு கர்த்தரின் பலமோ கிருபையோ நமக்கு தேவையில்லை. இது மிகவும் வசதியான பாதை. நாம் என்ன பாதையை தெரிந்தெடுக்க வேண்டும் என்பது முற்றிலுமாக நமது முடிவு. மிகச் சிலரே இந்த முடிவை தெரிந்தெடுக்கிறார்கள். யாரெல்லாம் குறுகலான பாதையை தெரிந்தெடுக்கிறார்களோ  அவர்கள் சாந்தகுணம் உள்ளவர்களாகவும்,  கனிவானவர்களாகவும் இயேசுவை பின்பற்ற சிலுவை சுமப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

கர்த்தருக்கு எந்த நிபந்தனையுமில்லாமல் கீழ்படிய வேண்டும்.  அவர்கள் கர்த்தருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேட முயற்சிக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ,துன்புறுத்தப்பட்டாலும் கர்த்தர்மீதுள்ள அன்பிற்கு, அது ஒரு பொருட்டே அல்ல.

ஜெபம்

அன்பு தகப்பனே , உமது பாதையில் நடக்கவும் உமக்கு கீழ்படியவும் எங்களுக்கு உதவி செய்யும். உமது விருப்பத்தின்படியே எங்களது வாழ்க்கையில் நடக்கட்டும். பொறுமையுடன்  ஒவ்வொருவருக்கும் அன்பு காட்டவும் , எப்போதும் விசுவாசத்துடன் இருக்கவும்

இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. மல்கீத்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-11-2022

” கர்த்தருக்கு காத்திரு , அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். திடமனதாயிருந்து , கர்த்தருக்கே காத்திரு. “

சங்கீதம் 27 : 14

மேற்கூறிய வசனம் தாவீதின் சாட்சியம்.  அவரது அனுபவங்களுக்குப் பிறகு நமக்கு ” கர்த்தருக்காக காத்திருங்கள் ” என்று உறுதியளிக்கிறார். ஆம்  தாவீது தன்னுடைய பிர்ச்சனைகளில் நீடிய பொறுமையுடன் சகித்த பிறகு , கர்த்தரிடமிருந்து பலத்தை பெற்றார்.  கர்த்தருக்காக காத்திருத்தல் என்பது , நாம் கர்த்தருடைய வாசலில்  நம்முடைய ஜெபங்களால் அவருடைய  காலடியில் பணிவுடன் காத்திருக்க வேண்டும் என்பதாகும். நாம் அப்படி காத்திருக்கும்போது அவர் நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்புவார்.  நம்முடைய விசுவாசம், பொறுமை,பணிவு, சாந்தம், நீடியபொறுமை, அவருடைய கட்களைகளை பின்பற்றுதல், இறுதிவரை சகித்தருத்தல் போன்றவற்றை கர்த்தர் வேண்டுகிறார்.  தன்னுடைய வாக்குறுதிகளை ஒருபோதும்  தவறவிட மாட்டார்.

இந்த வசனம் மேலும் நமக்கு சொல்லி  உபதேசிப்பது ,  “நல்ல தைரியத்துடன் இருங்கள்” என்பதாகும். நாம் இயேசுராஜாவின் படை வீரர்கள். எனவே அவர் நம் இருதயத்தை பலப்படுத்துவார். நாம் கர்த்தருக்கு காத்திருந்தால் நாம் கண்ணால் காண முடியாத , அவர் நமக்காக வைத்திருந்த  நிறைய  அனுகூலமானவைகளை  ஆசீர்வாதங்களை , அவருக்காக காத்திருக்கிறவர்கள்  பெற முடியும்.

1 கொரிந்தியர் 2 : 9 ” தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை , அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. “

 நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் உலகில் இருப்பவர்களைக் காட்டிலும் பெரியவர். நாம் கர்த்தருடைய முழு கவசத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்.

கர்த்தர் யோசுவாவிடம், தன்னுடைய எதிரியின்  முகத்திற்கு முன்  பலமாகவும் தைரியமாகும் இருக்கும்படி கட்டளையிட்டார்.

யோசுவா 1 : 6

”  பலங்கொண்டு திடமனதாயிரு . இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்கு பங்கிடுவாய். “

பலத்துடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்கு அர்த்தம்,  நம் உண்மையான பலத்தின் ஆதாரமே கர்த்தரில் நம்பிக்கை வைப்பதுதான். நம்முடைய விசுவாசம், கர்த்தரிடத்தல் நமக்குள்ள தனிப்பட்ட உறவு , நமக்கு நம்பிக்கையையும், முழுமையான உணர்வையும்  தருகிறது. பாதுகாப்பு, சகிப்புத்தன்மையும் இருந்தால் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொருட்படுத்தாமல் இறுதியில் வெற்றி நமக்குத்தான் என்பதை தெரிந்து கொள்வோம். நாம் வெற்றியாளர்களாக நம்மை பார்க்க முடியும். நாம் நம்முடைய கஷ்டத்தைக் குறித்து முணுமணுக்க மாட்டோம். ஏனென்றால்  நீதிமொழிகள் 4 : 23 சொல்கிறது ” எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள் , அதனிடத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும்.”

நமது இருதயம் இயற்கையிலே வஞ்சிக்கபட்டு  , ஏமாற்றப்படுகிறது.  எனவே கர்த்தருடைய ஆவியானவரால் அது விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். இந்த உலகமும் அதன் பாவ காரியங்களும் நம்முடைய இருதயத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும். நாம் கர்த்தருடைய  வார்த்தைகளினால் நம்மை  நிரப்புவதாலும் , அவருடைய வார்த்தைகளை  தியானிப்பதாலும் மட்டுமே இது சாத்தியமாகும். பிறகு நம்முடைய பழைய இயற்கையான சுபாவமான கெட்ட கனிகள், புதிய சுபாவத்தால் மாற்றப்படுகின்றன. அதுதான் பரிசுத்த ஆவியின் கனிகள்.

கர்த்தர் விசுவாசிகளின் இருதயத்தை தயார்படுத்துவார். கர்த்தர் நம் இருதயத்தை பலப்படுத்தி நமக்கு தைரியத்தை தருவார். உலகம் ,நாம் கீழ விழவேண்டும் என்று எதிர்பார்க்கும் போது , ஒரு காலத்தில்  சிறகை இழந்த கழுகு மீண்டும் தன்னுடைய சிறகுகளை வளர்த்தது போல , கர்த்தர் நாம் மீண்டும் உயர்வதற்கு காரணமாக இருப்பார். நம்முடைய அதிகமான பயங்கள் விலகிவிடும். நம்முடைய இருதயம் மகிழ்ச்சியினால் வளர்வதை உணரலாம். ” ஆனால் கர்த்தருக்காக அவர்கள் காத்திருந்தால் மட்டுமே அவர்களுடைய பலத்தை புதுப்பிப்பார். கழுகுகளைப் போல தன் சிறகுகளுடன் உயரத்தில் பறப்பார்கள். அவர்கள் ஓடுவார்கள். சோர்வடைய மாட்டார்கள். நடப்பார்கள். மயக்கமடைய மாட்டார்கள்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, தாவீதைப் போல துன்பங்களின் முகத்தைப் பார்க்கும் வேளையில் உம்முடைய நேரத்திற்காக  காத்திருக்கும் பொறுமையைத் தாரும். எங்களுடைய நம்பிக்கையை வளர்க்கவும் , உம்மில் விசுவாசம் கொள்ளவும் , உம்முடைய கட்டளைகளை பின்பற்றவும் எங்களுக்கு உதவி செய்யுமாறு

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-11-2022

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.”(ஆதியாகமம் 1 : 1 – 4)

இந்த வசனத்தை நீங்கள் வாசிக்கும் போது எப்படி உணருகிறீர்கள்? ஏதாவது ஒன்று உங்கள் இதயத்தின் ஆழத்தில் செல்கிறதா? ஆம். என்னைப் பொறுத்தவரை  நான் இந்த வசனத்தை வாசிக்கும்போது எனக்கு இதிலிருந்து நிறைய பதில்கள் கிடைத்தன. கர்த்தர் உண்டாக்கினார். இவர் எல்லாவற்றையும் உருவாக்கின தேவன். நீங்கள் நம்புகிறீர்கள்  எனக்குத் தெரியும். சரிதானே? ஆனால் இங்கு நீங்கள் , கர்த்தர் தன் வார்த்தையை பயன்படுத்தி எவ்வாறு உண்டாக்கினார் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். அவர் தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தி அதை உருவாக்கினார்.  இங்கு அவருடைய வார்த்தையின் வல்லமையை பார்க்க முடியும்.

யோவான் 1 : 1 “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”

இப்போது இந்த வசனத்தில்  வார்த்தை தேவனாக இருந்ததை காணலாம். வேதவசனங்களை கவனமாக வாசிக்கும்போது ,  கர்த்தருடைய  மக்கள் அவருடைய  பலவிதமான சந்திப்புக்களை காணலாம். விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாமைக் காணும் போது , ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டார். மோசே கர்த்தரை எரியும் புதரின் வடிவத்தில் சந்திக்கிறான். யாக்கோபிற்கு தேவதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமான கனவு வந்தது. சாமுவேல், கர்த்தர் அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்ததைக் கேட்டான். இதைப் போல இன்னும் நிறையவற்றைப் பார்க்கலாம்.

ஆனால் இங்கே உங்களுக்காக ஒரு கேள்வி. கர்த்தருடனான சந்திப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?

நாம் பழைய ஏற்பாட்டை பார்க்கும்போது, மக்கள் மோசேயுடன் இருந்த நாட்களில் இடி முழக்கத்தின் வழியாகவும்  எக்காளச் சத்ததின் வழியாகவும்  கர்த்தருடைய வார்த்தையைக்  கேட்டு பயந்தார்கள். புதிய ஏற்பாட்டில் நாம் வாழும் வார்த்தையை பார்க்கிறோம். அவருடைய பெயர் இயேசு. இயேசுவின் பெயர், எல்லா நாமத்திற்கு மேலாக உயர்ந்தது.

நாம் ஜெபிப்பதற்கும், ஆராதிப்பதற்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை போலவே கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நம்பில் எத்தனை பேர் நம்புகிறோம்?

2 திமோத்தேயு 3 : 16 – 17 ” வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது.தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக , அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் நீதியை படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது. ”  இந்த வசனங்களில் ,  கர்த்தர் மனிதனை  உண்டாக்கியபோது கர்த்தர் தன்னுடைய ஆவியை அவனுக்குள் கொடுத்ததைப் போலவே , எல்லா வேத வசனங்களும் கர்த்தருடைய ஆவியினாலே எழுதப்பட்டது.

ஆதியாகமம் 2 : 7

” தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமா ஆனான். “

கர்த்தருடைய வார்த்தையை நாம் வாசிப்பது எல்லா விசுவாசிகளுக்கும் மிகவும் முக்கியமானது.  நீங்கள் அதிகமாக  வாசிக்கும்போது  நீங்கள் உங்கள் ஆத்துமாவுக்கு அதிகமாக உணவளிக்கிறீர்கள். உங்கள் எண்ணங்களை கர்த்தரின் வார்த்தையால் நிரப்புங்கள். அதை உங்கள் இருதத்தின் ஆழத்தில் பதியுங்கள். அப்போது உங்களது வாழ்க்கை எவ்வளவு மாற்றப்படுகிறது, உங்களது சிந்தனைகள் எவ்வளவு புதிப்பிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். உங்களிடம் வாள் இல்லாவிட்டால் போர்க்களத்தில் உங்கள் எதிரியை எப்படி தாக்க முடியும்? இன்று நீங்கள்  போர் தொடுக்க  முடிவு செய்து  , கர்த்தரின் வார்த்தையைக் கொண்டு உங்கள் எதிரியை வீழ்த்த தொடங்குங்கள். கர்த்ருடைய வார்த்தையை வாசிப்பதற்கு சோர்வடையாமல் , அதை தியானியுங்கள்.

ரோமர்  8 : 37  “இவையெல்லாற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

இப்போது வேதவசனங்களை பயன்படுத்தி அற்புதங்களையும், சுகமளித்தலையும், விடுதலையையும் பெறுவீர்கள். கர்த்தரின் வார்த்தை வளரும் பெருகும்.

கர்த்தரின் வார்த்தைகளை நீங்கள் அதிகமாக பேசும்போது

நம்முடைய விசுவாசம் விருத்தியடைவதை பார்க்கலாம்

Sol. மெர்சி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-11-2022

இதுவரை செலுத்தப்பட்ட  மிகப்பெரிய விலை சிலுவையின் மேல் உள்ளது.

கர்த்தர் நம்மை சொந்தமாக்குகிறார். நம் ஒவ்வொருவருக்காகவும் மிகப் பெரிய விலையைச் செலுத்தினார். அவர் சிலுவை சுமந்து கொண்டிருந்த போதும் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். நம்மை மீட்பதற்காக , அவர் விருப்பத்துடனே அந்த விலையை செலுத்தினார்.

1 பேதுரு 2 : 9  சொல்கிறது  “நீங்களோ , உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

கர்த்தர் உங்களையும் என்னையும் ஒரு தனித்துவமிக்க ஆளுமையாக உருவாக்கினார்.  பாவம் அவரிடமிருந்து உங்களை பிரித்த போது அவர் உங்களிடம்  வந்தார் . அவர் உங்களை நிபந்தனையின்றி அன்பு செய்கிறார். உங்களை சொந்தமாக்கிக் கொள்ள ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை.

நீங்கள்  கர்த்தருடைய சிறப்பான உடைமைகளாக இருப்பது எவ்வளவு பெரிய சலுகை.  மக்கள் உங்களை மறுத்தாலும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய கர்த்தர் உங்களுடன் கூடவே இன்னும்  இருக்கிறார்.

ஆனால் அவருக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? இயேசுவோடு நாம் இருப்பது, நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றுகிறது. அவரோடு அதிகமதிகமாக நேரம் செலவழிக்கும் போது , நீங்கள் ஒரே மாதிரி ஒருபோதும் இருக்க மாட்டீர்கள்.உங்களிடம் இருப்பவைகளிலிருந்து ஒரு போதும் தைரியம் வராது. உங்களுக்குத் தெரிந்தவைகளிடமிருந்து ஒரு போதும் தைரியம் வராது. உங்களுடைய எதிரியின் பலவீனத்தை தெரிந்து கொள்வதிலிருந்து ஒருபோதும் தைரியம் வராது.  கர்த்தருடன் நீங்கள் நேரம் செலவழிக்கும்போது மட்டுமே தைரியம் வரும்.  நீங்கள் வெளியே போகும்போது முதலில் அவருடன் பேசுங்கள். உங்கள் எதிரிகள் குழப்பமடைவார்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள்   ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் கர்த்தரோடு இருப்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

அப்போஸ்தலர் 4 : 13  “பேதுருவும்  யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள்  கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு , அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள். “

ஜெபம்

அப்பா,நீர் இறங்கி வந்து எங்கள் பாவங்களிலிருந்து எங்களை இரட்சித்தீர். முழு மனித குலத்திற்காகவும் சிலுவையை சுமந்தீர். உம்முடைய சந்நிதியில் நாங்கள் நிற்பதனால் வரும் தைரியத்தை எங்களுக்குத் தரும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

 Sol. ஆரோக்யா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 15-11-2022

எரேமியா 31 : 33, 34
” அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது , நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து , அதை அவர்கள் இருதயத்திலே எழுதி , நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும் , ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்து கொள் என்று போதிப்பதில்லை. அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும் எல்லோரும் என்னை அறிந்து கொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் , நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”

கர்த்தரின் கட்டளைகள் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டு , எழுதப்பட்டு , இருதயங்களில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் மனித இனம் கீழ்படியாமையை தெரிந்தெடுத்து தொடர்ந்து பாவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தர் இன்னும் கிருபையாக தனது கட்டளைகளை ( அவரது சட்டங்களை) உட்கொண்டு அவை குடல்களுக்குச் சென்று ஜீரணம் ஆகும்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.


எசேக்கியல் 3 : 1- 3 பின்பு அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி, இந்தச் சுருளை நீ புசித்து , இஸ்ரயேல் சந்நதியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன். அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு புசிக்கக் கொடுத்து மனுபுத்திரனே, நான் உனக்கு கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக , அப்பொழுது நான் அதை புசித்தேன் , அது என் வாய்க்குத் தேனைப் போல் தித்திப்பாயிருக்கிறது.”

கர்த்தர் இன்னும் தொலைந்து போன தன் ஆடுகளை தேடிக்கொண்டிருக்கிறார்.
லூக்கா 15 : 1 – 7 ” சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனத்தை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து : இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார். அவர்களுக்கு அவர் சொன்ன உண்மையாவது உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவராயிருந்து , அவைகளில் ஒன்று காணாமற்போனால் , தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு , காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்தவுடன் அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு , வீட்டுக்கு வந்து , சிநேகிதரையும் அயலாகத்தாரையும் கூட வரவழைத்து , காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் எனாபான் அல்லவா? அதுபோல மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். “

எனவே நமக்கு நேரம் கிடைக்கும்போது கர்த்தரிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் . நம் தேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு ஆத்மாவையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்

தந்தையே, இழந்துபோன ஆத்துமாக்களை காப்பாற்ற உங்கள் மகனை அனுப்பியதற்காக நன்றி. இரவும் பகலும் உம்முடைய வார்த்தைகளை தியானிக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய கிருபையை தரும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறோம் . ஆமென்.

Sol.Jasmine James

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-11-2022

” பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்.பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.”(மத்தேயு 16 : 19)

பரலோக ராஜ்யத்தின்  சாவியைப் பற்றிய இயேசுவின் போதனை இது. உங்களுக்கு ராஜ்யத்தின் சாவியைத் தருவேன் என்று சொல்லும் போது, எந்த ஒரு உண்மையுள்ள கிறிஸ்துவை பின்பற்றுபவர்களும்  இயேசுவின் அடையாளத்தின் அஸ்திவார பாறையாக, இந்த வார்த்தைகளை பேசுவார்கள் என்று  இந்த வசனங்கள் பேசுகின்றன. உண்மையாக  மக்களுடைய வாழ்க்கையின் ராஜ்யத்தை திறப்பதற்கு , இந்த சாவியை பயன்படுத்துகிறார்கள்.

இதே அதிகாரம் பேதுருவுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. இயேசுவின் படையணியிலுள்ள நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் பார்வையில் நாம் சிறப்பு மிக்கவர்கள்.  அவரின் ராஜ்யத்திற்கான பணியைச் செய்ய நாம் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். இயேசுவையும்  அவருடைய போதனைகளையும் நம்ப வேண்டும்.

மத்தேயு 18 : 18 ல் இயேசு சாதாரண மக்களிடம் பேசுகிறார். உண்மையாகவே உங்களிடம் சொல்லுகிறேன் பூலோகத்தில் நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். பூலோகத்தில் எதை கட்டவிழ்ப்பீர்களோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் . இன்று இயேசு நம்மிடம் வருகிறார். அதே வார்த்தைகளை நம்மிடம் சொல்லுகிறார்.

நாம் ஒரு பெரிய நிலையோ அல்லது  வேலையோ கிடைக்கும்போது , பணியாளர்கள் , வேலை செய்யும் அதிகாரத்தை தருகிறார்கள். இதே வழியில் தான் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் சாவிகளை பயன்படுத்தும் அதிகாரத்தை தருகிறார். எப்படியோ  இந்த தடத்தை தவறவிட்ட மற்றவர்கள் , அல்லது இந்த உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது இந்த வார்த்தைகளின் மதிப்பை உணர்ந்து கொள்ளாதவர்கள் எல்லோருக்குமே இந்த சாவி கொடுக்கப்படும். இப்போது கர்த்தர் இதைக்குறித்து மிகவும் தெளிவுபடுத்துகிறார்.  எனவே நாம் காத்திருக்க வேண்டாம். விழித்திருப்போம்.  நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயராலே, சாத்தானின் கிரியைகளை கட்டி அழிக்க வேண்டும்.

1 யோவான் 3 : 8  ” பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான் . ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”

ஒருமுறை வதோதராவில் வசிக்கும் என்னுடைய மூத்த சகோதரர்  என்னிடம் ஒரு கொள்ளைக்காரன் தனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் தங்க வந்திருப்பதாக கூறினார். இதன்காரணமாக பலவிதமான மக்கள் மதுபானங்கள் வாங்க அங்கு வந்திருக்கிறார்கள். அதனால் சிலவித தொந்தரவுகள் அங்கு இருந்திருக்கிறது.  என் சகோதரனுடைய இன்னொரு பக்கத்திலுள்ள வீட்டில் ஒரு பெண் மதுபானங்களை தயாரித்து விற்கவும் செய்திருக்கிறார். பலவிதமான மக்கள் எந்த நேரத்திலும் அங்கு வந்து மதுபானம் வாங்கிச் செல்வர்.இதுவும் இன்னொரு வகையான தொந்தரவு. ஒருநாள் என்னுடைய சகோதரனுடைய வீட்டிற்கு நான் சென்றேன். நான் அந்த கொள்ளைக்காரனைக் குறித்தும், அந்தப் பெண்ணைக் குறித்தும் தீர்க்கத்தரிசனம் உரைத்து ஜெபித்தேன். சில நாட்கள் கழித்து அந்தக் கொள்ளைக்காரனையும் ,அந்தப் பெண்ணையும் குறித்து விசாரித்தேன். ஆச்சரியப்படும் விதமாக அந்தக் கொள்ளைக்காரன் அந்த இடத்தை காலி செய்துவிட்டு தூரமாக போய்விட்டதாக அறிந்தேன். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானம் தயாரிப்பதை விட்டு விட்டதாக சொல்லக் கேட்டேன்.

எபேசியர் 1 : 3  ல் சொல்லியபடி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட  இடங்கள் , சூழ்நிலைகள், நிலைமைகள்,கட்டமைப்புக்கள் , துறைகள் அல்லது வேறு ஏதாகிலும் பரலோகத்தின் ஆசீர்வாதங்களே.

கர்த்தர் நம்முடைய நாவினை ஆசீர்வதித்திருக்கிறார். நமது நாவிற்கு சக்தியை கொடுத்திருக்கிறார். நமது வாயினால் என்ன சொல்கிறோமோ அது நடக்கும். நமது வாழ்வில் இறப்புகள் வரலாம். மலைகள் நகரலாம். உலர்ந்த மரங்கள் பசுமையாக மாறலாம் . பிசாசை கட்டளையிட்டால் அது செல்லலாம் .  இயேசுவின் நாமத்தினால் எந்த நோயையும் நமது நாவினால்  கட்டளையிட்டு  வெளியேற்றலாம்.

என்னவொரு வல்லமைமிக்க அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எங்கிருந்தாலும் , சில விஷயங்கள் முறையாக நகரவில்லை என்றாலும், லஞ்சமாக இருந்தாலும், விபச்சாரம், அரசு அலுவலகங்களில் வேலை சரிவர நடக்காமலிருப்பது, விக்கிரக வழிபாடு ,  நீதிமன்றங்களில் வழக்குகள் நீடித்திருப்பது  , நீதி கிடைக்காமை  எல்லாவற்றையும் கட்டி ஜெபித்து விடுவிக்க வேண்டும். பரலோகத்தின் கதவுகளை திறப்பதன் மூலம் எல்லா ஆசீர்வாதங்களையும் பரலோகத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

எங்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய ராஜ்யத்திற்காக பணியாற்றுவதற்கான அதிகாரத்தையும் உம்முடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக எங்களை தகுதிப்படுத்தவும் துன்பத்திலும் வைதனையிலும் இருப்பவர்களுக்கு நீதியையும் அமைதியையும் கொடுப்பதற்காகவும் , யாரெல்லாம் எங்களுக்கு அருகிலும் தூரத்திலும் இருக்கிறார்களோ அவர்களுக்கும்,  தொகுதிகளுக்கும், தேசத்திற்கும் , இந்த நிலத்திற்கும் , தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் , இந்த முழு படைப்பில்  சாபத்தில் இருக்கும் எல்லோருக்காகவும்

இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. டாக்டர். மோகன் பர்மர்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-11-2022

” அந் நாட்களிலே அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி , இரவு முழுவதும் தேவனை நோக்கி , ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். “
லூக்கா 6 : 12

சராசரியாக வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டும். இல்லையென்றால் மனரீதியாவும் உடல்ரீதியாகவும் படிப்படியாக மோசமடையும் என்று என்று ஆராய்ச்சி காட்டுகிறது. முடிவாக நமது உடல் ஓய்வைத் தேடுகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. எப்படியிருப்பினும், ஒரு விசுவாசி ஜெபம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் , நமக்கு ஜெபத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட நேரம் இருக்கிறதா?
இதை நாம் இயேசுவின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். பல மைல் தூரம் நடந்து, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, இடைவிடாமல் பிரசங்கித்து, கர்த்தருடைய வார்த்தைகளை போதித்து, மக்களை குணமாக்கிய பின்னால், இயேசு எவ்வளவு ஓய்வெடுக்கிறார் என்பதை காணலாம்.


மாற்கு 1 : 35 ” அவர் அதிகாலையில் , இருட்டோடே எழுந்து புறப்பட்டு , வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார்.


இயேசு, தன்னுடைய பிதாவோடு தனித்திருக்கவும், மக்களுக்காக பரிந்துரைக்கவும் , தன்னை இந்த உலகத்திலிருந்து திரும்ப பெறுவதற்கும் இரவுமுழுவதும் ஜெபிப்பதற்காக ஒரு தனி இடத்தை பயன்படுத்தினார். இதைத்தான் அவர்
மத்தேயு 6 : 6 ல் ” நீயோ ஜெபம் பண்ணும்போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு ” என்று சொல்கிறார். நாம் அந்தரங்கமாக ஜெபிக்கும்போது நம் வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
தன்னுடைய பிதாவும் தந்தையுமானவர் உடனான தனிப்பட்ட ஜெபம் தன்னுடைய உடலுக்குத் தேவையான சத்துக்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அவர் தனது 12 சீடர்களை தெரிவு செய்யும்போது தன்னுடைய இரவு நேரத்தை ஜெபத்தில் கழித்தார்.
லூக்கா 6 : 12. ல் இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அல்லது நன்றி சொல்வதாக இருந்தாலும் ,அதாவது 5000 பேருக்கு உணவளித்த பின், அவர் கர்த்தருடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மத்தேயு 14 : 23 ” அவர் ஜனங்களை அனுப்பி விட்ட பின்பு , தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி சாயங்காலமான போது அங்கே தனிமையாக இருந்தார். பிதாவாகிய கர்த்தரை தேடும்போது அவர் முழங்காலிலிருப்பார். நம்முடைய வாழ்க்கையின் கடினமான நேரங்களிலும் கத்தரை இன்னும் அதிகமாக தேடவேண்டும்.
எபிரேயர் 5 : 7 ” அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்,தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி பவத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி , வேண்டுதல் செய்து தமக்குண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு
நாம் நம்மை, விசுவாசியாக, அவரை பின்பற்றுபவராக, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் படையணியின் வீரர்களாக அழைக்கிறோம். நாள் முழுதும் சாத்தானின் திட்டங்களை எதிர்த்து போரிடவும் செய்கிறோம். அப்படி செய்வதற்கு நாம் எங்கிருந்து பலத்தை பெற முடியும்? கர்த்தருடனான , புதிய நம்பிக்கையாலும், வீரியமிக்க புதிய அபிஷேகத்தாலும் நிரப்புகின்ற நிலையான ஜெபத்தினால் மட்டுமே முடியும். நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்.

2 தெசலோனிக்கையர் 5 : 17 “இடைவிடாமல் நாம் ஜெபம் பண்ணுங்கள்.

எசாயா 55 : 6 ” கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் , அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்.”

ஜெபம்
அப்பா உம்மண்டை எங்களை இழுத்துக்கொள்ளும் ஏனென்றால் நாங்கள் அநேக நேரத்தில் ஜெபிக்க தவறி எங்கள் சுய ஞானத்தையும் பெலனையும் சார்ந்து கொள்ளுகிறோம். எங்கள் மக்களுக்காக மன்றாட எங்களை எழுப்பியருளும்.கர்த்தாவே உமது அன்பினால் இரக்கத்தினால் கருணையால் எங்களை நிரப்பும். நாங்கள் இந்த வாழ்க்கையில் சோர்வடைவதால் உம்முடைய அன்பான அணைப்பினால் எங்களுக்கு சமாதானத்தைத் தாரும். உம்மை நோக்கி அணிவகுத்துச் செல்ல எங்களை ஆயத்தப்படுத்தும். அதனால் எங்கள் பந்தயத்தை முடிக்க முடியும். நீர் எங்களுக்குத் தந்த வேலை “முடிந்துவிட்டது” என்று எங்களால் பெருமையாக சொல்ல முடியும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம் . ஆமென்

Sol. நேகா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-11-2022

எபிரேயர் 10 : 38 “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் , பின்வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது.”

வெப்ஸ்டருடைய புதிய உலக கல்லூரி அகராதி ,விசுவாசத்தை ‘ எந்தவித ஆதாரம் அல்லது சான்றோ தேவைப்படாத ,கடவுள் மட்டும் ஆன்மீக கோட்பாடுகள் மீது கேள்வி இல்லாத நமிபிக்கை” என்று வரையறுக்கிறது.

நாம் ஒரு நாற்காலியில் உட்காரும்போது எப்போதாவது நாற்காலியின் கால்களை பரீட்சித்துப் பார்ப்போமா? இல்லையே. அந்த நாற்காலி நம்மை தாங்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. நாம் விமானிக்கு உரிமம்
இருக்கிறதா என்று பரிசோதித்து விமானத்தில் ஏறுவதில்லை. அந்த விமானி செல்ல வேண்டிய இலக்கில் நம்மை கொண்டு சேர்ப்பார் என்று நம்புகிறோம். கிருபையால் விசுவாசத்தின் மூலம் காப்பாற்றப்படுகிறோம்.
எபேசியர் 2 : 8 , 9

கர்த்தர் தன் பிள்ளைகளிடம், அவரை முழுவதும் சார்த்துகொள்ளுபடி எதிர்பார்க்கிறார். அவர் நமக்கு நம்மில் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரையும் அவருடைய வார்த்தையின் மூலமாகவும் நம்மை முற்றிலும் ஜெயம் கொள்கிறவர்களாக மாற்றுவார்
எபிரேயர் 11 ம் அதிகாரம் விசுவாசத்தின் வாழ்த்தரங்கம்.

நாம் இப்போது விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமைப் பற்றி பார்க்கலாம். அவர் செல்வதற்கு கூகுள் வரைபடமோ அல்லது பயண வழிகாட்டியோ அவருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் கர்த்தர், ஆபிரகாமுடைய சொந்த இடமாகிய ஆரானை விட்டு வெளியேறச் சொன்னவுடன் , கர்த்தர் அவருக்கு சொன்ன இடத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவதாக வாக்கு கொடுத்தார் ஆதியாகமம் 12: 1- 3.

ஆபிரகாம் கீழ்படிந்தார். பின்னர் ஆபிரகாமும் சாராவும் தங்களுக்கு வாரிசு இல்லாததைக் குறித்து அதிருப்தி அடைந்தனர். கர்த்தர் அந்த வயதான தம்பதிக்கு சொந்தமாக ஒரு மகனை தருவதாக வாக்கு கொடுத்தார். ஆபிரகாமுக்கு மகனைக் குறித்து வெளிப்பாடு கிடைத்து 24 ஆண்டுகள் கடந்த பிறகு , ஆபிரகாமுடைய 99 ம் வயதில் அவர்களால் முடியாத காலத்திலும் அவர் விசுவசித்தார். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த போது அவருடைய விசுவாசத்தின் சாட்சி வியக்க வைத்தது.

ஆபிரகாம் தன்னுடைய மகனுடன் சந்தோஷமாக நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்போது கர்த்தர் அவருடைய ஒரே மகனை கண்டிப்பாக தியாகம் செய்ய வேண்டும் என்று அறிவித்தார். ஆபிரகாம் எந்த வித சந்தேகத்தின் நிழலும் இல்லாமல் , கண் இமைக்கும் நேரத்தில் , தன் மகனுக்கு மீண்டும் வாழ்க்கைத்தர கர்த்தரால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தன் மகனை தியாகம் செய்வதற்கு அழைத்துச் சென்றார்.
கலாத்தியர் 3 : 11 நியாயப் பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

2020 ம் ஆண்டில் நல்ல வருமானமுடைய என்னுடைய வேலையை இழந்தேன். எனக்கு ஒருவர் மூலமாக ஆண்டவருடைய வார்த்தை கிடைச்சது என் இளைய மகன் கனடாவுக்கு மேல் படிப்புக்கு செல்வான் என்று.நான் சாராவை போல நகைத்தேன் என்னுடைய பொருளாதார வாசல்கள் அடைபட்ட இந்த நேரத்தில் அவன் செல்வது சாத்தியமில்லை என்று நினைத்தேன். கர்த்தரிடத்தில் தீவிரமான விசுவாசம் மற்றும் நம்பிக்கை எனக்கு தேவை பட்டது இந்த சூழ்நிலை அதை நான் செய்ய என்னக்கு கற்றுக்கொடுத்தது. நான் பேதுருவை போல தண்ணீரில் நடக்க வேண்டியதாயிற்று. எத்தனையோ முறை நான் என் நம்பிக்கையை விட்டுவிடலாம் என்று நினைத்தபோது அவருடைய கிருபையும் வார்த்தையும் என்னை ஜெயத்துக்கு கொண்டு வந்தது. என்னுடைய மகன் 05.05.2022 அன்று டொரோண்டோ புறப்பட்டான். இது ஆச்சாரி யல்லாமல் வேறொன்றுமில்லை.விசுவாசம் எரிக்கோ மதிலை விழச் செய்தது, செங்கடலைப் பிளந்தது, இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்தது. விசுவாசம் இல்லாவிட்டால் கர்த்தர் மகிழ்ச்சி அடைய மாட்டார்.


ஜெபம்
அன்பின் பரலோகத் தந்தையே, எங்களுடைய நல்ல நாட்களிலும் மோசமான நாட்களிலும், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி உம்மையே நம்ப எங்களுக்கு கற்றுத் தரவேண்டும் என்று இயேசுகிறிஸ்துவின் வல்லமையான நாமத்தின் பெயரால் உம்மை நோக்கி ஜெபிக்கிறோம். நீரே என்றும் உயர்ந்தவர் என்பதை அறிந்திருக்கிறோம் . ஆமென்.

Sol. லலிதா மேனன்