தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-12-2022

பிசாசு அழிக்கப்பட்டுவிட்டது.

கர்த்தரின் பிள்ளைகளாக நாம் தோல்வியிலிருந்து வெற்றிக்கோ  அல்லது சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கோ நகரவில்லை. ஆனால் விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு நகர்ந்தோம்.

ரோமர் 1 : 17  ” விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. “

எனவே நமது வெற்றியின் தொடக்கப்புள்ளி கிறிஸ்துவின் வெற்றியாகும்.

1 கொரிந்தியர் 15 : 57 ” நம்முடைய  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். “

சந்தேகம் , தோல்வி, விரக்தி , இயலாமை, நம்பிக்கையின்மை போன்ற எண்ணங்களுடன்  நாம் வெற்றியான வாழ்க்கையை முன்னெடுக்க முடியாது. நாம் நீண்ட நாட்கள் பிசாசினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. ஏனென்றால் அவனுக்கு அரச குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை தோல்வி அடையச் செய்வதற்குரிய வல்லமையோ அதிகாரமோ கிடையாது. அவன் கர்த்தருடைய பிள்ளைகளை மட்டுமே ஏமாற்ற முடியும்.

மரண பயத்திலிருந்து விடுபடுதல்.

நாம் மரண பயத்திலிருந்து மட்டுமல்ல சாத்தானிடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். இயேசு , மாமிசத்தில் வந்து ,   சாவுக்கு அதிகாரம் உடையவனை அழிப்பதற்காக , மரண சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்து நமக்காக மரித்தார். அதாவது சாத்தானை அதிகாரம் இல்லாதவனாக ஆக்கினார். அவனை முடக்கினார். அவனை ஒன்றுமில்லாதவனாக பூஜ்யத்திற்கு தள்ளினார். இப்போது அவனால் மனிதனுடைய ஆவியையும் ஆத்துமாவையும் அழிக்க முடியாது.

1 கொரிந்தியர் 15 : 55″  மரணமே! உன் கூர் எங்கே ? பாதாளமே ! உன் ஜெயம் எங்கே ?

இயேசு , சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்வதற்கு அவனை  விலக்கினார். அவனது செங்கோலையும் அதிகாரத்தையும்  பறித்து , பூமி முழுவதையும் ஆதிக்கம் செலுத்தவும் ஆட்சி செய்யவும்   அதை மனிதனிடம் கொடுத்தார்.

ஆதியாகமம் 1 : 26  ” பின்பு தேவன் : தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக . அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். “

சங்கீதம் 8 : 4 – 6 ” மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் , மனுஷகுமாரனை  நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் ? நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர், மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து  சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்படுத்தினீர். “

எபிரேயர் 2 : 8 ”  சகலத்தையும் அவனுக்குக் கீழ்படுத்தினார் என்கிற விஷயத்தில் அவனுக்கு கீழ்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை. “

ஆனால் சாத்தானின் பொய்களால் ஆதாமும் ஏவாளும் ஏமாற்றப்பட்டனர்.

* அவர்கள் கர்த்தரின் மறைப்பையும் இழந்தனர்.அவர்கள் ஆட்சி செய்யும்

அதிகாரத்தை இழந்தனர்.கர்த்தருடைய கிரீடம் அவர்கள் தலையிலிருந்து விழுந்தது.அவர்கள் சாத்தானின் அதிகாரத்தின் கீழ் வந்தனர். இப்போது , கர்த்தருடைய படைப்புகளையும் மனிதனையும் அவனால் ஆட்சி செய்ய முடியும் என்று நினைத்தான். ஆனால் அவர்களுக்கு,  இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுக்கக்கூடிய “கிருபை என்று அழைக்கப்படும். ஒன்று கர்த்தரிடம் இருந்தது என்பதை சாத்தான் முற்றிலும் அறிந்திருக்கவில்லை. அன்பும் இரக்கமும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் :13  : 8  உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவும் அதை வணங்குவார்கள் .” உலகம் உண்டானதிலிருந்து கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி.

*ரோமர் 4 : 25 ” அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும் , நாம் நீதிமான்களாக ஆக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். “

மனிதனுடைய வீழ்ச்சிக்கு கர்த்தர் விலைமதிப்பற்ற கிரயத்தை செலுத்தினார். ஏன் ? அவருடைய மகன்களும் மகள்களும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய அழகை , தங்களுடைய கீழ்படிதல் மற்றும் அன்பின் வழியாக பிரதிபலிக்க வேண்டும்,  திரும்பவும் பூமியில் கர்த்தருடைய ராஜ்யம் நிறுவப்படவேண்டும் என்ற ஆசையை நிறைவைற்றவே இந்த கிரயத்தை செலுத்தினார். ஆமென்.

சாட்சி

குணப்படுத்தவும்,  பாதுகாக்கவும் , நமக்கு எதிரான சாத்தானின் அனைத்து குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தவும், நமக்கு எதிராக எழுதப்பட்ட குறியீட்டை ரத்து செய்யவும் , தீயசக்திகளின் வல்லமைகளையும் அதிகாரங்களையும்  நிராயுதபாணிகளாக்கவும் , நம்மை கழுவவும் , நமது மனசாட்சியை பனிபோல வெண்மையாக்கவும்,  இயேசுவின் ரத்தத்திற்கு அற்புதமான வல்லமை உண்டு.

எனவே இயேசுவின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும்   நமது ஜெபங்கள் எல்லாம் பதிலளிக்கப்படுகின்றன. பலவிதமான நோய்களிலிருந்து மக்கள் குணமாக்கப்படுகின்றனர்.

ஜெபம்

தந்தையே,  சிலுவையில் நீர் எங்களுக்காக என்ன சாதித்தீரோ அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.  பாவத்திலிருந்தும் , நோயிலிருந்தும் , நித்திய தண்டனையிலிருந்தும் எங்களை மீட்க நீர் சிந்திய விலைமதிப்பற்ற உமது ரத்தத்திற்காகவும் நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

Sol. நொரீன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-12-2022

அப்போஸ்தலர் 3 : 19
” ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும் , முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும் “


அப்போஸ்தலர் 26 : 18
” அவர்கள் என்னைப்பற்றும் விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பையும் , பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக , அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களை திறக்கும் பொருட்டு , இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். “

ஒருமுறை நம்முடைய எண்ணங்களும் இருதயங்களும் இருளாக்கப்பட்டால் , சாத்தானுடைய தாக்கங்கள் அங்கு இருக்கும். கர்த்தர் நம்முடைய கண்களை திறந்து , நம் இருதயங்களுக்குள் அவருடைய வெளிச்சத்தை பிரதிபலிக்க செய்ததற்காக அவரை போற்ற வேண்டும். எவருமே தம்முடைய சொந்த தகுதிகளால் இரட்சிக்கப்படவில்லை. தம்முடைய சொந்த திறமைகளால், அறிவால் அல்லது வரங்களால் கர்த்தருக்கு பணி செய்பவர் ஒருவருமில்லை. இவையெல்லாம் கர்த்தருடைய கிருபையே .

சாட்சி

சில நாட்களுக்கு முன்பாக, பஞ்சாபிலுள்ள கர்தஸ்பூர் என்ற இடத்தில் மன்னித்தல் மற்றும் ஒப்புரவாதல் பயிற்சிப்பள்ளி நடந்தது. ஆசிரியர் வகுப்பு எடுக்கத் தொடங்கியபோது , ஒரு மாணவராலும் அங்கே கட்டுப்பாட்டுடன் இருக்க முடியவில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் , அவர்கள் உலக கடவுளின் ( சாத்தானின்)கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தார்கள். அவர்கள் வகுப்பை கவனிக்க விரும்பவில்லை. இதுவே 2 கொரிந்தியர் 4 : 4 லுள்ள வேத வசனங்களில் எழுதப்பட்டுள்ளது.” தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் ஒளி , அவிசுவாசிகளாகிய அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு , இப் பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். “


பிறகு இப்படியோ அந்த ஆசிரியர் மதியம் 1மணியளவில் 5 மாணவர்களை மட்டும் வைத்து வகுப்பை ஆரம்பித்தார். வகுப்பு நல்லபடியாக நடந்து கொண்டிருந்த போது, வந்திருந்த மாணவர்களுக்குள் ஒரு தேக்கநிலை உருவாகியது. அதன்பிறகு வகுப்பு நன்றாக சென்றது. மன்னித்தலைப் பற்றி அந்த மாணவர்கள் அறிந்து கொண்டார்கள். அந்த வகுப்பில் மக்களின் அரண்கள் தகர்க்கபட்டன. நிறைய மக்கள் மனம் திருந்தியது, கர்த்தருடைய மிகப் பெரிய அதிசயமாக இருந்தது. இப்படிப்பட்ட வகுப்பு இதுவரை அவர்களுக்கு எடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டார்கள். 5 நாட்கள் கழிந்தபிறகு , ஒருங்கிணைப்பாளர் அந்த ஆசிரியரை அழைத்து , நிறைய மக்கள் இருளிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்றும் அந்த மக்களிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினார்கள். எல்லா புகழையும் கர்த்தர் ஒருவருக்கே தருகிறோம்.

ஆம், நாம் எல்லாரும் பேராசை , இச்சை , மகிழ்ச்சியின் மேல் விருப்பம் , புகழின் மீது ஆசை ஆசியவற்றால் குருடாக்கப்பட்டிருக்கிறோம். இயேசு ஒருவரால் மட்டுமே நம் கண்களை திறக்க முடியும். அவருடைய வார்த்தைகளுக்கு நம்முடைய வாழ்வை மாற்றக்கூடிய வல்லமை இருக்கிறது.

அப்போஸ்தலர் 2 : 37 ” இதை அவர்கள் கேட்டபொழுது , இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து ; சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.”
மக்கள் விசுவசித்தார்கள், மனம் திரும்பினார்கள் , இயேசு தங்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்று நம்பினார்கள் . இயேசுவை பின்பற்றுவதற்கு அடையாளமாக அவர்கள் ஞானஸ்நானம் எடுக்க சம்மதித்தார்கள். மக்களின் இருதயங்களை தொட கர்த்தர் நம்மை பயன்படுத்த வேண்டும் என்றும் , வேதவசனங்களை மற்றவர்களுக்கு அன்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நாம் ஜெபிக்க வேண்டும். இயேசுவிடமிருந்து வரும் ஒரு தொடுகை, சாத்தானுடைய மோசடிகளையும் , கண்மூடித்தனமான பொய்களையும் நம்மிடமிருந்து அகற்றி அதிசயமான வெளிச்சமாக மாற்றிவிடும்.
லூக்கா 24 : 47 ” அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்ப்படவும் வேண்டியது. “

அவர் இரட்சிக்கிறார், அவர் மன்னிக்கிறார், அவர் அழைக்கிறார், அவர் அதிகாரம் அளிக்கிறார். நாம் இந்த அனுபவத்தை தக்க வைப்பதற்கு ஒரே வழி, கர்த்தருடைய மாறாத வார்த்தையாகிய சத்தியத்தின் மீது நிற்க வேண்டும் . சத்தியம் ஒரு நாளும் மாறாது.

ஜெபம்


பரலோகத் தந்தையே, உம்முடைய சத்தியமான வார்த்தைக்கும் , நிலையான உம் அன்பிற்கும் , ஆசீர்வாதங்களுக்கும் , நன்மைகளுக்கும் நன்றி செலுத்துகிறேன். சாத்தானுடைய பொய்களை உணர்ந்து கொள்ளவும் , ஆசைகளை மறுக்கவும் , உம்முடைய சத்தியங்களை நம்பவும் எங்களுக்கு உதவி புரியும். எங்களுடைய வலிமையாக இருக்க கிருபை புரியும். உம் மீது ஏக்கமாக இருக்கிறோம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. பூனம் பத்ரா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-12-2022

” பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் , பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் “

மத்தேயு 16 : 19

நவம்பர் 21 , 2022 ல்  டெல்லியிலுள்ள ஜோசப் மண்டலத்தில் காலை ஆராதனையின் போது தினம்தோறும் ஜெபிக்கக்கூடிய  அனுதின ஜெபத்தில் , மேலே தரப்பட்டுள்ள மத்தேயு அதிகாரத்தின் வசனங்களை, அதாவது கட்டுவதற்கும் அவிழ்ப்பதற்குமுள்ள அதிகாரங்களை  நினைவூட்டி இதயத்தில் பெரும் பாரத்தை கர்த்தர் உண்டாக்கினார்.  என்னுடைய இதயமாகிய  ஆலயத்திலுள்ள இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரது காலடியில்  கீழுள்ள  தூசியைப்போல , கீழ்கண்ட வசனங்களை தியானிக்கும் போது இன்னும் அதிகமாக கர்த்தரிடமிருந்து அவரது கட்டளைகளைக் குறித்து   அறிந்து கெண்டேன்.

மத்தேயு 11 : 28 – 30 ” வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்   நான் உங்களிடத்தில் இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது .” இந்த வசனங்களை தியானிக்கும் போது நன்றாக காற்றடைக்கப்பட்ட ஒரு தலையணையைக் கர்த்தர் எனக்கு காட்டினார். பிறகு கர்த்தர் எனக்கு,  விரும்பத்தகாத எல்லா பொருட்களையும்   ( இவை கர்த்தரிடமிருந்து வந்தது அல்ல) அதாவது என் பெயர், அகங்காரம் , பெருமை , எனது பதவி , அதிகாரம் , ஏதாவது சாதனைகள் , தகுதிகள் எல்லாவற்றையும் நரக நெருப்பில் கட்டி அழித்து வெறுமையாக்கு என்று சொன்னார்.

இந்த வெளிப்பாட்டில் கர்த்தர் கலாத்தியர் 5 : 19 – 21 ல் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் காட்டினார்.

”   மாமிசத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன : விபச்சாரம் , வேசித்தனம் , அசுத்தம் , காமவிகாரம் , விக்கிரக ஆராதனை , பில்லி சூனியம் , பகைகள் , விரோதங்கள் ,வைராக்கியங்கள், கோபங்கள் ,சண்டைகள் , பிரிவினைகள் , மார்க்கபேதங்கள் , பொறாமைகள் ,கொலைகள் , வெறிகள் , களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். “

யாக்கோபு 1 : 17   “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி , ஜோதிகளின் பிதாவினிடத்தில் இறங்கி வருகிறது ; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. ”  கலாத்தியர் 5 : 19 – 21 லுள்ள எல்லா விஷயங்களையும் காலி செய்யும்போது  யாக்கோபு 1 : 17 லுள்ள  பரலோக ஆசீர்வாதங்கள் வற்றாத ஜீவ நதியாக பாயப்படடு நிரப்பப்படும்.

கலாத்தியர் 5 : 22 ” ஆவியின் கனியோ அன்பு , சந்தோஷம் , சமாதானம் ,நீடிய பொறுமை ,தயவு , நற்குணம் , விசுவாசம் “

கலாத்தியர் 5 : 22 கர்த்தரின் ஏராளமான அருளையும் ,மத்தேயு 16 : 19 பரலோகத்தின் அதிகாரங்களையும்  வலியுறுத்துகின்றன. இவை ஒவ்வொரு விசுவாசிக்கும் கர்த்தரால் வழங்கப்பட்ட , மற்றும் பரலோகத்திலிருந்து வந்த , விடுவிக்கப்பட்ட ,  ஏராளமான கிருபை மற்றும் அதிகாரங்களை வலியுறுத்துகிறது.  மேலும் இவைகள் ஒவ்வொரு விசுவாசியிடமும்  அவர்களை  இரட்சிப்பதற்கான கடமை உணர்வு ,  பொறுப்பு அவற்றை நோக்கியே விதைக்கப்படவேண்டும். சிறைப்பட்டிருக்கும்  விலைமதிப்பற்ற ஆத்துமாக்கள் விடுவிக்கப்படவேண்டும்.

அன்புள்ள கர்த்தாவே, மத்தேயு 16 : 19 ல் தரப்பட்டுள்ள சகல  அதிகாரங்களுக்கும் நன்றி. மத்தேயு 28 : 18 – 20 ல் தரப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் கடமையுடன்  பின்பற்றி ஆத்துமாக்களை காப்பதற்கு அவசரமாக ஓட வேண்டும். உமது அழைப்பு , ஒரு நொடி  கூட வெட்கத்திற்கு உள்ளாக்காதபடி ,இயேசுவின் படையணியிலுள்ள ஒவ்வொரு விசுவாசியையும் ( வீரரையும் ) இதற்கு தகுதியுள்ள பாத்திரமாக மாற்றும்படி இயேசுவின் நாமத்தின் பெயரால் உம்மை நோக்கி ஜெபிக்கிறோம். ஆமென். அல்லேலூயா.

Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-12-2022

லூக்கா 19 ம் அதிகாரம்.

சக்கேயு எரிகோவின் தலைமை வரி வசூலிப்பவர். அதாவது ரோமானிய அரசாங்க பணியாளர். வருவாய் துறையில் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர். அந்நாளில் மக்கள் அதிகமான வரி விதிக்கப்பட்டனர். மிக அதிக அளவு பணம் வரியாக செலுத்தவேண்டியிருந்தது . அத்துடன் வரிவசூலிப்பவர்கள் தங்களது பங்கையும் அதில் சேர்த்துக் கொண்டனர். வரிசெலுத்துபவர்களை பாதுகாக்க சட்டமும் இல்லை. எனவே  இயேசுகிறிஸ்துவின் காலத்தில் வரி வசூலிப்பவர்கள் பாராட்டப்படவோ, விரும்பப்படவோ இல்லை. சக்கேயு நவீன உலகத்தில் வாழ்ந்திருந்தால் , இயேசு எரிகோவை கடந்து போவதை சமூக வலைதளங்கள்  செய்திகள் , சுவரொட்டிகள்  மூலமாகவோ தெரிந்திருக்க முடியும். ஆனால் அவர் இந்த இயேசுவைப் பார்க்க இருதயத்தில் நோக்கமாக இருந்தார். ஆனால் அங்கே மகத்தான கூட்டமாக இருந்தது. அவரது உயரமே அவருக்கு எதிராக இருந்தது.  அவர் இயல்பிலே குள்ளமாக இருந்தார்.

அது அவரைத் தடுக்கவில்லை. அந்த கூட்டத்திற்கு முன்பாக ஓடி ஒரு மரத்தின் மீது ஏறி இயேசுவைக் காண்பதற்கு காத்திருந்தார். அதற்கு அவர் சமூக விதிமுறைகளை மீற வேண்டியிருந்தது. ஓடுவதற்கு தனது நீண்ட ஆடையை சிறிது தூக்க வேண்டும். யூத கலாச்சாரத்தில் ஆண்கள் ஓடமாட்டார்கள். கூட்டத்தினருக்கு அவரை பிடிக்காததால் அவரை பார்த்து சிரித்திருக்க வேண்டும் அல்லது அவரை வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால் அது ஒன்றுமே அவரைத் தடுக்கவில்லை. சக்கேயு இயேசுவின் முன்னிலையில் இருக்க எந்த காரணத்தையும் கூறவில்லை. கூட்டத்தினருக்கு சாதகமான எதிர்ப்பின் மத்தியில் , இயேசு அவர் மரத்தின் மேல் இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக கீழே வரும்படி கூறினார்.

லூக்கா 19 : 5 – 6  ” இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது , அண்ணாந்து பார்த்து , அவனைக் கண்டு   சகேயுவே , நீ சீக்கிரமாய் இறங்கி வா , இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்  என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு போனான். “

இயேசு சகேயுவை அழைத்தது கூட்டத்தினருக்கு ஒரு கலாச்சார அதிர்வை கொடுத்திருக்க வேண்டும்.  இயேசு எப்படி  ஒரு பாவியோடு  பேச முடியும்?  இயேசுவோ  சக்கேயுவின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கவுன்சிலர் வீட்டிலோ,அல்லது மேயர் வீட்டிலோ அல்லது எம்எல்ஏ வீட்டிலோ அல்லது போதகர் வீட்டிலோ அல்ல. ஆனால் மக்களால் மிகவும் வெறுக்கக்கூடிய சக்கேயுவின் வீட்டில். இயேசுவின் பிரசன்னம் அவரை தன் குற்றத்தை உணர வைத்தது, செய்த தவறுக்காக மனம் வருந்தினார். அவரது வாழ்க்கை முற்றிலுமாக திரும்பியது.

மாற்கு 5 : 25 – 34. இப்போது நாம் உதிரப்போக்குடைய பெண்ணைப் சந்திக்கலாம்.  அவள் சுவிசேஷத்தில் 3  இடங்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறாள்.  லேவியராகமம் 15 : 25 – 27 ல் அவள் அசுத்தமானவளாக கருதப்பட்டாள். இதன்காரணமாக அவள் தனிமைப்படுத்தப்பட்டு தனியே வாழ்ந்தாள். அவள் தொட்டதெல்லாம் அசுத்தமானது. 12 வருடங்களாக மக்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாமல் மக்களால்  தனிமைபடுத்தப்பட்டாள். அவள் சபிக்கப்பட்டாள் ,தூற்றப்பட்டாள். அவளது செல்வத்தின் பெரும்பகுதி சிகிச்சையை தேடுவதற்கும் மருத்துவரிடம் கட்டணம் செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டது. ஆனாலும்  மருத்துவத் துறையால் அவளது பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. இன்னும் மோசமான நிலையையே கொடுத்தது. அவள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டாள். அநேகமாக தன்னை புத்திசாலியாக வைத்திருப்பது கடினம் என்று கண்டுபிடித்தாள். அவள் இயேசுவைப்பற்றி கேட்டறிந்தாள் . இந்த பிரச்சனையிலிருந்து குணமடைய விரும்பினாள். அவள் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படவில்லை. இந்த இயேசுவால்  தன்னை குணப்படுத்த முடியும் என்று நம்பினாள். சட்டம் அவளை இயேசுவை சந்திக்க அனுமதிக்காததால் , ஒரு வியூகத்துடன் மக்கள் கூட்டத்திற்குள் நெருக்கியடித்து  நுழைந்து, அவளை குணமாக்கும் சக்தி உடையது என்று நம்பிய  அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள். இயேசு உடனடியாக திரும்பி,  மிகுதியான விசுவாசமுடைய  அந்தப் பெண்ணை பார்த்தார். மேலும் அவள் குணமடைந்தது மட்டுமல்லாமல் இரட்சிக்கப்பட்டாள் ( முழுமையடைந்தாள் ) என்று எண்ணினார்.

நாம் இயேசுவை சந்திக்காமல் இருப்பதற்கு நம்மிடம் நிறைய காரணங்கள் இருக்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணலாம். நாம் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்க்கலாம். இயேசுவை சந்திக்க ஒவ்வொரு விதியையும் மீறுவதற்கு நாம் தயங்காவிட்டால் நம் வாழ்க்கை எவ்வளவு  முழுவதுமாக மாறும்.

இயேசு  மக்களை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளங்களுக்கு, அவர்களுடைய பாவங்களுக்கு அப்பாற்பட்டு பார்த்தார். மக்களைப் பார்க்கும்போது இயேசுவின் கண்களோடு அவரது இருதயத்தோடு பார்க்க வேண்டும் என்று ஜெபிப்போம். எந்த நேரத்திலும் இயேசுவை நோக்கி ஓட தயங்காமலிருக்க ஜெபிப்போம். ஆமென்.

Sol. லலிதா மேனன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-12-2022

மனிதகுலத்திற்கு தனது கட்டளைகளை   கவனமாக ஒப்படைப்பதற்குரிய கர்த்தரின் கடினமான முயற்சிகள்.

யாத்ராகமம் 20 : 3 – 7 ” என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் , பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு  உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற  நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து , என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்பு கூர்ந்து , என் கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன்.  உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.”

கர்த்தர்  தம் கட்டளைகளை தன் விரல்களால் எழுதி  கற்பலகைகளின் மீது ( ஆதலால் யாராலும் அழிக்க முடியாதபடி) பொறித்து உறுதி செய்ய முயன்றார். எனவே மனிதன் உண்மையிலும் ஆவியிலும் அவருடைய கட்டளைகளை பின்பற்றி கீழ்படிகிறார்கள் .

யோசுவா  1 : 7 - 9 " என் தாசனாகிய மோசே உனக்கு கற்பித்த நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் செய்ய கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு . நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டு பிரியாதிருப்பதாக . இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய். அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய். நான் உனக்கு கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே . நீ போகுமிடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். “

இன்னும் கர்த்தரால் மனிதர்களை இதைப் பின்பற்றும்படி செய்ய முடியவில்லை. அவர்கள் தங்கள் பாவ வழிகளிலே தொடர்ந்தனர். நித்திய அழிவிலிருந்து மனிதனைக் காப்பாற்ற கர்த்தர் தமது முயற்சிகளைத் தொடர்ந்தார்.

கர்த்தருடைய கட்டளைகள் மனிதனுடைய எண்ணங்களில் விதைக்கப்பட்பட்டு அவர்களின் இருதயங்களில் சேமிக்கப்பட வேண்டும். ஆனால் மனிதகுலம்  இன்னும் கீழ்படியாமையை தேர்ந்தெடுத்து பாவத்திலே தொடர்ந்தது.

கர்த்தர் இன்னும் தம்முடைய காணாமல் போன ஆட்டினை தேடிக் கொண்டிருக்கிறார். இறுதியில் அவருடைய ஒரே மகனை அனுப்பத் திட்டமிடுகிறார்.

யோவான் 3 : 16  சொல்கிறது . ” தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்தார். “

கர்த்தர் தன்னுடைய ஒரே மகனை, இந்த உலகத்தை கண்டிப்பதற்காக அனுப்பவில்லை. மாறாக அவர் வழியாக இந்த உலகத்தை இரட்சிப்பதற்காகவே வந்தார்.

ரோமர் 10 : 9 – 10

“கர்த்தராகிய இயேசுவை நீ உன்  வாயினால் அறிக்கையிட்டு , கர்த்தர்  அவரை மரித்தோரிலிருந்து  எழுப்பினாரென்று  உன்  இருதயத்திலே விசுவசித்தால்  இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும் , இரட்சிப்பு ண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.”

எனவே நாம் நேரம் கிடைக்கும்போது பாவத்தை  அறிக்கையிட்டு  மன்னிப்புக் கோருவோம். இரட்சகரிடமிருந்து இரக்கம் பெறுவோம். நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு உயிருள்ள ஆத்துமாவையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-12-2022

எசாயா 41 : 10 ” பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகைக்க வேண்டாம், நான் உன் கடவுள்.”

தானியேல் 3 : 8 – 17  சாத்ராக் , மேஷாக், மற்றும் ஆபேத்நேகா ஆகியவர்கள் இஸ்ரவேலின் ஒரே உண்மையுள்ள கர்த்தரை  பின்பற்றுபவர்களாகவும் ஆராதிப்பவர்களாகவும் இருந்தனர்.

பொய்க்கடவுள்களையும் , நெபுகாத் நேச்சார் அரசனின் பொன் சிலையையும் வணங்கும்படி அவர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுத்து அக்கினிச் சூளையில் தள்ளப்பட்டனர்.

அவர்கள் சர்வவல்லமையுள்ள கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்படிவதையும் அவரை பின்பற்றுவதையும் தேர்ந்தெடுத்தனர்.

யாத்ராகமம் 20 : 2 – 17 மற்றும்

உபாகமம் 5 : 6 – 21 ல்  ” என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்கக் கூடாது என்றும் விக்கிரகங்களை உருவாக்காதே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்கள் இந்த உலகில் மனிதனால் செய்யப்பட்ட விக்கிரகங்களை   செய்வதற்குப் பதிலாக  சரியான வழியாகிய உயிருள்ள கர்த்தரை ஆராதிப்பதை தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால் மனிதர்களைவிட கர்த்தராகிய தேவனை பிரியப்படுத்துவது மிக முக்கியமானது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

எல்லா மனிதர்களும் பொருட்களை , பாரம்பரியங்களை, சடங்குகளை ,உருவாக்குமுன்பே  முன்பே கர்த்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

எசாயா 54 : 17  ” உனக்கு விரோதமாய்  உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்”

ரோமர்  8 : 31 ” தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? “

 சங்கீதம் 60 : 11 – 12 ” இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும் . மனுஷனுடைய உதவி விருதா.தேவனாலே பராக்கிரமம் செய்வோம், அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுவார். “

நாம் முழு இருதயத்தோடு கர்த்தரை நம்பும் போது நாம் நமது சுயபுத்தியில் சாயாமல் இருப்போம் . நம்முடைய எல்லா வழிகளிலும் அவரை ஏற்றுக்கொண்டால் அவர் நம் பாதைகளை செம்மைப்படுத்துவார்.

கர்த்தர் தம்முடைய தூதரை அனுப்பி சாத்ராக் , மேஷாக் மற்றும் ஆபேத்நேகா ஆகியோரைக்காப்பாற்றினார். அவர்கள் அக்கினிச் சூளையிலும் பாதுகாப்பாக இருந்தனர். அவர்களது தலையின் ஒரு முடிகூட கருகவில்லை. ராஜாவான நெபுகத்நேச்சர் இதைக் கண்டு  தாழ்மையடைந்து கர்த்தரை மகிமைப்படுத்தினார். மேலும் அவருடைய ராஜ்யத்தில் மிகப்பெரிய மரியாதையும் உயர்ந்த பதவியும் கொடுத்தார்.

நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்போது , அவர் நம்மை விடுவித்து , நம்மை பாதுகாத்து நம் எதிரிகள் முன்பாக நம்மை மேன்மையாக்குவார்.

சங்கீதம் 23 : 4 – 5  “நான் இருளின்  பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி , என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. “

சங்கீதம் 91 :14 – 16  ” அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.  அவன் என்னை நோக்கி கூப்பிடுவான். நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து அவனைக்கனப்படுத்துவேன். நீடித்த நாட்களில் அவனைத் திருப்தியாக்கி என் இரட்சிப்பை அவனுக்கு காண்பிப்பேன். ”  ஆமென்.

Sol.  ரும்னாபிரமாணிக்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-11-2022

மாற்கு 9 : 38 – 41 ” அப்பொழுது யோவான் அவரை நோக்கி , போதகரே நம்மை பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம். அவன் நம்மை பின்பற்றாதவன் ஆனதால் அவனைத் தடுத்தோம். என்றான். அதற்கு இயேசு அவனைத் தடுக்க வேண்டாம் என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்து தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரொதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவனுடையவர்கள் ஆகியிருக்கிறபடியினாலே என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனை அடையாமல் போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இதே அர்த்தமுள்ள வசனங்கள் மாற்கு 9 : 40 ல் ” நமக்கு விரோதமாயிராதவன் நமக்கு பட்சத்திலிருக்கிறான் என்றார் ” என்றும்,  லூக்கா 9 : 50 ல் ” அதற்கு இயேசு, தடுக்க வேண்டாம் , நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம் , யாரெல்லாம்  தங்களுடைய சொந்த வழிகளில்  இயேசுவினுடைய நாமத்தை பிரசங்கிக்கிறார்களோ, அவருடைய வார்த்தைகளை போதிக்கிறார்களோ சரியோ அல்லது தவறோ  அவர்கள் எல்லோரும் அறுவடை செய்பவர்களாகவோ , இயேசுவினுடைய அறுவடையின் பணியாளர்களாகவோ அழைக்கப்படுவார்கள். கர்த்தர் அவருடைய நேரத்தில் அவர்களை சரிபண்ணுவார். அப்போஸ்தலராகிய பவுல் , பிலிப்பியருக்கு எழுதிய கடிததம்  1 : 15 – 18  ல் குறைந்தபட்சம்  எப்படியோ கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவதற்காக நாம்  மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 

இதேபோல் நாம் மத்தேயு 12 : 30 ல் ” என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான் , என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் ” என்று காணலாம். இது மேலும் குறிப்பது ,இயேசுவை பின்பற்றாதவர்,  எதிரியின் வல்லமையில் வேர்விடுவதால்  கர்த்தரின் ராஜ்யத்தில் நிற்கவும் முடியாது, அவரை பின்பற்றவும் முடியாது.

நான் காலை ஆராதனைக் குழுவில் இந்த வசனங்களைக் குறித்து தியானிக்கையில் இந்த வசனங்களை பலவித வழிகளில் புரிந்து சிலிர்த்துவிட்டேன். பரிசுத்த ஆவியானவர் மத்தேயு 5 ம் அதிகாரத்தை நினைவூட்டினார்.இயேசு மலையின்மீது பிரசங்கம் பண்ணுகையில் யாரெல்லாம்  உண்மையான, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்று கூறுகிறார். ஒருவர் கர்த்தருடன் நிமிர்ந்து நடந்தால் அவர்கள் இயேசுவினுடைய நாமத்தை மறுக்க மாட்டார்கள். மேலும் அவருடைய நாமத்தில்  பயபக்தியை  காட்டுபவர்கள் அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவார்கள்.

சங்கீதக்காரன் சங்கீதம் 15 : 1- 2 ல் சொல்கிறான். ” கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் ? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான். உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தை பேசுகிறவன்தானே. “

சங்கீதம்  92 : 12 ” நீதிமான் பனையைப்போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளருவான். “

நான் இந்தியாவைக் குறித்த என்னுடைய விஷனை என் நிறுவன சபையில் பகிர்ந்த போது அவர்களுடைய பொறுப்பின்மையால் பின்னடைந்து அந்த நிறுவன சபையை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஏனென்றால் ,  வேதவசனங்களுக்கு உடன்படாமல் தங்களுடைய பாரம்பரிய வழிகளை  தொடர்ந்ததன் முலம் கர்த்தரை தேடுவதில் சரியான வழியை தேர்ந்தெடுக்கவில்லை. எப்படியிருப்பினும் ஒருவர் என்னிடம் மேற்கூறிய வசனங்களை பகிர்ந்த போது, நான் அந்த சபையை , எப்படியோ  இயேசுவை பிரசங்கிக்கிறார்கள் என்று ஆசீர்வதித்தேன்.  கர்த்தர் அவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களை சரிபடுத்துவார். நான் ” இயேசுவின் பணையணி ” என்னும்  ஊழியத்தை எனக்குத் தந்ததற்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.

ஜெபம்

தந்தையே, உம்முடைய ராஜ்யத்தை விரிவு படுத்துவதற்கும் உம்முடைய நாமத்தை பயபக்தியுடன் சொல்பவர்களை ஆசீர்வதிப்பதற்கும் ,உம்மை மறுக்காமலிருப்பதற்கும் நன்றி செலுத்துகிறேன். நீர் ஒரு நல்ல மேய்ப்பன் இயேசுவே ,உம்மைவிட்டு தொலைந்து போன ஆட்டினை கூட்டி வரவும் அதனால் நாங்கள் எல்லோரும் பாதுகாக்கப்படவும் 

இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. நேகா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-11-2022

கர்த்தரின் ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறது.

லூக்கா 17 : 21 ” இதோ, இங்கே என்றும் , அதோ அங்கே என்று சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது , இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே. “

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வரும் என்று பரிசேயர் இயேசுவிடத்தில் கேட்ட பொழுது  இயேசு மேற்கண்டவாறு கூறினார்.

கதை

ஒரு கிராமத்தில் ஒரு தச்சன் இருந்தான். ஒரு நாள் ஒரு தேவதை வந்து அவனிடம் உன் காலம் முடிந்துவிட்டது. வா நாம் போகலாம் என்று கூறியது. அதற்கு அந்த தச்சன்  , தயவு செய்து எனக்கு கொஞ்ச காலம் கொடு. எனக்கு  கலப்பைகளை  சரிபார்த்து அமைக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் தான் இந்த பருவகாலத்தில் உழவர்கள் தங்கள் வயல்களில் உழவு செய்ய முடியும். மேலும் விதைகளை விதைக்க தயாராக முடியும் என்று கூறினான்.

அடுத்த முறை அந்த தேவதை  திரும்பவும் வந்து தச்சனிடம் காலம் முடிந்துவிட்டது செல்லலாம் வா என்று கூறியது. அதற்கு தச்சன்,  இந்த முறையும் எனக்கு கொஞ்ச  காலம் கொடு. மழைக்காலம் வரப்போவதால் வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அந்த தேவதையிடம் மன்றாடினான்.

திரும்பவும் சில காலம் கழித்து  அந்த தேவதை தச்சனை எடுப்பதற்காக வந்தது. திரும்பவும் அந்த தச்சன் தேவதையிடம் என்னுடைய குடும்பத்திற்கு என் உதவி தேவைப்படுவதால் இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும் என்று கேட்டான். இது சில வருடங்களாக தொடர்ந்தது. அந்த தச்சன் வயதான பொழுது , இனி மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் , அந்த தேவதையை அழைத்து நீ என்னை எடுத்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு அந்த தேவதை நீ இப்போது எங்கே இருப்பதாக நினைக்கிறாய் ?  நீ ஏற்கெனவே பரலோகத்தில் தான் இருக்கிறாய் என்று சொன்னது.

கர்த்தருடைய ராஜ்யம் நம் மத்தியில்தான் இருக்கிறது.

கர்த்தரின் ராஜ்யம் என்றால் என்ன?  எந்த இடத்திலும் கர்த்தருடைய ராஜ்யத்தை காணலாம். ஆனால் இயேசு கர்த்தருடைய ராஜ்யம் நமக்குள்ளே இருக்கிறது என்று சொல்கிறார்.  ஒவ்வொரு நேரமும்  அன்பு , சேவை, நீதி , அமைதி ,பொறுமை, மென்மை,இரக்கம் , நன்மை, பரிசுத்தம் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இருக்கும் இடத்தில் கர்த்தரின் ராஜ்யம் இருப்பதைக் காணலாம்.

இயேசு கிறிஸ்து இருக்குமிடமே  கர்த்தரின் ராஜ்யம்.

பரலோக ராஜ்யம் நம்முடைய இருதயத்திலே இருக்கிறது.

1 .  கர்த்தரின் ராஜ்யம் அடிப்படையில் உள்நோக்கி, அதாவது மனிதனின் இருதயத்திற்குள்ளே இருக்கிறது .

2 . கர்த்தரின் ராஜ்யம் , நீங்கள்  சரியான தேர்வுகளை  உருவாக்கினால் உங்களுக்குள்ளே வந்தடையும் .

3 . கர்த்தரின் ராஜ்யம்,  உங்கள் நடுவிலே , மனிதர்களுக்குள்ளே , இயேசு இருக்குமிடத்திலே இருக்கிறது.

ஜெபம்

பரலோகத் தந்தையே, நீர் எங்களுக்குள்ளே வாசம் செய்வதற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்வின் எல்லா நேரத்திலும் உம்முடைய உடனிருப்பை உணர்ந்து கொள்ள உதவி செய்யும். எங்களை முன்னின்று வழிநடத்தும். 

இயேசுவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. அன்னபு ரெட்டி பாலா ரெட்டி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 26-11-2022

சங்கீதம் 127 : 1 ” கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் , அதைக் கட்டுகறவர்களின் பிரயாசை விருதா. “


எபிரேயர் 3 : 4 ” ஏனெனில் எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும். எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.”


இன்று , பாதுகாப்பாக வாழ்வதற்கும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கும் , ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு அவசியம். மக்கள் எல்லோரும் தங்களுக்கு ஒரு வீடு கட்டுவதற்கு மற்ற எல்லா வழிகளையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணியாளர்கள் கட்டுமானப் பணியை செய்து வீட்டை உருவாக்குகிறார்கள். ஆனால் கர்த்தர் அவரே கட்டினால் மட்டுமே வீடு கட்டப்படும். நம்மை உண்டாக்கிய கர்த்தர் தான் நமது வீட்டின் திடமான அஸ்திவாரமாயிருக்கிறார்.
நீதிமொழிகள் 24 : 3 – 4 ” வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு , விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவித பொருள்கள்களும் நிறைந்திருக்கும்.
எசாயா 65 : 21 ” வீடுகளைக் கட்டி , அவைகளில் குடியிருப்பார்கள் , திராட்சைத் தோட்டங்களை நாட்டி , அவைகளின் கனியைப் புசிப்பார்கள். “
யார் ஒருவர் முழு இருதயத்தோடு கர்த்தரை நம்புகிறார்களோ , கர்த்தரை மட்டுமே சார்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு தன் சொந்த வீட்டைக் கட்டுவதற்குரிய ஞானத்தையும் , புரிதலையும் , அறிவையும் தந்து அவர்கள் அதில் வசிக்கும்படி ஆசீர்வதிப்பார். அவர்கள் தன் சொந்த உழைப்பின் பலனை உண்பார்கள்.
எசாயா 32 : 16 ” வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும். செழிப்பான வயல்வழியிலே நீதி தங்கித் தரிக்கும். “
1 சாமுவேல் 25 : 6 ” உமக்குச் சமாதானமும் , உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும் உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானம் உண்டாவதாக “

கர்த்தர் நமக்கு தரக்கூடிய வீடு அமைதி நிரம்பியதாகவும் எந்த பிரச்சனைகளும் இடையூறும் இல்லாததாக இருக்கும். அங்கே சந்தோஷமும் மகிழ்ச்சியும் எல்லா இடத்திலும் இருக்கும். கர்த்தர் உங்கள் வீட்டை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பார். அவரே உங்கள் வீட்டை கவனித்து, பாதுகாப்பார். ஏனென்றால் நீங்கள் உங்கள் வீட்டை, உண்மையான வாழும் கர்த்தராகிய பாறை மீது உருவாக்கியிருக்கிறீர்கள். கர்த்தரே நமது உண்மையான வீடு. அங்கே அமைதி காணப்படும். மகிழ்வுடன் ஓய்வெடுக்க முடியும் .

ஜெபம்


பரலோகத் தந்தையே, கர்த்தரே கட்டுபவராக இருக்கும்படியான வீட்டைக் கொடுக்கும்படி எல்லா மக்களையும் ஆசீர்வதியும் . அங்கே அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் உம்மையே சேவிக்கவும் உம்மை மட்டுமே ஆராதிக்கவும் ஜெபிக்கிறேன். கர்த்தரிடமிருந்து வரக்கூடிய ஞானத்தினாலும் புரிதலினாலும் பாறையாகிய உமது மீது வீட்டைக் கட்டுவதற்கு எல்லோரையும் ஆசீர்வதிக்கும்படியாக

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஹிமாக்ஷி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 24-11-2022

” அப்பொழுது இயேசு , பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே “

லூக்கா 23 : 24

எபிரேயர் 10 : 7 ல் அவர் மேலும் சொன்னது ” தேவனே உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன். புத்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன்  என்றார் “

இந்த வழியில் இயேசு இரண்டாவதை நிறுவுவதற்காக முதலாவதை தொலைக்கிறார்.

முதலில் சொன்னது என்ன?  ஆதியாகமம் புத்தகத்தில் கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினார். சில காலத்திற்குப்  பிறகு அவர்களுடைய கீழ்படியாமையினால் , அவர்களை உண்டாக்கின தேவன் , தெய்வீக பிரசன்னத்திலிருந்து அவர்களை பிரித்தார் என்பதை அறிகிறோம். மேலும்  ஆதாம்,  கர்த்தருடைய பிரசன்னத்தில்  நிலைத்திருந்ததால் கிடைத்த  கர்த்தரின் தெய்வீகத் தன்மையை   விட்டு பிரிக்கப்பட்டார் . நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது  மனித குலத்தை மன்னிக்கும் தெய்வீகத் தன்மையைப் பார்க்கலாம். ஆதாமும் ஏவாளும் எப்போது நன்மை தீமை அறியக்கூடிய பழத்தை உண்டார்களோ , அவர்களுடைய நடத்தை ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் அளவிற்கு சென்றது.

அவர்கள் தங்களுடைய தவறினை ஒத்துக் கொள்ள தயாரில்லை. மேலும் கர்த்தருடைய தெய்வீக மன்னிப்பு  அவர்களிடத்தில் காணப்படவேயில்லை. கர்த்தர் இந்த சுயநலத்தையும் , மனித குலத்தின்  உடல்ரீதியான நடத்தைகளையும்  கவனித்தார் . இது அவர்களது வரவிருக்கும் தலைமுறைகளில் தொடர்ந்தது . ஆனால் கர்த்தர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த  , மனித குலத்தின் தெய்வீக தன்மையை  திரும்பவும்  கொண்டு வர முடியாமல் , அவர்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும்படி வைத்தார்.

காயீன் , ஆபேலிலிருந்து இன்று வரை , தன்னுடைய படைப்புகளிடமிருந்து எதிர்பார்த்த இத்தகைய தெய்வீகத்தன்மையை யாரிடமிருந்தும் பெறுவது கடினமாகவே இருந்தது. நோவா நீதியுள்ள மனிதன். ஆனால் ஒரு சிறிய பிரச்சனைக்காக தன்னுடைய மகனை மன்னிக்கத் தவறி அவனுக்கு சாபமிட்டார். நோவா மதுபானத்தினால்  நிர்வாணமாக கிடந்தார். அவருடைய மகன் காம் அந்த நிலையில் தன்னை பார்த்ததை விரும்பவில்லை. அதன் விளைவாக அவனை மன்னிப்பதற்கு பதிலாக சாபமிட்டார்.

இஸ்ரவேல் மக்கள்

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களை யாராலும் சாபம் கொடுக்க முடியாது என்பதை  பாலாக்கின் விஷயத்தில் நாம் காணலாம். பாலாக் ராஜா பிலயாம் என்ற தீர்க்கத்தரிசியை அழைத்து , என்னுடைய ராஜ்யத்தின் வழியாக கடந்து செல்கின்ற இஸ்ரவேலர்களை சபிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் கர்த்தர் அவ்வாறு செய்யக்கூடாது என்று பிலயாமை எச்சரித்தார்.

எண்ணாகமம் 22 : 12 ” அதற்கு தேவன் பிலயாமை நோக்கி நீ அவர்களோடே போக வேண்டாம் , அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் “. அதன் விளைவாக பிலயாம் தீர்க்கத்தரிசி இஸ்ரவேலர்களை சபிக்க மறுத்தார்.  இதன் அர்த்தம்  கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எல்லாம் வல்ல கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். யாரெல்லாம்  கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்களோ அவர்களுக்கு   தண்டனை இல்லை, அவர்கள் முழுவதுமாக மன்னிக்கப்பட்டவர்கள்.  கர்த்தராகிய இயேசு தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்காகவும், அதாவது நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்றும் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்றும் பிதாவாகிய தந்தையிடம்  மன்றாடுகிறார் . போதகர்கள் நமக்கு எதிராக நின்றாலும் கூட  நம்முடைய கர்த்தர் ,அவருடைய பிள்ளைகளுக்கு சாதகமாக இருப்பார்.

இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால் பழைய உடன்படிக்கையை நிராகரித்து  தன்னுடைய சிலுவை மரணத்தினால் நம்முடைய எல்லா சாபங்களையும் தானே எடுத்துக் கொண்டார்.

மத்தேயு 26 : 39 சொல்கிறது”  சற்று அப்புறம் போய் முகங்குப்புற விழுந்து : என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின் படியை ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.

 தெய்வீக அன்பை, இரக்கத்தை , மன்னிப்பை நமக்கு காண்பித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே நமது ஆசீர்வாதம்.

ஜெபம்

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ,இந்த பூமியில் நாங்கள் இருக்கின்ற  ஒவ்வொரு நொடியையும் உம்முடைய பரிசுத்த பிரசன்னத்தோடு செலவழிக்க கிருபை தாரும். நீர் உம்மையே தியாகம் செய்து, எங்கள் தவறுகளை மன்னித்து நித்திய வாழ்விற்கு எங்களை ஆசீர்வதித்தீர். எங்களிடம் அத்துமீறுகின்ற ஒவ்வொரு நபரையும் நாங்கள் மன்னிக்கும்படி உதவி செய்ய 

இயேசுகிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. குஷி