தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 10-01-2023

வெளிப்படுத்தின விசேஷம் ;  1 : 3  ” இந்த தீர்க்கத் தரிசன வசனங்களை வாசிக்கிறவனும் , கேட்கிறவர்களும் , இதில் எழுதியுள்ளவர்களைக் கைக் கொள்ளுகிறவர்களும்  பாக்கியவான்கள். காலம் சமீபமாயிருக்கிறது. “

மேற்குறிய வசனத்திலிருந்து ஒருவரின் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும் ஐந்து விஷயங்களையும்,  வசனங்களை கைக்கொள்கிற மக்கள்  ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

1 . ஒருவருக்கு உறுதியான விசுவாசம் இருக்க வேண்டும்.

2 கொரிந்தியர் 5 : 6 ” நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.” இந்த வசனத்தின்படி நாம் பார்வையினால் நடக்காமல் விசுவாசத்தினால் நடக்கிறோம். இந்த வசனம் , கர்த்தரை விசுவாசிக்கும் மக்கள் தங்கள் எல்லா செயல்களையும் விசுவாசத்தினாலே செய்கிறார்கள். உலகப்படியான மக்கள் தன்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்து அதற்கு எதிர்வினை செய்கிறார்கள். விசுவாசம் இல்லாத இடத்தில் கிறிஸ்தவம் கேலிக்கூத்தாக மாறுகிறது. விசுவாசத்தின் பொருளை நாம் மிகைப்படுத்த முடியாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில்  கிறிஸ்தவத்தின் பயணம் ‘விசுவாசத்தின் நடை’  என்று அழைக்கப்படுகிறது.

எபேசியர்  2 : 8    “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ” என்று சொல்கிறது. எனவே நாம் எல்லாவற்றிற்கும் கர்த்தரையே நம்பி அச்சமின்றி வாழ முடியும். எந்த கிறிஸ்தவனும் அவர்களுடைய நல்லவை பற்றி தற்பெருமை காட்ட முடியாது.

2 . கர்த்தருடைய கிருபையினாலும் அறிவாலும் விசுவாசம் பெருகும்.

2 பேதுரு 3 : 14 – 15

” ஆகையால் பிரியமானவர்களே , இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.  மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள். நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். ”  பேதுரு விசுவாசிகளுக்கு இங்கே எழுதுகிறார். பேதுரு எந்த வகையான சமாதானத்தை விவரிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. பேதுரு இரட்சிப்பிலிருந்து வரும் சமாதானத்தை விவரிக்கவில்லை. மாறாக பரிசுத்தமாக்குதலில் வளரும் சமாதானத்தை விவரிக்கிறார்.

 3 . தூய்மையான மற்றும் பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் .

யோவான் 17 : 17 ” உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும் : உம்முடைய வசனமே சத்தியம். “

நாம் எங்கே குறையாக இருக்கிறோம் அல்லது தவறு செய்கிறோம் என்பதை கர்த்தருடைய வசனம் காட்டுகிறது. அது நம்மை திருத்துகிறது. மற்றும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ ஊக்குவிக்கிறது. கர்த்தருடைய வசனம் நம்முடைய வாழ்வு மற்றும் விதியின் பாதுகாவலராக இருக்கிறது.

4 . இது நாம் கர்த்தருக்கு பணி செய்ய வல்லமையை தருகிறது.

எபேசியர் 2 : 10 ” ஏனெனில் , நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு , தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.” நல்ல செயல்களுக்கான உங்களின் ஆர்வமும் வைராக்கியமும் அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் செயல்களின் பலனாகும்.  ஏனென்றால் நம்மிலும் பெரியவர் நம்மில் செயல்படுகிறார்.

5 . பணி செய்ய நம்மை தயாரிக்கிறது.

கொலோசியர் 3 : 16   “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக் கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள். ” கர்த்தருடைய வசனம் நல்ல தேர்ந்த அறிவுடன் மற்றவர்களுக்கு கற்பிக்கும் திறனை தருகிறது. மேலும் அது நம்மை தயார்படுத்தி அவரை துதிக்கவும் ஆராதிக்கவும் நமக்கு விருப்பத்தை தருகிறது. நாம் அவற்றை உள்வாங்குவது நம்முடைய வாழ்வின் நலனை தீர்மானிக்கிறது.

ஜெபம்

பிதாவே, எங்களுக்கு வாழ்வளிக்கும் உமது வார்த்தைக்காக நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வார்த்தைகள் எங்களை உமது ஆவியுடன் இணைக்கிறது. உமது வார்த்தைகள் உம்முடைய பரிசுத்த சந்நிதியில் வந்து தங்குவதற்கு எங்களை தயார்படுத்துகிறது. ஆமென்.

Sol. பாபு செபாஸ்டின்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-01-2023

எரேமியா 15 : 16 ” உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் , என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. “

பழைய ஏற்பாட்டின் அழுகை தீர்க்கத்தரிசி என்று அழைக்கப்படும் எரேமியா , உடைந்து கொண்டிருக்கும் யூதேயா தேசத்தை எச்சரிக்க அதன் தெற்கு ராஜ்யத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அது கடினமான வாழ்க்கையாக இருந்தது. அவர் , நான் உமது பெயரால் அழைக்கப்பட்டேன், உமது வார்த்தையை கண்டதும் அவற்றில் நான் மகிழ்ந்தேன் என்கிறார்.  இது கிறிஸ்துமஸ் , புத்தாண்டு நேரம். மக்கள் குடும்பங்களாக  விருந்துகள் மற்றும் பஃபேக்களில் சந்திக்கும் காலத்தில் மேஜை நிறைய நல்ல உணவுகள் இருக்கும். இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கர்த்தரின் வசனங்களைப் படிக்கும் போது தனது அனுபவம் மேற்கூறியபடி இருந்தது என்று எரேமியா கூறுகிறார். அது அவருக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.  வேறு விதமாக சொல்லப்போனால் , கர்த்தருடைய வசனம் அவரது ஆத்தும உணவு. அது அவரது சோதனைகளுக்கு மத்தியில் அவரை மாற்றியது.

யோவான் 1 : 1 ” ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது “

நாம் கர்த்தருடைய வசனங்களை வாசிக்கும்போது , நாம் கர்த்தரை வாசிக்கிறோம், கேட்கிறோம் என்பதே இதன் அர்த்தம்.

கராத்தருடைய வசனங்களின் பலன்களை பார்ப்போம். நாம் கஷ்டங்களையும் கடினமான நாட்களையும் எதிர்கொள்ளும்போது , உங்கள் கஷ்டங்களை சரிசெய்ய கவலைப்படாதீர்கள். கர்த்தருடைய வசனங்களை தோண்டி எடுங்கள். ஏனென்றால் அவருடைய வசனங்கள் ஆவியும் ஜீவனும் உள்ளது.

யோவான் 6 : 63 ” ஆவியே உயிர்ப்பிக்கிறது   மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது , நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. “

நாம் இருண்ட நாட்களில் நடக்கும்போது , கர்த்தரின் வார்த்தை நம் கால்களுக்கு விளக்காகவும் , நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.

சங்கீதம் 119 : 105 ” உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது”

கர்த்தர் சொல்கிறார் ,அவரது வசனம் நெருப்பு மற்றும் பாறையை உடைக்கும் சுத்தியல் அல்லவா? உங்களது வாழ்க்கையில் பாறையைப் போன்ற பிரச்சனை உள்ளதா? வசனத்தை தேடுங்கள். அதன்மீது அந்த வசனத்தை அறிவியுங்கள். அந்த பாறை உடைந்து எரிக்கப்படும்.

எரேமியா 23 : 29 ” என் வார்த்தை அக்கினியைப் போலவும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலவும் இருக்கிறதல்லவோ ? என்று கர்த்தர் சொல்லுகிறார். உண்மையில் இந்த வசனம்  போருக்கு பயன்படுத்தப்படும் ஒரு வாள். விசுவாசிகள் போரில் இருக்கிறார்கள். நம்முடைய வாள் கர்த்தரின் வசனம்.

எபேசியர் 6 : 17

” இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் , தேவ வசனமாகிய பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். “

 இதில் நமக்கு வெற்றி நிச்சயம். கர்த்தருடைய வார்த்தை வீணாகத் திரும்பாது. அது அனுப்பினதைச் செய்யும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசாயா 55 : 11 ” அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாய் என்னிடத்திற்கு திரும்பாமல் , அது நான் விரும்புகிறதைச் செய்து , நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். “

நமது உணர்வின் ஆரோக்கியம் நமது உடலின்  ஆரோக்கியத்தைப் பொறுத்தே இருக்கிறது. வேதாகமம்  கர்த்தரின் வசனத்தினால் உங்கள் எண்ணங்களை புதுப்பியுங்கள் என்று சொல்கிறது.

ரோமர் 12 : 2 ” நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்  தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். “

நாம் சிந்தனை மேலாண்மையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 5 படிகள் அல்லது 10  படிகள் அதற்கு மேலேயும் உண்டு. ஆனால் கர்த்தருடைய வசனம் நம் சதைக்கு ஆரோக்கியம் என்றும் எலும்புகளுக்கு சிறந்த வலிமை . இதுதான் சிறந்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 3 : 8  ” அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுபாகும். “

எலும்பு மஜ்ஜையில்தான் உயிருக்கு இன்றியமையாத இரத்த அணுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளர்கள் அதை கண்டுபிடிப்பதற்கு முன்பே கர்த்தர் இதைச் சொன்னார். எனவே நாம் கவலை, பதற்றம் ,மனச்சோர்வு , நோய்வாய்ப்பட்டால் மருந்து கர்த்தருடைய வசனத்திலுள்ளது.

நீதிமொழிகள் 4 : 20 – 22 ” என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி: என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய் , அவைகள் உன் கண்களைவிட்டுப் பிரியாதிருப்பதாக : அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக் கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். ” வெற்றியும் வளமையும் அடைய விரும்பாதவர் யார்? இந்தப் புத்தகம் நம் வாயிலிருந்து நீங்காது என்றும் இரவும் பகலும் அதைத் தியானித்து சொன்னபடி செய்யக் கடைபிடிப்போம் என்று கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டார்.

யோசுவா 1 : 8 ” இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டு பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி , இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்.”

இதுவே வெற்றிக்கும் வல்லமைக்கும் திறவுகோலாகும். இந்த உலகத்திலுள்ள எந்த மேலாண்மை புத்தகத்தைவிடவும் சிறந்ததாகும்.

2 தீமோத்தேயு 3 : 16 – 17 ” வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் , கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் , நீதியை படிப்பிக்குதலுக்கும்  பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

ஒவ்வொரு வசனமும் கர்த்தர் சுவாசித்தது என்று வேதாகமம் கூறுகிறது. ஜீவன் நிறைந்த கர்த்தரை சுவாசிப்போம்.  நமக்கு கிடைத்திருக்கும் மிக ரகசியப் பொக்கிஷமான கர்த்தரின் வார்த்தையை முன்னெப்போதும் இல்லாத வகையில் தோண்டி எடுப்போம். அந்த மர்மத்தை அவிழ்த்து 2023 ல் கர்த்தருடன் ஒரு அழகான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்ல பரிசுத்த ஆவியானவர் உதவும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்போம். ஆமென்.

Sol. லலிதா மேனன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-12-2022

2 கொரிந்தியர் 3 : 18  ” நாம் எல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு , ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத் தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். “

புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆண்டு முழுவதும் எங்களோடிருந்து , கர்த்தருடைய வசனங்களில் வளரவும், முன்னேறவும் எங்களது ஜெப வாழ்க்கையில்  உதவி செய்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.   நாங்கள் ஜெயிப்பதற்கும் , மாறுவதற்கும் ,ஜெபத்தில் முன்னேறுவதற்கும்  வசனத்திலும் , சேவையிலும் வளர்வதற்கும்  இன்னும் ஓர் ஆண்டினை எமக்கு அளித்த பரலோகத் தந்தையையும் அவருடைய ஒரே பேறான குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் போற்றி புகழுகிறோம். வருகிற இந்த ஆண்டில் நாம் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வில் வளர வேண்டும். நாம் ஜெபிக்கும் போதும் பரிசுத்த ஆவியானவரின் கிருபையில் நடக்கும் போதும் நாம் கர்த்தரின் பிரசன்னத்திற்குள் நெருங்கி வருகிறோம்.  நாம் அவருடைய இந்த வல்லமை , அன்பு மற்றும் நீதியை அனுபவிக்கும் போது , அவருடைய சாயலில் மாறுகிறோம்.

எபிரேயர் 1 : 3 ” இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும் , அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து , சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்திலே தாங்குகிறவராய் , தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி , உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். “

எபேசியர் 4 : 11 – 13 ” மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத் தக்க பூரண புருஷராகும் வரைக்கும் , பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் , கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும் ,அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும் தீர்க்கத்தரிசளாகவும் , சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். “

கர்த்தருடைய மேலான திட்டமே நாம் அவருடைய குமாரன் இயேசுவாக இருக்க வேண்டும் என்பதே. நாம் ஏற்கெனவே இயேசுவாகிய பாறையிலிருந்து உடைக்கப்பட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் வடிவம் கொடுக்கும் செயல்முறை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இது ஒரு மெதுவான , சிலருக்கு பலநேரங்களில் வேதனை கொடுக்கக்கூடிய செயல் . நம் கர்த்தர் ஒரு கைவினைஞர். அவர் எந்த தவறும் செய்யாதவர். நமது பணி எப்போதும்  அவரது தெய்வீக வழிகாட்டுதலில் இருக்க வேண்டும்.

1 பேதுரு 5 : 6 ” ஆகையால் , ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு , அவருடைய பலத்த கைகளுக்குள் அடங்கியிருங்கள்.”

முயற்சிகளை மேற்கொள்ளும்போது ஒரு போதும் சோர்வடைய வேண்டாம். ஆரம்பம் மெதுவாக இருக்கலாம். பாதை பாறையாக இருக்கலாம். ஆனால் முடிவு மகிமையாக இருக்கும்.

பிலிப்பியர் 1 : 5 ” உங்களில் நற்கிரியைகளை தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்புகிறேன். “

அவருடைய கண் ஒருபோதும் தூங்காது , அவருடைய காது ஒருபோதும் கேட்பதை நிறுத்தாது , அவருடைய கரங்கள் ஒருபோதும் சோர்வடையாது. அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு அத்தகையது. அத்தகைய அன்பிற்கு முடிவே இல்லை.

ஜெபம்

அன்பின் பரலோகத் தந்தையே , நீர் என்னை தெரிந்துகொண்டதற்காகவும்  அன்பு செய்ததற்காகவும் , கற்றுக் கொடுத்ததற்காகவும்,  என்னை உமது பிள்ளையாக உருவாக்கியதற்காகவும் , படிப்படியாக என்னை கட்டுவித்ததற்காகவும் நன்றி செலுத்துகிறேன். தயவு செய்து எனக்கு உதவும் ,என்னை உருக்கும் ,என்னை களிமண்ணாக மாற்றும் . உமக்குப் பிரியமான வழியில் நான் செல்ல என்னை மாற்றும். என்னுடைய வாழ்வினால் நீர் மகிமைப்படுவீராக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் இதைக் கேட்கிறேன். ஆமென்.

Sol. மல்கீத்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-01-2023

“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. “
எபேசியர் 6 : 12

நியாதிபதிகள் 7 – 15 முதல் 8 : 21வரை கிதியோனையும் மீதியானியர்களுடன் போரிட்ட அவருடைய ஜனங்களையும் பற்றி சொல்லப்படுகிறது.  கர்த்தருடைய வழிகாட்டுதலின்படி கிதியோனின் தலைமையில் எக்காளங்களை ஊதி,  பானைகளை உடைத்த பிறகு ,  கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சொன்னார்கள்.

இவைகளுக்கு ஆவிக்குரிய முக்கியத்துவம் உண்டு. நாம்  உலகத்தின் இருளோடு போரோடும்போது அல்லது யுத்தம் செய்யும்போதெல்லாம்  , விசுவாசிகள் கர்த்தரை ஆராதிப்பதையோ  அல்லது துதிப்பதையோ  குறிக்கும் எக்காளத்தை பயன்படுத்தலாம். பட்டயம் என்பது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய கர்த்தருடைய வசனங்களைக் குறிக்கிறது. விளக்கு என்பது நமது உடலில் தங்கி வாசம் செய்யும் கர்த்தரின் வல்லமையைக் குறிக்கிறது.

விசுவாசிகள் போரிடும்போது அவர்கள் தங்கள் சொந்த பலத்தையோ, அல்லது உலகத்திலுள்ள சக்திகளையோ நம்பாமல் கர்த்தருடைய பலத்தை மட்டுமே நம்ப வேண்டும். யோசுவாவும் அவருடைய ஜனங்களும் கர்த்தரை துதித்ததால் எரிக்கோ கோட்டையை தகர்த்தார்கள். யோசுவா 5 :14  மற்றும் 6 :15 ல் இதைக் காணலாம். கர்த்தரை துதிப்பது உள்ளார்ந்த மற்றும் வெளிசார்ந்த  சுவர்களை உடைப்பதில் மிகப்பெரிய வலிமையை கொண்டுள்ளது.

கர்த்தரை துதிப்பது, நமது மனக்காயங்களை ஆற்ற உதவுகிறது. மேலும் சக மனிதர்களுடன்  சமரசம் செய்வது  சாத்தியமாகிறது. உறவுகளை சீர்படுத்துவதற்குரிய படிகளை முன்னெடுப்பதற்கு ஆவிக்குரிய பலத்தை தருகிறது. சங்கீதம் 149 : 8 நம் வாயில் துதி இருப்பதை கோடிட்டு காட்டுகிறது.

விசுவாசிகள் கர்த்தருடைய வசனங்களில் உறுதியாக இருக்க வேண்டும். இது சோதனைகளைக் களைந்து ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவுகிறது. ஒவ்வொருமுறையும்  சோதனைகள் நம்மை  பற்றும்போது, கர்த்தருடைய பிள்ளைகள் எனவும்  பாவத்திற்கு எதிரான போராளிகள் எனவும்  நிரூபிக்க வேண்டும். லூக்கா 4 : 4 ல் கிறிஸ்து ,  ” மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ”  என்று தெளிவாகக் கூறுகிறார். கர்த்தருடைய வசனங்களை பயன்படுத்தியதன் மூலம் அவருடைய சோதனைகளை களைந்தார்.

சங்கீதம் 149 : 8″ அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும் ” என்று சொல்கிறது.

பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நம்முள் இருப்பது, நம்மை பலமுள்ளவர்களாகவும் வல்லமையுள்ளவர்களாகவும் மாற்றும். நாம் அனைவரும் உடையக்கூடிய களிமண்ணைப்போல பலவீனமாக உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

1 கொரிந்தியர் 3 : 16  ” நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும் , தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? “

இந்த வசனத்தில் சொல்லப்பட்டபடி நாம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருந்தால் , அவர் மூலமாக  கர்த்தருடைய பிரசன்னம் நமக்குள் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் பாவத்திற்கு எதிராக நம்மை எச்சரித்து , வெற்றிகரமான வாழ்க்கை நடத்த உதவுகிறார்.

கிதியோனுடைய ஜனங்கள் பானைகளை உடைக்கும்மோது தங்கள் கைகளில் விளக்கை எடுத்துச் சென்றார்கள்.

 1 பேதுரு 2 : 24  ” நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, ” என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நமக்குள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கிதியோனுடைய ஜனங்கள் வாயில் கூச்சலும் , அவர்களை மீதியானியர்களுக்கு எதிராக வெற்றி பெற உதவிய  எக்காளங்களை வலது கைகளிலும் ,  விளக்குகளை இடது கைகளிலும்  ஏந்தியபடி சென்றதை கற்பனை செய்யலாம்.  இருளின் ஆட்சியாளர்கள், பொல்லாத ஆவிகள் மற்றும் உலகின் சக்திகளுக்கு எதிரான நம்முடைய போரில் துதி , ஆராதனை , கர்த்தருடைய வசனங்கள் , பரிசுத்த ஆவியானவர் மூலம் பெறும் வல்லமை ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

ஜெபம்

அன்புள்ள கர்த்தாவே, உமது வசனங்களின் மூலம் நீர் எங்களுக்குத் தந்த ஆயுதங்களை பயன்படுத்தி , உமக்கு மகிழ்ச்சியளிக்கும் தகுதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த எங்களுக்கு உதவும். ஆமென்.

Sol.  ஏஞ்சலின்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 31-12-2022

யோபு 1 : 1 ” ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும் , தேவனுக்குப் பயந்து , பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்”


மேலும் இந்த அத்தியாயத்தை படிக்கும் போது யோபு நிறைய ஆசீர்வாதங்கள் பெற்றவனாகவும் , தனக்காகவும் தன் குழந்தைகளுக்காகவும் எரிபலிகளை செலுத்தி வந்ததாகவும் அறிகிறோம். தன் பிள்ளைகள் பாவம் செய்து கர்த்தரை விட்டுப் பிரிந்திருந்தால் , அவருடைய எரிபலிகள் அவர்களின் பாவங்களைக் கழுவிவிடும் என்று உறுதியாக நம்பினார்.

மேலும் அதே அத்தியாயத்தில், கர்த்தர் யோபுவின் வீட்டை வேலியடைத்து பாதுகாத்தார் என்றும் அவருடைய வேலைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவையாக இருந்தது என்றும் வாசிக்கிறோம்.
ஒருநாள் கர்த்தர் சாத்தானிடம் என் தாசனாகிய யோபுவைக் கண்டாயோ, அவனைப் போல நேர்மையாளனும் தெய்வபயமுள்ளவனும் ஒருவனும் இல்லை என்றார்.

முதலில் நாம் , கர்த்தருக்கு பயப்படும் போது , தீமையிலிருந்து விலகி , நம் வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் கர்த்தர் நம்மைக் குறித்து பெருமைபாராட்டுவார்.
உதாரணமாக , நம்முடைய பிள்ளைகள் நல்லவர்களாகவும் , நமக்கு கீழ்படிபவர்களாகவும் இருக்கும்போது, அவர்கள் நமக்கு கீழ்படிவது மட்டுமல்லாமல் நம்மை அன்புசெய்வதாகவும் நாம் பெருமையாக ஊணர்வோம். இதே போன்றுதான் கர்த்தரும் நம்மைக் குறித்து பெருமை கொள்வார்.
கர்த்தர், நாம் கைகளினால் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் அவருடைய வேலியைக் கட்டுவார்.
கர்த்தர் யோபுவைப்பற்றி புகழும் போது சாத்தான் , கர்த்தருடைய மதிப்பீடு அதிகப்படியானது என்று நம்பி எரிச்சலடைந்தான். அவன் கர்த்தரிடம், யோபுவின் உடைமைகளின் பாதுகாப்பை விலக்கியவுடன் , யோபு உமக்கு நேர்மையாளனாக இருக்கிறாரா என்று காணும் என்று சொன்னான்.
உண்மையில் கர்த்தர் சாத்தானுக்கு ,யோபுவின் பிள்ளைகள் மீதும் , அவனது உணவுமீதும் , அவனது உயிரைத் தவிர அவனது உடல், அனைத்து உடைமைகள் மீதும் அதிகாரம் கொடுத்தார் என்று இந்த அத்தியாயத்தில் வாசிக்கிறோம்.
ஆனாலும் யோபு தன் சொந்த வாயினால் கர்த்தரை நிந்திக்கவில்லை. உறுதியான நம்பிக்கையையே கொண்டிருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்களிடம் யோபு , நாம் கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். பின் ஏன் துக்கங்களை மட்டும் பெறக்கூடாது என்று தைரியமாகச் சொன்னார்.

இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். யோபு நிறைய துன்பப்பட்ட போதிலும் கர்த்தருக்கு எதிராக மோசமாக எதையும் பேசவில்லை.
ஆனால் ,நம்முடைய சொந்த பலவீனங்களாலும் அல்லது தவறான செயல்களாலும் நம் வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால் நாம் கர்த்தரையே பழிபோடுகிறோம். அவருடைய நீதியின் மீதும், அவருடைய செயல்கள்மீதும் நம்முடைய விரல்களை நீட்டுகிறோம். உண்மையில் நம் வாழ்க்கையில் சாத்தானுக்கு ஒரு எழுச்சியை உருவாக்க நாம்தான் ஒரு சந்தர்ப்பத்தை தருகிறோம்.

யோபுவின் வாழ்க்கையை நாம் பார்க்கும்போது , கர்த்தர் பின்னால் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை அவனுக்கு கொடுத்ததை காண்கிறோம். எனவே இன்று நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும் ஒருபோதும் கர்த்தர்மீது பழிபோட முயற்சி செய்யக்கூடாது என்பது முக்கியமான ஒன்றாகும்.

நாம் இப்போது நம்முடைய பாதகமான சூழ்நிலைகளில் நம்மை நாமே பரிசோதித்து நமது வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும். மேலும் நம்மீது கர்த்தர் காட்டும் கிருபையை இரக்கத்தை ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது. கர்த்தர் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் அவரது நம்பகத் தன்மையில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். தவறான வாக்குறுதிகளை அளிப்பதற்கு கர்த்தர் மனிதர் அல்ல.

அன்பின் பரலோகத் தந்தையே , உமக்கு முன்பாக எல்லா மரியாதையுடனும், பயபக்தியுடனும், சிரம் தாழ்த்தி உம்மை வணங்குகிறோம் .
கர்த்தாவே, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் என்ன எதிர்கொண்டாலும் உம்மை விசுவசிப்போம். ஏனென்றால் நீர் நம்பிக்கைக்கு உரியவர் , உமக்கு எதுவுமே கடினமானது அல்ல. உமது பிள்ளைகளுக்கு எந்த தீமையும் வர விடமாட்டீர் என்று நம்புகிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் நான் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. பூனம் ஷர்மா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-12-2022

கர்த்தரை நம்புவதன் பலன்

” கர்த்தர் கிதியோனை நோக்கி ; ஜனங்கள் இன்னும் அதிகம் , அவர்களை தண்ணீரண்டைக்கு இறங்கி போகப்பண்ணு.  அங்கே அவர்களை பரீட்சித்து காட்டுவேன். உன்னோடே கூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ அவன் உன்னோடே கூட வரக்கடவன். உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடே கூட வராதிருக்கக்கடவன் என்றார்”

நியாதிபதிகள் 7 : 4

இந்த வசனங்களில் கர்த்தர் கிதியோனிடம் சொல்லுவதற்குப் பதிலாக , அவனுக்கு அதிகமான மனிதர்களை கொடுப்பதைக் காண்கிறோம். கர்த்தர் அவனிடம் வெற்றியை ஈட்டுவதற்கு  அவனிடம் நிறைய மனிதர்கள் இருப்பதாக கூறுகிறார். சுவாரஸ்யமாக , சில நேரங்களில் கர்த்தர்  நம் பலங்களைவிட பலவீனங்கள் வழியாகவே செயல்படுகிறார். கர்த்தர் வெற்றியைத் தருவதற்கு சில சமயங்களில் இயற்கையாகவே நமக்கு அதிகமான நேரங்கள் இருக்கலாம். நாம் நம்மையோ, நமது சொந்தபலத்தையோ அதிகமாக நம்பியிருந்தால், கர்த்தரால் வேலை செய்ய முடியாது. நம்முடைய பிரச்சனை என்னவென்றால் , கர்த்தரைத்தவிர வேறு யாரேனும் நமக்கு உதவ முடியுமானால் , அற்புதங்கள் செய்ய கர்த்தர் பெரிய அளவில் தேவை இல்லை என்பதாகும்.

கர்த்தர் கிதியோனிடம்  ,  அவருடைய மனிதர்கள்  மிகவும் பலசாலியாக இருப்பதால் , அவர்கள் முழுவதுமாக கர்த்தரையே சார்ந்திருக்கும் நிலையில் இருக்க விரும்பினார். கர்த்தர் அவர்களின் படைகளை,  தமது தெய்வீக தலையீடு இல்லாமல் வெற்றியை அனுபவிக்க முடியாத அளவுக்கு வெட்டினார்.

பெருமையும் தற்பெருமையும் சிறந்த மனிதர்களை அழிக்கிறது. எனவே நாம் தாழ்மையாய் இருப்பதற்கும்,  முழுவதுமாக அவரைச் சார்ந்து இருப்பதற்கும் கர்த்தர் உதவி செய்வார். எதிப்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு வரை , இஸ்ரேல் மக்கள் தாங்கள் செய்ததையே திரும்பத் திரும்ப சுழற்சியாக  செய்தார்கள். கர்த்தரின் மேல் முழுவதுமாக சாய்ந்திருந்தார்கள் . கர்த்தர் அவர்களுக்கு உதவினார். பிறகு அவர்கள் தன்னிறைவு பெற்றவர்களாக , கீழ்படியாதவர்களாக, கலகக்காரர்களாக , கர்த்தர் நமக்கு தேவையில்லை என்ற எண்ணம் உடையவர்களாக மாறினார்கள். அவர்களுடைய  செயல்பாடுகள் எல்லாம் திரும்பவும் மோசமானதாக மாறியது. அவர்கள் கர்த்தரை நம்பியபோது , தங்கள் எதிரிகளை தோற்கடித்தனர்.  கர்த்தரை நம்பாதபோது அவர்களுடைய எதிரிகள் அவர்களைத் தோற்கடித்தனர். கர்த்தரை நம்புங்கள் . உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அனுபவியுங்கள்.

நியாதிபதிகள் 7 : 3

”  ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ, அவன் திரும்பி , கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்க பிரசித்திப்படுத்து என்றார். அப்பொழுது ஜனத்தில் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள். பதினாயிரம் பேர் மீதியாயிருந்தார்கள் “

எத்தனையோ முறை கர்த்தர் நம் இதயங்களில் எதையாவது செய்ய வைப்பார். ஆனால் பயம் வரும்போது நாம் பயப்படுகிறோம். அந்த பயம் நாம் தயங்குவதற்கும் இருமனமாக இருப்பதற்கும் காரணமாகிறது. இந்த சூழலில் நாம் பயப்பட்டால் , பயத்துடனே காரியங்களை செய்யமுடியும்.  ” பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் ” என்ற கர்த்தரின் வார்த்தைகள் நம்முடனே இருக்க வேண்டும் .

எப்போது பயம் உங்கள் கதவைத் தட்டுகிறதோ , அப்போது  உங்களது விசுவாசம் பதில் சொல்லட்டும்.

கர்த்தரை முன்கூட்டியே துதியுங்கள்.

கிதியோன் கர்த்தரிடமிருந்து ஒரு தனிப்பட்ட வார்த்தையைப் பெற்றவுடன், அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றதைப் போல அவருக்கு முன்னால் நடந்த போரைப்பற்றி பேசத் தொடங்கினார்.

நியாயாதிபதிகள் 7 : 14 , 15  “இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேவனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல. தேவன் மீதியானரையும் , இந்த சேனை அனைத்தையும் அவன் கையில் ஒப்புக் கொடுத்தார் என்றார். கிதியோன் அந்த சொப்பனத்தையும் அதன் வியார்த்தியையும் கேட்டபோது அவன்பணிந்து கொண்டு , இஸ்ரவேலின் பாளயத்திற்கு திரும்பி வந்து , எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக் கொடுத்தார் ” .

வெற்றியை அறிவிக்குமுன் போரின் முடிவைக் காண அவர் காத்திருக்கவில்லை. ஆனால் அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றதைப் போல கர்த்தரை புகழ்ந்து துதிக்கத் தொடங்கினார்.

யாத்ராகமம் புத்தகத்தில் , இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்தபின், அவர்களுடைய எதிரிகள் மூழ்கும் வரை கர்த்தரை துதித்து பாடினார்கள்.

யாத்ராகமம் 15 : 1  “அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்து பாடின பாட்டு : கர்த்தரைப் பாடுவேன் ; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் ; குதிரையையும் , குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார். ” எனினும் ஆற்றின் மறுபக்கத்தில் அதாவது தவறான பக்கத்தில்  இந்த வெற்றிப்பாடலைப் பாடினர். அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தனர். அவர்களிடமிருந்த தாம்பூலத் தட்டினால் பாடவும் நடனமாடவும் செய்தார்கள்.  அவருடைய வல்லமையின் வெளிப்பாடுகளைப் பார்த்தபிறகு , பாடலைப் பாடினார்கள். அவர்கள் ஆற்றைக்கடக்குமுன் இந்த வெற்றிப்  பாடலைப் பாடியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

நாம் நமது வெற்றிக்குப் பிறகு கர்த்தரை புகழவில்லை என்றால் நாம் நிச்சயமாக தவறிவிடுவோம் . ஆனால் கிதியோன் தனது போரில் வெற்றி பெறுவதற்கு முன்பு மிகச்சரியாக கர்த்தரை துதித்தார். அவருக்கு தேவையானவற்றை அதாவது அவர் வெற்றி பெறுவார் என்பதை கர்த்தரிடமிருந்து கேட்டார். பிறகு துதிக்கத்  தொடங்கினார்.  போருக்கு முன்பு கர்த்தரை துதிக்கக்  கற்றுக் கொள்வது நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் நாம் எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளச் செய்கிறது.

முடிவுரை

விசுவாசியாக , நாம் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால் கர்த்தர் மீதான நம்பிக்கை என்பது பரிசுத்த ஆவியானவரால்  மட்டுமே வருகிறது. நம்முடைய வேதாகமம் மீண்டும் மீண்டும் , நாம் நம்மீது நம்பிக்கை வைக்காமல் கர்த்தர்மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுகிறது. அவர் கிதியோன் மூலம் செய்ததுபோல நம் வழியாகவும் செய்வார்.நியாயாதிபதிகள் 6 : 34″ அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கினார். அவன் எக்காளம் ஊதி , அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு , தனக்குப் பின் செல்லும்படி செய்தார். “

ஜெபம்

பரலோகத் தந்தையே, நீர்  ஆல்பாவும் ஒமேகாவும் ஆனவர். இந்த படைப்புகளைப் படைத்தவர்.

எல்லாப் புகழும் உமக்கே.

ஆமென்.

 Sol. கமல்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-12-2022

மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் நிலைகள்.

அன்பான சகோதர சகோதரிகளே , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள,  விசுவாசிகளின் அதிகாரத்தை நாம் அறிந்திருப்பதால் , இந்த பத்தியில் அதிகாரத்தின்,  அதாவது நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மறுபக்கத்தை நுட்பமாக காணலாம்.

எபிரேயர் 13 : 17 ” உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால் , அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி , அவர்களுக்கு கீழ்படிந்து அடங்குங்கள். “

இங்கே இந்த வசனத்தில் ஆட்சி என்பது தலைமைத்துவம் உள்ள மேய்ப்பனை மற்றவர்களுக்கு  கொடுப்பதாகும்.

ஒரு மேய்ப்பன் என்பவன் , தன்னுடைய ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பவன் ,  சேவை செய்வதற்கும் , உணவளிப்பதற்கும் ,பாதுகாப்பதற்கும் மொத்தமாக தன்னை அர்ப்பணிப்பவன் .

யோவான் 10 : 11 ல் ” நானே நல்ல மேய்ப்பன் . மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறான். ” என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும் எபிரேயர் 13 : 17 ல் வாசிக்கலாம் .  தலைமைத்துவம் உள்ள மேய்ப்பனைப்  போன்றவர்களை பின்பற்றுங்கள். அவர்களின் கவனிப்பு, உணவளித்தல் மற்றும் அன்பான கண்டிப்புக்கு அடிபணியுங்கள் . ஏனென்றால் அவர்கள் பிரதான மேய்ப்பராக , உங்கள் ஆத்துமாவிற்கு கணக்கு கொடுக்க வேண்டும்.

இயேசு நமது பிரதான மேய்ப்பராக இருக்கிறார். எல்லா விசுவாசிகளும் அவரைப் பின்பற்றுபவர்கள். மேலும் மற்றவர்களுடைய  தினசரி வாழ்விலும் அவர்களை கவனிப்பது நமது கடமையாகும். இதுதான் இறுதியான பொறுப்பாகும். அவர்கள்மீது

ஆத்தும ரீதியிலும் , உடல்ரீதியிலும் , மனரீதியிலும் அக்கறை கொள்ள வேண்டும். இதை நாம் திறம்பட செய்தால் , கர்த்தருடைய பிரசன்னத்தில் இருப்போம். மேலும் கர்த்தருடைய வார்த்தையின் வழியாக நாம் உலகத்திற்கு சென்று நம் வேலைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் தவறு செய்பவர்களாக இருப்போம்.

குறிப்பிட்ட பிரச்சனைக்கு , நாம் கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெறாவிட்டால் ,

நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களாக ஆகிவிடுவோம். வார்த்தை நமக்கு கிடைக்காவிட்டால் , நாம் காரணத்திற்காக போராடுவோம்.

எனக்கு என்னுடைய மாணவர்களுடன் பிரச்சனை இருந்தது. அவர்கள் எப்போதுமே அவர்கள் விரும்புவதை மட்டுமே செய்தார்கள். நான் இதை எப்படி கடந்து செல்வது என்று தெரியவில்லை. அந்த சூழ்நிலைக்காக கர்த்தரை துதிக்கத் தொடங்கினேன். எல்லாம் வல்ல கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்காக போராடினார். நான் இப்போது முற்றிலும் சுதந்திரமாக  நிம்மதியாக இருக்கிறேன். நாம் கர்த்தருடைய நேரத்திற்காகவும் வார்த்தைக்காகவும் காத்திருக்க வேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கான வரம்புகள்.

1 . கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஒருபோதும் நம் பொறுப்பைவிட்டு மீறக்கூடாது.

2 . நமது பொறுப்பிற்கு அப்பாற்பட்டு  வேறெதுவும் நாம் செய்யக்கூடாது. உதாரணமாக நான் அரசுத்துறையில் வேலை செய்வதால், அரசாங்கத்தால் தரப்பட்டுள்ள பொறுப்பிற்கு  நான் கீழ்படிய வேண்டும்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, பரிசுத்த ஆவியானவரே, இதோ உங்கள் முன் வருகிறேன். என் நிறை குறைகளை ஆய்வு செய்து ,உம்முடைய விலைமதிப்பற்ற  இரத்தத்தால் என்னை சுத்திகரியுங்கள். தந்தையே, என் பணியிடத்திலும் என் வீட்டிலும் நீங்கள் எனக்கு வழங்கிய அதிகாரத்தை நிறைவேற்ற போதுமான வலிமையை வழங்குமாறு வேண்டுகிறேன். உமது விருப்பத்தின்படி என் பணிகளைச் செய்ய என்னை பலப்படுத்தும். எனக்குள்ள பணிகளை நான் நிறைவேற்ற  என் வாழ்நாள் முழுவதும் எனக்கு வழிகாட்டும்.

இயேசுகிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறேன்

ஆமென்.

Sol. கமலின் விஜி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 17-12-2022

ஆதியாகமம் 1 : 26 ” பின்பு தேவன் : நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

” இங்கே கர்த்தர், தன்னைப்போலவே உள்ள மனிதனைப் படைத்தார் என்று சொல்கிறார். அப்போது நம் கர்த்தர் எப்படி இருப்பார்? என்ற கேள்வி வரும்.
1 பேதுரு 1 : 16 ல் ” நான் பரிசுத்தர் , ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே ” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


இங்கே உள்ள இரண்டு வார்த்தைகளும் கர்த்தர் நம்மை ,தம்மைப்போல உருவாக்கினார் என்பதை முற்றிலும் தெளிவுபடுத்துகிறது.
நம் வாழ்க்கையில் என்ன சேர்க்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.


நாம் தூய்மையான பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்போது தான் நாம் அவரைப் போல வாழ முடியும். நீதிமொழிகள் புத்தகம் , தீமை செய்பவர்களை யெகோவா தேவன் வெறுக்கிறார் என்று சொல்கிறது. எனவே இந்த வசனத்தின் மூலம் தீமை செய்கிறவர்களை நாம் வெறுக்கிறோமா , அல்லது நாமே தீமை செய்கிறவர்களா என்று நம்மை நாம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளின்படி செயல்படுபவர்கள், தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். நம்முடைய நோக்கம் என்ன என்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்? நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறது? நாம் உண்மைக்கு மாறாக பேசினால் , இன்னும் கர்த்தரின் பிள்ளைகள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியுமா? நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.


2 கொரிந்தியர் 3 : 2 ” எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும் , சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே.” என்று சொல்கிறது. இது மையினால் அல்ல. ஜீவனுள்ள கர்த்தரின் ஆவியானவரால் எழுதப்பட்டது. இவை கற்பலகைகளால் எழுதப்பட்டது அல்ல.

மாறாக மனித இருதயங்கள் என்னும் பலகைகளில் எழுதப்பட்டது. எனவே இந்த வசனம் மிகத் தெளிவாக இருக்கிறது. நாம் கர்த்தரின் படி ,அவருடைய வார்த்தையின்படி இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும்
விட்டு விலகி இருந்தால் , நாம் நஷ்டப்பட வேண்டிவரும். நீதிமொழிகள் புத்தகம் “மனிதனுக்கு நேரான பாதை தெரிந்தால் , அதன் முடிவில் மரணத்தை மட்டுமே காணமுடியும். ” என்று சொல்கிறது.
எனவே கர்த்தர் , நம்முடைய நடத்தைகள் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் கர்த்தரைச் சேர்ந்தவர்கள். உலகத்திலிருந்து பிரிந்து, தூய்மையான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.


2 கொரிந்தியர் 6 : 14 ” அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது ?” என்று சொல்கிறது.
மேலும் இந்த வசனங்கள் , உலகத்திலுள்ளவர்களின் மத்தியிலிருந்து விலகி அவர்களிடமிருந்து பிரிந்து , அசுத்தமான எதையும் தொடாதே. பிறகு நான் உன்னை வரவேற்பேன் என்று கர்த்தர் சொல்வதையும் கூறுகிறது. நம்முடைய இயல்பு, அவருடைய இயல்புக்கு ஒத்துப் போவதாக கர்த்தர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

ஜெபம்
அன்பின் பரலோகத் தந்தையே, நீர் எங்களுக்குத் தகப்பனாகவும் நீர் பரிசுத்தமுள்ள தேவனாகவும் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறோம். அன்பு கர்த்தரே, எங்கெல்லாம் உம்முடைய இயல்புக்கு பொருத்தமில்லாதவர்களாக இருக்கிறோமோ, அங்கெல்லாம் உம்மைப் போல் இருப்பதற்கு தயைகூர்ந்து கிருபை புரியும். எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாகவும் உமக்கு முன்பாக நீர் எங்களை ஏற்றுக்கொள்ளும்படியாகவும் மாற்றும். அதுவே நாங்கள் விரும்புவது.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் நாங்கள் இதை ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. பூனம் ஷர்மா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 16-12-2022

வார்த்தை நெருப்பு மரம்

எரேமியா 5 : 14 ” ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் ; நீங்கள் இந்த வார்த்தையை சொன்னபடியினால் , இதோ நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன் , அது இவர்களை பட்சிக்கும். “


சர்வ வல்லமை படைத்த சேனைகளின் கர்த்தர் நம்மைப் பார்த்து இதே வார்த்தைகளைச் சொல்லுகிறார். இது கர்த்தர் நம்மை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதைக் காட்டுகிறது . அதனால்தான் கர்த்தர் நம்மிடம் இதை பேசுகிறார்.


கர்த்தர் நம்மிடம் என்ன சொல்கிறார்? ” ஏனென்றால் நீங்கள் இந்த வார்த்தையை பேசியிருக்கிறீர்கள். ” ஆம். கர்த்தருடைய வார்த்தைகளை நம் வாயிலிருந்து பேசவும் அதை அறிவிக்கவும் அவர் விரும்புகிறார். இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் நாம் அறிவிக்கும்போது இரட்சிப்பும் விடுதலையும் நம் வாயிலிருந்து வெளிவரும். இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொடுவேன் என்று சொன்ன பெண் அதைத் தொட்டவுடன் குணமடைந்தாள்.

ஆம். நாம் விடுதலை பெற வேண்டுமென்றால் , அவருடைய வார்த்தைகளையும் சத்தியங்களையும் கண்டிப்பாக நம் வாயிலிருந்து பேச வேண்டும். யெகோவா தேவன் அவருடைய வார்த்தைகளை நம் வாயில் பேசுவதற்காக வைக்கிறார். நாம் அவருடைய கிருபையை பெறுவதற்காக ஜெபிக்க வேண்டும்.

அவர் நம்முடைய வார்த்தைகளை நெருப்பாக திருப்புகிறார். ஆம். இந்த நெருப்பு நம்மை உருக்கிறது , எரிக்கிறது , தூய்மைப்படுத்துகிறது. இந்த நெருப்பு நம்மிடமிருக்கும் வேண்டாதவைகளை பட்சிக்கிறது. ஆம் நம்முடைய கர்த்தர் நெருப்பை பட்சிக்கிறவர். இந்த நெருப்பு நமக்கு எதிராக உள்ள எதிரிகளின் வேலையையும் அவர்களுடைய இரதங்களையும் பட்சிக்கும் நெருப்பு. இது கர்த்தரின் பிள்ளைகளுக்கு அவருடைய நீதியின் பிரதிநிதியாக இருக்கிறது.

” நான் இந்த மக்களை மரமாக்குவேன். நெருப்பு அவர்களை எரிக்கும் .” நெருப்பு அவர்களை பற்றிக் கொள்ளும். ஆம். கர்த்தர் ஒரு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு. யாரெல்லாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிய மறுக்கிறவர்களை பட்சிக்கும் நெருப்பாக மாற்றுவார். அவர் நமக்கு , யாரெல்லாம் அவருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருக்கிறார்களோ அவர்கள் அவருடைய எதிரிகள் , அவர்கள் நெருப்பினால் பட்சிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார். அந்த மரம் நெருப்பினால் சாம்பலாக்கப்படும். ஆம், நம்முடைய நாவிற்கு அவர்தந்த வார்த்தைகளின் சக்தியை நாம் அறிந்தபிறகு , உணர்ந்தபிறகு , நம்முடைய வாயினால் நாம் அதை அறிவிக்க வேண்டும்.

ஜெபம்


கர்த்தாவே, சாத்தானின் கிரியைகளை அழிப்பதற்கு நீர் எங்கள் நாவிற்கு மிகப் பெரிய அதிகாரத்தை தந்ததற்காக இயேசுவின் நாமத்தினால் உம்மை போற்றுகிறோம். ஆமென்.

Sol. நீலம் சோனி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 15-12-2022

ஒரு கிறிஸ்தவனுக்கு சரியான முன்மாதிரி - ஈசாக்

 ஈசாக் , பரலோகத் தந்தையால் –  சர்வவல்லமையுடவரால்  வாக்களிக்கப்பட்ட ஆபிரகாமுடைய  மகன் என்பதை நாம் அறிவோம்.

ஈசாக்கை ஒரு தெய்வீக மனிதனாக மாற்றும் பண்புக்கூறுகள் பின்வருமாறு.

ஈசாக் இளமைப் பருவத்தில் இருந்தபோது  மோரியா மலையில் ஈசாக்கை காணிக்கையாக செலுத்தும்படி கர்த்தர் ஆபிரகாமிடம் கேட்டார். ஈசாக் பலியிடுவதற்காக விறகுகளை எடுத்துக் கொண்டு வரும்போது, பலியிடுவதற்குரிய ஆட்டுக்குட்டியைப்பற்றி தன் தந்தையிடம்  விசாரித்தார். அது கர்த்தருக்கு பலியாக கொடுப்பதற்கு  என்று யூகித்தார்.

மேலும்  தன் தந்தைக்கு பலிபீடத்தை அமைக்க உதவினார். வயதான தன் தந்தை ஆபிரகாம் அவரை பலிபீடத்தில் வைத்தபோது , அதை ஏற்றுக் கொண்டு கர்த்தருடைய முடிவுக்கு கீழ்படிந்தார். இப்போதுள்ள நவீன உலகத்துப் பிள்ளைகள்  அந்த சூழ்நிலையில் இருந்தால் , அவர்கள்  எளிதாக அந்த இடத்தைவிட்டு ஓடியிருப்பார்கள்.  ஆனால் ஈசாக்கு தன்னுடைய தந்தையின் விசுவாச  வார்த்தைகளை நம்பினார்.

    ( a ) ஆதியாகமம் 22 : 5

            ” அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி : நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள் ,நானும் பிள்ளையாண்டானும் அவ்விடம்மட்டும் போய் தொழுது கொண்டு ,  உங்களிடத்துக்கு திரும்பி வருவோம் என்றார்.”

          ( b ) ஆதியாகமம் 22 : 8

          ” அதற்கு ஆபிரகாம் : என் மகனே , தேவன் தமக்கு  தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை பார்த்துக்    கொள்வார் என்றான்.”

ஈசாக்குடைய விசுவாசமும் அவருடைய தந்தையின் மேலிருந்த நம்பிக்கையும்

‘குழந்தைகள், உங்கள் பெற்றோருக்கு எல்லா வகையிலும் கீழ்படியுங்கள்’  என மேற்கூறிய வசனங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு , பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது. ஈசாக்கு இந்த வசனங்களுக்கு கீழ்படிந்தார்.

140 வயதான தன் தந்தை , தன்னுடைய உண்மையான வேலைக்காரனை அனுப்பி அவருக்காக  ஒரு மணமகளை கொண்டுவரும் வரை, ஈசாக் 40 வருடம் பொறுமையாக காத்திருந்தார். தன்னுடைய தந்தையின் முடிவிற்காக காத்திருந்தார்.

இன்றைய கிறிஸ்தவ பிள்ளைகள்,  தங்களுடைய பெற்றோரிடம் கலந்து ஆலோசியாமல், தாங்கள்  சொந்தமாகவே வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கின்றனர். மட்டுமல்லாமல் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு கீழ்படிபவர்களாகவும் அவர்களை  மதிப்பவர்களாகவும் இருக்கிறார்களா?

ஈசாக் தியானம் செய்யும் மனிதர். ஒவ்வொரு நாள் மாலையும் ல- ஹாய் – ரோய்  என்ன கிணற்றருகே சென்று அங்கு தியானம் செய்தார். பாலைவனத்தில் கர்த்தருடைய தூதன் ஆகாரைச் சந்தித்த  நீரூற்று அது. அவள் சாராவிடமிருந்து ஓடி வந்த  போது இந்த இடத்தில் தான் கர்த்தருடைய வழிகாட்டுதலையும் வழிநடத்துதலையும் பெற்றாள். இந்த இடத்திற்குத் தான் ஈசாக் தியானம் செய்ய சென்றார்.

அவர் கர்த்தரை எதிர்பார்த்து அவருடைய உதவியை நாடினார். கர்த்தர் அவருக்கு ஒரு இனிமையான அதிர்ச்சியை கொடுத்தார். அவர் ல ஹாய் ரோய் என்ற கிணற்றிற்கு அருகே ஈசாக்கை, தன்னுடைய அழகான மணப்பெண்ணாகிய ரபேக்காளை சந்திக்க வைத்தார்.

சங்கீதக்காரன் சொல்கிறான். ” வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடமிருந்து எனக்கு உதவி வருகிறது. ” நாம் நம்முடைய விருப்பங்கள் நிறைவேற கர்த்தருக்கு காத்திருப்போம்.

ஈசாக் ஒரு ஜெப மனிதன்.

திருமணத்திற்குப் பிறகு 20 வருடங்களாக ஈசாக்கிற்கு குழந்தை இல்லை. அதனால் தன் மனைவி கருவுற வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டார். பின்பு அவர்  மனைவி கருவுற்றாள்.

கர்த்தர் அவளுக்கு  ஏசா, யாக்கோபு என்ற இரு மகன்களை கொடுத்து ஆசீர்வதித்தார்.

சாட்சி

எனது பெற்றோருக்கு 5 பிள்ளைகள் இருந்தனர். நாங்கள் அனைவரும் எங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்தோம். அவர்கள் எங்களுக்கு கல்வி கற்பித்தார்கள். அது, எங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைய உதவியது.

ஜெபம்

கர்த்தாவே உம்மீதும் ,எங்களை வழிகாட்டுகின்ற ,வழிநடத்துகின்ற எங்கள் பெற்றோர் மீதும்  விசுவாசம் கொள்ளவும் , எங்களுக்கு உதவி செய்யும். உமது வார்த்தைகளை தியானிக்கவும் எப்போதும் ஜெபிக்கவும் உதவி செய்யும் . எங்களது விருப்பங்கள் நிறைவேறும் வரை உமக்காக காத்திருக்கவும் உதவி செய்யும்.

ஆமென்.

Sol. விக்டிமிதிலா.