தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 17-12-2022

ஆதியாகமம் 1 : 26 ” பின்பு தேவன் : நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

” இங்கே கர்த்தர், தன்னைப்போலவே உள்ள மனிதனைப் படைத்தார் என்று சொல்கிறார். அப்போது நம் கர்த்தர் எப்படி இருப்பார்? என்ற கேள்வி வரும்.
1 பேதுரு 1 : 16 ல் ” நான் பரிசுத்தர் , ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே ” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


இங்கே உள்ள இரண்டு வார்த்தைகளும் கர்த்தர் நம்மை ,தம்மைப்போல உருவாக்கினார் என்பதை முற்றிலும் தெளிவுபடுத்துகிறது.
நம் வாழ்க்கையில் என்ன சேர்க்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.


நாம் தூய்மையான பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்போது தான் நாம் அவரைப் போல வாழ முடியும். நீதிமொழிகள் புத்தகம் , தீமை செய்பவர்களை யெகோவா தேவன் வெறுக்கிறார் என்று சொல்கிறது. எனவே இந்த வசனத்தின் மூலம் தீமை செய்கிறவர்களை நாம் வெறுக்கிறோமா , அல்லது நாமே தீமை செய்கிறவர்களா என்று நம்மை நாம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளின்படி செயல்படுபவர்கள், தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். நம்முடைய நோக்கம் என்ன என்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்? நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறது? நாம் உண்மைக்கு மாறாக பேசினால் , இன்னும் கர்த்தரின் பிள்ளைகள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியுமா? நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.


2 கொரிந்தியர் 3 : 2 ” எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும் , சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே.” என்று சொல்கிறது. இது மையினால் அல்ல. ஜீவனுள்ள கர்த்தரின் ஆவியானவரால் எழுதப்பட்டது. இவை கற்பலகைகளால் எழுதப்பட்டது அல்ல.

மாறாக மனித இருதயங்கள் என்னும் பலகைகளில் எழுதப்பட்டது. எனவே இந்த வசனம் மிகத் தெளிவாக இருக்கிறது. நாம் கர்த்தரின் படி ,அவருடைய வார்த்தையின்படி இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும்
விட்டு விலகி இருந்தால் , நாம் நஷ்டப்பட வேண்டிவரும். நீதிமொழிகள் புத்தகம் “மனிதனுக்கு நேரான பாதை தெரிந்தால் , அதன் முடிவில் மரணத்தை மட்டுமே காணமுடியும். ” என்று சொல்கிறது.
எனவே கர்த்தர் , நம்முடைய நடத்தைகள் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் கர்த்தரைச் சேர்ந்தவர்கள். உலகத்திலிருந்து பிரிந்து, தூய்மையான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.


2 கொரிந்தியர் 6 : 14 ” அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது ?” என்று சொல்கிறது.
மேலும் இந்த வசனங்கள் , உலகத்திலுள்ளவர்களின் மத்தியிலிருந்து விலகி அவர்களிடமிருந்து பிரிந்து , அசுத்தமான எதையும் தொடாதே. பிறகு நான் உன்னை வரவேற்பேன் என்று கர்த்தர் சொல்வதையும் கூறுகிறது. நம்முடைய இயல்பு, அவருடைய இயல்புக்கு ஒத்துப் போவதாக கர்த்தர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

ஜெபம்
அன்பின் பரலோகத் தந்தையே, நீர் எங்களுக்குத் தகப்பனாகவும் நீர் பரிசுத்தமுள்ள தேவனாகவும் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறோம். அன்பு கர்த்தரே, எங்கெல்லாம் உம்முடைய இயல்புக்கு பொருத்தமில்லாதவர்களாக இருக்கிறோமோ, அங்கெல்லாம் உம்மைப் போல் இருப்பதற்கு தயைகூர்ந்து கிருபை புரியும். எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாகவும் உமக்கு முன்பாக நீர் எங்களை ஏற்றுக்கொள்ளும்படியாகவும் மாற்றும். அதுவே நாங்கள் விரும்புவது.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் நாங்கள் இதை ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. பூனம் ஷர்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *