நாள்: 02-01-2023
“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. “
எபேசியர் 6 : 12

நியாதிபதிகள் 7 – 15 முதல் 8 : 21வரை கிதியோனையும் மீதியானியர்களுடன் போரிட்ட அவருடைய ஜனங்களையும் பற்றி சொல்லப்படுகிறது. கர்த்தருடைய வழிகாட்டுதலின்படி கிதியோனின் தலைமையில் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்த பிறகு , கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சொன்னார்கள்.
இவைகளுக்கு ஆவிக்குரிய முக்கியத்துவம் உண்டு. நாம் உலகத்தின் இருளோடு போரோடும்போது அல்லது யுத்தம் செய்யும்போதெல்லாம் , விசுவாசிகள் கர்த்தரை ஆராதிப்பதையோ அல்லது துதிப்பதையோ குறிக்கும் எக்காளத்தை பயன்படுத்தலாம். பட்டயம் என்பது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய கர்த்தருடைய வசனங்களைக் குறிக்கிறது. விளக்கு என்பது நமது உடலில் தங்கி வாசம் செய்யும் கர்த்தரின் வல்லமையைக் குறிக்கிறது.
விசுவாசிகள் போரிடும்போது அவர்கள் தங்கள் சொந்த பலத்தையோ, அல்லது உலகத்திலுள்ள சக்திகளையோ நம்பாமல் கர்த்தருடைய பலத்தை மட்டுமே நம்ப வேண்டும். யோசுவாவும் அவருடைய ஜனங்களும் கர்த்தரை துதித்ததால் எரிக்கோ கோட்டையை தகர்த்தார்கள். யோசுவா 5 :14 மற்றும் 6 :15 ல் இதைக் காணலாம். கர்த்தரை துதிப்பது உள்ளார்ந்த மற்றும் வெளிசார்ந்த சுவர்களை உடைப்பதில் மிகப்பெரிய வலிமையை கொண்டுள்ளது.
கர்த்தரை துதிப்பது, நமது மனக்காயங்களை ஆற்ற உதவுகிறது. மேலும் சக மனிதர்களுடன் சமரசம் செய்வது சாத்தியமாகிறது. உறவுகளை சீர்படுத்துவதற்குரிய படிகளை முன்னெடுப்பதற்கு ஆவிக்குரிய பலத்தை தருகிறது. சங்கீதம் 149 : 8 நம் வாயில் துதி இருப்பதை கோடிட்டு காட்டுகிறது.
விசுவாசிகள் கர்த்தருடைய வசனங்களில் உறுதியாக இருக்க வேண்டும். இது சோதனைகளைக் களைந்து ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவுகிறது. ஒவ்வொருமுறையும் சோதனைகள் நம்மை பற்றும்போது, கர்த்தருடைய பிள்ளைகள் எனவும் பாவத்திற்கு எதிரான போராளிகள் எனவும் நிரூபிக்க வேண்டும். லூக்கா 4 : 4 ல் கிறிஸ்து , ” மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ” என்று தெளிவாகக் கூறுகிறார். கர்த்தருடைய வசனங்களை பயன்படுத்தியதன் மூலம் அவருடைய சோதனைகளை களைந்தார்.
சங்கீதம் 149 : 8″ அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும் ” என்று சொல்கிறது.
பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நம்முள் இருப்பது, நம்மை பலமுள்ளவர்களாகவும் வல்லமையுள்ளவர்களாகவும் மாற்றும். நாம் அனைவரும் உடையக்கூடிய களிமண்ணைப்போல பலவீனமாக உருவாக்கப்பட்டிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 3 : 16 ” நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும் , தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? “
இந்த வசனத்தில் சொல்லப்பட்டபடி நாம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருந்தால் , அவர் மூலமாக கர்த்தருடைய பிரசன்னம் நமக்குள் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் பாவத்திற்கு எதிராக நம்மை எச்சரித்து , வெற்றிகரமான வாழ்க்கை நடத்த உதவுகிறார்.
கிதியோனுடைய ஜனங்கள் பானைகளை உடைக்கும்மோது தங்கள் கைகளில் விளக்கை எடுத்துச் சென்றார்கள்.
1 பேதுரு 2 : 24 ” நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, ” என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நமக்குள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கிதியோனுடைய ஜனங்கள் வாயில் கூச்சலும் , அவர்களை மீதியானியர்களுக்கு எதிராக வெற்றி பெற உதவிய எக்காளங்களை வலது கைகளிலும் , விளக்குகளை இடது கைகளிலும் ஏந்தியபடி சென்றதை கற்பனை செய்யலாம். இருளின் ஆட்சியாளர்கள், பொல்லாத ஆவிகள் மற்றும் உலகின் சக்திகளுக்கு எதிரான நம்முடைய போரில் துதி , ஆராதனை , கர்த்தருடைய வசனங்கள் , பரிசுத்த ஆவியானவர் மூலம் பெறும் வல்லமை ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
ஜெபம்
அன்புள்ள கர்த்தாவே, உமது வசனங்களின் மூலம் நீர் எங்களுக்குத் தந்த ஆயுதங்களை பயன்படுத்தி , உமக்கு மகிழ்ச்சியளிக்கும் தகுதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த எங்களுக்கு உதவும். ஆமென்.
Sol. ஏஞ்சலின்.
