நாள்: 31-10-2022
மீட்பு, கர்த்தரின் கிருபை.
மீட்பு என்பது கர்த்தருடைய கிருபையின் வெளிப்பாடு. எனவே இதற்காக நாம் எப்போதும் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கொலோசெயர் 1..12 – 14 ” ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு , நம்மை தகுதியுள்ளவனாக்கினவரும் , இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி , தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம்.
அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே , பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கர்த்தர் மனிதனுடைய உதவிக்காகவே வந்தார்.ஏனென்றால் மனிதனால் இதை தனியாக செய்ய முடியாது . எனவே மனிதனுடைய ஸ்தானத்திலிருந்து மரித்தார். சட்டத்தை உடைத்ததற்கான தண்டனையை செலுத்தினார்.இப்போது மனிதன் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நின்று தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்பு பெறவும் , அவரிடமிருந்து கிருபையை பெறவும் அவனுக்கு உரிமை இருக்கிறது. நாம் நமது குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறலாம் காரணம், இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்.
ரோமர் 5 : 8 ” நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததனாலே , தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
அவர் நம்முடைய பாவங்களுக்காக , விலைமதிப்பில்லாத கிரயத்தை செலுத்தி, நம்மை அவருடைய தெய்வீக குடும்பத்திற்குள் திரும்பவும் கொண்டுவந்து சேர்த்தார். இயேசு மொத்த உலகத்திற்காகவும் இந்த பூமியில் மனிதனாகப் பிறந்து மனிதனுடைய பாவங்களுக்காக மரித்தார்.
கர்த்தர் மனிதனுடைய பாவத்தை அறியாமல் இருக்கவில்லை. மனிதனை படைப்பதற்கு முன்பே , தம்முடைய குமாரனை நமக்கு பரிசாகத் தந்து கடைசி நாட்களில் அதை வெளிப்படுத்தினார். மனிதனுடைய வீழ்ச்சிக்குப் பிறகு கர்த்தருடைய நோக்கம் இந்த உலகத்தை தம்முடைய பிள்ளைகளால் நிரப்பி அவர்களிடம் கர்த்தரின் சுபாவத்தின் அழகை பிரதிபலிக்கச் செய்ததாக இருந்தது. இவ்வாறாக, ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு , உடனடியாக மீட்பை செயல்படத் தொடங்குவது கர்த்தரின் திட்டமாக இருந்தது.
ஆதியாகமம் 3…14,15 ல் கர்த்தர் சாத்தானை முன்னிட்டு இரண்டுவாக்குத்தத்தங்களை கொடுத்தார்
1 . சாத்தான்,; நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். . இது இயேசுவைக் குறித்த தீர்க்கத்தரிசனம்.
2 . அவர் சாத்தானுடைய தலையை நசுக்குவார்.
குதிங்காலை நசுக்குவாய் என்பது இயேசுவினுடைய சிலுவை மரணத்தையும் சாவிலிருந்து உயிர்த்ததையும் குறிக்கும்.
தலையை நசுக்குவது என்பது, இயேசு “தலைமையை ” நசுக்குவது . அதாவது சாத்தானுடைய ஆட்சி, அதிகாரம் , சக்தி எல்லாவற்றையும் நசுக்கினார். மேலும் தன்னுடைய சிலுவை மரணத்தின் வழியாக சாத்தானின் கிரீடத்தையும் பறித்தார். மனித குலம் மீட்டெடுக்கப்பட்டது.பரலோகத்தின் அரசாட்சி பூமியின் மேல் வரும். காரணம்,
இயேசு இப்போதும் எப்போதும் வெற்றிபெற்றவர். உண்மையான மீட்பு கர்த்தருடைய கிருபையின் மிகப் பெரிய அதிசயம். மேலும் பாவ இயல்புக்குட்பட்ட மனிதனுக்காக பிதா மற்றும் மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக கிடைத்த அன்பு மற்றும் கிருபை.
கர்த்தருடைய பரிசை ஏற்றுக் கொள்ளுதல்.
நாம் கண்டிப்பாக நம்முடைய மீட்பராகிய இயேசு வழியாக கர்த்தரின் கிருபையை ஏற்றுக்கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் வேண்டும். அவரால் மட்டுமே பிரிவினையிலிருந்தும் கண்டனத்திலிருந்தும் நம்மை காப்பாற்றமுடியும். நாம் கர்த்தருடைய அன்பை தவறவிட்டால் நம் பரலோக வாழ்க்கை முழுவதையும் இழந்துவிடுவோம்.
யோவான் 1 : 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
இரட்சிப்பின் இரண்டு பக்கங்கள்
1 . நம் பாவங்களுக்காக கர்த்தர் நம்மை உணர்த்துவார். பாவத்தின் சம்பளம் மரணம். பிதாவினுடைய கிருபை , பயங்கரமான சிலுவை மரணத்தினால் இறந்த தம்முடைய குமாரன் இயேசுவின் மூலமாக வரும்.
2 . எனவே நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு நமக்கு மீட்பு தேவை என்பதை உணர்ந்து, இரட்சகராக நம் இருதயத்திற்குள் வர வேண்டும் என்று இயேசுவிடம் கேட்பதன் மூலம் கர்த்தரின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். நம்முடைய மரண வழியிலிருந்து நித்திய ஜீவனை அடைவதற்கு அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற வேண்டும். அதற்கு முக்கிய தேவை இரட்சிப்பு. எனவே நாம் பரிசுத்த ஆவியை பெறுவதற்கு, கர்த்தரோடு ஒன்றிணைய மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆமென்.
சாட்சி
என்னுடைய தாத்தாவும் பாட்டியும் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை ஏற்றுக்கொண்ட பின் போதகர்களாக மாறினார்கள். அவர்களுக்கு பிந்தைய ஐந்து தலைமுறையினரும் கர்த்தரை விசுவசித்து ஏற்றுக்கொண்டு பாதுகாக்கப்பட்டனர்.
ஜெபம்
பிதாவே சிலுவையில் எங்களுக்காக சாதித்ததற்கும் ,எங்களை உமது பிள்ளைகளாக தெரிந்தெடுத்ததற்காகவும் எப்பொழுதும் உண்மையுள்ளவர்களாகவும் நன்றி உள்ளவர்களாகவும் இருக்கிறோம். நாங்கள் உமது கோபத்திற்காக அல்ல, உமது கிருபைக்காகவும் இரட்சிப்பிற்காகவுமே இருக்கிறோம். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு உமது இறப்பின் மூலம் விலை கொடுத்துள்ளீர். ஆமென்.
Sol. நொரீன்.