நாள்: 26-10-2022
உம்முடைய கிருபையும் நன்மையையும் என்னை பின்தொடரும்

மோசே கர்த்தரிடம் “உம்முடைய மகிமையை எனக்கு காண்பித்தருளும் என்றான். அதற்கு இயேசு என்னுடைய தயை எல்லாம் உனக்கு முன்பாக கடந்து போகப் பண்ணுவேன் என்றார். யாத்ராகமம் 33: 18 ல் இதைக் காணலாம்.
பெரும்பாலும் நான் காலையில் எழுந்திருக்கும் போது என் மனதில் ஒரு பாடல் வரும். ஒரு நாள் நான் பாடலின் கோரஸுடன் எழுந்தேன்.” உங்கள் நன்மை எனக்குப் பின்னால் ஓடி வருகிறது. மீண்டும் எனக்குப் பின்னால் ஓடி வருகிறது.” இதுதான் அந்த வரிகள்.
என்னுடைய சூழ்நிலைகளின் நிமித்தம் , நான் கர்த்தரின் நன்மைகளை சந்தேகிக்க வேண்டும் என்று என் எதிரிகள் விரும்புகின்றனர். ஆனாலும் புயல் போன்ற பிரச்சனைகளிலும், மிகப் பெரிய அச்சுறுத்தல்களிலும் , என் கர்த்தர் நல்லவர், என்மீது இரக்கம் உள்ளவர் என்று அறிக்கையிட வேண்டும். மேலும் நீங்கள், கர்த்தரின் நன்மை என்பது , மக்களின் உணர்வுகள் சூழ்நிலைகளைப் பொறுத்தது அல்ல என்பதை அறிய வேண்டும். ” நன்மை ” என்பது நம் பிதாவின் அடையாளம். அதுவே அவர் யார் என்பது.
கர்த்தரின் நன்மையை தெரிந்து கொள்வது பாதுகாப்பைத் தரும்.
இன்று அவருடைய இரக்கத்தைப்பற்றி சிந்திக்கும்போது , நம்முடைய ஆத்துமா குணப்படுவதை உணர முடியும். அவருடைய நன்மையையும் இரக்கத்தையும் யாராலும் தடுக்க முடியாது. எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் நல்லவராக இரக்கமில்லாதவராக அவர் இருந்ததில்லை. அவரது நன்மையில் நாம் பாதுகாப்பாக இருக்கலாம். அவர் என்றும் நல்லவராகவே இருக்கிறார். ஒருபோதும் மாறமாட்டார். நமது தந்தை நம்மீது இரக்கம் உள்ளவராகவும் நம்மை கண்காணிப்பவராகவும் இருக்கிறார்.
யோவான் 10 : 11 ல் இயேசு , நானே நல்ல மேய்ப்பன் என்கிறார். இந்த உண்மை நமக்கு உறுதியையும் பாறையின்மேல் அமர்ந்திருக்கும் பாதுகாப்பையும் தருகிறது.
சங்கீதம் 136 : 1 ல் கர்த்தர் நல்லவர் , அவர் கிருபை என்றுமுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.
கர்த்தரின் நன்மையை அறிவிப்பது
யோசபாத் அரசருடைய கதை,அவர் எவ்வாறு தீர்க்கதரிசியினுடைய வார்த்தையை நம்பி தன்னுடைய பாடகர் குழுவை படைகளுக்கு முன்னால் அனுப்பினார் என்பது நம்மை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. அதே நேரத்தில் அது நமக்கு தெரியப்படுத்துவது ,
- நம்முடைய மன அழுத்தங்களின் போதும் தடைகளின் போதும் நம்முடைய கரங்கள் கர்த்தரை துதிக்க வேண்டும்.
- நாம் இந்த வாக்குமூலத்தை அமைதியாகச் சொல்லலாம். ஆனால் ஆன்மீக வாழ்க்கையில் அது சிங்கத்தின் கர்ஜனை போல் இருக்க வேண்டும்.
- சத்தியத்தின் வார்த்தை பிசாசானவன் குரலை அமர பண்ணும். நம்வாழ்க்கையின் இருளான விஷயங்களை அகற்றி ஜீவனை கொடுக்கும்.
- உம்முடைய நன்மையும் கிருபையும் எப்போதும் என்னை தாங்குவதற்கு , கர்த்தாவே உம்மை துதிக்கிறேன்.
அவருடைய நன்மையும் இரக்கமும் என்னுடைய எதிர்காலமாகவும் இருக்கிறது
பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருக்கும்போது கர்த்தருடைய நன்மை இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அத்துடன் அவருடைய கனிகளான இரக்கமும் நன்மையும் நம்மோடு இருக்கும்.
தாவீது ராஜாவினுடைய வார்த்தைகள் , அழுகையினால் போராடிக் கொண்டிருக்கும் நமக்கான வார்த்தைகள். “ நானோ ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்.சங்கீதம் 27 : 13
கிறிஸ்துவில் பாதுகாப்பு , நம்முடைய எதிர்காலத்தில் அவரது நன்மை , இந்த இரண்டும் நம்வாழ்நாள் முழுவதும் நித்தியத்திலும் இருக்க வேண்டும்.
சங்கீதம் 23 : 6 ” என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
ஆசீர்வாதத்தின் பயிற்சி
நாம் வீட்டிலோ, வேலை செய்யும் இடங்களிலோ அல்லது வேறு எந்த இடத்திலாவது உள்ள போராட்டங்கள் அல்லது அங்கே எதாவது பிரச்சனை நீண்ட நாட்களாக அல்லது சமீபத்தில் நடந்துஇருக்கலாம். அதற்காக நீங்கள் ஜெபிக்கும் நேரம் இது
ஆண்டவருடைய நன்மையையும் இரக்கத்தையும் பிரகடன படுத்துங்கள் அப்பொழுது எதிரியானவன் ஓடிப்போவதை பார்ப்பீர்கள். இழந்து போனதை மீட்டு கொடுத்ததற்கு நன்றி என்று சொல்லி தீர்க்கதரிசன வார்த்தை கூறி இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதியுங்கள்.
கர்த்தர் ஏராளமான ஆசீர்வாதங்களை இன்று உங்களுக்குத் தருகிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அவருடைய விரிவான வெளிப்பாடுகளுடனும் வாக்குறுதிகளுடனும் நன்மையை வெளிப்படுத்துவார்.
Sol. Joan
