நாள்: 23-10-2022
விசுவாசத்தின் வளர்ச்சி
கடவுள் நம்பிக்கையின் விதையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார்.கடவுளின் வார்த்தையைக் கேட்பதன் மூலம் நம்பிக்கை வருகிறது. நம்முடைய தேவன் தம்முடைய வார்த்தையை கொண்டு நம்மிடம் பேசுவார்.
அந்த வார்த்தையைக் கேட்டு எப்படி அந்த விதையை நம் வாழ்வின் மண்ணில் விளைவிக்க முடியும்.

ரோமர் 10:17- “ ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” எனவே கடவுளின் வார்த்தையைக் கேட்பதனாலே விசுவாசம் வருகிறது .
கேட்பது என்பது ஒலிகளைக் கேட்கும் ஒரு செயலற்ற தன்மை அல்ல, இதன் பொருள் கேட்கப்பட்டவற்றை செயல்படுத்துவது. கர்த்தர் பேசும்போது அது ஒரு கட்டளை. நாம் அதன்படி நடக்கிறோமா அல்லது கீழ்ப்படியாமலிருக்கிறோமா. கீழ்ப்படியாமை விசுவாசத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் விசுவாசித்தும் அது ஏன் நடக்கவில்லை என்று ஆச்சரியப்படுவோம். கர்த்தர் கூறுகிறார் ” என் வார்த்தையைக் கைக்கொள்கிறவன், என்னை நேசிக்கிறான் என்று. நாம் மகிமையிலிருந்து மகிமைக்கும் விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கும் வளரவேண்டும். வேறொருவரின் விசுவாசத்தை நாம் பிரதிபலிக்க முடியாது. கர்த்தருடைய வார்த்தை நமக்கு உண்டாகும் போது கீழ்ப்படிய வேண்டும். அப்பொழுது காரியம் நடக்கும்.
அன்பு– இது விசுவாசத்தின் வளற்சிக்கு முக்கியமானது. நம்மிடத்தில் அன்பு இருந்தால் விசுவாசம் அன்பின் மூலமாக கிரியை செய்யும்
கலாத்தியர் 5: 6 “ கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்த சேதனமும் , விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுக்கும் உதவாது. அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். “
கர்த்தர் எழுதப்பட்ட வார்த்தைகள் வழியாகவும் சொல்லப்பட்ட வார்த்தைகள் வழியாகவும் பேசுகிறார். மேல் சொன்ன இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றல் அப்பொழுது தான் கர்த்தருடைய வார்த்தையை கேட்கிறது என்றால் என்ன என்பதை அறிய முடியும். கர்த்தர் இன்றுவரை தனது அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள், கனவுகள், தரிசனங்கள் மற்றும் உள் உணர்வுகள் அல்லது சூழ்நிலைகள் மூலம் பேசுகிறார்.
அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் படி மட்டும் நாம் வாழவில்லை, ஆனால் கடவுளின் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளினாலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தையைத் தவிர வேறு வழிகளிலும் அவர் நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை நாம் மறுக்க கூடாது. அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று சிலர் கூறுகிறார்கள். எனவே அவர்கள் கர்த்தர் சொன்னதன்படி மட்டும் வாழ்கிறார்கள். கர்த்தர் இப்போது சொல்லிக் கொண்டிருப்பதை கேட்க மறுக்கிறார்கள். எனவே தேவனின் அற்புதங்கள் அங்கே நிராகரிக்கப்படுகின்றன. ஜெபம் மற்றும் உபவாசமுமே உண்மையான விசுவாசத்திற்குரிய சாவிகள். இது, “விசுவாசத்தை சொல்லுதல்” அல்லது “விசுவாசத்தை பேசுதல் ” என்று அழைக்கப்படுகிறது . இது விசுவாசத்தை கேட்பதை விட உயர்ந்தது.
இயேசு சொன்னார், கடுகளவு விசுவாசம் இருந்தால் நீங்கள் இந்த மலையை பார்த்து , இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்.
நீங்கள் கடவுளின் வார்த்தைகளைப் பெற்று அவற்றைச் சொன்னால், அவை உங்களுக்கு வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமாக மாறும். நீங்கள் அவருடைய வார்த்தையை மீண்டும் மீண்டுமாக சொல்லி பார்க்கிறவற்றினால் அல்ல விசுவாசத்தினால் நடக்கும் போது உங்கள் விசுவாசம் வளரும்.
ரோமர் 4: 20,21- ” “தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப் படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி , தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். “
விசுவாசத்தில் நாம் நிலைத்திருந்து , நம் வாழ்க்கையில் அதை கடைபிடித்து , விசுவாசத்தை வளர்ப்போம்.
“ கேட்போம் ” ” கீழ்படிவோம் “
” அன்பு செய்வோம் ” ” பிறருக்கு சொல்வோம் “.
சாட்சி : வேதத்தின் சத்தியங்களை சொல்லி எங்கெல்லாம் , எப்போதெல்லாம் மக்களுக்காக ஜெபிக்கிறேனோ , தேவனுடைய மகிமையால் அவர்கள் குணமடைவார்கள்.
ஜெபம்: தேவனே உம்முடைய அன்புக்கும் உண்மைக்கும் சத்தியத்திற்கும் நன்றி ஏனென்றால் என்னுடைய ஜெபத்தைக் கேட்டு நோய்களைக் குணமாக்குகிறீர்.
ஆமென்
Sol.Noreen
