நாள்: 24-10-2022
“ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் “
கலாத்தியர் 6 : 2

யாரெல்லாம் சுமையோடு இருக்கிறார்களோ , அவர்களை சென்றடைந்து அவர்கள் தனிமையில் இல்லை என்பதை உணர்த்த வேண்டும். வேத வசனங்களை அவர்களிடம் எடுத்துக்கூறி கர்த்தர் அவர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்று சொல்லி, நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். எப்போது அவர்களுக்கு உதவி தேவையோ, அப்போது நாம் உதவ வேண்டும். பிரச்சனைகளோடும் , கஷ்டங்களோடும் இருக்கும்போது , வேதம் அவற்றை களைய எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக்கூற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தருடைய ஆழமான விருப்பம், கஷ்டங்களின் மத்தியிலும் நாம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கவேண்டும் என்பதே.
” ஆனபடியால் சமாதானத்துக்கு அடுத்தவைகளையும் , அந்நியோன்ய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக் கடவோம் “
ரோமர் 14 : 19
கர்த்தர் அமைதியை சமாதானத்தை அளிப்பவர் அல்ல , மற்றவர்களுக்கு நாம் உதவும்போது இன்னும் அதிகமான சமாதானத்தை தருகிறார். மற்றவர்களுக்கு உதவி செய்வதைப் பற்றிய வேத வசனங்களை எடுத்துக்கூறும்போது, நாமும் இரக்கமும், தயவுள்ளவர்களாகவும் , எந்தவித அங்கீகாரத்தை எதிர்பார்க்காதவர்களாகவும் நம்மை மாற்றும். ஒவ்வொரு நாளும் மன அழுத்தங்கள் நம்மை பிடித்துக் கொள்ளும் போது , எல்லா நேரங்களிலும் கர்த்தர் நல்லவர் என்று சொல்ல வேண்டும். இதுவே கிறிஸ்துவத்தின் வழிகளை புரிந்து கொள்ளும் அர்த்தமாகும்.
” ஆவியின் கனியோ , அன்பு ,சந்தோஷம், சமாதானம் , நீடிய பொறுமை , தயவு , நற்குணம் , விசுவாசம்.”
கலாத்தியர் 5 : 22
நாம் வசிக்கும் இடங்களிலும், நம்மை அடுத்திருப்பவர்களிடமோ, உறவினர்களிடமோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ உள்ள அனாதைகள், மற்றும் விதவைகளிடமும் இரக்கமும் அக்கறையும் காட்ட வேண்டும். ஒரு சிறிய சைகை கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாறாக , நம்முடைய பணத்தையோ, நேரத்தையோ மற்றவர்களுக்கு கொடுக்க முடிவது இலகுவானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய நேர்மறையான சக்திகளை அவர்களுக்கு கொடுக்கலாம். மேலும் நம்மால் எந்த அளவுக்கு முடியுமோ , கர்த்தர் நமக்கு தந்தவற்றிலிருந்து உணவோ, உடையோ ,பணமோ , அல்லது மற்ற ஏதாவது உதவியோ அவர்களுக்கு கொடுக்கலாம்.
” கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து , உங்கள் மடியிலே போடுவார்கள், நீங்கள் எந்த அளவினால் அளக்கிறார்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
லூக்கா 6 : 38
இது ,கர்த்தர் தன்னை உண்மையாய் பின்பற்றுகிறவர்களுக்கு , கொடுக்கும் மிகப்பெரிய பரிசாகும். நீங்கள் அதிகமாக கொடுத்தால், உங்களுக்கு மிக அதிகமாக கொடுக்கப்படும் .
சாட்சி
கர்த்தருடைய கிருபையினால் எனது மகள் நல்ல ஒரு கம்பெனியில் பணி புரிந்தாள். அவளுடைய இருதயத்தில் தேவைப்படுவோருக்கு , குறிப்பாக விதவைகளுக்கு உதவ வேண்டும் என்ற இரக்கம் இருந்தது. சுயநலமில்லாமல் தேவைப்படுவோருக்கு உதவியதால் கர்த்தர் அவளுக்கு இரட்டிப்பான நன்மையை தந்தார் என்று சாட்சி சொல்லிக் கொண்டிருப்பாள். சில நாட்களுக்குப்பின்னால், என் மகளுக்கு கர்த்தர் பதவிஉயர்வு அளித்து ஆசீர்வதித்தார். அவளுடைய தொகுப்பூதியம் இரண்டு மடங்காகியது. எல்லா மகிமையையும் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே தருகிறோம்.
ஆகையால் நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 11
நாம் ஒருவர் மற்றவருக்கு உதவும்போது , எல்லாவற்றிலும் நமக்கு வெற்றி உண்டாகும். இயேசு நம்மை அசாதாரணமான, நம்பமுடியாத வழிகளில் அன்பு செய்கிறார்.
ஜெபம்
உமது எண்ணமுடியாத அதிசயங்களுக்காக நன்றி இயேசுவே. உம்முடைய உன்னதமான புரிதலுடன் ,எங்களுடைய இருதயத்தில் இரக்கத்தையும் , பொறுமையையும் கொண்டு, உம்முடைய பரலோக ராஜ்ஜியத்திற்கு வழிகாட்ட கிருபை புரியும். நொந்துபோன ,தேவைப்படுகின்ற அநேக மக்களுக்கு சுயநலமுள்ளவர்களாக இல்லாமல்,ஆசீர்வாதம் அளிப்பவர்களாக மாற உதவி புரியும்.
ஆமென்.
Sol. பூனம் பத்ரா AOJ
