தானியேல் – II

நாள்:24-03-2022 – தேவ செய்தி

அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு:. லூக் 21:8

வஞ்சிக்கப்படாதபடிக்கு(உண்மை அல்லாததில் நம்பிக்கை வைப்பது) எச்சரிக்கையாய் இருங்கள் என இயேசு சொன்னார்,

ஆதியாகமம் புத்தகத்தின் மூன்றாவது அதிகாரத்தில் ஏவாளையும், ஆதாமையும் மிகவும் தந்திரமாக ஏமாற்றிய வஞ்சகனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது, அது சர்ப்பம் என்ன சொன்னாலும் அதை நம்ப வைத்தது.

மனிதனை நேசித்த தேவன், அவனுக்கு நன்மையுடன் நிறைவான வாழ்வைக் காண விரும்பினார்.

  1. நிறைய மரங்களை உருவாக்கினார் – நல்ல உணவிற்காக
  2. அவனுக்கு ஏற்ற ஒரு உதவியாளரை கொண்டுவந்தார்.

இதற்கிடையில் அவர்களை ஏமாற்றி கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக அவர்களை நடக்க வைத்தது, அதுவே அவர்களை கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து தங்களை மறைத்துக் கொள்ளவும் வழிவகுத்தது. இதற்கு பலனாக அவர்களுக்கு கிடைத்தது என்ன? வெட்கம், பயம், மரணம், ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டது.

இப்பொழுதும் கூட நேரம் சமீபமாய் இருக்கிறது, யாராலும் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் என்று நம் ஆண்டவராகிய இயேசு நம்மை எச்சரிக்கிறார்.

நம்மை ஏமாற்றும் சாத்தானையும், ஏமாற்ற அவன் பயன்படுத்தும் யுத்திகளையும் நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம்.

மனஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். நீதி 19:21

இன்றைய உலகில்  நம்மை ஏமாற்ற வருபவன் கர்த்தரின் சித்தம் மற்றும் திட்டங்களுக்கு எதிராக ஆனால் நம்முடைய கண்களுக்கு பிரியமாகவும், நம்மை ஞானியாக மாற்ற வல்லமையுள்ளதைப் போல தோன்றும் அநேக எண்ணங்கள் மற்றும் யுத்திகளுடன், வருவான்.

மோசே தேர்ந்தெடுத்தார்,

எபி 11:25 - அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
நீதி 31:30 - சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
  1. பாவத்தின் இன்பங்கள் விரைவானது
  2. வசீகரம் மற்றும் அழகு – வஞ்சகம் மற்றும் வீண்

பர்ப்பதற்கு அழகாக தோன்றும் மேலும் அவைகள் ஞானமுள்ள திட்டங்கள் என்றுகூட தோன்றலாம் ஆனால் கர்த்தருடைய திட்டங்களே ஞானமுள்ளவை, நிலைத்து நிற்கும், எனவே அவருக்கு பயந்து, அவருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து நடப்பதே நித்திய வாழ்வை கொண்டுவரும், நாம் சாத்தானின் சொல்லை கேட்டால் நித்திய ஜீவனிலிருந்து துரத்தப்படுவோம் மேலும் கர்த்தரோடு வாழும் ஒரு அழகான வாழ்வை நாம் இழந்துவிடுவோம்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய திட்டங்கள் மேன்மையானவை, எங்களுடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை. வஞ்சகனை தோற்கடிக்க எங்களுக்கு உமது கிருபையின் மூலம் உதவும். உம்மோடு உறவில் என்றும் இருக்க எங்களுக்கு உதவி செய்யும், ஆமேன்.

             Sol. Pinta Eunice, AOJ

தானியேல் – II

நாள்:23-03-2022 – தேவ செய்தி

எசே 11:19 - அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தருவேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். ஏக இருதயம் என்றால் என்ன?

மனிதனிடம் மூன்று வகையான திறன்கள் உள்ளன. ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம். இந்த மூன்று துறைகளையும் ஒன்றிணைத்து முடிவெடுப்பது மனிதனக்கு கடினமான வேலையாகும்.

பவுல் சொல்லுகிறார்,

கலா 5:17 - மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

இந்த மூன்று திறன்களையும் ஒன்றிணைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நிறைவேற்றப்படும். ஆனால் இந்த முன்றையும் ஒன்றிணைப்பது ஒரு யுத்தம் போலாகும். எனவே அனைத்து எண்ணங்களையும் கிறிஸ்துவுக்கு கீழ்படிய சிறைபடுத்துபவர்களாய் இருப்பதுதான் வெற்றி.

இந்த வெற்றியை பெருவதற்கு ஒரு புதிய ஆவி நமக்கு தேவைப் படுகிறது. கர்த்தரால் மட்டுமே இந்த ஆவியை நமக்கு கொடுக்க முடியும். கர்த்தர் இந்த ஆவியை நமக்கு கொடுப்பதற்கு வாக்களித்திருக்கிறார்.

இந்த புதிய ஆவியை பெறும்வரை நாம் இருகிய மனமுடையவரகளாகத்தான் இருப்போம், கர்த்தருகும், மனிதர்களுக்கும் உணர்வற்றவர்களாகத்தான் நாம் இருப்போம்.

எசே 36:26 - உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

உணர்வற்ற இருதயம் கர்த்தர் மற்றும் மனிதருக்கு முன்பாக தன்னை தாழ்த்தாது. மமிசாமான, உணர்வுள்ள இருதயத்தை பெற்றால்தான் நம்மால் அதை செய்ய முடியும். ஒருவர் கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்திக் கொள்ளாவிட்டால், அந்த நபரை ஆசீர்வதிக்கவோ, கர்த்தருடைய குரலை கேட்கவைக்கவோ கர்த்தரால் முடியாது.

2நாளா 34:27 - இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்.

உழியத்தின் ஆரம்ப நாட்களில், வீடுகளிலே ஜெபிக்க நாங்கள் அழைக்கப்பட்டோம்.  ஒரு வீட்டில் என்ன பிரச்சனை என்று சொல்லாமல் அவர்கள் எங்களை ஜெபிக்கச் சொன்னார்கள். நாங்களும் அவர்களோடு ஜெபித்தோம். அப்போது கர்த்தர் அவர்களுடைய பிரச்சனையை ஒரு வசனத்தின் மூலம் வெளிப்படுத்தினார். எசே 11:18.

நாங்கள் ஜெபித்து முடித்தபின் மனைவி வந்து எங்களிடம் சொன்னார், நாங்கள் சினிமா தியோட்டர் வைத்திருக்கிறோம். அங்கு அதிகமாக நீலப் படங்கள் காட்டப்படுகின்றன. இந்த திரையரங்கு எங்களுடைய குடும்ப சொத்து. மாமனாரும் மற்ற மகன்களும் இதன் மூலமாக வரும் வருவாயை பங்குபோட்டுக்கொள்கின்றனர்.

அந்த வருவாயை விட்டுவிடவும், அப்படிப்பட்ட தொழிலைவிட்டு வெளியே வருமாறும் அவர்களை கர்த்தர் எச்சரித்தார்.

சில மாதங்களுக்கு பின் அதே குடும்பம் மீண்டும் எங்களை ஜெபிக்க அழைத்தார்கள். இதற்கு இடையில் ஒரு சோகமான நிகழ்வு அந்த குடும்பத்தில் நடந்துவிட்டது. அவருடைய சகோதரரின் மனைவி தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகப்பனும் 2 இரண்டு குழந்தைகள்தான் இருந்தனர். கர்த்தருடைய வழிகளையும், கற்பனைகளையும் கற்றுக்கொள்ள அந்த குடும்பத்தின் மூத்த மகனும் அவரது மனைவியும் எங்களுடைய ஒரு பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.  அதன் பிறகு அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள், பின்னர் தைரியமாக அவர்களுடைய தகப்பனிடம் அந்த தவறை செய்ய வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார்கள்.

நாங்கள் போகிறோம், இந்த வருவாயிலிருந்து எங்களுக்க எந்த பங்கும் தேவையில்லை. அவர்களுக்காக தந்தை கட்டிய வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அந்த திரையரங்கிலிருந்து வரும் வருமானத்தையும் அவர்கள் முற்றிலும் கைவிட்டனர்.

கர்த்தர் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். தங்கள் வாழ்வில் இருந்த அருவருப்பான பழக்கவழக்கங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தபோது கர்த்தர் அவர்களுக்கு ஒரு ‘ஏக மனதை’ கொடுத்தார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                     Sr. Anitta, AOJ.

தானியேல் – II

நாள்: 22-03-2022 – தேவ செய்தி

யோவா 12:30
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். என்னுடைய கட்டளையே நித்திய ஜீவன்” என்று இயேசு சொல்கிறார்.

என்ன கட்டளை? கர்த்தர் மோசேயுக்கு பத்து கட்டளையை கொடுத்தார்.  இயேசு கிறிஸ்து பத்துகற்பனைகளை மேம்படுத்தினார் மேலும் அதை சுருக்கி இரண்டு கற்பனைகளாக மாற்றினார்.

மாற்கு 12:30 - உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
மாற்கு 12:31 - இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே;

இந்த இரண்டு கற்பனைகளுக்கும் மேலான கற்பனை வேறொன்ரும் இல்லை. பத்து கற்பனைகளில் ஆழமான கருத்துக்கள் உள்ளன. மனிதனுடைய முழு வாழ்வையும் இது உள்ளடக்கியுள்ளது. அவனுடைய தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், சமுதாயம், அரசியல், அறிவு, ஆன்மீக வாழ்வு என அனைத்துமே இதில் உள்ளது.

ரஷ்யா – உக்ரேனியப் போர் சூழலியல் பிரச்சனைகள் அல்லது நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றின் மூல காரணம் பத்து கட்டளைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை பின்பற்றாததுதான் காரணமாகும்.

சமுதாயத்தில் இழைக்கப்படும் எந்த குற்றமாக இருந்தாலும் அது ஒரு கட்டளையை மீறுவது அல்லது அலட்சியம் செய்வதால் தான் இருக்கும்.

பத்து கற்பனைகளின் சரியான போதனை மற்றும் அதன் பின்  விளைவுகள் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத காரணியாக இருக்க வேண்டும்.

எனக்கு தெரியும், அவருடைய கட்டளைகள் நித்திய ஜீவனாய் இருக்கிறதென்று.

இயேசு சொன்னார், “பிதாவினால் கொடுக்கப்பட்ட கட்டளைகள் நித்திய ஜீவனை உடையவைகள்..

ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவனுடைய மனசாட்சி மரித்தப்பின் வாழ்வு அல்லது நித்திய வாழ்வு உண்டு என்று நம்புகிறான். நம்முடைய விசுவாசம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அதிகமான மக்கள், அவர்கள் கர்த்தர் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும், மரணத்திற்கு பிறகு வாழ்வு என்று நம்புகிறார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்தபோது, அநேக மக்கள் நித்திய வாழ்வைப் பற்றியும் அதை அடைவது எப்படி என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள்.

நித்திய வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள சாதாரண மக்கள் இயேசுவிடம் வருவதை நாம் பார்க்கிறோம்,

மத் 19:16 – அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;

நியாயசாஸ்திரிகள் கூட நித்திய ஜீவனைப்பற்றி அறிந்து கொள்ள இயேசுவிடம் வந்தார்கள்.

லூக் 10:25 - அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

ஆட்சிசெய்பவர்கள் கூட இயேசுவிடம் வந்து நித்திய ஜீவனைப்பற்றி கேட்டார்கள்.

லூக் 18:18 - அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

இயேசு இவ்வாறாக பதில் சொன்னார்,

அவருடைய கட்டளைகள்தான் நித்திய வாழ்வு என்றார். அவருடைய என்பது பரலோக பிதாவை குறிக்கும்.

மனித வரலாற்றை நாம் படிக்கும் போது , பிதா, குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிச்சுத்த ஆவியானவர்கள் எவ்வாறு தனிநபர்களுடன் குறுக்கிடுகிறார்கள் என்பதை அறிவது பல இனிமையான ஆச்சரியங்களை தருகிறது.

அவருடைய கட்டளைகள் என்ற வார்த்தையை கவனிப்போம்.

நற்செய்தியை அறிவிக்க ஒரு முறை நான் வெளியில் சென்றிருந்த போது, ஒரு வீட்டில் தங்கினேன். அங்கே கொசுக்களை விரட்டுவதற்கு மின்சார கருவி இருந்ததை முதல் முறையாகப் பார்த்தேன். (கொசு மட்டை, வலைகள், ஆல் அவுட் எல்லாம் பிற்பாடு வந்தவைகள்) அடுத்த நாள் காலையில் நான், “இது அழகாக இருக்கிறது என்றேன்.” எங்கு வாங்கினீர்கள் என்றேன்? உடனே அந்த சகோதரி ஸ்விட்ச் நிறுத்திவிட்டார்கள், அதை அழகாக பேக் செய்து என்னிடம் கொண்டுவந்தார்கள். நான் மிகவும் வருந்தினேன். அவர்களுக்குச் சொந்தமான பொருள்மீது நான் ஆசைப்பட்டது தவறு என்பதை அறிந்து கொண்டேன். நான் மன்னிப்பு கேட்டேன், ஆனால் அதை அவர்கள் எனது சூட்கேஸில் வைப்பதில்மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.

அன்று நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.


 யாத் 20:17 - பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; ….பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

நாம் பிறனுடையதை இச்சிக்கின்றோம் என்று கூட காட்டக்கூடாது. அது தவறு.

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய கட்டளைகளை கவனமாக் நாங்கள் பின்பற்றி நித்திய ஜீவனை பெறுவோமாக. தெரிந்தோ தெரியாமலோ பலமுறை நாங்கள் உம்முடைய கற்பனைகளை உதாசீனப்படுத்தியிருக்கிறோம், உம்முடைய கற்பனைகளைப்பற்றிய பயத்தை எங்கள் இருதயங்களில் விதைத்தருளும். ஆமேன்.

                 SR. ROGER, AOJ

தானியேல் –  II

நாள் – 21-03-2022 – தேவ செய்தி

பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்;

லூக் 21:16

நாம் ஒரு கடினமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இந்த வசனம் வரவிருக்கும் நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதையும் உள்ளேயும், வெளியேயும் நம்மைத் தாக்கக்கூடிய பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து நாம் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பதைப் பற்றியது. வருகின்ற காலங்களில் நம்முடைய உறவினர்கள் மூலமாக கூட நாம் காட்டிக்கொடுக்கப் படலாம், கர்த்தரைப் பற்றி போதனை செய்ய வருபவர்கள் கூட நம்மை ஏமாற்றலாம்  அல்லது கர்த்தர் பெயரைச் சொல்லி நம்முடைய கவனத்தை அவர்கள் பக்கம் ஈர்க்கலாம் என்று கர்த்தர் சொல்லுகிறார்,  எனவே விழிப்பாய் இருப்பதும், தேவனை பற்றிக்கொள்வதும், ஜெபிப்பதும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதும் மிக அவசியமாகும்.

இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே, நாம் பார்த்துக்கொண்டு இருக்கிற ரஷ்யா-உக்ரைன் போருக்கு ஒரு முடிவே இல்லை என்று தோன்றுகிறது அல்லது போரை முடிவுக்கு கொண்டுவர எந்த மத்தியஸ்தர்களாலும் ஈடுபட முடியவில்லை.

அநேகா நாடுகளில் தொற்றுநோயின் தாக்கம் மற்றும் நம்முடைய அண்டை நாடான இலங்கை போல பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியையும் நாம் காண்கிறோம். இந்த காலகட்டத்தில் நமக்கு என்ன நடக்கும் என்ற கவலை நம் அனைவரையும் வாட்டலாம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் எதை குறித்தும் கவலைப்பட தேவை இல்லை, அவருடைய வார்த்தையை கைகொண்டு, அவரில் விசுவாசம் வைப்பது போதுமானது. அவர் நமக்கு அடைக்கலமாகவும், கோட்டையாகவும் இருப்பதால், அவர் மீது நம்பிக்கை வைப்பதும்,அவரில் விசுவாசம் கொள்வதும் நம்மை எந்த ஆபத்திலும் தள்ளாது.

சங் 91:2 -நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

இயேசு கிறிஸ்துவின் பாதையில் நாம் நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் அவர்தான் நம்மை வழிநடத்துகிறார், நம்மைச் சுமக்கிறார், என்ற நம்பிக்கை, வாழ்வின் எல்லாத் துன்பங்களையும் சந்திக்க உதவி செய்யும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வசங்களை மீண்டும் மீண்டும் அறிக்கையிட்டது, வாழ்வின் கடினமான சூழ்நிலைகளை கடந்துச் செல்ல உதவியது, மேலும் இந்த பிரச்சனைகளை நான் எப்படி தைரியமாக மேற்கொண்டேன் என்று மற்றவர்களை வியக்க வைத்ததுமவர் நமக்கு அடைக்கலமும் கோட்டையாகவும் இருப்பதால், அவரில் விசுவாசமும் நம்பிக்கையும் வைப்பது எந்த விதமான ஆபத்திலும் தள்ளாது.

சங் 138:8

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

தேவன் மீது நம்பிக்கை வைப்பது, அவர் நம்மை வழிநடத்துவார் என்ற அதீத நம்பிக்கையுடன் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்பது, குடும்பத்துக்குள்ளும் வெளியிலிருந்தும் வரும் பிரச்சனைகளை மேற்கொள்ள உதவும். நம்மைப் படைத்தவர் நம்மை பாதுகாப்பார், அவருடைய பாதையில் நம்மை வழிநடத்துவார்.

நீதி 3:5-6

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

உலகமே உனக்கு எதிராக நின்றாலும், கர்த்தர் உன்னோடிருந்தால், எதுவுமே உங்களை சேதப்படுத்தாது.

Sol. Geraldine Viji Cruz Xavio

தானியேல் –II
நாள்:20-03-2022 – தேவ செய்தி

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்

– நீதி 29:18

இஸ்ரவேலின் ஞானமுள்ள ராஜாவாகிய சாலமோன் தன்னுடைய நீதிமொழிகள் புத்தகத்தில் இவ்வாறாக எழுதியிருக்கிறார்.


பல ஆண்டுகளாக இந்த வசனத்தை மக்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள், ஏனென்றால் நமது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் தேசிய வாழ்க்கையில் மிக முக்கியமாக தேவையான தொலை நோக்கு பார்வையை இது குறிப்பிடுகிறது.

எங்கு எதிர்காலத்தை குறித்த தொலை நோக்கு பார்வை இல்லையோ அங்கு மக்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுபாடு போன்றவைகளை இழந்துவிடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

எதிர்காலத்தைப்பற்றிய கனவுதான் ஒரு தனிபட்ட மற்றும் பெருநிறுவன ஒழுக்கமாகும்.


பெரும்பாலான மனிதர்களுக்கு 20/20 பார்வை திறன் இருக்கும்போது, கழுகளுக்கு வியக்க வைக்கும் 20/5 பார்வைதிறனுடன் கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார். அதாவது 5 அடிதூரத்தில் நமக்கு கூர்மையாகவும் தெளிவாகவும் தெரிவது 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு கழுகுக்கும் தெளிவாகத் தெரியும். சிறந்த பார்வை திறன் கொண்டவர்களை நாம் “கழுகு கண்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

நம்முடைய தொலைநோக்கு பார்வை(இலக்கு) நம்முடைய கண்களால் காணக்கூடிய வரம்புகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது மேலும் நம்முடைய இதயம் உணரும் சுதந்திரத்திற்குள் நுழைய நம்மை அனுமதிக்கிறது.

கண்ணுக்கு தெரியாததையும், அறியாததையும் சாத்தியமாக்குவது இந்த தொலைநோக்கு பார்வைதான்.

தொலைநோக்கு பார்வை

என்பது தைரியத்தின் அடித்தளம் மற்றும் விடாமுயற்சியின் எரிபொருளாகும்.

ரைட் சகோதரர்களை விமானத்தை கண்டுபிடிக்க தூண்டியது விமானத்தைப் பற்றிய அவர்களது தொலைநோக்கு பார்வை. ஒளி விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்குன் ஒளியைப் பற்றிய தொலை நோக்குபார்வைதான் உதவியது. டெஸ்க்டாப் கணணியை கண்டுபித்த ஸ்டீபன் ஜாப்ஸைத் தூண்டியது அதைப்பற்றிய அவரது தொலை நோக்கு பார்வைதான். எல்லா மக்களுக்கும் பயந்தர கூடிய மென்பொருளை வழங்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வைதான் மைக்ரோசாப்ட் உலகளாவிய சாம்ராஜ்யத்தை உருவாக்க மற்றும் கண்டுபிடிக்க பில்கேட்ஸை ஊக்கப்படுத்தியது.

வளர்ச்சியின் ஆற்றல் தொலைநோக்குபார்வைதான்.

இன்றை உலகிற்கு மிக முக்கியமாக தேவைப்படு வதும் இதுவே.

ஆகார் கர்த்தரை “என்னை காண்கின்ற தேவன்” என்று பெயரிட்டாள்.

ஆதி 16:13 – அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

நம்முடைய இலக்கு அல்லது தொலை நோக்கு பார்வை தெளிவாக பலகையில் அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் வண்ணமாய் எழுதப்பட்டிருக்க வேண்டும்.


ஆபா 2:2 – அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.


குழந்தை சாமுவேல் இஸ்ரவேல் மக்களுக்கு மத்தியில் தரிசனம் இல்லாத காலகட்டத்தில் வளர்க்கப்பட்டான்.

1சாமு 3:1 – சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக்கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலேகர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

SOL. BINESH,AOJ

தானியேல் – II
நாள் 19-03-2022 – தேவ செய்தி

போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

லூக் 24:14

 இயேசு கிறிஸ்து நம்மை ஆறுதல் படுத்துகிறார். நம்முடைய அன்றாட வாழ்வின் சோதனைகளால் நாம் சிக்கிகொண்டிருக்கிறோம் என்று அவருக்கு தெரியும். 

எனவே அவரில் நம்பிக்கை வைக்குமாறு இயேசு சொல்லுகிறார். நம்முடைய சார்பாக அவர் பதில் தருவார் என்று நமக்கு உறுதியளிக்கிறார். வேதத்தில் வருகின்ற அப்போஸ்தலர் பவுல், பேதுரு, ஸ்தேவான் போன்றவர்கள் துன்பங்களையும், உபத்திரவங்களையும் தங்கள் வாழ்வில் அனுபவித்தார்கள், ஆனால் தேவனுடைய பிரசன்னத்தில் அவருடைய வேலையை செய்கிறோம் என்று அறிந்திருந்ததால் நற்செய்தியை பயமில்லாமல் போதித்தனர்.

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். யாத் 4:12

கர்த்தரில் நம்பிக்கை வைத்து நற்செய்தியை சாட்சிகளோடு தேசங்களில் பகிர்ந்து கொள்ள நாம் மறந்துவிட கூடாது. நம்மை மக்கள் தடை செய்தாலோ, காயப்படுத்தினாலோ, ஏளனம் செய்தாலோ, நம்மீது வேண்டாத வழக்கு பதிவு செய்தாலோ நாம் கவலைப்பட கூடாது, எப்படி நம்மை காப்பது என்ற வருத்தமும் கூடாது. இது எல்லாமே கர்த்தருடைய மகிமைக்காக.

மாற்கு 13:11 - அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்னபேசுவோம் என்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே எது உங்களுக்கு அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர் நீங்களல்ல பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.

விசுவாசத்திற்கு சாட்சிகளாக நாம் நிற்க வேண்டும். நம்முடைய தலைவரான பரிசுத்த ஆவியானவர் நமக்காக பதில் அளிப்பார். நம்முடைய உபத்திரவ நேரங்களில், துன்ப, துயரங்களில் அவர் நம்மை ஆறுதல் படுத்துவார். நம்முடைய விசுவாசம் கர்த்தரில் குறைவுபட கூடாது.

இந்த வசனத்தொடு தொடர்புடைய ஒரு சாட்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

பஞாப் மாநிலத்தில் வசிக்கும் ஹர்தீப் மற்றும் சந்தீப் என்பவர்கள் அருகில் இருந்த சபைக்கு சென்றார்கள். பிறகு இயேசுவின் படை அணியில் சேர்ந்தார்கள். இதை அறிந்த பாஸ்டர்கள் அவர்களுக்கு விரோதமானார்கள். கிரமத்துமக்களுக்கு மத்தியில் இந்த இரண்டு சகோதரர்களையும் அவர்கள் இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல், யாரும் இவர்களோடு பேச கூடாது என்றும் சொல்லியிருந்தனர். கர்த்தரில் நம்பிக்கை வைத்து அவர்கள் அமைதியாய் இருந்தார்கள், அவர்களுக்கு முன் ஒன்றும் பேச வில்லை. ஒரு ஆண்டிற்கு பிறகு அந்த சபையில் பாஸ்டருடைய அண்ணன் மகன் சபையை தன் கையில் எடுத்துக்கொண்டு அந்த இரண்டு பாஸ்டர்களையும் சபையை விட்டு நீக்கி விட்டார். அவர்கள் என்ன செய்தார்களோ, அது அவர்களுக்கே நடத்தப்பட்டது. கர்த்தர் அவர்களுக்கு பதில் தந்தார்.

லூக் 12:12 – நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். நம்முடைய இதயங்களை நிலைநிறுத்தி, கர்த்தருக்கு நம்மை அர்பணிக்க வேண்டும், அதனால் எது வந்தாலும் நாம் தயாராக இருப்போம், நம்முடைய எல்லா தேவைகளையும் கர்த்தர் சந்திப்பார் என்ற நம்பிக்கை இருக்கும்.

நம்மிடம் நம்பிக்கை குறைவாக இருந்தால், கர்த்தரிடம் கேட்போம், அவர் நமக்கு உதவுவார்.

மத் 10:19 – அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

இயேசு எப்பொழுதும் நம்மோடு இருப்பதாக வாக்களித்திருக்கிறார் (மத் 28:20), நம்முடைய வாழ்வின் இருளான நேரங்களில் கூட அவர் நம்மோடு இருப்பார். அவர் எப்பொழுதும் எந்நாளும் நம்மோடு இருப்பார்.

Sol. Poonam Batra, AOJ

தானியேல் – II
நாள்: 18-03-2022 – தேவ செய்தி

ர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

(யோசுவா 3:7).



இஸ்ரவேலர்கள் மோசேவின் மீது அளவில்லா நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனாலும், யோசுவாவின் மனதில் அநேக கேள்விகள் இருந்தன.

  1. மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்படிவார்களா?
  2. மக்களை கானான் தேசத்திற்கு வெற்றிகரமாக அவரால் அழைத்துச் செல்ல முடியுமா?
  3. மோசேவோடு கர்த்தர் இருந்ததுபோல அவரோடும் கர்த்தர் இருப்பாரா, மாட்டாரா?

கர்த்தர் இந்த எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். யோசுவாவுக்கு கர்த்தர் சொன்னார்,

யோசு 1:2 - என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்


யோசு 1:3 – நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்

யோசு 3:7 - என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

யோசுவாவை உயர்த்துவதற்காக, சிவந்த சமுத்திரத்தைப் போன்ற இன்னொரு அனுபவத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கும் கர்த்தர் கொடுத்தார். ஆனால் அது இப்பொழுது சிவந்த சமுத்திரம் அல்ல மாறாக யர்தன் நதி. மோசேவோடு தேவன் இருந்ததுபோலவே இப்போது யோசுவாவுடனும் இருக்கிறார் என்பதை நிறுபிப்பதற்கு அதே போன்ற ஒரு அற்புதத்தை தேவன் நிகழ்த்தினார்.

யோசு 4:14 - அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

இயேசு சொன்னார் யோவா 12:26 – ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

சிலரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்போது, நான் தகுதியற்றவன் என்று நினைத்து அதனை ஏற்க தயங்குகிறார்கள். கர்த்தருடைய பிரசன்னத்திலே நம்முடைய தகுதி என்ன என்பதை நாம் உறுதியாய் இருக்க வேண்டும். யோசுவுவாவை ஒரு தலைவராக கொண்டுவர யோர்தான் நிகழ்வை அவர் உருவாக்கியது போல, உங்களுக்கும் இதுபோன்ற அனுபவத்தை தேவன் உருவாக்கலாம். கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காகவே.

நான் அணி சபையைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போது, அணி சபைதான் உண்மையான சபை என்று ஏற்றுக்கொள்வதில் பலருக்கு சிரமம் இருந்தது. ஆனால் தேவன் கோவிட் 19 என்ற பெருந்தொற்றால் கர்த்தர் பெரிய காரியத்தை செய்தார். அணி சபைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட வீட்டு சபைதான் உண்மையான சபை என்று அறிவிக்க துவங்கினர். அப்போஸ்தலர் கால திருச்சபையில் மக்கள் வீடுகள் தோரும் ஒன்று கூடி தேவனை ஆராதித்தார்கள், அவர்களிடம் வேறு கட்டிடங்கள் இல்லை.

கர்த்தர் அவர்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இவ்வாறு செய்தார். 

ஒவ்வொரு விசுவாசியும் ஒரு தலைவனே. நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம், உங்களுடைய திறமைகளை முழுமையாக ஊக்குவித்து, ராஜ்யத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஊழியத்தில் நீங்கள் குறித்த இலக்கை அடைய உறுதியளிக்கவும்.


விசுவாசத்தில் உறுதியாக அடி எடுத்து வைக்கவும். யோர்தான் நதியை கடக்க வைத்தபோது எப்படி யோசுவாவுக்கு சவாலாக இருந்ததோ உங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும்.உங்களுடைய விசுவாச பயணத்தில் அநேக யோர்தான்களுக்கு, எரிக்கோகளுக்கு, சிவந்த சமுத்திரங்களுக்கு கட்டளை கொடுக்க வேண்டும்.

நீங்கள் கட்டளை கொடுக்காவிட்டால், நீங்கள் புது முயற்சி செய்யாவிட்டால் உங்களோடு இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகரமாட்டார்கள்.

வேறு யாரிடமிருந்தோ வரும் கட்டளைக்கு காத்திருப்பார்கள்.

நீங்கள்தான் கட்டளை கொடுக்க வேண்டும். இலக்கை அடையுமாறு கட்டளை கொடுங்கள். யாரும் திரும்பிபார்க்கவோ, போரில் இருந்து விலகவோ, தொடராமல் நிற்கவோ அனுமதிக்காதீர்கள். நாம் யுத்த பூமியில் நிற்கிறோம். எதிரி நம்மை நிச்சயமாக தாக்குவான். யுத்தபூமியில் இரண்டு காரியங்கள் நடக்கும். நீங்கள் யுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் நீங்கள் தாக்கப்படுவீரகள். முழுமையாக தேசத்தை கைப்பற்ற நாம் முன்னேறுவோம். உங்களுடைய மாநிலத்திலோ, தொகுதியிலோ, கிராமத்திலோ, அல்லது வீட்டிலோ எந்த ஒரு அசுத்த ஆவியையும் இருக்க விட வேண்டாம். இல்லையென்றால் உங்களுடைய கண்களில் முள்ளுகளும், உங்கள் விலாக்களுக்கு கூர்களுமாயிருந்து நீங்கள் வாழும் இந்த தேசத்தில் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள். நாம் விழித்திருப்போம்.

SR. ANGELICA AOJ

தானியேல் – II
நாள் – 17-03-2022 – தேவ செய்தி

பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்;
லூக் 21:11

வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
பிரியமான தேவ ஜனங்களே, இந்த வேத வசனத்தில் சீடர்கள் இயேசுவுவோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய கேள்விக்கு, இயேசஇவ்வாறாக பதிலளித்தார்,
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
இந்த உலகத்தல் வஞ்சிக்கப்படாமல் இருக்க இரவும் பகலும் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான ஒன்று, இந்த நிகழ்வுகளைப்பற்றி கேள்வி படும்போது நாம் பயப்படகூடாது, மாறாக கர்த்தருடைய பிரசன்னத்தில் அமர்ந்து, இந்த உலகிற்கு அவர்கொடுக்க விரும்பும் வெளிப்பாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய பரிசுத்தத்தை காத்துக்கொண்டு நற்செய்தியை அறிவிக்க வேண்டும். நம்மோடு இருக்கும் பலர் நம்மை ஏமாற்ற முயற்சி செய்யலாம். இதைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நாம்முடைய ஆன்மீக கண்களால் காண வேண்டும். ஆண்டவருடைய ஐக்கியத்தில் இருக்கும் போது , அவர் நமக்காக ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கும் திட்டங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இது எரேமியா 29:11 இல் எழுதப்பட்டுள்ளது,

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


நம்முடைய எதிர்காலம் கர்த்தருடைய கையில் இருக்கிறது, அவரே நமது நம்பிக்கையும். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். மத்தேயு எழுதுகிறார், சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் உலக முடிவிற்கும் அவர் வருவதற்கும் என்ன அடையாளங்கள் என்று கேட்டதற்கு அவர் பதில் கொடுத்திருக்கிறார்.


மாத் 24:4-28 உள்ள வசனங்களில் அநேக முறை எச்சரித்துள்ளார், அந்த உபத்திரவத்தின் நாட்களில் உண்மையான மேசியாவாகிய இயேசுவிடம் இருந்து மனிதர்களின் கவனத்தை திசைதிருப்ப பலர் வருவார்கள். அவர் வரபோகும் நேரத்தையோ, நாளையோ ஒருவரும் அறியாததால், நாம் எப்பொழுதும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.


இயேசுவின் ராஜ்யம் வரும்போது அநேக மக்களுக்கு என்ன நடக்கும் என்று பத்து கன்னிகைகளின் உவமை மூலமாக இயேசு நமக்கு விளக்குகிறார்.

நினையாத நேரத்தில் மனுமகன் வருவார், பாவிகளை தண்டிக்கவும், நீதிமான்களுக்கு பரிசளிக்கவும் அவர் வருவார். அதற்கு பின் வேறு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படாது. மக்கள் ராஜ்யத்தின் கதவை எவ்வளவு வேண்டுமானாலும் தட்டலாம் ஆனால் கதவு மூடியே இருக்கும். மத் 25:1-13.


அன்பின் பரலோக பிதாவே,
இந்த வெளிப்பாட்டை புரிய வைத்ததற்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம். உம்முடைய சித்தத்தின்படியே என்னுடைய இந்த வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும். ஒரு நாள் உம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக நின்று “நல்லது, உண்மையும் உத்தமுமான சேவகனே” என்று நீர் சொல்லும் வார்த்தைகளை கேட்க வரம் தரும்படியாய் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் பிதாவே,

ஆமேன்.

Binesh Kumar
Bihar

தானியேல் – II
நாள் 16-03-2022 – தேவ செய்தி

ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:


லூக் 21:2


ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளை போடுகிறதை இயேசு கண்டார். இயேசு சொன்னார், “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்டு தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.”


2கொரி 9:7 – மக்கதோனியா சபையின் விசுவாசிகள் எவ்வாறு கொடுத்தார் என்பதை பவுல் சொல்லுகிறார்,

“மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.”


எருசலேமில் துன்பப்படும் தங்கள் சக பரிசுத்தவான்களைப் பற்றி அவர்கள் மிகவும் கவலைப் பட்டனர். அவர்களுக்கு செய்த உதவி அன்புடனும் அக்கறையுடனும் இருந்தது. நாம் மற்றவர்களுக்கு கொடுப்பது எப்படி?


2கொரி 10:18 – தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால்புகழப்படுகிறவனே உத்தமன்.


நாம் கொடுப்பது அனைத்தும் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நற்செய்தி அறிவிக்க கிராமத்திற்கு செல்லும் போது நான் சாட்சியாக இருந்தேன்.
ஒரு நாள் மாலை ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இயேசுவை தம்முடைய சொந்த இரட்சகராக சமீபமாகத்தான் ஏற்றுக்கொண்டார். அந்த கிராமத்தில் அவர் தனியாகத்தான் வசித்துவந்தார், அவருடைய உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. அவருக்கு விதவை ஓய்வூதியம் கிடைத்தது மேலும் வாழ்வாதரத்திற்காக சில வேலைகளை செய்து வந்தார். அவரிடம் பழைய துணிகள் இருந்தது, ஒரு பெட்டியிலே அவைகளை வைத்திருந்தார். சமைப்பதற்கு சில விரகு கட்டைகளும் அங்கு இருந்தன. தன் பணப்பையிலிருந்து ஒரு கசசங்கிய 10 ரூபாய் நோட்டை எடுத்தார். அவரிடம் இருந்த பணம் அதுமட்டுமே. நான் அதைக்கண்டு அழுதுவிட்டேன், வேண்டாம் என்று மறுத்தேன். முழு மனதுடனும் சந்தோஷத்துடனும் அவர் அதை கொடுத்தார். மறுக்கமுடியாமல் அதை ஏற்றுக்கொண்டேன்.

பிறகு ஜெபித்தேன், பின்னர் அந்த பணத்தை ஆசீர்வதித்து அவரிடம் கொடுத்தேன். அவருக்கு கொடுக்க என்னுடைய பையில் ஒன்றுமே இல்லை என்பதை நினைத்து நான் வெட்கப்பட்டேன்.


இயேசு சொன்ன விதவை கைப்பெண்தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.


அன்பின் பரலோக பிதாவே, நீர் எங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் எங்களுக்கு கொடுத்தவைகளில் இருந்து உமக்கு காணிக்கையாக தருகிறோம். ஏழை விதவையைப் போல எங்கள் காணிக்கை உமக்கு உகந்ததாய் இருப்பதாக, மன மகிழ்வுடன் கொடுக்க எங்களுக்கு உதவி செய்யும் தேவனே. ஆமேன்.


Sol. Santhini AOJ

தானியேல் – II
15-03-2022 – தேவ செய்தி

ங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

லூக் 21:15

நம்மை விரோதிக்கிறவர்களை சமாளிக்கும் ஞானத்தையும், புரிதலையும் தருவார் என்பது கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குறுதி. கர்த்தர் கொடுத்த இந்த வாக்குறுதியின் அற்புதமான நிறைவேறுதல் அப்போஸ்தலர் நடபடிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. பவுல் யூதர்களால் குற்றம்சாட்டப்பட்டான். ஆனால் ரோமாபுரியின் ஆளுநர் பெலிக்ஸ் மற்றும் ராஜா அக்ரிப்பா ஆகியோருக்கு முன்பாக வாதாடுவதற்கு கர்த்தர் அவருக்கு ஞானத்தை கொடுத்தார்.

இன்றைய புதுமையான உலகில் நமக்கு வேண்டிய அனைத்தும் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.

ஆனால் உலகத்தில் கண்டறிய முடியாத ஒன்று கர்த்தருடைய கைகளில் இருக்கிறது அதுதான் ஞானம். 

கர்த்தர் கொடுக்கும் இந்த ஞானத்தின் வல்லமை அற்புதமானது, இந்த உலகம் நமக்குத் தரும் எதையையுமே இதற்கு சமமாக வைக்க முடியாது.


ஞானமும் புரிதலும் வயதானவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று மக்கள் கூறுகிறார்கள்.


யோபுவின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, “அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. “ ஒரு மேன்மையான உதாரணம், சாலமோன் ராஜா. அவனுக்கு வேண்டியது எல்லாம் அவனிடம் இருந்தது இருப்பினும் அவன் கர்த்தரிடம் ஞானம் மற்றும் புரிதலை பெற விரும்பினான் அதன் மூலமாக சரி எது தவறு எது என்று அறிந்த ராஜ்யத்தை நல்ல பாதையில் ஆட்சி செய்ய விரும்பினான்.

நாம் இயேசுவை பின்பற்றும்போது, அவர் நம்மை ஞானத்திடம் அழைத்துச் செல்கிறார். ஞானம் முதலில் கர்த்தருடைய வார்த்தையில் காணப்படுக்கிறது. யாக்கோபு 3:17 – பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.


என்னுடைய பாட்டிக்கு கர்த்தர் செய்த ஒரு அற்புதத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பாட்டி ஒரு பாரம்ப்பரிய சபையில் இருந்ததால் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சபைக்குச் செல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் கர்த்தருடைய வார்த்தை அவரை குத்தியது மேலும் வாழ்வில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஆனால் கர்த்தர் காட்டிய பாதையில் செல்ல அவர் முடிவுசெய்துபோது, அவரை சுற்றி இருந்தவர்கள் கேலி செய்தனர், சிலர் அவருடைய மனம் புண்படும்படி பேசினர். ஆனால் ஒவ்வொருவரோடு பேசவும் அவர்களுடைய வாதத்தை எதிர்கொள்ளவும் கர்த்தர் அவருக்கு ஞானமும் அறிவும் கொடுத்தார்.

எல்லாம்வல்ல தேவன் என் பாட்டி மூலம் பல அற்புதங்களைச் செய்தார், மேலும் அவருக்கு எதிரஅக இருந்த அனைவரையும் அவருடன் இருக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் செல்லவும் கிருபை செய்தார்.


கர்த்தாவே நீர் எங்களகு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்,. கொலோ 2:3 இல் உள்ளது போல , “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்த கர்த்தாவே எங்களுக்கு ஞானத்தையும், அறிவையும் தந்தருளும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமேன்.


Sol. Gesha , AOJ