தானியேல் – II
நாள் 03-04-2022 – தேவ செய்தி


எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்;

அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

1 தெசலோ 5:17,18


இந்த அதிகாரத்தில் பவுல், இயேசுவை பின்பற்றும் நம் அனைவருக்கும் ஒரு கடைசி அறிவுரை வழங்குகிறார். நாம் அனைவரும் உயிருள்ள தேவனின் பிள்ளைகள் மேலும் எந்த தடைகள், பிரச்சனைகள், கடினமான சூழ்நிலைகள் அல்லது தடைகள் எதுவாக இருந்தாலும் நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று அது சொல்கிறது. நம்முடைய ஜெபம் நிறுத்தப்படவோ, தடைபடவோ கூடாது. ஒவ்வொரு விதத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், எப்பொழுதும் கர்த்தருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் விருப்பம்.


கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

பி லி ப் 4:4.


பிலி 4:6,7 – நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இதை நாம் செய்தால் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட அற்புதமான கர்த்தரின் அமைதியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

நன்றிநிறைந்த இருதயத்துடன், மகிழ்ச்சியோடு ஜெபித்துக்கொண்டிருப்பதே கர்த்தரின் விருப்பம். ரோம 8:28 - அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். நம்முடைய தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருக்கிறார். அவர் உன்னை உருவாக்கி இருக்கிறார், உன்னை அன்பு செய்கிறார். நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்பதால், நீங்கள் இப்போது என்ன செய்தாலும் அவர் உங்களுக்கு நல்லது செய்வார்.
எரே 29:11 - நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


நீதி 3:5-6 – உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.


நம்மை சிருஷ்டித்த உயிருள்ள தேவன் மீது நம்முடைய முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுடைய தேவனுடைய சித்தத்தின்படி மகிழ்ச்சி மற்றும் நன்றிநிறைந்த இருதயத்துடன் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் அவருடைய சித்தத்தின்படி வேலை செய்யும்போது அவர் நம்முடைய வழிகளை முன்னநடத்துகிறார், கோணலான பாதைகளை செவ்வையாக்குகிறார்.


உபா 28:14 – இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின்கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.


இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை பார்த்து துவண்டுவிடாதே, ஏமாற்றமடையாதே, மாறாக, நன்றி மற்றும் புகழ்ச்சியோடு இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தால் அவர் உன்னுடைய சூழ்நிலையை மாற்றுவார், உனக்கு வெற்றிதருவார்.

னது கணவருக்கு விபத்து ஏற்பட்டு, மண்டை எலும்பு முறிந்து மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு, அவரது முன் மண்டை எலும்பின் உடைந்த பகுதி மூளையில் சொருகப்பட்டது. சுய நினைவின்றி வென்டிலேட்டரில் இருந்தார், மேலும் நம்பிக்கை இல்லாத நிலையில் இருக்கிறார் என்றனர் மருத்துவர்கள். ஆனால் நான் இயேசுவை பற்றிக்கொண்டு அவரையே நம்பினேன். என் கணவரின் மோசமான மற்றும் சாத்தியமற்ற சூழ்நிலையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஜெபித்தேன். என்னுடைய இடைவிடாத ஜெபம் மற்றும் நன்றி சொன்னதின் காரணத்தால் என் கணவரை கர்த்தர் வென்டிலேட்டரில் இருந்து வெளியே வரச் செய்தார், மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது, கர்த்தர் அவருடைய உயிரை காப்பாற்றினார். நன்றி இயேசுவே. எல்லா புகழும் அவர் ஒருவருக்கே.


கர்த்தாவே, இதைபடிக்கும் அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையின் அன்றாட அனுபவத்தில் நன்றி மற்றும் புகழ்ச்சியின் இருதயத்தை தந்தருளும். கர்த்தாவே, அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கவும், தொடர்ந்து ஜெபிக்கவும் மேலும் எல்லா சூழ்நிலைகளிலும் உமக்கு நன்றி சொல்லவும் கற்றுத்தாரும். உம்முடைய சத்தியம் ஒரு நன்றி நிறை உள்ளத்தில் வாழ்கிறது என்பதை நானறிவேன். உம்மில் அவர்களுடைய விசுவாசம் அதிகரிப்பதாக, உம்முடைய சித்தத்தை அவர்கள் செய்வார்களாக, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Sol. Himakshi ,Aoj

தானியேல் – II
நாள் 02-04-2022 – தேவ செய்தி

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.


அது ஒரு மிகவும் சாதாரண நாள், கழுதைக்கும் அதன் குட்டிக்கும் கூட அது சாதாரண நாள்தான். கழுதையும் அதன் குட்டியும் எங்கே இருக்கின்றன என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அவைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதும் அவர் அறிந்ததே. அவைகளை அவிழ்க்க மட்டும் அவர் சொல்ல வில்லை, அவருக்கு அது தேவை என்றும் சொன்னார். யாராவது கேட்டால், அது ஆண்டவருக்கு தேவை என்று சொல்லுங்கள் எனறார். 2001 ஆண்டு நானும் இதைப் போல நம் ஆண்டவராகிய இயேசுவை சந்தித்தேன். இந்த சந்திப்பு என் வாழ்வை முற்றிலும் மாற்றிப் போட்டுவிட்டது. அவருடைய மாபெரும் கிருபைதான் இது, என்னை விடுதலை மட்டும் செய்ய வில்லை, அவருக்கு நான் தேவை என்றும் சொன்னார். ஆயிரகணக்கான மக்கள் உண்மையும் நேர்மையும் கொண்டவர்களாக இருக்கும்போது, என்னை அவருடைய ராஜ்யத்திற்காக அழைத்தார். நானா? என்னையா?

உங்களால் நினைத்துபார்க்க முடிகிறதா?


வெளி 5:5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

அவரால் எந்த முத்திரையையும், வாழ்வின் எந்தப் பகுதியிலும், எந்த தேசத்திலும், எந்த மக்களையும், எந்த முடிச்சையும் அவரால் உடைக்க முடியும்,
நாம் கதரேனருடைய நாட்டிற்கு போவோம், லேகியோன்(6000) அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்கிறோம், அவன் அசுத்த ஆவிகளின் கட்டுபாட்டிற்கு கீழ் வசித்துவந்தான், சாத்தான் அவனை ஆட்சி செய்தது.

யாராலும் குணப்படுத்தமுடியாத ஒரு மனிதன் அவன், ஆனால் இயேசுவுக்கு அல்ல. மாற்கு 5 சொல்லுகிறது, அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவன் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தான் ஆனாலும் அவைகளை அவன் முறித்துபோடுவான்’ கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொள்வான், அவனை யாராலும் கட்டுப்படுத்த முடிய வில்லை. ஆனால் இயேசு வரக் கண்டு அவன் ஓடிவந்து அவரை பணிந்துகொண்டு “இயேசுவே, உன்னதமான தேவனின் குமாரனே” என்று சொன்னான்.


எபே 1:22 – எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
அதற்கு பின் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அந்த மனிதன் முற்றிலும் சுகமானான், அசுத்த ஆவி அவனை விட்டு விலகியது, அவனுடைய ஆத்துமா சுத்தமானது, அவன் விடுதலை செய்யப்பட்டான். சாத்தான்கள் அனைத்தும் பன்றிகளுக்குள்ளே அனுப்பப்பட்டது.

அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவன், சங்கிலிகளாலும், விலங்குகளாலும் கட்டப்பட்டவன், கல்லறைகளில் வாழ்ந்தவன், கற்களால் தன்னையே காயப்படுத்தி கொண்டவன், ஏளனபடுத்தப்பட்டவன், கைவிடப்பட்டவன், தனிமையில் இருந்தவன், மேலும் தன் உயிரை மாய்க முயற்சித்தவன் இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் 

அமைதியாக இருந்தான்.


அவன் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தான், ஆனால் நீ வீட்டிற்கு போ என இயேசு அவனுக்கு கட்டளை கொடுத்தார். அவனுக்காக நான் மிகவும் வருந்தினேன். அவருடைய கிருபை மனிதன் வசிக்கும் அந்தகாரமான இடத்திலும் பிரகாசிக்கும். கர்த்தருடைய கிரியைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க அவன் அழைக்கப்பட்டான். கர்த்தர் அவனை இப்பொழுது மற்றவர்களை விடுலை செய்யும் ஒரு ஊழிகாரனாக மாற்றினார், யாருக்குமே தேவைப்படாத அவனை தனக்காக பயன்படுத்தினார்.


இயேசு, சிலுவையிலே தன்னுடைய இரத்தத்தை சிந்தி நம்மீது இருந்த சாத்தானின் சாவின் சங்கிலியை உடைத்தெறிந்தார், பாவத்தின் அடிமைதனத்திலிருந்து நம்மை விடுவித்தார். நாம் அவரை ஏற்றுக்கொள்வதன் மூலம் அந்தகாரத்தின் ராஜ்யத்திலிருந்து உடனடியாக் ஒளியின் ராஜ்யமாகிய கர்த்தருடைய ராஜ்யத்திற்கு நொடிபொழுதில் மாற்றப்படுகிறோம்.
யோவா 8:36 – ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.


ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, இயேசுவுக்காக நன்றி செலுத்துகிறேன், அவர் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி அந்தகாரத்தின் பிடியிலிருந்து எங்களை பாதுகாத்தார். இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தொடப்படுவார்களாக, பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்படுவார்களாக, அவர்களுடைய வாழ்வின் அந்தகாரங்களில் உம்முடைய ஒளி ஒளிர்வதாக, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு பரிபூரண வாழ்வு அவர்களுக்கு கிடைப்பதாக, இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Sol.Lalitha Menon,Aoj

தானியேல் – II நாள் 01-04-2022 – தேவ செய்தி

லூக் 21:1-4 - அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.

நற்செய்திகளில், கர்த்தருடைய நன்மையின் மீது முழுவதுமாக சார்ந்திருக்கும் இந்த விதைவையை எடுத்துக்காட்டாக நம் ஆண்டவர் இயேசு சொல்லுகிறார். ஏழை விதவை அவளிடம் இருக்கும் அனைத்தையும் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்கிறார். யாரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்? தாராளமாக கொடுக்கும் பரிசேயனையா அல்லது தன்னுடைய ஏழ்மையிலும் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்த விதவையோடா? இந்த வசனத்தில் நம்மை காண்டுபிடிப்போம்.

நம்மை விட குறைவானவர்களுடன் நமது செல்வத்தையும், சொத்துக்களையும் பகிர்ந்துகொள்வது மற்றும் கொடுப்பது இரண்டிலும் வித்தியாசம் உண்டு. மற்றவர்களுக்கு பணம் கொடுப்பது என்பது நமக்கு ஈசியாக இருக்கலாம், நம்முடைய நேரம், திறமை, சக்தி, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். நிபந்தனை இல்லாமல் கொடுக்க நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம், நம்முடைய மீதமாக இருப்பதையும், நமக்காக பயன்படுத்தி இனி தேவையில்லை என்னும் சூழ்நிலைவரும்போது மற்றவர்களுக்கு கொடுப்பது கூடாது.

நம்மையே கொடுக்கும்படியாக கர்த்தர் இன்று நம்மை கேட்கிறார்.


நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, கர்த்தர் கொடுப்பதின் பின் இருக்கும் நம்முடைய மன நிலை, நடவடிக்கை மற்றும் நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார் கர்த்தர்.


யோவா 3:16 – தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.


கர்த்தருக்கு எது மிகவும் முக்கியமோ, பிரியமானதோ அதை நமக்கு கொடுத்திருக்கிறார். பாவிகளாகிய நமக்காக தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பலி கொடுத்தார், அவரும் தன்னை வெறுமையாக்கினார். இயேசுவும் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுகொடுத்தார், தன்னுடைய சரீரம், இரத்தம் மற்றும் உயிரையும் கொடுத்தார்.


லூக் 14:33 – அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம்

வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
கர்த்தர், இயேசுவின் சீடர்களாகிய நமக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அவரைப்போல மாற நம்முடைய சித்தம் அல்ல, அவருடைய சித்தம் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தப்பட வேண்டும். இந்த ஏழை விதவையைப் போல நான் கர்த்தரிடம் ஜெபிக்கிறேன், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் தாராளமாக கொடுக்க கர்த்தர் நமக்கு திறந்தமனதை கொடுப்பாராக, ஆமேன்.


தனியேல் –
நாள் – 30-03-2022 – தேவ செய்தி

ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். 
மாற்கு 2:21.


இந்த வசனம் தெளிவாக சொல்லுகிறது – நம்முடைய பழைய உலகபிரகாரமான வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வாக மாற்றாவிட்டால், நம்முடைய முன்னிலமையை விட பின்னிலை மோசமாக இருக்கும். பரலோக வாழ்வின் மதிப்புகள், இரட்சிப்பின் மதிப்பிகள் இல்லாமல் நம் வாழ்க்கை நிர்வாணமாக, அம்பலப்படுத்தப்பட்டு, அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை இழந்து இருக்கும். சேதமடைந்த பகுதிகளை மறைக்க புதிய ஒட்டுக்களுடன் பழைய ஆடையை அணிய முடியாது. அதேப் போல இயேசு கிறிஸ்துவில் நம்முடைய புதிய வாழ்வில் பழைய வாழ்வை கலக்க முடியாது.


ஊதாரி மைந்தனின் பிதா, மகன் திரும்பி வந்த போது என்ன செய்தார்? லூக் 15:11-32., பழைய வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்த பழைய ஆடையை களைந்து அவனுக்கு புதிய ஆடையை கொடுத்தார். நாம் இயேசுவுக்குள் வந்துவிட்டால், பழைய ஆடையை களைந்து எறிந்தது போல பழைய வாழ்க்கையை உதறிதள்ள வேண்டும். நம்முடைய சொல், செயல், பதில் அனைத்திலும் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டும். இரட்சிப்பின் புதிய ஆடையை நாம் அணிந்துகொள்ள வேண்டும்.

எனவே நம்மில் பழைய பழக்க வழக்கங்கள் அல்லது மரித்துபோன நடவடிக்கைகள் அனைத்தும் மறைந்துபோகும். நாம் ஆசாரியர் மற்றும் ராஜாக்களாகவும் இருப்பதால் அதற்கு தகுந்த உடையை அணிய வேண்டும். நாம் தாழ்ச்சியுடனும், வலிமையாகவும், அதிகாரமாகவும் மகிழ்ச்சியாகவும் இரக்கமுள்ளவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்,


எபே 4:20-24 சொல்லுகிறது நாம் புதிய மனிதனை அணிந்து கொள்ள வேண்டும், பழைய மனிதனை களைந்து எறிய வேண்டும்.இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலும், அவருடைய கிருபையாலும் தலை முதல் கால் வரை மூட நமக்கு புதிய ஆடை உண்டு. நமது பழைய பழக்க வழக்கங்கள், தவறான செயல்கள் மற்றும் பாவங்களுக்கு இப்போது நம்மிடம் இடம் இல்லை. இரட்சிப்பின் புதிய ஆடையை நாம் அணிந்தால் குற்ற உணர்வு, பயம், கவலை, பெருமை மற்றும் நமது சொந்த நீதியின் மீதான நம்பிக்கையின் பழைய துணிகள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். மீண்டும் நம்மிடம் வராதபடிக்கு தீயிலே அவைகளை சுட்டெறிக்க வேண்டும்.

கொலோ 3:12 - ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;


நம்முடைய குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகள் அனைத்தும் மாறிபோகும். ஊதாரிமைந்தன் தன்னுடைய பாவ வாழ்க்கையை நினைக்காதபடி அவனுடைய தகப்பன் அவனை அன்பு செய்து, ஏற்றுக்கொண்டார். அவனுக்கு அணிவிக்கப்பட்ட முத்திரை மோதிரம் அதிகாரத்தின் அடையாளமாகும். பிதாவின் பிரதிநிதியாக அவன் செல்லுவதற்கு காலணிகள் அணிவிக்கப்பட்டது.


ஜெபம்


பரலோக பிதாவே நாங்கள் இரட்சிப்பின் புதிய ஆடையை அணிய விரும்புகிறோம் மேலும் முழுமையாக பாவத்தின் கிரியைகளை எடுத்து எறிகிறோம். இதை செய்வதற்கு எங்களுக்கு கிருபைதாரும், பரிசுத்த ஆவியை தாரும். ஆமேன்.

Sol. Gigi Jacob  AOJ

தானியேல் – II
நாள் 31-03-2022 – தேவ செய்தி

நீ புத்திரனாயும், சுஅதந்தரனாயுமிருக்கிறாய்.


ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்;

நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலா 4:7.

சுதந்தரன் என்றால்…..
  • ஒரு நபரின் மரணத்திற்குப் பின் அவரின் சொத்து அல்லது பதவிக்கு சட்டபூர்வமாக உரிமையுள்ள ஒரு நபர்.
  • அல்லது ஒரு நபருடைய சொத்தை உரிமையாக பெற்றப்பின், அவருடைய பணியை (கிறிஸ்து) தொடர்ந்து செய்வது.
  • கர்த்தருடைய புத்திரனாக மாற வேண்டுமென்றால், மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
  • இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகிவிட்டோம். கலா 26
  • நாம் கிறிஸ்துவில் ஞானஸ்ஞானம் பெற்றதால், இயேசுவை தரித்துக்கொண்டிருக்கிறோம், இயேசுவில் நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது.
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 
                     
                                                            கலா 3:27.


யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

கலா 3:28.
நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை ஏனென்றால் இயேசு கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்று, அபிரகாமின் வித்தும், சந்ததியுமாய் இருக்கிறோம்,


அடிமை/சுதந்திரவாளி


பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. கலா 4:1.

நாம் புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறோம். எனவே நாம் இந்த தேசத்தை சுதந்தரித்தன் மூலமாக SMPS &SMLA ஆக முழு தேசத்தின் பாதுகாவலர்களாகவும், காப்பாளர்களாகவும் இருக்கிறோம்.


அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.

கலா 4:3
நமக்கு எல்லாருக்கும் ஒரு கேள்வி, நாம் உண்மையில் சுதந்திரவாளியா அல்லது சிறுபிள்ளையா?(அடிமை)
இல்லை, நாம் சிறுப்பிள்ளை அல்ல. நாம் சுதந்தரவாளிகள், அவரை அப்பா பிதாவே என்று அழைக்கிறோம்.


மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். (கலா 4:6-8)).
நாம் இப்போது அடிமைகள் இல்லை, ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள். 

கடந்த காலத்தில் நாம் அடிமைகளாய் இருந்தோம், ஏனென்றால் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தத்தை நாம் அறிய வில்லை மேலும் புறஜாதியினரைப் போல நாம் நடந்து கொண்டோம்.
திரும்பிபோதல் இல்லை
இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? கலா 4:9.


நாம் கர்த்தரால் அறியப்பட்டிருக்கிறோம், இது எவ்வளவு அருமையான கிருபையும் ஆசீர்வாதமாய் இருக்கிறது. எனவே நாம் திரும்பி போகக்கூடாது, துன்பம்தரக்கூடிய சக்திகளுக்கு அடிமையாகாமல் இருப்போம், யூத ராஜ சிங்கத்தின் போல யுத்தம் செய்வதற்கு கர்த்தர் நம்மை மன்னிக்க வேண்டும் என்றும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்போம்.

வேதம் சொல்லுகிறது, நாம் கிறிஸ்துவில் சுதந்தரவாளி. நாம் இப்போது கர்த்தருடைய மகனும், மகளும், சுதந்தரவாளியாகவும், காப்பாளனாகவும், நம்பகத்தக்கவர்களாகவும் இருந்து இந்த தேசத்தை சுதந்தரித்து கர்த்தருடைய ராஜ்யத்தை கொண்டுவரவேண்டும்.
யுதராஜ சிங்கம் போல, உண்மையான வீரர்களைப்போல ஆன்மீக யுத்தம் செய்ய நாம் விழித்தெழுவோம்,

15 ஆண்டுகளுக்கு மேலாக இயேசுவின் படை அணியில் ஊழியம் செய்துகொண்டிருக்கிறேன். இயேசு என்னை பாவத்திலிருந்ஹ்டு மீட்டார் என்ற நம்பிக்கையில் நான் ஞானஸ்ஞானம் பெற்றபோது மீண்டும் பிறந்தேன், அப்பொழுதே விசுவாசத்தில் கர்த்தரின் பிள்ளையானேன். இயேசுவின் படை அணியில் வருவதற்கு முன்பே நான் ஞானஸ்ஞானம் பெற்றிருந்தேன், இயேசுவைப் பற்றியும் அறிந்திருந்தேன் ஆனால் என்னை

திட்டத்தை நான் அறிந்திருக்க வில்லை. இயேசுவின் படை அணியில் சேர்ந்தபின் நான் முன்னிலை வீரனாக கர்த்தருக்காக தேசத்தை மட்டும் அல்ல இந்த உலகத்தையே சுதந்தரிக்கவும், அவருடைய ராஜய்த்தை நிறுவவும் வேலை செய்கிறேன். வீரர்களாக தேசத்தை கர்த்தருக்காக சுந்தரித்தோம், ஏனென்றால் நாமே கர்த்தரின் சுதந்தரவாளியாக இருக்கிறோம். இந்த தேசம் நமதே.


இந்த உண்மைகளை நாம் இயேசுவின் படை அணியில் வந்தபிறகுதான் அறிந்து கொண்டோம். நாம் கர்த்தருடைய சேனையில் வீரர்களாக இருக்கிறோம். அவருடைய ராஜ்யத்திற்காக முழு பலத்தோடும், விசுவாச்த்தோடும் யுத்தம் செய்வோம்.


எல்லா மகிமையும் அவருக்கே.

அப்பா, பிதாவே, இந்த நாளை கொடுத்ததற்கும், உம்முடைய வார்த்தையை பகிர்ந்துகொள்ள கொடுத்த கிருபைக்கும் உமக்கு நன்றி செலுத்துகிறோம், உம்மை ஆராதிக்கிறோம். AOJ - “Telangana” காக நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் படை அணியில் பயணம் செய்ய உதவினீரே, நன்றி, உம்முடைய வெளிப்பாடுகளை புரிய வைத்தீரே நன்றி, பரிசுத்த ஆவியின் உதவியால் தேசத்தை சுதந்தரிக்க வைத்தீரே, நன்றி. பரலோக நீதிமன்றத்தில் தைரியமாக நிற்க எங்களுக்கு உதவி செய்யும், இயேசுவின் வல்லமை மிக்க நாமத்தில் கேட்கிறேன், 
ஆமேன்.

Sol Innareddy AOJ

தானியேல் – II

நாள் – 29-03-2022 – தேவ செய்தி

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவாநித்திய கன்மலையாயிருக்கிறார். (ஏசா 26:3-4).

கழுகின் சண்டையை கவனித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி கவனித்திருந்தால், கழுகுக்கு அதிகமான நேரங்களில் சறுக்கிச் செல்வது பிடிக்கும் மேலும் பறப்பதில் அதற்கு அலாதி பிரியம். அனைத்து உயிரினங்களும் புயலுக்கு பயப்படும், ஆனால் கழுகு புயலின் எதிர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும், உண்மையில் சொன்னப்போனால் புயல்கள் கழுகு பற்ப்பதை இன்னும் மென்மையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றன.

நாமும் நம்முடைய வாழ்வில் மிக கடினமான புயல் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். பிரச்சனையில்லாத வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்று ஒருவராலும் சொல்ல முடியாது. வாழ்வில் வரும் முட்டுகட்டைகளால் பாதிக்கப்படாமல் கழுகுகளைப் போல அவற்றை எவ்வாறு நம்முடைய நலனுக்காக மாற்றவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பரலோக பிதாவின் உதவியை நாடினால், நம் வாழ்வின் ஒவ்வொரு எதிர்ப்பும் நம்முடைய உயர்வுக்கான உதவியாக மாறும்.

ரோமர் 8:28 – அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் மன அமைதியை தேடுகிறோம். இயேசு கிறிஸ்து அமைதியின் இளவரசர் மேலும் அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இந்த அமைதியை அவர் கொடுக்கிறார்.

 யோவா 14:27 – சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

இயேசு கொடுக்கும் இந்த மன அமைதியை பெற, சூழ்நிலையின் பாரம் நம்மை பாரப்படுத்தாமல் இருக்க ஆன்மீக ரீதியில் நம்முடைய உள்ளார்ந்த மனிதனை மாற்ற வேண்டும்.  தண்ணீர் உள்ளே புகாத வரையில்  படகு தண்ணீர்மேல் அழகாக மிதக்கிறது. அதேபோல  தண்ணீரை அதாவது, சூழ்நிலைகள் நம்மைப் பாதகமாகப் பாதிக்கவோ, வேறுவிதமாக சொன்னால் நமக்குள் நுழையவோ அனுமதிக்காவிட்டால் நம்முடைய வாழ்க்கைப் படகு பாதுகாப்பாக மிதக்கும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார்,

யோவான் 16:33 – என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

நான் ஒரு இந்து குடும்பத்தைச் சார்ந்தவள். என்னுடைய திருமணத்திற்கு முன், கிறிஸ்துவ மதத்தையும் சேர்த்து எல்லா மதத்திலும் நம்பிக்கை வைத்தேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு தெரிந்த கடவுள்களில் ஒருவராகவே பார்த்தேன். நான் ஒரு மிஷனெரி பள்ளியில் படித்துகொண்டிருந்த போது நான் இயேசுவை நெருக்கமாக அறிந்து கொண்டேன்.  என் திருமணத்திற்குப் பின் நான் நிராகரிப்பு, வெறுப்பு, சதி தனிமைபடுத்துதலுக்கு ஆளானேன். மனிதர்களுடைய உதவியை நாடுவதற்கு பதிலாக நான் கர்த்தருடைய வேதத்தை நாடினேன்.

சங் 119:28 – சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்..

என்னுடைய புயல்சூழ்ந்த வாழ்விலே, அமைதியின் இளவரசர் எனக்கு சொல்லிகொடுத்தது என்னவென்றால், அவர் பல வழிகளில் ஒரு வழி அல்ல மாறாக பரலோக பிதாவிடம் சென்று சேர ஒரே வழி அவர்தான் என்று புரிய வைத்தார்.

யோவா 14:6 – அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

என்னுடைய சூழ்நிலை எவ்வளாவு மாறாக இருந்தாலும் மன ரம்மியாக இருக்க பரிசுத்த ஆவியானவர் எனக்கு கற்றுகொடுத்தார். இதை உடனடியாக பெற முடியாதுதான். நம்முடைய உள்ளத்தை மாற்ற பரிசுத்த ஆவியானவருக்கு நாம் அனுமதி கொடுக்க வேண்டும். எதிராக இருக்கும் சூழலை எதிர்ப்பது பின்னர் அதையே தனது நன்மைக்காக மாற்றிக்கொள்வது எப்படி என்று அவர் சொல்லி தருவார்.

என்னுடைய பாலைவன வாழ்க்கை பயணத்தில் மன அமைதியைப் பெற அநேக ஆன்மீக யுத்திகளை தேவன் எனக்கு கற்றுக்கொடுத்தார்.

முதலாவதாக நான் கற்றுக்கொண்டது, கர்த்தருடைய வேதத்தில் நிலைத்து நிற்பது.  கர்த்தருடைய வசனத்தை நாம் படிக்கும்போது தேவ பிரசன்னம் நம்முடைய முழுவதுமாக ஆட்கொள்கிறது. இது மற்ற புத்தகங்களைப்போல அல்ல. கர்த்தருடைய வார்த்தை உயிருள்ளது.

எபி 4:12 – தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்க்கையை வழி நடத்த நாம் அனுமதிக்க வேண்டும்.

இரண்டாவதாக நான் கற்றது, நம்முடைய ஆன்மீக யுத்தத்தை, இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கழுகுகள் தங்கள் எதிரியுடன் சண்டையிடுவதில் அற்புதமான குணம் கொண்டவை. அவை பாம்புபோல தனது இரையுடன் தரையில் சண்டையிடுவதில்லை, ஏனென்றால் தரை பாம்பின் பகுதி, அங்கு அதுதான் வல்லமை கொண்டது. கழுகு பாம்பை  அதன் வலிமையான பகுதியான தரையிலிருந்து எடுத்து வானத்தில் தூக்கிச் செல்கிறது. அந்த நொடியே பாம்பு சக்தி அற்றுப்போகிறது, கழுகு எந்தப் போராட்டமும் இல்லாமல் அதை இறையாக பெறுகிறது. அதேபோல நாமும் நம்முடைய எதிரியுடன் தரையில் –  அதாவது வாய்ச் சண்டை, கவலைப்படுவது போல யுத்தம் செய்யக்கூடாது,

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலி 4:6-7).

நம்முடைய யுத்தம் முழங்கால் யுத்தமாக இருக்க வேண்டும், அதாவது ஜெபம் மற்றும் விண்ணப்பங்கள் மூலமாக. இப்படி செய்வது தானாகவே நம்முடைய யுத்தத்தை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றும் மேலும் கர்த்தர் இடைபடுவதால் நமக்கு நிச்சயம் வெற்றி உண்டு. என்னுடைய ஆவிக்குறிய யுத்தத்தை இயற்கைக்கு அப்பாற்பட்ட பகுதியில் எடுத்துச் செல்ல பல ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். கர்த்தருடைய வார்த்தை ஆன்மீக யுத்தத்திற்கு நம்மை தயார் செய்கிறது.

ஏசா 40:31 – கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

நம்முடைய ஜெபத்தையும், விண்ணப்பங்களையும்  கர்த்தருக்கு முன்பாக வைத்து நம்மை வழி நடத்த கர்த்தரிடம் கேட்க வேண்டும்.

உங்களுடைய வாழ்க்கை வண்டியை ஓட்டும் பொறுப்பை கர்த்தரிடம் கொடுங்கள், நீங்கள்  அமைதியாக இருந்து வாழ்க்கை பயணத்தை சந்தோஷமாக கழியுங்கள்.

ஜெபம்

இயேசுவே, நீரே எங்கள் ஆத்ம மேய்ப்பன், எங்கள் ஆத்துமாவை காக்கின்றவர். எங்களுடைய எல்லா கஷ்டங்கள் மற்றும் கவலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறோம். எங்கள் வாழ்வின் சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அமைதியாக இருக்க உம்மீது நம்பிக்கை வைக்க எங்களுக்கு கற்றுத்தாரும். ஆமேன்.

         Sol. Neelam Sharma ,AOJ

தானியேல் – II

நாள் – 28-03-2022 – தேவ செய்தி

ரோமி 4:17 - அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

அபிரகாம் பிள்ளை இல்லாதவன் ஆனால் பல தேசங்களுக்கு தகப்பன் எனப்பட்டான். தன்னுடைய அழைத்தலில் அபிரகாம் உறுதியாய் இருந்தான். அவன் யார் மீது அவனது விசுவாசம் இருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். மரித்தோரை உயிர்பித்து இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன் அவர். இதை நம்முடைய மனித அறிவினால் புரிந்துகொள்ள இயலாது.

ஆபிரகாம் செய்த முதல் வேலை விசுவசித்தது, சூழ்நிலை அவனுக்கு எதிராகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும்போதும் விசுவசிப்பது மிக கடினமானதாகும்.

ஆதி 17:5 – இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

இல்லாத ஒன்றை கர்த்தர் அழைத்தார்.தேசங்களுக்கு தகப்பன் நான் என்று ஆபிரகாம் தன்னைப் பற்றி சொல்லும் போது மக்கள் ஏளனம் செய்திருப்பார்கள். இது முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் கர்த்தர் எப்போதும் இப்படித்தான் செயல்படுவார். அவர் பார்க்கிறார், பேசுகிறார் அது நடக்கிறது. அபிரகாமுக்கு இது தெரியும். பூமி உருவம் இல்லாமல், வெற்றிடமாக இருந்தபோது கர்த்தர் வானத்தையும் பூமியையும் அதிலிருந்து உருவாக்கினார்.

ஆதி 1:3 – தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

கர்த்தருடைய உருவாக்கும் திறமை வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

நீதி 18:21 – மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

ரோம 4:18 – உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

நாங்கள் ஷெக்கீனா வகுப்புகளில் கல்ந்துகொண்டிருக்கும்போது ஒரு பாஸ்டர் எனது இளைய மகனை கனடா தேசத்திற்கு அனுப்புவதற்கான வழிகளை துவங்க வேண்டும் எனவும், கர்த்தர் அவனை அங்கு பயன்படுத்துவார் எனவும் அவர் சொன்னார். அப்பொழுது எனக்கு வேலை இல்லை. இப்படி செய்வது தண்ணீர்மீது நடப்பது போன்றதாய் இருந்தது, ஜெபத்தோடு நாங்கள் முதல் படியை எடுத்து வைத்தோம். அநேக சவால்களை சந்திக்க நேர்ந்தது ஆனாலும் கர்த்தருடைய கிருபையை நாங்கள் பார்த்தோம். மாணவர் விசாவிற்கு தாக்கல் செய்வதற்கு கட்டாயமாக GIC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நாங்கள் செலுத்த நேர்ந்தது. வங்கி கடைசி நிமிடத்தில் அனுப்பியது. கனேடியன் வங்கி  GIC சான்றிதழை வழங்க 5 நாட்கள் ஆகும் ஆனால் அதே நாளில் கல்லூரியிலிருந்து 3 நாட்களுக்குள் வீசா தாக்கல் செய்யப்பட வில்லையென்றால் அசோக் வுடைய சீட்டு பரிபோகும் என்றனர். இது நிச்சயமாக சாத்தியமே இல்லை. மாணவர் ஆலோசகர் எங்கள் அட்மிஷனை ஒத்திவைக்கும்படி கேட்டார், இல்லாதவைகளை இருக்கிறதுபோல  அழைக்கிறவர் நம் தேவன் என பரிசுத்த ஆவியானவர் என் காதில் சொன்னார். கனேடியன் வங்கி அதிகாரியை அழைத்து பிரச்சனையைப் பற்றி சொன்ன போது இது முடியாது என்று எங்களுக்கு சொன்னார். நான் ரோம 4:17 பிரகடணம் செய்தேன். கர்த்தருடைய  கிருபையால் கனேடியன் அதிகாரிகளின் கண்களில் எங்களுக்கு தயவு  கிடைத்தது.    வங்கி GIC சான்றிதழை 10/03/2022 மாலை 3மணி ஆவியானவர் உறுதி அளித்ததுபோல அனுப்பி வைத்தனர். வீசா தாக்கல் செய்யவும் எங்களுக்கு போதிய நேரம் கிடைத்தது. மாணவர் ஆலோசகர் இதை கேட்டு பிரமித்தார், இதுபோன்ற ஒரு அதிசயம் இதுவரை நடக்கவில்லை, வரலாறு படைத்துவிட்டீர்கள் என்று சொன்னார்.

அன்பின் பரலோக பிதாவே, இதை வாசிப்பவர்கள் அனைவரும் உம்முடைய வார்த்தையால் தொடப்படுவார்களாக, அற்புதங்கள் செய்யும் தேவன் நீர் ஒருவரே என்ற உண்மை அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் கலப்பதாக, அவர்களுடைய விசுவாசத்தை பெருகச்செய்யும் தேவனே, மக்கள் தங்களுடைய சூழ்நிலைகளையோ அல்லது உலகத்திலே பதிலை தேடாமல், உம்முடைய வார்த்தையையே பார்ப்பார்களாக. எல்லாவற்றிலும் நீரே போதுமானவராக இருப்பீராக. இதை எல்லாம்  இணையில்லா எங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமேன். ,

              Sol.Lalitha Menon

தானியேல் – II

நாள்: 27-03-2022 – தேவ செய்தி

யோவான் 1:9 - உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

மின்சாரம் இல்லாதபோது, ஒருவர் இருளில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒரு நாள் சூரியன் கூட தன்னுடைய ஒளியை இழந்துவிடும். நம்முடைய வாழ்வின் முடிவில்லா ஒளி இயேசு கிறிஸ்து மட்டுமே. எங்கே இயேசு இருக்கிறாரோ அங்கு இருள் இல்லை.

யோவா 12:46 - என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

இயேசு உங்கள் வாழ்வில் வரும்போது, வறுமை, நோய், முறிவு, சாபம், எந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையும், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகள் அனைத்தும் உங்கள் வாழ்விலிருந்து  சீராக வெளியேற்றப்படும்.

1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாலா என்ற பெயர் கொண்ட பையன் பிறந்தான். வருமையின் காரணமாக அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுடைய சித்தியுடன் பெற்றோர்கள் விட்டுவிட்டார்கள். அவனுடைய பெற்றோர்கள் மற்ற இரண்டு குழந்தைகளுடன் வேலைத்தேடி தில்லிக்குச் சென்றனர். பாலா ஆடுமாடுகளை மேய்த்துவந்தான், தினமும் மதிய உணவிற்காக மட்டும்தான் பள்ளிக்குச் சென்றான். அழுகையும் துன்பமும் நிறைந்த குழந்தைபருவத்தைதான் அவன் அனுபவித்து வந்தான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனும் தில்லி சென்றார், அங்கே குப்பையை பொறுக்குவதில் அவனுடைய பெற்றோருக்கு உதவி செய்தான்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனுடைய வாழ்வில் வந்தார், அவனுடைய  உடைந்து போன, நம்பிக்கையில்லாத வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். அவ்ர் இப்போது ஆராதனைபாடல்களை எழுதக்கூடியவராகவும், பாஸ்டராகவும் மாறி கர்த்தருடைய ஊழியமாகிய உடைந்த உள்ளங்களை மாற்றக்கூடிய ஊழியத்தை செய்து கொண்டு இருக்கிறார்,

எலோஹிம் இந்த உருவமற்ற, வெற்றிடமான மற்றும் இருண்ட பூமியில் அடியெடுத்து வைத்தபோது இந்த உருவமற்ற பூமியை ஒரு அழகான வாழும் இடமாக மாற்றினார். இந்த பூமியில் உயிர்கள் தோன்றி பலனளிக்கத் தொடங்கியுள்ளன.

அதே தேவன் உங்கள் நம்பிக்கையற்ற இருண்ட சூழ்நிலையையும் மாற்றி ஒளியை கொடுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட நபராக அவரால் மாற்ற முடியும். நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் உங்கள் நம்பிக்கையில்லா சூழ்நிலையை மாற்ற அவர் போதுமானவர். உங்கள் குடும்பம், நண்பர்கள், மற்றும் பிறருக்கும் கூட ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.

ஜெபம்

அன்பு பிதாவே, என்னுடைய வாழ்வை உம்கையில் ஒப்படைக்கிறேன். நான் எப்படி இருக்கிறோனோ அப்படியே ஏற்றுக்கொள்ளும், என்னில் கிரியை செய்யும், அப்போது உம்முடைய ஒளியை மற்றவர்களுக்கு முன் பிரகாசிப்பேன். நம்பிக்கை இழந்த மக்களுக்கு மத்தியில் உம்முடைய அன்பின் வாசனையை பரப்புவேன். மேலும் அவர்களை உம்முடைய ராஜ்யத்தி கொண்டு சேர்ப்பேன். ஆமேன்.

                Sol.ஸ்டெல்லா தாஸ் AOJ

தானியேல் – II

நாள்: 27-03-2022 – தேவ செய்தி

எஸ்றா 5:1

-அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

பாபிலோனிலிருந்து கைதிகள் தங்களுடைய நாட்டிற்கு திரும்பியபோது, இஸ்ரவேலர்கள் சீரிய நாட்டின் ராஜாவினுடைய அனுமதி மற்றும் கட்டளைப் பெற்று கர்த்தருடைய தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தனர். ஆனால் எதிரிகள் இதை ராஜா தரியுவிடம் தெரிவிக்க, அவனோ ஒரு கட்டளையின் மூலம் தேவாலய பணியை நிறுத்திவிட்டான்.

எஸ்ரா 4:24 – அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த வேலை துவங்கிய விதம் மிகவும் ஸ்வராஸ்யமானது.

இரண்டு தீர்க்கதரிசிகள் ஆகாய் மற்று சகரியா இஸ்ரவேலின் தேவனின் நாமத்தில் யூதர்களுக்கு விசேஷமாக தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

தீர்க்கதரிசிகள் தீர்க்க தரிசனம் சொன்னப்பின் மக்கள் ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு உதவினர்.

எதிரிகள் ஆலய கட்டுமான பணியை நிறுத்த வந்தனர், ஆனாலும் தீர்க்கதரிசனம் வேலை செய்தது. தங்களுடைய ஞானத்தையும், விவேகத்தையும் பயன்படுத்தி எப்படி பதில் சொன்னார்கள் என்பது இந்த வசனத்தில் காணமுடிகிற்து.

அவர்கள் அரசருக்கு பதில் சொன்னார்கள், …..”அந்நாள் முதல் இது வரைக்கும் அதுகட்டப்பட்டு வருகிறது அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.”

ராஜா இதனை ஆராய்ந்தான், உண்மை என கண்டுபிடித்தான், வேலையை தொடர்ந்து செய்ய கட்டளையிட்டான்.

பழைய ஏற்பாட்டில் சில தீர்க்கதரிசிகளையே நாம் காண்கிறோம், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர்தான் இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

அப்போஸ் 2:17,18 – கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.

சபையின் இன்றைய சூழ்நிலையின் மேல் நாம் தீர்க்கதரிசனம் உரைப்போமாக,

இயேசுகிறிஸ்துவின் உண்மையான சபை இந்த பூமியில் கட்டப்படுவதாக, நரகத்தின் சக்திகள் இதன்மேல் வெற்றிகொள்ளாமல் போவதாக,

விசுவாசிகள் அப்போஸ்தலருடைய       உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும் ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய் தரித்திருப்பார்களாக,

கர்த்தரை குறித்த பயம் விசுவாசிகள் மேல் வருவதாக, அவர்களால் அநேக அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள்  செய்யப்படுவதாக,

எல்லா விசுவாசிகளும் ஒற்றுமையாய் இருந்து அனைத்தையும் பகிர்ந்துகொள்வார்களாக,

தங்களுடைய சொத்துக்களை விற்று, தேவையில் இருக்க கூடியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதை விசுவாசிகள் வழக்கமாக கொள்வார்களாக.

விசுவாசிகள் ஒருமனப்பட்டு, ஒருவருக்கொருவர் வீடுகளுக்குச் சென்று தங்கள் உணவை மகிழ்ச்சியுடனும், தாழ்மையான இருதயத்தோடும் பகிர்ந்து கொள்வார்களாக,

வர்கள் கர்த்தரை துதித்து எல்லா மக்களின் நல்லெண்ணத்தையும் பெறுவார்களாக, 

இரட்சிக்கப்படுபவர்களை கர்த்தர் நாள்தோறும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். (அப்போ 2:42-47)

அனைத்து விசுவாசிகளும் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாய் இருந்து, ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளின் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவிப்பார்களாக.

விசுவாசிகள் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் வல்லமைமிக்க சாட்சிகளாய் தொடர்ந்து இருப்பார்களாக, கர்த்தருடைய  பூரண கிருபை  அவர்கள் மீது இருப்பதாக. அப் 4:32,33.

கர்த்தர் தன்னுடைய உண்மையான சபையை நம்முடைய தேசத்திலும், உலகம் முழுவதிலும் கட்டுவாராக. அணி சபை வீரர்களைப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை கட்டப்படுவதாக.

Sr. Leema Rose AOJ

தானியேல் – II

நாள் 25-03-2022 – தேவ செய்தி

யோவா 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

இந்த வசனம் நம் அனைவருக்கும் அன்னை தெரேசாவை நினைவூட்டுகிறது. அவருடைய உள்ளத்திலிருந்து கைவிடப்பட்ட மக்களுக்காக வழிந்தோடிய அன்பு மற்றும் கருணையை நாம் கண்டிருக்கிறோம். அது முற்றிலும் பரிசுத்தமான, கலப்படமில்லாத அன்பு, அதில் எந்தவிதமான சுயநலமும் கலக்க வில்லை. அது இயேசுவின் உண்மையான அன்பைப் போன்றது.

ஒரு நதி கோடையில் வறண்டு போகுமா, நிலைத்து நிற்குமா அல்லது சில காலங்களில் காணாமல் போகுமா என்பதை நதியின் ஆதாரம்தான் தீர்மானிக்கும்.

சக 14:8 - அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள்…., மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். அது வறண்டு போகாது.

விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவரும் நம் ஆண்டவராகிய இயேசுவே.

யோவா 4:14-நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

நம்மை தாங்கும் நம்து ஜீவ நதிகள் இயேசுவில் தொடங்கி, முடிகிறது.

இயேசுவை விசுவசிக்கிறவரின் இருதயத்திலிருந்து ஓடும் ஆறுகள் அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, பொறுமை, இரக்கம், நன்மை, விசுவாசம், பணிவு, மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்றவைகளாகும். நம்முடைய ஆத்துமாவிலும், இருதயத்திலும் ஓடுகின்ற இந்த ஆறுகளைப்பற்றித்தான் இயேசு சொன்னார்.

கலா 5:22, 23-ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;

இந்த ஆறுகள் தங்களுடைய ஓட்டத்தை நிறுத்தாது, பாறைகள், மலைகள் போன்ற கஷ்டங்கள், சவால்கள்  நம் வாழ்வில் வரும்போது இந்த ஆறுகள் அதன் ஓட்டத்தை நிறுத்தவோ அல்லது பின்வாங்கவோ மாட்டாது. இவைகள் இயேசுவின் கிருபையை நம்முடைய வாழ்வில் உருவாக்குகிறது. இந்த மென்மையான தண்ணீரை எந்த பாறையும் தடுத்து நிறுத்தாது. அதேபோல் நம்முடைய வாழ்வில் வரும்  பாறையைப் போல கடினமான துன்பத்தை சுற்றியும் இந்த நதி ஓட வேண்டும்.

இந்த ஜீவ தண்ணீரில் ஒரு கலப்படம் இல்லை. சுய நலம் கொண்ட அன்பு அல்ல இயேசுவைப்போல தன்னலமற்ற அன்பு. மகிழ்ச்சியாக இருந்தால் அது கர்த்தரின் மகிழ்ச்சியாக இருக்கும், அதுவே நித்தியமானது மேலும் நிலையானது. அதுவே நம்பிக்கை என்றால், நாம் எப்பொழுதும்  வாழ்வதற்கான நித்திய வாக்குறுதியாகும், மேலும் இந்த உலகில் உள்ள அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலைதர கூடியதாகும். அதுவே பொறுமையாக இருந்தால், அது கர்த்தரில், அதன் சொந்த நேரத்தில் நடக்கும் என்று நாம் காத்திருக்கும். அது இரக்கம் என்றால், அது அனைத்து மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் என எல்லோர் மீதும் இரக்கம் காட்டும். பிறருக்கு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய சொந்த பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லாமல்  பரலோக பிதாவின் மகிமைக்காக இருக்கும். தாழ்ச்சியாக இருந்தால் அது இயேசு பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புகொடுத்ததுபோல இருக்கும். நம்முடைய நாவு, திறமை, நேரம், குணம் ஆகியவற்றை  நாம் எவ்வாறு பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுக்கு சமர்பிக்கிறோம் என்பது நம்முடைய சுய கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும்.

நம்முடைய வாழ்வு தொடர்ந்து கனிகளை தர வேண்டும், நதியைப்போல ஓட வேண்டும். ஒரு ஆறு வாழ்க்கை கொடுக்கும் மேலும் வாழ்வை மேம்படுத்தும். நாம்முடைய செயல்களும், எதிர்வினைகளும் கூட வாழ்வு தருவதாகவும் வாழ்வை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஒன்பது நதிகளின் ஜீவ நீரைச் சுமந்து நம்பிக்கையற்றவர்களுக்கும் சக்தியற்றவர்களுக்கும் நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்க வேண்டும். ஒரு நதி  வரண்ட நிலத்திற்கு ஈரப்பதத்தையும், குணப்படுத்துதலையும் தருகிறது.

ஏசா 44:3 - தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;
                 Sol. Gigi  Jacob AOJ