தானியேல் – II
நாள் 16-03-2022 – தேவ செய்தி

ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:


லூக் 21:2


ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளை போடுகிறதை இயேசு கண்டார். இயேசு சொன்னார், “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்டு தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.”


2கொரி 9:7 – மக்கதோனியா சபையின் விசுவாசிகள் எவ்வாறு கொடுத்தார் என்பதை பவுல் சொல்லுகிறார்,

“மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.”


எருசலேமில் துன்பப்படும் தங்கள் சக பரிசுத்தவான்களைப் பற்றி அவர்கள் மிகவும் கவலைப் பட்டனர். அவர்களுக்கு செய்த உதவி அன்புடனும் அக்கறையுடனும் இருந்தது. நாம் மற்றவர்களுக்கு கொடுப்பது எப்படி?


2கொரி 10:18 – தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால்புகழப்படுகிறவனே உத்தமன்.


நாம் கொடுப்பது அனைத்தும் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நற்செய்தி அறிவிக்க கிராமத்திற்கு செல்லும் போது நான் சாட்சியாக இருந்தேன்.
ஒரு நாள் மாலை ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இயேசுவை தம்முடைய சொந்த இரட்சகராக சமீபமாகத்தான் ஏற்றுக்கொண்டார். அந்த கிராமத்தில் அவர் தனியாகத்தான் வசித்துவந்தார், அவருடைய உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. அவருக்கு விதவை ஓய்வூதியம் கிடைத்தது மேலும் வாழ்வாதரத்திற்காக சில வேலைகளை செய்து வந்தார். அவரிடம் பழைய துணிகள் இருந்தது, ஒரு பெட்டியிலே அவைகளை வைத்திருந்தார். சமைப்பதற்கு சில விரகு கட்டைகளும் அங்கு இருந்தன. தன் பணப்பையிலிருந்து ஒரு கசசங்கிய 10 ரூபாய் நோட்டை எடுத்தார். அவரிடம் இருந்த பணம் அதுமட்டுமே. நான் அதைக்கண்டு அழுதுவிட்டேன், வேண்டாம் என்று மறுத்தேன். முழு மனதுடனும் சந்தோஷத்துடனும் அவர் அதை கொடுத்தார். மறுக்கமுடியாமல் அதை ஏற்றுக்கொண்டேன்.

பிறகு ஜெபித்தேன், பின்னர் அந்த பணத்தை ஆசீர்வதித்து அவரிடம் கொடுத்தேன். அவருக்கு கொடுக்க என்னுடைய பையில் ஒன்றுமே இல்லை என்பதை நினைத்து நான் வெட்கப்பட்டேன்.


இயேசு சொன்ன விதவை கைப்பெண்தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.


அன்பின் பரலோக பிதாவே, நீர் எங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் எங்களுக்கு கொடுத்தவைகளில் இருந்து உமக்கு காணிக்கையாக தருகிறோம். ஏழை விதவையைப் போல எங்கள் காணிக்கை உமக்கு உகந்ததாய் இருப்பதாக, மன மகிழ்வுடன் கொடுக்க எங்களுக்கு உதவி செய்யும் தேவனே. ஆமேன்.


Sol. Santhini AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *