தானியேல் – II

நாள்: 22-03-2022 – தேவ செய்தி

யோவா 12:30
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். என்னுடைய கட்டளையே நித்திய ஜீவன்” என்று இயேசு சொல்கிறார்.

என்ன கட்டளை? கர்த்தர் மோசேயுக்கு பத்து கட்டளையை கொடுத்தார்.  இயேசு கிறிஸ்து பத்துகற்பனைகளை மேம்படுத்தினார் மேலும் அதை சுருக்கி இரண்டு கற்பனைகளாக மாற்றினார்.

மாற்கு 12:30 - உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
மாற்கு 12:31 - இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே;

இந்த இரண்டு கற்பனைகளுக்கும் மேலான கற்பனை வேறொன்ரும் இல்லை. பத்து கற்பனைகளில் ஆழமான கருத்துக்கள் உள்ளன. மனிதனுடைய முழு வாழ்வையும் இது உள்ளடக்கியுள்ளது. அவனுடைய தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், சமுதாயம், அரசியல், அறிவு, ஆன்மீக வாழ்வு என அனைத்துமே இதில் உள்ளது.

ரஷ்யா – உக்ரேனியப் போர் சூழலியல் பிரச்சனைகள் அல்லது நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றின் மூல காரணம் பத்து கட்டளைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை பின்பற்றாததுதான் காரணமாகும்.

சமுதாயத்தில் இழைக்கப்படும் எந்த குற்றமாக இருந்தாலும் அது ஒரு கட்டளையை மீறுவது அல்லது அலட்சியம் செய்வதால் தான் இருக்கும்.

பத்து கற்பனைகளின் சரியான போதனை மற்றும் அதன் பின்  விளைவுகள் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத காரணியாக இருக்க வேண்டும்.

எனக்கு தெரியும், அவருடைய கட்டளைகள் நித்திய ஜீவனாய் இருக்கிறதென்று.

இயேசு சொன்னார், “பிதாவினால் கொடுக்கப்பட்ட கட்டளைகள் நித்திய ஜீவனை உடையவைகள்..

ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவனுடைய மனசாட்சி மரித்தப்பின் வாழ்வு அல்லது நித்திய வாழ்வு உண்டு என்று நம்புகிறான். நம்முடைய விசுவாசம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அதிகமான மக்கள், அவர்கள் கர்த்தர் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும், மரணத்திற்கு பிறகு வாழ்வு என்று நம்புகிறார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்தபோது, அநேக மக்கள் நித்திய வாழ்வைப் பற்றியும் அதை அடைவது எப்படி என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள்.

நித்திய வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள சாதாரண மக்கள் இயேசுவிடம் வருவதை நாம் பார்க்கிறோம்,

மத் 19:16 – அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;

நியாயசாஸ்திரிகள் கூட நித்திய ஜீவனைப்பற்றி அறிந்து கொள்ள இயேசுவிடம் வந்தார்கள்.

லூக் 10:25 - அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

ஆட்சிசெய்பவர்கள் கூட இயேசுவிடம் வந்து நித்திய ஜீவனைப்பற்றி கேட்டார்கள்.

லூக் 18:18 - அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

இயேசு இவ்வாறாக பதில் சொன்னார்,

அவருடைய கட்டளைகள்தான் நித்திய வாழ்வு என்றார். அவருடைய என்பது பரலோக பிதாவை குறிக்கும்.

மனித வரலாற்றை நாம் படிக்கும் போது , பிதா, குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிச்சுத்த ஆவியானவர்கள் எவ்வாறு தனிநபர்களுடன் குறுக்கிடுகிறார்கள் என்பதை அறிவது பல இனிமையான ஆச்சரியங்களை தருகிறது.

அவருடைய கட்டளைகள் என்ற வார்த்தையை கவனிப்போம்.

நற்செய்தியை அறிவிக்க ஒரு முறை நான் வெளியில் சென்றிருந்த போது, ஒரு வீட்டில் தங்கினேன். அங்கே கொசுக்களை விரட்டுவதற்கு மின்சார கருவி இருந்ததை முதல் முறையாகப் பார்த்தேன். (கொசு மட்டை, வலைகள், ஆல் அவுட் எல்லாம் பிற்பாடு வந்தவைகள்) அடுத்த நாள் காலையில் நான், “இது அழகாக இருக்கிறது என்றேன்.” எங்கு வாங்கினீர்கள் என்றேன்? உடனே அந்த சகோதரி ஸ்விட்ச் நிறுத்திவிட்டார்கள், அதை அழகாக பேக் செய்து என்னிடம் கொண்டுவந்தார்கள். நான் மிகவும் வருந்தினேன். அவர்களுக்குச் சொந்தமான பொருள்மீது நான் ஆசைப்பட்டது தவறு என்பதை அறிந்து கொண்டேன். நான் மன்னிப்பு கேட்டேன், ஆனால் அதை அவர்கள் எனது சூட்கேஸில் வைப்பதில்மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.

அன்று நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.


 யாத் 20:17 - பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; ….பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

நாம் பிறனுடையதை இச்சிக்கின்றோம் என்று கூட காட்டக்கூடாது. அது தவறு.

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய கட்டளைகளை கவனமாக் நாங்கள் பின்பற்றி நித்திய ஜீவனை பெறுவோமாக. தெரிந்தோ தெரியாமலோ பலமுறை நாங்கள் உம்முடைய கற்பனைகளை உதாசீனப்படுத்தியிருக்கிறோம், உம்முடைய கற்பனைகளைப்பற்றிய பயத்தை எங்கள் இருதயங்களில் விதைத்தருளும். ஆமேன்.

                 SR. ROGER, AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *