தானியேல்-II
09-03-2022 – தேவ செய்தி


ங்ளைழைக்கிர் உண்மையுள்ளவர்,

அவர் அப்படியே செய்வார்.

1 தெச 5:24

அப்போஸ்தலர் பவுல் 5:23 இல், சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. இதுதான் பரிசுத்தமாக்கப்படுதல். பூரணமான, முழுமையான, தூய்மையான, பரிசுத்தமான மேலும் குற்றமில்லாமல் ஆக்குதல்தான் பரிசுத்தம் ஆக்கப்படுவது. சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தினால் விசுவாசத்தின் மூலம் அவர் நம்மை பரிசுத்தமாக்கினார். அதன்பின் பரிசுத்த ஆவியை அனுப்பி பரிசுத்தமாக்குதலின் வேலையை தொடர்ந்தார். வார்த்தை என்னும் தண்ணீரில் நாம் மூழ்கவேண்டும், தண்ணீர் நம்மை உள்புறமாக சுத்தம் செய்யும். பின் அமைதி மற்றும் கிருபையை நம்மால் உணர முடியும்.

வேதத்தில் நாம் கற்ப்பதை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். நம்முடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக்கப்பட வேண்டும், இச்சையிலிருந்து கண்கள் காக்கப்பட வேண்டும், நம்முடைய வாய் மற்றும் நாவு பரிசுத்தமாக்கப் பட்டால் நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.பொய், புறம் பேசுதல், அசுத்தமான வார்த்தைகளை பயன்படுத்தல் போன்றவற்றை கேட்பதிலிருந்து நம்முடைய காதுகள் தடைசெய்யப்பட வேண்டும்..எது நல்லது, உன்னதமானது, தூய்மையானது, ஆரோக்கியமானது, கர்த்தருக்கு பிரியமானது என்பவைகளின் மூலமாக நம்முடைய மனம் தூய்மையாக்கப்பட வேண்டும். கர்த்தருக்கு பிரியமானதை மட்டுமே கரங்கள் செய்ய வேண்டும், கர்த்தர் அனுமதிக்கும் இடங்களுக்கு மட்டுமே கால்கள் செல்ல வேண்டும். கர்த்தருடைய வார்த்தை நமக்கு என்ன சொல்லி கொடுகிறதோ அதற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.


நம்முடைய எண்ணங்கள், இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் கர்த்தருக்கு பிரியமாக இருக்க வேண்டும்.


அப்போஸ்தலரான பவுல் நான்கு வார்த்தைகள் மூலமாக கர்த்தரில் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

  • நாம் கவலைப் பட தேவையில்லை
  • அவர் அதைச் செய்வார்
  • அவர் நம்மை காப்பாற்றுவார்
  • அவருடைய வாக்குறுதிகளில் தியானம் செய்து சந்தேகம் இல்லாத மனமாக மாற்ற வேண்டும்.

நம்முடைய ஜெபங்கள் வீண்போவதில்லை, அவருடைய நேரத்தில் அதற்கு பதில் அளிப்பார்.


ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன்,


என்னுடைய மகனுடைய திருமணத்திற்குபின் குழந்தை பெறுவதற்கு 10 ஆண்டுகள் காத்திருந்தார்கள். கர்த்தர் நிச்சயம் நமக்குகொடுப்பார் என்ற நம்பிக்கையில் பிறக்கும் அமைதியும் விசுவாசமும் என்னில் இருந்தது. ஒன்பதாவது வருடம் கர்த்தர் எனக்கு ஒரு வாக்குதத்ததைகொடுத்தார், சங் 128:6 – நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய்’. அதற்கு பின் விசுவாசத்தோடு நான் அனைவருக்கும் சொன்னேன், கர்த்தரின் வாக்குறுதிபடி நமக்கு ஒரு பிள்ளையை கொடுப்பார் என்று. அதை கர்த்தர் நிறைவேற்றவும் செய்தார். “அவர் செய்து முடிப்பார்” என்னும் கர்த்தருடைய வார்த்தையில் விசுவாசம் வையுங்கள், அவருடைய நேரத்தில் அதை நிறைவேற்றுவார். அவருடைய வாக்குறுதிகளில் முழுமையாக நம்பிக்கை வைத்து கலங்கமற்றவர்களாகவும், விசுவாசத்தோடும் இருக்க வேண்டும். இரண்டு படகுகளில் நாம் பயணம் செய்யக்கூடாது, அலை அடிக்கும்போது படகு விலகும் நாம் மூழ்கிபோவோம். லூக் 16:9-13 – இரண்டு எஜமானகளுக்கு நம்மால் ஊழியம் செய்ய இயலாது, – தேவனுக்கும், உலக பொருட்களுக்கும் நம்மால் ஊழியம் செய்ய முடியாது. நம் கையில் இருப்பதை நம்முடைய தேவைக்கும், ஏழைகளுக்கு கொடுக்கவும் கர்த்தர் பெருகச்செய்வார், நம்முடைய உடலின் தேவைகள் மட்டுமல்லாது நம்முடைய ஆன்மீக தாகத்தையும் அவருடைய வார்த்தையால் அவர் திருப்திப் படுத்துவார்.

பரலோக பிதாவே, எங்களை ஆராய்ந்து பார்க்க உதவி செய்யும், வாழ்வின் எல்லா பகுதிகளையும் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக்கும். எங்களுடைய ஜெபத்தை கேட்டு அதற்கு பதில் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமேன்.

Sol.Gigi Jacob, AOJ

தானியேல் – II
08-03-2022 – தேவ செய்தி

ப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.

லூக் 21:10


இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவரிடம் உலகின் முடிவு மற்றும் அவருடைய வருகையின் அடையாளம் என்ன என்று கேட்டனர். இயேசு பல் வேறு அடையாளங்களை அவர்களுக்குச் சொன்னார், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யம் எழும்பும் என்பது ஓர் அடையாளமாகும். வருங்காலத்தைப் பற்றி கர்த்தர் வேதத்தில் அநேக இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது அவர் எவ்வளவு நல்லவர் என்பதை காட்டுகிறது.

பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏசா 42:9

கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் ஒரே புத்தகம் பைபிள்.
வேதத்தின்படி இரண்டு ராஜ்யங்கள் உலகில் இருக்கின்றன.


  • கர்த்தருடைய ராஜ்யம் அல்லது ஒளியின் ராஜ்யம் மற்றும் சாத்தானின் ராஜ்யம்
  • அல்லது இருளின் ராஜ்யம்.

கடைசி காலங்களில் அந்தகாரம் அதிகரிக்கும். இன்று பாவம் நம்முடைய விரல் நுனியில் கிடைக்கிறது என்பதை நன்கு அறிவோம்.

மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும். 
(2திமோ 3:1-4).

இன்றைய உலகம் மேல் சொன்னதுபோலத்தான் இருக்கிறது. நாம் கடைசி காலங்களில் இருக்கிறோம். அந்தகாரத்தின் ராஜ்யம் நமக்கு எதிராக எழும்ப போகிறது.


என்னுடை வாழ்வில் ஒரு முறை நான் அந்தகாரத்தால் மூடப்பட்டேன். நான் மன சோர்வடைந்தேன். என்னுடை அன்றாட வாழ்வின் கடைமைகளை கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. என்னால் சரியாக தூங்க இயலவில்லை. விசுவாசிகளுடைய விசுவாசமுள்ள ஜெபத்தால் மன உளைச்சளில் இருந்து வெளியே வர இயேசு எனக்கு உதவி செய்தார்.


நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.(ரோம 12:21)


ஜெயம்கொள்பவர்களுக்கு பரிசு உண்டு. எனவே நாம் வெல்லுவதற்கு முயற்சி செய்வோம்.


ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். (லூக் 21:36).


உபத்திர்வங்களிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியை இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார்.
அந்தகாரத்தை மேற்கொண்டு வெற்றியாளார்களாக, ஜீவ கிரிடத்தைபெற இயேசுவே எங்களுக்கு உதவி செய்யும்.


Sol. Saji Kyle, Aoj

தானியேல்
07-03-2022 – தேவ செய்தி

அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.

(1சாமு 30:19).

சவுலுக்கு பயந்து தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள தாவீது காத் பட்டணத்திற்கு சென்று ஒளிந்து கொண்டிருக்கையில், அவனுடைய எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் இருந்த எல்லா வற்றையும் சூரையாடினார்கள். தாவீது அவர்களுடைய (காத்) இராணுவத்தோடு தங்க அனுமதிக்கப்பட வில்லை. அவன் அங்கிருந்து திரும்பி வந்தபோது தன்னுடைய மனைவிகள், பிள்ளைகள் மற்றும் அவனுடைய அனைத்து பொருட்களும் அமலேக்கியர்களால் கொள்ளையிடப்பட்டதை கண்டான். தாவீதும் அவனது கூட்டாளிகளும் அழுவதற்கு கண்ணீர் வற்றிப்போகும் மட்டும் அழுதனர்.

ஆனால் தாவீது தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 1சாமு 30:6

தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

1சாமு 30:8.


கர்த்தரிடமிருந்து பதில் பெற்றபின் தாவீது தன்னுடைய உடைமைகளை சூரையாடிய எதிரிகளை பின் தொடர்ந்தான், அவர்களோடு யுத்தம் செய்ய. அவன் இழந்த அனைத்தையும் திரும்ப பெற்றான்.. சிறியவற்றிலிருந்து பெரியவை வரை தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள் என எதிரி எடுத்துச் சென்ற அனைத்தையும் திரும்ப பெற்றான்.


கர்த்தருடைய பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே செல்லாதீர்கள். முக்கியமாக யுத்த நேரத்தில்.

எதிரியின் கண்கள் உங்கள்மீது இருக்கும். நீங்கள் ஜாக்கிரதையாக இராவிட்டால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் அவன் திருடிக்கொள்வான்.
யுத்த களத்தில் நிற்கும் நீங்கள் உங்களுடைய குடும்பம், குழந்தைகள், வேலைத்தளம் மற்றும் உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் எதிரி கைவைக்காதபடிக்கு நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

தாவீது ‘காத்’க்கு செல்வதைப் பற்றி கர்த்தரிடம் ஆலோசிக்காமல் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே சென்றான். எதிரி உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள் ஆதலால் எல்லா திசையிலிமிருந்து கர்த்தர் உங்களை பாதுகாக்கிறார். நீங்களும் உங்களுடைய குடும்பமும் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறீர்கள். எதைப்பற்றியும் பயப்பட தேவை இல்லை.
தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் 2திமோ 2:4.
எதிரி உங்களிடமிருந்து எதையாவது திருடிவிட்டானா?
கர்த்தருக்காக யுத்தம் செய்யவும், அவருக்கு ஊழியம் செய்யும் சுதந்தரம்?

பேய்களை ஓட்டவும், நோய்களை சுகமாக்கவும் கர்த்தர் உங்களுக்குகொடுத்திருக்கும் அதிகாரம்?
உங்களுடைய குழந்தைகள், அவர்களுடைய படிப்பு, அவர்களின் எதிர்காலம்?
அவர்களுடைய திருமண வாழ்க்கை?
அவர்களின் குடும்பத்தின் சந்தோஷம், அமைதி மற்றும் இரட்ச்சிப்பு?
நம்முடைய அடிப்படை அதிகாரமான நற்செய்தியை அறிவிப்பது, மற்றும் கற்றுக்கொடுப்பது?
உங்களிடமிருக்கும் நம்பிக்கை?
இயேசு கிறிஸ்துவில் உங்களுடைய விசுவாசம்?
நீங்கள் இழந்தவற்றிற்காக அழுதுகொண்டு, உடைந்து போய் இருக்கீற்களா?
கவலை வேண்டாம். எழுந்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு பச்சை கொடி காட்டுகிறார். உங்களுடைய எதிரியை நீங்கள் மேற்கொள்ளலாம்.
நம்முடைய தேசத்தை சூரையாடிக்கொண்டிருக்கிற எதிரியை நாம் அவன் மீண்டும் எப்பொழுதுமே இந்த தேசத்திற்குள் வராதபடிக்கு துரத்துவோம்.
கர்த்தரில் நாம் பலப்படுவோம். எதிரியோடு யுத்தம் செய்வோம், இழந்த அனைத்தையும் திரும்ப பெறுவோம்.

Sr. Anitta AOJ

தானியேல் – II 06-03-2022 – தேவ செய்தி

ர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

சங்கீ 34:22

கர்த்தரை சேவித்து அவருக்கு ஊழியம் செய்பவர்கள் மீது குற்றஞ்சுமராது.

அவர்கள் பாவம் செய்தாலும் கர்த்தர் அவர்களை மன்னித்துவிடுவார், புத்தகத்தில்லிருந்து அழித்தப்போடுவார்.
ஆதிஆகமத்தில் நாம் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பார்க்கிறோம்.

அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தா ர்கள்


ஆதி 20:2-8

அபிமெலேக்கு கர்த்தருக்கு பயந்தவனாய் இருந்ததால், அபிரகாமின் மனைவியாகிய சாராளை தொட அவனை கர்த்தர் அனுமதிக்க வில்லை. கணவிலே கர்த்தர் தோன்றி அபிமெலேக்கிடம் சொன்னார், அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். 20:7


மற்றவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டதற்கு தண்டனை மரணம். ஒரு மனிதனின் மரணம் அல்ல அவனோடு இருக்கும் அனைத்த்ம் சேர்ந்து மரிக்க வேண்டும்;
ஒரு தலைவனாக இருந்து தவறு செய்ய நேர்ந்தால், அவனுடைய மக்கள், வேலையாட்கள், வியாபாரம், பணியிடம், தொடர்புகள், கட்சி, வளர்ச்சி, நற்பெயர், எந்த துறையிலும் அவர் செய்த முன்னேற்றம், சொத்துக்கள், மரம், பயிர்கள் என அனைத்தும், ஆறுகள், தாவரங்கள் அனைத்தும் மரணத்திற்கு உள்ளாகின்றன. ஆனால் பாவத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தருக்கு முன்பாக பாவ அறிக்கை செய்தால் அதை அவர் மன்னித்து இழந்த எல்லாவற்றையும் மீண்டும் கொடுப்பார்.

ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின்நிமித்தம் கர்த்தர்அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார். ஆதி 20:17,18.
அபிமெலுக்கு தன்னுடைய குற்றங்களை கர்த்தரிடம் மட்டுமல்லாது, தன்னுடைய
வேலையாட்களிடமும் சொன்னான். அவர்கள் அனைவரும் மரித்துபோவார்கள் என்பதால் மிகவும் பயந்தார்கள். கர்த்தராகிய ஆண்டவரை அறியாவிட்டாலும் அபிமெலேக்கை நாம் நேர்மையான ராஜாவாகவே பார்கிறோம்.
எரேமியாவின் புஸ்தகத்தில் கர்த்தர் தன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை குற்றம் சுமத்துகிறார்.

செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள். கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ் சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர்சொல்லுகிறார். எரே 2:7-9
பாவம் செய்தவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பேரக்குழந்தைகள் கூட குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர், ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளவில்லை அல்லது மனந்திரும்பவில்லை.

நேரம் ஒதுக்கி, உங்களுடைய மக்கள் மற்றும் தொகுதி மக்களின் விபச்சாரத்தின் பாவங்களை ஒப்புக்கொண்டு . கர்த்தரிடம் அறிக்கையிடுங்கள். உங்களுடைய குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில், தெருவில், அரசாங்கத்தில், லோக்சபா, ராஜ்யசபா, நீதித்துறை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், சுற்றுலாதளங்கள், மத மையங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் மரணம் உள்ளதா? ஒப்புக்கொள்வதன் மூலமும், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமும் நாம் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும்.


“உருவாகு உருவாக்கு” பயிற்சிக்கு அநேக மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தேன். அதே நாளில் ஒரு சகோதரன் என்னை அழைத்தான். “ ஜனவரி மாத ‘எழுச்சிகுரல்’ என்னும் மாத பத்திரிக்கையைப் படித்தேன், கர்த்தர் 2021 ஆம் ஆண்டில் இயேசுவின் படை அணி மூலம் செய்த அனைத்து காரியங்களையும் கண்டு வியப்படைந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இயேசுவின் படை அணியோடு சேராததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.” என்றார். நிழல் சட்டமன்ற உறுப்பினராக இருக்க அவர் முன்வந்தார். அடுத்தவாரமே அவர் மூலம் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். ஒருவர் இயேசுவின் படை அணிக்கு முற்றிலும் புதியவர். உருவாகு உருவாக்கு பயிற்சியில் பங்குகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார். சகோதரனை மீண்டும் கொண்டுவந்ததற்காக கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.

அன்பின் பரலோக பிதாவே, அலட்சியம், மந்தம் , ஆன்மீக சோம்பல் மற்றும் ஆன்மீக தூக்கம் அகியவற்றின் கரணமாக கடந்த ஆண்டுகளில் சாத்தானால் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க AOJ வீரர்களுக்கு உதவும், எங்களை மன்னியும். ஆமேன்.


Sr. Roger AOJ

தானியேல் – II
05-03-2022 – தேவ செய்தி

வர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.

லூக் 21:6

யெருசலேம் தேவாலயத்தின் அழிவைப் பற்றி இயேசு கிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனம் கி.பி. 70 இல் நிறைவேறியது.


மத் 24:2 இல் இயேசு சொன்னது போல இப்படிப்பட்ட ஒரு அழிவு ஏன் வந்தது?
இவ்வுலகின் அதிசயங்களும், சந்தோஷங்களும் ஒழிந்து போகும்.
அப்போஸ்தலர்கள் யெருசலேம் தேவாலயத்தின் அழகைப்பற்றி பேசுகையில் இயேசு இதைச் சொன்னார்.


அவர் இந்த உலகை நியாயம் தீர்க்க வரும்போது, துன்பத்திலும் சிறையிருப்பிலும் இருக்கும் தங்களுடைய மக்களை அவர் விடுவிப்பார். கர்த்தருடைய நீதி தீர்ப்பு யூதர்கள் மீது வந்தது, பாவங்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்பதை சுட்டிக்காட்ட அவர்களுடைய நகரமானது நமக்கு உதாரணமாக வைக்கப்பட்டுள்ளது.


கர்த்தருடைய கோபம் யெருசலேம் தேவாலயத்தின் மீது வந்தது போல, , பாவிகளுக்கு எதிரான அவருடைய எச்சரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.
மிக அழகான இந்த மனித உடல் விரைவில் புழுக்களுக்கு இறையாகும். மிக பிரமாண்டமான கட்டிடம் ஒரு பாழடைந்த குவியல் போல் மாறும், இதையெல்லாம் பார்க்கவில்லையா?
ரோம் பேரரசர் டைட்டஸ் ரோமாபுரியின் பெரிய மன்னனாக இருந்தான். நீங்கள் நகரத்திற்குள் பிரவேசிக்கும் போது, யெருசலேம் தேவாலயத்தை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அவன் தன்னுடைய வீரர்களுக்கு கட்டளையிட்டான். ஆனால் வீரர்களும் அவர்களுடைய படை தளபதியும் ஆவேசத்துடன் சென்று, கர்த்தர் சொன்னபடியே ஒரு கல் மேல் இன்னொரு கல் இராதபடி செய்தனர்.

மீக 3:12 – சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.
பாவிகளின் கவர்ச்சிமிக்க செழிப்பை கண்டு உற்சாகம் அடைகிறோம் ஆனால் யெருசலேம் தேவாலயத்திற்கு நிகழ்ந்தது என்ன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகில் வலிமையான இடம் என்று ஒன்று இல்லை.


எல்லாம்வல்ல தேவனே அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார், எதையும் நொடிபொழுதில் அழிக்க வல்லவராய் இருக்கிறார்.
திருடர்களின் குகைகளான அற்புதமான ஜெப ஆலயங்களை எவ்வளவு குறைவாக தேவன் மதிப்பிடுகிறார் என்பதை நாம் கவனிக்கலாம்.
நோடர்-டேமின் பழமைவாய்ந்த தேவாலயம் தீ பிடித்து முற்றிலும் அழிந்தது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற 850 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய தேவாலயம், ரோமன் கத்தோலிக்க சிலை வழிபாட்டிற்கு பெயர்போன அந்த தேவாலயம் ஏப்ரல் 15, 2019 அன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
கர்த்தருடைய சித்தம் இந்த பூமியில் நிறைவேறும் என்பதை இது உறுதிபடுத்துகிறது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், தன்னுடைய திட்டத்தின்படி அவருடைய நேரத்தில் அனைத்தையும் செய்து முடிப்பார்.


ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, உலக பொருடகள், பதவி, பரிசுகள் மற்றும் பணத்தின் மீது ஒரு போதும் சார்ந்திருக்கச் செய்யாதேயும். பிதாவே நாங்கள் உம்மைத்தான் சார்ந்திருக்க விரும்புகிறோம், ஒளியில் நடக்க உம்முடைய கிருபை தாரும். உம்மோடு நெருங்கி இருக்க எங்களுக்கு கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதவே. ஆமேன்.

Sol. Usha Sonny Aoj

தானியேல் –
04-03-2022 – தேவ செய்தி

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

லூக் 16:1

ஐசுவரியவான் – உலகில் உள்ள

செல்வங்களுக்கும் ஆதாரமாய் இருப்பது தேவன்
உக்கிராணக்காரன் – நீங்களும் நானும்

ஐசுவரியவான் தன்னுடைய சொத்தாகிய ஒரு சிரிய தொகுதியை பாதுகாத்துக்கொள்ள உங்களை ஊழியகாரனாக நியமித்துள்ளான்.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆஸ்தி என்ன?

னித வளங்கள் – உங்கள் தொகுதியின் நிலப்பரப்பை நீங்கள் கணக்கெடுக்க வேண்டும்.
மக்கள் (பாலின வாரியாக, மத வாரியாக, வயது வாரியாக, மொழி வாரியாக, எழுத்தறிவு வாரியாக) முடிந்தவரை அவர்களை பல குழுக்களாக பிரிக்கலாம்.

யற்கை வளங்கள்: நிலம், நீர், சூரிய ஒளி, தாவரங்கள், கனிமங்கள், மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்றவை.

லாச்சார வளங்கள்: கலாச்சார பாரம்பரியம். உங்கள் தொகுதியின் வயது என்ன? முன்னோர்களிடமிருந்து நீங்கள் பெற்ற அனைத்தையும் (கோவில்கள், தேவாலயங்கள், பெயராக கூட இருக்கலாம், தொகுதியின் பெயர் என்ன, மக்கள் கொண்டாடு திருவிழாக்கள், அவர்கள் நம்பும் மூட நம்பிக்கைகள், இந்தத தொகுதிக்கு ஏதேனும் சிறப்பு அல்லது புகழ் போன்றவை) பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை எழுதுங்கள்.

ள்கட்டமைப்பு: சாலை, நீர் ஆதாரங்கள், ரயில்வே, துறைமுகங்கள், மின்சார இணையம், நெட்வொர்க் இணைப்புகள், தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வசதிகள் போன்றவை.

ஆன்மீக நிலை: நீங்கள் மட்டுமே விசுவாசிகளா, அந்தத் தொகுதியில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களா, ஆம் என்றால் அவர்கள் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலுக்கு துணைசெல்கிறார்களா அல்லது எதிர்கிறார்களா?
இப்படி ஒரு சர்வே எடுக்கலாம். இந்த அனைத்து வளங்களும் நீங்கள் தொகுதிக்கு பொறுப்பேற்ற நாளில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இயேசு தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் பூமியில் உள்ள சாத்தானின் சக்தியை தோற்கடித்து பூமியை வெற்றியுடன் கைப்பற்றினார். அதை தம்முடைய நம்பகமான ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன் தந்தையிடம் சென்றார்.
பூமி ழுமுவதும் பிர்க்கப்பட்டுள்ளது
கண்டங்கள்
நாடுகள்

மாநிலங்கள்/மாகாணங்கள்/தாலுகாக்கள்
தொகுதிகள், கிராமங்கள், வார்டுகள், தெருக்கள் போன்றவை.
மத் 13:34-36 – ஒரு மனிதன் வெளியில் செல்வதற்கு முன் தன்னுடைய ஊழிகாரர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துச் சென்றான், ஒவ்வொருவனுடைய வேலை என்ன என்றும், காவல்காரனை பார்த்துக்கொள்ளும்படியாகவும் சொல்லிவிட்டுச் சென்றான். வீட்டு எஜமானன் எப்பொழுதுவருவான் என்று வீட்டு வேலைகாரனுக்கு தெரியாது, மாலை, நள்ளிரவு, கோழி கூவும் நேரம் அல்லது இன்னும் காலை; எஜமானன் திடீர் என வருவார், நீங்கள் தூங்கி கொண்டிருப்பதை பார்ப்பார்.


லூக் 16:1 இருக்கும் செல்வந்தனும் , மாற்கு 13:34 இல் இருக்கும் ‘மனிதனும் இயேசு கிறிஸ்துதான். தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் அதிகாரத்தை தந்திருக்கிறார். இரண்டு வசனங்களிலும் இருக்கும் ஊழியகாரனும், உக்கிரானகாரனும் ஒன்றுதான். எஜமானனிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றிப்பது நீங்களும் நானும்தான்.


நாம் எப்பதை அதை சமாளிக்கப்போகிறோம்?
அவருடைய வளங்களை வீண்டிப்பதாக பரலோக நீதிமன்றத்தில் தூதர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களா? கர்த்தருடைய ராஜ்யத்தை கட்டியெழுப்ப நீங்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா?

Sr. Leema Rose AOJ

தானியேல் –II 03.03.2022 – தேவ செய்தி

கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
ஏசாயா 49:9,10

எனக்கு இரட்சிப்பு கிடைத்தபிறகும், பாவங்களுக்கு பரிகாரம் செய்தல், தவகாரியங்கள் செய்தல் போன்றவற்றின் மூலமாக என்னுடைய இரட்சிப்புக்காக நான் உழைக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் நெடுநாள் வாழ்ந்தேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், என்னுடைய கிரியைகளின் மூலம் கர்த்தரை பிரியப்படுத்தி என்னை தகுதிபடுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது எவ்வளவு தவறானது என்பதை கர்த்தர் எனக்கு கட்டினார்

தன்னுடைய மரணம் மற்றும் உயிர்ப்பின் மூலமாக இயேசு கிறிஸ்து நமது இரட்சிப்பை முழுமையாக்கி விட்டார். அதனுடன் கூட்டுவதற்கு ஒன்றும் இல்லை.


நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், “அவரையே நோக்கி பார்ப்பது, மேலும் அவரில் விசுவாசம் வைப்பது.”


அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீ 34:5.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவா: 3:14,15


அனைவரும் காண்பதற்காக, இந்த பூமியில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா நாமங்களுக்கும் மேலாக, இயேசு கிறிஸ்துவை, பிதாவாகிய தேவன் உயரத்தினார்.


அவரை நோக்கி பார்பவர்கள் பிரகாசமடைந்து அவரின் முக ஒளியை பிரகாசிப்பார்கள்.
அனைத்து சிறையிறுப்பிலுருந்தும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
சாவு மற்றும் நித்திய நரகத்தின் கைதிகளாக, ஆதாமின் சந்ததிகளாகிய நாம் பிறந்துள்ளோம்.

ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபி 2:15.


பல விசுவாசிகள் இரட்சிப்புக்குள் வந்தபிறகும் இன்னும் சிறையிருப்பில் இருக்கிறார்கள் – விரக்தி, மனச்சோர்வு, நோய், ஊக்க்மின்மை, நம்பிக்கை இழப்பு போன்றவற்றால்.
நீங்கள் ஏன் அந்த சிறையிருப்பை விட்டு வெளியே வரக் கூடாது? “இயேசு கிறிஸ்துவின் விசுவாசி” என்னும் உங்களுடைய அடையாள அட்டையை நீங்கள் காவல்காரனிடம் (சாத்தான்) காட்டலாம்.


உங்களுடைய கடமை இதுதான் – என்னுடைய தண்டனையின் காலம் முடிந்துவிட்டது என்று மக்களுக்குச் சொல்லுவது.


பரலோக பிதா, நியாயாதிபதி, என்னுடைய வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார். நான் இனி சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெளியே வந்து உங்களை மற்றவர்களுக்கு காட்டுங்கள்.
சாத்தானின் சிறை அறைகள் இந்தியாவில் நிரம்பி வழிகிறது. தணடை காலம் முடிந்தவர்கள் கூட சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள் ஏனென்றால் விடுதலையை அவர்களுக்கு யாரும் அறிவிக்க வில்லை. எத்தனை சோகமானது.
நாம் அவர்களிடம் சென்று சொல்ல வேண்டும்,


…. கட்டுண்டவர்களை நோக்கி புறப்பட்டு போங்கள் என்றும், இருளில் இருக்கிறவர்களை நோக்கி, வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், ஏசாயா 49:9,10


சிறையில் சரியான உணவு (கர்த்தருடைய வார்த்தை) இல்லாததால் அவர்கள் பசியால் இறக்கிறார்கள்.
குடிக்க தண்ணீர் (பரிசுத்த ஆவி) இல்லை.

சூரியனின் வெப்பதிலிருந்து தங்களை பாதுகாக்க நிழல் இல்லை, வெப்பம் அவர்களை பாதிக்கிறது, சரியான மேய்ப்பன் இல்லை அவர்களை வழிநடத்த,
வெளியே வந்தபின்,

அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்;
சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை;
(இயேசு) அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.


எத்தனை மகிழ்ச்சி!


இந்த மகிழ்ச்சியை அனைத்து வீடுகளும் அனுபவிக்க வேண்ட்ம். இந்திய தேசத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் இந்த மகிழ்ச்சியால் நிரம்பியிருப்பதாக.


Sol. Gracy, AOJ

தானியேல் – II
02-03-2022 – தேவ செய்தி

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

லூக் 18:13.

மார்பிலே அடித்துக்கொண்டான் – இது ஆழமான துக்கத்தையும் மனந்திரும்புதலையும் காட்டுகிறது.

லூக் 18:14 – இந்த ஆயக்காரன் மட்டுமே நீதிமானாக்கப்பட்டான் என்று இயேசு சொன்னது மற்றவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், 
மத் 23:12.

பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கு தேவையானது குழந்தையைப்போல விசுவாசம் மேலும் கர்த்தரை சார்ந்திருப்பது. இந்த ஆயக்காரனின் அணுகுமுறையே கர்த்தரிடம் செல்வதற்கு சரியானது. அதிகாரிகளுக்காக வேலைசெய்ததால் ஆயக்காரர்கள் வெறுக்கப்பட்டார்கள் மேலும் ஊழலுக்கு பேர்போனவர்களாக இருந்தார்கள். தங்களுடைய சுயநீதியிலும் கடின இருதயத்தாலும் பரிசேயர்களும், மத போதகர்களும் தவறிப்போன மக்களை பற்றி கவலைப்படவில்லை.

வழி தவறிய பிள்ளைகள் கர்த்தரிடம் திரும்பி வர வேண்டும் என்று கர்த்தரின் இருதயத்தை வெளிப்படுத்தும் இயேசு ஏங்குகிறார்.
நாம் பாவிகள் என்பதை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு கர்த்தருடைய கிருபையை நாடி, நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, கர்த்தரிடம் நம்மை ஒப்புகொடுத்து விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை பொறுவோம். ரோம 10:3 சொல்லுகிறது எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
யாகோபு 4:6 – அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


நீதிமொழிகள் 22:4 – தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.


சங் 103:8,9,11
கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.. .
எனவே அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தர் பலவீனமானவர்களை அறிந்து அறிந்து அவர்களுக்கு கிருபை தருபவர். யாக்கோபை அறிந்த தேவன் நம்மையும் அறிந்திருக்கிறார் மேலும் நமக்கு ஞானம், அவருடைய் நீதி, மேலும் இரட்சிப்பை கொடுக்கிறார், அவரே நம்மை பரிசுத்தமாக்குகிறார்.
நாம் கர்த்தருக்கு கீழ்படியும்போதும், நம்மை தாழ்த்தும் போதும் அவர் நமக்கு கிருபை கொடுக்கிறார்.
கர்த்தர் என்னுடைய பாவங்களை மன்னித்துவிட்டார் மேலும் என்னை காப்பாற்றிவிட்டார். இதோ கர்த்தர் என்னையும் என் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலாரையும் ஆசீர்வதித்திருக்கிறார்.


ஜெபம்


பரலோக பிதாவே, எங்களுடைய பாவங்களை மன்னியும், உம்மோடு இருக்க என்னை ஆசீர்வதியும், உம்முடைய குழந்தைகள் உமக்கு பயந்து தங்களிஅ தாழ்த்தி, உம்மை துதிக்கவும், உம்முடைய மகிமையை காணவும் செய்யும்.

ஆமேன்.

தானியேல்
01-03-2022 – தேவ செய்தி

ங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்…

(பிலி 1:6).

என்னுடைய சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
கர்த்தரோடு என்னுடைய 8 வருட பயணத்தில் ஒரு வசனம் எனக்கு எப்போதும் நினைவில் நிற்கிறது.

எபி 13:5 – நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை. இந்த வசனத்தில் உள்ள உண்மைத்தன்மையை நான் அனுபவித்திருக்கிறேன். என்னுடைய தாயின் வயிற்றில் நான் உருவாகும் காலத்திலிருந்தும் கர்த்தரின் அன்பை சந்திப்பதற்கு முன்பும் கூட அவர் எப்போதும் என்னோடு இருக்கிறார் என்பதை இது நினைவுபடுத்துகிறது.
இரண்டாவதாக, கர்த்தர் என்னை ஒருபோதும் கைவிடவில்லை, மேலும் என்னுடைய பலவீனங்கள் அல்லது பாவங்கள், குற்ற உணர்வுகள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும்போது கூட, நான் உயர்ந்து முன்னேறுவதற்கு என்னை பலப்படுத்துகிறார்.

பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் இயேசுவையும் அவர் கல்வாரிக்கு சிலுவை சுமந்து சென்று போனதையும் எனக்கு நினைவூட்டுகிறார், அந்த பாரமான சிலுவையின் பாரத்தை இயேசு நடக்கும்போது பலமுறை அவரது தோளில் உணர்ந்தார், கீழே விழுந்தாலும் அவர் எழுந்தார் சிலுவையை எடுத்தார், அதை சுமந்துகொண்டு முன்நோக்கிச் சென்றார்.

நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” அவர் மரணபரியந்தம் என்னை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை இதை காட்டுகிறது. எபி 12:1-3


பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரனை அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தினார், மேலும் குமாரன் நமக்காக தன்னுடைய உயிரை கொடுத்தார், ஆனால் அவரது அன்பு அத்துடன் நிற்க்க வில்லை, பிதா நமக்கு பரிசுத்த ஆவியையும் கொடுத்தார்.
இப்போது அவருடைய ஆவி என்னுள் இருப்பதால் அது என்னை வழிநடத்துகிறது, எனக்கு கற்பிக்கிறது, ஒவ்வொருநாளும் இயேசுவை எனக்கு உண்மையாக்குகிறது. உண்மையில் இது அதிசயம்தான்.


எதிரியானவன் எனக்குள் சந்தேகத்தை உண்டாக்கி, என்னைச் சுற்றிலும் பொய் மேலும் பல்வேறு சுழ்நிலைகளின் மூலம் உற்சாகத்தை இழக்கச் செய்கிறது, ஆனால் ஒரு வசனம் என்னை பலப்படுத்துகிறது, அதை நான் மிகவும் நேசிக்கிறேன்.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

ரோமர் 10:11


அவர் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைப்போம், – உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்.” என்பதை முழுவதும் நம்புவோம்.. (பிலி 1:6).

Sol. DaiahunTalang, AOJ

தானியேல்
28-02-2022 – தேவ செய்தி

எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

லூக் 19:17

இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான வெளிப்பாடுகள் உள்ளன.


கீழ்படிந்து நாம் செய்யும் உழைப்பிற்கு நேரிடையாக வெகுமதி உள்ளது.
தனிப்பட்ட சாட்சி:

நான்கு உடன்பிறப்புகளில் நான் இளையவன். சிறு வயதிலேயே தேவன் என்னை ஊழியத்திற்கு அழைத்ததை நான் உணர்ந்தேன். ஊழியத்தை துவங்கியபோது நான் 

உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், இப்பொழுதும் அப்படியே இருக்க விரும்புகிறேன். எல்லா ஆண்டிலும் கர்த்தர் என்னை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், என்னுள்ளும் என் வாழ்க்கையிலும் அவர் செயல்படுவதை காணும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துள்ளார். எனக்கு கிடைத்துள்ள அவருடைய ஆசீர்வாதங்களை பார்க்கும்போது ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும், “அவர் என்னை கைவிடாமல் இருப்பதினால்தான் நான் இன்றும் உயிரோடு இருக்கிறேன் மேலும் எனக்கு தேவையான எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.”


இயேசு மீண்டும் வரும்போது, முதலாவதாக கேட்கும் கேள்வி, அவர் நமக்கு கொடுத்த ராத்தலை வைத்து நாம் வியாபாரம் செய்து என்ன சம்பாதித்திருக்கிறோம் என்பது தான்

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

லூக் 16:10


அவருடைய சேவகர்களாக நாம் செய்யவேண்டியது எல்லாம், அவருடைய கர்த்தத்துவத்திற்கு உண்மையுடன் அடிபணிந்து அவர் நமக்கு கொடுத்திருக்கும் இராத்தல்களை பயன்படுத்துவதுதான்.
உண்மையுள்ள கீழ்படிதல் மட்டுமே இயேசுவைப் பின்பற்றுபவரின் ஒரே வாழ்க்கைமுறை.

சின்ன விஷயங்களிலும் கீழ்படிந்திருப்பதுதான் பாராட்டுக்கும் அதிக ஆசீர்வாதங்களுக்கும் வழிவகுக்கும்.


அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவினுடைய துன்பத்திலும் மரணத்திலும் நாம் பங்குபெற்றால் இயேசு கிறிஸ்துவைப்போலவே அவருடைய உயிர்ப்பிலும் பங்குகொள்ள முடியும் என்று சொன்னார். தேவன் அழைத்த பரம அழைத்தலின் பந்தயப் பொருளுக்காக இலக்கைநோக்கித் தொடருகிறேன். (பிலி 3:10-14).


அனுதினமும் இயேசுவுக்காக வாழ முயலும் நமக்கு நினைவில் வைக்க வேண்டியது – நாம் இவ்வுலகில் அனுபவிக்கும் பாடுகளை விட நமக்காக வைக்கப்பட்டிருக்கும் வெகுமதி மிகப்பெரியது. அதுதான் நித்திய வாழ்வு.

இறுதியாக, லூக்கா 18:8 –ல் இயேசு கேட்ட கேள்வி, “மனுஷகுமாரன் வரும்போது பூமியில் விசுவாசத்தைக் காண்பாரோ?” என்பதுதான் நமக்கும் ஒரு சவாலாக இருக்கிறது.
கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்த பரிசுகள் மற்றும் திறமைகள், வளங்களைச் செயல்படுத்துவதில் நாம் வெளிபடுத்திய உண்மையுள்ள கீழ்படிதலுக்கு ஏற்றார் போலத்தான் நமக்கு கிடைக்கும் வெகுமதியும் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


அன்பின் பரலோக பிதாவே, நான் கீழ்படிதலுடன் உழைக்க முடியும் என்பதற்காக நீர் என்னிடம் ஒப்படைத்த வேலையில் உமக்கு உண்மையாய் இருக்க எனக்கு இயேசுவின் நாமத்தில் உதவி செய்யுமாறு ஜெபிக்கிறேன். நான் இறுதிவரை உண்மையுள்ளவனாக இருக்கவும், இயேசு மீண்டும் வரும்போது என்னை உண்மையுள்ளவனாக காணவும் நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியான தேவனே என்னுள் வந்து எனக்கு சொல்லித்தாரும், எவ்வாறு கர்த்தருடைய ராஜ்யத்தின் காரியங்களில் அவர் விருப்பத்தின்படி உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று. அவருடைய மகிமைக்காக வாழ எனக்கு உதவி செய்யும் ஆமேன்.

Sol. Pradeep Samuel Singh, Aoj