தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 10-02-2023

பிதாவாகிய தேவனின் இருதயம்.

வேதாகமத்தில் பிதாவாகிய தேவனின்அன்பின் இருதயம் என்பது பற்றி ஒரு அழகான கதை உள்ளது.

இந்த கதையில் கர்த்தர், அப்பாவாக – படைத்தவராக மட்டும் தம்மை வெளிப்படுத்தவில்லை. மாறாக அப்பாவாக – மீட்பராகவும் வெளிப்படுத்தினார்.
எசாயா கர்த்தருடைய குணாதிசயத்தின் இந்த இரண்டு நிலைகளின் வெளிப்பாட்டை கண்டார்.
விழுந்துவிட்ட மனிதனை திரும்ப கொண்டு வந்து கர்த்தருடைய நோக்கத்திற்காக கொடுக்கவும், நம்மை நித்திய மரணத்திலிருந்து மீட்க சிலுவையில் மரித்தபோது , தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசுவின் வாழ்க்கையை விலையாகக் கொடுக்கவுமே.

கர்த்தருடைய அறிவுறுத்தலின்படி , ஆபிரகாம் எரிபலிக்கான விறகையும் ,நெருப்பையும், கத்தியையும் எடுத்தார். பிறகு ஈசாக் தந்தையிடம் பலியிடுவதற்கான நெருப்பும் விறகும் இங்கே இருக்கிறது. பலியிடுவதற்கான பலி எங்கே? என்று கேட்டார்.


20 வருடங்களுக்குப் பிறகு அல்லது கர்த்தர் அந்த வயதான மனிதரிடம் அவருடைய மகனை காணிக்கையாக கேட்கிறார். கர்த்தருக்காக அவர் தியாகம் செய்கிறார்.


இந்தக் கதையின் நோக்கம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனென்றால் இது நம் எல்லாரையும் மீட்பதற்கான கர்த்தரின் திட்டத்தைக் குறித்த தீர்க்கத்தரிசன பாடமாகும். ஈசாக் கீழ்படிதலுள்ள ஓரு மகன். அவன் இயேசுகிறிஸ்துவைப் போன்றவன். இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு இந்தக் கதை வெளிவருவதைக் காண்கிறோம்.நம்மை மீட்பதற்காக தம்மையே கொடுத்தார் .

ஈசாக்கு தன் தந்தையிடம் அப்பா ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டார். அப்போது ஆபிரகாம் கர்த்தர் சர்வாங்க தகன பலிக்காக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொடுப்பார் என்றார்.


ஆபிரகாமும் ஈசாக்கும் தெய்வீகத் தன்மைக்குள் ஒரு அழகாக தந்தை மகன் உறவில் இருந்தனர்.
ஆதியாகமம் 22 : 2
” அப்பொழுது அவர் ; உன் புத்திரனும் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ அழைத்துக் கொண்டு போய் அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் தகன பலியிடு என்றார். ” இந்த வசனத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் . அன்பு என்ற வார்த்தை வேதாகமத்தில் முதன்முதலில் இங்கு தான் தெரியப்படுகிறது.

ஆபிரகாம் இந்த அளவு தன்னுடைய மகனை நேசித்தால் , கர்த்தர் தன்னுடைய ஒரே குமாரனை எவ்வளவு அதிகமாக நேசிப்பார். யோவான் சுவிசேஷம் இதை எல்லாவற்றையும் காட்டுகிறது.
யோவான் 3 : 16 “ தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”
அவர்கள் ஒன்றாக நடந்தார்கள். ஆம் , பிதாவானவர் தம்முடைய மகனை கடந்த நித்திய காலத்திலிருந்து நேசித்தார்.
யோவான் 17 : 14 எவ்வளவு தூரம் நாம் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் நாம் எல்லோருமே இந்த அன்பில் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறோம். இது உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்து ஆட்டுக்குட்டியானவர் கொல்லப்படும் வரை இருந்தது. இது நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது. இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே , பிதாவும் குமாரனும் நம்மீதுள்ள அன்பினால் நம்முடைய மீட்புக்கு திட்டமிட்டார்கள். அவர்கள் உங்களுக்காகவும் எனக்காகவும் இந்த அன்பில் ஒன்றாக நடந்தார்கள். பிதாவானவர் தம்முடைய குமாரனை சிலுவையில் கைவிடவில்லை. பரிசுத்தமான பிதாவினால் பாவத்தைப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய பரிசுத்த குமாரனாகிய இயேசு முழு உலகத்தின்
பாவங்களையும் தனது பரிசுத்த சரீரத்தின் மீது சுமந்தார். பாவம் அறியாதவர், நமக்காக பாவமாக ஆனார். நாம் அவருக்கு முன்பாக நீதிமான்களாக ஆக வேண்டும் என்பதற்காக.
2 கொரிந்தியர் 5 : 21 “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்.

இயேசுவின் வேதனை நிறைந்த அந்த கொடுமையான நேரத்தில் பிதா ஒரு போதும் இயேசுவைக் கைவிடவில்லை. சிலுவையில் மகன் உணர்ந்த அதே வலியை தந்தையும் உணர்ந்தார். ஆனால் பிதா பரிசுத்தமும் தூய்மையும் உடையவராக இருந்ததால் தனது மகனின் பரிசுத்தமான உடல் பாவங்களால் சுமக்கப்பட்டதை சகிக்க முடியவில்லை. எனவே கடந்த நித்திய காலத்தில் முதன்முதலாக அவருடை அன்பு மகன் மீது கொண்ட ஒன்றிணைந்த உறவு முறிந்தது.
எசாயா 59 : 2 ” உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது , உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. “


பாவம் நெருப்பை போன்றது. அது எரித்து அழிக்கிறது. மிக மோசமான விஷயம் என்னவென்றால் அது அன்பான கர்த்தரிடமிருந்து நம்மை பிரிக்கிறது.
பலர் இந்த நெருப்புடன் அலட்சியமாக விளையாடியதால் நரகத்தில் உள்ளனர் . இன்று இரட்சிப்பின் நாள் , நாம் மனந்திரும்பி மன்னிப்பு கேட்டால் கர்த்தர் நம்மை மன்னிப்பதில் உண்மையாக இருக்கிறார். அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படவும் , நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளவும் நாம் அனைவரும் அவரிடம் வரவேண்டும்.

ஜெபம்


தந்தையே, எங்கள் பாவங்களினிமித்தம் உமது பரிசுத்தமான, அன்பான மகனை துன்புறுத்தப்பட்டு மரிக்கும்படி எங்களிடத்தில் தந்ததற்காக உமக்கு நன்றி. எங்கள் பாவங்களுக்கான தண்டனையை முழுமையாக செலுத்தியதற்காக கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. ஆமென்.

Sol. நொரீன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-02-2023

அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தரைத் துதியுங்கள்.

நாம் இப்போது வேதாகமத்திலிருந்து  சோர்ந்து போகாமல் ஜெபிக்கக் கூடிய ஜெபத்தின் வல்லமை பற்றி அறியவிருக்கிறோம்.

நாம் இப்போது பரபரப்பான சூழ்நிலையில் எல்லாவற்றையும் ஒரு நொடியில் செய்துமுடிக்க  வேண்டும் என்ற உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் இந்தத் தலைமுறையின் மனநிலை. நாம் விரும்புகின்ற விஷயங்களுக்காக காத்திருப்பது மிகப் பெரிய கேள்வி.

வேதாகமத்தின்படி நாம் எல்லாவற்றிலும் கர்த்தரின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.

லூக்கா 18 : 1 – 8, ரோமர் 2 : 7 , கலாத்தியர் 6 : 9 ஆகிய வேதாகம வசனங்கள் சோர்ந்து போகாமல் ஜெபிப்பதைப் பற்றி சொல்கிறது. நாம் சோர்ந்து போகாமல் ஜெபிப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

1 . ஜெபம் .

லூக்கா 18  ம் அதிகாரத்தில் ஒரு விதவை, நியாயமற்ற  ஒரு நீதிபதியிடமிருந்து தனக்கும் எதிராளிக்குமுள்ள பிரச்சனைகளின் பொருட்டு தீர்ப்பை பெறுகிறாள். அந்த நியாயமற்ற நீதிபதி கர்த்தரையும் மனிதனையும் மதிக்காத வகையில் வாழ்ந்து வருகிறார். இந்த விதவை தொடர்ந்து தன் மனுவுடன் நீதிபதியின் முன் வருகிறார். ஆரம்பத்தில் அவர் அதை பார்க்க முடியாத நிலையில் இருந்தார். பிறகு அவள் தொடந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததால் அவளுடைய மனுவுக்கு ஆதரவாக இருக்க விரும்பினார். கடைசியில் அந்த நீதிபதி அவள் மனுவுக்கு நியாயம் செய்தார். அவள் சோர்ந்து போகாமல் இருந்ததால் உலக ரீதியிலான ஒரு நீதிபதி அந்த விதவைக்கு நியாயம் செய்தார். நாம் வல்லமையான கர்த்தரை சேவிக்கிறோம். அவர் ஒருநாளும் உண்மையின்  வடிவத்தை மாற்றியதில்லை.எனவே அவர் முன்னால் இருக்கிற நம்முடைய மனுவைக் கேட்பார். என்ன ஒரு அற்புதமான வல்லமை வாய்ந்த கர்த்தரை நாம் சேவிக்கிறோம்.

2 . நற் கிரியைகள்.

ரோமர் 2 : 7 ” சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையையும் கனத்தையும் மறுமைக்குரிய நித்திய ஜீவனையும் அளிப்பார் . “

நாம் ஏன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்?

எபேசியர் 2 : 10 சொல்கிறது ”  ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். “

நாம் கர்த்தருக்கு முன்பாக நன்மையானதாக இருக்கும் பொருட்டு நாம் செய்கின்ற எல்லா வேலைகளும் பலனளிப்பதாக இருக்க வேண்டும்.

தீத்து 3 : 14 சொல்கிறது,

” நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்கிறதுக்கு ஏதுவாக நற்கிரியைகளை செய்து பழகட்டும். ” நாம் கண்டிப்பாக தேவையான பயன்பாட்டிற்காக நல்ல செயல்களை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

யோவான் 26 : 1 – 13 வரையுள்ள வசனங்களில் இயேசுவின் தலையில் விலையுயர்ந்த தைலத்தை ஊற்றிய ஒரு பெண்ணைப் பற்றி பேசப்படுகிறது. அந்த வீட்டில்  கூடியிருப்பவர்களிடையே அந்தப் பெண்ணின் செயலைப் பற்றி பலவித குழப்பங்கள். இயேசு அவர்களுடைய நோக்கத்தை அறிந்து அவள் எனக்கு ஒரு நல்ல பணியை செய்தாள் என்று கூறினார்.  எனவே இயேசு நம் இறுதி மூச்சுவரை நற்செயல்களை செய்ய ஊக்கப்படுத்துகிறார்.

3 . நன்மை செய்வது.

கலாத்தியர் 6 : 9 கூறுகிறது , ” நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாமலிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். “

நாம் நன்மை செய்வதில் சோர்ந்து போகக்கூடாது. ஏனென்றால் அதைச் செய்கின்ற நாம் கர்த்தரால் படைக்கப்பட்டவர்கள், இயேசு மற்றும் பரிசுத்த ஆவியினால் வடிவமைக்கப்பட்டவர்கள். இயேசுவும் அதைச் செய்தார். அதைச் செய்வதற்குரிய மனதையும் நமக்கு கொடுத்தார். நம் எதிரிகளுக்கும் நாம் நல்லது செய்ய வேண்டும். அது நம் பிதாவாகிய தந்தையின் முன் ஏற்கத் தக்கது. அப்படியே இயேசுகிறிஸ்துவின் அன்பை காட்டி நம் எதிரிகளையும் நம்மை விரும்பாதவர்களையும் பாதுகாக்க முடியும்.

எங்களுடைய காருக்கு ஆர். சி புத்தகத்திற்காக  3 மாதமாக நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் தேடி அலுத்துவிட்டோம். நாங்கள் நிறைய முறை தேடிப்பார்த்து பின் ஆர். சி புத்தக நகலுக்கு விண்ணப்பிக்க நினைத்தோம். இது நடந்த பிறகு ஒரு நாள் கர்த்தரிடம் கடைசிமுறையாக ஜெபித்தேன், புத்தகம் கிடைக்காவிட்டால் உறுதியாக நகலுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும் என்று நினைத்து திரும்பவும் அந்த புத்தகத்தை நாங்கள் தேடிய பழைய இடங்களிலே தேடினோம். என்ன ஆச்சரியம்! அதே இடத்தில் அசலான ஆர்.சி புத்தகம் கிடைத்தது. எனக்கு  கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. சந்தோஷத்துடன் சத்தமிட்டு என் குடும்பத்திலுள்ளவர்களிடம் கூறினேன். பிறகு இயேசுவிடம் நீர் எனக்காக தேடினீர் , எனக்கு செய்ய வேண்டிய காரியங்களுக்காக நீர் முனைப்புடன் இருந்தீர். எனக்காக செய்ய நீர் இங்கே இருக்கிறீர், எனவே இனிமேல் என் வாழ்வில் எதைச் செய்யவும் சோர்வடைய மாட்டேன். சர்வ வல்லவருக்கே மகிமை உண்டாகட்டும்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற உமது முன்னிலையில் இருக்கிறோம். நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் பரலோக ஆசீர்வாதங்களைப் பெற  தகுதியுள்ளவர்களாக ஆக்கியுள்ளீர். செய்ய வேண்டிய காரியங்களில் சோர்வடையாமல் இருக்க வழிகாட்டும். துதி, ஆராதனையுடன் அனைத்தையும் உம்முன் வைக்கிறோம். எங்கள் வேண்டுதல்களைப் பெற நீர் இங்கு வந்துள்ளீர். நீர் எப்போதும் எங்களுடன் இருக்கிறீர். எங்கள் வாழ்க்கையைப் பார்க்கின்றீர். ஒவ்வொன்றையும் உம்முன் சமர்ப்பிக்கின்றோம். உமது சித்தம் நிறைவேறட்டும். உமது நாமம் மகிமைப்படட்டும். இயேசுவின் நாமத்தில் உம்மிடம் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. கமலின் விஜி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-02-2023

ஜெபமில்லாமை.


” நானும் உங்களுக்காக
விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாயிருப்பேன். அது எனக்குத் தூரமாயிருப்பதாக. நன்மையும் செவ்வையுமான வழியை உங்களுக்குப் போதிப்பேன். “

1சாமுவேல் 12 : 23


பாவம் நம்மை ஜெபத்திலிருந்தும் , ஜெபம் நம்மை பாவத்திலிருந்தும் தடுக்கிறது. எனவே ஒருவரின் ஜெப வாழ்வின் அணுகுமுறை தம்மை கர்த்தருக்கு அர்ப்பணிப்பதன் சான்றாக கட்டமைக்கப்படுகிறது. வேதாகமத்தில் சாமுவேல் தீர்க்கத்தரிசி ஜெபம் செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டார். அவருடைய ஜெபத்தின் வல்லமையாலும் அர்ப்பணிப்பினாலும், இஸ்ரவேல் மக்களின் எதிரிகளுக்கு முன்பாக பரலோகத்திலிருந்து இடிமுழக்கத்தை அனுப்பினார்.


1 சாமுவேல் 7 : 7 – 10
” இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடி வந்ததை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது , பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள். அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு பெலிஸ்தியரின் நிமித்தம் பயப்பட்டு சாமுவேலை நோக்கி நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களை பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படிக்கு , எங்களுக்காக அவரை ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள். அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து , அதைக் கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தி இஸ்ரவேலுக்காக கர்த்தரை வேண்டிக் கொண்டான். கர்த்தர் அவனுக்கு மறு மொழி செய்தார். சாமுவேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துகையில் , பெலிஸ்தர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ண நெருங்கினார்கள். கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தரின்மேல் அந்நாளிலே முழங்கப் பண்ணி , அவர்களைக் கலங்கடித்ததினால் அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப்பட்டு விழுந்தார்கள். “
மற்றுமொரு சூழ்நிலையில் , சாமுவேல் ஜெபித்த போது பரலோகத்திவிருந்து இடிமுழக்கமும் மழையும் வந்தன.


1 சாமுவேல் 12 : 18
” சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அன்றைய தினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார். “

சாமுவேல் ஒரு ஜெபிக்கிற மனிதன். அவர் வாழ்க்கை முழுவதும் நிலையான ஜெபத்தை கைக்கொண்டதன் மூலம் ஜெபிக்காமலிருப்பது ஒரு பாவம் என்பதை நம்மை புரிந்து கொள்ள வைத்தார். சாமுவேல் இஸரவேல் புத்திரரிடம் , அவர்களுக்காக ஜெபிப்பதை நிறுத்தினால் அவர் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்வதாக இருக்கும் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் அர்ப்பணிக்கப்பட்ட மக்கள் ஜெபிக்காமலிருப்பது பாவம் என்பதாகும். சாமுவேல் தீர்க்கத்தரிசியின் வாக்கின்படி ஜெபிக்காமலிருப்பது பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், யார் யார் ஜெபத்தை புறக்கணிக்கிறார்களோ அவர்கள் பாவத்திற்கு வெகு தொலைவில் இல்லை. குறிப்பாக ஊழியத்தின் பொறுப்பிலிருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்காமலிருப்பது பாவத்தின் வெளிப்பாடாகும். நாம் ஜெபிக்க மறுக்கும் போதோ அல்லது ஜெபத்தை புறக்கணிக்கும் போதோ கர்த்தருக்கு எதிராக பாவம் செய்கிறோம். நாம் ஜெபிப்பவர்களாக இருப்பது, நம்மை இலகுவாக பாவத்திலிருந்து விடுவிக்கும். எனவே தான் நம் ஜெபம் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கும், ஜெபிக்காமலிருப்பது நமக்கு துன்பத்தை வருவிக்கும்.

ஜெபம் நம்மை பாவத்திலிருந்து காக்கிறது. ஏனென்றால் கராத்தருடைய பிரசன்னம் நம்மை பரிசுத்தப்படுத்துகிறது. நாம் ஜெபிக்கும் இடத்தில் கர்த்தரோடு வாழும்போது அவருடைய பரிசுத்தம் நம்மை சூழுந்துகொள்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே , சாமுவேலைப் போல நாம் ஜெபித்து , கர்த்தருக்கு எதிராக பாவம் செய்யாமலிருக்க ,நம் மனதை உருவாக்க வேண்டும். நமது ஜெப வாழ்வில் ஒரு நிலைத் தன்மையை பேணுவதன் மூலம் தூய்மையான வாழ்வை நாம் பராமரிக்க வேண்டும்.

கர்த்தருடைய பரிசுத்தத்தை நாம் பெறுவதற்காக அவருடன் ஜெபத்தில் கழிக்கும்விதமாக நமது எண்ணம் அவரைச்சுற்றியே இருக்க வேண்டும். ஜெபமின்மை என்ற சோதனையில் விழ வேண்டாம் என முடிவு செய்யுங்கள்.

ஜெபம்


கர்த்தாவே ஜெபமின்மை என்ற பாவத்திலிருந்து என்னை விடுவிக்கும்படி கேட்கிறேன். கடந்த காலங்களில் ஜெபம் செய்யாமல் உமக்கு எதிராக பாவம் செய்த தருணங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய ஜெப பீடத்தில் உம்முடைய அக்கினியை வைக்குமாறு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. ஃபியானா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-02-2023

” அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். “
யார் அழைக்கப்பட்டார்கள்?

-மத்தேயு 22 :14


எல்லோருமே அழைக்கப்பட்டார்களா?
அழைக்கப்பட்ட எல்லோருமே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நிரூபித்தார்களா?
தெரிந்துகொள்ளப்பட்ட எல்லாருமே கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றினார்களா?

யார் அழைக்கப்பட்டார்கள்?

மத்தேயு 22 : 9 – 10


” ஆகையால் நீங்கள் வழிச்சந்திகளிலே போய் , காணப்படுகிற யாவரையும் கல்யாணத்துக்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு வழிகளிலே போய் , தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள். கல்யாண சாலை விருந்தாளிகளால் நிறைந்தது. “

நிறைய பேர் அழைக்கப்பட்டார்கள். நல்லவர் மட்டுமல்ல பொல்லாதவரும் கூட.

யார் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்?

கட்டளைகளை பின்பற்றுபவர்களா? அல்லது தன்னுடைய வேலைகளை ஒழுங்காக செய்பவர்களா? இல்லை.
ஆட்களை தெரிந்தெடுப்பது அவர்களது சொந்த தகுதியைப் பொறுத்து அல்ல மாறாக உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்செல்லும் விருப்பத்தால் மட்டுமே .
இளைஞர்கள் கட்டளைகளை கடைபிடிப்பது மட்டுமே தெரிந்தெடுப்பதற்கு தகுதியல்ல.

” அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக்கேட்டு , இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு , உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும் , பின்பு என்னை பின்பற்றி வா என்றார். அவன் அதிக ஐஸ்வரியமுள்ளவனான படியினால் , இதைக் கேட்ட பொழுது துக்கமடைந்தான். “

லூக்கா 18 : 21


நமது உடல்ரீதியான கடமைகளை செய்வது நமது அழைத்தலுக்கு எந்த வித உத்தரவாதத்தையும் தாராது.

” அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவனை நோக்கி , ஆண்டவரே ! முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் , நீ என்னைப் பின்பற்றி வா என்றார். “

மத்தேயு 8 : 21


தொடக்கத்தில் , நல்லதோ கெட்டதோ பொருட்டல்ல. ஆனால் இயேசுவை பின்பற்ற அழைக்கப்படுவதற்கு உலககாரியங்களை நம் இருதயத்திலிருந்து நீக்க வேண்டும். இயேசு தன்னுடைய சீஷர்களை அழைக்கும்போது , அவர்ள் உண்மையில் நல்லவர்களில்லை. ஆனால் உலககாரியங்களை விட தயாராக இருந்தார்கள்.

” இயேசு அவர்களை நோக்கி, என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்கள் வேலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள். “

மாற்கு 1 : 17


உலகிலுள்ள அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவை பின் தொடர்வதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
இயேசுவை பின்பற்ற உலகக்காரியங்களை விட்டுவிடுபவர்கள் அனைவரும் தெரிந்தெடுக்கப்பட்டவர்களா? தெர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கர்த்தரின் வார்த்தைககளை நிறைவேற்றுபவர்களா?
இல்லை.


ஆபிரகாம் உலகத்தைவிட்டு வெளியே வர அழைக்கப்பட்டார். அழைக்கப்படுதல் அங்கே நிகழ்கிறது. ஆனால் ஈசாக்கை தியாகம் செய்யும் சோதனையில் அவர் தம்மை நிரூபித்ததால் தெரிந்தெடுக்கப்பட்டவரானார். இருப்பினும் சோதனை அங்கு முடிவடையவில்லை. இஸ்மவேலை வெளியே அனுப்புவதிலிருந்து கர்த்தர் தேர்ந்தெடுத்த ஈசாக்கிடம் அனைத்து உரிமைகளை ஒப்படைப்பது வரை தொடர்ந்தது. ஆபிரகாமின் கீழ்படிதலும் விசுவாசமும் ஒவ்வொரு படியிலும் சோதிக்கப்பட்டு , அவர் கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். சோதனைக்கு அடிபணியாத அனைவரும் தேர்வு செய்யப்படுவதில் தோல்வி அடைகிறார்கள். கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும் தோல்வி அடைகிறார்கள்.


” நான் அடைந்தாயிற்று , அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல் , கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடர்கிறேன். சகோதரரே , அதைப்பிடித்துக் கொண்டேன் என்று எண்ணுகிறதில்லை. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”


பிலிப்பியர் 3 : 12 – 14


அழைக்கப்பட்டவர்கள் பலர் – தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்.
சோதிக்கப்பட்டவர்கள் பலர். ஆனால் சிலர் மட்டுமே நிரூபிக்கப்படுகிறார்கள். நிறைய பேர் நிரூபிக்கப்பட்டாலும் கூட , சிலர் முன்னேறத் தவறி , கர்த்தரின் அழைப்பை நிறைவேற்றத் தவறிவிடுகிறார்கள்.

இயேசு நிறையபேரை அழைத்தார். ஆனால் 12 பேர் தெரிந்தெடுக்கப்பட்டனர். 11பேர் முன்னேறினார்கள். ஒருத்தர் மிக மோசமாக தோல்வியடைந்தார்.

நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் கர்த்தரின் சேனைக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம். அது இங்கே முடிந்துவிடவில்லை. நாம் முழுவதுமாக சோதிக்கப்படுவோம். திரும்பிப் பார்ப்பவர்கள், அல்லது ஊசலாடுபவர்கள் அல்லது முன்னேறாதவர்கள் அனைவரும் கர்த்தரின் சித்தத்தில் தோல்வி அடைகிறார்கள். நாம் அப்போஸ்தலர்களாகவும் , தீர்க்கத்தரிசிகளாகவும் , போதகர்களாகவும் , அற்புதங்கள் செய்பவர்களாகவும் , குணப்படுத்துபவர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

அழைப்புக்கான நமது தகுதியை நம்பாமல் , உலககாரியங்களை விட்டு இயேசுவை பின் தொடர்வதில் விழிப்புடன் இருப்போம். சோதனைக்காலத்தில் நம் இருதயத்தை கடினப்படுத்தாமல் இருப்போம். வாழ்நாள் வரை முன்னேறுவோம் . ஆமென்.

டாக்டர் சுஜாதா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-02-2023

பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் மற்றும் அக்கினியில் ஞானஸ்நானம்.

” யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக : நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார் , அவருடைய பாத ரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல , அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். “

லூக்கா 3 : 16


இந்த வசனம் , இயேசுகிறிஸ்துவினால் இரண்டு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதை தெளிவாகக் கூறுகிறது. நாம் இதற்கு அடுத்த வசனத்தையும் சேர்ந்து வாசிக்கும் போது அர்த்தம் தெளிவாகிறது.


லூக்கா 3 : 17 ” தூற்றுக் கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.”


இதில் கோதுமைக்கும் பதருக்குமுள்ள ஒப்புமை குறிப்பிடப்படுகிறது. கோதுமை இயேசுவை விசுவசித்து பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுபவர்களையும் பதரானது கிறிஸ்துவை விசுவசிக்காதவர்களையும் சித்தரிக்கிறது. தானியத்தை புடைத்து கோதுமையையும் பதரையும் பிரித்து பதரை எரிப்பார். யாரெல்லாம் கிறிஸ்துவை விசுவசிக்கவில்லையோ அவர்களுக்கான தீர்ப்பு இது. இயேசுவின் நாள், பிதாவின் நாள் ஆகிய இரண்டு யுகங்களைப்பற்றி இது பேசுகிறது. இயேசு தேவாலயத்தில் கர்த்தரின் அநுக்கிரக வருஷத்தினை அறிவிக்கவே வந்தேன் என்று பிரசங்கித்தார். பழிவாங்கும் நாளைக் குறித்து வாசிப்பதற்கு முன் அதை நிறுத்தினார்.
அநுக்கிரக வருஷம் என்பது இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பின் மேலுள்ள விசுவாசத்தினால் மக்களை மீட்பதற்குரிய திட்டத்தை பற்றியதாகும். விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படும் வாழ்க்கையை நடத்துவார்கள். அவரை தேவனாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் இறுதிக் காலத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு எரியும் நெருப்பில் போடப்படுவார்கள்.


எசாயா 61 : 2 ல்
” கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும் நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும் , துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும் ,” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆவியில் ஞானஸ்நானம் அக்கினியில் ஞானஸ்நானம் இரண்டும் வெவ்வேறு காலக்கட்டங்களில் உள்ளன. இந்த இரண்டு ஞானஸ்நானங்களும் விசுவாசிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அக்கினியில் ஞானஸ்நானம் பெறுவதற்காக ஜெபிக்கிறார்கள். பெந்த கோஸ்தே நாளில் இயேசு வாக்குத்தத்தம் பண்ணியபடி , தங்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வரும்போது அக்கினி அபிஷேகம் பொழிவதாக விசுவாசிக்கிறார்கள்.


அப்போஸ்தவர் 2 : 3 – 4
” அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிளந்திருக்கும் நாவுகள் அவர்களுக்கு காணப்பட்டு , அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. ” இங்கே அவர்கள் நாவுகள் அக்கினிமயமாக இருந்ததைக் கண்டார்கள். இது நெருப்பு அல்ல, ஆனால் நெருப்பைப் போல இருந்தது. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல இறங்கினார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் புறா அல்ல. அவர் புறாவோ, அக்கினியோ அல்ல. கிறிஸ்துவை இரட்சகராக யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ அல்லது மறுக்கிறார்களோ அவர்கள் மீது வரும் தீர்ப்பே அக்கினியில் ஞானஸ்நானமாகும்.
மத்தேயு 13 : 40 – 42
” ஆதலால் , களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறது போல , இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து , அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். “

ஓசியா 8 : 14 ” இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான் ; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப் பண்ணுகிறான். ஆனாலும் நான் அதன் நகரங்களிலே அக்கினியை வரப்பண்ணுவேன் ; அது அவைகளின் கோயில்களைப் பட்சிக்கும்.”

இன்னும் நிறைய வசனங்கள் அக்கினி என்பது தீர்ப்பு என்று நிரூபிக்கின்றன.

யோவான் 15 : 6
” ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால் , வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு தொலைந்து போவான் , அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள் , அவைகள் எரிந்து போம் “

மல்கியா 4 : 1 ” இதோ சூளைகளைப் போல எரிகிற நாள் வரும். அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள். வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும். அது அவர்களுக்கு வேரையும் கொப்பரையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். “
விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு நாம் மிகவும் பாக்கியவான்கள். இந்த கிருபையுகத்தின் கடைசி காலத்தின் முடிவில் நாம் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம். ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது நம்பிக்கையான ஆசீர்வாதமாகும். கிறிஸ்து இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் பெற்றபோது நாம் ஆவியில் ஞானஸ்நானம் பெறுகிறோம். மேலும் தொடர்ந்து ஆவியால் நிரப்பப்படுவது ஒரு தொடர்ச்சியான செயலாகும். அக்கினியில் ஞானஸ்நானம் என்பது ஒரு தீர்ப்பு. இது ஆலயமாக இருக்கிற நமக்கானதல்ல.


ரோமர் 8 :1 ” ஆனபடியால் , கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருந்து , மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடகாகிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பல்ல.”
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஆமென்.

Sol. சலோமி குரியன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-02-2023

கர்த்தரின் இயல்பு

2 கொரிந்தியர் 3 : 18,

“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”


” எழும்பி ஒளிவீசு “. இது நிறைவேற வேண்டும் என்பதற்காக , கர்த்தர் நமக்கு தந்த அதிகாரத்தின்படி இதைக் கேட்கிறோம். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய குமாரனாகிய இயேசுவைப் போலவே ஆக வேண்டும் என்பதே கர்த்தரின் மிகப்பெரிய திட்டம். விசுவாசிகளின் வாழ்க்கையில் எது நடக்கிறதோ அது அவர்களின் நன்மைக்காகவே நடக்கும்.


ரோமர் 8 : 28 – 29 “அன்றியும் , அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவராயிருக்கும் பொருட்டு , தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.

“வலி, வேதனை, துன்பம் போன்ற இந்த அனுபவங்கள் மூலம் மட்டுமே நம் தேவன் தம்முடைய நன்மையானவற்றை நம் வாழ்வில் காட்டுகிறார். நாம் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு அவருடைய முழு அளவிற்கு வளருகிறோம்.


எபேசியர் 4 : 11 – 13
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனை பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி , கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண பூருஷராகும் வரைக்கும் பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு , சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் , கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும் அவர் சிலரை அப்போஸ்தலராகவும் , சிலரைத் தீர்க்கத்தரிசிகளாகவும் , சிலரைச் சுவிசேஷர்களாகவும் , சிலரை மேய்ப்பவராகவும் , போதகராகவும் ஏற்படுத்தினார்.

கிறிஸ்துவின் சாயலில் வளர்வதற்கு , ஆவிக்குரிய பரிபூரணத்தில் வளர்வதற்கு , கிறிஸ்துவின் முழுமையில் வளர்வதற்கு , உதவுவது பரிசுத்த ஆவியானவரின் வேலை. இந்த வேலையை அவர் தினமும் செய்கிறார். இயேசுவின் சாயல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மில் உருவாகும் . நாம் ஏற்கெனவே பாறையிலிருந்து வெட்டப்பட்டிருக்கிறோம். வடிவமைக்கும் பணி தொடங்கிவிட்டது.
எசாயா 5 : 1 ” இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன் , என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத் தோட்டம் உண்டு. “
நம்மை சீர்படுத்தும் பணி தொடங்கிவிட்டது. இது நிறைய நேரங்களில் மெதுவாகவும் வலிநிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால் கர்த்தர் ஒரு சிறந்த கைவினைஞர். அவர் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார். நமது வேலை அவரது வல்லமையான திருக்கரங்களில் நம்மை ஒப்படைப்பதாகும். நாம் ஒரு போதும் பொறுமையை இழக்கக்கூடாது. நம்முடைய தொடக்கம் மெதுவாக இருந்தாலும் , கடினமாக இருந்தாலும் முடிவு மகிமையானதாக இருக்கும். உங்களில் நல்ல வேலையை தொடங்கிய கர்த்தர் , அதை இயேசு கிறிஸ்துவின் நாளிலே முழுமையாக நிறைவேற்றுவார்.


பிலிப்பியர் 1 : 6 “நான் உங்களை நினைக்கும் போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் .

ஜெபம்
பரலோகத்திலிருக்கின்ற எங்கள் தந்தையே , என்னை ஒரு நிலையிலிருந்து இன்னொரு மகிமையான கிறிஸ்துவின் சாயலுக்கு என்னை மாற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். உம்முடைய நாமம் மகிமைப்படட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்

Sol. மல்கீத்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-02-2023

கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.

பிலிப்பியர் 4 : 6 – 7

” நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் , எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக் கொள்ளும். “

கவலை என்றால் என்ன?

அகராதியின்படி கவலை என்ற வார்த்தையின் பொருள் பயத்தையோ அல்லது கவலையையோ உணர்வது .குறிப்பாக எதிர்காலத்தைப் பற்றிய உணர்வு.

மருத்துவ அறிவியலின்படி கவலை நம்முடை மன ஆரோக்கியத்தை ஒழுங்கற்றதாகச் செய்கிறது. நம்முடைய நாளை கடினமாக்குகிறது. பதட்டம் ,பீதியுணர்வு , பயம் போன்ற உணர்வுகள் , வியர்த்தல் , விரைவான இதயத்துடிப்பு போன்றவை பயத்தின் அறிகுறிகளாகும். இதற்கு தியானம் மற்று அறிவுசார்ந்த ஆலோசனை  முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

கவலையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? இதைப் பற்றி நிறைய சொல்கிறது. அடிக்கடி இந்த வார்த்தை பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆங்கில வேதாகமத்தில் இந்த வார்த்தை 8  முறை பயன்படுத்தப்படுகிறது.

யாக்கோபு புத்தகத்தில் பயம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக பிரச்சனை, கடினம், துன்பம் , கவனம் போன்ற வார்த்தைகள் மட்டுமே அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டன. கவலைக்கான குறிப்பிட்ட காரணங்கள் கணக்கிடப்படுவதைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால் வேதாகமத்திலிருந்து சில பொதுவான காரணங்களை மட்டும் பார்க்கலாம்.

ஆதியாகமம் 32  ம் அதிகாரத்தில் யாக்கோபின் கவலை  உடைக்கப்பட்ட உறவு , மற்றும் குற்ற உணர்வினால்  ஏற்படுகிறது.

1 சாமுவேல் 1 ம் அதிகாரத்தில் அன்னா தன்னுடைய நிறைவேறாத ஆசைகளினாலும் தன்னுடைய சக்களத்தியின் துன்புறுத்தலினாலும்  கவலை கொள்கிறாள்.

எஸ்தர்4 ம் அதிகாரத்தில்  எஸ்தர் ராணி தன்னுடைய மக்களுக்காக தன் உயிரை பணயம் வைக்க திட்டமிட்டதால் கவலை கொள்கிறாள்.

மரணபயம்  என்பது நாம் தெரிந்துகொள்ளாத பயத்திற்குரிய சாவியாகும்.

எல்லா கவலைகளும் பாவம் அல்ல.   1கொரிந்தியர் 7 : 32 ல் பவுல் ” நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படி பிரியமாயிருக்கலாமென்று , கர்த்தருக்கு உரியவைகளுக்காக கவலைப்படுகிறான். ” திருமணமாகாத ஒருத்தன் கர்த்தரை பிரியப்படுத்துவதில்

” கவலைப்படுகிறான் ” , அதே சமயம் ஒரு திருமணமான மனிதன் தன் மனைவியை பிரியப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறான்.

இந்த விஷயத்தில் கவலை ஒரு பாவமான விஷயம் அல்ல.

பெரும்பாலான நேரங்களில் , நாம் அனைவரும் நம் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் கவலையுடன் போராடுகிறோம். ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நாம் தனியாக இல்லை. ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும்  மிக சிறந்த ஒரு ஆலோசகரான பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

நாம் கவலையாக உணரும்போது அல்லது சில விஷயங்கள் நம்மை பிரச்சனைக்கு உள்ளாக்கும்போது , நம் இருதயங்களில் நிறைய கவலைகள் இருக்கும் போது மிகச் சிறந்த வழி பரிசுத்த ஆவியானவரை நோக்கி , நமது கவலைகள் தீரும் வரை ஜெபிப்பதாகும். அந்த நேரத்தில் கர்த்தருடைய பிரசன்னம் நமக்கு அமைதியை தரும். நம்முடைய வேண்டுதல்கள் கர்த்தருக்கு தெரிய வரும்.  கர்த்தரிடம் பேசுங்கள். என்ன தவறாக நடக்கிறது , எது நம்மை இந்த கவலையை  உணர வைக்கிறது , நம் ஆழ் மனதில் என்ன நினைக்கிறோம் என்று கர்த்தரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என்றால் தேவனை ஆராதிப்பதை தொடங்குங்கள் . கர்த்தருடைய பிரசன்னத்தை பெறுவீர்கள். அவருடைய ஆடையின் விழிம்பை தொடும் இடத்திற்குச் செல்லுங்கள். கவலையின் போர்வை விலகிவிடும். கர்த்தர் கவலையை நீக்கி அதற்கு பதிலாக அமைதியைத் தருவார்.

கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் உங்களுக்குத் தந்த ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றையும் சொல்லி அவைகளுக்காக நன்றி சொல்லுங்கள்.  அவை உங்களை உயர்த்தும்.

ஆமென்.

Sol. நீலிமா சிங்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-02-2023

சங்கீதம் 139 : 1 – 4


” கர்த்தாவே , நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர், என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர் , என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ கர்த்தாவே , அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு , பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது , என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது , என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே, அவைகள் அனைத்தும் அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. “


ஒவ்வொரு முறையும் நான் இந்த சங்கீதத்தை படித்து தியானிக்கும்போது , கர்த்தரின் இறையாண்மை என்னை மூழ்கடிக்கிறது , என்னால் ஒருபோதும் கண்ணீரின்றி படிக்க முடியவில்லை. நாம் எவ்வளவு நன்றியற்றவர்களாய் இருக்கிறோம் என்பதும் நம்முடைய சுவாசம் இலவசமாக தரப்பட்டாலும் அதை உணராதவர்களாக இருக்கிறோம் என்பதும் என் இதயத்தை உடைப்பதாக இருக்கிறது.
நான் இதை எழுதும் போது , பெங்களூரில் இருக்கும் எங்களது இரண்டு பேரக்குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் கணவர் ஓய்வு பெற்றதிலிருந்து குழந்தைகளுடன் தங்கியிருந்தார். பெங்களூர் விமான நிலையத்தில் சிறிது நேரம் அவர்களை விட்டுச் சென்று விட்டார். அவர் சென்றதை அவர்கள் பார்த்தனர். பிறகு முதலில் குட்டி ஜோனதான் அவன் தாத்தாவை பார்த்த கணம் வாய் திறந்து புதையல் கிடைத்ததைப் போல மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தன் இரு கைகளை நீட்டினான். திடீரென்று அவர் அவ்விடத்தை விட்டு அகல முயற்சி செய்த சில நிமிடங்கள் , அவனுடைய சந்தோஷம் ஏமாற்றமாக மாறி வெளியே பார்த்தான். அதே கதைதான் சிறிய பேரனாகிய லூக்காவுடையதும். நிறைய முறை நாங்கள் திரும்ப அழைக்க முயற்சி செய்த போதும் அவர்கள் இருவரும் தங்கள் தாத்தா விட்டுப் போனதால் தங்களுடைய கோபத்தை தங்களுடைய வழிகளில் வெளிப்படுத்தினார்கள். அதாவது பெரிய இழப்பைப் போல உணர்வு.
இந்த சம்பவம் என் நினைவில் பதிந்து ஆழமான வலியை ஏற்படுத்தியது.
லூக்கா 18 : 15 – 17 ” பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு கொண்டு வந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு : சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள் அவைகளைத் தடை பண்ணாதிருங்கள், தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாவது சிறு பிள்ளையைப் போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , அதில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார் “.

இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்க தன்னிடம் கொண்டு வரும்படி கூறுகிறார். ஏனென்றால் கர்த்தருடைய ராஜ்யம் இத்தகைய கள்ளமற்ற இருதயங்களைச் சார்ந்திருக்கிறது. நம்முடைய நினைவாற்றல் மிகக் குறைவாக இருப்பதால் , நம் வாழ்வில் இறைவனுடைய அபரிமிதமான கிருபைகளை வசதியாக மறந்துவிடுகிறோம். நம் வாழ்க்கைப் பயணத்தில்
நம்மீது பொழிந்த எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்ல நமக்கு நேரமில்லை. நம்முடைய மீறுதல்களினால் நாம் எவ்வளவு தூரம் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தியிருக்கிறோம்.
எபேசியர் 4 : 30
” அன்றியும் , நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப் படுத்தாதிருங்கள்.”
ரோமர் 8 : 26 “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாமலிருக்கிறபடியால் , ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். “

அன்பின் பரலோகத் தகப்பனே , தாழ்மையான மற்றும் நன்றியுள்ள இருதயத்துடன் உம்முடைய கிருபையின் சிங்காசனத்தின் முன்பு உமக்கு பிரமாணிக்கமுள்ள இருதயத்தை தரும்படியாக உம்முடைய சிறப்பான கரிசனத்தை வேண்டி நிற்கிறோம் . வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எங்களுக்கு குழப்பத்தை விளைவிக்கக்கூடிய ஆவிகளை உமது சித்தத்திற்கு அடிபணிய வையும் ஆண்டவரே ஒரு வயது குழந்தை மூலம் எங்களுடன் பேசியதற்கு நன்றி. எங்கள் இதயத்தை நிதானித்து சிந்திக்க வைத்ததற்கு நன்றி. உமது வார்த்தையின் மூலமாக ஆவிக்குரிய உணவை உட்கொள்ள நினைவுபடுத்த உதவியருளும்.
( மத்தேயு 4 : 4 ” மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல , தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ” ) உம்முடைய ஒவ்வொரு உணவிலும் அடுத்த தலைமுறையினர் இயேசுவின் பெயரில் மெதுவாக ஆனால் சீராக பாறையில் தங்கள் வீட்டை கட்ட ஜெபிக்கிறோம்.


ஆமென் அல்லேலூயா.

Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-02-2023

” நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு , அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். “

1 பேதுரு 2 : 24

நாம் நீதிமான்களாகவும் , நீதியின்படி வாழ்வதற்காகவும் கிறிஸ்து நம்முடைய பாவங்களை சிலுவையிலே சுமந்தார். நம்முடைய பாவச் செயலுக்கான தண்டனைகளை செலுத்துவதற்காக அவர் மரித்தார். அவர் நமக்கு பதிலாளாக மாறி நமக்காக மரணத்தை ஏற்றுக்கொண்டதால் நாம் தகுதியாக்கப்பட்டோம்.


1 பேதுரு 2 : 23 ” அவர் வையப்படும்போது வையாமலும் , பாடுபடும்போது பயமுறுத்தாமலும் , நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். “ கிறிஸ்து நம்முடைய பாவத்திற்காக நியாயம் தீர்க்கப்பட்ட அந்த நேரத்தில் , கர்த்தர் தம்முடைய கோபத்தை தன்னுடைய குமாரன் மேல் காட்டி நம்முடைய பாவத்திற்காக செலுத்தப்பட்ட விலையில் திருப்தியடைந்தார். இயேசு துன்பங்களை சகித்துக் கொண்டதால் நம்முடைய பாவத்திற்கு நம்மால் மரிக்க முடிந்தது. இந்த செயல்மூலம் கர்த்தருடைய கிருபையினால் கறிஸ்துமேல் வைத்த விசுவாசத்தின் வழியாக நாம் சுதந்திரவாளியானோம். விசுவாசிகள் நமது சொந்த பாவத்திற்கு கொடுக்கப்படும் விலையிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இயேசுவினுடைய பாடுகளுக்கு நன்றி. கிறிஸ்தவர்கள் நீதியுள்ளவர்களாக வாழ முடியும்.


கிறிஸ்துவினுடைய தியாகம் அனைத்து பாவிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஏனென்றால் அவர் கர்த்தரின் குமாரனாக இருந்தார். தெய்வீகத்தில் கர்த்தருக்கு சமமானவராக இருந்தார்.மேலும் இயேசு தனது விலைமதிப்பில்லாத மரணத்தால் நமக்கு மாற்றாக அறியப்படுகிறார். ஏனென்றால் அது மனிதனாக அவதாரம் எடுத்த கர்த்தரின் சொந்த தெய்வீக குமாரனுடைய மரணம். ஆனால் அவருடைய தியாகம் நமக்கு பயனுள்ளதாக இருக்க , நாம் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து நம் பாவங்களுக்காக மனம் திரும்பி , அவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.


ஆகவே கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் ஒரு ஆட்டுக்குட்டியாக நம்மை மீட்டார். பேதுரு கூறுகிறார், 1 பேதுரு 18 :19உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் அ
பொன்னினாலும் மீட்கப்படாமல் குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே .”

எபிரேயர் 9 : 11 – 12
” கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு , கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும் , வெள்ளாட்டுக்கடா , இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நித்ய மீட்பை உண்டு பண்ணினார். “


எனவே இயேசு தன்னைத்தானை தியாகம் செய்து நம்முடைய பாவங்களை எடுத்துப் போட்டார். எபிரேயர் 9 : 26 ” அப்படியிருந்ததானால் உலகுமுண்டானது முதற் கொண்டு அவர் அநேகதரம் பாடுபட வேண்டியதாருக்குமே. அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசி காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.”


வெளிப்படுத்தின விசேஷம் 5 : 9 ” தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு “என்று சொல்கிறது.


கிறிஸ்து நம்முடைய மீட்பர். அவர் ஒரு வெற்றியாளராகவோ, அல்லது ஒரு தத்துவஞானியாகவோ அல்லது ஒழுக்கத்தை கற்பிப்பவராகவோ பூமிக்கு வரவில்லை. அவர் பாவிகளை காப்பாற்றுவதற்காகவே வந்தார். மனிதன் தனக்காக ஒருபோதும் செய்ய முடியாத எதையும் செய்யவே அவர் வந்தார் . பணமும் , நாம் கற்றவையும் ஒருபோதும் செய்ய முடியாததைச் செய்ய – மனிதனின் உண்மையான மகிழ்ச்சிக்கு இன்றியமையாததாகிய பாவங்களை எடுத்துப் போடவே அவர் வந்தார்.


கிறிஸ்து ஒரு நிரந்தரமான , சோர்வே அடையாத இரட்சகர். அவர் நம் பாவங்களை எடுத்துப் போடுகிறார். தம்மை விசுவசிக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் தினமும் அதை எடுத்துச் செல்கிறார். அவருடைய மக்களுடைய ஆத்துமாக்களை தினமும் சுத்திகரிக்கிறார், தினமும் சுத்தப்படுத்துகிறார். தினம்தோறும் அவருடைய மக்களுக்கு புதிய கிருபையை வழங்குகிறார்.

Sol. பவுலோஸ்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 30-01-2023

கிறிஸ்தவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி


சங்கீதம் 7 : 11 ” தேவன் நீதியுள்ள நியாதிபதி, அவர் நாள்தோறும் பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவன். “


கேரார் தேசத்தில் ஈசாக் தொடர்ந்து செழித்து , மிகவும் பணக்காரர் ஆனார். அதனால் பெலிஸ்தியர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர்கள் ஆபிரகாம் உயிரோடிருந்தபோது அவர் தோண்டிய எல்லா வேலைக்காரர்களின் கிணறுகளையும் மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள்.
அபிமலேக்கு ஈசாக்கிடம் நீங்கள் எல்லோரும் எங்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள். எங்களைவிட மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகி விட்டீர்கள் என்று சொன்னான். ( கர்த்தருடைய பிள்ளைகளை அவர் ஆசீர்வதிக்கும் போது இயற்கையாகவே நடக்கும் நிகழ்வு இது ). எனவே ஈசாக்கு கேரார் பள்ளத்தாக்கில் தன் கூடாரத்தை அமைத்து , தன் தகப்பனாகிய ஆபிரகாம் நாட்களில் வெட்டியவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தியர் தூர்த்துப் போட்ட கிணறுகளை மறுபடியும் தோண்டினான்.
ஈசாக் , ஆபிரகாம் அவைகளுக்கு இட்ட பெயர்களையே அவைகளுக்கு இட்டான். ஈசாக் அவருடைய தந்தைக்கு மரியாதை தந்து அதன்மூலம் கர்த்தருக்கும் மரியாதை செலுத்தினான். இன்று நிறைய பிள்ளைகள் தங்களுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது தன்னுடைய பெற்றோர்களை கலந்து ஆலோசிப்பதில்லை.
ஈசாக் தன்னுடைய ஆட்டு மந்தைகளுடன் கேராரில் வசித்து வந்தார். அவனுடைய பணியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு கிணறுகளைத் தோண்டி அங்கு தண்ணீரைக் கண்டார்கள். கேராருவிலுள்ள பெலிஸ்தியரின் மேய்ப்பர்கள் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி ஈசாக்குடைய மேய்ப்பர்களுடன் சண்டையிட்டார்கள். ஈசாக் அந்த இரண்டு கிணறுகளுக்கும்
” சண்டை , பகை ” என்று பெயரிட்டார். அவர் மேலும் ஒரு கிணறைத் தோண்டினார். அதில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லை. ஆதனால் அதற்கு “சுதந்திரம்” என்று பெயரிட்டார்.


ஏன் ஈசாக் தன்னுடைய மேய்ப்பர்களுக்கு இரண்டு கிணறுகளையும் கொடுக்க கர்த்தர் அனுமதித்தார் ? கர்த்தர் பெலிஸ்தியர்களின் தேசத்தில் பஞ்சம் வந்தபோது ஈசாக்கை உயர்த்தினார். இப்போது கேராரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ,ஏழைகளுக்கும் , ஆதரவற்றோருக்கும் , உதவியற்றவர்களுக்கும் உதவுவது அவரது முறையாயிற்று. கர்த்தர் ஒரு நீதியுள்ள நியாதிபதி. கடைசி கிணறு சில காலங்களுக்கு மட்டுமே அவருக்கு பயன்பட்டது. பின்பு அவர் வேறோரு இடத்திற்கு இடம் பெயர்ந்தார். நாம் எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

சாட்சி


டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மருத்துவ போதகர் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள கருப்பின மக்களுக்கு சேவை செய்யவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கவும் சென்றார்.
ஆபிரகாம் லிங்கன் என்ற கர்த்தருக்கு பயந்த ஜனாதிபதி , தன்னுடைய பணி கடினமான இருந்தபோதிலும் அமெரிக்காவிலுள்ள அடிமைத்தனத்தை ஒழித்தார்.

ஜெபம்


கர்த்தாவே , இந்த பூமியிலுள்ள இருளை அகற்ற எங்ககளுக்கு உதவும். வெளிச்சத்தை கொடுக்கும் விளக்காக எங்களை பயனுபடுத்தும். ஆமென்.

Sol. விக்டி மிதுலா