நாள்: 09-02-2023
அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தரைத் துதியுங்கள்.
நாம் இப்போது வேதாகமத்திலிருந்து சோர்ந்து போகாமல் ஜெபிக்கக் கூடிய ஜெபத்தின் வல்லமை பற்றி அறியவிருக்கிறோம்.
நாம் இப்போது பரபரப்பான சூழ்நிலையில் எல்லாவற்றையும் ஒரு நொடியில் செய்துமுடிக்க வேண்டும் என்ற உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் இந்தத் தலைமுறையின் மனநிலை. நாம் விரும்புகின்ற விஷயங்களுக்காக காத்திருப்பது மிகப் பெரிய கேள்வி.
வேதாகமத்தின்படி நாம் எல்லாவற்றிலும் கர்த்தரின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.
லூக்கா 18 : 1 – 8, ரோமர் 2 : 7 , கலாத்தியர் 6 : 9 ஆகிய வேதாகம வசனங்கள் சோர்ந்து போகாமல் ஜெபிப்பதைப் பற்றி சொல்கிறது. நாம் சோர்ந்து போகாமல் ஜெபிப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
1 . ஜெபம் .
லூக்கா 18 ம் அதிகாரத்தில் ஒரு விதவை, நியாயமற்ற ஒரு நீதிபதியிடமிருந்து தனக்கும் எதிராளிக்குமுள்ள பிரச்சனைகளின் பொருட்டு தீர்ப்பை பெறுகிறாள். அந்த நியாயமற்ற நீதிபதி கர்த்தரையும் மனிதனையும் மதிக்காத வகையில் வாழ்ந்து வருகிறார். இந்த விதவை தொடர்ந்து தன் மனுவுடன் நீதிபதியின் முன் வருகிறார். ஆரம்பத்தில் அவர் அதை பார்க்க முடியாத நிலையில் இருந்தார். பிறகு அவள் தொடந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததால் அவளுடைய மனுவுக்கு ஆதரவாக இருக்க விரும்பினார். கடைசியில் அந்த நீதிபதி அவள் மனுவுக்கு நியாயம் செய்தார். அவள் சோர்ந்து போகாமல் இருந்ததால் உலக ரீதியிலான ஒரு நீதிபதி அந்த விதவைக்கு நியாயம் செய்தார். நாம் வல்லமையான கர்த்தரை சேவிக்கிறோம். அவர் ஒருநாளும் உண்மையின் வடிவத்தை மாற்றியதில்லை.எனவே அவர் முன்னால் இருக்கிற நம்முடைய மனுவைக் கேட்பார். என்ன ஒரு அற்புதமான வல்லமை வாய்ந்த கர்த்தரை நாம் சேவிக்கிறோம்.
2 . நற் கிரியைகள்.
ரோமர் 2 : 7 ” சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையையும் கனத்தையும் மறுமைக்குரிய நித்திய ஜீவனையும் அளிப்பார் . “
நாம் ஏன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்?
எபேசியர் 2 : 10 சொல்கிறது ” ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். “
நாம் கர்த்தருக்கு முன்பாக நன்மையானதாக இருக்கும் பொருட்டு நாம் செய்கின்ற எல்லா வேலைகளும் பலனளிப்பதாக இருக்க வேண்டும்.
தீத்து 3 : 14 சொல்கிறது,
” நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்கிறதுக்கு ஏதுவாக நற்கிரியைகளை செய்து பழகட்டும். ” நாம் கண்டிப்பாக தேவையான பயன்பாட்டிற்காக நல்ல செயல்களை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
யோவான் 26 : 1 – 13 வரையுள்ள வசனங்களில் இயேசுவின் தலையில் விலையுயர்ந்த தைலத்தை ஊற்றிய ஒரு பெண்ணைப் பற்றி பேசப்படுகிறது. அந்த வீட்டில் கூடியிருப்பவர்களிடையே அந்தப் பெண்ணின் செயலைப் பற்றி பலவித குழப்பங்கள். இயேசு அவர்களுடைய நோக்கத்தை அறிந்து அவள் எனக்கு ஒரு நல்ல பணியை செய்தாள் என்று கூறினார். எனவே இயேசு நம் இறுதி மூச்சுவரை நற்செயல்களை செய்ய ஊக்கப்படுத்துகிறார்.
3 . நன்மை செய்வது.
கலாத்தியர் 6 : 9 கூறுகிறது , ” நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாமலிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். “
நாம் நன்மை செய்வதில் சோர்ந்து போகக்கூடாது. ஏனென்றால் அதைச் செய்கின்ற நாம் கர்த்தரால் படைக்கப்பட்டவர்கள், இயேசு மற்றும் பரிசுத்த ஆவியினால் வடிவமைக்கப்பட்டவர்கள். இயேசுவும் அதைச் செய்தார். அதைச் செய்வதற்குரிய மனதையும் நமக்கு கொடுத்தார். நம் எதிரிகளுக்கும் நாம் நல்லது செய்ய வேண்டும். அது நம் பிதாவாகிய தந்தையின் முன் ஏற்கத் தக்கது. அப்படியே இயேசுகிறிஸ்துவின் அன்பை காட்டி நம் எதிரிகளையும் நம்மை விரும்பாதவர்களையும் பாதுகாக்க முடியும்.
எங்களுடைய காருக்கு ஆர். சி புத்தகத்திற்காக 3 மாதமாக நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் தேடி அலுத்துவிட்டோம். நாங்கள் நிறைய முறை தேடிப்பார்த்து பின் ஆர். சி புத்தக நகலுக்கு விண்ணப்பிக்க நினைத்தோம். இது நடந்த பிறகு ஒரு நாள் கர்த்தரிடம் கடைசிமுறையாக ஜெபித்தேன், புத்தகம் கிடைக்காவிட்டால் உறுதியாக நகலுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும் என்று நினைத்து திரும்பவும் அந்த புத்தகத்தை நாங்கள் தேடிய பழைய இடங்களிலே தேடினோம். என்ன ஆச்சரியம்! அதே இடத்தில் அசலான ஆர்.சி புத்தகம் கிடைத்தது. எனக்கு கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. சந்தோஷத்துடன் சத்தமிட்டு என் குடும்பத்திலுள்ளவர்களிடம் கூறினேன். பிறகு இயேசுவிடம் நீர் எனக்காக தேடினீர் , எனக்கு செய்ய வேண்டிய காரியங்களுக்காக நீர் முனைப்புடன் இருந்தீர். எனக்காக செய்ய நீர் இங்கே இருக்கிறீர், எனவே இனிமேல் என் வாழ்வில் எதைச் செய்யவும் சோர்வடைய மாட்டேன். சர்வ வல்லவருக்கே மகிமை உண்டாகட்டும்.
ஜெபம்
பரலோகத் தந்தையே, உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற உமது முன்னிலையில் இருக்கிறோம். நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் பரலோக ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவர்களாக ஆக்கியுள்ளீர். செய்ய வேண்டிய காரியங்களில் சோர்வடையாமல் இருக்க வழிகாட்டும். துதி, ஆராதனையுடன் அனைத்தையும் உம்முன் வைக்கிறோம். எங்கள் வேண்டுதல்களைப் பெற நீர் இங்கு வந்துள்ளீர். நீர் எப்போதும் எங்களுடன் இருக்கிறீர். எங்கள் வாழ்க்கையைப் பார்க்கின்றீர். ஒவ்வொன்றையும் உம்முன் சமர்ப்பிக்கின்றோம். உமது சித்தம் நிறைவேறட்டும். உமது நாமம் மகிமைப்படட்டும். இயேசுவின் நாமத்தில் உம்மிடம் ஜெபிக்கிறேன். ஆமென்.
Sol. கமலின் விஜி
