தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-02-2023

” அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். “
யார் அழைக்கப்பட்டார்கள்?

-மத்தேயு 22 :14


எல்லோருமே அழைக்கப்பட்டார்களா?
அழைக்கப்பட்ட எல்லோருமே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நிரூபித்தார்களா?
தெரிந்துகொள்ளப்பட்ட எல்லாருமே கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றினார்களா?

யார் அழைக்கப்பட்டார்கள்?

மத்தேயு 22 : 9 – 10


” ஆகையால் நீங்கள் வழிச்சந்திகளிலே போய் , காணப்படுகிற யாவரையும் கல்யாணத்துக்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு வழிகளிலே போய் , தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள். கல்யாண சாலை விருந்தாளிகளால் நிறைந்தது. “

நிறைய பேர் அழைக்கப்பட்டார்கள். நல்லவர் மட்டுமல்ல பொல்லாதவரும் கூட.

யார் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்?

கட்டளைகளை பின்பற்றுபவர்களா? அல்லது தன்னுடைய வேலைகளை ஒழுங்காக செய்பவர்களா? இல்லை.
ஆட்களை தெரிந்தெடுப்பது அவர்களது சொந்த தகுதியைப் பொறுத்து அல்ல மாறாக உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்செல்லும் விருப்பத்தால் மட்டுமே .
இளைஞர்கள் கட்டளைகளை கடைபிடிப்பது மட்டுமே தெரிந்தெடுப்பதற்கு தகுதியல்ல.

” அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக்கேட்டு , இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு , உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும் , பின்பு என்னை பின்பற்றி வா என்றார். அவன் அதிக ஐஸ்வரியமுள்ளவனான படியினால் , இதைக் கேட்ட பொழுது துக்கமடைந்தான். “

லூக்கா 18 : 21


நமது உடல்ரீதியான கடமைகளை செய்வது நமது அழைத்தலுக்கு எந்த வித உத்தரவாதத்தையும் தாராது.

” அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவனை நோக்கி , ஆண்டவரே ! முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் , நீ என்னைப் பின்பற்றி வா என்றார். “

மத்தேயு 8 : 21


தொடக்கத்தில் , நல்லதோ கெட்டதோ பொருட்டல்ல. ஆனால் இயேசுவை பின்பற்ற அழைக்கப்படுவதற்கு உலககாரியங்களை நம் இருதயத்திலிருந்து நீக்க வேண்டும். இயேசு தன்னுடைய சீஷர்களை அழைக்கும்போது , அவர்ள் உண்மையில் நல்லவர்களில்லை. ஆனால் உலககாரியங்களை விட தயாராக இருந்தார்கள்.

” இயேசு அவர்களை நோக்கி, என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்கள் வேலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள். “

மாற்கு 1 : 17


உலகிலுள்ள அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவை பின் தொடர்வதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
இயேசுவை பின்பற்ற உலகக்காரியங்களை விட்டுவிடுபவர்கள் அனைவரும் தெரிந்தெடுக்கப்பட்டவர்களா? தெர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கர்த்தரின் வார்த்தைககளை நிறைவேற்றுபவர்களா?
இல்லை.


ஆபிரகாம் உலகத்தைவிட்டு வெளியே வர அழைக்கப்பட்டார். அழைக்கப்படுதல் அங்கே நிகழ்கிறது. ஆனால் ஈசாக்கை தியாகம் செய்யும் சோதனையில் அவர் தம்மை நிரூபித்ததால் தெரிந்தெடுக்கப்பட்டவரானார். இருப்பினும் சோதனை அங்கு முடிவடையவில்லை. இஸ்மவேலை வெளியே அனுப்புவதிலிருந்து கர்த்தர் தேர்ந்தெடுத்த ஈசாக்கிடம் அனைத்து உரிமைகளை ஒப்படைப்பது வரை தொடர்ந்தது. ஆபிரகாமின் கீழ்படிதலும் விசுவாசமும் ஒவ்வொரு படியிலும் சோதிக்கப்பட்டு , அவர் கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். சோதனைக்கு அடிபணியாத அனைவரும் தேர்வு செய்யப்படுவதில் தோல்வி அடைகிறார்கள். கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும் தோல்வி அடைகிறார்கள்.


” நான் அடைந்தாயிற்று , அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல் , கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடர்கிறேன். சகோதரரே , அதைப்பிடித்துக் கொண்டேன் என்று எண்ணுகிறதில்லை. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”


பிலிப்பியர் 3 : 12 – 14


அழைக்கப்பட்டவர்கள் பலர் – தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்.
சோதிக்கப்பட்டவர்கள் பலர். ஆனால் சிலர் மட்டுமே நிரூபிக்கப்படுகிறார்கள். நிறைய பேர் நிரூபிக்கப்பட்டாலும் கூட , சிலர் முன்னேறத் தவறி , கர்த்தரின் அழைப்பை நிறைவேற்றத் தவறிவிடுகிறார்கள்.

இயேசு நிறையபேரை அழைத்தார். ஆனால் 12 பேர் தெரிந்தெடுக்கப்பட்டனர். 11பேர் முன்னேறினார்கள். ஒருத்தர் மிக மோசமாக தோல்வியடைந்தார்.

நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் கர்த்தரின் சேனைக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம். அது இங்கே முடிந்துவிடவில்லை. நாம் முழுவதுமாக சோதிக்கப்படுவோம். திரும்பிப் பார்ப்பவர்கள், அல்லது ஊசலாடுபவர்கள் அல்லது முன்னேறாதவர்கள் அனைவரும் கர்த்தரின் சித்தத்தில் தோல்வி அடைகிறார்கள். நாம் அப்போஸ்தலர்களாகவும் , தீர்க்கத்தரிசிகளாகவும் , போதகர்களாகவும் , அற்புதங்கள் செய்பவர்களாகவும் , குணப்படுத்துபவர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

அழைப்புக்கான நமது தகுதியை நம்பாமல் , உலககாரியங்களை விட்டு இயேசுவை பின் தொடர்வதில் விழிப்புடன் இருப்போம். சோதனைக்காலத்தில் நம் இருதயத்தை கடினப்படுத்தாமல் இருப்போம். வாழ்நாள் வரை முன்னேறுவோம் . ஆமென்.

டாக்டர் சுஜாதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *