தானியேல் – II

நாள் : 27-04-2022 – தேவ செய்தி

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

1தெச 5:17

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

லூக் 18:1

அநியாயமான நீதிபதியை தன் எதிராக எதிராக நியாயம் கேட்க விடப்பிடியகச் சென்ற விதவையின் உவமையை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். அவளுக்கு உதவி செய்ய யாருமே இல்லை. ஆனால் தொடர்ச்சியாக அவள் சென்று தன் கோரிக்கையை சளைக்காமல் நீதிபதி முன் வைத்தாள். அவளுடைய விடாமுயற்சியால்தான் நீதிபதி அவளுடைய வழக்கை தீர்த்துதந்தார். ஜெபத்தின் மூலம் பரலோக பிதாவுடன் தொடர்ந்து உறவாடுவதன் மதிப்பை தம்முடைய சீடர்களுக்கு உணர்த்தவே இந்த நிகழ்வை இயேசு உவமையாக கூறுகிறார். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கூக்குரலை கேட்க அவர் காதுகள் தயாராக இருக்கின்றன. அவருடைய உதவி நமக்கு தேவையா இல்லையா என்பது நம்முடைய தேர்வு.

தானியேல் ஒரு நாளைக்கு மூன்று வேளை தவறாமல் ஜெபித்தான். தானியேல் பாபிலோனில் இருந்தபோது, கர்த்தருடைய இரக்கத்தின் மீது அவனுடைய கண்கள் நிலைத்திருந்தது மேலும் அவருடைய நகரமாகிய எருசலேமின் திசையை நோக்கி அவனுடைய ஜன்னல்கள் திறந்திருந்தன. கர்த்தர் அவனுடைய ஜெபத்தை எப்படி புறக்கணிப்பார்.

கர்த்தர் தன்னுடைய தூதர்களை அனுப்பி  தானியேலை காயப்படுத்தாதபடி சிங்கங்களின் வாய்களை கட்டிப்போட்டார். தானியல் கர்த்தருடைய குணங்களை அறிந்திருந்தார் எனவே தன்னுடைய மக்களுக்காகவும், அவர்களுடைய விடுதலைக்காகவும் திறப்பில் நின்று ஜெபித்தார். தனது சொந்த பாவத்தையும், தனது முன்னோர்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு உபவாசத்துடன் ஜெபித்து விண்ணப்பங்கள் செய்து, 21 நாட்கள் வழக்கம் போல் சாக்கு உடை மற்றும் சாம்பலை பூசி தன்னை தாழ்த்தினார். நாம் வேதத்தில் படிப்பது போல ஜெபத்திற்கு பதிலை கபிரியேல் மூலம் தேவன் அனுப்பினார்.

ஆகவே எல்லா மனிதர்களுக்காகவும், அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் விண்ணப்பங்கள், பிரார்த்தனைகள் பரிந்து பேசுதல்கள் மற்றும் நன்றி செலுத்துதல் அகியவை செய்யப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன்.

1திமோ 2:1-2

திமோத்தேயுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அப்போஸ்தலன் அரசர்கள், ஆட்சியாளார்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்குமாறும் மக்கள் நல்ல மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு உதவும் வகையில் அரசாங்க புத்திசாலியான தீர்மானங்களை எடுப்பார்கள். தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்கள் கடமையில் திறமையாகவும் நேர்மையாகவும் இருக்க நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.

எசேக் 22:30

திறப்பில் நின்று தேசத்திற்காக ஜெபிக்க ஆள் இல்லை என்று எசேக்கியலுடன் தேவன் சொல்லுகிறார்.

நம்முடைய தேசத்திற்காகவும், ஆட்சியாளர்களுக்காகவும் மக்களுடைய நலனுக்காகவும்  ஜெபிப்பது நம்முடைய கடமை அல்லவா?

அநேக நேரங்களில் இஸ்ரவேலர்கள் வணங்கா கழுத்துள்ளவர்களாகவும், கர்த்தருக்கு எதிராக கலகம் செய்தார்கள் இதனால் தேவன் அவர்களிடம் கோபமாக இருந்தார். அநேக தருணங்களில் இஸ்ரவேலர்களுடைய நன்றிகெட்ட தனத்திற்கு, கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் வராமல் இருக்க மோசே திறப்பில் நின்று ஜெபித்தான்.

நாம் இடைவிடாமல் ஜெபிப்போம். நம்மீதும் நமது தேசத்தின் மீதும் அவருடைய கருணையை காட்ட சர்வவல்லமை உள்ள தேவனக்கு முன்பாக தலை வணங்குவோம். அவருடைய நன்மைகளுக்காக நாம் அவரை ஆசீர்வதிப்போம்.

Sol. Dr. Salomi Kurien

தானியேல் – II

நாள் 26-04-2022 – தேவ செய்தி

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

-லூக் 14:1

எல்லோரும் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

பரிசேயரில் தலைவனாகிய ஒருவனிடமிருந்து இயேசுவுக்கு வந்த அழைப்பைப் பற்றி தியானிப்போம். மக்கள் மீது சுமத்தப்பட்ட யூத மதத்தின் தேவையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பலவற்றை ஒழிக்கவே இயேசு வந்திருக்கிறார் என்று பரிசேயர்கள் ஏற்கனவே ஒரு கருத்தை உருவாக்கை வைத்திருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று இயேசு யோசித்திருப்பார். நானும் கூட சபைகளில் அல்லது குறிப்பிட்ட பிரிவினருடன் பயிற்ச்சி அளிப்பதற்காவோ அல்லது செய்தி கொடுப்பதற்காகவோ அழைக்கப்படும்போது அதை ஏற்கலாமா வேண்டாமா என்பதை யோசித்துதான் முடிவெடுப்பேன்.

ஏற்கனவே அவர்களுடன் கசப்பான அனுபவம் இருப்பதனால் இயேசு அழைப்பை நிராகரித்திருக்கலாம். அவர் எங்கு எப்போது சென்றாலும், அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக ஒரு கூட்டத்தை இயேசுவிடம் பரிசேயர்கள் அனுப்புவார்கள்.

அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

-லூக் 6:7

இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், அநேக காரியங்களைக் குறித்துப்பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

லூக் 11:53-54.

இயேசுவை ஆபத்தில் தள்ளுவதற்கு ஒற்றர்களைகூட அனுப்பினார்கள்

அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

-லூக் 20:20.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அழைப்பை ஏற்கிறார்.  இங்கு கூட அவரை கவனமாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். இயேசு வேண்டுமென்றே தைரியமாக உண்மையை போதிப்பதற்கான சூழ்நிலைகளைத் தேடி உருவாக்கினார்.

பவுல் சொல்லுகிறார்,

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

2திமோ  4:2.

கொலோ 1:28-29, 1திமோ 2:11-12, 1தெச 5:14, தீத்து 1:13, தீத்து 2:15, எபி 13:22, வெளி 3:19

  1. இயேசு முழு பொறுமையோடு போதிக்கவும், கண்டிக்கவும், புத்திமதி சொல்லவும், திருத்தவும் வாய்ப்புகளைத் தேடினார்.
  2. அவரை அவமானப் படுத்துவார்கள், அவரில் குற்றம் கண்டுபிடிப்பார்கள் என்று தெரிந்து அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
  3. எங்கு நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதோ அங்கேயும் நற்செய்தியை அறிவிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
  4. நற்செய்தியை அறிவிப்பதற்கான சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் உருவாக தயாராக இருக்க வேண்டும்.
  5. நமக்கு நன்றாக தெரிந்த இடங்களில் கூட எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.

ஜெபம்

பரலோக பிதாவே, எதிலும் கோபம் கொள்ளாமல், சுவிசேஷத்திற்காக எதிரான சூழ்நிலைகளை சந்திக்கவும், எதிரிகளின் மத்தியில் கூட நற்செய்தியை பிரசங்கிக்க இயேசுவைப் போல இருப்பதற்கு எங்களுக்கு தைரியத்தையும் மன வலிமையையும் தாரும்,

ஆமேன்.

–Sr. Angelica AOJ

தானியேல் – II

நாள்-24-04-2022 – தேவ செய்தி

இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்;

அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

எஸ்றா 7:6

எஸ்றா ஒரு வேதபாரகனாயிருந்தன், அவன் பாபிலோனுக்கு கைதியாக பிடித்துக் கொண்டுச் செல்லப்பட்டான்.

மோசே மூலம் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை எழுதுவதற்கு ஆவலாகவும், தயாராகவும் இருந்தான். கர்த்தர் எழுதக்கூடிய ஒரு பேனாவாக அவன் நாவு இருந்தது,

மேலும் அவனுடைய பேச்சும் எழுத்தும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. கர்த்தர் ஒரு செய்தியை சொல்லும்போது அதை சுவற்றிலும் கற்பலகையிலும் அவன் எழுதி வைத்தான்.

யாத் 31:18

எஸ்றா ஞானத்திலும், வளர்த்தியிலும் வளர வழி தேடினார். அப்படிப்பட்ட மக்களை கர்த்தர் வழிநடத்துவார் மேலும் அவர்கள ஆசீர்வதிப்பார். அவர்களுடைய செல்வாக்கை பெருக்கச் செய்வார்.

தானியேல் 5:5-12

எஸ்றா மற்றும் நெகேமியா இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் மேலும் அவர்கள் செல்வாக்கு மிக்க யூதர்களாக இருந்தார்கள்.

எருசலேமுக்கு திரும்பி அதை மீண்டும் கட்ட வேண்டும் என்ற ஆசை அனலாக எரிந்துகொண்டிருந்தது. எருசலேமை மீண்டும் கட்ட  தேவையான பொருட்களையும், அதற்கான அனுமதியையும் பெறுவதில் வெற்றிப்பெற்றனர்.

எஸ்றா 7:10

சொல்லுகிறது  கர்த்தருக்கு நன்றி சொல்லவும் அவரை துதிக்கவும் எஸ்றா தனது மற்றும் மக்கள் இருதயத்தை தயார் செய்தான். அவன் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்க ஆரம்பித்தவுடன் மக்கள் மனம் நொந்து அழ ஆரம்பித்தனர். எஸ்றா அவர்களை ஆறுதல்படுத்தினான், அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்தான்.  நம்முடைய துக்கம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கர்த்தருடைய வேதத்தை நாம் வாசித்து, தியானம் செய்து, மனப்பாடம் செய்யும் போது அது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும்.

கர்த்தருடைய  ஏதாவது ஒரு வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைப்பது மேலும் அதை தனதாக்கி கொள்வதும் கூட கீழ்படிதல்தான்.

எஸ்றாவைப் போல நாமும் கர்த்தருடைய வசனத்தைப் படித்து நேரம் கிடைக்கும் போது அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இந்த சிறிய காரியத்தில் நாம் உணமையுள்ளவர்களாக இருந்தால் கர்த்தர் நம்முடைய பார்வையையும், செல்வாக்கையும் விரிவுபடுத்துவார்.

கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

சங் 115:14

வேதத்தை தினம்தோரும் படிக்க வேண்டும், அதை தினமும் வியாக்கியானம் செய்ய வேண்டும், தினமும் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வேதத்தை படிப்பவர்கள் அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தாமல், வெறும்படிப்பவராகவே இருக்க இயலாது. வாக்குறுதியின் தேசத்திற்கு (பைபிளின் வாக்குறுதிகள்) மக்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

தானியேல் 12:3

நாம் வேதத்தை அதிகமாக படிப்பதாலும், தியானம் செய்வதாலும், மனப்பாடம் செய்வதாலும், மேலும் அதை பின்பற்றுவதாலும் நாம் ஆசீர்வதிக்கப் படுவோம், அதையே நம்முடைய வாழ்க்கையாக மாறிவிடும்

எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய இதயத்திற்கு எடுத்துச் செல்லும்போது கர்த்தர் நம்மை அதிகமாக ஆசீர்வதிக்கிறார் மேலும் நாமும் உண்மையான சமாதானத்தை அனுபவிக்கிறோம். எழுதுவது என்பது நம்முடைய எண்ணங்களுக்கு பார்க்க கூடிய வார்த்தையில் மாற்றுகிறோம். வார்த்தைகள் காணப்படாததை நமக்கு காட்டுகிறது.

நாம் கர்த்தருக்காக எழுதும்போது அவருடைய கையில் எப்போதும் தயாராக இருக்கும் ஒரு பேனாவாக மாறுவோம்.

ஜெபம்

பரலோக பிதாவே, உம்முடைய கையில் தயாராக இருக்கும் ஒரு பேனாவாக எங்களை மாற்றும். எங்களுடைய எண்ணங்களையும், செல்வாக்கையும் அதிகபடுத்தும். இயேசுவின் இனிய நாமத்தில் கேட்கிறேன் பிதாவே. ஆமேன்.

Sol.Gigi Jacob

தானியேல் – II
நாள் : 23-04-2022 – தேவ செய்தி

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
 1யோவா 1:9.

நாம் தொடர்ந்து கர்த்தருடைய ஐக்கியத்தில் இருக்க வேண்டுமென்றால் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும். கர்த்தர் தன்னுடைய வாக்குறுதியில் மாறாதவர் எனவே நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும் சுத்திகரிப்பும் நிச்சயம் உண்டு. மேலும் கர்த்தர் தன்னுடைய நீதியின்படியே கிரியை செய்கிறார். சிலுவையில் இயேசுவின் இறப்பு கர்த்தரின் நீதியை முழுமையாக்கி இருக்கிறது மற்றும் குற்றமனப்பான்மையிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறது.

  1. நம்முடைய இருதயத்தை ஆறாய்ந்து அறிய கர்த்தருக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். சங் 51:10 தாவீது சொல்லுவது போல, “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”
  2. கர்த்தரோடு நாம் நேரத்தை செலவிட வேண்டும். நம்முடைய ஆதாரமாக இயேசு மற்றும் கர்த்தருடைய வசனம் இருக்க வேண்டும். அதனால்தான் பவுல் சொல்லுகிறார் 1தெச 5:17 – “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.”

கர்த்தருடைய வசனத்தை தினமும் தியானியுங்கள். நமக்கு என்ன வெளிப்படுத்த விரும்புகிறார் எனவும், நம்மை எப்படி மாற்ற விரும்புகிறார் எனவும் அவரை கேளுங்கள். நம்முடைய எந்த பாவத்தையும் அவர் நமக்கு உணர்த்தினால் உடனே பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு கேளுங்கள், பாவத்தின் மீது வெற்றி கொள்ளுங்கள். நம்முடைய அநேக குற்றங்கள் நமக்கு இயேசு சுட்டிகாட்டினால், பயப்படத்தேவையில்லை. உடனே மன்னிப்பு கேட்ப்போம். அவர் நமக்கு உதவுவார். ஏசா 1:18 – உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

கிறிஸ்துவைப் போல நாம் மாறுவது ஒரு தொடர்ச்சியான செயல் முறையாகும். இது உடனே ஏற்படாது.

கர்த்தருடைய வெளிப்பாடு இல்லாமல் நாம் மாறமுடியாது. அவர் நமது கண்கள், காதுகள் மற்றும் மனதை திறக்க வேண்டும்,

எரே 17:9,10 – எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

ஜெபம்

பிதாவாகிய தேவனே உம்மோடு எப்போதும் ஐக்கியத்தில் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய பாவங்களை மன்னித்து, இருதயங்களை சுத்தமாக்கும். ஆமேன்.
Sol. Sujatha Maduram

தானியேல் – II
நாள்:22-04-2022 – தேவ செய்தி

ச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்;


நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்..

சங் 52:8.


கர்த்தர் என்னுடைய பலன் என்று விசுவசிக்க கூடிய நீதிமான் மேற்கண்ட வார்த்தைகளை சொல்லுகிறான்,

பச்சையான ஒலிவமரத்திற்கு இரண்டு பொருட்கள் தேவை,

  • சூரிய ஒளி
  • தண்ணீர்

இங்கு பச்சை ஒலிவமரம் கர்த்தருடைய வீட்டில் வளர்கிறது.


தண்ணீர் மற்றும் சூரியஒளியின் ஆதாரம் என்ன?

ஒளியின் ஆதாரம்

வெளி 1:16

அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

தண்ணீரின் ஆதாரம்

யோவா 7:38

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

கர்த்தருடை முகத்தின் வல்லமையான பிரகாசம் ஒலிவமரத்தின் மீது பிரகாசிக்கிறது.


ஒலிவ மரம் பசுமையாக இருப்பதன் காரணம் அது கர்த்தருடைய பிரசன்னத்தில் நடப்பட்டுள்ளது.

அது தண்ணீரையும் சூரிய ஒளியையும் சார்ந்திருக்கும் பூமியில் நடப்படும் மரங்களைப் போல அது இருக்காது.

ஒலிவ மரம் தண்ணீருக்கும் சூரிய வெப்பத்திற்கும்கர்த்தரையே நம்பி இருக்கிறது.

ஓசியா 14:9

சொல்லுவது போல

அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை;

நாங்கள் குதிரைகளின்மேல்

ஏறமாட்டோம்; எங்கள் கைகளின்

கிரியையைப்பார்த்து:

நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்;

திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

கர்த்தருடைய பிரசன்னத்தில் வாழ்வதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. நம்முடைய ஆதாரம் கர்த்தராகத்தான் இருக்க வேண்டும். அவர் நமக்கு ஒளியாகவும் உயிர்தரும் நீராகவும் இருக்க வேண்டும். இதுதான் நம்மை பச்சை ஒலிவமரமாக வளர உதவுகிறது. மஞ்சள் நிறமுள்ள இலைகள் போதுமான வெளிச்சத்தைப் பெறவில்லை என்பதை காட்டுகிறன. (பெரும்பாலான தாவரங்களுக்கு 6 மணி நேர ஒளி தேவை.
ஜெபம்


தோட்டகாரரான எங்கள் பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாங்கள் உம்மிடம் வருகிறோம். எங்கள் மீது கிருபையாய் இரும். என் துரோகத்தை குணமாக்கி என் மீது கருணை காட்டும். என் வளர்சிக்கு நீரே என் சக்தியாய் இரும். உம்மையே நம்பி இருக்கிறேன்.

ஆமேன்.


SOL.PINTA EUNICE, AOJ


தானியேல் – II

நாள் 21-04-2022 – தேவ செய்தி

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி.

-அப்போஸ் 16:31

பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்காரனை கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படி வழி நடத்தினார்கள் அது அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது.

முழு குடும்பமும் கிறிஸ்துவினுடைய படிப்பினையை ஏற்று ஞானஸ்ஞானம் பெற்றார்கள்.

சாட்சி

என்னுடைய வாழ்விலும் இப்படித்தான் நடந்தது. நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்தேன், பல்வேறு விக்கிரகங்களையும், புனிதர்களையும் வணங்கி வந்தேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆறுபேர், நான் தான் கடைசி. இயேசு என்னைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தார்.

இது எனக்கு சங்கீதம் 135:4 ஐ ஞாபகப்படுத்துகிறது, கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

அவர் என்னை ஒரு விசுத்திரமான பொக்கீஷ்மாக தேர்ந்தெடுத்தார், நான் ரோமன் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தேன். என்னுடைய வீடு என் பெற்றோரின் வீட்டிற்கு அருகாமையில் இருந்தது.

எனவே கிறிஸ்துவை என்னுடைய வாழ்வில் கிறிஸ்துவின் பிரதிபலிப்பை அவர்கள் பார்த்தனர். என்னுடைய தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்டார். நான் பிறந்தபோது என் தாயினுடைய கருப்பையும் என்னுடனே வெளியே வந்தது, இது அவருக்கு மிகவும் வேதனை அளித்தது. அவருக்கு செய்யப்பட இருந்த அறுவை சிகிச்சை கூட கர்த்தருடைய கிருபையால் நிறுத்தப்பட்டது.

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

-சங் 4:3

என் தாயார் பைபிளை படிக்க ஆரம்பித்தார். ரோமன் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தார். அதற்குபின் என்னுடைய மூன்று சகோதர சகோதரிகளும் எங்களோடு சேர்ந்துகொண்டனர்.

  என் தாயின் இறப்பு கூட ஒரு சாட்சிதான்.  அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும்வரை பாடல்பாடும்படியாய் எங்களிடம் சொல்லி இருந்தார். தாயின் மரித்த உடலை காண வந்தவர்கள் அனைவரும் தாயின் முகம் தேவதூதரின் முகம் போல் இருப்பதாகச் சொன்னார்கள்.

என் தாயை கடைசிவரை பராமரிக்கவும் அவரை கர்த்தரிடம் கொண்டுவரவும் எனக்கும் என் கணவருக்கும் கிருபை கிடைத்தது.

தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

-யோவான் 3:15

என் தாயார் அவருடைய அன்பான தேவனோடு இருக்கிறார்.

கிறிஸ்தவ வாழ்வில் நமது புரிதலை திறக்கும் திறவுகோல் விசுவாசம் மற்றும் பைபிள்.

இரட்சிப்புக்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பவர்கள் கர்த்தருடைய வார்த்தையால் அவரில் வளர வேண்டும்.

எல்லாருக்கும் மேலாகவும், எல்லாவற்றிற்கும் மேலாகவும் நாம் அவருக்கு கீழ்படிய வேண்டும், அன்பு செய்ய வேண்டும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.

பவுலும் சீலாவும் சிறைகாவலரை இயேசுவில் விசுவாசம் வைக்குபடியாய் சொன்னார்கள். இது ஒரு சாதாரணமான, எளிய பயனுள்ள வழிகாட்டுதலாக இருந்தது.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே,   இயேசு கிறிஸ்துவை விசுவசித்தன் மூலம் நான் கிருபையால் இரட்சிக்கப்பட்டதற்கு நன்றி. உம்முடைய வார்த்தைக்காக நன்றி. எனக்கு பலன் கொடுக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலம் எல்லாவற்றையும் செய்ய என்னால் முடியும் என்பதை நான் விசுவசிக்கிறேன். ஆமேன்.

–Sol.Rani John

தானியேல் – II

நாள் -20-04-2022 – தேவ செய்தி

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

மத் 5:4

நம்முடைய வாழ்வில் மிகப் பெரிய துன்பத்தை அனுபவத்துக்கொண்டிருந்தால் அது நம்மை மன உளைச்சளுக்கு ஆளாக்கும். அது மிகப்பெரிய பள்ளம், நம்மால் அதிலிருந்து மீண்டு வர இயலாது.

என்னுடைய வாழ்விலும் கூட மன உளைச்சலுக்கு ஆளாவதற்கான எல்லா காரணங்களும் இருந்தன – என்னுடைய கணவருக்கு இருதயத்தில் கேளாறு, என்னுடைய இரண்டு குழந்தைகளையும் நான் பார்க்க வேண்டும், நோய்வாய் பட்டிருந்த என்னுடைய மாமனார், மாமியார் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் வேலைக்குச் செல்ல வேண்டும். இதை எல்லாம் எப்படி சமாளித்தேன் என்று நான் இப்போது ஆச்சரியப்படுகிறேன்.

அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

சங் 118:23

அந்த கஷ்ட நாட்களில் நான் கர்த்தருடைய கைகளில் இருந்தேன் மேலும் என்னை அவர் ஏசா 41:10, 43:2,, சங்க 91 போன்ற வசனங்களால் தேற்றினார்.

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

பிலி 4:7.

நாம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை கடந்துச் செல்லும் போது துன்பம் மற்றும் கவலை நம்மை ஆட்கொள்ளும். இயேசு நம்முடைய இருதயத்தில் பிரவேசித்தால் கவலை, தொல்லை கஷ்டம் எல்லாம் பரந்தோடிப்போகும். இது பொரும்பாலும் எதிரியால் ஏற்படுத்தப்படுவது. இயேசுவினுடைய பிரசன்னத்தில் அவனால் இருக்க முடியாது, யாக்கோபு 4:7 சொல்லுவது போல அவர் நம்மை விட்டு ஓடிவிடுவான்,

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

2கொரி 7:10

தேவனுக்கேற்ற துக்கம், துன்பங்களை தாங்குவதற்கு நம்மை பலப்படுத்துகிறது ஆனால் லெளகிக துக்கமோ நம்மை பலவீனப்படுத்துகிறது. நம்முடைய பலவீனம், தொல்லை கஷ்டங்கள், அழுகை எல்லாவற்றையும் சந்தோஷத்தின் ஆவி மாற்றிவிடுகிறது. 

அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

சங்கீதம் 30:5

கர்த்தர் நமது துன்பங்களை, நிறைவான நம்பிக்கையாகவும், நம் கண்ணீரை மகிழ்ச்சியாகவும் மாற்றுகிறார். கர்த்தர் நம்முடைய கண்ணீரை துருத்தியில் சேர்த்துவைக்கிறார். நாம் அழுகையில் விதைப்போம் ஆனால் ஆனந்தத்தில் அறுப்போம்.

நாம் ஆறுதல் படுத்தப்படும்போது நம் இருதயத்திலிருந்து துதியும் நன்றியும் தொடர்ச்சியாக உதடுகளில் வெளிப்படும். மலடியாய் இருந்த அன்னாளின் கண்ணீரை கண்ட தேவன் அவளிடமிருந்துதான் ஒரு பெரிய தீர்க்கதரிசியாகிய சாமுவேலை உருவாக்கினார்.

நாம் என்ன துன்ப துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்மை அன்பு செய்யும் உள்ளங்கள் புரிந்துகொள்ளாத போது கர்த்தர் நம்மை ஆறுதல் படுத்துகிறார், விடுவிக்கிறார் காப்பாற்றுகிறார்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, எங்களை உம்மோடு அரவணைத்து, ஆறுதல் படுத்துவதற்காக கோடி ஸ்தோத்திரங்கள் அய்யா, துன்பங்களை தாங்கும் பெலன் தாரும், புயலிலும் உம்மை புகழ பலன் தாரும்

ஆமேன்.

SOL.GIJI JACOB

தானியேல் – II
நாள்:19-04-2022 – தேவ செய்தி

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்;

அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது,

யோசு 5:9.


அடிமைத்தனம் ஒரு நிந்தையே.

இன்று அநேக மக்கள் நிந்தையில் இருக்கின்றார்கள்.


ஏழ்மை ஒரு நிந்தை
வேலை இல்லாமை ஒரு நிந்தை
ஒற்றுமையில்லாமல் இருப்பது நிந்தை
திருமணம் பிளவுபட்டால் அதுவும் நிந்தை
குழந்தைகளின் நடத்தை தவறாக இருந்தால் அது நிந்தை
விவாகரத்து ஒரு நிந்தை
பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது நிந்தை.
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது நிந்தை
சரியான வாழ்க்கை துணை கிடைக்காமல் இருப்பது நிந்தை
பொருளாதார சிக்கனம் நிந்தை
கடன் வாங்குதல் நிந்தை

இவை அனைத்தும் பல வகையான நிந்தைகள். இவை அனைத்தும் ஆதாமின் பாவத்தின் பலனே. இந்த நிந்தைகள் அனைத்தும் ஒரு மனிதனை அழுத்துகின்றன, அவனை எழ விடாமல், அதிகாரத்தை கையில் எடுத்து தன் வாழ்க்கையை, சபையை, தொகுதியை, மாநிலத்தை, தேசத்தை ஆளவிடாமல் அவனை அமுக்குகின்றன.

உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை அழுத்தும் காரியங்களை பட்டியலிடமுடியுமா?

மத் 11:28-29
 இயேசு சொல்கிறார், - 

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.


அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.


ஒருவர் போராட்டத்தின் கீழ் இருந்தால்

சரீரத்தில் (நோயோடு)

ஆத்துமா (நிராகரிப்பு, தனிமை, கசப்பு, பகை, பொறாமை போன்றவை)

ஆவி (பாவத்தில்)


இந்த சுமைகளை அகற்றும்வரை அல்லது உங்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்வரை நாடுகளையும், மாநிலங்களையும், ஆத்துமாக்களையும் வெல்வதைப் பற்றி நினைக்க கூட முடியாது.

எனவே நாம் அனைத்து நிந்தைகளிலும் இருந்து வெளியேறுவோம்.
எந்த அடிமைதனத்தையும் அனுமதியாமல் இருப்போம்.
உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கின்றதா?
உங்களுக்கு வேலை கொடுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்.
(உங்கள் தொடர்பு எண்ணைத் தரவும்)
நோய்வாய் பட்டிருக்கின்றீர்களா? உங்களுக்கு சுகம் உண்டு. (தொடர்பு எண்ணை தரவும்)
நீங்கள் வேறு எந்த சுமைகளில் இருக்கிறீர்களா?
அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த நிந்தைகளில் இருந்து வெளியேறுவோம், கர்த்தருக்காக ஊழியம் செய்வோம்.


SR. ANGELICA AOJ


தானியேல் – II
நாள் 18-04-2022 – தேவ செய்தி

இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக:

மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக் 10:41.

இயேசுவும் அவருடைய சீடர்களும் பிரயாணமாய் போகையில் அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார், அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள் அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து அவரிடத்தில் வந்து ஆண்டவரே நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்கு கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்ன்றாள்.

இயேசு அவளுக்கு பிரதியுத்தரமாக மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

தேவையானது ஒன்றே மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

இயேசுவுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த போது மார்த்தாள் உலகபிரகாரமான காரியங்களால் அலைகழிக்கப்பட்டாள். நாமும் இயேசுவுக்கு அப்படித்தான் ஊழியம் செய்கிறோம். மார்த்தளுடைய வீட்டில்தான் இயேசு இருந்தார் ஆனாலும் அவள் அவருடைய பாதத்தண்டையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்கவில்லை. அதேபோல நாமும் கட்டிட சபைக்கு செல்கிறோம் ஏன்? மற்றவர்களுக்கு நம்முடைய ஆன்மீகத்தைப் பற்றி காட்டுவதற்கு. எவ்வளவு கவலையான செய்தி?

மத் 15:8 – இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.

இயேசுவுக்கு சேவை செய்ய மார்த்தாளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பெரிய பாக்கியம். ஆனால் மகிழ்ச்சியே இல்லாமல் அவள் செய்கிறாள். நீங்கள் சபைக்குச் சென்று இயேசுவை ஆராதிக்கிறீர்கள் ஆனால் மகிழ்ச்சி இல்லாமல் செய்தால் எப்படி இருக்கும். மார்த்தாள் இங்கு அவளுடைய குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறாள். நாம் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லிக்கொண்டு, மகிழ்ச்சியின்றி இயேசுவுக்கு ஊழியம் செய்வதை பற்றி யோசித்துப் பார்ப்போம்.

மத் 7:1 – நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.குறை சொல்வது மற்றும் முணுமுணுப்பது போன்ற காரணத்தால் கர்த்தருக்கு ஊழியம் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை கொன்றுபோட்டாள். இப்பொழுது “இதை குறித்து உங்களுக்கு கவலை இல்லையா” என்று இயேசுவை கேட்டு சூழ்ச்சிதிறமையுடன் கையாளுகிறாள். தன்னுடைய கவலையை எல்லார்மேலும் திணிக்கிறாள்.

மற்றவர்கள் கவலைப்படவில்லை என்று அல்ல,

அவர்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்று கற்றுக்கொண்டார்கள்.

மரியாளைப்போல நாமும் அவருடைய பதத்தண்டையில் அமர்ந்து அவர் சொல்லுவதை கேட்டால் அவர் நம் அருகில் இருப்பார். கர்த்தரை மகிழ்ச்சிப் படுத்துவது எதுவெனில், அவருக்கு கீழ்படிவது, அவரை நம்புவது, அவர் அருகில் இருப்பதுதான்.

மத் 11:30 – என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். இயேசுவோடு நடப்பது, மகிழ்ச்சியோடு அவருக்கு ஊழியம் செய்வது – இதை சாத்தானால் ஒருகாலும் எடுக்க முடியாது.

நம்முடைய எதிர்காலம், ஆரோக்கியம், குழந்தைகள் என நாம் பலவற்றை குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்

பவுல் சொல்லுகிறார்,

பிலி 4:6-7 - நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

இயேசுவின் காலடையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்கும் நல்ல பங்கை மரியாள் தெரிந்துகொண்டாள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவருடைய பாதத்தில் அமரவேண்டும். எதிரியால் இந்த நல்ல பங்கை எடுக்க முடியாது. இயேசுவோடு இருக்கும் நம்முடைய நெருங்கிய உறவு, மற்றும் நட்பை, எதிரியால் எடுக்க முடியாது. சாத்தானால் எடுத்துக்கொள்ள முடியாத நல்ல பங்கை நாமும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜெபம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்முடைய காலடியில் அமர்ந்து நீர் சொல்வதை கேட்க எங்களுக்கு சக்தியையும், தைரியத்தையும் தாரும். சாத்தானால் எடுத்துக்கொள்ள முடியாத நல்ல பங்கை தேர்ந்தெடுக்க எங்களுக்கு ஞானத்தை தாரும். உம்மோடு நெருக்கத்தையும், அன்பையும் அதிகமாக்கும், ஆமேன்.

Sol.ArokiaMari, AOJ


தானியேல் – II நாள் : 17-04-2022 – தேவ செய்தி


ம  த்  தே  யு    2 1 : 1 -10

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
வசனம் 5 – சகரியாவி தீர்க்கதரிசனத்தின் நிறைவு. சக9:9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

மத் 21:2-3 – இல் சீடர்களிடம் பேசிய இயேசு இப்போது நம்மிடம் பேசுகிறார்.

இயேசு தனது இரண்டு சீடர்களை அனுப்புகிறார். அதேப்போல தேவன் நம்மையும் அனுப்ப விரும்புகிறார். எங்கு செல்ல? இயேசு மற்றும் அவருடைய ராஜ்யத்திற்கும் எதிராக இருப்பவர்கள் மத்தியிலே நம்மை அனுப்ப விரும்புகிறார். சிறை பட்டவர்களுக்கு விடுதலை அளிக்கவும், பிணியாள்ர்களை சுகமாக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் அவர் நம்மை அனுப்புகிறார். இங்கு இயேசு சொல்லுகிறார், ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதை காண்பீர்கள்.

யாராலும் விரும்பப்படாத உன்னை
எனக்காக தெரிந்துகொண்டேன். 

அவர் உன்னுடைய வாழ்க்கையை முழுமையாக்க விரும்புகிறார்.

யாத் 13:13, மோசேவின் பிரமாணத்தின்படி, முதற்பேரான அனைவரும் கர்த்தருக்கு சொந்தம். முதல் கழுதை குட்டியின் கழுத்து முறிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அது சிறைப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் இயேசு வந்தப்பின் நாம் மாறிவிடுவோம்

கழுதை கர்த்தருடைய வசனத்தின் அதிகாரத்தை காட்டுகிறது. நாம் வேதத்தை சார்ந்திருக்க வேண்டும்.

தன்னுடைய கண்களுக்கு கவர்ச்சியானதையே மனிதன் தேர்ந்தெடுக்கிறான். ஆனால் கர்த்தர் தெரியாததை தேர்ந்தெடுத்து இருதயத்திற்கு நல்லதாக மாற்றுகிறார்.

கழுதையைப் போல நம்மையும் தேவன் பயன்படுத்துவதே போதும் என்று இருக்க வேண்டும், உலகெங்கும் நற்செய்தியை சுமந்து செல்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அதற்கான எந்த பரிசையும் எதிர்பார்க்க கூடாது, கழுதையின் மீது அமர்ந்த இயேசுவின் பிரசன்னமே போதுமான பரிசு, மற்றும் ஆசீர்வாதம், எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழுதைகள் நாம். நம்முடைய வேலைக்காக நமக்கு புகழை சம்பாதிக்க கூடாது, நம்மை பயன்படுத்துவதற்காக நன்றி சொல்லுவோம். அவருடைய கிருபை மட்டுமே போதும் என்று இருப்போம்,

                                 ஜெபம்                                                  

கர்த்தாவே நான் உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன், சிறைப்பட்டிருந்த எங்களை நீர் விடுதலையாக்கினீர். எங்களைப் போலவே சிறைப்பட்டிருக்கும் அநேக மக்களை விடுதலைச் செய்ய எங்களை அனுப்பும். ஆமேன்.


SOL.ALOYSIUS,AOJ