நாள் 21-04-2022 – தேவ செய்தி
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி.
-அப்போஸ் 16:31

பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்காரனை கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படி வழி நடத்தினார்கள் அது அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது.
முழு குடும்பமும் கிறிஸ்துவினுடைய படிப்பினையை ஏற்று ஞானஸ்ஞானம் பெற்றார்கள்.
சாட்சி
என்னுடைய வாழ்விலும் இப்படித்தான் நடந்தது. நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்தேன், பல்வேறு விக்கிரகங்களையும், புனிதர்களையும் வணங்கி வந்தேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆறுபேர், நான் தான் கடைசி. இயேசு என்னைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தார்.
இது எனக்கு சங்கீதம் 135:4 ஐ ஞாபகப்படுத்துகிறது, கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
அவர் என்னை ஒரு விசுத்திரமான பொக்கீஷ்மாக தேர்ந்தெடுத்தார், நான் ரோமன் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தேன். என்னுடைய வீடு என் பெற்றோரின் வீட்டிற்கு அருகாமையில் இருந்தது.
எனவே கிறிஸ்துவை என்னுடைய வாழ்வில் கிறிஸ்துவின் பிரதிபலிப்பை அவர்கள் பார்த்தனர். என்னுடைய தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்டார். நான் பிறந்தபோது என் தாயினுடைய கருப்பையும் என்னுடனே வெளியே வந்தது, இது அவருக்கு மிகவும் வேதனை அளித்தது. அவருக்கு செய்யப்பட இருந்த அறுவை சிகிச்சை கூட கர்த்தருடைய கிருபையால் நிறுத்தப்பட்டது.
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
-சங் 4:3
என் தாயார் பைபிளை படிக்க ஆரம்பித்தார். ரோமன் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தார். அதற்குபின் என்னுடைய மூன்று சகோதர சகோதரிகளும் எங்களோடு சேர்ந்துகொண்டனர்.
என் தாயின் இறப்பு கூட ஒரு சாட்சிதான். அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும்வரை பாடல்பாடும்படியாய் எங்களிடம் சொல்லி இருந்தார். தாயின் மரித்த உடலை காண வந்தவர்கள் அனைவரும் தாயின் முகம் தேவதூதரின் முகம் போல் இருப்பதாகச் சொன்னார்கள்.
என் தாயை கடைசிவரை பராமரிக்கவும் அவரை கர்த்தரிடம் கொண்டுவரவும் எனக்கும் என் கணவருக்கும் கிருபை கிடைத்தது.
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
-யோவான் 3:15
என் தாயார் அவருடைய அன்பான தேவனோடு இருக்கிறார்.
கிறிஸ்தவ வாழ்வில் நமது புரிதலை திறக்கும் திறவுகோல் விசுவாசம் மற்றும் பைபிள்.
இரட்சிப்புக்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பவர்கள் கர்த்தருடைய வார்த்தையால் அவரில் வளர வேண்டும்.
எல்லாருக்கும் மேலாகவும், எல்லாவற்றிற்கும் மேலாகவும் நாம் அவருக்கு கீழ்படிய வேண்டும், அன்பு செய்ய வேண்டும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
பவுலும் சீலாவும் சிறைகாவலரை இயேசுவில் விசுவாசம் வைக்குபடியாய் சொன்னார்கள். இது ஒரு சாதாரணமான, எளிய பயனுள்ள வழிகாட்டுதலாக இருந்தது.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, இயேசு கிறிஸ்துவை விசுவசித்தன் மூலம் நான் கிருபையால் இரட்சிக்கப்பட்டதற்கு நன்றி. உம்முடைய வார்த்தைக்காக நன்றி. எனக்கு பலன் கொடுக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலம் எல்லாவற்றையும் செய்ய என்னால் முடியும் என்பதை நான் விசுவசிக்கிறேன். ஆமேன்.
–Sol.Rani John
