தானியேல் – II
நாள் – 16-04-2022 – தேவ செய்தி

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால்

போதிக்கப்பட்டிருப்பார்கள்;

உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

ஏசா 54:13.

நீதி 22:6 - 
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; 
அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

ஏசா 48:17-19 –

 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்சொல்லுகிறதாவது: 

பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர்நானே. 

கர்த்தருடைய பிள்ளைகள் அவர் சொல்வதைக் கேட்டிருந்தால், அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். அழிவுக்கு தேவை இருந்திருக்காது.

2001, ஜனவரி 15 ஆம் தேதி கர்த்தர் எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தார். மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். என்னுடைய மூன்றாவது மகன் லோகம் யோசுவா, விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பை அக்டோபர் 2019 ஆண்டு படித்துவந்தான். தீய நண்பர்களோடு பழகியதால் தீய காரியங்களை செய்ய ஆரம்பித்தான். என்னுடைய வேலைதளத்திலும் எனக்கு பிரச்சனைகள் எழும்பின. எபி 1:13 – மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? இந்த வசனம் என்னை திடப்படுத்தியது.

மார்ச் முதல்வாரத்தில் சகோதரி ஆஞ்சலிக்கா மறுசீரமைப்பு பற்றி வகுப்பில் பேசினார். அதே வேளையில் என் வாழ்விலும் அநேக மறு சீரமைப்புகள் நடந்தது. அவைகளில் ஒன்று என்னுடைய மகன் லோகம் கெட்ட நண்பர்களின் பிடியிலிருந்து விலகினான். எல்லா மகிமையும் கர்த்தருக்கே. அவர் என் மகன் மீது காட்டிய அன்பு, கருணை மற்றும் கிருபைக்காக நன்றி சொல்லுகிறேன். எரே 33:26 -, அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

இந்த வாக்குதத்தம் என் வாழ்வில் நிறைவேறியது. என் மகன் CBSE 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா மகிமையும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்கே உண்டாகட்டும்.

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். 
மா   ற்  கு   1  1  :  2  4  .

சங் 37:4 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
ஏசா 54:10 – மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிறகர்த்தர் சொல்லுகிறார்.
யோவா 6:45 – எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, நான் இழந்த எல்லாவற்றையும் எனக்கு திருப்பி கொடுத்ததற்காக நன்றி. என்னையும் என்னுடைய குடும்பத்தையும் உம் கரத்தில் ஒப்படைக்கின்றேன். தங்களிடம் இருந்ததை இழந்து தவிக்கும் அநேகர் வாழ்வில் மீண்டும் திரும்ப கிடைப்பதாக, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே. 

ஆமேன்.

Sol.Sikap,AOJ


தானியேல் – II
நாள்:15-04-2022 – தேவ செய்தி

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;

அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.


சங்க் 119:71.

நாம் தினமும் உபத்திரவத்திற்குட்படுகிறோம், அதற்கான காரணங்கள் வேறுபடலாம்.

  • கடமையில் நமது அலட்சியம்
  • நமது கவனக்குறைவு
  • நமது பலவீனங்கள்
  • நமது நோய்கள்
  • மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படுகிறது
  • நமது உழைப்புக்குப் போதுமான பலன் கிடைப்பதில்லை
  • பிறரை காட்டிகொடுப்பது முதலியன
காரணம் எதுவாக இருந்தாலும் சரி, 

கர்த்தர் நம்மைப் பற்றியும் நம்முடைய உபத்திரவத்தைப் பற்றியும் கவலைப்படுகிறார். நாம் உபத்திரவப்படும்போது அவரும் துன்பப்படுகிறார். 

ஏசா 52:5 – இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

அவருடைய பிள்ளைகள் அவரோடு இருக்கும்வரை அவர் மகிழ்ச்சியடைகிறார். அவருடைய பிள்ளைகள் அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும்போது, அவரும் துன்பப்படுகிறார்.

உபத்திரவப்படும்போது, மக்கள் அவரை நோக்கி அழும்போது அவர் அவர்களுடைய அழுகுரலைக் கேட்கிறார், பரத்திலிருந்து வந்து அவர்களை காப்பாற்றுகிறார். அவருடைய பிள்ளைகளை காப்பாற்ற தேவையான எல்லாவற்றையும் அவர் செய்கிறார். அவர்களுடைய சூழலில் ஒரு மாற்றத்தை கொண்டுவருகிறார்.

நம்முடைய வாழ்வில் தேவையான மாற்றங்களை கொண்டுவந்து, நாம் எங்கு தவறு செய்துவிட்டோம் என்பதையும், எங்கு நாம் பாதுகாப்பற்று இருந்தோம் என்பதையும் நமக்கு சுட்டி காட்டுவார்.

ஆன்மீக யுத்தம் செய்யும் பல யுத்திகளை அவர் நமக்குச் சொல்லிதருவார் –

நீ எப்படி யுத்தம் செய்துகொண்டிருக்கிறார், எப்படி வேறுவிதமாகச் யுத்தம் செய்து வெற்றி பெறலாம், எப்படி சில சூழ்நிலைகள் மற்றும் சோதனைகளை இயேசுவோடு நிற்பதன் மூலம் தவிர்த்திருக்கலாம், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து தப்ப என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் போன்றவை.பின்னர் உங்களுடைய முழுவாழ்க்கையும் மாறிவிடும். இதனால்தான் சங்கீதகாரன் சொன்னான், நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

நான் தமிழ்நாட்டில் வசித்துக்கொண்டிருப்பதால் நான் தமிழ் மொழியை கற்றேன். தமிழில் சரளமாக பேச கர்த்தர் எனக்கு கிருபை தந்தார். நான் இரட்சிக்கப்பட்டேன், அநேக பயிற்சி கூட்டங்களை தமிழில் நடத்தியிருக்கின்றேன் அதனால் தமிழில் வேதத்தை நன்றாக வாசிக்க கற்றுக்கொண்டேன். ஆங்கில வேத வசனங்கள் எனக்கு அவ்வளவு சரளமாக வராது. ஒரு காலகட்டத்தில் ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்தும்படி கர்த்தர் எனக்குச் சொன்னார். 3,4 முறை ஆங்கில பைபிளை பயன்படுத்த ஆவியில் உணர்த்தப்பட்டேன். ஆனால் நான் வேண்டும் என்றே இதை நிராகரித்தேன். திடீரென இந்தியா முழுவதும் எஸ்கோல் தேசிய அறுவடை பெருவிழா தரிசனத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள நான் சென்றேன். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது, ஆங்கில வேதாகம வசங்களை பயன்படுத்துவது போன்றவை எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கர்த்தர் கொடுத்த அறிவுறைப்படி நான் கேட்டு, ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்த தொடங்கியிருந்தால் இந்த பிரச்சனையை ஈசியாக சரிசெய்திருக்கலாம். நான் கர்த்தருக்கு நன்றி சொன்னேனெ மேலும் அவரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டேன். அவர் பிரச்சனையை தீர்த்து வைத்தார், ஆங்கிலத்தில் சரளமாக பேச உதவினார். இப்போது பரிசுத்த ஆவியின் உந்துதல்களை நான் கவனமாக கேட்கிறேன், அதற்கு கீழ்படிகிறேன். எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.

Sr. Angelica AOJ



தானியேல் – II
நாள்: 14-04-2022 – தேவ செய்தி

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

ஏசா 12:2.

கர்த்தரே நம்முடைய இரட்சிப்பு என்கிறார், ஏசாயா தீர்க்கதரிசி. இரட்சிப்பு என்பது கர்த்தர் என்கிறார் ஏசாயா. தன்னுடைய வாழ்வில் அநேக இன்னல்களை அவர் மேற்கொண்டார் ஆனால் அவர் திட மனதுடன் இருந்தார்.

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங் 18:2.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

ஏசாய 40:31.


ஏசாயா 40:21 ல் சொன்னபடி – நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?

புயல் காற்றும், தீவிரமான மழை வந்தாலும் கழுகு இதைப் போன்ற தடைகளை தோற்கடிக்கும். ஒருவன் தன்னை யகோவா தேவனில் தன்னை நிலை நிறுத்திக்கொள்பவர் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்துவார். யோபு தன்னுடைய வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தபோது அவனது மனைவி கர்த்தரை நிராகரிக்கும்படி அவனிடம் கேட்கிறாள். அதற்கு பதிலாக, அவள் ஒரு முட்டாள், ஒரு முட்டாளைப் போல பதில் அளிக்கிறாள் என்று யோபு கூறினார்.

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;

யோபு 13:15.


வாழ்வில் என்ன இன்னல்கள் நேர்ந்தாலும், நான் அவரை நிராகரிக்க மாட்டேன் என்று அவர் சொன்னார். கர்த்தருடைய இரட்சிப்பிற்காக நான் காத்திருப்பேன் என்று யோபு சொன்னார்.

கர்த்தர் இஸ்ரவேலர்களை செங்கடலை கடக்கச் செய்தபோது மோசேவும், மிரியாமும் கர்த்தரை புகழ்ந்து பாடியது


கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன்,

(யாத் 15:2);

சிவந்த சமுத்திரம் அவர்களுக்கு முன்பக இருந்தது அதே வேளையில் எகிப்தின் சேனை அவர்களுக்கு பின்னால் இருந்தது. கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே தன் கையில் இருந்த கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டினார். ஒரு சூராவளி காற்றை கர்த்தர் உருவாக்கினார், அதன் மூலம் கடல் நீர் பின் வாங்கியது, இஸ்ரவேலர்கள் நடப்பதற்கு காய்ந்த தரை உண்டானது. இந்த காய்ந்த வழியே அவர்கள் இஸ்ரவேலர்கள் கடந்து சென்றனர். அவர்கள் பிந்தொடர்ந்து வந்த எகிப்தியரின் சேனை மூழ்கடிக்கப்பட்டது, அதில் இருந்த அனைவரும் கடலால் விழுங்கப்பட்டனர். கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை பாதுகாத்தார்.

யாத் 14:20-30.

சாட்சி

எனக்கு பிரியமானவர் கர்த்தரோடு இருக்க நவம்பர் 8 ஆம் தேதி 2018. என்னுடைய இரண்டு மகன்களும் வேலையின் நிமித்தம் வெகுதொலைவில் வாழ்ந்து வந்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டபின் எங்களுடைய குடும்பங்களை விட்டு இங்குதான் குடிவந்தோம். எங்களுடைய ஓய்வுக்குப் பிறகு கர்த்தரை முழுநேரம் சேவிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய பாரம்பரிய குடும்பத்தில் எங்களை வெட்கப்பட கர்த்தர் விடவில்லை. ஏசா 12:2, சங் 18:2.
2019 ஆம் ஆண்டு நான் இயேசுவின் படை அணியில் சேர்ந்தேன், இது என் குடும்பத்திற்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. இது என் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும் இருந்தது. என்னுடைய குழுவில் பல காரியங்களை குறித்து பேசவும் புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் இது எனக்கு உதவியது.

ஜெபம்

அப்பா பிதாவே, வாழ்வில் நீர் எனக்கு கொடுத்த அமைதி, துயரத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக இருப்பதாக, ஆமேன்.


Sol.Shylaja Satheesan

தானியேல் – II
நாள் 13-04-2022 – தேவ செய்தி

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபே 3:17-19.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனம்- எபேசு சபை மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அன்பில் வேரூன்றியதாக இருக்க வேண்டும் என்று பவுல் எபேசு சபைக்காக செய்த ஜெபம்.

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

ரோம 5:5

பரிசுத்த ஆவியானவர் அதே அன்பை நம்மில் பொழிந்துள்ளார். வேதம் சொல்லும் இப்படிப்பட்ட அன்பை நம்முடைய குடும்பத்திலும், சபைகளிலும் அல்லது கிறிஸ்தவ சமுதாயத்திலும் காண்கிறோமா?. இப்படிப்பட்ட அன்பு நம் மத்தியில் ஏன் காணப்பட வில்லை. கர்த்தர் நமக்கு சொல்லும் பதில் இதுதான், “யாரும் என்னை கேட்க வில்லை.” இயேசு சொன்னார், கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். நாம் கேட்காத ஒன்றை கர்த்தர் நமக்கு கொடுக்க இயலாது. நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்கவோ, நமக்கு எதிராக எழுந்தவர்களை அன்பு செய்யவோ, நமக்கு பிடிக்காதவர்கள், நம்மைவிட கீழ்தரமாக நாம் நினைக்கும் சிலர் என இவர்களை அன்பு செய்ய நாம் ஆசைப்பட்டு கேட்டால்தான் அவர் நமக்கு கொடுப்பார். மத் 5:44 – உங்களுடைய எதிராளியை அன்பு செய்யுங்கள் என்று இயேசு சொன்னதோடு நிறுத்தாமல் அவ்வாறு செய்ய அன்பையும் நமக்கு கொடுக்கிறார்.

அதே அன்பை இயேசு இவ்வுலகில் வெளிப்படுத்தியுள்ளார். உடலாலும், இரத்தத்தாலும் அவர் நம்மைபோலவே இருந்தார் ஆனால் அவர் அடிக்கப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், துப்பப்பட்டார், ஆனால் அவருக்குள் பரிசுத்த ஆவியினால் ஊற்றப்பட்ட அந்த அன்பின் காரணத்தால் அனைத்தையும் சகித்துக்கொண்டார்.

ஆவியின் கனிகளில் முதன்மையனது அன்பு. அப்போஸ்தலர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிறுபத்தில் பரிசுத்த ஆவியின் வரங்களைப் பற்றி விளக்கிச் சொல்கிறார் – 1கொரி 12,14 – அன்புக்கு முக்கியத்துவமும் கொடுக்கிறார். 1கொரி 13 சொல்லுகிறது, நாம் பற்பல பாஷைகளில் பேசினாலும் , நற்செய்தியை போதித்து, தீர்க்கதரிசனம் சொன்னாலும், ஏழைகளுக்கு செல்வத்தை அள்ளிக்கொடுத்தாலும், அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும், அன்பில்லா விட்டால் கர்த்தருடைய பார்வையில் இவை வீணே.

அநேகர் கர்த்தருடைய அன்பு எனக்குள் இருக்கிறது என சொல்கின்றனர்.

ஆனால் அது வேதம் சொல்லும் அன்பா?
கடையில் நாம் அரிசி வாங்கும்போது அதன் எடையை சரிபார்த்தபிந்தானே நமக்கு கொடுக்கப்படுகிறது. எடை பார்க்காமல் இது போதும் என்று எப்படி சொல்ல முடியும்? 1கொரி 13 தான் அன்பின் அளவை காட்டுகிறது. இது அன்பின் 13 குணாதிசயங்களை காட்டுகிறது. கர்த்தரிடமிருந்து வரும் இந்த அன்பு, பரிசுத்த ஆவியினால் நமக்குள் ஊற்றப்படுகிறது. கர்த்தருடைய ராஜ்யத்தை இவ்வுலகில், சமுதாயத்தில், நமது குடும்பத்தில் நிலைநாட்ட கர்த்தரிடம் இந்த அன்பை கேட்போம்.

ஜெபம்

எங்கள் பரலோக பிதாவே, இந்த செய்தியை படிக்கும் அனைவருக்கும் நீர் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பை புரிந்துகொள்ளவும் அதே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தவும் ஜெபிக்கிறேன். ஆமேன்.

Sol.Leo

தானியேல் – II

நாள் 12-04-2022 – தேவ செய்தி

விசுவாசம் ஒரு ஆன்மீக பரிசு:

ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,  வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது.

1கொரி 12:8-9

விசுவாச வரம் ஒரு வல்லமை நிறைந்த பரிசு, அதை தவறாக பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த வரத்தை ஞானத்தோடு பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அது சந்தேகத்தையும், குழப்பத்தையும் உருவாக்கும். “இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். (மாற்கு 11:22-24).

நம் அனைவருக்கும் அப்படிப்பட்ட ஒரு வரம் கிடைத்திருக்குமேயானால், இவ்வுலகம் என்னவாயிருக்கும்?

நமது விருப்பங்கள் மற்றும் தனிப்பட்ட வசதிக்கு ஏற்ப மலைகள் மற்றும் ஆறுகள் இடங்களை மாற்றத் தொடங்கும், மேலும் கால நிலைகள் மாறுபடும், எனவே இந்த வியத்தகு வரத்தை  கர்த்தர் அனைவருக்கும் கொடுக்காததற்கு இதுவே காரணமாகும். வேதத்தில் இந்த வல்லமையான வரம் கொடுக்கப்பட்ட சில நபர்கள் இருக்கின்றார்கள். யோசுவா சூரியனை நிறுத்தச் செய்தார், மேலும் போரில் வென்று முடிக்கும் வரையில் இரவு வரகூடாது என்றார்.

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். –

1இராஜா 17:1.

ராஜாவிடம் இதைப் பேச அவர் தைரியமாக இருந்தார். கர்த்தர் மேல் அவர் நம்பிக்கை வைத்ததுபோலவே நடந்தது. ஆனால் மீண்டும் மழையை கொண்டுவர, தொடர்ந்து தலையை கீழே சாய்த்து ஜெபிக்க வேண்டியிருந்தது. அவர் ஜெபித்ததுபோலவே மழை வந்தது. மோசே செய்த அற்புதங்கள் கர்த்தரால் கட்டளையிடப்பட்டு திட்டமிடப்பட்டன, எனவே அவருக்கு நம்பிக்கையிருந்தது என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவிக்க.

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

சங் 33:6

விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

எபி 11:3

கர்த்தருடைய வார்த்தை நம்மில் நிலைத்திருந்தால் நமக்கு தேவையான யாதொன்றைக் கேட்டாலும் அதை அவர் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விசுவாசத்தால்தான் சுகமாக்குதல் உண்டாகிறது. நம்பாமல் அவரில் விசுவாசம் வைத்தால் அது பேரிழப்பை கொண்டுவரும்.

எனவே அவரில் நாம் முழு நம்பிக்கை வைப்போம், அவர் எது செய்தாலும் நமது நன்மைக்கே என்று விசுவசிப்போம். மலைகளை நகர்த்தகூடிய விசுவாசத்தைப் பற்றி பவுல் பேசுகிறார். நாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசிக்க வேண்டும்.

அப்போஸ்தலர் நடபடிக்கையில், அப்போஸ்தலர்களுக்கு மத்தியில் கூட இப்படிப்பட்ட விசுவாசத்தை பார்க்கிறோம். இன்றுகூட இது நடக்கும்.

இயேசு சொன்னது போல அந்த தெய்வீக அதிகாரமும், வரமும் நமக்கு இருக்க வேண்டும், விவேகத்துடன் அதை பயன்படுத்த கர்த்தர் நமக்கு ஞானத்தை தருவார். கர்த்தரில் விசுவாசம் வைப்போம். இந்த விசுவாசம் நமக்கு அவருடைய கிருபையால்  கொடுக்கப் பட்டுள்ளது.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

-Sol.Salomi

தானியேல் – II – தேவ செய்தி

நாள் – 11-04-2022

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

எபே 5:1,2.

 

நாம் கர்த்தரை பின்பற்ற முயற்சிக்கும்போது நாம் அவரை ஆராதிக்கிறோம்.  எனவே தங்களுடைய புரிதல் அந்தகாரப்பட்டும்,  தங்கள் வாழ்வு ஆன்மீக அந்தகாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவிசுவாசிகளைப்போல நாம் வாழ முடியாது.

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

2 கொரி 4:4

நாம் அவருடைய வார்த்தையை அறிந்திருக்கிறோம், அவருடைய வழிகளை தெரிந்திருக்கிறோம், எனவே, மற்றவர்களை ஏமாற்றக்கூடிய உலகபிரகாரமான இச்சைகளை நம்மிடமிருந்து அகற்றிப்போட வேண்டும். கர்த்தருடைய ஆவியில் நாம் தொடர்ந்து புதிதாக்கப்பட வேண்டும்.

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி

எபே 4:23

நம்முடைய சொந்த கிரயத்தில் அல்ல மாறாக இயேசு கிறிஸ்து செலுத்திய விலை கிரையத்தின் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது. நாம் ஒருவர் மற்றவருடன் உண்மையை பேச வேண்டும், மேலும் தலையாகிய இயேசு சொல்லுவது போல நடக்க வேண்டும். ஒருவர் மீதும் கோபமோ, கசப்போ இருக்க கூடாது மாறாக அனைவரையும் மன்னிக்க வேண்டும். கர்த்தருடைய சாயலாக மாறி வாழ நமக்கு பரிசுத்த ஆவியானவர் துணை செய்வார்.

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.  

எபே 4:31

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய முதற்பேரான குமாரனாகிய இயேசுவைப் போல நாம் இருக்க வேண்டும்.  எளிமையாகவும், பணிவாகவும், மென்மையாகவும், மன்னிப்பவராகவும், இரக்கமுள்ளவராகவும், அன்பாகவும், ஞானமாகவும் உண்மையுள்ளவராகவும், இயேசு வாழ்ந்தார் நாமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்பித்தார். கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டார் பதிலுக்கு அவருடைய சாயலை நாமும் ஏற்க வேண்டும். இப்படியாகத்தான் நாம் உண்மையான மற்றும் ஏற்க கூடிய ஆராதனையைச் செய்து கர்ததருக்கு நம்முடைய நன்றியை வெளிப்படுத்த முடியும். நாம் மாற்ற வேண்டிய நமது குணம், அணுகுமுறை மற்றும் பழக்கவழக்கங்களின் பகுதிகளை சுட்டிகாட்ட பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்க வேண்டும்.

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார். 

எபே 5:2

எனவே நாம் கிறிஸ்துவின் அன்பில் தொடர்ந்து நடக்க வேண்டும். நம்முடைய கஷ்ட நேரத்திலும் நல்ல நேரத்திலும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும், மற்றவர்களுக்காக ஜெபிக்க, உதவ, குணப்படுத்த, ஆலோசனை வழங்க, அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும்.

நாம் என்ன யோசித்தாலும்,  சொன்னாலும், செய்தாலும், நாம் செல்லும் இடமெல்லாம் கர்த்தருடைய சிகந்த வாசனையை எடுத்துச் செல்ல வேண்டும்,  இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

2கொரி 2:15

மற்றவர்கள் நம்மை நடைமுறைக்கு மாறானவர்கள், அதிக ஆன்மீகமுள்ளவர் அல்லது கடவுள் என்று கேலி செய்யலாம்.

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். “

1கொரி 13:7

கிறிஸ்து தம் உயிரை தியாகம் செய்தது போல் மற்றவர்களை ஆசீர்வதிக்க தன்னையும், தன் அகங்காரத்தையும் தன் நேரத்தையும், முயற்சிகளையும், வளங்களையும் தியாகம் செய்வதே அன்பு.

பழைய ஏற்பாட்டின் கீழ், சில மக்களுடைய காணிக்கை கர்த்தருக்கு ஏற்ற சுகந்த காணிக்கையாய் இருந்தது. தியாகத்தைவிட தியாகம் செய்தவரின் இதயத்தின் அவர்கள் செய்த தியாகத்தைவிட அவர்களுடைய இதயத்தின் இருதயமே அதிகம் பார்க்கப்பட்டது. இயேசுவை அபிஷேகம் செய்வதற்கு மேரி மக்தலின் விலைஉயர்ந்த வாசனை தைலத்தை பயன்படுத்தியது போல, நமது எண்ணங்கள், செயல்கள், மற்றும் வார்த்தைகளை பரப்ப முயற்சிக்க வேண்டும். நாம் கர்த்தருக்கு உயிருள்ள மற்றும் அன்பான காணிக்கையாக மாற வேண்டும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே நாங்கள் உம்மை பிரதிபலிக்கவும், நீர் அன்பு செய்வது போலவே மற்றவர்களை நாங்களும் அன்பு செய்ய விரும்புகிறோம். அதைச் செய்ய எங்களுக்கு கிருபை தாரும், எங்களோடு இருந்து எங்களை வழி நடத்தும்.  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் கேட்கிறோம் பிதாவே. ஆமேன்.

Sol.Gigi  Jacob

தானியேல் – II

நாள் – 10-04-2022 – தேவ செய்தி

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

1பேது 1:7

தங்கம் அழிந்துபோகும். அது நிரந்தரமானதல்ல. தங்கத்தின் உண்மையான மதிப்பு நெருப்பில் சோதிக்கப்படும் போதுதான் வெளிப்படுகிறது.  தங்கமானது நெருப்பில் சுட்டெரிக்கப்படாவிட்டால் அதன் மதிப்பு தெரியாது. மண், குப்பை மற்றும் அசுத்தமான பொருட்களுடன் அது கலந்துவிடும். சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தை தட்டான் எரியும் நெருப்பில் சரியான வெப்பநிலை இருக்கும்போது போடும்போது அதோடு கலந்திருக்கும் மணல், அழுக்கு போன்ற அனைத்து மாசுகளும் நீங்கி 22 காரட் தங்கமாக மாறும். பிறகு தட்டான் தங்கத்தை தான் விரும்பிய வடிவத்தில்ல் வடிவமைத்து, ஆயிரம், இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அழகான ஆபரணமாக மாற்றுகிறார்.

அதே போல மலைப்பாறையை வெட்டும்போது அது பாறையாகவே இருக்கிறது. ஆனால் சிற்பி பாறையை செதுக்கும்போது அவன் மனதில் இருக்கும் அழகான வடிவத்தை உருவாக்குகிறான். சிற்பி செதுக்கும்போது ஏற்படும் வலியில் இருந்து தப்ப பாறை நிறுத்தச் சொன்னால் அது சிற்பிக்கு அல்ல, பாறைக்குதான் இழப்பு. அது பாறையாகத்தான் இருக்கும் சிற்பமாக மாறாது. அதேபோல் நம் வாழ்வின் சிற்பி இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையை செதுக்கும்போது நமக்கு வலிகள் ஏற்படலாம். நாம் மனமுவந்து நம்மை அவர் கைகளில் ஒப்புகொடுக்கும்போது அவர் நம்மை அவருடைய சாயலாக மாற்றுகிறார்.

புடவைகள் சல்வார்களில் எம்ப்ராய்டரி வேலைகளைப் பார்க்கும்போது பூக்கள் மற்றும் பொம்மைகளின்  அழகான, வடிவமைப்புகளை பார்க்கிறோம், ஆனால் அதற்கு முன் அதே வடிவமைப்பை நூற்றுக்கணக்கான முறை ஊசிகளால் துளைத்து ஒரு பூ அல்லது பொம்மையில் பல வண்ண வடிவமைப்பை உருவாக்கப்படுகிறது.

1சாமுவேல் 1 – இல் அன்னாள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று மனம் கசந்து  மிகவும் அழுதாள்.  ஏன்? ஏனென்றால் பெனின்னாள் அவளை மனம் நோகச் செய்தாள். எனவே, அன்னாள் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருக்கு முன்பாக தன் இருதயத்தின் பாரத்தை இரக்கி வைத்தாள். அதற்குபின் தான் தீர்க்கதரிசி சாமுவேல் பிறந்தான்.

நம்முடைய இருதயம் நொருங்கியிருக்கும்போது, மற்றவர்களால் கைவிடப்பட்டிருக்கும்போது, இது கர்த்தருடைய சாயலை நம்மில் உருவாக்குவதற்காகத்தான், கர்த்தருடைய சித்தத்தை செய்யத்தான், நம்மில் ஒரு தீர்க்கதரிசி உருவாகத்தான்.

யோசுப்பு கூட  ஜெயிலில் இருக்கும் போது இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்துதான் சென்றான். ஆதி 39:20,21 சொல்லுகிறது யோசுப்பு தனியாக இல்லை அவனோடு தேவன் இருந்தார். அவருடைய கிருபை யோசேப்புக்கு ஜெயில் அதிகாரியின் கண்களில் கிருபை கிடைக்கச் செய்தது.

நம்முடைய எல்லா வழிகளிலும், இயேசு கிறிஸ்துவின் சாயலை நாம் பிரதிபலிக்க வேண்டும் எனவும், கர்த்தருடைய சித்தம் நம்மில் நிறைவேற வேண்டும் எனவும் அவர் விரும்புகிறார்.

சாட்சி

தன்னுடைய 40 வது வயதில் என் தாய் என்னை கர்ப்பம் தரித்தாள். உடல் பலவீனத்தின் காரணமாக அநேக முறை கரு கலைப்பு செய்ய என் தாய் முயற்சித்தாள் ஆனால், என் தாயின் கருவிலே தேவன் என்னை காப்பாற்றினார். என்னுடைய 52 வயது வாழ்க்கையில் அநேக முறை கர்த்தர் என்னை உடைத்தார், உருவாக்கினார், புதிதாக்கினார். கர்த்தருடைய சித்தம் என்னில் நிறைவேற நான் என்னையே அவர்கையில் ஒப்புகொடுத்தேன். சங் 119:73 – உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, அனைத்தையும் படைத்த சிருஷ்டிகரே, என்னை என் தாயின் வயிற்றிலே காப்பாற்றியெ அன்பு தெய்வமே, உம்மை ஆராதிக்கிறேன். இயேசப்பா, என்னுடைய வாழ்க்கை உமக்காக, உம் சித்தம்போல என்னை உருவாக்கும் பிதாவே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே. ஆமேன்.

Sol.Rani

தானியேல் – II

நாள்:09-04-2022 – தேவ செய்தி

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.

-லூக் 21:4.

நீ கொடுக்கும்போது நீ என்ன கொடுக்கிறாய் என்பதை அல்ல, உங்கள் இதயத்தைப் பார்கிறார்.

கர்த்தருடைய பொருளாதாரம் என்பது நீங்கள் கொடுக்கும் தொகையை அல்ல, ஆனால் அதற்காக நீங்கள் செய்யும் தியாகத்தைத்தான்.

ஆலயத்தின் வளாகத்தில் ஒரு பெரிய பெட்டியில் மக்கள் எல்லாரும் பார்கும்படி தங்கள் பணத்தை போட்டனர்.  திறந்த இடத்தில் இந்த பெட்டி இருந்ததால் மக்கள் அனைவரும் யார் எவ்வளவு பணம் போடுகிறார்கள் என்று பார்க்க முடிந்தது. அதிகமாக பணம் போடுகிறவர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈசியாக ஈர்ப்பார்கள்.

செல்வந்தர்கள் தாராளமாக காணிக்கை கொடுப்பதையும், சந்தையில் மதிப்பே இல்லாத பணத்தைப் போட்ட ஏழை விதவையும் இயேசு பார்த்தார்.  

-மாற்கு 12:41-42.

மக்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை அல்ல, எப்படிகொடுத்தார்கள் என்பதைத்தான் பார்த்தர். அந்த விதவை எல்லாரையும் விட அதிகமாக போட்டாள் என்று அவர் கருதினார், ஏனென்றால் காணிக்கையாக கொடுக்கப்பட்ட பணத்தை வணிக மதிப்பால் அவர் அளக்க வில்லை, ஆனால் கொடுப்பவரின் தியாகத்தை கொண்டே அளந்தார்.

அவருடைய ராஜ்யத்தில் பணம் அல்ல, உண்மையான நம்பிக்கை கொண்டுள்ள இருதயமே அதிக மதிப்புடையது.

மாற் 12:43-44.

கர்த்தருடைய பொருளாதாரத்தில் குறைவாக கொடுக்கும் அநேகர் அதிகமாக கொடுக்கின்றனர். எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. என்ன தியாகம் செய்கிறோம்? அதை கொடுக்க உனக்கு என்ன இழப்பு?

வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு  களத்தை வாங்க அர்வானிடத்திற்கு சென்றான். அர்வானா, தாவிதுக்கு அதை இலவசமாக கொடுக்க முயன்றான் ஆனால் தாவீது, “நான் இலவசமாய் வாங்கி என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல் அதை உன் கையிலே விலைகிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி அந்தக் களத்தையும், மாடுகளையும் ஐம்பது சேக்கேல் நிறை வெள்ளிக்கு கொண்டான்.” இலவசமான எதையும் நான் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்க மாட்டேன். கர்த்தருக்கு நீங்கள் கொடுப்பதற்கு என்ன செல்வாகிறது. இதைத்தான் கொண்டுதான் கர்த்தர் நம்முடைய காணிக்கையை மதிப்பிடுவார்.

கொடுப்பவரில் நம்பிக்கை வைப்பது

யாக்கோபின் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம், எல்லா நன்மைகளையும் நமக்கு கொடுப்பவர் கர்த்தரே.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

யாக் 1:17.

எனவே, விசுவாசத்தோடு நாம் பலியாக கொடுத்ததெல்லாம் கர்த்தரால் இரட்டிப்பாக மீட்கப்படும்.

ஜெபம்

அன்பின் தேவனே, நீர் கொடுப்பவர் என்பதை அறிந்து கிறிஸ்துவில் உள்ள சக வீரர்களின் தேவையை உணர்ந்து செயல்பட எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் விசுவாசத்தில்  விதைக்கும் அனைத்தையும் பலமடங்கு திரும்பப் பெற்றிட உதவி செய்யும்.ஆமேன்

Sol. Raymond Amanna

தானியேல் – II

நாள்: 08-04-2022 – தேவ செய்தி

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

-எபி 1:3

“சர்வத்தையும் தம்முடைய வல்லமியுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்” – என்ற வசனத்தின் மீது  நம்முடைய கவனத்தை திருப்புவோம்.

கர்த்தருடைய முழுமையான பிரதிபலிப்பான இயேசு   தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலம் இந்த உலகை தாங்குகிறார். அவருடைய வார்த்தைகள் உலகத்தையே தாங்ககூடிய வல்லமையுள்ளதாய் இருக்குமேயானால் இவ்வுலகில் எதைப்பற்றியும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இந்த பெரிய அற்புதமான தேவன், நம்மை பாவம் மற்றும் அதன் தண்டனையிலிருந்து விடுவிக்க, நமக்காக பலியாக இந்த பூமியில் இறங்கி வந்தார். அவருடைய ஒரு வார்த்தையின் மூலம் இந்த உலகம் உருவாக்கப்பட்டது. ஆதி 1-2:1.

மத் 28:18 – அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்கு 16:17-18 – அவருடைய நாமத்தில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப் படுகிறது. நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது  அவரிடமிருந்த அதே வல்லமையும் அதிகாரமும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த வல்லமையை பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு கொடுக்கிறார்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவா 1:14

கர்த்தருடைய வார்த்தை உண்மையில் இயேசுதான். எனவேதான் நாம் கட்டிட சபைக்கு செல்லும்போதோ, சில பாடல் பாடும்போது, மற்றும் சில காரியங்களை செய்யும் போது எதிரியாகிய சாத்தான் நடுங்குவது இல்லை.  வார்த்தையின் ஆழத்திற்கு போகும்போதுதான் அவன் பயப்படுகிறான். தேவ வார்த்தையில் வல்லமை உண்டு என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான்.  (1கொரி 1:18). எதிரிக்கு தெரியும்  சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவா 8:32.

அவருடைய வார்த்தை உங்களை பாவத்திலிருந்து விடுதலையாக்கும், முற்றிலும் உங்களை மாற்றும், உங்கள் வாழ்வை மாற்றிபோடும்.  சம்மட்டியைபோலவும், நெருப்பைப் போலவும் பாறைகளை உடைத்து நொருக்கும்.  உங்கள் பாதையில் வரும் ஒவ்வொரு தடைகளையும் அது நொருக்கிபோடும். பேசப்பட்ட அந்த வார்த்தைதான் மரித்த லாசருவை உயிரொடு எழுப்பியது. அது வெறுமனே திரும்பாது. (ஏசா 55:10-11).  வார்த்தை சுகமாக்கும், விடுதலையாக்கும், அசுத்த ஆவிகளை எடுத்துபோடும்.  அதனால்தான் நூற்றுவ தலைவன் சொன்னான், ஒரு வார்த்தை சொல்லும் என்னுடைய சேவகன் குணமாவான் என்று. (மத் 8:8).

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

மத் 22:29.

எனவே, கர்த்தருடைய வார்த்தையால் இந்த பிரபஞ்சத்தை நிலைநிறுத்த முடிந்தால், இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள், அல்லேலூயா!

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, எங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கும் உம்முடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசுவுக்கு நன்றி.  எங்கள் வாழ்விலன் அந்தகார வல்லமையையும்,  எங்கள் வாழ்வை அழிக்க நினைக்கும் எதிரியின் ஒவ்வொரு திட்டங்களையும் நொருக்கிபோடும்  அக்கினையைப் போலும், கன்மலையை நொருக்கும் சம்மட்டியைப் போல் இருக்கும் உமது வார்த்தைக்காக நன்றி. இதை படிக்கும் ஒவ்வொருவரும் கர்த்தருடைய வார்த்தையில் வளர்வார்களாக, வல்லமையில் நடப்பார்களாக, அவர்களுடைய வாழ்வில் மகிமையின் மேல் மகிமை அடைவார்கள்ளாக, இயேசுவின் இணையற்ற நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமேன்.

Sol.Lalitha Menon

தானியேல் – II

நாள் :07-04-2022 – தேவ செய்தி

வழக்கத்தால் சலிப்பு? தாமதங்களால் விரக்தியா? நம்பிக்கை இழந்து விட்டீர்களா?

கொள்கை:

இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் அவருடைய இலக்கும், நம்முடைய வாழ்வு மற்றும் இலக்கு என்ற புரிதலில் நாம் வளர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் .

-2கொரி 4:18

அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்.

-அப்போ 5:41

பவுலின் துன்பங்கள் அவர் அப்போஸ்தலராய் இருப்பதை திடப்படுத்தியது. 2கொரி 11:24-27 – “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.”

அநேக வருடங்களாக அவர்பட்ட எல்லா கஷ்டங்களும், துன்பங்களும் இந்த நான்கு வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் கூட தான் சொல்லபோகும் செய்தி அநேகரால் புறக்கணிக்கப்படுமே அல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிந்தும் பவுல் தன்னுடைய தேவ அழைத்தலில் விட முயற்சியுடன், உழைப்பிலும், கஷ்டத்திலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் ஊர் ஊராய் சென்று நற்செய்தியை போதித்தார்.  தனக்கு சிறப்பாக எதையும் எதிர்பார்க்காமல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அவர் போதித்தார். ஆனால் அவர் ஆண்டுதோறும், மைலுக்கு மைல், கிராமத்திற்கு கிராமம், அடிக்குபின் அடி வாங்கியப்பின்னும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்தார். ஆம், வெற்றி வழிகளில் கிடைத்தது; சிலுவையின் வல்லமையை நாம் நிராகரிக்க முடியாது. அதேவேளையில் அதன் வலி, வேதனையையும் நிராகரிக்க முடியாது.

20 ஆம் நூற்றாண்டின் பெரிய வியாதிகளில் ஒன்று பொருமையின்மை. நாம் எதை செய்தாலும் அதில் உடனடி வெற்றியை எதிர்பார்கிறோம். நம்முடைய முயற்சி வெற்றி அடையவில்லையெனில் உடனே வேறு ஒன்றிற்கு மாறிவிடுகிறோம். நம்முடைய அன்றாட வாழ்க்கைமுறைகள் நம்மை உற்சாகம் இழக்க வைக்கலாம், தாமதங்கள் நம்மை விரக்தி அடையச்செய்யலாம்.

பவுல் தெசலோனிக்கேயருக்கான நிரூபத்தில் சொல்லுகிறார்,

சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.

-1தெச 2:9.

ஆயினும் கூட பவுல் தனது அழைப்பில் விடாமுயற்சியுடன் இருந்தார், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்றார் (சில சமயங்களில் விருப்பமின்றி) என்ன நடந்தாலும், யார் கைவிட்டாலும் நற்செய்தி அறிவிப்பதை அவர் கைவிடவே இல்லை.

நம்முடைய தேவ அழைத்தலுக்கு பவுலுடைய அப்போஸ்தலத்துவத்தை நேரடியான மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பவுல் ஒவ்வொரு மலையாக கடந்துசெல்வது, உறுதியுடன் கஷ்டமான பாதைகளில் பயணிப்பது,  தன்னுடைய ஓட்டம் முடியும்வரை என்ன நடந்தாலும் ஊர் ஊராய் சென்று நற்செய்தியை அறிவிப்பது என இவைகள் எல்லாவற்றிலிருந்தும் நாம் ஊக்கத்தை பெறலாம்.

சிந்தனை:

தாங்கள் சந்தித்த உலகபிரகாரமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பரலோகத்திற்கான கண்ணோட்டத்தை வளர்ப்பதன் ரகசியத்தை பவுல், பேதுரு மேலும் மற்ற சீடர்கள் கற்றுக்கொண்டனர். கிறிஸ்துவுக்குள் தாங்கள் யார், எங்கு செல்கிறோம் என்பதை அவர்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டதால், துன்புறுத்தப் பட்டாலும், அடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் அந்த சூழ்நிலைக்கு மேல் வாழ முடிந்தது மேலும் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்தது. அதனால்தான் தான் ஜெயிலில் இருந்த போது கூட பவுலால் இப்படி எழுத முடிந்தது, நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்கே, மரித்தாலும் இயேசுவுக்கே.

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

-2 கொரி 4:18.

Sol. Gerard Fernandes