தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-03-2023

பரலோக பொக்கிஷங்கள்

“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.”

மத்தேயு 6 : 20

நான் ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருந்திருந்தால் , நான் 70 – 80 வயது வரை வேலை செய்துகொண்டிருந்திருப்பேன் , என்னுடைய மகனுக்கு உதவி செய்திருப்பேன் மட்டுமல்ல் வெளிநாட்டில் நாங்கள் நிலையாக இருந்திருப்போம் என்று அடிக்கடி உணர்வேன். இந்த வழிகளில் நான் அதிகமாக பணம் சம்பாதித்திருக்க முடியும். இந்த எண்ணங்கள் என்னுடைய சிந்தனையில் என்னுடைய எண்ணத்தில் வந்தபோது பரிசுத்த ஆவியானவர் என்னுடன் பேசினார். இந்த பூமியுடன் உலக வாழ்க்கை முடிந்துவிடும்.  மக்கள் அதிகமாக போராடிக் கொண்டிருக்கும் இந்தப்பணம் என்னை விட்டு போய்விடும் . இதனால் எனக்கு எந்த ஒரு பலனும் இல்லை. என்னுடைய எண்ணத்தில் ஒரு கேள்வி வந்தது. என் நித்திய வாழ்விற்காக உண்மையில் நான் எதைச் சேமித்தேன். என் முழு வாழ்க்கையையும் நான் எங்கே செலவிடுவேன். ?

இந்த பூமியில் என்னுடைய கடைசி நிகழ்வுகளைப்  பற்றி சிந்திக்க  முயன்றேன். என்னுடன் எடுத்துச்  செல்வதற்கும் கர்த்தரிடம் சமர்ப்பிப்பதற்கும் எதுவும் இல்லை என்று உணர்கிறேன். என்னுடைய பரலோக வாசத்திற்காக நான் உண்மையில் என்ன சேமித்தேன் என்று தான்  யோசித்தேன். எனக்கு இந்த சிந்தனைகள் வந்தவுடன் நான் அமைதியின்மையை உணர்ந்தேன். தேர்வு எழுதச் செல்லும் மாணவனுக்கு ஒருவருட பாடங்களை ஒன்றுமே படிக்காமல் தேர்வு எழுதச்  சென்றால் என்ன உணர்வு இருக்குமோ அதுவேதான் எனக்கும் இருந்தது.

லூக்கா 9 : 25 ”  மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்திக் கொண்டால் அவனுக்கு என்ன லாபம் ? “

மத்தேயு 6 : 33

” முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் , அப்பொழுது இவைகளெல்லாம் கெட உங்களுக்கு கொடுக்கப்படும். “

இதன் அர்த்தம் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நாம் இரண்டு வகையான லாபத்தை பெறலாம்.  நாம் பரலோக பொக்கிஷங்களையும் சேகரிக்க முடியும் அதே சமயத்தில் உலகரீதியான நம்முடைய தேவைகளையும் கர்த்தர் வழங்குவார். அல்லேலூயா !!!!

லூக்கா 5 : 1 – 11  வரையுள்ள வசனங்களில் பேதுரு இரவு முழுதும் போராடுகிறார், ஆனால் வலையில் ஒரு மீன் கூட கிடைக்கவில்லை.அது தான் வருமானத்திற்குரிய  ஒரே ஒரு ஆதாரம் .

ஆனால் எப்போது தன்னுடைய வாய்ப்புகளை கிறிஸ்து  பயன்படுத்திக் கொள்ள ஆனுமதித்தாரோ   அவருக்கு செவிமடுத்து கீழ்படிந்தாரோ ,  வலை கிழியுமளவுக்கு அதிகமான மீன்கள் கிடைக்க கிறிஸ்து உதவி புரிந்தார்.நாம் எப்பொழுது நம்மையும் நம்முடைய ஆதாரங்களையும் முழுவதுமாக  கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கிறோமோ , நாம் அளவிடமுடியாத நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

ஜெபம்

பரலோகத் தந்தையோ ,  நாங்கள் உமது பிரசன்னத்தையும் , உம்முடைய ராஜ்யத்தையும்   எப்போதும் தேடுவதை நோக்கியே இருக்க  உமது கிருபையை  வேண்டுகிறோம். உலகப் பொக்கிஷங்களுக்காக இரவும் பகலும் உழைப்பதைவிட பரலோக ராஜ்யத்தை எப்போதும் தேட எங்களுக்கு உதவும். இந்த ஆசீர்வாதத்தை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம். ஆமென்.

Sol. வத்சலா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-03-2023

விசுவாத்தினால் வாழ்வது

எபிரேயர் 11 ம் அதிகாரம் விசுவாசம் என்பது என்ன என்று சொல்வதில் தொடங்குகிறது.

எபிரேயர் 11 : 1

” விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.  நம்பப்படுகிறவைகளின் விஷயங்கள் என்று குறிப்பிடப்படுவது  கர்த்தர் வாக்குறுதி கொடுத்த விஷயங்கள் என்று உறுதியாகக் கூறலாம்.

“காணப்படாதவைகளின்  என்பது கர்த்தர் வெளிப்படுத்தியவைகள் என்று கொள்ளலாம்.  எனவே விசுவாசம் கர்த்தர் வெளிப்படுத்தியவைகளை நம்புகிறது. கர்த்தர் கொடுத்த  வாக்குறுதிகளின் மேல் நம்பிக்கை வைக்கிறது.

இப்போது விசுவாசத்தினால் வாழ்வது என்றால் என்ன அர்த்தம் ?  கர்த்தர் நிஜ வாழ்க்கையின் உதாரணங்களை சுட்டிக் காட்டி நமக்கு கற்பிக்கிறார். அவை ஒவ்வொன்றும் விசுவாசத்தின் தனித்துவமான அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஆபேலைப் பார்க்கும்போது விசுவாசம் கர்த்தருக்கு செவிசாய்க்கிறது என்பதை அவரது கதையிலிருந்து காண முடியும். ஆபேல் நீதிமானாக பாராட்டப்பட்டார். ஏனென்றால் அவரது பலியை கர்த்தர் ஏற்றுக் கொண்டார்.  அவன் தன் மந்தையில் முதன்முதலாக பிறந்த ஆட்டுக்குட்டியை காணிக்கையாகக் கொடுத்தான். கர்த்தருக்காக ஒரு உயிர் கொடுக்கப்பட்டது.

ஆபேல் மந்தையிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டியை பலியிட்டது , உலகத்தின் பாவத்தைப் போக்கும் கர்த்தரின் ஆட்டுக்குட்டியான இயேசுவை நோக்கி செல்கிறது.

யோவான் 1 : 29 ” யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு ; இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றார். “

ஆட்டுக் குட்டியை காணிக்கை செலுத்துவது , ஆபேல் கர்த்தரின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்கு அடையாளமாக இருந்தது. இயேசு சிலுவையில் நமக்காக உயிரைக் கொடுத்தபோது அந்த வாக்குறுதி நிறைவேறியது. கர்த்தர் தம்முடைய ஒரே மகனை நம் பாவங்களுக்கு பலியாக ஒப்புக் கொடுத்தார்.

ஆதாமுக்கும் ஏவாளுக்கும்  தோலினால் ஆன ஆடையை உருவாக்கிய போது கர்த்தர் அதை வெளிப்படுத்தியதால் , ஆபேலுக்கு ஒரு உயிர் கொடுக்கப்படவேண்டும்  தெரிந்திருந்தது.

கர்த்தர்  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பலியை வெளிப்படுத்தினார். கர்த்தர் வெளிப்படுத்தியதற்கு விசுவாசம் செவிசாய்க்கிறது.

எபிரேயர் 11 ம் அதிகாரம் விசுவாசத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கிறது. இன்று நாம் ஏனோக்கின் கதைக்கு வருவோம்.

எபிரேயர் 11 : 5

” விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தை காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். அவன் தேவனை எடுத்துக் கொண்டபடியினாலே அவன் காணப்படாமற் போனான். அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னே சாட்சி பெற்றான்.

ஏனோக்கின் கதை,  ஆதியாகமம் 5 ல் ஆதாம் முதல் நோவா வரையுள்ள கர்த்தரின் தலைமுறையில் திரும்பவும் சொல்லப்படுகிறது.

தலைமுறைகள் பதிக்கப்பட்டுள்ளன. நாம் இங்கே ஆதாம், சேத், எனோஸ், கேனான், மகலேலாள், ஜேர்த், ஏனோக், மெதுசலா, லாமேக், நோவா என்று வாசிக்கின்றோம்.

இரண்டு கேள்விகள்:

1. ஏன் இந்தப் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன?

லூக்கா 3  ம் அதிகாரம் இறுதியில் இயேசு கிறிஸ்து பிறந்த தலைமுறையின் வரிசையைப் பார்க்கலாம்.  இது என்னவென்றால் அவர்களுக்கும் இயேசுவுக்குமுள்ள உறவு முறையாகும். நிச்சயமாக இறுதியில் நம் அனைவருக்கும் முக்கியமானது.

ஜோசப் பார்க்கர் கூறுகிறார், ஆதியாகமத்தின் ஐந்தாவது அதிகாரம் மனித வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமற்ற கதாபாத்திரங்களின் நீண்ட தொடரின் தொடக்கமாகும். எனோஷ், மகலேலாள், போன்ற மனிதர்கள் மரியாதைக்குரிய போற்றத்தக்க அமைதியானவர்கள். இவர்கள் சாதாரணமாக இருந்து மரித்துப் போனவர்கள்.

உங்களைப் பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் ? சமூக ஊடகங்களில் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்? என்பது அல்ல. இது நீங்கள் சாதித்த பெரிய விஷயங்களின் பட்டியல் அல்ல. இயேசுவோடு நீங்கள் வைத்திருக்கும் உறவு என்ன என்பதுதான்.

2 . ஏன் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்தனர்?

இந்த தலைமுறையினரின் ஆயுட்காலம் இன்றைய நமது வாழ்க்கையைப் போல பத்து மடங்கு அதிகம்.

ஆதாம் 930 ஆண்டுகள் வாழ்ந்தார். ( ஆதி : 5 : 5 )

சேத் 912 ஆண்டுகள் வாழ்ந்தார். ( ஆதி : 5 :8 )

ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்தார். ( ஆதி : 5 : 11)

ஆதிகாலத்தில் மனிதனின்  ஜனத்தொகையை பெருக்குவதற்கு  கர்த்தருடைய ஏற்பாடுகள் இவை. நோவாவின் காலத்திற்கும், வெள்ளப் பெருக்கிற்கும் பிறகு  மனிதனுடைய ஆயுட்காலம் நாம் பயன்படுத்துகின்றதைப் பொறுத்து  வேகமாகக் குறைந்தது.

இந்த முதல் தலைமுறையினர் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் அவர்களுக்குப் பொதுவான ஒன்று இருந்தது. அவர்கள் இறந்தனர், அவர்கள் இறந்தனர் , அவர்கள் இறந்தனர் என்பதுதான் இது.

ஆனால் இதில் ஒரே ஒரு விதிவிலக்கு இருந்தது. ஏனோக்கு தேவனோடு நடந்தான், அவர் அவனை எடுத்துக் கொண்டார். 

ஆதியாகமம் 5 : 24 ” ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணாமற்படப்போனான், தேவன் அவனை எடுத்துக் கொண்டார். “

கர்த்தர் தம்மை தேடுபவர்களுக்கு பலன் அளிக்கிறார். எஎன்று எபிரேயர் 11 : 6 ல் வாசிக்கக் கேட்கிறோம். கர்த்தரைத் தேடுவதற்கான வெகுமதி அவரைக் காண்பதாகும் . தம்முடைய பிரசன்னத்தில் நிலையான சந்தொஷத்தில் வாழ கர்த்தர் நம்மை அழைக்கிறார். நாம் அவரைத் முழு இருதயத்தோடு தேடினால் அவரைக் கண்டுபிடிப்போம்.  ஆமென்.

Sol.  பவுலோஸ்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-03-2023

விசுவாசத்தின் முக்கியத்துவம்.

சங்கீதம் : 12 – 1

”  இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப் போகிறான், உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.”

நீங்கள் சரியானவர்கள் இல்லை என்று கண்டாலும் உங்களோடு இருக்கின்றவர்களில்  உண்மையான விசுவாசம் வைத்திருப்பவர்களை கண்டுபிடிப்பது கடினம்.

நீதிமொழிகள் 17 : 17

” சிநேகிதன் எல்லாக் காலத்திலும் நிநேகிப்பான் , இடுக்கண்ணில் உதவவே சகோதரன்  பிறந்திருக்கிறான். “

வேறு  வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் உங்களுடைய உண்மையான நண்பன்,  உங்களின் இனிமையான நாட்களில் அல்ல உங்களின் கடினமான நேரங்களிலும் உடனிருப்பவன் தான். இப்படிப்பட்ட விசுவாசமும் அர்ப்பணிப்பும் இல்லாதவர்கள்  நம்மோடு இருப்பது நமது வாழ்க்கையில் கவலைக்குரிய விஷயங்களில் ஒன்று என்பதை நம்புகிறோம். நிறைய மக்கள் இதை தவற விடுகிறார்கள். காரணம் ,அவர்கள் இறுதிவரை விசுவாசமாக இருப்பதில்லை என்பதை கண்கூடாகக் காண்கிறோம். இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் , அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் தவறவிட்ட ஆசீர்வாதங்களை ஒருபோதும் உணரமாட்டார்கள். இந்த சங்கீதத்தின் அடுத்த வசனத்தில் தாவீது , மக்கள் வஞ்சகமான இரட்டை இதயத்துடன் , பயனற்ற உண்மைக்கு மாறான வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்று தொடர்ந்து கூறுகிறார். இரு மனம் மற்றும் தேவையற்ற வார்த்தைகளைப் பேசாமலும் ,தங்கள் இருதயத்தை இணைக்கக்கூடிய ஒரு மனம் கொண்ட ஆணும் பெண்ணும் தேவை. ஏனென்றால் இருமனம் கொண்ட மக்கள் ஒரு நாள் ஒன்றும் அடுத்த நாள் வேறொன்றையும்  நம்புவார்கள். ஒரு நாள் உங்களை நேசிப்பார்கள் அடுத்த நாள் அதை  செய்வதில்லை. அவர்கள் இன்று உங்களுக்காக இருப்பார்கள். அடுத்த நாள் உங்களுக்கு எதிராக இருப்பார்கள்.

வேதாகமம் விசுவாசமுள்ள  மக்களின் பல உதாரணங்களை நமக்குத் தருகிறது. அவர்களில் ஒருவர் மோசே. கர்த்தருடைய எல்லா நிலைகளிலும் அவர் விசுவாசமாக இருந்தார்.

எண்ணாகமம் 12 : 7

“என் தாசனாகிய மோசே அப்படிப்பட்டவன் அல்ல. என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். ” இதன் அர்த்தம் , தான் விசுவாசம் உள்ளவனாக நினைக்காதபோதும் , அவன்  தன்னுடைய கடமைகளை நாளுக்கு நாள் , மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம்   சரியாகச் செய்வதன் மூலம் கர்த்தருக்கு  விசுவாசமுள்ளவனாகவே இருந்தான். மோசே மிகவும் உண்மையுள்ளவராகவே இருந்தார். அவருடைய சகோதரி மிரியாமும், சகோதரர் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசிய போதும் அவர் அவர்களை நேசித்தார். அவர்களுக்கு உண்மையாகவே  இருந்தார். அவருடைய வாழ்க்கையிலுள்ள மனிதர்கள் அவரை சரியாக நடத்தாதபோதும் அவர் தன்னுடைய நடத்தையில்  அதிக விசுவாசமுள்ளவராகவே இருந்தார் .

நாம் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது.

2 தீமோத்தேயு 2 :13 “நாம்

உண்மையில்லாதவர்களாக இருந்தாலும் , அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் தம்மைத் தாம் மறுதலிக்க மாட்டார். ” நாமும் அவ்வாறே இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். ஒவ்வொருவரும் விசுவாசத்தில் இருந்தால் , நாமும் விசுவாசத்திலே இருப்போம். நீங்கள் மட்டுமே சிறந்தவராக இருப்பதாக நினைத்தால் , நீங்கள் மட்டுமே மன்னிப்பவராக இருந்தால் , நீங்கள் மட்டுமே சரியானவற்றைச் செய்ய முயற்சிப்பவராக இருந்தால் அவ்வாறே தொடர்ந்து செய்யுங்கள்.

நீங்கள் மன அழுத்தத்தில் மூழ்குகிறோம் என்று நினைக்கும் போதெல்லாம் , அது எவ்வளவு நாட்கள்  தொடர்ந்தாலும்  நாம்  கண்டிப்பாக நம்பிக்கையில் நிலைத்து  நின்று கர்த்தரிடம் தொடர்ந்து மன்றாட வேண்டும் . வேதாகமம் சொல்கிறது ,  அத்தகைய வேலையாட்களிடம் வேண்டப்படும் ஒன்று, அவர்கள் தங்கள் எஜமாருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

நாம் ஒரே நேரத்தில் கர்த்தருக்கும் பணத்திற்கும் சேவை செய்ய முடியாது . எல்லா நேரத்திலும் கர்த்தரையே சார்ந்து இருக்க வேண்டும். அவர் பிரத்யேகமான உண்மை விசுவாசத்தை வலியுறுத்துகிறார். அதன் ஒரு பகுதியை அல்ல.

ஜெபம்

பரலோகத் தந்தையே, எந்த நிபந்தனையுமின்றி எங்களை நேசிக்கிறீர். உமது அற்புதமான அன்பினால் எங்கள் இதயத்தை நிரப்பும். அதனால் நாங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களின் பாத்திரமாக இருக்க முடியும். அதன் வழியாக உம்முடைய நாமம் மகிமைப்படட்டும். ஆமென்.

Sol. கமல்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 11-03-2023

” அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு,  சக்கேயுவே நீ சீக்கிரமாய் இறங்கி வா , இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு போனான். “

லூக்கா 19 : 4 – 6

கிறிஸ்து இயேசு பாவிகளை இரட்சிக்க உலகத்திற்கு வந்தார் என்று 1 தெசலோனிக்கேயர் 15 கூறுகிறது. ஆம் இயேசு பாவிகளை இரட்சிக்கவே உலகத்திற்கு வந்தார். சக்கேயுவின் இந்தக் கதையில் அவனுடைய நடவடிக்கை , செல்வமும் சக்தியும் நிறைந்த மனிதனாக இருந்தாலும் கண்ணியமற்றதாகவே இருக்கிறது. ( அவன் முன்னதாகவே ஓடி காட்டத்தி மரத்தின் மேல் ஏறினான். ) இது இயேசுவின் மீதுள்ள உண்மையான ஆர்வத்தைக் காட்டுகிறது. 

இயைசு நம்மை  அழைக்கும்போது , உடனடியாக  விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் பதிலளிப்பதையே நம்மிடம் விரும்புகிறார். இயேசுவின் சீடர்களும் அவர் அழைத்தபோது இதையே செய்தார்கள். அவர்கள் உடனடியாக தங்களுடைய வலைகளை விட்டு அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

மத்தேயு 4 : 20 – 22

”  உடனே அவர்கள் வலைகளைவிட்டு , அவருக்குப் பின் சென்றார்கள். அவர் அவ்விடம்விட்டு போகையில் , வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படகிலிருந்து , தங்கள் வலைகளை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் படகையும் தங்கள் தகப்பனையும் விட்டு அவருக்குப் பின் சென்றார்கள். ” 

சில சமயங்களில் நம்முடைய அழைப்பு நமது வேலைகளிலிருந்து , குடும்பத்திலிருந்து , நமக்கு பிடித்தமானவைகளை விட்டு முழுமையாக, ஆபிரகாம் அழைக்கப்பட்டதைப் போல இருக்கலாம். சில நேரங்களில் நாம் , கிறிஸ்துவுக்குள் மாற்றப்பட்ட மனிதனாக , பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுபவர்களாக,  இருக்கும் இடத்திற்கு ஒளி கொடுப்பதற்காக நிலை நிறுத்தப்படலாம். அவருடைய அழைப்பை புறக்கணிக்க வேண்டாம் என்று வேதத்தில் நமக்கு நியாயமான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

யோவான் 12 : 48

” என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்று இருக்கிறது. நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும். “

இயேசுவின் மகிழ்ச்சியை நம் இதயங்களிலும் வாழ்விலும் முழுமையாக பெற வேண்டும். அப்படிச் செய்யும் போது கர்த்தர் நம் வீட்டைக் கட்டுவார். நமது நிலை , கடந்த காலம் அல்லது எதைக்குறித்தும் அவர் கவலைப்படுவதில்லை. நாம் நமது நிலைகளிலிருந்து, கடந்த காலத்திலிருந்து, நமது வசதியான சூழ்நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டும். நாம் அவருடன் நெருக்கமாக இருந்தால் நமக்கு நித்திய ஜீவனை அளிக்கும் தெய்வீக மன்னாவை நமக்கு உணவாக அளிப்பார். சக்கேயுவும் தன்னுடைய வீட்டின் கதவுகளை இயேசுவுக்காகத் திறந்து விட்டதால் கர்த்தருடன் சமாதானம் செய்து , மற்றவர்களிடமிருந்து எடுத்த அனைத்தையும் நான்கு மடங்காகத் திருப்பித் தந்தார். அவர் தனது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்க உறுதி பூண்டார். நாம் நமது கடந்தகால தவறுகளுக்காகவும் , தோல்விகளுக்காகவும் மனம் திருந்தி கர்த்தருடன் சமாதானம் செய்ய வேண்டும்.

சக்கேயுவின்  இயேசுவைத் தேடும் ஆர்வத்தினால்  இயேசுவினுடைய தெய்வீக வருகை அவருக்கு பரிசாக கிடைத்தது. சக்கேயு தன்னுடைய வாழ்க்கையில் , குள்ளமான உருவம் , ஊழல், கெட்ட பெயர் போன்ற எதிர்மமறையானவைகளைக்  கொண்டிருந்தார். ஆனால் அவன் இயேசுவின் பின்னால் ஓடிய பிறகு எல்லாம் மாறியது. அவனுடைய வீட்டிற்கு வந்த பிறகு இயேசு இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே என்று கூறினார்.

நாமும் இயேசுவின் பின்னால் ஓடினால் நமது வாழ்க்கையும் மாற்றப்படும். சக்கேயு விருந்தோம்பல் செய்து தன் வாழ்வில் இயேசுவுக்கே முதலிடம் கொடுத்தார். இயேசுவின் வார்த்தையைக் கேட்பதும் அவருக்கு கீழ்படிவதும் நமக்கு  வாழ்க்கையில் முதன்மையான மகிழ்ச்சியைத் தரும்.

ஜெபம்.

பரலோகத் தந்தையே  நாங்கள் உமது வார்த்தையைக் கேட்டு , உமக்கு எப்பொழுதும் கீழ்படிய விரும்புகிறோம். அதை எப்போதும் செய்ய எங்களுக்கு உதவி புரியும் . இயேசுவின் விலைமதிப்பில்லாத நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 10-03-2023

கிறிஸ்துவுக்கும் நம்முடைய  சகோதரர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருந்து நம்முடைய சகோதரத்தை மேம்படுத்துதல்.

 நாம் நல்லதோ, கெட்டதோ என்ன நடந்தாலும் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும். அப்பா பிதா நமக்கு கற்றுக் கொடுக்கிறார். சரியான நேரத்தில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார். சில சமயங்களில் நமக்கு சில சோதனைகளை துன்பங்களைத் தருகிறார். ஆனாலும் அவர் நம்மைவிட்டு விலகுவதில்லை.

மனிதகுலத்திற்கு நேரிடுகிற பொதுவான சிலவற்றைத் தவிர வேறு எந்த சோதனையும்   நமக்கு நேரிடுவதில்லை. கர்த்தர் உண்மையுள்ளவர். உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அவர் உங்களை சோதிக்க விட மாட்டார். ஆனால் நீங்கள்  சோதிக்கப்படும்போது அதை தாங்கிக் கொள்ள அவர் ஒரு வழியையும் தருவார்.

1 கொரிந்தியர் 10 : 13

மத்தேயு 4 : 1 – 11  வரையுள்ள வசனங்களை வாசிக்கும் போது, இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக பரிசுத்த ஆவியினால் பாலைவனத்திற்கு  கொண்டுபோகப்பட்டார். நாற்பது பகலும் நாற்பது இரவும் உண்ணா நோன்பு இருந்ததால் பசியுடன் இருந்தார். பிசாசு அவரிடம் வந்து நீர் பிதாவின் குமாரனாக இருந்தால் இந்தக் கற்களை அப்பங்களாக மாறக் கட்டளையிடும் என்றான்.

எபிரேயர் 2 : 17 – 18

" அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக, தேவ காரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. ஆதலால் அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருந்தார். "

எல்லா சூழ்நிலைகளிலும் எப்பொழுதும்  கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.

1 தெசலோனிக்கர் 5 :18

” எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. “

எபேசியர் 5 : 20 ” நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரித்து, “

சங்கீதம் 106 : 1 “அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள் , அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது “

பிலிப்பியர் 4 : 6 ” நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டிதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். “

சங்கீதம் 107 : 1

” கர்த்தரைத் துதியுங்கள் , அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. “

உங்களது சபையில் உடனிருக்கும் உங்கள் சகோதரர்களை மேம்படுத்துதல்.

சில நேரங்களில்  நம்முடைய வழிகாட்டிகள் , உடன்பணிபுரிபவர்கள் , சகோதரர்கள், நம்மை கர்த்தருக்குள் வளர கடினமாக வேலை செய்தவர்கள் ஆகியோருக்கு நாம் நன்றி செலுத்த மறந்துவிடுகிறோம். உடலின் சகல பாகங்களும் சரியாக வேலை செய்யவேண்டும் என்பதால்  நாம் ஒன்றிணைந்த சபையை உருவாக்க வேண்டும் .

நீங்கள் மற்றவர்களிடமிருந்து  அல்லது சபையிலுள்ள சகோதரர்களிடமிருந்து ஒரு உதவியைப்  பெற்றால் அவர்களுக்கு நன்றி செலுத்த, அவர்களுக்கு ஜெபிக்க மறந்து விடுகிறீர்கள். இது உங்களது  கடமை . உங்களுக்கு  பணி செய்யவேண்டும் , உங்களது கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒரு பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் , நீங்கள் அவருக்கு எந்த உதவியும் செய்ய மாட்டீர்கள். எல்லா சுமைகளையும் அவர் மேல் சுமத்துகிறீர்கள். சுமை சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு சபையின் உறுப்பினராக அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். அவர்களை கட்டமைக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ரோமர் 14 : 19 ”  ஆதலால் சமாதானத்துக்கு அடுத்தவைகளையும், அந்நியோன்ய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.”

1 தெசலோனிக்கர் 5 : 11

” ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே , ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.”

2 தெசலோனிக்கேயர் 3 : 13. சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்து போகாமலிருங்கள்.”

ஜெபம்

அப்பா, பிதாவே , உங்களுக்கு நன்றி இல்லாமல் இருந்ததற்காக , எங்கள் பாவங்களுக்காக,  எங்களது புறக்கணித்தலுக்காக, எங்கள் சகோதரர்களுடைய கடின உழைப்பு மற்றும் தியாகத்தை மதிக்காமல் இருந்ததற்காக , மற்றவர்கள் செய்த வேலையின் முழு பலனை நாங்கள் அனுபவித்ததற்காக , மற்றவர்களுடைய சுமையில் பங்குகொள்ளாமலும், அவர்களுக்கு உதவி செய்யாமலும் இருந்ததற்காக, எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு முதலாளியாக இருந்ததற்காக,   பிறர் செய்தவைகளுக்கு நன்றி பாராட்டாமல் இருந்ததற்காக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மன்னிப்பு கேட்கிறோம். மன்னியும் இயேசுவே.நன்றியின் ஆவியை எங்களுக்குத் தாரும். எங்கள் வாழ்க்கையில் மற்றவர்களை எழுப்ப பரிசுத்த ஆவியானவரே எங்களுக்கு கற்றுத் தாரும்.பரிசுத்த ஆவியானவர், கர்த்தருக்கும் , நம் சகோதரர்களுக்கும்  நாம் செய்த எல்லா தவறுகளுக்கும் நம்மை உணர்த்துகிறார்.   ஒவ்வொருவர் வளரவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நல்ல பணியாளராக இருக்கவும் , நாம் ஒன்றிணைந்து இயேசுகிறிஸ்துவின் உடலாகிய சபையைக் கட்டவும் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்றுத் தருகிறார். ஆமென்.

Sol. ஷாஜி தாமஸ்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-03-2023

இயேசுவும் அவரது இரவு   வருகையாளரும்

‘எனக்கு சாட்சியாக இருங்கள்’இயேசு

       “ ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். “யோவான். 7:51

ஒருமுறை  இராத்திரியிலே இயேசுவைச் சந்தித்த பரிசேயரான நிக்கொதேமு என்பவர் இந்தக் கூற்றைச் சொன்னார். இயேசு உண்மையிலேயே தேவனிடமிருந்து வந்த ஒரு போதகர் என்று அவர் அறிவித்தார். நிக்கொதேமு இஸ்ரேலின் சிறந்த ஆசிரியராகவும் யூதத் தலைவராகவும் இருந்தார்.

மக்கள் கூடாரப் பண்டிகையைக் கொண்டாட எருசலேம் சென்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்லக் காத்திருந்தார்கள், அது இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர் வெளியரங்கமாய் அங்கு செல்லவில்லை.

எருசலேமில் சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.

பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம் பண்ணினார். அப்பொழுது யூத அதிகாரிகள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறது என்று அறிந்துகொள்ளுவான்” என்றார்.

 அப்பொழுது சிலர்: இவனையல்லவா அதிகாரிகள் கொலைசெய்யத் தேடுகிறார்கள்?  இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?” என்றார்கள்.

 அப்பொழுது அவரைப் பிடிக்கவகைதேடினார்கள், ஆனாலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. ஜனங்களில் அநேகர்  அவர் செய்த அற்புதங்களை பார்த்து அவர் கிறிஸ்து என்று  விசுவாசித்தனர். அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன் என்றார். பண்டிகையின் கடைசி நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார்.

 ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். மற்றவர்கள் அவர் மேசியா என்று சொன்னார்கள். காவலர்கள் திரும்பிச் சென்றபோது, ​​பரிசேயர்கள், ஏன் அவரை அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். “இவரைப் போல் யாரும் பேசியதில்லை” என்று பதிலளித்தனர்.

 அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? என்றனர்.

 அந்த நேரத்தில், நிக்கொதேமு, இயேசுவுக்காக குரல் எழுப்பி, ஒரு மனிதனை அவன் என்ன செய்தான் என்பதை விசாரித்துக் கண்டுபிடிப்பதற்கும் முன்பு, கண்டிக்க முடியாது என்று அவர்களின் சட்டத்தை நினைவுபடுத்தினான்.

சாட்சியம்:

அவருடைய நிபந்தனையற்ற அன்பினால், நாம் மெய்யான வெளிச்சத்திற்கு வந்துள்ளோம். இயேசுவின் சீடர்களாக, நாம் அவருக்கு ஒவ்வொரு நாளும், எப்பொழுதும் சாட்சியாக இருப்போம்.

ஜெபம்:

இயேசுவே, நிக்கொதேமு போல நாங்கள் உம்முடைய ஒளியை ஏந்துபவர்களாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும்.

           வீரா. D. விக்டி மிதிலா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-03-2023

ஒரே ஒரு மத்தியஸ்தர்

கர்த்தருக்கும் மனிதனுக்கும் ஒரேயொரு மத்தியஸ்தர் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. அவருடைய பெயர் இயேசுகிறிஸ்து . மற்ற எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் “இயேசுகிறிஸ்து.”

1 தீமோத்தேயு 2 : 5 ”  தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. “

மத்தியஸ்தர் என்பவர் யார்?

மத்தியஸ்தர் என்பவர் இரண்டு நபர்களுக்கு இடையில் நிற்பவர். இருவருக்குமிடையே உள்ள மனஸ்தாபத்தின் காரணத்தை அறிந்து , சமாதானத்தை உண்டுபண்ணுபவர்.

அப்போஸ்தலராகிய பவுல் மனிதனுக்கு ஏன் மத்தியஸ்தர் தேவைப்படுகிறார் என்பதை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.  அவர் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

எசாயா 57 : 21 ” துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லையென்று ஏன் தேவன் சொல்லுகிறார்.

” நாம் எல்லாரும் பாவம் செய்திருக்கிறோம். ஒருவேளை நீங்கள் , கர்த்தர் நம்மை பொல்லாத மனிதன் என்று அழைக்கக்கூடிய அளவிற்கு என்ன பாவம் செய்தோம் என்று கேட்கலாம். நாம் அனைவரும் ஆதாமிடமிருந்து நம் முற்பிதாக்களின் பாவங்களைப் பெற்றுள்ளோம். மேலும் பரிசுத்த தந்தைக்கு முன்பாக பாவிகள் என்று அறிக்கையிட்டுள்ளோம்.

எனவே நாம் மன்னிப்பின் மூலமும், மனந்திரும்புதலின் மூலமும் கர்த்தரிடம் திரும்பி வருவதற்கு மீட்பு கண்டிப்பாக அவசியம். ஆகவே நாம் நேரடியாக கர்த்தரிடம் வர முடியாது இயேசுகிறிஸ்து என்ற மத்தியஸ்தர் வழியாகவே வர முடியும்.

நமது மத்தியஸ்தருக்கு நம்மை மத்தியஸ்தம் பண்ண தகுதியிருக்கிறதா?

அனைவரும்  ஏற்றுக் கொள்ளும் தகுதியான ஒரு மத்தியஸ்தரின் 5 பண்புகளைப்  பார்ப்போம்.

1 . நம்பகத் தன்மை

2 . எளிதில் அணுகக்கூடிய தன்மை

3 . அர்ப்பணிப்பு

4 . புத்திகூர்மை

5 . பாரபட்சமின்மை

நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் எல்லாரையும் மத்தியஸ்தம் பண்ண தகுதி பெற்றிருக்கிறாரா? ஆம். மேற்சொன்ன எல்லா குணாதிசயங்களும் இயேசு கிறிஸ்து பிதாவின் குமாரனாக வாழ்ந்த வாழ்க்கையில் மிக அதிகமாகவே இருந்தது. பாவமே இல்லாத மனிதர். பாவத்தில் விழாதவர். தனக்கு வந்த எல்லா சோதனைகளிலும் துன்பங்களிலும் அவர் எப்போதும்  பாவத்தைக் களைந்தவராகவே இருந்தார். எனவே அப்போஸ்தலராகிய பவுல், இந்த மனிதனாகிய, பிதாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து கர்த்தருக்கு முன்பாக மத்தியஸ்தம் பண்ண தகுதியுள்ளவர் என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டார். எல்லா நேரங்களிலும்  கர்த்தரை அணுகி  நம்மை அமைதியுள்ளவர்களாக்கி , நம்முடைய எல்லா  பலவீனங்களையும் குறைகளையும்  புரிந்து கொண்டு நித்திய ஜீவனை  தருவதற்கும் அவர் மத்தியஸ்தம் செய்கிறார். கர்த்தரை நோக்கி வந்திருக்கிற எல்லாரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மத்தியஸ்தம் வழியாக சமாதானத்தையும் அமைதியையும்  அனுபவிப்பார்கள். ஆகவே , மனித குலத்துக்கு கர்த்தரால் வழங்கப்பட்ட ஒரே ஒரு மத்தியஸ்தர், நமக்காக துன்பப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் சாவிலிருந்து உயிர்த்து என்றென்றும் உயிரோடிருக்கிற இயேசுகிறிஸ்துவே  என்று சரியாகச் சொல்ல முடியும். 

1கொரிந்தியர் 15 : 1 – 9 ” அன்றியும்  சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு அதிலே நிலைத்திருங்கள். நான் உங்களுக்கு பிரசங்கித்த பிரகாரமாய், நீங்கள் அதைக் கைக் கொண்டிருந்தால், அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால் கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின் படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்து   கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின் அவர் ஐநூறு பேருக்கும் அதிகமின சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள். பின்பு யாக்கோபுக்கும் அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார். நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன் . தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினாலே ,நான் அப்போஸ்தலனென்றும் பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

Sol. பிரான்சிஸ் கோவா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-03-2023

எசாயா 40 : 9 - 11 கர்த்தர் மறைந்திருக்கிற காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று   நம்பவைக்கப்படுகிறது.  சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு, எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார், அவர் தமது புயத்தினால் அரசாளுவார்;, இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது, அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”

2023 , பெப்ரவரி மாதம் 28

ம் தேதி நடந்த இயேசுவின் படையணி , தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த வார்த்தைகளை பெற்றுக் கொண்டேன். அங்கு தலைமை மேய்ப்பனாக இருப்பவர் புதிய பொறுப்புகளை ஏற்கும் இளைஞர்களுக்கு உதவுவேன் என்று கூறினார். மார்ச் 1 , 2023 அன்று நடைபெற்ற மாதாந்திர வழிபாட்டில் சகோ. ஆஞ்சலிக்கா மற்றும் அவரது தனிக்குழு கிரகித்த மாற்றங்களைக் குறித்து சாட்சியமளிக்க விரும்புகிறேன். அது எப்படி அடுத்த நிலைக்குச் சென்றது என்றும்  மேலும் எல்லா களங்களுக்கும் அப்படியே செல்லும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பியதைப்பற்றி ஒரு   தீர்க்கத்தரிசி குறிப்புகள் வைத்திருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டில்  யோவான் ஸ்நானகர் இயேசுகிறிஸ்துவின் அணுகுமுறையை அறிவித்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது ஒரு சிறிய நிகழ்வு.

கிழக்கு தேசங்களில் இளவரசர்கள் பாலைவன நாடுகளின் வழியாக பயணம் செய்கையில் அவர்கள் பாதைகள் செம்மைப்படுத்தப்பட்டு தடைகள் அகற்றப்படும். அதுபோலவே கர்த்தர் தமது வசனங்களை கற்பிப்பதாலும் , பரிசுத்த ஆவியின் மேலுள்ள நம்பிக்கையாலும் நம்முடைய இருதயங்களை செம்மைப்படுத்தி, நம்முடைய உயர்ந்த பெருமையான எண்ணங்களை விழத்தாட்டி , நல்ல விருப்பங்களை விதைத்து, வளைந்த முரட்டுத்தனமான    சுபாவங்களை நேரானதாகவும் மென்மையானதாகவும் மாற்றி எல்லா தடைகளையும் நீக்கி , பூமியில் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற நம்மை தயார்ப்படுத்தி பரலோக ராஜ்யத்திற்கு நம்மை செம்மையாக்குவார். வீழ்ந்த மனிதனுக்குச் சொந்தமானவை அல்லது அவன் செய்யும் அனைத்தும் புல் மற்றும் பூவைப் போன்றது. இறக்கக்கூடிய பாவியான மனிதனுக்குரிய எல்லாப் பட்டங்களும்  உடைமைகளும் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கும்போது என்ன செய்யும். எல்லா மாமிசத்தாலும் செய்ய முடியாததை கர்த்தருடைய வசனம் நமக்காகச்  செய்யும். கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய செய்தி பூமியின் எல்லைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

சாத்தான் ஆயுதம் ஏந்திய பலசாலி. ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு பலமானவர். மேலும் அவர் முன்னோக்கிச் செல்வார். கிறிஸ்து நல்ல மேய்ப்பர். இளவயதில் இரட்சிக்கப்பட்டவர்கள், பலவீனமான விசுவாசிகள் மற்றும் துக்கமான ஆவி உள்ளவர்களிடம் கனிவான அக்கறை காட்டுகிறார். அவருடைய வசனத்தினால்  வேறு பணிகள் செய்யத் தேவையில்லை. ஆனால்  அவருடைய பாதுகாப்பினால் அவர்களை பலப்படுத்துவதில் எந்த சிரத்தையும் அவருக்கு இல்லை. நாம் நம்முடைய மேய்ப்பனின் குரலைக் கேட்போம் .அவரைப் பின்பற்றுவோம் . அவருடைய ஆடுகளாக நம்மை நிரூபிப்போம்.

கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நாமம் உயர்ந்தது, உம்முடைய நாமம் பெரியது, எல்லாவற்றிற்கும் மேலாக உமது நாமம் உயர்ந்து நிற்கிறது. எல்லா சிம்மாசனங்களுக்கும் , ஆட்சிகளுக்கும், அதிகாரங்களுக்கும் , பதவிகளுக்கும் மேலாக உமது நாமம் உயர்ந்து நிற்கிறது. ஆமென்.

Sol. ஜோன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-03-2023

பெருக்கத்தின் தேவன்

எபிரேயர் 6 : 16
” நிச்சயமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன். “


நம்முடைய தேவன் பெருக்கத்தின் தேவன். அவர் நம்மை பெருகச் செய்கிற தேவன்.
ஆதியாகமம் 1 : 28 ல்
” நீங்கள் பலுகிப் பெருகி , பூமியை நிரப்பி , அதைக் கீழ்ப்படுத்தி , சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி , தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் .”
ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வதித்த கர்த்தர் ஜல பிரளயத்திற்குப் பிறகு நோவாவையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்ததை நாம் பார்க்கிறோம்.

ஆதியாகமம் 26 : 24 ல் கர்த்தர் ஈசாக்கைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடே கூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து , உன் சந்ததியைப் பெருகப் பண்ணுவேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
1 பேதுரு 1 : 2 ல் அவர் கிருபையையும், சமாதானத்தையும், அன்பையும் ,தேவனை அறிகிற அறிவையும் பெருகச் செய்கிறார் என்பதையும் ,


சங்கீதம் 71 : 21ல் அவர் நம்முடைய மேன்மையை பெருகப்பண்ணுகிறார் என்பதையும் ,


நீதிமொழிகள் 10 : 27 ல் தேவன் நம்முடைய ஆயுசு நாட்களை பெருகப்பண்ணுகிறார் என்றும் வாசிக்கக் கேட்கிறோம்.

அருமையானவர்களே , கர்த்தர் நம்மை பெருகப் பண்ணுகிற தேவனாயிருக்கிறார். அவர் பெருகச் செய்ய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய ஒரு சில காரியங்கள் உண்டு.
முதலாவதாக நாம் ஆதியாகமம் 22 ம் அதிகாரத்தில் கர்த்தர் ஆபிரகாமை மோரியா என்னும் மலைக்குப்போய் ஈசாக்கை பலியிடு என்று சொன்னதும் அதற்குக் கீழ்படிந்து ஆபிரகாமும் மோரியா மலைக்குச் சென்று ஈசாக்கை அவர் பலியிடுவதற்காக பீடத்தில் கிடத்தியபோது தேவதூதன் வந்து ஆபிரகாமைப் பார்த்து ஆபிரகாமே உன்னுடைய ஏக புதல்வன் என்றும் பாராமல் அவனை எனக்கு ஒப்புக் கொடுத்ததினால் நீ நிச்சயமாக தேவனுக்கு பயப்படுகிறவன் என்பதை அறிந்து கொண்டேன் என்று சொல்லி அவர் ஆசீர்வதிக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் பொழுது இவையெல்லாம் நமக்கு கூடக் கொடுக்கப்படும் என்று மத்தேயு 6 : 33 ல் சொல்லப்படுகிறது நம்முடைய முதலானவற்றை கர்த்தருக்கு கொடுக்கும்போது அவர் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுகிறார்.

நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஐந்து அப்பம் இரண்டு மீன்களை பலுகிப் பெருகச் செய்து அநேக ஜனங்களுக்கு உணவளித்ததைப் பார்க்கிறோம். நம்மிடம் இருக்கக்கூடியவற்றை கர்த்தரிடம் கொடுப்போம். அவர் அதை பலுகிப் பெருகச் செய்வார்.


தேவன் நம்மைக் கொண்டு ஒரு பெரிய பெருக்கத்தை இந்திய தேசத்திலே உருவாக்குவாராக. அவர் பெருக்கத்தின் தேவன். நம் மூலமாக அணி சபைகள் பெருகுவதாக. நம்மூலமாக வரங்களின் பள்ளிகள் பெருகுவதாக. நம்மூலமாக தேவ வசனங்கள் பெருகுவதாக. நம்மூலமாக கிருபைகள், அற்புதங்கள் ,ஆபிஷேகம் பெருகுவதாக.


எசாயா 54 : 3 ன் படி நீ வலதுபுறமும் இடதுபுறமும் இடங் கொண்டு பெருகுவாயாக என்ற வார்த்தையின்படி நம்மை இந்த தேசத்திலே பெருகப்பண்ணுவாராக . ஆமென்.

ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, நாங்கள் ஒவ்வொரு நாளும் அபிஷேகத்திலும் ஆவியிலும் பெருக எங்களுக்கு உதவும். எங்களிடமிருக்கின்ற குறைகளை நீக்கி நிறைகளை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். அவற்றைப் பெருக்க எங்களுக்கு உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

Sol. Dr. பெட்ரீஷியா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 05-03-2023

உங்கள் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றுங்கள்.


” அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி : ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து , தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புபவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். “

மத்தேயு 16 : 24 – 25

நாம் பொதுவாக ஆடம்பரமான ஆடைகள் , நல்ல சுவையான உணவுகள் போன்றவற்றை விட்டுவிடுவதை, தன்னைத்தானே வெறுப்பது என்பதுடன் தொடர்புபடுத்துவோம். ஆனால் இயேசுவுடைய தன்னை வெறுத்தல் என்பது இந்த மேலோட்டமான ஆசைகளைக் கடந்து அதற்குப் பதிலாக தம்மையே வெறுக்கும் ஆவிக்குரிய தியாகத்தை வலியுறுத்துகிறது. அவர் இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் நம்மை எப்படி வெறுத்து நம்முடைய சிலுவையை சுமக்க வேண்டும் என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்.

பிதாவின் குமாரனாக, இயேசு மனித குலத்தை மீட்டெடுப்பதற்காக , தனது இடத்தையும், மகிமையையும் , மற்றும் எல்லாவற்றையும் , மனிதனாக மாற வேண்டி துறந்தார். எல்லாருடைய மீட்பிற்காகவும் பாடுபட்டு சிலுவையில் மரிக்க வேண்டும் என்ற உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். மனிதனாக மரணத்திற்குரிய வாழ்க்கை வாழந்தாலும் , அவர் பாவமற்றவராகவே வாழ்ந்தார். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தும் தகுதியற்றவை. ஆனால் அவர் ஒரு புகார் கூட சொல்லாமல் அல்லது எந்த வெறுப்பையும் தெரிவிக்காமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.

எசாயா 53 : 7 ” அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். “

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இரண்டு திருடர்களுக்கு இடையில் தொங்கினார். இது சாபத்தின் அடையாளமாக பலரால் பார்க்கப்பட்டது. ஆயினும் கூட இயேசு தன்னை கறைதிரையற்ற , நேர்த்தியான ஆட்டுக்குட்டியாக ஒப்புக் கொடுத்து மனிதகுலத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக தியாகம் செய்தார். இருப்பினும் அவர் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்ததால் அவரது பாடுகளும் மரணமும் வீணாகவில்லை. தற்போது அவர் பிதாவாகிய கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்து அனைத்து படைப்புகளையும் ஆட்சி செய்கிறார்.


எபிரேயர் 12 : 2 ” அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு , அவமானத்தை எண்ணாமல் , சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். “


தான் அநியாயமாக நடத்தப்பட்ட போதிலும் இயேசு தம் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. பிதா தமது வாழ்க்கையில் அனுமதித்த எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். எல்லாவற்றையும் ஏன் தன் வாழ்க்கையையும் கூட இழக்கத் தயாராக இருந்தார் . இந்த தியாகத்தின் மூலம் தான் இயேசு நித்திய ஜீவனைக் கண்டார்.


ஒரு வேளை இயேசுவைக் காட்டிலும் நாம் குறைவான அளவில் இருந்தாலும் , இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, மற்றவர்களால் நாம் அநீதியாக நடத்தப்படும் சூழ்நிலைகளில் நம்மை காணலாம். இருந்தபோதிலும் இயேசு தம்மைப் போலவே நம்முடைய அந்தஸ்து பதவியைப் பொருட்படுத்தாமல் , தாழ்மையுடன் நம்முடைய சிலுவையை சுமக்க அழைக்கிறார். ஒரு விசுவாசியாக நம்முடைய யுத்தம் மாமிசத்திற்கும் இரத்தத்திற்கும் எதிரானது அல்ல. மாறாக சாத்தானுடைய ராஜ்யத்திற்கு எதிரானது. நமக்கு தீங்கிழைப்பவர்களை நாம் மன்னிப்பதால் , குறையின்றி நம் துன்பங்களைத் தாங்கி அதை கர்த்தருக்குப் பலியாக செலுத்தினால் நம்முடைய பாடுகள் வீண்போகாது என்பது உறுதி. உண்மையில் அவை நமக்கு தீங்கிழைக்கும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு வழிவகுக்கும்.


யோவான் 20 : 23
” எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். “


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஆத்துமாவை காப்பதற்காக , இயேசு செய்ததைப் போலவே சாத்தானின் மீது அவனுக்கு எதிராக அசாதாரண வல்லமைமையும் அதிகாரத்தையும் பெறுகிறோம் . நாம் நம்மை வெறுத்து , நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு கிறிஸ்துவோடு மரிக்கும்போது நாமும் அவருடன் உயிர்த்தெழுந்து அவருடன் ஆட்சி செய்கிறோம்.


2 தீமோத்தேயு 2 : 21 – 12
” இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில் நாம் அவரோடேகூட மரித்தோமானால்,அவரோடேகூட பிழைத்துமிருப்போம். அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால் , அவரும் நம்மை மறுதலிப்பார். ” .

ஜெபம்.


அன்பின் பரலோகத் தந்தையே, உமது மகன் இயேசுகிறிஸ்து செய்த இறுதித் தியாகத்திற்காக நாங்கள் எங்கள் இருதயங்களில் நன்றியுடன் முன் வருகிறோம். எங்களை
வெறுத்து தினம்தோறும் எங்களது சிலுவைகளை சுமக்க உம்மையே முன்மாதிரியாகக் கொண்டு, உம்மை பின்தொடர உம்மிடம் வேண்டுகிறோம். அநியாயமாக நடத்தப்பட்டாலும் நாங்கள் தாழ்மையுடன் இருக்கவும் உமது விருப்பத்தின்படி நடக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு துன்பங்களைத் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் தந்து அவற்றை உமக்குப் பலியாக சமர்ப்பிக்கவும் நீர் எங்களுக்கு அமைத்துள்ள பாதையை பகுத்தறிந்து அதில் உண்மையாக நடக்க உமது ஞானத்தயும் வழிகாட்டுதலையும் வேண்டுகிறோம். உமது அன்பிற்கும் இரக்கத்திற்கும் நன்றி.
ஆமென்.

Sol. எட்விற்றா