நாள்: 12-03-2023
விசுவாசத்தின் முக்கியத்துவம்.
சங்கீதம் : 12 – 1
” இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப் போகிறான், உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.”
நீங்கள் சரியானவர்கள் இல்லை என்று கண்டாலும் உங்களோடு இருக்கின்றவர்களில் உண்மையான விசுவாசம் வைத்திருப்பவர்களை கண்டுபிடிப்பது கடினம்.
நீதிமொழிகள் 17 : 17
” சிநேகிதன் எல்லாக் காலத்திலும் நிநேகிப்பான் , இடுக்கண்ணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். “
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் உங்களுடைய உண்மையான நண்பன், உங்களின் இனிமையான நாட்களில் அல்ல உங்களின் கடினமான நேரங்களிலும் உடனிருப்பவன் தான். இப்படிப்பட்ட விசுவாசமும் அர்ப்பணிப்பும் இல்லாதவர்கள் நம்மோடு இருப்பது நமது வாழ்க்கையில் கவலைக்குரிய விஷயங்களில் ஒன்று என்பதை நம்புகிறோம். நிறைய மக்கள் இதை தவற விடுகிறார்கள். காரணம் ,அவர்கள் இறுதிவரை விசுவாசமாக இருப்பதில்லை என்பதை கண்கூடாகக் காண்கிறோம். இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் , அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் தவறவிட்ட ஆசீர்வாதங்களை ஒருபோதும் உணரமாட்டார்கள். இந்த சங்கீதத்தின் அடுத்த வசனத்தில் தாவீது , மக்கள் வஞ்சகமான இரட்டை இதயத்துடன் , பயனற்ற உண்மைக்கு மாறான வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்று தொடர்ந்து கூறுகிறார். இரு மனம் மற்றும் தேவையற்ற வார்த்தைகளைப் பேசாமலும் ,தங்கள் இருதயத்தை இணைக்கக்கூடிய ஒரு மனம் கொண்ட ஆணும் பெண்ணும் தேவை. ஏனென்றால் இருமனம் கொண்ட மக்கள் ஒரு நாள் ஒன்றும் அடுத்த நாள் வேறொன்றையும் நம்புவார்கள். ஒரு நாள் உங்களை நேசிப்பார்கள் அடுத்த நாள் அதை செய்வதில்லை. அவர்கள் இன்று உங்களுக்காக இருப்பார்கள். அடுத்த நாள் உங்களுக்கு எதிராக இருப்பார்கள்.
வேதாகமம் விசுவாசமுள்ள மக்களின் பல உதாரணங்களை நமக்குத் தருகிறது. அவர்களில் ஒருவர் மோசே. கர்த்தருடைய எல்லா நிலைகளிலும் அவர் விசுவாசமாக இருந்தார்.
எண்ணாகமம் 12 : 7
“என் தாசனாகிய மோசே அப்படிப்பட்டவன் அல்ல. என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். ” இதன் அர்த்தம் , தான் விசுவாசம் உள்ளவனாக நினைக்காதபோதும் , அவன் தன்னுடைய கடமைகளை நாளுக்கு நாள் , மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம் சரியாகச் செய்வதன் மூலம் கர்த்தருக்கு விசுவாசமுள்ளவனாகவே இருந்தான். மோசே மிகவும் உண்மையுள்ளவராகவே இருந்தார். அவருடைய சகோதரி மிரியாமும், சகோதரர் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசிய போதும் அவர் அவர்களை நேசித்தார். அவர்களுக்கு உண்மையாகவே இருந்தார். அவருடைய வாழ்க்கையிலுள்ள மனிதர்கள் அவரை சரியாக நடத்தாதபோதும் அவர் தன்னுடைய நடத்தையில் அதிக விசுவாசமுள்ளவராகவே இருந்தார் .
நாம் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது.
2 தீமோத்தேயு 2 :13 “நாம்
உண்மையில்லாதவர்களாக இருந்தாலும் , அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் தம்மைத் தாம் மறுதலிக்க மாட்டார். ” நாமும் அவ்வாறே இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். ஒவ்வொருவரும் விசுவாசத்தில் இருந்தால் , நாமும் விசுவாசத்திலே இருப்போம். நீங்கள் மட்டுமே சிறந்தவராக இருப்பதாக நினைத்தால் , நீங்கள் மட்டுமே மன்னிப்பவராக இருந்தால் , நீங்கள் மட்டுமே சரியானவற்றைச் செய்ய முயற்சிப்பவராக இருந்தால் அவ்வாறே தொடர்ந்து செய்யுங்கள்.
நீங்கள் மன அழுத்தத்தில் மூழ்குகிறோம் என்று நினைக்கும் போதெல்லாம் , அது எவ்வளவு நாட்கள் தொடர்ந்தாலும் நாம் கண்டிப்பாக நம்பிக்கையில் நிலைத்து நின்று கர்த்தரிடம் தொடர்ந்து மன்றாட வேண்டும் . வேதாகமம் சொல்கிறது , அத்தகைய வேலையாட்களிடம் வேண்டப்படும் ஒன்று, அவர்கள் தங்கள் எஜமாருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
நாம் ஒரே நேரத்தில் கர்த்தருக்கும் பணத்திற்கும் சேவை செய்ய முடியாது . எல்லா நேரத்திலும் கர்த்தரையே சார்ந்து இருக்க வேண்டும். அவர் பிரத்யேகமான உண்மை விசுவாசத்தை வலியுறுத்துகிறார். அதன் ஒரு பகுதியை அல்ல.
ஜெபம்
பரலோகத் தந்தையே, எந்த நிபந்தனையுமின்றி எங்களை நேசிக்கிறீர். உமது அற்புதமான அன்பினால் எங்கள் இதயத்தை நிரப்பும். அதனால் நாங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களின் பாத்திரமாக இருக்க முடியும். அதன் வழியாக உம்முடைய நாமம் மகிமைப்படட்டும். ஆமென்.
Sol. கமல்
