இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
(லூக் 18:40).
இந்த வசனம் என் வாழ்வில நடந்த ஒரு சாட்சியை நினைவுபடுத்துகிறது. 12ஆம் வகுப்பு படித்த பின்னர் என்னுடைய எதிர்கால படிப்பைப் பற்றி ஒன்றும் தெரியாதவளாக இருந்தேன். பல கேள்விகள் என் மனதில் எழுந்தன மேலும் இவைகள் என் நம்பிக்கையை இழக்கச் செய்தன.
கடைசியாக SHUATS அலகாபாத் பல்கலை கழகத்தில் B.Sc (Hons) உணவு தொழில்நுட்பத்தில் அனுமதி பெற்றேன் ஆனால் நான் விரும்பியதோ B.Sc (Hons) விவசாயம், எனவே நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். என்னுடைய இந்த மோசமான நிலையை கண்டு என் பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாக தெரிந்தது, நான் ஜெபித்தால் கர்த்தர் நிச்சயம் கேட்ப்பார். ஒவ்வொரு இரவும் நான் கண்ணீர் விட்டு கதறி அழுதேன். ஒரு நாள் எரேமியா 29:11 என்ற வசனம் கிடைத்தது – நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இந்த வசனத்தைப் படித்தபின், கர்த்தர் எனக்கு செவி கொடுப்பார் என்று அறிந்து நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆனால் பதில் ஏதும் கிடைக்க வில்லை, நம்பிக்கைக்கு வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நான் இன்னும் இயேசுவை நம்பி கர்த்தரை நோக்கி அழுதேன். இறுதியாக அவர் என் கூக்குரலை கேட்டார், நான் விரும்பியது போல எனக்கு BSc. (Hons) விவசாயத்தை கொடுத்து ஆசீர்வதித்தார். கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் அன்று சுவைத்துப் பார்த்தேன். இன்றும் கூட அவருடைய நன்மையை சுவைக்க நான் ஆவலாய் இருக்கிறேன்.
கர்த்தரிடம் கூக்குரல் இடுங்கள் அவர் உங்கள் அழுகையை கேட்ப்பார் என்று உங்களுக்கு ஊக்கம் அளிக்க இன்று விரும்புகிறேன். இயேசுவிடம் நீங்கள் அழ தீர்மானித்தபின் எந்த மனிதனோ, சூழ்நிலையோ உங்களை தடை செய்யாது.
எபி 8:12 – ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இயேசுவிடம் நீங்கள் செல்வதை எது தடுக்கிறது? உங்களுடைய அநீதியா அல்லது உங்கள் பாவமா? மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தைப் பாருங்கள். வசனம் சொல்லுகிறது கர்த்தர் கிருபை உள்ளவர் என்று.
யாகோபு 4:8 – தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.
எழுந்திருங்கள்! தூசுகளை தட்டிவிட்டு பிரகாசியுங்கள். ஏனெனில் கர்த்தருடைய கிருபை உங்கள் மேல் எழும்பியுள்ளது.
கர்த்தர் இன்று உங்களை அவர் அருகில் அழைக்கிறார். உங்களுடைய எல்லா கவலைகளையும் அவரிடம் கொடுத்து விடுங்கள்.
சங் 34:4 – நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
கர்த்தர் உங்களுடைய ஜெபத்தை கேட்கிறார் மேலும் உங்களை விடுவிக்கிறார். ஆமேன்.
ஜெபம்:
எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் எங்கள் வாழ்வில் வந்தாலும் உம்மை நோக்கி குரலை உயர்த்தி அழுவதற்கு எங்களுக்கு கிருபைதாரும். உம்மை காண கண்களை தாரும், உம் குரலை கேட்பதற்கு காதுகள் தாரும், உம்முடைய கற்பனைகளுக்கு கீழ்படிய இதயம் தாரும். உம்முடைய அமைதி எங்கள் இதயத்தை ஆட்சி செய்வதாக, இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.
Sol. Blessy AOJ
