நாள்: 14-03-2023
பரலோக பொக்கிஷங்கள்
“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.”
மத்தேயு 6 : 20
நான் ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருந்திருந்தால் , நான் 70 – 80 வயது வரை வேலை செய்துகொண்டிருந்திருப்பேன் , என்னுடைய மகனுக்கு உதவி செய்திருப்பேன் மட்டுமல்ல் வெளிநாட்டில் நாங்கள் நிலையாக இருந்திருப்போம் என்று அடிக்கடி உணர்வேன். இந்த வழிகளில் நான் அதிகமாக பணம் சம்பாதித்திருக்க முடியும். இந்த எண்ணங்கள் என்னுடைய சிந்தனையில் என்னுடைய எண்ணத்தில் வந்தபோது பரிசுத்த ஆவியானவர் என்னுடன் பேசினார். இந்த பூமியுடன் உலக வாழ்க்கை முடிந்துவிடும். மக்கள் அதிகமாக போராடிக் கொண்டிருக்கும் இந்தப்பணம் என்னை விட்டு போய்விடும் . இதனால் எனக்கு எந்த ஒரு பலனும் இல்லை. என்னுடைய எண்ணத்தில் ஒரு கேள்வி வந்தது. என் நித்திய வாழ்விற்காக உண்மையில் நான் எதைச் சேமித்தேன். என் முழு வாழ்க்கையையும் நான் எங்கே செலவிடுவேன். ?
இந்த பூமியில் என்னுடைய கடைசி நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்க முயன்றேன். என்னுடன் எடுத்துச் செல்வதற்கும் கர்த்தரிடம் சமர்ப்பிப்பதற்கும் எதுவும் இல்லை என்று உணர்கிறேன். என்னுடைய பரலோக வாசத்திற்காக நான் உண்மையில் என்ன சேமித்தேன் என்று தான் யோசித்தேன். எனக்கு இந்த சிந்தனைகள் வந்தவுடன் நான் அமைதியின்மையை உணர்ந்தேன். தேர்வு எழுதச் செல்லும் மாணவனுக்கு ஒருவருட பாடங்களை ஒன்றுமே படிக்காமல் தேர்வு எழுதச் சென்றால் என்ன உணர்வு இருக்குமோ அதுவேதான் எனக்கும் இருந்தது.
லூக்கா 9 : 25 ” மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்திக் கொண்டால் அவனுக்கு என்ன லாபம் ? “
மத்தேயு 6 : 33
” முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் , அப்பொழுது இவைகளெல்லாம் கெட உங்களுக்கு கொடுக்கப்படும். “
இதன் அர்த்தம் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நாம் இரண்டு வகையான லாபத்தை பெறலாம். நாம் பரலோக பொக்கிஷங்களையும் சேகரிக்க முடியும் அதே சமயத்தில் உலகரீதியான நம்முடைய தேவைகளையும் கர்த்தர் வழங்குவார். அல்லேலூயா !!!!
லூக்கா 5 : 1 – 11 வரையுள்ள வசனங்களில் பேதுரு இரவு முழுதும் போராடுகிறார், ஆனால் வலையில் ஒரு மீன் கூட கிடைக்கவில்லை.அது தான் வருமானத்திற்குரிய ஒரே ஒரு ஆதாரம் .
ஆனால் எப்போது தன்னுடைய வாய்ப்புகளை கிறிஸ்து பயன்படுத்திக் கொள்ள ஆனுமதித்தாரோ அவருக்கு செவிமடுத்து கீழ்படிந்தாரோ , வலை கிழியுமளவுக்கு அதிகமான மீன்கள் கிடைக்க கிறிஸ்து உதவி புரிந்தார்.நாம் எப்பொழுது நம்மையும் நம்முடைய ஆதாரங்களையும் முழுவதுமாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கிறோமோ , நாம் அளவிடமுடியாத நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
ஜெபம்
பரலோகத் தந்தையோ , நாங்கள் உமது பிரசன்னத்தையும் , உம்முடைய ராஜ்யத்தையும் எப்போதும் தேடுவதை நோக்கியே இருக்க உமது கிருபையை வேண்டுகிறோம். உலகப் பொக்கிஷங்களுக்காக இரவும் பகலும் உழைப்பதைவிட பரலோக ராஜ்யத்தை எப்போதும் தேட எங்களுக்கு உதவும். இந்த ஆசீர்வாதத்தை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம். ஆமென்.
Sol. வத்சலா.
