தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-11-2022

கிருபை வரங்கள்

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே ரோமர் 12:6

இங்கே அப்போஸ்தலன் பவுல் ரோமர் 12-6-8 இல் அவருடைய கிருபையின்படி நமக்கு வழங்கப்பட்ட வரங்களை பற்றி பேசுகிறார். இந்த வரங்கள் 1 கொரி 12ல் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் வரங்களுக்கு வித்தியாசமானவை. இவை அனைத்தும் அவருடைய சித்தத்தின்படி வாழவும் கடவுளை மகிமைப்படுத்தவும் தனித்தனியாக கொடுக்கப்பட்ட தனித்துவமான வரங்கள்.

ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். ரோமர் 12:7-8

நான் என் வீட்டிற்கு அருகிலுள்ள ஓவியம் சம்பந்தமான கடைக்கு  சென்றேன். அங்கு நிறைய வரைவதற்கு கருவிகள் இருந்தன. நான் அங்கு இருந்தபோது, ​​தற்போதைய காலங்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி வரைந்து, அதனுடன் தொடர்புடைய பைபிள் வசனத்தைச் சேர்க்கும் ஒரு போதகரை கடவுள் எனக்கு நினைவுபடுத்தினார். “1000 வார்த்தைகளை விட ஒரு படம் சக்தி வாய்ந்தது” என்பது பழமொழி. இந்தியாவில் உள்ள ஒரு கார்ட்டூனிஸ்ட் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வரைந்தார். அவர் தனது வரைபடத்தின் மூலம் மக்களிடையே ஒரு பெரிய சிந்தனையையும் விழிப்புணர்வையும் தூண்டினார். அதன் பிறகு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் அவர்  இனி வரைவதையும்  தடுத்து நிறுத்தினார். அவர் வரைந்தவை மக்களை சென்றடைந்ததால் அவர் நிறுத்தப்பட்டார். ஒரு ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் போதகர் வரைந்த வல்லமையும் ஜீவனும் கொண்ட  கொண்ட ஓவியம் அநேகரை உயிரூட்டியது. இது அவருக்கு கொடுக்கப்பட்ட கிருபை வரம் (ஓவியம் வரைதல்)அதை அவர் ஆண்டவரின்  மகிமைக்காக பயன்படுத்துகிறார்.

முகநூலில் ஒரு பதிவு முன்பு படித்தேன். இங்கிலாந்தில் போதைக்கு அடிமையான ஒரு தம்பதியினர் இருந்தனர். போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் அவர்களுக்குப் பிறந்த குழந்தை பார்வை இல்லாமல் பிறந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, போதைப் பழக்கத்தால் பெற்றோர் இறந்துவிட்டனர். மறைந்த தாயின் இளைய சகோதரி குழந்தையை அழைத்துச் சென்றார். குழந்தை அவர்களுடன் வளர்ந்தது. அவர்கள் நல்ல விசுவாசிகள்  மற்றும் அவர்கள் குழந்தையை மிகவும் நேசித்தார்கள். அவர்கள் அந்த குழந்தைக்கு இசையையும் பாடவும் கற்று கொடுத்தார்கள் . அன்பும் அக்கறையும் அந்த குழந்தையை தொட்டது. அவர்கள் குழந்தையை இரட்சிப்பிற்குள்  வழிநடத்தினர். அந்த குழந்தை  வளரும்போது பார்வையற்றவராக இருப்பதால், கிறிஸ்துவின் அன்பை பலருக்குப் பகிர்ந்து கொள்ள மக்களை அணுக முடியவில்லை என்றும் தனது  பெற்றோரை போல் யாரும் தங்கள் வாழ்க்கையை இழந்து விட கூடாது என்ற கவலை அந்த குழந்தைக்கு இருந்தது. தனது பார்வை இல்லாமையை வாழ்க்கையில் ஒரு பெரிய தடையாக உணர்ந்து அதை பற்றி எப்போதும் கவலை பட்டது. ஒரு நாள் அவருடைய  ஜெபத்தின் போது கர்த்தர் உன்னிடம் இல்லாததை பற்றி ஏன் கவலை படுகிறாய். என்னை வெளிப்படுத்த உன்னிடம் ஒரு கிருபையை கொடுத்து இருக்கிறேன் (பாடல் பாடுவது). இதைக் கேட்டதும் விழித்து கொண்டு கர்த்தருக்காக  பாடத் தொடங்கினார். அவருடைய பாடலும் அவருடைய சாட்சியமும் பலரைச் சென்றடைந்தது. மேலும் அவர் பல இளம் வாலிபர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்.

ரோமர் 12:8-ல் வேதம் கூறுகிறது, ” இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

“. அன்னை தெரசா மற்றவர்களுக்கு உதவவும் அன்பு செய்யவும்  இந்த வரத்தை பெற்றிருந்தார். அவர் சுவிஷேசத்தை பிரசங்கிக்கவில்லை, ஆனால் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார். விசுவாசிகள் அல்லாதவர்களும் கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்ள செய்தது மட்டும் அல்லாமல் நம்மையும் அப்படி பட்ட அன்பை வெளிப்படுத்தும் மாதிரியாக மாறவும் உணர்த்தினார்.

ஜனவரி 2022 இல் நான் DA2 மீட்டிங்கில்  இருந்தபோது, ​​நான் ஏன் அங்கு இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நன்கு ஆண்டவருடைய  வார்த்தையை  சொல்லவோ எழுதுகிறவனோ இல்லை. ஆனால் எழுதுவதற்கான வாய்ப்பு வந்த போது ஆண்டவர் எழுதுவதற்கான கிருபை வரத்தை எனக்கு கொடுத்தார். அது முதல் புதிய வெளிப்பாடுகளை  எழுத அவருடைய நாமத்தை மகிமை படுத்த உதவினார்.

கிறிஸ்துவின் சரீரத்தில் நாமெல்லாருக்கும்  பல்வேறு கிருபை வரங்கள் கொடுக்கப்பட்டுஇருக்கிறது. அது நிர்வாகத்திலோ, சேவை செய்தல், ஏழைகளுக்கு கொடுப்பது என இருக்கலாம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவும், கிறிஸ்துவிடம் மக்களை வழிநடத்தவும் அவருடைய நறுமணத்தைப் பரப்பவும் இந்த வரங்களைப் பயன்படுத்துவோம். ஆமென்.

Sol.Leo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *