தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-11-2023

ஆத்துமாவை குணப்படுத்துதல்.

இது இரண்டு முறைகளால் நிகழ்கிறது.

  1. இயற்கையான முறையில்
    2 . இயற்கைக்கு
    அப்பாற்பட்ட முறையில்

உலகில் நிறைய மக்கள் குறிப்பாக நிறைய இளைஞர்கள் உள்ளத்தால் உடைந்தவர்களாக உள்ளனர். ஒரு காலத்தில் அவர்கள் பிரகாசமான, ஆரோக்கியமான இளைஞர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் உடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கான நம்பிக்கை ஏதாவது இருக்கிறதா ? அல்லது மிகவும் தாமதமாகிவிட்டதா? ஒரு அதிசயம் மட்டுமே அவர்களி தேவையை பூர்த்தி செய்ய முடியும். நம்பிக்கை இருப்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள் .நம்முடைய கர்த்தர், சர்வ வல்லமையுள்ள அற்புதங்களின் தேவன்.

இயற்கைக்கு அப்பாற்பட்டது :


ஏசாயா 58 : 10
” பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து சிறுமைப்பட்ட
ஆத்துமாவைத் திருப்தியாக்கினால் , அப்போது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். “

உங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். துன்பப்படுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள் . அதாவது நிராகரிக்கப்பட்ட ஆழ்மன காயங்களால் அவதிப்படுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். அப்போது உங்கள் ஒளி இருளில் உதிக்கும், உங்கள் இரவு நண்பகல் போல் இருக்கும்.

தாவீதின் குணமாக்கல் :
தாவீது,


” கர்த்தாவே உமக்கு எங்கள்மீது இரக்கம் உண்டு. என் ஆத்துமாவை குணமாக்கும். நான் உமக்கு எதிராக பாவம் செய்தேன். என்று பேசுகிறார். சங்கீதம் 23 எழுதும் அளவுக்கு கர்த்தரை நேசித்தார். அதில் “கர்த்தர் என் மேய்ப்பர்.அவர் என் ஆத்துமாவை மீட்டெடுத்தார் என்று எழுதினார். “இருதயம் உடைந்தவர்களைக் குணப்படுத்துகிறார். அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார் என்று மேலும் அவர் எழுதுகிறார். நம்முடைய கர்த்தர் பெரியவர், சர்வ வல்லமையுள்ளவர், தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார்….”

பல நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள், வேதனைப்பட்ட மக்கள் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். இயேசு அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தினார். இதில் ஆவிக்குரிய வகையில் , மனதளவில் உணர்வளவில் பாதிக்கப்பட்ட அனைவரும் இருந்தனர்.

கர்த்தர் இன்று குணமாக்குகிறார்: எங்கெல்லாம் பாவம் இருந்ததோ அங்கெல்லாம் இயேசு மன்னித்து, சுத்தப்படுத்தி, அன்பின் வல்லமையை வெளிப்படுத்தினார். அவர் அவர்களை ஆவியிலும் உடலிலும், ஆத்துமாவிலும் ஒரு புதிய படைப்பாகவும் உருவாக்கினார்.அவர் நம்மை என்னிடம் வா என்று அழைக்கிறார்.

ஆத்துமா குணமடைவதற்கான முதல் படி :
நாம் மன்னிக்கப்பட வேண்டியது அவசியம். நமது கனமான குற்றச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனந்திரும்புதலின் மூலம் மீட்கப்பட வேண்டும்.

இரண்டாவது படி :

அவருடைய நுகத்தை எடுக்க வேண்டும். அதாவது நம் வாழ்வின் முழு கட்டுப்பாட்டையும் கர்த்தரின் கரத்தில் கொடுப்பது என்பதாகும். சாத்தான் நம்மை பொய் சொல்லி ஏமாற்றுகிறான்.நாம் இதனா‌ல் நமது சுதந்திரத்தை இழந்துவிடுவோம் என்று நினைக்கிறோம்.கர்த்தருடைய கிருபையால் மட்டுமே நம்மை உண்மையாக விடுவிக்க முடியும். அனைவரும் தங்கள் சொந்த விருப்பத்தின்படி பரலோகம் செல்ல விரும்புகிறார்கள். மாம்சத்தில் நடப்பதில் பல வேதனையான வீழ்ச்சிகள் உள்ளன. இயேசுவுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதன்மூலமே சாத்தானிடமிருந்து முழு விடுதலையை பெற முடியும்.

மூன்றாவது படி :


அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் அவருடைய குழந்தைகளாக மாறிய பிறகு நாம் அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர் நம் ஆத்துமாவை மீட்டெடுப்பவர். நம் வாழ்க்கைக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி. அவர் தனது மனத்தாழ்மையில் துன்பப்பட்டார். நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கர்த்தருடைய வசனங்களிலிருந்து கண்டு பிடிக்கலாம் . நாம் மற்றவர்களை கண்டிப்பாக மன்னிக்க வேண்டும்.பரிசுத்த ஆவியின் வல்லமையால் நம்மால் மன்னிக்க முடியும். நாம் பிறரை மன்னிப்பது நமக்கு சுகத்தை தரும். நாம் மற்றவர்களை மன்னிக்காமல் கடின இதயத்தோடு இருந்தால் நமது ஆத்துமா பாதிக்கப்படும். இந்தவலி நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் வேதனையை தரும் . நமது வாழ்க்கை பூமியில் நரகமாக மாறும் . மன்னிப்பு என்பது அந்த நரகத்தில் உள்ள சிறைகூடத்திலிருந்து விடுவிக்க கூடிய சாவியாகும். இயேசுவைப் பற்றிப் பேசும் சங்கீதக்காரன்


சங்கீதம் 16 : 10 ல்
” என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ” என்று கூறுகிறார்.


நீங்கள் மனக்கசப்பு என்னும் ஆத்தும நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இயேசுவிடம் மன்னிக்கும் கிருபையை கேளுங்கள். “அப்பா பிதாவே அவர்களை மன்னித்து, இயேசுவின் நிமித்தம் இப்போதே என்னையும் மன்னியும் . இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன் ஆமென்” என்று சொல்லுங்கள்.

ஜெபம்:

கர்த்தாவே நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம்மை துதிக்கிறோம். நீர் சிலுவையில் எங்களுக்காக செய்ததற்காகவும், எங்களை மன்னித்ததற்காகவும், எங்களைக் குணப்படுத்தியதற்காகவும், நித்திய மரணத்திலிருந்து எங்களைக் காப்பாற்றியதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி உம்மை வணங்குகிறோம்.
ஆமென்.

Sol. நோரீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *