தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21.11.2023

எசாயா 50 : 10 – 11
” உங்களில் எவன் கர்த்தருக்கு பயந்து , அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ , அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன்.


இதோ நெருப்பைக் கொளுத்தி, அக்கினி பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜீவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.”

சுருக்கமாகச் சொல்வதானால் இயேசு அணுகிய விதத்தில் , தங்களின் அழைப்பை யார் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள்? இதுதான் நம்மிடம் முன்வைக்கப்பட்ட கேள்வி!

இந்த வசனத்தை தியானிக்கும் முன், ஆவிக்குரிய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். இவ்வுலகில் நாம் ஆற்ற வேண்டிய எந்தப் பங்கும் மனிதர்களிடமிருந்தோ அல்லது எந்த மனிதனாலுமோ வருவது அல்ல, மாறாக கிறிஸ்து மற்றும் பிதாவாகிய தேவன் மூலமாகவே வருகிறது.

கலாத்தியர் 1: 1
” மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமோ அல்ல, இயேசு கிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின பிதாவாகிய தேவனாலும் , அப்போஸ்தலனாகிய பவுலாகிய நானும் “

நாம் கர்த்தருடைய குழந்தைகள் என்பதையும், நமக்கு உரிமைச் சொத்து கர்த்தரிடமிருந்தே வருகிறது என்பதையும் நாம் உண்மையில் புரிந்து கொள்வது அவசியம். மேலும் நம் எதிரியாகிய சாத்தானால் நாம் எப்போதும் குற்றம் சாட்டப்படுகிறோம் என்பதையும் நாம் ஒரே நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

அவனது குற்றச்சாட்டு 2 விஷயங்களுக்கு எதிரானது

  • கர்த்தரின் குழந்தைகளாக நமது தகுதி
  • நமது உரிமைச் சொத்தை பெறுவதற்கான நமது தகுதி

நம்முடைய பாவங்களுக்கு எதிராக அவன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நாம் நன்கு அறிவோம். ஆனாலும் நாம் அவ்வப்போது அறிக்கையிட்டு பிதாவாகிய தந்தையிடம் ஒப்புரவாகிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். ஆனால் குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை!

அவன் மேலும் ஒரு குற்றச்சாட்டை நம்மீது சுமத்துவதை நாம் அறிவோமா? நாம் கர்த்தரிடமிருந்து உரிமைச் சொத்தை பெறவில்லை என்பதில் எதிரி மிகவும் குறிப்பாக இருக்கிறான். பின்வரும் வசனங்கள் குற்றச்சாட்டு எதைப் பற்றியது மற்றும் இயேசு அதை எவ்வாறு நியாயப்படுத்துகிறார் என்பதைப் பற்றி பேசுகிறது!

எசாயா 50 : 5 – 8
“கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை. பின் வாங்கவும் இல்லை. அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன். அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன். நான் வெட்கப்பட்டு போவதில்லையென்று அறிந்திருக்கிறேன். ஆதலால் என் முகத்தை கற்பாறையைப் போலாக்கினேன். என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார். என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக. யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். “

எதிராளி கர்த்தருடைய பிள்ளைகளின் புரட்சிகரமான குணத்தைக் குறித்தும் இயல்பை விட்டு விலகி கர்த்தரிடமிருந்து எந்த உரிமைச் சொத்தையும் பெற முடியாது என்றும் சந்தேகத்தை எழுப்புகிறான். இந்த காரணத்தினால் கர்த்தரின் பரலோக நீதிமன்றத்தில் ஒருவர் சோதிக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட வேண்டும். அவர்களது கர்த்தரின் மீதான பயம், கீழ்படிதல், கர்த்தரை மட்டுமே சார்ந்திருத்தல், ஒரு வேலைக்காரருக்குரிய நிலை ஆகியவை நிரூபிக்கப்பட வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானுக்கு பயப்படுபவனாக, தனக்கென்று எந்த விருப்பமும் இல்லாமல் முற்றிலுமாக கீழ்படிந்து குருட்டுத்தனமாக எஜமானனின் கட்டளைகளை ( வார்த்தைகளை) சார்ந்து நடப்பவனாக இருக்க வேண்டும்.

கர்த்தர் நியாயப்படுத்துவதற்கும், எதிராளியின் சந்தேகத்தை நீக்குவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது கீழ்படிதலின் நிலையை நிரூபிக்கவும் பின்நோக்கி போகாமல்p இருக்கவும் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இயேசு பிதாவாகிய தேவனின் மீதுள்ள நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு தன் முகத்தை எரிகல்லைப் போலாக்கி பிதாவிடம் உதவிக்காகவும் நீதிக்காகவும் அவர் மீது நம்பிக்கை வைத்தார். தன்னுடைய துன்பத்தின் போது புரட்சியை நோக்கி அவர் திரும்பவில்லை. அவர் தனது நெருப்பை மூட்டி தன்னைச் சுற்றியுள்ள மக்களை ஒளிரச் செய்தார். கர்த்தர் அவருக்கு மீட்பு, உலகத்திற்கு இரட்சிப்பு, நித்திய வாழ்வு என்ற வெகுமதியை வழங்கினார். தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் இயேசு வேதனையை கடந்து சென்றதைப் போல விசுவாசத்தாலும் கர்த்தர் மீதுள்ள முழு நம்பிக்கையாலும் துன்பத்தை கடந்து செல்ல வேண்டும். அதன்மூலம் தான் அவர்கள் நிரபராதிகளாக, கர்த்தர் மீதுள்ள பயத்தை நிரூபிப்பவர்களாக, அவருக்கு கீழ்படிபவர்களாக , அவரை மட்டுமே சார்ந்திருப்பவர்களாக அறிக்கையிட வேண்டும்.

எசாயா 50 : 10 – 11
” உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி தன் தேவனை சார்ந்து கொள்ளக்கடவன். இதோ நெருப்பைக் கொளுத்தி அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும் உங்கள் அக்கினி தீபத்திலும் நீங்கள் மூட்டின அக்கினி ஜீவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள். என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும். “

கர்த்தர் தாம் தெரிந்து கொண்டவர்களை ,
நெருப்பு மூட்டுபவர்கள் மற்றும் மற்றவர்களை ஒளிரச் செய்யும் தீப்பொறிகளால் தங்களை சூழ்ந்து கொள்பவர்கள் என்று அழைக்கிறார். கர்த்தர் வைத்த பாதையில் பயணிக்க தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், தங்கள் நெருப்பை எரித்துக் கொண்டே இருப்பதாலும் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு ஒரே நேரத்தில் வெளிச்சம் கொடுப்பதாலும் பாதை தெளிவாக தெரிகிறது. ஒன்றில் தோல்வியுற்றால் அவர்கள் பாதையை இழக்கிறார்கள். தம் சொந்த நெருப்பை மூட்டினாலும் மற்றவர்களுக்கு ஏற்றி வைக்காவிட்டால் பாதையை இழந்து விடுவார்கள். ஆனால் தங்கள் நெருப்பை மூட்டி, பிறரை ஒளிரச் செய்யும் தீப்பொறிகளால் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் அனைவரும் வீழ்ந்து விடுவோமோ என்ற அச்சமின்றி உரிமைச் சொத்தை பெற முன்னோக்கி செல்கிறார்கள்.

நம்முடைய சொந்த அழைப்பின் பேரில் நாம் அனைவரும் ராணுவத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். நம்முடைய வேலை அனுபவத்தை ஆழ்ந்து சிந்திப்போம். சிலர் தங்கள் பொறுப்பை மறுத்திருக்கலாம். சிலர் மற்றவர்களை தூக்கிவிடாமல் தங்கள் பாதையில் சென்றிருக்கலாம். சிலர் கலகம் செய்து வீழ்ந்திருப்பார்கள். சிலர் நிலையான முன்னேற்றத்தைக் கண்டிருப்பார்கள்.

Sol. சுஜாதா ஆச்சா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *