நாள்: 04-02-2023
கர்த்தரின் இயல்பு

2 கொரிந்தியர் 3 : 18,
“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”
” எழும்பி ஒளிவீசு “. இது நிறைவேற வேண்டும் என்பதற்காக , கர்த்தர் நமக்கு தந்த அதிகாரத்தின்படி இதைக் கேட்கிறோம். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய குமாரனாகிய இயேசுவைப் போலவே ஆக வேண்டும் என்பதே கர்த்தரின் மிகப்பெரிய திட்டம். விசுவாசிகளின் வாழ்க்கையில் எது நடக்கிறதோ அது அவர்களின் நன்மைக்காகவே நடக்கும்.
ரோமர் 8 : 28 – 29 “அன்றியும் , அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவராயிருக்கும் பொருட்டு , தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
“வலி, வேதனை, துன்பம் போன்ற இந்த அனுபவங்கள் மூலம் மட்டுமே நம் தேவன் தம்முடைய நன்மையானவற்றை நம் வாழ்வில் காட்டுகிறார். நாம் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு அவருடைய முழு அளவிற்கு வளருகிறோம்.
எபேசியர் 4 : 11 – 13” மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனை பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி , கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண பூருஷராகும் வரைக்கும் பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு , சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் , கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும் அவர் சிலரை அப்போஸ்தலராகவும் , சிலரைத் தீர்க்கத்தரிசிகளாகவும் , சிலரைச் சுவிசேஷர்களாகவும் , சிலரை மேய்ப்பவராகவும் , போதகராகவும் ஏற்படுத்தினார்.
கிறிஸ்துவின் சாயலில் வளர்வதற்கு , ஆவிக்குரிய பரிபூரணத்தில் வளர்வதற்கு , கிறிஸ்துவின் முழுமையில் வளர்வதற்கு , உதவுவது பரிசுத்த ஆவியானவரின் வேலை. இந்த வேலையை அவர் தினமும் செய்கிறார். இயேசுவின் சாயல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மில் உருவாகும் . நாம் ஏற்கெனவே பாறையிலிருந்து வெட்டப்பட்டிருக்கிறோம். வடிவமைக்கும் பணி தொடங்கிவிட்டது.
எசாயா 5 : 1 ” இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன் , என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத் தோட்டம் உண்டு. “
நம்மை சீர்படுத்தும் பணி தொடங்கிவிட்டது. இது நிறைய நேரங்களில் மெதுவாகவும் வலிநிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால் கர்த்தர் ஒரு சிறந்த கைவினைஞர். அவர் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார். நமது வேலை அவரது வல்லமையான திருக்கரங்களில் நம்மை ஒப்படைப்பதாகும். நாம் ஒரு போதும் பொறுமையை இழக்கக்கூடாது. நம்முடைய தொடக்கம் மெதுவாக இருந்தாலும் , கடினமாக இருந்தாலும் முடிவு மகிமையானதாக இருக்கும். உங்களில் நல்ல வேலையை தொடங்கிய கர்த்தர் , அதை இயேசு கிறிஸ்துவின் நாளிலே முழுமையாக நிறைவேற்றுவார்.
பிலிப்பியர் 1 : 6 “நான் உங்களை நினைக்கும் போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் .
ஜெபம்
பரலோகத்திலிருக்கின்ற எங்கள் தந்தையே , என்னை ஒரு நிலையிலிருந்து இன்னொரு மகிமையான கிறிஸ்துவின் சாயலுக்கு என்னை மாற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். உம்முடைய நாமம் மகிமைப்படட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்
Sol. மல்கீத்
