நாள்: 10-01-2023
வெளிப்படுத்தின விசேஷம் ; 1 : 3 ” இந்த தீர்க்கத் தரிசன வசனங்களை வாசிக்கிறவனும் , கேட்கிறவர்களும் , இதில் எழுதியுள்ளவர்களைக் கைக் கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள். காலம் சமீபமாயிருக்கிறது. “

மேற்குறிய வசனத்திலிருந்து ஒருவரின் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும் ஐந்து விஷயங்களையும், வசனங்களை கைக்கொள்கிற மக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
1 . ஒருவருக்கு உறுதியான விசுவாசம் இருக்க வேண்டும்.
2 கொரிந்தியர் 5 : 6 ” நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.” இந்த வசனத்தின்படி நாம் பார்வையினால் நடக்காமல் விசுவாசத்தினால் நடக்கிறோம். இந்த வசனம் , கர்த்தரை விசுவாசிக்கும் மக்கள் தங்கள் எல்லா செயல்களையும் விசுவாசத்தினாலே செய்கிறார்கள். உலகப்படியான மக்கள் தன்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்து அதற்கு எதிர்வினை செய்கிறார்கள். விசுவாசம் இல்லாத இடத்தில் கிறிஸ்தவம் கேலிக்கூத்தாக மாறுகிறது. விசுவாசத்தின் பொருளை நாம் மிகைப்படுத்த முடியாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கிறிஸ்தவத்தின் பயணம் ‘விசுவாசத்தின் நடை’ என்று அழைக்கப்படுகிறது.
எபேசியர் 2 : 8 “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ” என்று சொல்கிறது. எனவே நாம் எல்லாவற்றிற்கும் கர்த்தரையே நம்பி அச்சமின்றி வாழ முடியும். எந்த கிறிஸ்தவனும் அவர்களுடைய நல்லவை பற்றி தற்பெருமை காட்ட முடியாது.
2 . கர்த்தருடைய கிருபையினாலும் அறிவாலும் விசுவாசம் பெருகும்.
2 பேதுரு 3 : 14 – 15
” ஆகையால் பிரியமானவர்களே , இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள். நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். ” பேதுரு விசுவாசிகளுக்கு இங்கே எழுதுகிறார். பேதுரு எந்த வகையான சமாதானத்தை விவரிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. பேதுரு இரட்சிப்பிலிருந்து வரும் சமாதானத்தை விவரிக்கவில்லை. மாறாக பரிசுத்தமாக்குதலில் வளரும் சமாதானத்தை விவரிக்கிறார்.
3 . தூய்மையான மற்றும் பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் .
யோவான் 17 : 17 ” உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும் : உம்முடைய வசனமே சத்தியம். “
நாம் எங்கே குறையாக இருக்கிறோம் அல்லது தவறு செய்கிறோம் என்பதை கர்த்தருடைய வசனம் காட்டுகிறது. அது நம்மை திருத்துகிறது. மற்றும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ ஊக்குவிக்கிறது. கர்த்தருடைய வசனம் நம்முடைய வாழ்வு மற்றும் விதியின் பாதுகாவலராக இருக்கிறது.
4 . இது நாம் கர்த்தருக்கு பணி செய்ய வல்லமையை தருகிறது.
எபேசியர் 2 : 10 ” ஏனெனில் , நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு , தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.” நல்ல செயல்களுக்கான உங்களின் ஆர்வமும் வைராக்கியமும் அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் செயல்களின் பலனாகும். ஏனென்றால் நம்மிலும் பெரியவர் நம்மில் செயல்படுகிறார்.
5 . பணி செய்ய நம்மை தயாரிக்கிறது.
கொலோசியர் 3 : 16 “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக் கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள். ” கர்த்தருடைய வசனம் நல்ல தேர்ந்த அறிவுடன் மற்றவர்களுக்கு கற்பிக்கும் திறனை தருகிறது. மேலும் அது நம்மை தயார்படுத்தி அவரை துதிக்கவும் ஆராதிக்கவும் நமக்கு விருப்பத்தை தருகிறது. நாம் அவற்றை உள்வாங்குவது நம்முடைய வாழ்வின் நலனை தீர்மானிக்கிறது.
ஜெபம்
பிதாவே, எங்களுக்கு வாழ்வளிக்கும் உமது வார்த்தைக்காக நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வார்த்தைகள் எங்களை உமது ஆவியுடன் இணைக்கிறது. உமது வார்த்தைகள் உம்முடைய பரிசுத்த சந்நிதியில் வந்து தங்குவதற்கு எங்களை தயார்படுத்துகிறது. ஆமென்.
Sol. பாபு செபாஸ்டின்.
