நாள்: 11-01-2023
கர்த்தர் மீதுள்ள பயம்
கர்த்தர் மீதுள்ள பயம் நேர்மறைத் தன்மையாக வாழ்வின் ஆசீர்வாதங்களுக்கான முக்கிய வாசலாக மாறுகிறது. அதே சமயம் கர்த்தர் மீது பயமில்லாமல் இருப்பது எதிர்மறையாக நமது வாழ்வில் சாபங்களுக்கு முக்கிய வாசலாக மாறுகிறது.

கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் மாறக்கூடியது அல்ல. வழிமுறைகள் சரியாக இருந்தால் , கர்த்தர் தமது மக்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குதற்குரிய அழுத்தத்திற்கு உள்ளாகிறார்.
சங்கீதம் 133 : 3 ” எர்மோன் மேலும் , சீயோன் பர்வதங்கள் மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது. அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். “
என்னைப் பொறுத்த வரையில் கர்த்தருக்கு பயப்படுவதை விவரிக்கும் சிறந்த வார்த்தை கர்த்தர்மீதுள்ள பயபக்தியாகும். கர்த்தருடைய வெளிப்பாட்டிற்கு அவர்மீதுள்ள பயபக்தியே காரணம். அவர் தன்னை வெளிப்படுத்தும் போது , அதற்குரிய பொருத்தமான காரணம் பயபக்தியே என்பதை நான் நம்புகிறேன். நம்மையே தாழ்த்தி அவருக்கப் பணிந்து வாழ்வதன் வழியாகவே இது செல்கிறது. கர்த்தரை நோக்கி நாம் பணிந்து செல்லும் மனப்பான்மை , நாம் நம் வாழ்க்கையில் அவருக்கு பயப்படுவதை காட்டுகிறது.
நான் உங்களுக்கு , கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது கர்த்தருக்குப் பணி செய்வதற்குரிய முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். கர்த்தருக்கு பயப்படும் பயம் , நம் ஒவ்வொருவருக்கும் என்ன செய்யும் என்பதை அறியும்போது மேற்கூறிய வசனங்கள் நம்மை உற்சாகப்படுத்தும்.
யோபு 28 : 28 ல் கர்த்தர் என்ன சொன்னார் என்பதை முதலில் பார்ப்போம். ” இதோ ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் “
உண்மையான ஞானத்தை கர்த்தருக்கு பயப்படுவதிலிருந்து பிரிக்க முடியாது. பலர் ஞானத்தை புத்திசாலித்தனம் என்ற அறிவார்ந்த ஒன்றாக நினைக்கிறார்கள். ஆனால் ஞானம் என்பது புத்திசாலித்தனம் அல்ல. ஏனெனில் புத்திசாலித்தனம் தீமையுடன் இருக்கும். கர்த்தருக்கு பயப்படுதல் தீமையுடன் இருக்க முடியாது .
சங்கீதம் 25 : 12 கர்த்தருக்கு பயப்படுவது இன்னொரு ஆச்சரியமான நன்மையை நமக்குத் தருகிறது.
” கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார். ” இந்த வசனம் கர்த்தர் அனைவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. மேலும் கர்த்தர் தம்முடைய மாணவர்களை தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. அவர் தம்முடைய மாணவர்களை குணாதிசயங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார். மேலும் அவருக்கு பயப்படாதவர்களுக்கு கற்றுக் கொடுக்க அவர் தம்மை ஒப்புக்கொடுக்கவில்லை. நீங்கள் சிறந்த வேதாகம வகுப்பிற்குச் சென்று கற்கலாம் . ஆனால் கர்த்தர்மீது பயம் இல்லாவிட்டால் நீங்கள் கர்த்தருக்கு மாணவராக முடியாது. நீங்கள் சாதாரண மனித ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களாக இருக்க முடியும். ஆனால் கர்த்தருக்கு மாணவராக இருக்க முடியாது.
மேலே கூறிய இரண்டு வசனங்களுக்குப் பிறகு சங்கீதம் 25 : 14 ல் இன்னொரு அற்புதமான சிந்தனையைக் காணலாம். ” கர்த்தருடைய ரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். “
இது அற்புதம் இல்லையா? நீங்கள் கர்த்தருக்கு பயந்து நடந்தால் அவர் தம்முடைய இரகசியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். உங்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவருடன் மட்டுமே உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். அதாவது நீங்கள் நம்பும் ஒருவருடன் அல்லவா?
ஜெபம்
பிதாவே உமது வார்த்தைகளுக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே உமக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. பிதாவே , நேர்மையான வழியைத் தழுவி, நெளிந்த வளைவான வழியை தவிர்ப்பதற்கான கிருபையை பெறுகிறேன். உமக்காக வாழும் கிருபையை , இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் பெறுகிறேன். ஆமென்.
Sol. ஃபியானா.
