நாள்: 18-12-2022
மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் நிலைகள்.
அன்பான சகோதர சகோதரிகளே , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள, விசுவாசிகளின் அதிகாரத்தை நாம் அறிந்திருப்பதால் , இந்த பத்தியில் அதிகாரத்தின், அதாவது நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மறுபக்கத்தை நுட்பமாக காணலாம்.
எபிரேயர் 13 : 17 ” உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால் , அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி , அவர்களுக்கு கீழ்படிந்து அடங்குங்கள். “
இங்கே இந்த வசனத்தில் ஆட்சி என்பது தலைமைத்துவம் உள்ள மேய்ப்பனை மற்றவர்களுக்கு கொடுப்பதாகும்.
ஒரு மேய்ப்பன் என்பவன் , தன்னுடைய ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பவன் , சேவை செய்வதற்கும் , உணவளிப்பதற்கும் ,பாதுகாப்பதற்கும் மொத்தமாக தன்னை அர்ப்பணிப்பவன் .
யோவான் 10 : 11 ல் ” நானே நல்ல மேய்ப்பன் . மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறான். ” என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும் எபிரேயர் 13 : 17 ல் வாசிக்கலாம் . தலைமைத்துவம் உள்ள மேய்ப்பனைப் போன்றவர்களை பின்பற்றுங்கள். அவர்களின் கவனிப்பு, உணவளித்தல் மற்றும் அன்பான கண்டிப்புக்கு அடிபணியுங்கள் . ஏனென்றால் அவர்கள் பிரதான மேய்ப்பராக , உங்கள் ஆத்துமாவிற்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
இயேசு நமது பிரதான மேய்ப்பராக இருக்கிறார். எல்லா விசுவாசிகளும் அவரைப் பின்பற்றுபவர்கள். மேலும் மற்றவர்களுடைய தினசரி வாழ்விலும் அவர்களை கவனிப்பது நமது கடமையாகும். இதுதான் இறுதியான பொறுப்பாகும். அவர்கள்மீது
ஆத்தும ரீதியிலும் , உடல்ரீதியிலும் , மனரீதியிலும் அக்கறை கொள்ள வேண்டும். இதை நாம் திறம்பட செய்தால் , கர்த்தருடைய பிரசன்னத்தில் இருப்போம். மேலும் கர்த்தருடைய வார்த்தையின் வழியாக நாம் உலகத்திற்கு சென்று நம் வேலைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் தவறு செய்பவர்களாக இருப்போம்.
குறிப்பிட்ட பிரச்சனைக்கு , நாம் கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெறாவிட்டால் ,
நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களாக ஆகிவிடுவோம். வார்த்தை நமக்கு கிடைக்காவிட்டால் , நாம் காரணத்திற்காக போராடுவோம்.
எனக்கு என்னுடைய மாணவர்களுடன் பிரச்சனை இருந்தது. அவர்கள் எப்போதுமே அவர்கள் விரும்புவதை மட்டுமே செய்தார்கள். நான் இதை எப்படி கடந்து செல்வது என்று தெரியவில்லை. அந்த சூழ்நிலைக்காக கர்த்தரை துதிக்கத் தொடங்கினேன். எல்லாம் வல்ல கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்காக போராடினார். நான் இப்போது முற்றிலும் சுதந்திரமாக நிம்மதியாக இருக்கிறேன். நாம் கர்த்தருடைய நேரத்திற்காகவும் வார்த்தைக்காகவும் காத்திருக்க வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கான வரம்புகள்.
1 . கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஒருபோதும் நம் பொறுப்பைவிட்டு மீறக்கூடாது.
2 . நமது பொறுப்பிற்கு அப்பாற்பட்டு வேறெதுவும் நாம் செய்யக்கூடாது. உதாரணமாக நான் அரசுத்துறையில் வேலை செய்வதால், அரசாங்கத்தால் தரப்பட்டுள்ள பொறுப்பிற்கு நான் கீழ்படிய வேண்டும்.
ஜெபம்
பரலோகத் தந்தையே, பரிசுத்த ஆவியானவரே, இதோ உங்கள் முன் வருகிறேன். என் நிறை குறைகளை ஆய்வு செய்து ,உம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தால் என்னை சுத்திகரியுங்கள். தந்தையே, என் பணியிடத்திலும் என் வீட்டிலும் நீங்கள் எனக்கு வழங்கிய அதிகாரத்தை நிறைவேற்ற போதுமான வலிமையை வழங்குமாறு வேண்டுகிறேன். உமது விருப்பத்தின்படி என் பணிகளைச் செய்ய என்னை பலப்படுத்தும். எனக்குள்ள பணிகளை நான் நிறைவேற்ற என் வாழ்நாள் முழுவதும் எனக்கு வழிகாட்டும்.
இயேசுகிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறேன்
ஆமென்.
Sol. கமலின் விஜி.
