நாள்: 03-11-2022
யோவான் 14 : 21 ” என் கற்பனைகளை பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான். நானும் அவனில் அன்பாயிருந்து , அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” என்று கூறுகிறது.

இந்த வசனங்கள் , இயேசு, தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பினால், அவரைப் பின்பற்றி அவரது வார்த்தைகளுக்கு நாம் கீழ்படிய வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இப்போது நாம்,கர்த்தர் தம்முடைய வார்த்தைகளின் வழியாக என்ன கட்டளைகளை கொடுத்திருக்கிறார் என்பதைக் காணலாம். முதல் கட்டளை நமக்குத் தெரியும் மாற்கு 12… 29 – 32 வசனங்களில், ” இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்முழு ஆத்துமாவோடும் முழு இருதயத்தோடும் அன்பு கூறுவாயாக “. என்று கூறப்பட்டுள்ளது.
வேதத்தில் , இயேசுகிறிஸ்து தம்மையே முழுமையாக பிதாவாகிய கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்படிந்தார். அதன் பலனாக கர்த்தர், தங்கள் கடைசி மூச்சுவரை கீழ்படிந்திருக்கிற 12 சீடர்களை அவருக்கு கொடுத்து ஆசீர்வதித்தார். இயேசு தன்னுடைய வாழ்க்கையை பிதாவாகிய கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்ததைப் போலவே, அதே வழியில் அவருடைய சீடர்களும் இயேசுவுக்காக எதையும் செய்யும் தைரியத்தைப் பெற முடிந்தது.
இயேசு மக்களிடம் பரலோக ராஜ்ஜியம் பற்றி , கர்த்தருடைய வார்த்தைகள் வழியாகப் பேசும் போதும் அறிவை உணர்த்தும் வசந்தின் வழிகாய பேசி தன்னை முழுவதுமாக தாழ்த்தியதை நாம் வேதத்தில் காண்கிறோம். அவர் எப்பொழுதும் பரிசேயர்களிடமும் அறிஞர்களிடமும் கர்த்தரின் வார்த்தைகள் வழியாகவே பேசினார். அவர் நிகழ்த்திக் கொண்டிருந்த அற்புதங்களையும் அதிசயங்களயும் , அவர் தானே செய்வதாக பெருமை பேசுவதை ஒருபோதும் காணவில்லை.
அவர் எப்பொழுதும் , கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிய வேண்டும், கர்த்தருடைய வழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் , நம்முடைய சொந்த வழிகளை அல்ல என்று நம்மை வலியுறுத்தினார். இயேசு எப்போதுமே , தன்னுடைய ஆற்றலை கீழ்படிதலிலும் கர்த்தர் மீதுள்ள பக்தியிலுமே காட்டினார். அவருடைய பக்தியையும் அர்ப்பணிப்பையும் தன்னுடைய ஒரே பிதாவின் மேலேயே வைத்திருந்தார். அவர்கள் ஒருவராகவே இருந்தனர். இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர். அவருடைய அந்த கீழ்படிதலும் அர்ப்பணிப்பும் அவர் மூலமாக அவருடைய சீடர்களிடமும் இருந்ததால் கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.
யோவான் 14 : 12 ” என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான். என்று சொல்கிறது.
யோவான் 14 : 23 ” இயேசு அவனுக்கு பிரதியுத்திரமாக , ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் , அவன் என் வசனத்தைக் கைக் கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து வாசம் பண்ணுவோம்.” என்று சொல்கிறது.
நமது வாழ்க்கை, நமது நம்பிக்கை , நமது அமைதி, நமது சந்தோஷம் எல்லாம் கிறிஸ்துவுக்கு கீழ்படிந்து நடந்தால் மட்டுமே, புகழப்படும். நமது சுயபுத்தியினால் நடந்தால் அல்ல.
பிதாவே, என் கர்த்தாவே உமது வல்லமை மிக்க கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன். உமக்கு உகந்த வழிகளில் நடக்கவும் என்னுடைய வாழ்க்கையின் முடிவுகளை என் சுய புத்தியினால் எடுக்காமல் உம்மையும் பரிசுத்த ஆவியானவரையும் சார்ந்து எடுக்கவும் உதவி செய்யும்.
ஆமென்.
Sol. குஷி.
