நாள் – 18-05-2022 – தேவ செய்தி
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.
2 சாமு 22:49.

அநேக எதிரிகளை தாவீது தன் வாழ்வில் சந்திக்க நேர்ந்தது. தனக்கு எதிராக எதிரிகள் ஏன் எழுந்திருக்கிறார்கள் எனபது அவனுக்கு தெரியும். அவன் பாவம் செய்த போது தேவன் அறிவித்த தண்டனைகளில் ஒன்று, இவ்வாறாக இருந்தது,
இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி,
2 சாமு 12:10,11
தாவீதின் மகன் அவனுக்கு எதிராக எழுந்த அவனுக்கு பகைவன் ஆனான். தாவீதின் படையை அப்சலோம் திரட்டினான், அரண்மனையை விட்டு தாவீதை விரட்டினான், மேலும் தன்னையே ராஜாவாக அறிவித்தும் கொண்டான். தாவீது ராஜா தன் பாவங்களுக்காக மனம் வருந்தி கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டிருந்தாலும் இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரை அப்சலோமின் அரசாட்சியின் கீழ் இருந்தனர். தாவீதின் அனைத்து பாவங்களையும் தேவன் மன்னித்தார். ஆனால் பாவத்திற்கான தண்டனை அவன் மேல் இருந்தது. தண்டனை காலத்தில் கூட தாவீது கர்த்தரை நாடினான், அவரோ அவனோடு இருந்து அவனுக்கு சகாயம் செய்தார்.
சில காலத்திற்கு பிறகு ராஜ்யபாரம் அவன் கைக்கு வந்தது, இஸ்ரவேலர்கள் மீண்டுமாய் அவன் அரசாட்சிக்கு கீழ் வந்தனர்.
இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து,
2 சாமு 19:41.
அவர்கள் தாவீதின் மேல் உரிமை கொண்டாட தொடங்கினர்.
தாவீதின் திரும்பி வருவதற்கான அழைப்பு பத்து கோத்திரங்களில் இருந்து வந்தது ஆனால் சில தவறான நிர்வாகத்தால், உண்மையான வரவேற்பு யூதாவல் வழங்கப் பட்டது. இது ஒரு புதிய வெளிப்பாட்டிற்கு வழி வகுத்தது, அதாவது நீண்ட காலமாக ராஜ்யத்தில் பிளவை கொண்டு வந்தது. ஆகவே, “பட்டயம் என்றும் உன் வீட்டை விட்டு விலகாதிருக்கும்” என்னும் தீர்க்கதரிசன் வார்த்தை நடைமுறைக்கு வந்தது.
இன்றும் கூட அநேக விசுவாசிகள் சோதனைகள் மற்றும் உபத்திரவங்களுக்கு உள்ளாகிறார்கள், அதன் மீது அவர்களால் வெற்றிகொள்ள முடிவதில்லை, அதற்கான காரணங்களையும் அவர்களுக்கு தெரியாது.
ஒரு தேசமாக இந்தியா பல ஆண்டுகளாக சாத்தானின் அடிமைதனத்தின் மீழ் இருந்து வருகிறது. ஆனால் இப்போது தண்டனையின் காலம் முடிவுக்கு வருகிறது. இயேசு கிறிஸ்து மெதுவாக இந்த தேசத்தை கைப்பற்றுகிறார்.
இது நடக்கும் நேரத்தை கவனியுங்கள். இயேசுவின் அரசை உங்கள் பகுதிகளில் நிறுவுவது உங்களின் கடமையாகும். எந்தெந்த அடிமைதனத்தின் கீழ் உங்களுடைய மக்கள் இருக்கிறார்கள்? ஒவ்வொன்றாக அவைகளை துரத்துங்கள்.
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்;
கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
2 சாமு 21:1.

உங்கள் தொகுதிகளில் ஏதேனும் வியாதியோ, வரட்ச்சி (கர்த்தருடைய வார்த்தைக்காக) அல்லது மக்களை தொடர்ந்து சித்திரவதைச் செய்கிறதா? அதற்கான காரணத்தை கர்த்தரிடம் கேளுங்கள். அதற்கான பதிலையும் அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.
2சாமு 21:14.
உங்கள் தேசத்திற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஏதாவது இன்னும் இருக்கிறதா?
கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்குமுன்பாகப் பாடின பாட்டு.
2 சாமு 22:1
இந்தியா விடுதலையின் பாடலை வெகுவிரைவில் பாட போகிறது. அதன் அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறது. இந்த தேசத்தை ஆண்ட – பாவங்கள், சாபங்கள், பொய் தேவர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக இந்த தேசத்தை விட்டு ஓடுகிறார்கள். இதிய தேசமே! நீ கட்டப்படுகிறாய், நீ உன் அணிகலன்களை மீண்டும் அணிந்து கொண்டு மகிழ்ந்து நடனமாடுபவர்களோடு நீ நடனமாடுவாய்.
ஆமேன்.
–Sr. Angelica AOJ
