நாள்: 15-05-2022 – தேவ செய்தி
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்: (யோவா 15:16)

நாம் அல்ல அவரே நம்மை தெரிந்து கொண்டார் என்று இந்த வசனத்தின் மூலம் தேவன் சொல்லுகிறார். இந்த உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மை தெர்ந்து கொண்டார்.
எபே 1:4 – அவர் நம்மை மட்டும் அல்ல நம்முடைய பெற்றோர்களையும், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி பிள்ளைகள் என அனைவரையும் தெரிந்து கொண்டார். இப்பொழுது நம்மிடம் இருப்பதெல்லாம் தேவனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. கர்த்தரிடமிருந்து நமக்கு கொடுக்கப்பட்ட கொடைகள் என்று அவைகளை சொல்லலாம். நம்முடைய வாழ்வில் என்ன நடந்தது என்ன நடக்கப்போகிறது என்பதை நம்மை உருவாக்குவதற்கு முன்னமே திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.
தங்களுடைய கடந்த அனுப்வத்தினால் அநேகம்பேர் மிகவும் கசப்படைகிறார்கள். தேவனோடு அவர்களுடைய உறவு சாதரணமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் சாத்தானுடைய தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
ஆவியில் மறுபிறப்படைந்த அநேக விசுவாசிகள் கூட இவ்வாறாக பின்வாங்கி போய் விடுகிறார்கள்.
நான் உங்களுக்கு என்னுடைய சாட்சியை சொல்லுகிறேன்.
நான் ஒரு இந்து குடும்பதிலிருந்து வருகிறேன். 26 ஆண்டுகளுக்கு முன் ஒரு சந்தைக்கு போய் இருந்தேன். அது மாலை வேலையாய் இருந்தது. சில கிராமத்து இளைஞர்கள் என்னை நோக்கி தவறான வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தனர். நான் அங்கிருந்து உடனே வெளியேற நினைத்து, வெளியே செல்லும் வழியை தேடினேன் அது எனக்கு தெரியவில்லை. அங்கிருந்த சில இளைஞர்களை நான் வழி கேட்டேன். வேண்டுமென்றே அவர்கள் எனக்கு தவறான வழியை காட்டினார்கள். நான் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஒரு குரல் கேட்டது, இந்த இளைஞர்களை ஒருபோதும் நம்பாதே, என்று. ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நான் பின்நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த இளைஞர்கள் என்னை பின் தொடர்ந்து வந்தனர், நான் அங்கிருந்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தேன். இயேசுவை நான் ஏற்றுக்கொண்ட பின் அவருடைய கிருபையால் தான் நான் காப்பாற்றப்பட்டேன் எனென்றால் அவர் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த நிகழ்வு நடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நான் நண்பர்கள் மூலமாக இயேசுவைப் பற்றி தெரிந்து கொண்டேன். மூன்று ஆண்டுகள் இயேசுவோடு நான் நடந்த பின், முன்பு கேட்ட அதே குரலை நான் மீண்டும் கேட்டேன். யோவான் 15:16 இல் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு உணமி என்பதை நான் அறிந்து கொண்டேன் – அதாவது இந்த உலகின் அடித்தளம் போடுவதற்கு முன்பாகவே தேவன் நம்மை தெரிந்து கொண்டார், ஆனால் நமக்குத்தான் அது தெரிய வில்லை.
கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் அழைத்திருக்கிறார், மேலும் தேர்ந்தெடுத்திருக்கிறார், எரே 1:5 சொன்னது போல, நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
எனவே சோதனைகள் வரும்போது ஏமாற்றமடையாதீர்கள் அல்லது நம்பிக்கையை இழக்காதீர்கள் அல்லது மனச்சோர்வடையாதீர்கள் ஏனென்றால் நற்செய்தி என்னவென்றால் நமது அனைத்தும் கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
ஒரு நாள் உள்ளூர் சந்தையில் பல ஆண்டுகளுக்கு முன் நான் கேட்ட அந்த குரலைப்பற்றி வெளிப்படுத்துமாறு ஜெபித்தேன். தேவன் அதற்கு பதிலாக எரே 1:5 மூலமாக என்னிடம் பேசினார்.
என்னுடைய அனுபவத்திலிருந்து நான் சொல்ல விரும்புவது, என்ன நடந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயேசுவோடு முன்னேறுவோம். அவர் நம்மை வழிநடத்துவார். பரலோகத்திற்கு நாம் செல்வதற்கு முன்பாக தேவன் எதை செய்யுமாறு நம்மை பணித்திருக்கிறாரோ அவைகளை செய்து முடிப்போம்.
எங்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து, உம்முடைய வார்த்தையை புரிந்துகொள்ள எங்கள் மனகண்களையும் திறந்துவிட்டதற்காக நன்றி. ஆமேன்.
SOL. RICHA JAIN, AOJ
